பின்பற்றுபவர்கள்

7 அக்டோபர், 2009

பட்டையும் நாமமும் இன்றைய கணிணி அறிவியலும் !

Symbols எனப்படும் குறியீடுகள் மொழிகளைக் கடந்த முதன்மை அடையாளங்கள், அதை உலகப் பொது மொழி என்றும் சொல்லலாம். பருப்பொருள்கள் (Matererial) அனைத்தும் குறியீடுகள், அவற்றின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி அடையாளப்படுத்த அவற்றிற்கு பெயர் வைத்து வழங்குகிறோம். பெயர் என்று சொல்லும் போது அவை மொழி அடையாளங்களைக் கொள்கின்றன. பெயரை நீக்கிவிட்டுப் பார்த்தால் பொருள்களில் எஞ்சி இருப்பது அதன் தன்மைகள் மட்டும் தான். தகவல் பரிமாற்றத்திற்காக பெயர்சொல்கள் பயன்படுகின்றன என்பதைத் தவிர்த்து ஒரு பொருளில் பெயர் அதன் தன்மையில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.

குறியீடுகள் பண்டைய காலம் முதலே பயன்பாட்டில் இருக்கிறது, அவற்றை நாம் இன்றைக்கு கணனியில் பயன்படுத்திவருகிறோம், புதிய குறியீடுகளை அமைத்துக் கொள்கிறோம், எந்த ஒரு மொழிக்கும் புதுச் சொற்கள் ஏற்படுகிறதோ இல்லையோ அன்றாடம் எதோ ஒரு குறியீடுகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். மொழிகளில் எழுத்துக்கள் ஒலியின் குறியீடுகள் தான்.

கல்வி அறிவு இல்லாதோர் அன்றைய காலத்தில் கணக்குகளை கோடுகளால் எழுதிக் கொள்வர், அவர்களுக்கு தெரிந்தது நேராக ஒரு கோடு, பத்துவரை எண்ணுவதற்கு ஒன்பது கோடுகளைப் போட்டு 10 ஆவது எண்ணிக்கையை குறுக்குக் கோடாகப் போட்டு 10 வரை எண்ணிக்கையை அமைத்துக் கொண்டு கணக்குகளில் பயன்படுத்திக் கொள்வர். அவை ஒருபரிமாணக எண் குறியீடுகள், கோடுகளின் நீள அகலத்தில் வேறுபாடுகள் இருக்காது. கணனியைப் பொருத்த மட்டிலும் அது 1, 0 தான் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பது அனைவருக்குமே தெரிந்தது. கணிணியும் கல்வி அறிவு அற்றது தானே.

இன்றைக்கு பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலை ஒட்டியில் (Price Sticker) இருக்கும் பட்டைக் கோடுகள் (BAR Code) பற்றி ஓரளவுக்கு அனைவருக்குமே தெரியும். கணிணி வழியாக, கருவிகள் வழியாக விரைவாக படிக்கக் கூடியதாக பட்டைக் கோடுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவை இருபரிமாண (2D) கோடுகளாக இருக்கும், ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஏற்றார் போல் அதன் அகலத்திலும், அடுத்த எழுத்தின் இடைவெளி ஆகியவற்றில் வேறுபாடுகள் இருக்கும்.

1952 அக்டோபர் 7 ஆம் (அன்றைய, இன்றைய ) தேதி முதன் முதலாக பட்டைக் கோடுகள் பொதுப்பயன்பாட்டிற்கு வந்ததாக சொல்கிறார்கள். இன்றைக்கு சிங்கப்பூர் கூகுளைத் திறந்ததும் கூகுள் முதல் பக்கத்தில் பட்டைக் கோடுகளால் கூகுள் என்று எழுதி இருப்பதைப் பார்த்தேன், பட்டைக் கோடுகள் படிப்பான் (Scanner) இருந்தால் அதனை படிக்கலாம். (கூகுள் எனக்கு பிடிச்சிருக்கு)



