நடிகைகளைப் பற்றி அவதூறுகளாக செய்தி வெளி இடுகிறார்கள் என்று கண்டனக்குரல் எழுப்பி இருக்கின்றனர் தென்னிந்திய திரைப்பட (நடிகர்) சங்கத்தைக் கூட்டிய நடிகர்கள். அவதூறுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதில் ஒன்றும் தவறு இல்லை. செய்தி ஊடகங்களும் திரைப்படத்துறையும் நகமும் சதையும் போன்றதே. ஒருவரை ஒருவர் சார்ந்தே மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். படப்படிப்பு தளங்களில் உச்ச நடிகர்கள் தும்முவது முதல் நடிகைகள் பித்த வாந்தி எடுப்பதுவரை செய்தியாக்குவது செய்தி ஊடகங்களின் மக்கள் சேவை என்றால் குப்பைப் படங்களை அதே செய்தி ஊடகங்களின் வழியாகத்தான் மிகவும் பிரமாண்ட விளம்பரங்களின் வழி பொதுமக்களின் சுறுக்குப் பையின் சில்லரைக்கு குறிவைத்து செயல்படுவது திரைத்துதுறை.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு என்கிற பெயரில் திரைத்துறையில் அலைக்கழிக்கப்பட்டு அன்றாடம் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனையோ பேர். அதில் ஒருசில பெண்கள் விதிவிலக்காக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நல்ல நடிகையாக வளர்பவர்கள் என அவர்களின் எண்ணிக்கைக் குறைவே. இதைத் திரைத்துறையில் இருப்பவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். திரைத்துறை என்பது முழுக்க முழுக்க ஆண்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழில் கூடம். நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் 'அலைக்கப்படும்' பெண்கள் அதை நம்பி சிக்கியபிறகு, நல்ல வாய்ப்புக் கிடைப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்துவிடுபட்டு பணம் புகழுக்காக அதைத் தொடர்வார்கள். அப்படி வாய்ப்பே கிடைக்காதவர்கள் பழகிக் கொண்டதன் காரணமாக, அதில் இருந்து விடுபட முடியாத சூழல்காரணமாக விலைமாதர்களாக்கப் படுகின்றனர்.
திரைத்துரையில் இருப்பவர்களும் கூட நடிகர்களை நாம் அவமானப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் நடிகர்கள் குறித்துப் பேசும் போது 'அவர்' என்கிற மரியாதை விகுதியைப் பயன்படுத்தியே நடிகர்கள் குறித்துப் பேசுவார்கள், ஆனால் நடிகைகளைக் குறிப்பிடும் போது அவ்வாறு சொல்வது இல்லை. அங்கே 'அவள்' வந்துவிடும். திரைத்துறைச் சார்ந்த ஒரு சில நண்பர்கள் நடிகர்கள் குறித்துப் பேசும் போது மரியாதை கலந்து பேசியபோது, நடிகைகளை ஏன் அவ்வாறு சொல்லமாட்டேன்கிறீர்கள் என்று கேட்டபோது நடிகைகளுக்கு என்ன மரியாதை, வாய்ப்புக்காக எதையும் செய்பவர்கள் தானே என்பது போல் பதில் அளித்தார். வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று கூறி எதையும் செய்யச் சொல்பவர்கள் பற்றிக் குறிப்பிட மறுக்கிறார்கள், மறக்கிறார்கள்.
