பின்பற்றுபவர்கள்

9 அக்டோபர், 2009

பெரியாரின் மூத்திரப் பை !

பெரியார் செய்தது மற்ற அனைத்தும் மிகச் சிறந்தது என்பது எதுவுமே சொல்லாமல், ஆனால் அவர் 30 வயது மணியம்மையை தனது தள்ளாத வயதில் திருமணம் செய்தது தான் அடாத செயல் என்பது போல் பதிவர் பெரியவர் திரு டோண்டு இராகவன் உட்பட சிலர் எழுதுகிறார்கள். ஐயா பெரியவங்களே பெரியார் செய்ததில் உங்களுக்கு உடன்பாடானது என்று இதுவரை பெரியாரைப் பற்றியோ அவரது இயக்கத்தைப் பற்றியும் பாராட்டி எழுதி இல்லாத போது பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது மட்டுமே எதோ அடாதது போல் எழுதுவதன் நோக்கம் என்ன என்பதை விளக்கினால் பலரும் அறிந்து கொள்வார்கள்

பெரியார் மணியம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்டதற்குக் காரணமே அவர் பெண்ணைப் போகப் பொருளாக நினைக்காமல் 'வைத்துக் கொள்ள' ஆசைப்படாமல் திருமணம் மூலம் அந்த உறவை அங்கீகரித்தார். திருமணம் பற்றிய பல்வேறு எதிர்கருத்துகளைக் கூறிய பெரியார், மணியம்மையை யாரும் தூற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு திருமணம் செய்து கொண்டார். பெரியார் மணியம்மையை திருப்தி படுத்தினாரா என்றெல்லாம் கவலைப்படுகிறார்கள். தெய்வத் திருமணங்கள் என்ற பெயரில் அம்மன் சிலைகளுக்கு கோவிலில் பூசை செய்யும் பார்பனர்களே / பூசாரிகளே தாலி கட்டுகிறார்கள், அதையெல்லாம் யாரும் அருவெறுப்பாகப் பார்ப்பது கிடையாது, கோணல் புத்திக்காரர்கள் பார்ப்பார்களோ ? திருமண கோலத்தில் இருக்கும் சாமிகள் உடலுறவு கொள்ளும் என்கிற கற்பனைகளெல்லாம் நாம் செய்கிறோமா ? பிறகு ஏன் பெரியார் மணியம்மை 'உறவைப்' பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டும்.

பெரியாராவது மனைவி இறந்த பிறகு திருமணம் செய்தார், பெரியார் காலத்திலும் அதற்கும் முன்பும் 'கடவுள் சேவை' என்ற பெயரில் கோவிலில் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்களை எந்த வயது ஆசாமிகள் புணர்ந்தார்கள் என்கிற தகவலெல்லாம் சரி பார்த்துவிட்டு பிறகு பெரியாரைக் குறித்து கேள்வி எழுப்பலாமே. விதவைகளைக் குறிவைக்கும் 'மட' சாமியார்கள் பற்றி எதேனும் சந்தேகம் (சந்தேகத்தின் பலனோ என்ன எழவோ) என்ற அளவிலாவது இவர்கள் எதும் கேள்வி எழுப்பி இருக்கிறார்களா ?

ஆண் பெண் உறவுடன் தொடர்புடைய திருமணம் வெறும் புணர்ச்சியில் தான் தொடர்புடையது என்று நினைப்போருக்கு பெரியார் மணியம்மையின் திருமணம் புரியாத ஒன்று தான். அதே நினைப்பில் அன்று இருந்ததால் தான் அறிஞர் அண்ணா அதைக் கடுமையாகச் சாடினார், பின்னர் தாம் விமர்சனம் செய்தது தவறு என்று பெரியாரின் கைகளைப் பற்றினார்.

பெரியார் தொண்டகளும் பெரியார் பற்றாளர்களும் ஏற்றுக் கொண்ட பெரியார் மணியம்மை திருமணத்தைப் பற்றி பிறர் கவலை எழுப்புவது கேள்வி எழுப்புவதும் எதற்காக, நகைப்பாக இருக்கிறது. அதற்கான தகுந்த விளக்கம் கொடுத்தால் இவர்களெல்லாம் உடனேயே பெரியார் கொள்கைகளை தாங்கிப் பிடிக்கப் போகிறார்களா ?


சுயமரியாதை ஊட்டப்பட்ட பெரியாரின் தொண்டர்கள் சுயமரியாதையை ஓரத்தில் வைத்துவிட்டு பெரியார் மீதான அன்பில் பெரியாரின் மூத்திர சட்டியையும் தூக்கியவர்கள் தான். பெரியார் மீதான விமர்சனங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. பெரியார் பற்றிக் கேள்வி எழுப்பத் தகுதியானவர்கள் பெரியார் பற்றாளர்களேயன்றி பெரியார் தூற்றிகளெல்ல ஏனெனில் பெரியார் தூற்றிகளுக்கு பெரியாரைத் தூற்ற மணியம்மையைத் திருமணமெல்லாம் ஒரு சப்பையான காரணம், இதே தூற்றிகள் காமலீலை சாமியார்கள் பற்றியும் வாய்த்திறப்பதில்லை என்பதையெல்லாம் பார்க்கும் போது முறையான திருமணம் முறையற்ற திருமணம் இவற்றையெல்லாம் இவர்கள் சந்தர்பவாத அளவுக்கோலாகக் கொண்டு வருகிறார்கள் அவற்றின் உள்னோக்கம் எப்படியாவது பெரியாரைக் கொச்சைப் படுத்த முடியுமா என்பதே.

வைப்பாட்டி, தேவதாசி முறைகளைப் பற்றி எதுவுமே கண்டிக்காதவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பெரியார் பற்றிக் கேள்வி எழுப்புவது பெரியார் மீதான சுயவெறுப்பு என்பதைத் தாண்டி என்னவாக இருக்கும் ?

வள்ளியை வளைக்க முருகன் கூட கிழவன் வேடம் தான் போட்டான் என்கிறது கந்தப்புராணம். பெரியார் மீது படும் சந்தேகங்களை முருகன் மீதும் பட முடியுமா ?
:)

இன்றைய தேதியில் காவி உடை கொடுத்து மொட்டையடிக்கப்பட்டு 'அமங்கலி' என்ற பெயரில் மூலையில் ஓரங்கட்டப் பட்டு, பிற சாதியினரால் 'மொட்டை பாப்பாத்தி' என்று கேலி செய்யப்படும் பார்பான குலப் பெண்டிரைப் பார்ப்பது அரிது, அப் பெண்களின் நிலை மாறி, பலர் மறுமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குக் காரணமே அனைத்துப் பெண்களுக்குமான பெரியார் ஊட்டிய பெண்ணிய விடுதலை விழிப்புணர்வு தான் காரணம் என்பதை நன்றியுடையவர்கள் மறக்கலாகாது.

66 கருத்துகள்:

Suresh Kumar சொன்னது…

நல்ல எதிர் வினை

ஜோ/Joe சொன்னது…

நெத்தி அடி!

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணே... உள்ளேன் அண்ணே.

Subankan சொன்னது…

முடிவு - நச்!!!

ராவணன் சொன்னது…

நல்ல பதிலடி!


பெரியார் என்றாலே தானாகவே மூத்திரம் போகும் சிலர்,தன் மீதான முக்கியத்துவம் குறைகின்றது என்ற எண்ணத்தில் இது போல எழுதுகிறார்கள்.மீண்டும் இணையத்தில் ஏதாவது வம்பு செய்து யாரையாவது மாட்டிவிடும் எண்ணத்துடன் எழுதுவதாக எனக்குத் தெரிகின்றது.