இன்றைக்கு பட்டைக் கோடுகளின் பயன்பாடுகள் மிகப் பெரியது, தானியங்கி இயங்கு தளங்கள் (Automatic System) அனைத்திலும் இந்தப் பட்டைக் கோடுகளே பயன்படுகின்றன. முழுவதும் கணிணி மயமாக்கப்பட்ட விமான நிலையங்களில் செல்லும் பயணிகளின் உடைமைகளை (Baggage) அந்தந்த விமானங்களுக்கும் ஏற்ற பிரித்து அனுப்பவும், இறங்கிய பயணிகளின் உடைமைகளை அந்தந்த இழுவை (Belt) பகுதிக்கு பிரித்து அனுப்பவும் வகையில் படிக்கக் கூடிய ஒட்டியாக பயன்படுகிறது. பேரங்காடிகளில் பொருளுக்குரிய விலையைக் கொடுக்காமல் மறந்து அல்லது கவர்ந்து வந்தாலோ, சரியாக பிடித்துவிடுவார்கள். மொத்தப் பொருள்களையும் முப்பரிமாண முறையில் அந்தப் பகுதியை கடக்கும் போது அங்கு இருபுறமும் பொருத்தி இருக்கும் கருவி படித்து பட்டியல் இட்டுக் கொண்டு, பிறகு அவை பணம் செலுத்திய விலைப் பட்டியல் கணிணியில் இருப்பதுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியாகப் பொருந்தவில்லை என்றால் மின் ஓசை எழுப்பி காட்டிக் கொடுத்துவிடும். ஒரே ஒரு பொருளை தெரியாமல் மறைத்து எடுத்துச் செல்பவர்கள் கூட சிக்குவது இப்படித்தான். அந்த நாள் இதே பொருளை ஒற்றையாக யாராவது வாங்கி இருக்கிறார்களா என்று ஒப்பிட்டுப் பார்த்து இல்லை என்றால் மின் ஓசை எழுப்பிவிடும். (ஒட்டியை பிய்த்து எரிந்துவிட்டு எடுத்துவரலாம், ஆனால் அப்படி பிய்த்து எரியும் போது அவை கண்காணிப்பு அசைபடக் கருவியில் பிடிக்கப்படாமல் இருக்கவேண்டும்... எப்படிப் பார்த்தாலும் பணம் கொடுக்காமல் எடுத்துவரும் பொருள்கள் காட்டிக் கொடுத்துவிடும்)

பட்டைக் கோடுகளை மிகச் சாதரணமாக அதற்குரிய படிப்பான்கள் மூலம் படிக்கப்படும், பொதுவாக பட்டைக் கோடுகளில் பொருள் குறியீட்டு எண்கள் மட்டுமே அச்சிடப் பட்டு இருக்கும், அவை படிக்கப்படும் போது அதற்கான முழுப் பெயர் மட்டும் விவரங்கள் கணிணி பட்டியலில் இருந்து எடுத்துவந்து சேர்க்கப்பட்டு கணிணி திரையில் காட்டும் படி மென்பொருள் அமைத்திருப்பார்கள், இப்படி செய்யும் போது ஒரு பொருளின் விலையைக் கூட்டவோ குறைக்கவோ விற்பனையாளருக்கு வாய்ப்புகள் இருக்கும்.



பட்டைக் கோடுகளில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட பட்டைக் கோடுகளும் உண்டு (Encoded Barcode) அவற்றை அதற்குரிய படிப்பான் மூலம் படித்தாலும் பாதுக்காப்பை நீக்கக் கூடிய (Decoding) மென் பொருள் மூலம் தான் அதனை முழுதாகப் படிக்க முடியும், இந்த வகை பட்டைக் கோடுகளை தகவல் பாதுகாப்பு காக்கவேண்டிய தேவை உடைய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.



பட்டைக் கோடுகளைப் பற்றி விக்கி இணைய தளம் ஆங்கிலத்தில் மிகுதியான தகவல்களைத் தருகிறது.


