70 களின் சிறந்த பக்திப்படங்களாக ஏவிஎம் இராஜன் நடித்த திருவருள், தெய்வம் ஆகியவற்றை தமிழ் இந்துக்கள் மறக்க முடியாது, பக்தி ரசம் சொட்டச் சொட்ட டிஎம் எஸ் பாடல்களும், உணர்ச்சி வடிவமான வசனங்களும், கவியரசர் கண்ணதாசனின் பாடல்வரிகளும், துள்ள வைக்கம் காவடி ஆட்டங்களுமாக படங்கள் பக்தி பரவசம் என்றால் அது மிகை அல்ல, எனக்கு தெரிந்து முதன் முதலில் பார்த்தப் படம் என்பதாக திருவருள் படம் தான் நினைவில் இருக்கிறது. அதில் வரும் ஆரத்திக் காட்சியைப் பார்க்கும் கையை நீட்டி தீபத்தை தொட்டுக் கும்பிட முயன்றதாக இன்றும் கூட என்னைப் பற்றி பெற்றோர்கள் நினைவு வைத்து ஓட்டுவது வழக்கம்.
முழுக்க முழுக்க முருக பக்தராக நடித்து வந்த ஏவிஎம் இராஜன் பக்திப் படங்களின் நாயகன் என்பதாக வலம் வந்தார். இடையில் என்ன ஆனதோ, திடிரென்று ஏவிஎம் இராஜன் அண்ணார் சகோ.D.G.S.தினகரன் & கோவினரின் ஆவிக் கூட்டங்களில் ஆவேசமாக பேசி அங்கு ஒருவராக ஐய்க்கியமானார். பக்தி என்பது பகல்வேசம் என்பது மட்டுமல்ல அது ஒரு மதம் சார்ந்த விடயம் என்பதாக புரிந்து போனது, அந்நாள் வரையில் முருகனருள் பரப்பிய இவரே இப்படி மாறிப் போனாரே என்கிற ஆதங்கம் கிட்டதட்ட நினைக்க மனதில் சோக உணர்வை ஏற்படுத்தியது. சக்தி உள்ள சாமி சக்தி யற்ற சாமி என்பதாக கிராமத்தினர் சிலவற்றைப் பேசிக் கொள்வார்கள், அது போல் இவ்வளவு பக்தி உணர்வை காட்டியவர் திடிரென்று மாற்று மதத்தில் ஐக்கியமானார் எனும் போது தாம் ஏற்படுத்திய பக்தி உணர்வுகள் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு அல்லது நம்பிக்கையை பிரிதொரு நம்பிக்கையின் மீது வைத்த அடகு என்பாத நினைக்கும் படி ஆகிவிட்டது. 'கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே' என்று கூத்தாடியவர், அவரது கடவுளர்கள் பட்டியலில் ஏசுவை சேர்க்கவில்லையோ ? என்று நினைக்க வைத்தது.
இவ்வளவும் நாளும் புகழ்ந்த வாய் இப்பொழுது முற்றிலுமாக மூடிக் கொண்டது அல்லது வேறு ஒன்றை புகழ்ந்து பேசுகிறது என்று நினைக்க வெறும் மதப் பற்று என்கிற காரணியைச் சொல்ல முடியவில்லை. இவ்வளவு நாத்திகம் பேசியவன் இன்னிக்கு இப்படி மாறிவிட்டான் பாரேன் என்று ஒரு சிலரைச் சுட்டிக்காட்டுவது போன்றது தான் பிரபலங்கள் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் நிகழ்வும். முருகன் அருளை போற்றி இருக்காவிட்டால் ஏவி ஏம் இராஜன் என்கிற நபரே மக்கள் மனதில் இல்லை, அப்படியாக பெற்ற புகழை ஒரிரு நாளில் மாற்றிக் கொள்வது தனிப்பட்ட உரிமை என்றாலும் கூட இதுவரை கிடைத்தப் பெருமை என்பது தனிப்பட்டது அல்ல, அது ஒன்றின் மீது சார்ந்து இயங்கியதால் கிடைத்த பெருமை, அதை அடகு வைப்பது அல்லது அற்பமாக நினைப்பது இதுவரை செயத்தை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் நிகழ்வாகும். இங்கு பெரியார் தாசன் கூட எனக்கு நினைவுக்கு வருகிறார். இவர் பெரியார் தாசன் என்கிற புனைப் பெயரை வைத்திருக்காவிட்டால், பெரியார் பின்னனியில் இயங்காவிட்டால் இவரை தெரிந்திருந்திருப்போரை விரல் விட்டே எண்ணி விடலாம். இவர் ஏற்கனவே புத்த மதத்திற்கு மாறி பின் இஸ்லாமுக்கு மாறி இருந்தாலும் இஸ்லாமிய அன்பர்கள் பரப்பி வருவது, நாத்திகனான பெரியார் தாசன் இஸ்லாத்துக்கு மாறிவிட்டார். இதில் இஸ்லாம் அன்பர்களை நான் குறைச் சொல்லவில்லை. அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன் தன்னை இன்னும் கூட பல நிகழ்வுகளில் பெரியார் தாசனாகவே முன்னிறுத்திக் கொள்கிறார் என்பதே.
கவிஞர் கண்ணசாதன் அர்தமுள்ள இந்து மதம் என்கிற பெயரில் 10 தொகுதிகள் வரையில் எழுதியுள்ளார், அதில் இருப்பதில் 80 விழுக்காடு அபத்தங்களே என்றாலும் கூட அவரின் இந்து மதக் கொள்கையின் மீதான ஈடுபாடு என்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன். அர்தமுள்ள இந்துமதம் என்பதை கணக்கில் கொள்ளாவிட்டாலும் கூட கண்ணதாசனின் பக்திப்பாடல்கள் கேட்போரை உருக வைக்கும், 'நீருண்ட மேகங்கள் நின்றாடும் கையிலையில் நீ வாழ இடமும் உண்டு' திருவிளையாடல் படத்தில் சிறப்பான எதுகை மோனையுடன் கோவித்துச் செல்லும் முருகனை அமைதி படுத்த ஒவ்வையார் பாடுவதாக பாடல், பழம் நீயப்பா என்று துவங்கும், கண்ணதாசனின் பக்திப்பாடல்கள் தொகுப்பில் சோடை போன பாடல் என்று எதுவுமே கிடையாது, அத்தனையும் தமிழ் நிலம் சார்ந்த, இந்து சமய பக்திப்பாடல்கள், கேட்போரை உருக்கும் பாடல்களில் ஒன்றேனும் கண்ணதாசனின் அன்பு மகள் விசாலியை உருக்காததும், அவர் நம்பிய இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகள் கண்ணதாசன் மகளை ஈர்க்காததும் வியப்பாக இருக்கிறது, விசாலி கண்ணதாசன் அப்பம் சாப்பிட்டு கிறித்துவத்தில் ஐய்க்கியமானார் என்று செய்திகளில் படித்தேன். மதம் மாறுவது அனைவரின் விருப்பம் என்றாலும் கூட மத வளர்ச்சியில் பங்கு பெற்றோர் மற்றும் அவர்களின் அருகாமையில் இருந்தோர் அவ்வாறு செய்வது இதுநாள் வரை ஊட்டிய நம்பிக்கையில் வெந்நீர் ஊற்றும் நிகழ்வாகும், நான் மதம் சார்ந்தவன் இல்லை என்றாலும் கூட நாகூர் ஹனிபா தன் பெயரை முருகன் அடியான் என்று மாற்றி திடிரென்று 'மருதமலை மாமனியே முருகைய்யா' என்று பாடினாலும் என்னால் நினைத்துப் பார்த்து ஏற்பது கடினம்.