திரைப்படங்கள் அனைத்துமே ஆண்களை மையமாகவும் பெண்களை அதில் கவர்சிக்காக சேர்ப்பது போலவே பெரும்பாண்மைப் படங்கள் அமைவது உண்டு, அதிலும் ஆண்களை 'ஹீரோ' ஆக்கி அந்த 'ஹீரோ'வின் பாத்திரம் நடிகர்களுக்கு பொருந்துவது போல் தான் அமைக்கிறார்கள். ஒருசில நல்லப்படங்கள், இயக்குனர்கள் இருந்தாலும் திரைத்துறை என்பது கலைச்சார்ந்த ஒன்று என்பதைவிட வணிகம் சார்ந்த ஒன்றாகிவிட்ட சூழலில் அந்த ஒருசிலரை வைத்து ஒட்டு மொத்த திரைத்துறையும் தூய்மையானது, மக்களுக்காக இயங்குகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட நல்ல மனிதர்களை, அவர்களின் போற்றப்படும் திறன்களை ஒரு குழுவிற்குள் சென்று ஒட்டவைப்பது, குழுவிற்கு அடையாளமாக்குவது அவர்களுக்கும் அவர்களின் செயலுக்கும் களங்கம் விளைவிப்பது போன்றதாகும் என்பதால் விதிவிலக்குகளை (எக்சப்சன்களை) கணக்கில் கொள்வது தவறு. ஹீரோக்களின் திரையில் காட்டும் ஹீரோ இசத்தை உயர்த்திக்காட்ட எத்தனையோ பஞ்ச் டயலாக்குகளை யோசிக்கும் அதே திரைத்துறையினர் நடிகைகளின் மார்ப்புக் கச்சைகளின் அளவை எவ்வளவு குறைத்துக் காட்டினால் 'U/A' முத்திரைகள் கிடைக்கும் / அல்லது தப்பிக்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். அதிலும் சிலர் படத்துக்கு 'A' முத்திரை கிடைத்தால் மகிழவும் செய்கிறார்கள்.
திரைத்துறைகளில் 'அட்ஜஸ்ட்மெண்ட்', 'டிஸ்கசன்' ஆகிய சொற்களில் நடிகைகளை சபலம் கொண்ட தயாரிப்பாளர், வெளியீட்டாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர்களுக்கு விருந்து வைப்பதே வழக்கம், இதைத் திரைத்துறைச் சார்ந்தவர்கள் மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். திரைத் தொழிற்கூடங்களில் திரைக்குப் பின்னால் நடக்கும் ஆடை அவிழ்புகள் எத்தனையோ, அதில் கழட்டிப் போடப்பட்டதில் ஒன்றிரண்டை போட்டு நடிகைகளைத் திரையில் காட்டுகிறார்கள். 'துணை நடிகை' என்றால் 'அவள் விபச்சாரி' என்பது போல் நினைக்கும் செய்தி இதழ் வாசகனுக்கும், திரைப்பட ரசிகனுக்கும் அப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்தியதின் பங்கு யாருக்கு ? திரைத்துறைக்கு ? செய்தி ஊடகங்களுக்கு ? இருவரும் சமமாகவே அதைச் செய்கிறார்கள்
செய்தி ஊடகங்கள் நடிகைகளை அவதூறு செய்துவிட்டார்கள் என்று கண்டனக் குரல் நடிகர்கள் எழுப்பினால் அதை வெளி இடுவதும் அதே அவதூறு செய்திவெளி இட்ட ஊடகங்கள் தான் என்பதை ரசிகர்களோ வாசகர்களோ புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதை செய்தி ஊடகமும் சரி, திரைத்துறையும் சரி நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன.
திரைத்துறைக் களங்கப்பட்டு உள்ளதால் தானே செய்தி இதழ்கள் அதை கிசுகிசுக்களாக வெளி இடுகின்றன ? கிசுகிசு தகவல்கள் கொடுப்பதும் திரைத்துறையினரே, பிறரை நொந்து கொள்வதில் பயன் ஏது ? அல்லது அறியாமல் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் முறைகேடுகள் நடக்கின்றனவா ? நடிகைகள் அனைவருமே மிகவும் ஒழுக்கமானவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் அவர்களில் பலர் ஒழுக்கம் கெட்டுப் போவது திரைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டப் பழக்கம் தான்.
நடிகர்கள் / நடிகைகளை அவதூறு செய்கிறார்கள் என்று கவலைப்படும் திரைத்துறையினர் (நான் அதைத் தவறு என்று சொல்லவரவில்லை), பெண்களை வைத்து, பெண்களுக்கு ஆசைகாட்டி, பலவந்தப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் கண்ணுக்கு முன்பே நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி நடிகர் சங்கங்களில் விவாதித்திருக்கிறார்களா ? அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா ? என்று எந்த ஒரு ரசிகனும் கேட்கமாட்டான். நடிகைகளின் தற்கொலைகளுக்கு திரை உலகம் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒரே முறை தற்கொலை செய்து கொள்ளும் நடிகைகள் பற்றி அலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன, அதுவும் நடிகைகள் மன அழுத்தத்திலிருந்து காத்துக் கொள்ள கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைதான், ஆனால் அதே கூட்டத்தில் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவோ, எட்டவோ இல்லை. இது போன்று கண்டனக் குரல்கள் யாருக்கான நாடகம் ? இதற்கு உடந்தையாக நடிகைகளையும் அழைத்துக் கொள்வதை நடிகைகளே புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது. நடிகைகளுக்குத்தான் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட சங்கத்தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப் பட்ட நடிகைகள் எத்தனை பேர் ?