பதி சொன்னது…

அருமையான விளக்கம்...

+1

:-)))

குலசேகரன் சொன்னது…

//வல்லியை வளைக்க முருகன் கூட கிழவன் வேடம் தான் போட்டான் என்கிறது கந்தப்புராணம்//

வல்லி என்றால் பெருமாளில் பெண்டாட்டி.

வள்ளி என்றால்தான் முருகனின் பெண்டாட்டி.

தமிழ் ஓவியா சொன்னது…

சிறப்பான எதிர்வினை

நன்றி கோவி.கண்ணன்

Sanjai Gandhi சொன்னது…

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்னு எங்க ஊர்ல சொல்வாங்க. உங்களுக்குப் பிடிக்காதவஙக் எவ்ளோ நல்லது பண்ணி இருந்தாலும் அவங்க செய்ற முரண்பாடான விஷ்யத்தைப் பத்தி மட்டும் எப்டி தேடித் தேடி எழுதறிங்களோ அப்டி தான் அவங்களும் எழுதறாங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுகொன்னா?

கவனிக்க: இந்த பின்னூட்டம் கோவியாரின் நிலை பற்றி மட்டுமே. பெரியாரைப் பற்றி எனக்கொன்றும் பெரிதாக தெரியாது என்பதால் பதிவை பற்றி நோ கமெண்ட்ஸ்..

ஜெகதீசன் சொன்னது…

நல்ல எதிர்வினை அப்படின்னு சொல்லத் தான் ஆசை....
ஆனால் வினையாற்றியவர், எதிர்வினையாற்றும் அளவுக்குத் தகுதியானவரா?

பீர் | Peer சொன்னது…

பலரையும் சென்றடைய வேண்டிய பதிவு, ஓட்டுபோட்டுட்டேன்...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அப்படித்தான் கொடுக்கனும்!

பெரியாரால் இழந்ததை விட பெற்றதே நிறைவு!

நன்று கோவியரே!

எனிவே அதை எல்லாம் கண்டுக்காதியள்!

நீங்கள்ளாம் கண்டுக்கிறதுனால கூட பப்புலிசிட்டி தேடக்கூடும்!

ஜாக்கிரத...!

பீ...கேர்...புல்...

ராஜவம்சம் சொன்னது…

பெரியார் கட்டாயதிருமணம் செய்யவில்லை கடத்திசெல்லவில்லை அந்தபெண்னிண்சம்மந்ததோடுதான் வாழ்கைதுனையாக்கினார். பெரியாருக்கு சேவைசெய்வதே என் நோக்கம் என்றார் அந்தபெண்னும்.
இதேபெண் திருமணபந்தம் இல்லாமல் பெரியாருடன் கடைசிவரை இணைந்து இருந்தாள் என்ன சொல்லியிருப்பார்கள் பெரியார் தன் கடைசி காலதில் ஒரு பெண்னுடன் காமலீலைசெய்தார் என்பார்கள். திருமணம் செய்துகொண்டதல் இவ்வாறு கூறுகிறார்கள்.இவர்களுக்கு பதில் கூறுவதே வீண்

Ravichandran Somu சொன்னது…

நல்ல விளக்கம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi


தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தாத்தான் தெரியும்னு எங்க ஊர்ல சொல்வாங்க. உங்களுக்குப் பிடிக்காதவஙக் எவ்ளோ நல்லது பண்ணி இருந்தாலும் அவங்க செய்ற முரண்பாடான விஷ்யத்தைப் பத்தி மட்டும் எப்டி தேடித் தேடி எழுதறிங்களோ அப்டி தான் அவங்களும் எழுதறாங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுகொன்னா?
//

சஞ்செய், உங்க காங்கிரசு நிலைப்பாட்டை தூக்கிட்டு வந்து இங்கே ஒப்பிடாதிங்க. ஒரு படுகொலைக்காக ஒரு இனத்தையே அழிக்கத் துடிப்பது வரலாற்றின் அழுக்கு பக்கங்களாகத்தான் இருக்கப் போகிறது.

உங்க ஞாயப்படி திண்ணக் கொடுக்கிறவன் செருப்பால் அடித்த்தால் செருப்பால் அடிப்பதை ஏன் என்று கேட்கக் கூடாது அவன் சோறு போட்டத்தைத்தான் நினைக்கனும் என்கிற வலியுறுத்தல் அதில இருக்கும் போல. அடிமைகளை உருவாக்குபவர்களின், அடிமை நிலை வேண்டும் என்போரின் நிலை அது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

தமிழ் ஓவியா முதல் தடவையா, கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்யாமல், சுயமாக, சுருக்கமாகவும் சொன்னது:

/சிறப்பான எதிர்வினை/

உண்மைதான் ஐயா! பெண் விடுதலையைப்பற்றி பாரதியும், வேறு சிலரும் கூட விரிவாக அந்த நாட்களில் பேசியிருந்தாலும் கூட, இந்த ஒரு விஷயத்தில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பெரியாரின் பங்கு அதிகமே!

பிரச்சாரம் என்ற வகையில், பெரியாரின் பங்கு அதிகமாகப் பேசப்பட்டாலும், பெண் விடுதலை என்பது இன்னமும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

Samuel | சாமுவேல் சொன்னது…

//இதுவரை பெரியாரைப் பற்றியோ அவரது இயக்கத்தைப் பற்றியும் பாராட்டி எழுதி இல்லாத போது பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது மட்டுமே எதோ அடாதது போல் எழுதுவதன் நோக்கம் ///

அப்படினா ஒருத்தரை பத்தி பாராட்டி எழுதனும், அப்புறம் அவரை பற்றி குறைகளை எழுதலாம்னு சொல்றீங்க. என்ன கொடும சார் இது.

பெரியார் மீது நிறைய மதிப்பு இருக்கு, "எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாதுன்னு" சில பேரை பார்த்து நானே கேட்டுருக்கேன்.
சரி கோவி, பெரியார் மணியம்மை மணந்தது.........(உங்க முதல் விதிமுறைக்கு இது வரைக்கும் உட்பட்டுஇருகேன்) ...சரியா தப்பானு தெரியலை, கட்சிக்காக சில தியாகம் பண்ணிருக்கலாம்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கடைசி வரிகள் நச் ன்னு இருக்கு

Sanjai Gandhi சொன்னது…

//சஞ்செய், உங்க காங்கிரசு நிலைப்பாட்டை தூக்கிட்டு வந்து இங்கே ஒப்பிடாதிங்க. ஒரு படுகொலைக்காக ஒரு இனத்தையே அழிக்கத் துடிப்பது வரலாற்றின் அழுக்கு பக்கங்களாகத்தான் இருக்கப் போகிறது.//

ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் ஒரு இனத்தையும் உங்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க தெரியலைனா அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது.

Sanjai Gandhi சொன்னது…

//பெரியார் செய்தது மற்ற அனைத்தும் மிகச் சிறந்தது என்பது எதுவுமே சொல்லாமல், ஆனால் அவர் 30 வயது மணியம்மையை தனது தள்ளாத வயதில் திருமணம் செய்தது தான் அடாத செயல் என்பது போல் பதிவர் பெரியவர் திரு டோண்டு இராகவன் உட்பட சிலர் எழுதுகிறார்கள். ஐயா பெரியவங்களே பெரியார் செய்ததில் உங்களுக்கு உடன்பாடானது என்று இதுவரை பெரியாரைப் பற்றியோ அவரது இயக்கத்தைப் பற்றியும் பாராட்டி எழுதி இல்லாத போது பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது மட்டுமே எதோ அடாதது போல் எழுதுவதன் நோக்கம் என்ன என்பதை விளக்கினால் பலரும் அறிந்து கொள்வார்கள்//

கோவியார் பதிவு

//உங்க ஞாயப்படி திண்ணக் கொடுக்கிறவன் செருப்பால் அடித்த்தால் செருப்பால் அடிப்பதை ஏன் என்று கேட்கக் கூடாது அவன் சோறு போட்டத்தைத்தான் நினைக்கனும் என்கிற வலியுறுத்தல் அதில இருக்கும் போல. அடிமைகளை உருவாக்குபவர்களின், அடிமை நிலை வேண்டும் என்போரின் நிலை அது//

கோவியார் பின்னூட்டம்..

பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் குறைந்த பட்ச வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களுக்கு சிங்கை சுற்றுலா இலவசம்.

தமிழ் ஓவியா சொன்னது…

//தமிழ் ஓவியா முதல் தடவையா, கட் அண்ட் பேஸ்ட் வேலை செய்யாமல், சுயமாக, சுருக்கமாகவும் சொன்னது://

அய்யா பெரியாரின் கருத்துக்கள் மிக எளிமையானவை. அவரின் கருத்துக்கு யாரும் தெளிவுரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்லாது பெரியார் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு பெரியாரைக் கொண்டே பதில் அளிப்பதுதான் சரியான ஒன்று. எனவே தான் அவருடைய கருத்தை தேடிப் பிடித்து பதிவு செய்கிறோம்.



என்னால் முடிந்த அளவு எழுதி வருகிறேன். நான் எழுதியவைகள் நூலாக வெளிவந்துள்ளது. நான் எழுதிய கட்டுரைகள் பல இதழ்களில் பிரசுரமாகியிருக்கிறது .

இந்த தமிழ் ஓவியா வலைப் பதிவு என்பது பெரியார் கொள்கைப் பரப்பும் வலைப் பதிவு.எனவே என்னுடைய புலமையை காண்பிக்க வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை கிருஸ்ணமூர்த்தி அய்யா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு பயங்கரவாத இயக்கத்தையும் ஒரு இனத்தையும் உங்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க தெரியலைனா அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது. //

சஞ்செய்,

போராளிகள் இல்லை என்றால் (அல்லது ஒழித்துவிட்டு) நாங்களெல்லாம் தமிழர்களுக்கு (நீங்கள் சொல்வது போல் இனம்) விடுதலைப் பெற்றுத்தருவோம் என்று கூ(வி)றியவர்கள், முள் கம்பி திறந்த வெளிச் சிறையில் அடைத்து கொடுமை படுத்தும் சிங்களர்களுக்கு சூத்து கழுவி விடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

உங்களுக்கு பெரியாரைப் பற்றித் தெரியாது என்றால் பெரியார் பற்றியப் பதிவில் உங்கள் அல்லது எனது காங்கிரசு நிலைப்பாட்டைப் / எதிர்ப்பைப் பேச வேண்டியதன் தேவை என்ன ?

Sanjai Gandhi சொன்னது…

//முள் கம்பி திறந்த வெளிச் சிறையில் அடைத்து கொடுமை படுத்தும் சிங்களர்களுக்கு சூத்து கழுவி விடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.//

தயவு செய்து இனி அவர்களுக்கு நீங்கள் கழுவி விட வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்.. வேறு என்னத்தை நினைக்க. பெரியார் பற்றிய பதிவில் சிங்களனுக்கு கழுவி விடுவதைப் பற்றிக் நீங்கள் கேட்கலாம். உங்கள் நிலைபாடு பற்றி நான் பேசக் கூடாது என்பது எவ்வகை நியாயமோ?

//உங்களுக்கு பெரியாரைப் பற்றித் தெரியாது என்றால் பெரியார் பற்றியப் பதிவில் உங்கள் அல்லது எனது காங்கிரசு நிலைப்பாட்டைப் / எதிர்ப்பைப் பேச வேண்டியதன் தேவை என்ன ? //

-----கவனிக்க: இந்த பின்னூட்டம் கோவியாரின் நிலை பற்றி மட்டுமே. பெரியாரைப் பற்றி எனக்கொன்றும் பெரிதாக தெரியாது என்பதால் பதிவை பற்றி நோ கமெண்ட்ஸ்.. ----- இது நான் போட்ட முதல் பின்னூட்டம். நீங்கள் ஊரை எல்லாம் நொட்டை சொல்வீர்கள். ஆனால் உங்க வண்டவாளம் யாருக்கும் தெரியக் கூடாது அலல்து தெரியப் படுத்தக் கூடாதென்றால் என்ன நியாயம் கோவியாரே. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் உங்கள் காங்கிரஸ் நிலைப்பாட்டைப் பற்றி இங்கே பேசவே இல்லை. நீங்களாகத் தான் உளறுகிறீர்கள்.

உங்கள் பதிவில் என் பின்னூட்டம் தேவை இல்லை என்றால் சொல்லிடுங்க. நிச்சயம் இந்தப் பக்கமே வர மாட்டேன். மறைமுக நிர்பந்தம் எதற்கு?.

கோவி.கண்ணன் சொன்னது…

//தயவு செய்து இனி அவர்களுக்கு நீங்கள் கழுவி விட வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்.. வேறு என்னத்தை நினைக்க. பெரியார் பற்றிய பதிவில் சிங்களனுக்கு கழுவி விடுவதைப் பற்றிக் நீங்கள் கேட்கலாம். உங்கள் நிலைபாடு பற்றி நான் பேசக் கூடாது என்பது எவ்வகை நியாயமோ?//

க்கிக் க்கி..... பதில் சொல்ல வக்கில்லை என்பதை சொல்லும் உங்கள் புண்னூட்டத்தை படிச்சுட்டு 'அதால' சிரிக்கப் போறாங்க
:) வாழ்த்துகள் சஞ்செய்.

//-----கவனிக்க: இந்த பின்னூட்டம் கோவியாரின் நிலை பற்றி மட்டுமே. பெரியாரைப் பற்றி எனக்கொன்றும் பெரிதாக தெரியாது என்பதால் பதிவை பற்றி நோ கமெண்ட்ஸ்.. -//

அந்த பின்னூட்டத்துக்கு தான் நானும் மறுமொழி போட்டேன், பெரியாரைப் பற்றியப் பதிவில் தேவை இல்லாததை ஏன் விவாதத்துக்கு கொண்டு வரவேண்டுமென்று.

//உங்கள் பதிவில் என் பின்னூட்டம் தேவை இல்லை என்றால் சொல்லிடுங்க. நிச்சயம் இந்தப் பக்கமே வர மாட்டேன். மறைமுக நிர்பந்தம் எதற்கு?.//

இதெல்லாம் தேவையா ? ஏன் தேவை இல்லாமல் முறுக்கிக் கொள்கிறீர்கள்.
பின்னூட்டத்திற்கு மறுமொழி தானே போட்டேன். உங்களைத் தனிமனித தாக்குதல் நடத்தி இருக்கிறேனா ? அரசியல் நிலைபாட்டைப் பற்றித் தான் கேட்டேன்.

அடப்பாவி ஒழுங்கு மரியாதையா மறுமொழி போடு இல்லாட்டி நான் இரண்டாவது ரோசாவாக மாறக்கூடும் என்று எச்சரிக்கிறேன்,

:)

மின்னுது மின்னல் சொன்னது…

பெரியார் தொண்டகளும் பெரியார் பற்றாளர்களும் ஏற்றுக் கொண்ட பெரியார் மணியம்மை திருமணத்தைப் பற்றி பிறர் கவலை எழுப்புவது கேள்வி எழுப்புவதும் எதற்காக, நகைப்பாக இருக்கிறது. அதற்கான தகுந்த விளக்கம் கொடுத்தால் இவர்களெல்லாம் உடனேயே பெரியார் கொள்கைகளை தாங்கிப் பிடிக்கப் போகிறார்களா ?