*****
ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடுபவர்கள் பின்னாளில் அதில் வெந்நீர் ஊற்றுவது தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இழப்பு இல்லை, ஆனால் அவர்களைப் பின்பற்றோவோருக்கு மாபெரும் இழப்பு தான். ஒரு செட்டியார் இந்தியாவின் உள் துறை அமைச்சராக இருக்கும் வேளையிலும் மற்றொரு புகழ் பெற்ற செட்டியாரின் மகள் மதம் மாறுவது வெறும் மனம் சார்ந்த விடயமா ? ஒட்டு மொத்த செட்டியார்களும் கண்ணதாசன் புகழை பாடினாலும் கண்ணதாசன் குடும்பத்தின் குறிப்பாக விசாலியின் துயரை அறிந்திருந்திருந்தால் அவரது துயரம் களையப்பட்டு இருக்கும், எவருமே கண்டுகொள்ளாத சூழலில் மதம் மாறி மனம் துயரை போக்கிக் கொள்ளும் ஒரு நிலைக்குச் சென்றதை வெறும் மனம் மாற்றம், மதமாற்றம் என்ற சொல்லாடில் நினைத்துப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. இந்து மதம் தமிழகத்தைப் பொருத்த அளவில் பார்பனர்கள், வெள்ளாளர்கள், செட்டியார்கள் பிடியில் தான் இருக்கிறது, இவர்களைச் சேர்ந்த ஒருவருக்கே இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து காப்பாற்றி வைக்கவோ, நம்பிக்கை அளிக்க வைக்க முடியவில்லை என்பது இந்து மத நம்பிக்கையின் வீழ்ச்சி என்பதாக நினைக்கிறேன். விசாலியின் முடிவு பாராட்டத்தக்கது பறக்கணிக்கும் மதத்தை புறக்கணிப்பது தவறு அல்ல. ஜூனியர் பாலையா ஏன் மாறினார் என்று தெரியவில்லை அதனால் அது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
50 கருத்துகள்:
அன்பின் கோவி
தவிர்க்க இயலாத சூழ்நிலையில், ஏழ்மையும், துன்பமும் தொடரும் போது, நிழல் தேடி ஓடுகிறார்கள் - நிழல் கிடைக்கும் இடத்தில் புகலிடம் பெறுகிறார்கள் - மனமாற மதம் மாறினாரா - தெரியாது, விட்டுத்தள்ளுங்க
இந்து மதம் தமிழகத்தைப் பொருத்த அளவில் பார்பனர்கள், வெள்ளாளர்கள், செட்டியார்கள் பிடியில் தான் இருக்கிறது, இவர்களைச் சேர்ந்த ஒருவருக்கே இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து காப்பாற்றி வைக்கவோ, நம்பிக்கை அளிக்க வைக்க முடியவில்லை என்பது இந்து மத நம்பிக்கையின் வீழ்ச்சி என்பதாக நினைக்கிறேன். விசாலியின் முடிவு பாராட்டத்தக்கது பறக்கணிக்கும் மதத்தை புறக்கணிப்பது தவறு அல்ல
///////////
YES
மதம் மாறுவது தனி மனித உரிமை இல்லைங்களா ?
// Karthick Chidambaram said...
மதம் மாறுவது தனி மனித உரிமை இல்லைங்களா ?//
கொள்கை மாறுவது கூட தனிமனித உரிமை என்று தான் அரசியல்வாதிகள் சொல்லுகின்றனர்.
ஏவிம் ராஜனின் மனைவி ஒரு கிருத்துவர்.
(கஷ்டத்தில் இருக்கும்) பிரபலமானோரை கிரித்துவ மதமாற்ற இயக்கத்தினர் தீவிரமாக Target செய்கின்றனர். இதில் ப்ரபலமான இந்துமத பக்தர்களாக இருப்பின், இவர்களுக்கு பயண் அதிகம்.
http://www.youtube.com/watch?v=dcAnoFKgbsQ
http://www.youtube.com/watch?v=gE2xDyfxU8g&feature=related
:)
http://www.youtube.com/watch?v=0drCTLO5hWA&feature=player_embedded
பணம் படைத்தவர்களின் தேசத்தில் கிறிஸ்துவம் தேய்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கிறிஸ்துவம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதனுக்கு மரணம் இருப்பது போல் மதங்களுக்கு மரணம் இருக்கிறது. காலப்போக்கில் ஓவ்வொரு மதமும் சாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மதம் எங்கே. பழையன கழிதல், புதியன புகுதல் - இதற்கு மதங்களும் விதிவிலக்கல்ல.
நம்பிக்கை, பக்தி என்பது தனிநபர் சார்ந்த விஷயம். மதம் என்பது வேறு.
ஏவிஎம் இராஜன்கதை கொஞ்சம் வித்தியாசமானது. நானும் ஒரு பெண்ணில் லேசாக ஆரம்பித்து, சித்ராங்கி படத்தில் சேர்ந்து நடித்தபோது புஷ்பலதாவுடன் காதல் உண்டானது. கின்னசில் இடம் பெற வேண்டிய செய்தி,ஆனால் இடம் பெறாமல் போனது இந்தக் காதலைப் பற்றித் தான்! கிசு கிசுவாகத் தொடர்ந்து எழுதி சினிமா நடிகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தெரிந்து கொள்வதே தலையாய பணியாக குமுதம் வார இதழ் ஆரம்பித்து வைத்தது. (இந்துநேசன் மாதிரிப் பத்திரிகைகளில் வந்ததெல்லாம் வேறு!)
புதுக்கோட்டை ராஜன் ஹிந்து என்பதும் புஷ்பலதா கிறித்தவர் என்பதும் மார்க்கெட் இருந்த வரை அவர்களுக்கே நினைவு வரவில்லை.
மார்கெட் போன பிறகு,மகாலட்சுமி என்ற மகளை சினிமாவில் நடிக்க வைப்பதா இல்லையா என்ற பிரச்சினையில் தம்பதிகள் கருத்து வேறுபாடு ஆரம்பித்தது!
மகமாயி பக்தராக இருந்த ஏவிஎம் இராஜன் ஏசு அடிமையாகிப் போனது தம்பதிகளுள் யார் ஆட்சி என்பதைக் காட்டியதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!
இதே மாதிரி நக்மா கூடக் கிறித்தவப் பிரசாரகரானது ஒன்றும் நம்பிக்கையோ, பக்தியோ, மதப் பிடிமானமோ இல்லை!
எல்லாம் காசு செய்கிற வேலை! கிறித்தவம் அந்த வகையில் வலிமையாகவே இருக்கிறது!
