பின்பற்றுபவர்கள்

27 டிசம்பர், 2010

கலவை 27 டிச 2010 !

சென்றாண்டும் அதற்கும் முந்தய ஆண்டும் எழுதிய இடுகைகள் எண்ணிக்கைக்கு ஈடு கொடுத்து இந்த ஆண்டு எழுத முடியவில்லை. காரணம் இல்லத்தின் புதிய வரவும், ஐபோனில் பதிவுகளை படிப்பதாலும் , கொஞ்சம் பணிச் சுமையும் முதன்மைக் காரணங்கள். இருந்தாலும் இரண்டு நாளைக்கு ஒரு இடுகை என்கிற கணக்கில் 175 இடுகைகள் வரை எழுதி இருக்கின்றேன். இந்த ஆண்டின் புதிய வரவாக பல புதிய பதிவர்கள் கலக்கிவருகிறார்கள், பன்னிக்குட்டி இராமசாமி, சிரிப்புப் போலிஸ், நீச்சல்காரன், வெளியூர்காரன், பட்டாபட்டி போன்றோர் நகைச்சுவையில் வூடு கட்டி விளையாடுகிறார்கள். வழக்கம் போலவே இந்த ஆண்டும் பதிவர்களிடையே சில கசப்பான தனிமனித தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. அவை மறக்கப்பட வேண்டியவை. நித்தியானந்ததின் நசுங்கிய சொம்பு சரி செய்ய முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது பதிவுலகினரால். திமுக ஆட்சியும் ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பலமான விமர்சனத்துக்குள்ளாயின. முதல் செம்மொழி மாநாடு 90 விழுக்காட்டுப் பதிவர்களால் புறக்கணிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் அங்காடித்தெரு, களவானி மற்றும் மைனா பெருவாரியான பதிவர்களால் பாராட்டி எழுதப்பட்டது. இந்த ஆண்டு மிகுதியான விமர்சனத்துக்குள்ளான படம் 'உன்னைப் போல் ஒருவன்', மிகுதியாக பேசப்பட்டப் படம் எந்திரன், எதிர்மறையான விமர்சனங்களும் அதற்கு குறைவு. ஏமாற்றிய திரைப்படம் இராவணன். அப்துல்லா, ஸ்வாமி ஓம்கார், கேபிள் சங்கர், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் நைஜீரியா இராகவன் ஆகியோர் சிங்கப்பூருக்கு வந்து சென்றனர். எங்களது மணற்கேணி போட்டியின் வெற்றியாளர்களாக மருத்துவர் தேவன்மாயம், தருமி ஐயா மற்றும் முனைவர் பிரபாகர் ஆகியோர் வந்து சென்றனர்.