//


இதையே இப்படி சொல்லி பாருங்க
ஒரு மதத்தை பின்பற்றுபவர் ஏற்று கொண்ட ஒரு கொள்கையை பற்றி பிறர் கவலை எழுப்புவது கேள்வி எழுப்புவதும் எதற்காக, நகைப்பாக இருக்கிறது. அதற்கான தகுந்த விளக்கம் கொடுத்தால் இவர்களெல்லாம் உடனேயே அந்த மத கொள்கைகளை தாங்கிப் பிடிக்கப் போகிறார்களா ?

Samuel | சாமுவேல் சொன்னது…

//சிங்களர்களுக்கு **** **வி விடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்///

பாஸ்.....பெரியார் தனி மனித நாகரிகத்த பத்தி எதுவும் சொல்லலையா ? நான் நிறைய பெரியார் தொண்டர்களை சந்தித்துருகேன், அவர்கள் பேச்சு கேட்டுட்டே இருக்குலாம் போல இருக்கும், நீங்க எரிச்சல் அடயரத பார்த்தா, உண்மையிலே பெரியார் தொண்டரா நீங்கள்? இல்லை 'பெரியார்' படம் பாத்துட்டு உணர்சிவசபட்டவரா.
இது தனி மனித தாக்குதல இல்லை, பெரியார் பற்றின உங்கள் நிலைபாட்டை பற்றி ...

ஷாகுல் சொன்னது…

உள்ளேன் ஐயா

Jackiesekar சொன்னது…

இன்றைய தேதியில் காவி உடை கொடுத்து மொட்டையடிக்கப்பட்டு 'அமங்கலி' என்ற பெயரில் மூலையில் ஓரங்கட்டப் பட்டு, பிற சாதியினரால் 'மொட்டை பாப்பாத்தி' என்று கேலி செய்யப்படும் பார்பான குலப் பெண்டிரைப் பார்ப்பது அரிது, அப் பெண்களின் நிலை மாறி, பலர் மறுமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்குக் காரணமே அனைத்துப் பெண்களுக்குமான பெரியார் ஊட்டிய பெண்ணிய விடுதலை விழிப்புணர்வு தான் காரணம் என்பதை நன்றியுடையவர்கள் மறக்கலாகாது.---

சிறுவயதில் மொட்டை பாப்பாத்தி ரொட்டி சட்டாளம்... என்று ஒரு பாடல் பிராமண விதவைகளை நையாண்டி செய்த பாடல் ஒன்று உண்டு.. அது இப்போது வழக்கு ஒரிந்த போனதுக்கு பெரியாரின் பெண் விடுதலைதான்...

நல்ல அலசல் நன்றி கோவி
அன்புடன்
ஜாக்கி

நாகை சிவா சொன்னது…

//பெரியார் மணியம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்டதற்குக் காரணமே அவர் பெண்ணைப் போகப் பொருளாக நினைக்காமல் 'வைத்துக் கொள்ள' ஆசைப்படாமல் திருமணம் மூலம் அந்த உறவை அங்கீகரித்தார். திருமணம் பற்றிய பல்வேறு எதிர்கருத்துகளைக் கூறிய பெரியார், மணியம்மையை யாரும் தூற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு திருமணம் செய்து கொண்டார்//

அப்படியா? இந்த விசயம் எனக்கு புதுசு. தனக்கு சட்டப்படி ஒரு வாரிசு தேவை என்ற காரணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று அல்லவா நான் நினைத்தேன்.

கபிலன் சொன்னது…

பெரியார் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அதில் விவாதிப்பது நாகரிகமாகாது.

" மணியம்மையை யாரும் தூற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு திருமணம் செய்து கொண்டார்"

இது தவறான செய்தியாகவே தெரிகிறது.
மணியம்மையை மகளாகத் தத்தெடுக்க நினைத்த பெரியார், ராஜாஜியின் அறிவுரையால் அவரை மணந்து கொண்டார். பிள்ளை இல்லாத சொத்தை ஊரான் ஆட்டை போடாமல் இருக்க , தனக்கு ஒரு சொத்து வாரிசு வேண்டும் என்பதற்காகத் தான் மணியம்மையை மணந்தார் என்பது ஊரறிந்த விஷயம்!

"திருமண கோலத்தில் இருக்கும் சாமிகள் உடலுறவு கொள்ளும் என்கிற கற்பனைகளெல்லாம் நாம் செய்கிறோமா ? பிறகு ஏன் பெரியார் மணியம்மை 'உறவைப்' பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டும்."

ஹாஹா...கோவியாரே, கல்யாணம் என்பது உறவிற்காகத் தான்... : ) பிறகு வேறு எதைப் பற்றி கவலைப்படுவது சொல்லுங்கள்.

"பெரியார் தொண்டகளும் பெரியார் பற்றாளர்களும் ஏற்றுக் கொண்ட பெரியார் மணியம்மை திருமணத்தைப் பற்றி பிறர் கவலை எழுப்புவது கேள்வி எழுப்புவதும் எதற்காக, நகைப்பாக இருக்கிறது. "

அண்ணாதுரை யாருங்க...பெரியார் தொண்டர் இல்லையா?

Samuel | சாமுவேல் சொன்னது…

கோவி
உலக நிறுவனம் ஒன்றே அவுரடய சமுக அக்கறை மற்றும் கொள்கையை பாராட்டி இருக்கு (இது முதல் வரியில் கோவி வைத்த புது விதிமுரைக்காக).

கடைசியா வந்த பின்னுட்டமும் உங்கள் அமைதியையும் பார்க்கும் போது, அவருக்கு தன்னுடைய கட்சியை பத்தின கவலை விட, அவர் சொத்து மேல தான் கவலை இருந்திருக்கு அப்படின்னு சொல்லலாமா?

பித்தனின் வாக்கு சொன்னது…

பெரியாரின் கடவுள் மறுப்பை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள் கூட அவரின் தீண்டாமை மற்றும் கள் எதிர்ப்பு போரட்டங்களை வாழ்த்துகின்றேம். தாங்களும் சமுதாயத்தில் காணும் மூடப்பழக்கங்களை குறை கூறி கடவுளை கொச்சைப் படுத்தும் ஈன மனப்பான்மையை இந்த பதிவில் தவிர்த்து இருக்கலாம். பதிவின் தரம் தாழ்ந்து போய்விட்டதால். தாங்கள் கேக்கும் நல்ல கேள்வி எடுபடாமல் போய், பதிலுக்கு ஆத்திரம் மட்டும் வரும்.
ஆமா பெரியாரின் நல்ல கருத்துக்களை விட்டு இதை மட்டும் விமர்சிப்பது நல்ல கேள்வி. நானும் ஒரு கேள்வி கேக்கின்றேன். நம் மதத்தில் இருக்கும் நல்ல வழக்கங்களை அவரும் அவரை பின் பற்றுவர்களும் பாராட்டத் தவறியது ஏன். மறுப்பு என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு எல்லாத்தையும் மறுப்பது போல் எதிர்ப்பு என்றவுடன் எல்லாத்தையும் எதிர்க்கின்றார்கள். அவ்வளவுதான்.
பதிவின் தரம் கவலை அளிக்கின்றது. யாரே ஒருவர் மலத்தை மனதில் கொண்டால் அதுக்காக நீங்களும் நெஞ்சு பூரவும் அப்பிக் கொண்டதைக் காட்டுகின்றது. நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
பெரியாரின் கடவுள் மறுப்பை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள் கூட அவரின் தீண்டாமை மற்றும் கள் எதிர்ப்பு போரட்டங்களை வாழ்த்துகின்றேம். தாங்களும் சமுதாயத்தில் காணும் மூடப்பழக்கங்களை குறை கூறி கடவுளை கொச்சைப் படுத்தும் ஈன மனப்பான்மையை இந்த பதிவில் தவிர்த்து இருக்கலாம். பதிவின் தரம் தாழ்ந்து போய்விட்டதால். தாங்கள் கேக்கும் நல்ல கேள்வி எடுபடாமல் போய், பதிலுக்கு ஆத்திரம் மட்டும் வரும்.
ஆமா பெரியாரின் நல்ல கருத்துக்களை விட்டு இதை மட்டும் விமர்சிப்பது நல்ல கேள்வி. நானும் ஒரு கேள்வி கேக்கின்றேன். நம் மதத்தில் இருக்கும் நல்ல வழக்கங்களை அவரும் அவரை பின் பற்றுவர்களும் பாராட்டத் தவறியது ஏன். மறுப்பு என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு எல்லாத்தையும் மறுப்பது போல் எதிர்ப்பு என்றவுடன் எல்லாத்தையும் எதிர்க்கின்றார்கள். அவ்வளவுதான்.
பதிவின் தரம் கவலை அளிக்கின்றது. யாரே ஒருவர் மலத்தை மனதில் கொண்டால் அதுக்காக நீங்களும் நெஞ்சு பூரவும் அப்பிக் கொண்டதைக் காட்டுகின்றது. நன்றி.
//