காசைக் கொடுத்து இந்த மாதிரிக் கவர்ச்சி ஐட்டங்களை வைத்துத் தான் கிறித்தவம் இங்கே கூட்டம் சேர்க்க முடிகிறது என்று கூட வைத்துக் கொள்ளலாம்!
வலம்புரி ஜான் சொன்னதாய் நினைவு, மதம் மாறுகிறவர்களுக்கு தங்களின் மதம் தாங்கள் மாறுகின்ற மதம் இரண்டை பற்றியும் சரியாய் தெரிந்திருக்கவில்லை என்று.
துயர் இல்லாமல் யார் இருக்கிறார்?? மதம் மாறினால் எல்லாம் சரியாகிவிடுமா?? அது உண்மையென்றால் உலகில் ஒரு மதம் தான் இருக்கும்.
இவர்கள் எல்லாம் நிலையற்ற மனதுடையவர்கள்...
செட்டியார்களில் விசாலிக்கு மட்டும் தான் துயர் இருக்கிறாதா?
// அதில் இருப்பதில் 80 விழுக்காடு அபத்தங்களே //
:)
உண்மைதான் வெறும் சடங்குகளுக்கு அவர் கூறும் விளக்கங்கள் காதில் பூ சுற்றுவது போலவே இருக்கும்.
மதம் என்பதே அபந்தம், இதில் மதம் மாறி என்ன தேடுகிறார்கள் என்றே தெரியவில்லை!
பிரபலமானவர்கள் மதம் மாறுவதை விளம்பரப் படுத்தி மேலும் ஆள் சேர்க்கும் உத்திதான் இது. மற்றபடி நாத்திகர்களாக இருக்கும் அனைவரும் அவரவர் மதங்களில் இருந்து வெளியேறியவர்கள்தான். மந்தையிலிருந்து மனிதனாக, நாத்திகனாக மாறியவர்கள், மாறிவருபவர்கள் விகிதத்தைப் பார்க்கும் போது இவையெல்லாம் கணக்கில் வராத அளவிற்கு குறைவானதுதான். ஒரு மந்தையிலிருந்து மற்றொரு மந்தைக்கோ, ஒரு பட்டியிலிருந்து மற்றதற்கோ, ஒரு கிடையிலிருந்து அடுத்ததற்கோ போவதில் எந்த லாபமும் இல்லை. அங்கிருந்து கசாப்புக் கடைக்கு போகாதவரை நட்டமும் இல்லை.
ஒரு குட்டையிலிருந்து இன்னொரு குட்டையில் ஊறப் போயிருக்கிறார்கள், இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது!
உங்களது பதிவைப் படித்ததும் இந்த பழைய மலையாளத் திரைப் பாடல் நினைவு வருகின்றது
Movie: Achanum Baappayum
Lyrics: Vayalar
Music: Devarajan
Singer: Yesudas
(தமிழில்)
மனிதன் மதங்களை சிருஷ்டித்தான்
மதங்கள் தெய்வங்களை சிருஷ்டித்தன
மனிதனும் தெய்வங்களும் மதங்களும் கூடி மண்ணைப் பங்கு வைத்தன, மனதுகளைப் பங்கு வைத்தன
ஹிந்துவானோம், முஸ்லிமானோம், கிறிஸ்துவரானோம்.
அடையாளங்கள் தொலைந்து அறியாத மனிதரானோம்.
இறுதியில் இந்தியாவைப் பைத்தியக்காரர்களின் ஆலயமாக மாற்றினோம்
ஆயிரமாயிரம் அபல இருதயங்களை அவைகளின் பின்னால் அறியாதே அலைய வைத்தோம்
தெய்வம் தெருவில் மரிக்கின்றது.
சைத்தான் கை கொட்டிச் சிரிக்கின்றது
**********
சத்யம் எங்கே?
சவுந்தர்யம் எங்கே?
சுதந்திரம் எங்கே ?
நமது ரத்த பந்தங்கள் எங்கே?
நித்ய சிநேகம் எங்கே?
ஆயிரம் யுகங்களில் ஒரு முறை வரும்
அவதாரங்கள் எங்கே?
மனிதன் தெருவில் மரிக்கின்றான்.
மதங்கள் சிரிக்கின்றன...
மனிதன் மதங்களை சிருஷ்டித்தான்
மதங்கள் தெய்வங்களை சிருஷ்டித்தன....
//cheena (சீனா) said...
அன்பின் கோவி
தவிர்க்க இயலாத சூழ்நிலையில், ஏழ்மையும், துன்பமும் தொடரும் போது, நிழல் தேடி ஓடுகிறார்கள் - நிழல் கிடைக்கும் இடத்தில் புகலிடம் பெறுகிறார்கள் - மனமாற மதம் மாறினாரா - தெரியாது, விட்டுத்தள்ளுங்க//
:) விட்டுத்தள்ளுவதாவது அர்தமுள்ள மதம் கண்டவர்களே மாறும் போது பாமர்கள் மாறும் போது மத அமைப்புகள் பிரச்சனை செய்வது ஏன் ?
நன்றி பிரபு
// Matra said...
ஏவிம் ராஜனின் மனைவி ஒரு கிருத்துவர்.
(கஷ்டத்தில் இருக்கும்) பிரபலமானோரை கிரித்துவ மதமாற்ற இயக்கத்தினர் தீவிரமாக Target செய்கின்றனர். இதில் ப்ரபலமான இந்துமத பக்தர்களாக இருப்பின், இவர்களுக்கு பயண் அதிகம்.//
சீனா சாருக்கு சொன்ன பதிலைப் பாருங்கள்
// ஜோ/Joe said...
http://www.youtube.com/watch?v=dcAnoFKgbsQ
http://www.youtube.com/watch?v=gE2xDyfxU8g&feature=related
:)//
சுட்டிக்கு நன்றி, அதிலும் மெய் 'மறந்து' தான் பேசுகிறார் :)
// MR.BOO said...
http://www.youtube.com/watch?v=0drCTLO5hWA&feature=player_embedded//
நன்றி
// MR.BOO said...
http://www.youtube.com/watch?v=0drCTLO5hWA&feature=player_embedded//
நன்றி
//நெருப்பு said...
பணம் படைத்தவர்களின் தேசத்தில் கிறிஸ்துவம் தேய்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கிறிஸ்துவம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதனுக்கு மரணம் இருப்பது போல் மதங்களுக்கு மரணம் இருக்கிறது. காலப்போக்கில் ஓவ்வொரு மதமும் சாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மதம் எங்கே. பழையன கழிதல், புதியன புகுதல் - இதற்கு மதங்களும் விதிவிலக்கல்ல.//
மதங்களைவிடுங்கள், அறிஞர் அண்ணா எழுதிய மாஜிகடவுள் படித்தீர்கள் என்றால் அதில் மடிந்த கடவுள்களின் பட்டியலைப் பார்க்கலாம்
//கிருஷ்ணமூர்த்தி said...
நம்பிக்கை, பக்தி என்பது தனிநபர் சார்ந்த விஷயம். மதம் என்பது வேறு.