****'*

அரசியல் பலிவாங்களுக்காக சீமான் கைது செய்யப்பட்டார். ஜெ ஆட்சியின் போது நக்கீரன் கோபால் மற்றும் சுப வீரப்பாண்டியன் ஆகியோர் பொடோ சட்டத்தின் வழியாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டதைப் போன்று இதுவும் அப்பட்டமாக கருணாநிதிக்கு சீமான் மீது இருந்த பய மற்றும் காழ்புணர்வை காட்டியது. சீமான் கைதுக்கு தேசவிரோதம் என்கிற சப்பைக்காரணங்கள் கூறப்பட்டதை கட்சியினர் தவிர்த்து, காங்கிரசார் தவிர்த்து யாரும் ரசிக்கவில்லை. அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் தனிமனித தாக்குதல் இன்றி எதுவுமே இருக்காது, தமிழக மீனவனை சுட்டுக் கொன்றால் நாங்கள் பதிலுக்கு சிங்களவனை கொல்லுவோம் என்றது தேச துரோகமாம், பதிலுக்கு பதில் அல்லது பாதுகாப்பு, தற்காப்பு இவை அரசு சட்டங்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான், துப்பாக்கி லைசன் கொடுப்பது துப்பாக்கியை துடைத்து பாதுகாப்பாக பொட்டியில் வைத்துக் கொள்ள அல்லவே. கால்நடைகள் கூட தன்னை தாக்குபவர்களை திருப்பித்தாக்கி தற்காத்துக் கொள்ள நினைக்கின்றன. தீங்குக்கு எதிர்ப்புக் காட்டாத உயிரனம் ஏது ? சீமான் பேசியது தேச துரோகமாம். கார்கில் போரில் இந்திய வீரர்களை கொன்று போட்டப் பிறகும், திட்டமிட்டு எப்போதும் வன்முறையை, தீவிரவாதிகளை ஏவிவிடும் பாகிஸ்தான் மீது இந்திய அமைச்சு நட்பு பாராட்டுவதும் பேச்சு வார்தைக்கு அழைப்பதும் தேசிய விரோத / துரோக நடவடிக்கை இல்லையா ? கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களுக்குத்தான் இது ஏற்புடையதா ? எப்படியோ சீமான் விடுதலை அடைந்துவிட்டார். பிறகு எதாவது செய்யமுடியுமா ? செய்கிறார்கள், புலிகளால் பெருந்தலைகளுக்கு ஆபத்தாம். இல்லாத புலியால் எங்கிருந்து ஆபத்து ? சீமான் மிகப் பெரிய அரசியல் சக்தியாக வளர்வார் என்பதை ஆட்சியாளர்களே ஊகிப்பதால் ஊகங்கள் கிளப்பிவிடப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

******

நம்புங்கள் தமிழ்நாட்டில் தலித் குடிசைகளே இல்லை, தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சியில் தலித்துகள் மற்றும் ஏழைகள் கோபுரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள். இல்லை என்றால் இராஜிவின் அருமை மைந்தன் இராகுல் காந்தி தமிழக பயணத்தில் ஒரு குடிசையிலாவது நுழைந்து கேப்பங்கஞ்சி குடித்திருப்பார். வடமாநில ஏழைகளுக்கு கிடைக்கும் இராகுல் குடிசை நுழைவு பேரு தமிழக ஏழை குடிலுக்கு கிடைக்கவில்லை என்பதை அது போன்ற படங்கள் எதுவுமே வராத நாளிதழ்களைக் கண்ட போது தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அப்பறம் இலவச வண்ணத் தொலைகாட்சி, பொங்கல் பரிசு பை இவற்றையெல்லாம் யார் தான் வாங்குகிறார்கள் அனைவரும் மாடிவீட்டு ஏழைகளோ என்னவோ.

******

தங்கபாலு செய்த காமடி : இராகுல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர் தான் என்று இந்தியில் லோ பேச, அதை தங்கபாலு 'தமிழகத்தின் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு பதவிகள் காத்திருக்கின்றன என்று மொழிப் பெயர்த்து வாங்கிக்கட்டுக்கொண்டாராம். திமுக கூட்டணியில் இருக்கும் போது தன்னிசையாக அடுத்த முதல்வர் பற்றிப் பேசக்கூடாது என்பற்காக தவறாக மொழிப் பெயர்த்திருக்கலாம், அடுத்த முதல்வரா ? அதற்கெல்லாம் கடுகளவும் கூட வாய்ப்பில்லை என்பதற்காக தவறாக மொழிப் பெயர்த்திருக்கலாம், இல்லாவிடில் இந்தி சரியாகப் புரியவில்லை என்பற்காக மொழிப் பெயர்த்திருக்கலாம், தலையில் சூரியனை வாங்கும் வயதில் கண்டிப்பாக தான் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவன் இல்லை என்பதற்காக காழ்புணர்வில் தவறாக மொழிப் பெயர்த்திருக்கலாம், எப்படியும் இதில் ஒன்றோ அல்லது மேற்பட்ட காரணங்களோ தான் தங்கபாலுவை அவ்வாறு மொழிப் பெயர்க்கச் செயதிருக்கிறது. இராகுலின் இளைஞர்களுக்கான முதல்வர் பதவி என்னும் செய்தியில் அடுத்து ஒரு இளைஞருக்குத்தான் பிரதமர் வாய்ப்பு என்கிற தகவலும் அடங்கி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். நல்லாப் பேசுறாங்கையா பொடி டப்பாவையே வைத்து