:)

உங்களைப் போன்ற 'உயர்வு' மனப்பான்மை ஆட்களுக்கு மலம் ஒரு பெரிய பிரச்சனை இத்தனைக்கும் அது வயிற்றிற்குள்ளேயும் இருக்கும் உண்மையை தாங்களெல்லாம் நினைப்பதே இல்லை. புறச்சமூகத்தால் 'தோட்டி' என்று அழைக்கப்படுபவனிடமும், பாதாள சாக்கடைக்குள் இறங்குபவனிடமும் மலம் குறித்துப் பேசிப் பாருங்கள், அவன் முகம் சுளிக்கவே மாட்டான்.

உங்கப் பிரச்சனை இந்து மதத்தில் இருக்கும் நல்லதைப் பற்றிப் பேசனும், கெட்டதை மூடி வைத்துவிட வேண்டுமா ? மூடி வைத்துவிட்டால் நாறாதா ?

சனாதனத்தைத் தாங்கிப் பிடிக்க ஆடுகோழி வெட்ட தடை விதிக்கப்பட்ட போது சனாதான சாக்கடைவாதிகள் என்ன செய்தார்கள் ? அவனனவன் குலதெய்வதிற்கு கெட வெட்டுவதற்குக் கூட உரிமை கொடுக்காத சனாதனம் என்ன ஈனத்தனம் என்று விளக்குவீரா ? எம்மக்கள் ஆடுகோழி பலி இடுகிறார்கள் என்று அவர்களை காவல் துறையை விட்டு ஓட ஓட விரட்டி அவர்கள் சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டதை சந்து மத சனாதானவாந்திகள் என்ன ஞாயம் சொல்கிறார்கள் ? சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

ஐயா பித்தனாரே, உள்ளிருக்கும் சீழை துணிபோட்டு மூடினாலும் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமய்யா ? மூடுவது அழகல்ல, அதை அறுத்து எடுத்து சீழை அப்புறப்படுத்தினால் தான் உறுப்புக்கும், உயிருக்கும் பாதுகாப்பே கிடைக்கும்.

Sanjai Gandhi சொன்னது…

//அடப்பாவி ஒழுங்கு மரியாதையா மறுமொழி போடு இல்லாட்டி நான் இரண்டாவது ரோசாவாக மாறக்கூடும் என்று எச்சரிக்கிறேன்,

:)//

நான் பாலா அண்ணாவிடம் சொல்லுவேனே. :))

அதென்ன 2வது ரோசா? டைரக்டர் செல்வமணியை கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களா? ச்சி..ச்சி.. என்னதான் நீர் பெரியார் “பக்தனா” இருந்தாலும் இதெல்லாம் நம்ம கல்சருக்கு ஒத்து வராது சாமி. எதுல எல்லாம் கட்டுடைப்பு பன்றதுன்னு விவஸ்தை இல்லையா? :)

Sanjai Gandhi சொன்னது…

//நீங்க எரிச்சல் அடயரத பார்த்தா, உண்மையிலே பெரியார் தொண்டரா நீங்கள்? இல்லை 'பெரியார்' படம் பாத்துட்டு உணர்சிவசபட்டவரா.//

சாமி, இப்டி நாக்கு மேல பல்லு போட்டு பேசற வேலை வேணாம்.. எல்லாரும் தி.க மூலம் பெரியார் பத்தி கத்துக்கிட்ட கத்துகுட்டிங்க தான். எங்க கோவி அண்ணன் வி.க மூலம் பெரியார் பாடம் படிச்சவர். சாக்கிரதை.. :))

வி.க ந்னா என்னாவா? நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.. போங்கய்யா.. :))

Sanjai Gandhi சொன்னது…

நாகை புலி , மின்னுது மின்னல், கபிலன் ஆகியோரை எச்சரிக்கிறேன். அண்ணன் கோவியாரை எசகு பிசகா கேள்வி கேட்டு இம்சை பண்ணாதிங்க. பிறகு கழுவறதை பத்தி சம்பந்தமே இல்லாம கெள்வி கேட்பார்.

... எதுக்குடா இவனை கமெண்ட் போட சொன்னோம்னு இப்போ வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம் கோவிஜி.. விதி வலியது.. வர்ட்டா.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...
//அடப்பாவி ஒழுங்கு மரியாதையா மறுமொழி போடு இல்லாட்டி நான் இரண்டாவது ரோசாவாக மாறக்கூடும் என்று எச்சரிக்கிறேன்,

:)//

நான் பாலா அண்ணாவிடம் சொல்லுவேனே. :))//

:)

சஞ்செய் இன்னும் கூட உனக்கு அண்ணன்கள், தம்பிகள் இருக்கிறார்கள். NO அண்ணன், தம்பி ஆறுமுகம். ஆறுமுகம் யாரா ? நான் இந்த வெளையாட்டுக்கு வரலை.

//அதென்ன 2வது ரோசா? டைரக்டர் செல்வமணியை கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களா? ச்சி..ச்சி.. என்னதான் நீர் பெரியார் “பக்தனா” இருந்தாலும் இதெல்லாம் நம்ம கல்சருக்கு ஒத்து வராது சாமி. எதுல எல்லாம் கட்டுடைப்பு பன்றதுன்னு விவஸ்தை இல்லையா? :)
//

நம்ம கல்சர் என்னன்னு ஈரோட்டுக்காரர்களிடம் கேளுங்கன்னு அண்ணன் ஈவிகேஸ் சொல்லிடப் போறார் பார்த்துக்கய்யா.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...
//நீங்க எரிச்சல் அடயரத பார்த்தா, உண்மையிலே பெரியார் தொண்டரா நீங்கள்? இல்லை 'பெரியார்' படம் பாத்துட்டு உணர்சிவசபட்டவரா.//

சாமி, இப்டி நாக்கு மேல பல்லு போட்டு பேசற வேலை வேணாம்.. எல்லாரும் தி.க மூலம் பெரியார் பத்தி கத்துக்கிட்ட கத்துகுட்டிங்க தான். எங்க கோவி அண்ணன் வி.க மூலம் பெரியார் பாடம் படிச்சவர். சாக்கிரதை.. :))

வி.க ந்னா என்னாவா? நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.. போங்கய்யா.. :))
//

வி.க தெரியாதா ? திருவிக !