//
பின்னூட்ட பிற தகவல்களுக்கு நன்றி, மதமும் பக்தியும் ஒண்ணு இல்லையா ? பக்தி வளர்ச்சி மதம் தான் இளநீர் ஊற்று(து)ன்னு சொல்லிக்கிறாங்களே !
//manasu said...
வலம்புரி ஜான் சொன்னதாய் நினைவு, மதம் மாறுகிறவர்களுக்கு தங்களின் மதம் தாங்கள் மாறுகின்ற மதம் இரண்டை பற்றியும் சரியாய் தெரிந்திருக்கவில்லை என்று..//
வலம்புரி ஜான் பலமதங்களுக்கு மாறி மாறி சென்றவர் என்பதால் அவர் கூற்று சரியாகத்தான் இருக்கும்.
// செட்டியார்களில் விசாலிக்கு மட்டும் தான் துயர் இருக்கிறாதா?//
சொல்லவெண்ணா துயர் இருக்கலாம். கண்ணதாசன் மகன் கூட ஏகப்பட்ட கடனில் வறுமையில் வாடினார் என்பார்கள்
// கக்கு - மாணிக்கம் said...
// அதில் இருப்பதில் 80 விழுக்காடு அபத்தங்களே //
:)
உண்மைதான் வெறும் சடங்குகளுக்கு அவர் கூறும் விளக்கங்கள் காதில் பூ சுற்றுவது போலவே இருக்கும்.//
வெறும் பூ இல்லை காகிதப் பூ மாலை :)
// பின்னூட்டம் பெரியசாமி.. said...
பிரபலமானவர்கள் மதம் மாறுவதை விளம்பரப் படுத்தி மேலும் ஆள் சேர்க்கும் உத்திதான் இது. மற்றபடி நாத்திகர்களாக இருக்கும் அனைவரும் அவரவர் மதங்களில் இருந்து வெளியேறியவர்கள்தான். மந்தையிலிருந்து மனிதனாக, நாத்திகனாக மாறியவர்கள், மாறிவருபவர்கள் விகிதத்தைப் பார்க்கும் போது இவையெல்லாம் கணக்கில் வராத அளவிற்கு குறைவானதுதான். ஒரு மந்தையிலிருந்து மற்றொரு மந்தைக்கோ, ஒரு பட்டியிலிருந்து மற்றதற்கோ, ஒரு கிடையிலிருந்து அடுத்ததற்கோ போவதில் எந்த லாபமும் இல்லை. அங்கிருந்து கசாப்புக் கடைக்கு போகாதவரை நட்டமும் இல்லை.//
கடைசி வரியில் எதுனாவது உள்குத்து இருக்கா ? கசாப்புகடை என்றால் முஸ்லிம் மதம் என்று யாராவது வம்புக்கு வந்துவிடப் போகிறார்கள்.
//பரிதி நிலவன் said...
ஒரு குட்டையிலிருந்து இன்னொரு குட்டையில் ஊறப் போயிருக்கிறார்கள், இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது!//
ஆக மொத்தம் அவங்களுக்கெல்லாம் எதோ ஒரு குட்டையில் ஊறுவது தான் பிடிக்கும் போல
//MR.BOO said...
உங்களது பதிவைப் படித்ததும் இந்த பழைய மலையாளத் திரைப் பாடல் நினைவு வருகின்றது
//
பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி நண்பரே
Mr.Boo!
உங்கள் மொழிபெயர்ப்பு மிக அருமை ...
பாடல் ஒலி வடிவில் கிடைக்கும் லிங்க் அளித்து உதவ முடியுமா தோழர் !
கண்ணதாசன் எழுதிய யேசு காவியத்தில் முடிவுரையாகவும், தன்னுடைய
சொந்தக் கருத்தாகவும் இப்படி எழுதுகிறார்:
தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே
இதனை நாளும் உண்மை பிறந்தது இயேசுவின் வார்த்தையிலே
.......என்று ஆரம்பித்து...இப்பத் முடிக்கின்றார்:
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவோமே
எதற்கு இத்தனை மதங்கள் ?
ஏன் இத்தனை கடவுள்கள் ?
மேலோட்டமாகப் பார்த்தாலோ, குறை கூறும் விதத்தில் பார்த்தாலோ இந்த விஷயம் அபத்தமாகத் தான் தெரியும்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று ஏற்கெனவே சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு இத்தனை மதங்களும் இவ்வளவு கடவுள்களும் இருப்பது மிகவும் அவநம்பிக்கையூட்டும் விதமாகவே இருக்கும்.
ஆனால் உண்மையை அறிய வேண்டும் என்கிற எண்ணத்தோடு முயற்சி செய்பவர்களுக்கு இவற்றின் பின்னால் இருக்கும் நியாயம் புரியவே செய்யும்.
உலகில் ஒவ்வொரு மதம் உருவாகவும் அதன் பின்னால் சில
காரணங்களும், அர்த்தங்களும், நியாயங்களும் இருந்தன !
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு !
மொழிகள் எத்தனை இருந்தாலும் - அவை அனைத்தின் நோக்கமும் தேவையும் கருத்துப் பரிமாற்றமே அல்லவா ?
நதிகள் எத்தனை ஓடினாலும் அவை அனைத்தும் இறுதியில் கடலையே சென்று சேருவது போல், மதங்கள் எத்தனை இருந்தாலும், அவை அனைத்தும் இறைவன் என்னும் ஒரு சக்தியையே நோக்கிச் செல்கின்றன.
எனவே யார் எந்த மதத்தைப் பின் பற்றினாலும் தவறேதும் இல்லை !
எல்லா மதமும் சம்மதமே ! எல்லா தெய்வங்களும் ஒன்றே !! இறைவன் ஒருவனே !!!
இருந்தாலும் - ஒருவர் ஒரு மதத்தை விட்டு இன்னுமொரு
மதத்திற்கு மாறும்போது மட்டும் நம்மால் எளிதில்
ஜீரணிக்க முடிவதில்லை - அல்லவா ?
இது ஏன் ?
என் கண்ணிற்கு மத மாற்றத்திற்கான காரணங்கள்
இரண்டே இரண்டு தான் தெரிகின்றன.
ஒன்று - அறியாமை - அல்லது
இரண்டு - மதம் மாறுவதால் கிடைக்கும் அனுகூலங்கள்.
இத்தகையோர்களை கண்டு கொள்ளாமல்,
இவற்றைப் நாம் பொருட்படுத்தாமல்,
அலட்சியப்படுத்துவதே - இதற்குண்டான வைத்தியம்
என்பது என் எண்ணம்.
என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ?
- ஜி.கே.-
http://www.gkpage.wordpress.com
//கடைசி வரியில் எதுனாவது உள்குத்து இருக்கா ? கசாப்புகடை என்றால் முஸ்லிம் மதம் என்று யாராவது வம்புக்கு வந்துவிடப் போகிறார்கள்.//
உள்குத்தெல்லாம் ஒண்ணுமில்லை. ஒட்டு மொத்தமும் குத்துதான். எல்லா மந்தையும் கடைசியில் கசாப்புக் கடைக்குத்தான் போகப் போகுது. போகிற வரைக்கும் நட்டமில்லைனு சொன்னேன்.