பின்குறிப்பு : திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
27 கருத்துகள்:
//நடிகர் சங்கத்தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப் பட்ட நடிகைகள் எத்தனை பேர் ?//
நடிகையர் சங்கம் என்று இருந்தால் தேர்வு செய்து இருப்பார்களோ! :-)
இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லை ..இன்னும் இரண்டு வாரம் சென்றால் எல்லோரும் வேற டாபிக் கிடைத்தவுடன் இதை மறந்து விடுவார்கள் ..அவ்வளோ தான்
///பின்குறிப்பு : திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்//
ithu super thala
//கிரி said...
//நடிகர் சங்கத்தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப் பட்ட நடிகைகள் எத்தனை பேர் ?//
நடிகையர் சங்கம் என்று இருந்தால் தேர்வு செய்து இருப்பார்களோ! :-)
//
:)
கிரி,
நடிகர் சங்கம் அல்ல, தென்னிந்திய திரைப்பட சங்கம் என மாற்றிவிட்டேன்.
இதில் பெரிய சிரிப்பு நம்ம நாட்டாமை விசயகுமார் கமிஷனர் அலுவலகத்தில் துள்ளிய துள்ளல் பற்றிய செய்தி.. கமிஷனர் நல்ல நோஸ் கட் குடுத்தது ஸ்பெஷல்
657 வது நபராக வந்த நான்
4 வது நபராக பின்னூட்டமிடுகிறேன்.
இதுதான் புரியவே மாட்டீங்கிது
------புரியாத பொன்னுச்சாமி
சினிமா சினிமா ...
அய்யா,
நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதை சொன்னதற்காக திரைத்துறையினர் கோபப்படவில்லை, அதை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்றுதான் கோபப்படுகிறார்கள்.
In other words,கிசு கிசு பக்கத்தில் மறைமுகமாக சொல்வதை 'முதல் பக்கத்தில்' நேரடியாக சொல்லி விட்டார்களே என்றுதான் கோபப்படுகிறார்கள்.
//திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன் //
அப்ப நான் மன்னிக்க வேண்டாமா??
:))
அண்ணே நானும் அங்க ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்ணே.எம் பேரையும் சேருண்ணே :))
நடிகர் சங்கம் நடத்திய கண்டனம், கூட்டம், கண்ணீர்,கூத்து இன்னமும் கேலிக்கூத்தாகவே போய்க் கொண்டிருக்கிறது.
நடிகர் சங்கத்தின் புகாரை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக, தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை மட்டும் கைது செய்திருக்கிறது. வழக்கமாக திமுகவால் 'அவாள்' பத்திரிகையாக எப்போதுமே பார்க்கப்படுகிற தினமலர், சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாகச் செய்திகள் வெளியிடுவதால், எப்போதும் போல பதிப்பாளர், நிர்வாக ஆசிரியர் கைது எல்லாம் இல்லை!!
மதுரை தினமலர் அலுவலகத்தில் ஆனாவின் ஆட்கள் புகுந்து சேதப்படுத்திய கடந்த கால அனுபவம் இருந்தபோதும் கூட,சண் குழுமத்தின் 'தினகரன்' நாளிதழ் வியாபாரப்போட்டியாகவும் அச்சுறுத்தலாகவும் ஆனதால் 'அவாளும்' இப்போது ஆனாவின் ஊதுகுழலாக மாறிவிட்ட வேடிக்கையோடு, இது பத்தோடு பதினொண்ணு!
இன்னும் என்னென்ன வேடிக்கைகள் அரங்கேறப் போகிறதென்று 24X7 தனி சேனலாகவே வைத்து ஒளிபரப்பிவிடலாம்!