தலைப்பைப் பற்றிச் சொல்லவில்லையே ? ஒருவர் சைவரா ? வைணவரா ? (யானையும் விட்டு வைக்காத) அதில் வடகலையா ? தெர்ன்கலையா ? இந்த பட்டைக் கோடுகள் எப்படியெல்லாம் அந்த காலத்திலேயே பயன்பட்டு இருக்கிறது, நாம தான் உலக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடி :)



(இது நாகூர் யானை)

30 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

அருமையான அரிய தகவல்கள் அடங்கிய இடுகை - கடைசியில் வழக்கம் போல் கோவியின் கைவண்ணம் - தேவையா

VSK சொன்னது…

உபயோகமான நல்ல பதிவு! அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! நன்றி கோவியாரே!

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//பட்டைக் கோடுகள் (BAR Code)//

நல்ல வேளை பட்டைக்கோடுகள் என மொழிபெயர்த்தீங்க :)


மனிதன் பிறக்கும் பொழுது அவனுக்கு ஒரு BAR Code உண்டு. நீங்கள் சொல்லும் கோடுகள் அவனாக போட்டுக்கொண்டது.

தயாரிப்பாளரே BAR Code போட்டுத்தான் அனுப்புகிறார். சிலருக்கு மட்டும் (BAR code Scanner) படிக்கத்தெரியும்.
இதிலும் விலைமாற்றம் செய்ய முடியாது :)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

எதை அதிகமாக வெறுக்கிற மாதிரிக் காட்டிக் கொள்கிறோமோ, உண்மையில் அதனால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறோம் என்கிறது உளவியல். அடிக்கடி வடகலை, தென்கலை நாமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருப்பதால், பட்டை நாமம் உங்களை ரொம்பவுமே கவர்ந்திருக்கிறது போல!

ஓம்கார் நன்றாகவே சொல்லியிருக்கிறார், படைக்கும்போதே நமக்கும் டி என் ஏ வில், தயாரிப்பாளர் ஒரு பட்டைக் கோட்டைப் போட்டுத் தான் அனுப்பியிருக்கிறார்:-
))

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல பதிவு, எல்லா குறியிடுகளும் ஒரு அமைப்பை ஒரு ஒழுங்கு முறையை ஏற்ப் படுத்துகின்றன என்பதை மறைமுகமாக சொல்லுகின்றன. என்ன தலைவா அண்ணா நாமத்தை விட்டுடிங்க?

பித்தனின் வாக்கு சொன்னது…

இவற்றைவீட இறைவன் அல்லது இயற்கை அளித்த குறியீடுகள் நமது மரபனுவில் உள்ளது, அதில் டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ இதில் உள்ள இரு பார் கோடுகள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. .

Robin சொன்னது…

// இந்த பட்டைக் கோடுகள் எப்படியெல்லாம் அந்த காலத்திலேயே பயன்பட்டு இருக்கிறது, நாம தான் உலக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடி :)//
காப்புரிமை வாங்கி வச்சிக்கிறது நல்லது.

Unknown சொன்னது…

அருமையான தகவல் கோவி.

மிக்க நன்றி.

நானும் என்னடா கூகுள் இப்படி வருதேன்னு நினைச்சேன். இதானா காரணம்!

மங்களூர் சிவா சொன்னது…

/
இந்த பட்டைக் கோடுகள் எப்படியெல்லாம் அந்த காலத்திலேயே பயன்பட்டு இருக்கிறது, நாம தான் உலக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடி :)
/

நாமல்லாம் யாரு?
:))))))


/
என்னடா கூகுள் இப்படி வருதேன்னு நினைச்சேன். இதானா காரணம்!
/

ரிப்பீட்டு

அப்பாவி முரு சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
அன்பின் கோவி

அருமையான அரிய தகவல்கள் அடங்கிய இடுகை - கடைசியில் வழக்கம் போல் கோவியின் கைவண்ணம் - தேவையா
//

பாராட்டுக்கு நன்றி !