கசாப்புக் கடை = சாதிச் சண்டையால் அழிவு, மதச் சண்டையால் அழிவு, மூட நம்பிக்கையால் கேடு அப்பிடினு சொல்லிக்கிட்டே போகலாம்.
நம்ம கருத்து எல்லாக் கசாப்புக் கடைக்கும் பொதுவானது. கசாப்பு கடைன்னாலே நாங்கதான் அப்பிடினு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதிலே பெருமையும் கிடையாது.
///அந்நாள் வரையில் முருகனருள் பரப்பிய இவரே இப்படி மாறிப் போனாரே என்கிற ஆதங்கம் கிட்டதட்ட நினைக்க மனதில் சோக உணர்வை ஏற்படுத்தியது.///
நீங்கள் இறை எதிர்ப்பாளர் என்று நினைக்கிறன். யார் எப்படி மாறினாலும் உங்களுக்கு இந்த ஆதங்கம் வரக்கூடாது. You are responsible for your emotions! Please do not blame others for your problems. இந்த ஆதங்கம் வந்தால்? உங்களுக்கு இன்றும் இறை நம்பிக்கை இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
///முருகன் அருளை போற்றி இருக்காவிட்டால் ஏவி ஏம் இராஜன் என்கிற நபரே மக்கள் மனதில் இல்லை,///
நீங்கள சொல்வது MR ராதா மற்றும் சத்யராஜ் நாத்திகர்களாக இல்லாவிட்டால் ராதா மற்றும் சத்யராஜ் என்கிற நபர்களே மக்கள் மனதில் இருக்கமாட்டார்கள் என்று சொல்வது மாதிரி இருக்கிறது! இது சரியான வாதம் அல்ல. நீங்கள் உங்களை வைத்து மற்றவர்களை எடை போடுகிறீர்கள். உதாரணத்திற்கு எனக்கு அப்படி இல்லையே. பத்திரிக்கைக்காரன் ஆயிரம் எழுதுவான். அவனும் மனிதன் தானே? அவர்கள் எழுதுவது எல்லாம் உண்மை அல்ல. நீங்களும் நம்பியார் சினிமாவில் வில்லனாக நடித்ததால் அவர் வாழ்கையிலும் வில்லன் என்று நினைக்கும் நபராகததான் எனக்கு தெரிகிறது. ஏவி ஏம் இராஜன்க்கு அது மாதிரி வேடம் கொடுத்தது இயக்குனர்கள். நான் ஒரு நடிகன் என்று வைத்துக்கொண்டால் எந்த வேடத்தையும் செய்வேன். நடிப்பு எனது தொழில். வக்கீல்கள் கொலைகாரர்களுக்கும் வாதாடுதுவது மாதிரி! அது நடிகனுக்கும் பொருந்தும். நடிப்பையும் வாழ்கையும் நாம் இன்றும் பிரித்து பார்க்கக்தெரியாதது தான் காரணம். ஏவி ஏம் இராஜன் ஒரு திறமையான நடிகர் சத்யராஜ் MR ராதா மாதிரி.
///இவ்வளவும் நாளும் புகழ்ந்த வாய் இப்பொழுது முற்றிலுமாக மூடிக் கொண்டது அல்லது வேறு ஒன்றை புகழ்ந்து பேசுகிறது என்று நினைக்க வெறும் மதப் பற்று என்கிற காரணியைச் சொல்ல முடியவில்லை. ///
அது எப்படி எல்லோரும் பணம் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்? நாம் இருக்கும் மதத்தை தீர்மானிப்பவர்கள் நமது பெற்றோர்கள். நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் வந்து மதம் மாறியிருக்கலாம். அது எப்படி 50 வயதில் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு 18 வயதில் அறிவு வந்து இருக்கும். சிலர்க்கு 50 வயதில் அறிவு வந்திருக்கும். நம்மளோட அறிவை வைத்து மற்றவர்களின் அறிவை எடை போடக்கூடாது. கண்ணதாசன் பணத்திர்க்ககாத்தான் நாத்திகத்தில் இருந்து ஆத்திகதிர்க்கு மாறி அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அப்படித்தானே? அவர் பணத்திர்க்ககாக செய்தால் அது சரி. ஆனால் அவர் பெண் செய்தால் தப்பு. இது என்னப்பா நியாயம்? வேறு மதத்தை சேர்ந்தவன் எவன் ஹிந்து மதத்தை போற்றினாலும் அது பணத்திற்காக அல்ல! அது இந்து மதத்தின் அறிய கோட்பாடுகளுக்கு. ஏன் அதுவும் கூலிக்கு கூவர கூட்டமா இருக்க கூடாது? ஆனால் இந்துக்கள் வேறு மதத்திற்கு மாறினால் அது பணம் தான் என்று சொல்லும் பார்பனிய பத்திரிக்கைகளின் மூளை சலவை தான் உங்களை இவ்வாறு எழுத வைத்திருக்கிறது. தெற்கில் பிள்ளைகளும் நாடார்களும் கிருத்துவ மதத்தை தழுவியது பணதிர்க்காகாக அல்ல. இது உண்மை. இந்து மதத்தில் மரியாதை இல்லாததினால் தான். ஒடுக்கப்பட்டதினால் தான்.
அதே சாதிவெறி இன்றும் நான் பார்க்கிறேன். எனக்கு சாதி மதம் கிடையாது. ஆனாலும் இன்றும் சிலர் பxளன், பxயன், அம்xxடன், போxன், சxxலி, சxடியர் என்று எழுதிகிறார்கள் . இது அவர்களது திமிரைக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் எனக்கு பார்பனர்களைப் பிடிக்கும் . அவர்கள் இது மாதிரி யாரையும் நேரில் பேர் சொல்லி அழைக்க மாட்டார்கள்.( in anonymous postings they may do it; I don’t know) ஆனால் அவர்களுக்கு சொம்பு தூக்கும் நமது சூத்திர கண்மணிகள் தான் இப்படி நம்மளை அசிங்கப் படுத்துவது (பார்பனர் அல்லாதோர் எல்லோரும் சூத்திரர்கள் தான்: copy right: Manusmriti). என்ன காரணம் அப்படியாவது அவளோட ஈஷிக்க முடியுமா என்று. பெரியார் சொன்னது சரி தான்!
ஒரு பத்திரிக்கையில் சினிமாக்காரன் சீமான் கைது என்று போட்டார்கள். ஏன் அதே மாதிரி சினிமாக்காரன் ரசினி கந்து இமய மலை சென்றார் என்று போட வேண்டியதுன் தானே? ஆனால் என்ன எழுதுவார்கள்: ஆண்மீகசெம்மல் மாமனிதன் ரஜினி காந்து அவர்கள் வழக்கமாக தனது ஆண்மிகத் தேடலை தொடர இமயமலை சென்றார். Please pardon me if I recall a movie where MR. Radha was the father of Tangavelu (comedian). When MR Radha comes home he see agroup of சாமியார்கள் தங்கவேலு உள்பட in his house. He gets angry with all of them, and shouts at them as follows:
MR Radaha says, “டேய்! என்னாடா பஜனை இங்கே! இது என்ன பஜனை மடமா?