Sanjai Gandhi சொன்னது…

//நம்ம கல்சர் என்னன்னு ஈரோட்டுக்காரர்களிடம் கேளுங்கன்னு அண்ணன் ஈவிகேஸ் சொல்லிடப் போறார் பார்த்துக்கய்யா.

:) //

எதுக்குமே நேரடியா பதில் சொல்ல கூடாதுன்னு பாடிகாட் முனீஸ்வரனுக்கு எதும் வேண்டுதலா?

பைதிவே.. யாரந்த ஆறுமுகம்?
நோ எனக்கு மிகவும் பிடித்தமான என் பாசத்திற்குரிய அண்ணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Sammy said...
கோவி
உலக நிறுவனம் ஒன்றே அவுரடய சமுக அக்கறை மற்றும் கொள்கையை பாராட்டி இருக்கு (இது முதல் வரியில் கோவி வைத்த புது விதிமுரைக்காக).

கடைசியா வந்த பின்னுட்டமும் உங்கள் அமைதியையும் பார்க்கும் போது, அவருக்கு தன்னுடைய கட்சியை பத்தின கவலை விட, அவர் சொத்து மேல தான் கவலை இருந்திருக்கு அப்படின்னு சொல்லலாமா?

10:23 PM, October 10, 2009
//

எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நாக்கு மேல பல்லுப் போட்டு பேச யாரோட அனுமதியும் தேவையா என்ன ? அப்படித்தான் அவர் சொன்னதையும் எடுத்துக் கொண்டேன். என்னை மடையன், முட்டாள் என்று திட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் என்னைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அல்லது தெரியாமல் தான் திட்டுகிறீர்கள் என்று நான் எடுத்துக் கொண்டு உங்களிடம் சண்டை வளர்க்க முடியுமா ?

திட்டுகிறவர்கள் காரணமின்றி கூடத் திட்டுவார்கள், அதெற்கெல்லாம் பதில் சொல்வது அறிவுடையோர்க்கு அழகு அல்ல என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

Sanjai Gandhi சொன்னது…

திட்டுகிறவர்கள் காரணமின்றி கூடத் திட்டுவார்கள், அதெற்கெல்லாம் பதில் சொல்வது அறிவுடையோர்க்கு அழகு அல்ல என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

எல்லாரும் பார்த்துக்கோங்க.. கோவிஜி அறிவுடையார்.. அறிவுடையார்.. அறிவுடையார்..

இதுக்கு ட்ரீட் எப்போ கோவியாரே? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...
திட்டுகிறவர்கள் காரணமின்றி கூடத் திட்டுவார்கள், அதெற்கெல்லாம் பதில் சொல்வது அறிவுடையோர்க்கு அழகு அல்ல என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

எல்லாரும் பார்த்துக்கோங்க.. கோவிஜி அறிவுடையார்.. அறிவுடையார்.. அறிவுடையார்..

இதுக்கு ட்ரீட் எப்போ கோவியாரே? :)
//

41 பின்னூட்டம் ஆச்சு. அடுத்த பதிவில் பார்ப்போம்.

பேராதரவிற்கு நன்றி சஞ்செய்.

Sanjai Gandhi சொன்னது…

//41 பின்னூட்டம் ஆச்சு. அடுத்த பதிவில் பார்ப்போம்.

பேராதரவிற்கு நன்றி சஞ்செய். //

ஓ.. இதான் மேட்டரா? ரைட்டு.. அடுத்த பதிவுல என் ஆதரவு எப்டி இருக்குன்னு மட்டும் பாருங்க.. :))

Unknown சொன்னது…

// கோவிஜி அறிவுடையார்.. அறிவுடையார்.. அறிவுடையார்.//.

அடப்பாவி,மஞ்ச துண்டு சொலவது அண்டப்புளுகு என்றால் இது ஆகாசப்புளுகு லெவலுக்கு அல்லவா இருக்கிறது.போகட்டும்;இப்பவாவது இவர் மனம் திருந்தி யூத் காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்தால் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.

Sanjai Gandhi சொன்னது…

//இவர் மனம் திருந்தி யூத் காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்தால் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.

//

வீரபாண்டியாரே, கோவியாரை யூத் என்று சொல்வதை அவர் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ரொம்ப பெரிசுங்க.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//veerapandian said...
// கோவிஜி அறிவுடையார்.. அறிவுடையார்.. அறிவுடையார்.//.

அடப்பாவி,மஞ்ச துண்டு சொலவது அண்டப்புளுகு என்றால் இது ஆகாசப்புளுகு லெவலுக்கு அல்லவா இருக்கிறது.போகட்டும்;இப்பவாவது இவர் மனம் திருந்தி யூத் காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்தால் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.
//

அது என்னது யூத் காங்கிரசு, குடிசைக்குள்ள நுழைந்து போஸ் கொடுப்போர் அமைப்பா ?
அவ்வ்வ்வ்வ்.

மாற்றிப் படிச்சிட்டு எனக்கு சிரிப்பு சிப்பா வருது.

கோவி.கண்ணன் சொன்னது…

//anjaiGandhi said...
//இவர் மனம் திருந்தி யூத் காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்தால் அறிவாளி என்று ஒப்புக் கொள்ளலாம்.

//

வீரபாண்டியாரே, கோவியாரை யூத் என்று சொல்வதை அவர் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ரொம்ப பெரிசுங்க.. :)
//

நான் யூத்தும் இல்லை தலையில் தொப்பிப் போட்டு அதை மறைக்கவும் இல்லை :)

உனக்கு தேவையா சஞ்செய்.

Sanjai Gandhi சொன்னது…

தேவை என்பதால் தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். எங்க கிட்டயேவா? :)

//மாற்றிப் படிச்சிட்டு எனக்கு சிரிப்பு சிப்பா வருது.
//

எப்போதும் அதைப் பற்றியே நினைப்பதாலும் பேசுவதாலும் இனி நீங்கள் ”*த்து புகழ் கோவி கண்ணன்” என பதிவு உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவீர்கள். :)

இது உங்களுக்குத் தேவையா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...
தேவை என்பதால் தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். எங்க கிட்டயேவா? :)

//மாற்றிப் படிச்சிட்டு எனக்கு சிரிப்பு சிப்பா வருது.
//

எப்போதும் அதைப் பற்றியே நினைப்பதாலும் பேசுவதாலும் இனி நீங்கள் ”*த்து புகழ் கோவி கண்ணன்” என பதிவு உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவீர்கள். :)

இது உங்களுக்குத் தேவையா? :)

3:34 PM, October 12, 2009
//

அதுல கை வைத்து கழுவாத நாள் உண்டா (அவன் அவனுடையதைத்தான் சொல்கிறேன்), இல்லைன்னு சொன்னால் உன்னை தீண்டாமைக்கு உம்மை உள்ளாக்கிவிடுவார்கள். அதைப் பற்றி பொதுவில் பேசினால் மட்டும் புனிதம் கெட்டுவிடுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi said...
தேவை என்பதால் தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். எங்க கிட்டயேவா? :)
//

சிங்கப்பூருக்கு வா சஞ்செய்,இங்கே கூட்டிப் போகிறேன் அப்பறம் தேவைப்படாது
:)

Samuel | சாமுவேல் சொன்னது…

// அதைப் பற்றி பொதுவில் பேசினால் மட்டும் புனிதம் கெட்டுவிடுமா ?///


பாஸ்...உங்களை மதிக்கிற பெரியோர்கள், உங்க வீட்டு குழந்தைகள், பெண்கள், இவர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி வார்த்தைகள் பேசி பாருங்க,



வலைஉலகத்தில் முன்னணி பதிவர் அப்படின்னு பலரும் சொல்ற உங்கள் பதிவில், இந்த மாதிரி எழுதிட்டு, அதுக்கும் நாலு பேர்,,சூப்பர், அபாரம், சிறப்பான பதிவு, அப்படினு சொன்னா, புதுசா வலைஉலகத்தில் வரவன் என்ன நினைப்பான், இதை படிக்கிற பெண்கள் தான் என்ன நினைப்பார்கள், முழு தமிழர் பதிவர்களை தப்பா நினைக்கமாடாங்களா ? இடம் அறிந்து வார்த்தைகள் உபயோக படுத்த வேண்டாமா ?