****

தைப் பொறந்தா வழிப் பெறக்கும்னு மருத்துவர் இராமதாஸ் செப்புகிறார். இவரோட நிலைப்பாட்டைப் பார்த்தால் கண்டிப்பாக இவர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் செல்வார் என்று கருதுகிறேன். காரணம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி மருத்துவர் இதுவரை வெளிப்படையாக வாய் திறக்கவில்லை. மருத்துவரைப் பொறுத்த அளவில் அரசியலில் மகனுக்கான மத்திய அமைச்சர் பதவி என்பதைப் தவிர்த்து மாபெரும் ஊழல் ஒரு பொருட்டே இல்லை போலும்.

****
மைனா படம் இப்பதான் பார்த்தேன். நிலம் சார்ந்த இயல்பான கதைகள் வெல்லும் என்பதை நிறுபனம் செய்யும் மற்றொருபடம். இவ்வளவு திறமைகள் வைத்திருக்கும் திரைத்துரையினர் மசாலாவில் ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் ? மூன்று நிமிடப் பாடலில் முப்பது ஆண்டு வாழ்க்கையை காட்டிவிடுவது போல் விரைவாக பணம் அள்ள மசாலா கதைகளை தேர்ந்தெடுகிறார்கள் போல, இதில் பெரிதும் பாதிக்க்பட்டவர் நடிகர் விஜயை நம்பி முதல் போட்ட படத்தயாரிப்பாளர்களும், வாங்கி வெளியிட்டவர்களும் தான். மைனா, பருத்திவீரன், களவாணி கிராமத்துக்கதைகள் தான் என்றாலும் கதாநாயகியைக் கொல்லாது நல்ல முடிவை காட்டிய களவாணிப்படம் இன்னும் துணிச்சலான படம். மற்றவற்றில் சேது பாதிப்பு இருந்ததாக நினைக்கிறேன்.

****

சிங்கைப்பதிவர்களின் மணற்கேணி - 2010 போட்டி ஆக்கங்கள் பெருவதற்கான இறுதி நாள் டிசம்பர் 31 நள்ளிரவு வரை, இன்னும் நான்கே நாட்கள் இருக்கின்றன. வாய்பை தவறவிடாது பயன்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களுல் ஒருவராக சிங்கப்பூர் வந்து செல்லும் பரிசினை வெல்லுங்கள், கூடவே நிறைய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவரங்கள் இங்கே

7 கருத்துகள்:

Test சொன்னது…

கலவை சூப்பர்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கலவை சரியாக செட் ஆகி இருக்கிறது. :)

முதல்ல மணற்கேணி போட்டிக்கு கட்டுரை சமர்ப்பிக்கணும்.

ராவணன் சொன்னது…

அங் மோ கியோவில் இருந்து சிங்கப்பூர் எவ்வளவு தூரம்?
நான் இருக்கும் இடத்திலிருந்து சிங்கப்பூர் கிழக்க இருக்கா? இல்ல வடக்க இருக்கா? ஏன்னா வடக்குதிசை எனக்கு வாஸ்துபடி சரியில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

லோகன் மற்றூம் அக்பர் நன்றி,

இராவணன் ஆங்மோகியோ இங்கிட்டு ஏன் வந்தது ? புரியல

அன்புடன் நான் சொன்னது…

அலசல் மிக அருமை...
சீமான் பற்றிய மற்றும் அரசியல் கண்ணோட்டம் நேர்மையா இருந்தது....

கலவை = கலக்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நன்றி சார்!

மறத்தமிழன் சொன்னது…

ஜி.கே,

நல்ல கலவை.
உங்கள் யூகம் சரிதான்.
சீமான் நிச்சயம் பெரிய சக்தியாக வளர்வார்.
வருகின்ற‌ ஆண்டும் அதிக இடிகைகள் இட்டு உங்கள் கருத்துகளை முன் வைக்க‌
வாழ்த்துகள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்