தங்கவேலு சொல்வார் “அப்பா நாங்கள் இமய மலைக்கு பாதயாத்திரை செல்கிறோம் .”
அதற்க்கு MR Radha “ ஏன்டா டேய்! இங்க இருக்கிற பரங்கிமலை ஏற முடியாது உங்களாலே! பண்டாரப் பரதேசிங்களா!!! இதுலே இமய மலைக்கு பாதயாத்திரையா? யார் கிட்ட டேய் டூப்பு உடரே? டேய்!
ஒரு வேளை MR Radha முக்காலம் உணர்ந்த முனிவரோ என்னவோ ? இது MR Radha ரசினிக்கு என்றே சொன்ன மாதிரி இருக்கு.
அதே சாதிவெறி இன்றும் நான் பார்க்கிறேன். எனக்கு சாதி மதம் கிடையாது. ஆனாலும் இன்றும் சிலர் பxளன், பxயன், அம்xxடன், போxன், சxxலி, சxடியர் என்று எழுதிகிறார்கள் . இது அவர்களது திமிரைக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் எனக்கு பார்பனர்களைப் பிடிக்கும் . அவர்கள் இது மாதிரி யாரையும் நேரில் பேர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ப்பு அப்படி. ( in anonymous postings they may do it; I don’t know) ஆனால் அவர்களுக்கு சொம்பு தூக்கும் நமது சூத்திர கண்மணிகள் தான் இப்படி நம்மளை அசிங்கப் படுத்துவது (பார்பனர் அல்லாதோர் எல்லோரும் சூத்திரர்கள் தான்: copy right: Manusmriti). என்ன காரணம் அப்படியாவது அவளோட ஈஷிக்க முடியுமா என்று. பெரியார் சொன்னது சரி தான்!
///இவ்வளவும் நாளும் புகழ்ந்த வாய் இப்பொழுது முற்றிலுமாக மூடிக் கொண்டது அல்லது வேறு ஒன்றை புகழ்ந்து பேசுகிறது என்று நினைக்க வெறும் மதப் பற்று என்கிற காரணியைச் சொல்ல முடியவில்லை. ///
அது எப்படி எல்லோரும் பணம் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்? நாம் இருக்கும் மதத்தை தீர்மானிப்பவர்கள் நமது பெற்றோர்கள். நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் வந்து மதம் மாறியிருக்கலாம். அது எப்படி 50 வயதில் என்று சிலர் கேட்கலாம். சிலருக்கு 18 வயதில் அறிவு வந்து இருக்கும். சிலர்க்கு 50 வயதில் அறிவு வந்திருக்கும். நம்மளோட அறிவை வைத்து மற்றவர்களின் அறிவை எடை போடக்கூடாது. கண்ணதாசன் பணத்திர்க்ககாத்தான் நாத்திகத்தில் இருந்து ஆத்திகதிர்க்கு மாறி அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். அப்படித்தானே? அவர் பணத்திர்க்ககாக செய்தால் அது சரி. ஆனால் அவர் பெண் செய்தால் தப்பு. இது என்னப்பா நியாயம்? வேறு மதத்தை சேர்ந்தவன் எவன் ஹிந்து மதத்தை போற்றினாலும் அது பணத்திற்காக அல்ல! அது இந்து மதத்தின் அறிய கோட்பாடுகளுக்கு. ஏன் அதுவும் கூலிக்கு கூவர கூட்டமா இருக்க கூடாது? ஆனால் இந்துக்கள் வேறு மதத்திற்கு மாறினால் அது பணம் தான் என்று சொல்லும் பார்பனிய பத்திரிக்கைகளின் மூளை சலவை தான் உங்களை இவ்வாறு எழுத வைத்திருக்கிறது. தெற்கில் பிள்ளைகளும் நாடார்களும் கிருத்துவ மதத்தை தழுவியது பணதிர்க்காகாக அல்ல. இது உண்மை. இந்து மதத்தில் மரியாதை இல்லாததினால் தான். ஒடுக்கப்பட்டதினால் தான்.
///இதுவரை கிடைத்த பெருமை என்பது தனிப்பட்டது அல்ல, அது ஒன்றின் மீது சார்ந்து இயங்கியதால் கிடைத்த பெருமை, அதை அடகு வைப்பது அல்லது அற்பமாக நினைப்பது இதுவரை செயத்தை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் நிகழ்வாகும்.///
அது எப்படி நீங்க இது மாதிரி ஆதாரம் இல்லாமல் சொல்லுகிறீர்கள். கொடுக்கிறீர்கள்? இந்த உலகில் நாம் நமக்காக வாழ்கிறோம். நீங்கள் செய்யும் வேலையோ அல்லது உங்களுது வாழ்க்கையோ யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை. அது மாதிரி அவர்களது வாழ்கையும் விட்டு விடுங்களேன். நீங்கள் செய்யும் வேலை எனக்கு அவமானமாக இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் மைக்ரோ ரோசொப்டில் - இல் 20 வருடம் வேலை செய்து விட்டு ஆப்பிளுக்கு -க்கு மாறினால் அப்ப நாங்கள் உங்களை ” இதுவரை கிடைத்தப் பெருமை என்பது தனிப்பட்டது அல்ல, அது ஒன்றின் மீது சார்ந்து இயங்கியதால் கிடைத்த பெருமை, அதை அடகு வைப்பது அல்லது அற்பமாக நினைப்பது இதுவரை செயத்தை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் நிகழ்வாகும்.” என்று சொன்னால் அதற்க்கு உங்கள் பதில் என்ன?
நமது ஜெயகாந்தன் அடிக்காத பல்டியா? ஒரு பத்திரிக்கையில் படித்தேன். அவரும் பல்டி மேல் பல்டி அடிச்சார். இந்த ஞான பீட விருதை வாங்குவதற்கு? ஒன்னும் நடக்கவில்லை. அப்புறம் நம்ம சங்கராச்சாரியாரி பற்றி ஒரு புத்தகம் எழுதினார். தமிழை விட சமஸ்க்ரிதம் மேலான மொழி என்றும் எழுதினார். அப்புறம் தான் அவருக்கு இந்த ஞான பீடை விருது. மைலாப்பூரில் வசிக்கும் நாலு பேர் கொடுக்கும் விருதுக்கு இத்தனை பல்டியா? அப்புறம் பத்ம ......... ( fill in the blanks) விருது எல்லாம் கிடைத்து என்று. மேலும் கிடைகுக்கும் அப்பா fill in more in the blanks---அது அவர் அடிக்கற பல்டி அப்புறம் ஜால்றாவைப் பொருத்து. குறவன் கூட்டிவரும் ஆடறா ராமா குரங்கு கூட பொறாமைப்படும். எப்படி நம்மளால அடிக்க முடியாத பல்டியை இந்த ஆள் இவ்வளவு சுகரா ( சென்னைத் தமிழ்) அடிக்கிறார் என்று?