இதை படித்து ஏண்டா படித்தோம்னு நினைக்கிற பெண்கள், மற்ற பதிவர்களிடம் தமிழர் பதிவர்கள் சார்பில், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sammy said...
// அதைப் பற்றி பொதுவில் பேசினால் மட்டும் புனிதம் கெட்டுவிடுமா ?///


பாஸ்...உங்களை மதிக்கிற பெரியோர்கள், உங்க வீட்டு குழந்தைகள், பெண்கள், இவர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி வார்த்தைகள் பேசி பாருங்க,
//

எனக்கெல்லாம் சூத்து கழுவுவதையும், சூத்து என்று சொல்வதையும் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் சொல்லிக் கொடுத்தார்கள், அதனால் இதில் முகச் சுளிப்பு ஒன்றுமே இல்லை.

buttocks என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்ல எங்க வீட்டில் யாரும் வெள்ளைக்காரர்கள் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என் மகளுக்கு உறுப்புகளைப் பற்றிச் சொல்லித்தரும் போது சூத்தை சூத்து என்றே தான் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். இதே போல் சொல்லித்தந்தால் தான் அவர்கள் தமிழில் உடல் உறுப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

//வலைஉலகத்தில் முன்னணி பதிவர் அப்படின்னு பலரும் சொல்ற உங்கள் பதிவில், இந்த மாதிரி எழுதிட்டு, அதுக்கும் நாலு பேர்,,சூப்பர், அபாரம், சிறப்பான பதிவு, அப்படினு சொன்னா, புதுசா வலைஉலகத்தில் வரவன் என்ன நினைப்பான், இதை படிக்கிற பெண்கள் தான் என்ன நினைப்பார்கள், முழு தமிழர் பதிவர்களை தப்பா நினைக்கமாடாங்களா ? இடம் அறிந்து வார்த்தைகள் உபயோக படுத்த வேண்டாமா ?//

யாரவது தன்னைப் பற்றிய 'புனித' பிம்பம் தேவை என்று நினைப்பவர்கள் நீங்கள் சொல்வது போல் மறைத்து எழுதலாம். எனக்கு புனித பிம்பம் பட்டம் தேவை இல்லை. சொல்வதை நேரடியாகத்தான் சொல்ல முடியும். பிறரை தாழ்வாக திட்டும் ஆபாச சொற்கள் தவிர்த்து பிற பெயர் சொற்களை பதிவில் பயன்படுத்த நான் தயங்கியது இல்லை. புதுசா வலையுலகம் எழுத வருகிறவர்களும் மனத்தடை போட்டுக் கொள்ளாது எழுத வேண்டும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மருத்துவர்கள் கூட ஆண்/பெண் புணர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது உடலுறவு என்றச் சொல்லைப் பயன்படுத்தினால் ஆபாசம் பேசுகிறார்கள் என்று நினைப்பீர்களோ.

//இதை படித்து ஏண்டா படித்தோம்னு நினைக்கிற பெண்கள், மற்ற பதிவர்களிடம் தமிழர் பதிவர்கள் சார்பில், மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.//

பதிவர்கள் சார்ப்பு எடுக்கும் அளவுக்கு ஒட்டு மொத்த பதிவர்களும் உங்களுக்கு உரிமை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் போச்சு. தெரிந்திருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டு போடலாமா வேண்டாமா என்று யோசித்திருப்பேன். பிறரிடமும் எதைப் பற்றி எழுதினாலும் 'பதிவர்கள் சார்பில்' கருத்து சொல்கிறவர் இருக்கிறார் அவரிடம் கேட்டீர்களா ? என்று நினைவு படுத்தலாம்.

ஒருவரிடம் நாகரீகமின்றி இதை எழுது இதை எழுதாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இருப்பது போல் தெரியவில்லை. ரொம்ப டெரராக இருக்கிங்களே. ஏன் இப்படி ?

bala சொன்னது…

//எப்போதும் அதைப் பற்றியே நினைப்பதாலும் பேசுவதாலும் இனி நீங்கள் ”*த்து புகழ் கோவி கண்ணன்” என பதிவு உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவீர்கள்//

சஞசய் அய்யா,

சபாஷ்.
கோவி.மு.கண்ணன் அய்யாவுக்கு,
"ஆயிரம் *த்து கழுவி அரியணை ஏறிய சிங்கையோன்" என்ற தூய திராவிட பட்டம் வழங்க ஒரு சில குஞ்சுகள் தயாராகிவிட்டன.உடன் பிறப்புக்கள் மட்டும் வழக்கம் போல் இந்த பட்டத்தையும் மஞ்சதுண்டுக்கே கொடுக்க வேண்டும் என அடம் பிடிக்கின்றன.கோவி.மு.கண்ணனுக்கு காஃபி கொடுத்த வள்ளல் மானமிகு மட்டும் கோவிக்கே கொடுத்து விடலாம் என்று ஓ கே சொல்லி விட்டார்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
//எப்போதும் அதைப் பற்றியே நினைப்பதாலும் பேசுவதாலும் இனி நீங்கள் ”*த்து புகழ் கோவி கண்ணன்” என பதிவு உலக மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவீர்கள்//

சஞசய் அய்யா,

சபாஷ்.
கோவி.மு.கண்ணன் அய்யாவுக்கு,
"ஆயிரம் *த்து கழுவி அரியணை ஏறிய சிங்கையோன்" என்ற தூய திராவிட பட்டம் வழங்க ஒரு சில குஞ்சுகள் தயாராகிவிட்டன.உடன் பிறப்புக்கள் மட்டும் வழக்கம் போல் இந்த பட்டத்தையும் மஞ்சதுண்டுக்கே கொடுக்க வேண்டும் என அடம் பிடிக்கின்றன.கோவி.மு.கண்ணனுக்கு காஃபி கொடுத்த வள்ளல் மானமிகு மட்டும் கோவிக்கே கொடுத்து விடலாம் என்று ஓ கே சொல்லி விட்டார்.

பாலா
//

வாடா பெண் பெயரில் ஆபாசப் பதிவு எழுதி செருப்படிப் பட்ட வெண்ணை. உன்னைத்தான் கருத்து சொல்ல அழைத்தார்கள். நீ எங்கே வராமல் போய்விடுவாயோ என்று ஐயப்பட்டேன்.

bala சொன்னது…

//வாடா பெண் பெயரில் ஆபாசப் பதிவு எழுதி செருப்படிப் பட்ட வெண்ணை. உன்னைத்தான் கருத்து சொல்ல அழைத்தார்கள். நீ எங்கே வராமல் போய்விடுவாயோ என்று ஐயப்பட்டேன்.//

கோவி.மு.கண்ணன் அய்யா,

அய்யய்யோ என்னங்க இது?அபாண்டமா இப்படி ரீல் விடறீங்க.அந்த திறமை என்னிடம் இல்லீங்கய்யா.நீங்க சொல்வதை செய்தது ஒரு வேளை உங்க டீச்சர் கருப்பய்யாவாக இருக்குமோ..அல்லது அவரிடம் பாடம் படித்தவனோ?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
//வாடா பெண் பெயரில் ஆபாசப் பதிவு எழுதி செருப்படிப் பட்ட வெண்ணை. உன்னைத்தான் கருத்து சொல்ல அழைத்தார்கள். நீ எங்கே வராமல் போய்விடுவாயோ என்று ஐயப்பட்டேன்.//

கோவி.மு.கண்ணன் அய்யா,

அய்யய்யோ என்னங்க இது?அபாண்டமா இப்படி ரீல் விடறீங்க.அந்த திறமை என்னிடம் இல்லீங்கய்யா.நீங்க சொல்வதை செய்தது ஒரு வேளை உங்க டீச்சர் கருப்பய்யாவாக இருக்குமோ..அல்லது அவரிடம் பாடம் படித்தவனோ?