அன்புடையீர்
தங்களுடைய blog இல் விதியை வெல்வது எப்படி என்ற புத்தகம் தங்களிடம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . எனக்கு அந்த புத்தகத்தில் உள்ள சில சுலோகம் தேவைப்படுகிறது . தங்களால் அந்த புத்தகத்தின் scan copy அனுப்ப இயலுமா என்று தயை கூர்ந்து அறிய விழைகிறேன்
நன்றி
நடிகைகளுக்கு,
மார்கட்டை உருவாக்குவதில் திரைத்துறைக்கு பெரும்பங்கும்.,
மார்கெட்டை உருவாக்குவதில் ஊடகங்களுக்கு மீதபங்கு.
இவனாலதான் அவன்.
அவனால்தான் இவன்.
எந்தக் காலத்திலும், யாராலும், எந்த முரட்டு அரசாங்கத்தாலும்
ஹை டெக், கார்பரேட், அந்தப்புரம போன்ற உயந்த இடங்களில் நடக்கும் விபச்சாரத்தை ஒன்னும் பண்ண முடியாது.
பேசுவது, பத்திரிகையில் செய்தி வெளியிடுவது, கைது செய்வதெல்லாம் அவர்களுக்கு விளம்பரங்கலாகத்தான் முடியும்.
:(((
ம்ம், சொல்ல மறந்துட்டேனே...
வாழ்க ஜனநாயகம்.,
வளர்க பத்திரிகை சுகந்திரம்.
// எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நானும் அங்க ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்ணே.எம் பேரையும் சேருண்ணே :))//
அப்துல்லா அண்ணே.,
உங்களுக்கு பிஞ்சு மூஞ்சிண்ணே., உங்களையெல்லாம் ரவுடின்னு ஒத்துக்க முடியாது...
செல்லாது., செல்லாது...
முழுமையாக சொல்ல தெரியவில்லை
THIS IS GOING TO BE DISCUSSED FOR ANOTHER TEN DAYS. NOTHING IN IT. ANYWAY YOUR ARTIKCLE IS VERY GOOD.
THIS IS GOING TO BE DISCUSSED FOR ANOTHER TEN DAYS. NOTHING IN IT. ANYWAY YOUR ARTIKCLE IS VERY GOOD.
//கிசு கிசு பக்கத்தில் மறைமுகமாக சொல்வதை 'முதல் பக்கத்தில்' நேரடியாக சொல்லி விட்டார்களே என்றுதான் கோபப்படுகிறார்கள்.// - உண்மை.
உள்ளேன் ஐயா...
இன்னொரு சந்தேகம் தினமலரைத் திட்டும் இந்த ஜோக்கியர்கள் ஏன் புவனேஸ்வரியிடம் ஆதாரம் கேட்கவில்லை
விகடன், குமுதம் ஒன்றும் இதுவரை வாயே திறக்கவில்லை. என்ன காரணம் கோவி ஐயா.
ஏற்கனவே கன்னடப் பிரசாத் இவர்கள் அனைவரையும் பற்றி புத்தகம் எழுதியபோதும் குமுதத்தில் நடிகையின் கதை என்ற பெயரில் வந்த போது துள்ளாத திரையுலகம் ஏன் இப்போ துள்ளுகின்றது.
அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
பாவம் லெனின்! உங்களிடம் சொல்லி எழுத சொல்லியிருக்கலாம் :)
நீங்கள் எழுதியதில் எனக்கு பிடித்தது....
"நடிகர்கள் / நடிகைகளை அவதூறு செய்கிறார்கள் என்று கவலைப்படும் திரைத்துறையினர் (நான் அதைத் தவறு என்று சொல்லவரவில்லை), பெண்களை வைத்து, பெண்களுக்கு ஆசைகாட்டி, பலவந்தப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் கண்ணுக்கு முன்பே நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி நடிகர் சங்கங்களில் விவாதித்திருக்கிறார்களா ? அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா ?"
அன்புடன்
பிரசாத்.
திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்//
இதில் மன்னிப்பு எங்ககே வந்தது.. ஒரு பொதுஜனமாக உங்கள் நேர்மையான அலசலில் உங்கள் கருத்தை சொல்லி இருக்கின்றீர்கள்...
நன்றி
EPPOTHUM THANGALIN NADU NILAIYAANA VIMARSANANGALAEYE PARKKIREN.VAZTHUKAL ATHTHUDAN NEENGAL KODUTHTHU IRUKKUM THALAIPPU MIKA SARIYAANATHU.UNMAIYUM ATHUTHAANN.
கருத்துரையிடுக