///இந்து மதம் தமிழகத்தைப் பொருத்த அளவில் பார்பனர்கள், வெள்ளாளர்கள், செட்டியார்கள் பிடியில் தான் இருக்கிறது,///
இது தவறு! இந்து மதம் தமிழகத்தைப் பொருத்த அளவில் பார்பனர்கள் பிடியில் மட்டும் தான் இருக்கிறது, வெள்ளாளர்கள், செட்டியார்கள் ‘வால் பையன்’ சொன்னா மாதிரி பார்ப்பனிய படிக்கட்டில் (உரிமை: வால் பையன்) இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். அதானால் பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு என்று வெள்ளாளர்கள், செட்டியார்கள் நினைத்துக் கொண்டிருகிறார்கள். ஆனால் உணமையில் பார்பனர்கள் இவர்களை மதிப்பதே இல்லை. இவர்கள் மட்டும் அல்ல பார்பனர்களை தவிர மற்ற எல்லா படிக்கட்டிலும் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வவொரு சமயம் விரல் சூப்புவார்கள். ஆனால் வெல்லம் திண்பது என்னவோ பார்பனர்கள் மட்டும் தான். பின் எப்படி இந்து முன்னணியில் அடி ஒதை வாங்குவது நம்ம ஆளு. ஆனால் அறிக்கை விடுகிறது மற்றும் பதவி அனுபவிப்பது பார்பனர்கள். வெள்ளாளர்கள், செட்டியார்கள் மற்றும் பிற ஹிந்துக்கள் அவர்களது மடத்திற்கு (90%) பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள் . ஆனால் எல்லா பதவியும் பார்பனர்களுக்கு மட்டும் தான். இதை வீரமணி கேட்டார். அதற்க்கு பதில் நீ நாத்திகன் உனக்கு ஏன் நான் பதில் சொல்லணும். இது எங்க மடம். நீங்கள் எப்படி என்ன கேள்வி கேட்கலாம்? ஆனால் அவாள் சொன்னா சூத்திரர்கள் வீரமணியைக் கேள்வி கேட்பார்கள். கேளுங்கள். அப்படியே அவாளையும் கேளுங்கள் ஏன் மடத்தில் உள்ள எல்லா பதவியும் பார்பனர்களுக்கு மட்டும் தான் கொடுக்கிறீர்கள் என்று? ஆனால் நமது சூத்திரக் கண்மணிகள் இதைக் கேட்க மாட்டார்கள். ஆனால் சொம்பு மட்டும் தூக்குவார்கள்.
///ஜூனியர் பாலையா ஏன் மாறினார் என்று தெரியவில்லை அதனால் அது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.//
ஜூனியர் பாலையா எதற்கு உலகிற்க்கு சொல்ல வேண்டும்? அவர் உண்டு அவர் வாழ்கை உண்டு. அவர் என்ன ரசினி காந்தா அவர் என்ன சொன்னாலும் எழுதுவர்தக்கு. மதத்தால் வயிறு வளர்ப்பவன் மட்டும் தான் இந்த மாதிர் செய்தி எல்லாம் கொடுப்பான்.
வீரமணிக்கு பரிந்து பேசினால் நான் வீரமணி சாதி. சீமானுக்கு பரிந்து பேசினால் நான் முக்குலத்தோர் சாதி . ராமதாசுக்கு பரிந்து பேசினால் நான் வன்னியன் சாதி. கருனாநிதிக்கு பரிந்து பேசினால் நான் இசை வேளாளர் சாதி. திருமாவுக்கு பரிந்து பேசினால் நான் தாழ்த்தப்பட்டவன். வைகோ விற்கு பரிந்து பேசினால் நான் நாயுடு ஆனால் ஒரு பார்பான் அடுத்த பாப்பனுக்கு பரிந்து பேசினால் அது சாதி உணர்வு இல்லை. ஏன் என்றால் அவன் தர்மவான். உண்மை பேசுபவன். நியாயம் பக்கம் நிற்பவன். ஒரு பார்பான் உன்னொரு பார்ப்பானை புகழ்ந்தால் உடனே நமது சொம்புகள் அதுக்கும் ஜால்ரா. அவனுக்கு அடிவருடுனா எதோ பெரிய அறிவாளி என்று நினைப்பு. அவன் ஆடறா ராமா என்று சொன்னால் நமது சூத்திரக் கண்மணிகள் அடுத்த பார்பனிய படிக்கட்டில் உள்ளவர்களை நோன்டுவார்கள். அவன் வெல்லம் சாப்பிடுவான். நமது சூத்திரக் கண்மணிகள் வழக்கம் போல விரல் சூப்புவார்கள் .
இந்து மதத்தில் அதே சாதிவெறி இன்றும் நான் பார்க்கிறேன். எனக்கு சாதி மதம் கிடையாது. ஆனாலும் இன்றும் சிலர் பxளன், பxயன், அம்xxடன், போxன், சxxலி, சxடியர் என்று எழுதிகிறார்கள். இன்றும் சிலர் மxம் ஏறி , சxடியர் என்று வாய் கூசாமல சொல்கிறார்கள். ஒரு சாதியை சxடியர் எனறு சொல்ல்வதர்க்கு யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தார்கள்? சxடியர் என்றால் என்ன என்று தெரியுயமா? குற்றப் பரம்பரை என்றதில் இருந்து அவர்கள் வெளியே வருவதற்கு பட்ட மன உளைச்சல் அவர்களுக்குத்தான் தெரியும். ஒரு சாதியில், அதுவும் மனுதர்மம் பிரகாரம் நீங்கள் சொன்ன சாதியில், ஒருவன் பிறந்தால் அவன் குற்றப் பரம்பரை ஆகி விடுவானா? விருமாண்டி படத்தை பெயர் மாற்றும் படி செய்தும் அது தெரிந்தும் இன்னும் இவர்கள் வேண்டுமென்றே சxடியர் என்று கூறி அவர்கள் அரிப்பை தீர்த்துக் கொள்ளுகிறார்கள். அது எப்படி ஒருவன் பிறப்பினால் சxடியர் ஆகமுடியும்? இவாள் எல்லோம் என்ன குல்லுக பட்டரிடம் ஈஷிக்கும் சாதியோ? அவாள் எப்பொழுதும் பின்னால் இருந்து தான் வேலை செய்வார்கள் . சூத்திரனுக்கு எங்கு அறிவு போச்சு? உன் சக சாதியை சxடியர் என்று கூற? மxம் ஏறி என்று கூற? இப்பவும் எனக்கு கோபம எல்லாம் நம்ம சூத்திரக் கண்மணிகள் மீது தான்.