பாலா
//


நீ ஏன் அவனிடம் பாடம் படிக்கனும் நீ தான் 'அனைத்தையும்' கரைத்து குடித்தவனாயிற்றே.

கொப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னு நீ அடிக்கடி பெயர்மாற்றி வந்தாலும் பாலபாரதியிடம் நீ கைப்பட எழுதிக் கொடுத்த கடிதம் இன்னும் இருக்கிறதாம், சிரங்குபிடித்தவன் கைபோல நீ மேலும் முயற்சிக்கும் போது மீண்டும் சிக்கும் போது உன் பூணூலையும் சேர்த்தே அறுப்பார்கள். அதுவரையில் அடங்காதே.

Samuel | சாமுவேல் சொன்னது…

டே மகனே ...இது தான் முடி...இதுக்கு தூய தமிழில் "மயிர்" அப்படின்னு சொல்லுவாங்க.



டே மகனே...யாராவது பிடிக்காத கருத்து சொன்னா...."போடா மயிறு" , "எவன் **** கழுவ போன" இந்த மாதிரி அவன கேளு.



இந்த ரெண்டுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் உண்டுன்னு நினைக்கிறன்...



மற்றவர் சார்பில் நான் சொன்ன தவறை ஒத்து கொள்கிறேன், அனால் தெரியாமல் நானும் இந்த விவாதத்தில் நடுவில் வந்துட்டேன், அதான் அந்த மன்னிப்பு.

உங்களுக்கு பின்னுடம்னா "அபாரம்" "சூப்பர்" இப்படி தான் எழுதனும் போல, வேற எழுதுன நாகரிகம் இல்லைன்னு சொல்றீங்க. கவனிக்க பட்டாகிவிட்டது

bala சொன்னது…

//பாலபாரதியிடம் நீ கைப்பட எழுதிக் கொடுத்த //

யார் அந்த முண்டம் பாலபாரதி?அவனிடம் நான் கைப்பட என்ன எழுதிக் கொடுத்தேன்?என்னய்யா இப்படி ஆளாளுக்கு பொய் சொல்லி திரியரீங்க?பெரியாரிஸ்ட்கள் என்றால் கீழ்த்தரமான சைக்கோ கும்பல் என்று அனைவரும் அறிந்தது தான்.ஆனாலும் இந்த அளவுக்கு கேவலமாகப் போகணுமா?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
//பாலபாரதியிடம் நீ கைப்பட எழுதிக் கொடுத்த //

யார் அந்த முண்டம் பாலபாரதி?அவனிடம் நான் கைப்பட என்ன எழுதிக் கொடுத்தேன்?என்னய்யா இப்படி ஆளாளுக்கு பொய் சொல்லி திரியரீங்க?பெரியாரிஸ்ட்கள் என்றால் கீழ்த்தரமான சைக்கோ கும்பல் என்று அனைவரும் அறிந்தது தான்.ஆனாலும் இந்த அளவுக்கு கேவலமாகப் போகணுமா?

பாலா
//

ஆமாண்டா பாலாப் போனவனே, பெரியார் கும்பல் உன்னை மாதிரி பார்பன ஓனாய்களின் பூணூலையும் அறுப்பாங்க அதுக்கும் கீழே தொங்குறதையும் அறுத்துவிடுவார்கள். எதுக்கும் பத்திரமாக இரண்டையும் இன்சூரன்ஸ் பண்ணி வை

கோவி.கண்ணன் சொன்னது…

//Sammy


டே மகனே ...இது தான் முடி...இதுக்கு தூய தமிழில் "மயிர்" அப்படின்னு சொல்லுவாங்க.

டே மகனே...யாராவது பிடிக்காத கருத்து சொன்னா...."போடா மயிறு" , "எவன் **** கழுவ போன" இந்த மாதிரி அவன கேளு.

இந்த ரெண்டுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் உண்டுன்னு நினைக்கிறன்...

//

எங்க வீட்டில் எல்லாம் பெற்றோர்கள் எதையாவது முக்கியமான ஒன்றை மறந்துவிட்டுச் சென்றால் 'என்ன மயிரையா பிடுங்கினாய் ?' என்றெல்லாம் கடிந்து கொண்டு இருக்கிறார்கள். பொத்திப் பொத்தி போற்றி வளர்க்கப் படுபவர்களுக்கு இவையெல்லாம் அதிர்ச்சி சொல்லாக தெரியும் போல


//உங்களுக்கு பின்னுடம்னா "அபாரம்" "சூப்பர்" இப்படி தான் எழுதனும் போல, வேற எழுதுன நாகரிகம் இல்லைன்னு சொல்றீங்க. கவனிக்க பட்டாகிவிட்டது
//

அப்படி ஒன்றும் நான் எதிர்பார்க்கவில்லை. மேலே 'பாலா' என்கிற முகமூடிப் போட்ட சொறிப்பிடித்தனுக்கும் நான் பதில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

பாலா என்கிற 'சல்மா' புகழ் வெண்ணை, உன்னுடைய பின்னூட்ட வாந்திகளை வேறு எங்காவது எடுத்துக் கொள் உன் பின்னூட்டங்கள் இனி வந்தவுடனே டெலிட் டெலிட்.

உனக்கு மானம் ரோசம், உணர்ச்சிகளே இல்லையா ? எத்தனை முறை செருப்பால் அடித்தாலும் சொறிந்து கொண்டு வருபவன் தான் நீ என்பதை பிறரும் தெரிந்து கொள்ளவே உன் புண்ணூட்டங்களை அனுமதித்தேன்

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு

மணிப்பக்கம் சொன்னது…

// Blogger நாகை சிவா said...

//பெரியார் மணியம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்டதற்குக் காரணமே அவர் பெண்ணைப் போகப் பொருளாக நினைக்காமல் 'வைத்துக் கொள்ள' ஆசைப்படாமல் திருமணம் மூலம் அந்த உறவை அங்கீகரித்தார். திருமணம் பற்றிய பல்வேறு எதிர்கருத்துகளைக் கூறிய பெரியார், மணியம்மையை யாரும் தூற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கு திருமணம் செய்து கொண்டார்//

அப்படியா? இந்த விசயம் எனக்கு புதுசு. தனக்கு சட்டப்படி ஒரு வாரிசு தேவை என்ற காரணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று அல்லவா நான் நினைத்தேன். //

- நாகை சிவாவை வழிமொழிகின்றேன்!

saivam சொன்னது…

கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
evr in nokkam enna ?

Unknown சொன்னது…

யாரு பயங்கரவாத இயக்கம்? விளக்கமளி திரு சஞ்சய்காந்தி.கொன்னே புடுவன்

Unknown சொன்னது…

யாரு பயங்கரவாத இயக்கம்? விளக்கமளி திரு சஞ்சய்காந்தி.கொன்னே புடுவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்