அரச முத்திரை இருந்தால் தான் நம்பகமானத் தகவல் என்பதாக பண்டைய காலவழக்கு. எதோ என் வசதிக்கு ஒரு பஞ்ச் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
உபயோகமான நல்ல பதிவு! அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! நன்றி கோவியாரே!
//

நன்றிங்க வீஎஸ்கே ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...
//பட்டைக் கோடுகள் (BAR Code)//

நல்ல வேளை பட்டைக்கோடுகள் என மொழிபெயர்த்தீங்க :)


மனிதன் பிறக்கும் பொழுது அவனுக்கு ஒரு BAR Code உண்டு. நீங்கள் சொல்லும் கோடுகள் அவனாக போட்டுக்கொண்டது.

தயாரிப்பாளரே BAR Code போட்டுத்தான் அனுப்புகிறார். சிலருக்கு மட்டும் (BAR code Scanner) படிக்கத்தெரியும்.
இதிலும் விலைமாற்றம் செய்ய முடியாது :)
//

:) இது விவாததிற்குரியது இப்ப வேண்டாம். இன்னொரு நாள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
எதை அதிகமாக வெறுக்கிற மாதிரிக் காட்டிக் கொள்கிறோமோ, உண்மையில் அதனால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறோம் என்கிறது உளவியல். அடிக்கடி வடகலை, தென்கலை நாமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருப்பதால், பட்டை நாமம் உங்களை ரொம்பவுமே கவர்ந்திருக்கிறது போல!//

ஐயா, வெறுப்பு ஈர்ப்பு என்றில்லை. விமர்சனம் என்று வேறு ஒன்றும் உண்டு. பலரின் விமர்சனங்கள் பக்கச் சார்பாக இருப்பதால் சிலரின் விமர்சனமும் அப்படியே இருக்கமுடியும் என்று விமர்சனங்கள் அனைத்தையும் பொதுப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்

//ஓம்கார் நன்றாகவே சொல்லியிருக்கிறார், படைக்கும்போதே நமக்கும் டி என் ஏ வில், தயாரிப்பாளர் ஒரு பட்டைக் கோட்டைப் போட்டுத் தான் அனுப்பியிருக்கிறார்:-
))
//

:) இப்ப அந்த பட்டையையும் மாற்ற முடியும்னு அறிவியலாளர்கள் நம்புகிறார்கள் டி என் ஏ தெரபி, மரபுக் கூறு மாற்றம். பயிரளவில் (Plant) மாறி இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
நல்ல பதிவு, எல்லா குறியிடுகளும் ஒரு அமைப்பை ஒரு ஒழுங்கு முறையை ஏற்ப் படுத்துகின்றன என்பதை மறைமுகமாக சொல்லுகின்றன. என்ன தலைவா அண்ணா நாமத்தை விட்டுடிங்க?
//

அண்ணா வைணவர் இல்லை, ஒருவேளை புரட்சித்தலைவருக்கு அண்ணா இராமராக தெரிந்திருக்கலாம். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
இவற்றைவீட இறைவன் அல்லது இயற்கை அளித்த குறியீடுகள் நமது மரபனுவில் உள்ளது, அதில் டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ இதில் உள்ள இரு பார் கோடுகள் தான் நம்வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. .
//

அந்த பார் கோடுகளில் கேடுகள் இருந்தால் அவை பரம்பரை நோய் கேடுகளாகும்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான தகவல்களை தந்திருக்கீங்க கண்ணன் அண்ணே !!!

/// தலைப்பைப் பற்றிச் சொல்லவில்லையே ? ஒருவர் சைவரா ? வைணவரா ? (யானையும் விட்டு வைக்காத) ///


இதைப் பத்தி விவேக் சாமி படத்துல காமெடி பண்ணிருப்பாரு ; ரொம்ப சூப்பரா இருக்கும் .