இந்து மதத்தில் அதே சாதிவெறி இன்றும் நான் பார்க்கிறேன். எனக்கு சாதி மதம் கிடையாது. ஆனாலும் இன்றும் சிலர் பxளன், பxயன், அம்xxடன், போxன், சxxலி, சxடியர் என்று எழுதிகிறார்கள். இன்றும் சிலர் மxம் ஏறி , சxடியர் என்று வாய் கூசாமல சொல்கிறார்கள். ஒரு சாதியை சxடியர் எனறு சொல்ல்வதர்க்கு யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தார்கள்? சxடியர் என்றால் என்ன என்று தெரியுயமா? குற்றப் பரம்பரை என்றதில் இருந்து அவர்கள் வெளியே வருவதற்கு பட்ட மன உளைச்சல் அவர்களுக்குத்தான் தெரியும். ஒரு சாதியில், அதுவும் மனுதர்மம் பிரகாரம் நீங்கள் சொன்ன சாதியில், ஒருவன் பிறந்தால் அவன் குற்றப் பரம்பரை ஆகி விடுவானா? விருமாண்டி படத்தை பெயர் மாற்றும் படி செய்தும் அது தெரிந்தும் இன்னும் இவர்கள் வேண்டுமென்றே சxடியர் என்று கூறி அவர்கள் அரிப்பை தீர்த்துக் கொள்ளுகிறார்கள். அது எப்படி ஒருவன் பிறப்பினால் சxடியர் ஆகமுடியும்? இவாள் எல்லோம் என்ன குல்லுக பட்டரிடம் ஈஷிக்கும் சாதியோ? அவாள் எப்பொழுதும் பின்னால் இருந்து தான் வேலை செய்வார்கள் . சூத்திரனுக்கு எங்கு அறிவு போச்சு? உன் சக சாதியை சxடியர் என்று கூற? மxம் ஏறி என்று கூற? இப்பவும் எனக்கு கோபம எல்லாம் நம்ம சூத்திரக் கண்மணிகள் மீது தான்.
வீரமணிக்கு பரிந்து பேசினால் நான் வீரமணி சாதி. சீமானுக்கு பரிந்து பேசினால் நான் முக்குலத்தோர் சாதி . ராமதாசுக்கு பரிந்து பேசினால் நான் வன்னியன் சாதி. கருனாநிதிக்கு பரிந்து பேசினால் நான் இசை வேளாளர் சாதி. திருமாவுக்கு பரிந்து பேசினால் நான் தாழ்த்தப்பட்டவன். வைகோ விற்கு பரிந்து பேசினால் நான் நாயுடு ஆனால் ஒரு பார்பான் அடுத்த பாப்பனுக்கு பரிந்து பேசினால் அது சாதி உணர்வு இல்லை. ஏன் என்றால் அவன் தர்மவான். உண்மை பேசுபவன். நியாயம் பக்கம் நிற்பவன். ஒரு பார்பான் உன்னொரு பார்ப்பானை புகழ்ந்தால் உடனே நமது சொம்புகள் அதுக்கும் ஜால்ரா. அவனுக்கு அடிவருடுனா எதோ பெரிய அறிவாளி என்று நினைப்பு. அவன் ஆடறா ராமா என்று சொன்னால் நமது சூத்திரக் கண்மணிகள் அடுத்த பார்பனிய படிக்கட்டில் உள்ளவர்களை நோன்டுவார்கள். அவன் வெல்லம் சாப்பிடுவான். நமது சூத்திரக் கண்மணிகள் வழக்கம் போல விரல் சூப்புவார்கள் .
//பாடல் ஒலி வடிவில் கிடைக்கும் லிங்க் அளித்து உதவ முடியுமா தோழர் !//
Mr. Neo, here is the link
http://www.4shared.com/file/46100982/543ababb/manushyan_mathangale.html
நன்றாகப் படித்துப் பாருங்கள். உங்கள் எழுத்தில் நீங்களே பல இடங்களில் முரண்படுகின்றீர்கள் :))
//ம்.எம்.அப்துல்லா said...
நன்றாகப் படித்துப் பாருங்கள். உங்கள் எழுத்தில் நீங்களே பல இடங்களில் முரண்படுகின்றீர்கள் :))//
முரண்பாடு எதுவும் இல்லை, நம்பிக்கைகளுக்கு ஊன்றுகோலாக இருந்தவர்கள் அதைத் தூக்கிப் போடுவது அதனை அவமதிப்பதாகும் என்றேன். அவர்களை நம்பிப்பின்பற்றியவர்களுக்கு நிலைகுழைவு தான். நித்தியை பிரம்மச்சாரி என்று நம்பிய பக்தர்களைப் போல :)
//நன்றாகப் படித்துப் பாருங்கள். உங்கள் எழுத்தில் நீங்களே பல இடங்களில் முரண்படுகின்றீர்கள் :))//
+1
// ஜோ/Joe said...
//நன்றாகப் படித்துப் பாருங்கள். உங்கள் எழுத்தில் நீங்களே பல இடங்களில் முரண்படுகின்றீர்கள் :))//
+1//
எதிர்கருத்தோ ஒத்தக்கருத்தோ விவாதத்திற்கு உட்பட்டது தான் வாக்களிப்பது என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். புடிக்காத பதிவுக்கு மைனஸ் என்பது தான் பதிவுலக வழக்கம் :)
தோழர் Mr.Boo! ,
தாங்கள் அளித்த சுட்டிக்கு எனது நன்றியை அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள் !
சற்று முன் தான் பாடல் கேட்டேன் !நேற்று முன் தினம் செய்தார் போன்று துல்லியமான ஒலிப்பதிவு!பாடலும்பிடித்திருந்தது ... நித்ய சிநேகங்கள் எவ்விடே ..... மீண்டும் நன்றிகள் தோழர் !
கோவியாரே,
பொதுவாக நான் + ஓட்டு குத்துவது மட்டுமே வழக்கம் .ஏனென்றால் ஒரு இடுகையை நாம் பரிந்துரைக்கலாம் .ஆனால் எந்த இடுகையாக இருந்தாலும் படிக்காதே என சொல்ல நான் யார்? எனவே பிடித்ததை பரிந்துரைப்பேனே தவிர இதை படிக்காதே என எதையும் சொல்ல அவசியம் இல்லையென நினைப்பதால் மைனஸ் ஓட்டு போடுவதில்லை.
கண்ணதாசன் கண்ட இயேசு
மங்களம்
(கவியரசு கண்ணதாசன்)
தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!
எத்தனை கோடி செய்திகளோ இங்கு
இயேசுவைப் பற்றிவரும்
அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்
ஆசையில் கற்றவரும்!
இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்
இதிலொரு சக்திவரும்!
தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்
தயவுடன் பொறுத்தருளும்!
நாடு விளங்கிட வீடு துலங்கிட
நல்லவர் பாவிகளும்
கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட
கேட்டதும் ஓடிவாரும்!
பாடுபவர் இதை படிப்பவர்க் க்எல்லாம்
பரமனின் வீடு வரும்!
கூடுகளில் அவன் ஆவி புகுந்து
நன்மைகள் கோடிவரும்!
வாழிய சூசை வாழிய மரியாள்
வாழிய இயேசு பிரான்!
ஆழியும் வானும் உள்ள வரைக்கும்
வாழிய தேவபிரான்!
ஏழைகள் பாவிகள் இரட்சக ராக
எங்கும் நிறைந்தபிரான்!
ஆழ்தமி ழாலே அவர்புகழ் சொன்னேன்
துன்பங்கள் சேரவிடான்!
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!
(கவியரசு கண்ணதாசன் அவர்கள்,தாம் எழுதிய "இயேசுகாவியம்"என்ற நூலின் முடிவுரையாக மேற்கண்ட பாடலை "மங்களம்"என்ற தலைப்பில்(பக்கம் 398-399)எழுதியுள்ளார்கள்.)
கருத்துரையிடுக