துளசி கோபால் சொன்னது…

யானையை விடுங்க. அவுங்களைப் பார்க்கக் கோவிலுக்குப் போகணும். வீட்டுவீட்டுக்கு அந்தந்த வீடுகளில் இருப்பவர்கள் சைவமா இல்லை வைணவமான்னு பார்த்த நொடியில் கண்டுபிடிக்க வீட்டு நிலைவாசப்படியில் பட்டைகளை குறுக்கும் நெடுக்குமாகப்போட்டு பட்டைகளின் பெருமைகளை ஆரம்பித்து வைத்தது நாம்தான் என்று உணர்ந்து உடம்பு அப்படியே புல் அரிச்சுப் பட்டை(சாராயம்)போட்டவன் நிலையை அடைஞ்சுட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
யானையை விடுங்க. அவுங்களைப் பார்க்கக் கோவிலுக்குப் போகணும். வீட்டுவீட்டுக்கு அந்தந்த வீடுகளில் இருப்பவர்கள் சைவமா இல்லை வைணவமான்னு பார்த்த நொடியில் கண்டுபிடிக்க வீட்டு நிலைவாசப்படியில் பட்டைகளை குறுக்கும் நெடுக்குமாகப்போட்டு பட்டைகளின் பெருமைகளை ஆரம்பித்து வைத்தது நாம்தான் என்று உணர்ந்து உடம்பு அப்படியே புல் அரிச்சுப் பட்டை(சாராயம்)போட்டவன் நிலையை அடைஞ்சுட்டேன்.//

துளசி அம்மா, எங்க வீட்டு நிலைப்படியில் எதையும் பார்க்கலையே ? நான் தப்பித்தேன்

:)))))))

துபாய் ராஜா சொன்னது…

எப்படியோ எல்லாத்துக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.... :))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல தகவல்கள்

அறிவிலி சொன்னது…

பட்டைய கெளப்பிட்டீங்க.

துளசி கோபால் சொன்னது…

சி(ட்)டியைவிட்டுக் கொஞ்சம் உள்ளாரக் கிராமமாப் போய்ப் பாருங்க. இருக்கலாம்.

ஒருவேளை எல்லாரும் தொலைக்காட்சியில் லயிச்சு, அவ்வுலகில் சஞ்சாரிச்சுக்கிட்டு இவ்வுலகை மறந்துட்டாங்களோ என்னவோ!

Samuel | சாமுவேல் சொன்னது…

நல்ல தகவல் கோவி...1952 அக்டோபர் 7 ..patent கொடுக்கப்பட்ட நாள்.
காந்தி ஜெயந்தி அன்று கூகிள் ஒரு காதர் துணி போட்டு அதில் காந்தி உருவம் போட்டு இருந்தார்கள்..ரொம்ப நல்ல இருந்தது,

Samuel | சாமுவேல் சொன்னது…

கதர் துணிஎன்று படிக்கவும்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அரிய தகவல்கள்

கிரி சொன்னது…

இதுக்கு பேர் தான் பட்டய கிளப்புறதா!

பட்டை (சாராயம்) பற்றி ஏதாவது இருக்குமோ என்று பார்த்தேன் ;-)

நன்னா இருக்கு :-)

பீர் | Peer சொன்னது…

//இப்படி செய்யும் போது ஒரு பொருளின் விலையைக் கூட்டவோ குறைக்கவோ விற்பனையாளருக்கு வாய்ப்புகள் இருக்கும்.//

barcode லிருந்து எண் வரும் போது, கணினியில் முன்னதாகவே அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விபரம் தெரியவரும். அதில், பொருள், தயாரிப்பாளர், தயாரிப்பு காலாவதி தேதிகள், விலை மற்றும் தேவையான இன்னபிறவும் இருக்கலாம். பொருளின் விலையை வியாபாரியே நிர்ணயிக்கிறார்.
பொருள் வெளியே செல்லும் போது, மீத கையிருப்பையும் கணக்கில் வைத்துக்கொள்ளலாம்.

Sanjai Gandhi சொன்னது…

அண்ணன் NO அவர்களின் வருகையை எதிர்பார்க்கிறேன்.

தமிழ் சொன்னது…

நல்ல தகவல்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்