பின்பற்றுபவர்கள்

28 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் - 4

பருவகாலங்கள் இயற்கை, கடுங்குளிரில் மனிதர்கள் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள குளிர் ஆடை பயன்படுத்துகிறார்கள். மரங்கள் செடி கொடிகள் என்ன செய்யும் ? கடுங்குளிரிலும் பனியிலும் இலைகள் கருகிவிடும் என்பதால் இலைகளை உதிர்த்து அவற்றை எதிர்கொள்ள தயாராகிவிடுகின்றன. பனிக்காலம் தொடங்கும் முன் இலையுதிர்காலம் தொடங்கிவிடுகிறது. நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த போது இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியாக மரங்களின் இலைகள் பழுக்கத் தொடங்கி மஞ்சள் நிற இலைகளை தாங்கி நின்று அவை உதிர தொடங்கி இருந்தது. வெப்ப நாடுகளிலும் நான்கு பருவகாலங்கள் இல்லாத நாடுகளிலும் இத்தகைய காட்சிகளைக் காண முடியாது. மரங்களின் அமைப்புக்கு ஏற்றவாறு அவற்றின் பழுப்புத் தன்மை பல்வேறு நிறங்களில் அமைந்திருந்ததைப் பார்க்கும் போது இயற்கையில் இத்தனை அழகா என்று வியக்கவைத்தது.




பனிக்காலம் தொடங்கும் முன்பு அவற்றின் இலைகள் முற்றிலும் கொட்டி வெறும் மரமாக நிற்குமாம். நகரப்புரங்களில் இருக்கும் மரங்களில் வண்ண மின் விளக்குகளை இலைக்கு பதிலான அலங்காரமாக ஆக்கிவைக்க கிறித்துவ நாடுகளில் கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் வெளிச்சமும் வண்ணமும் ஒருசேர இருந்து கொண்ட்டாட்ட உணர்வை ஏற்படுத்துமாம்.


இலைகள் மிக மெல்லியதாக, ஊசி போல் இருக்கும் கிறிஸ்மஸ் மரங்கள் இலைகள் உதிர்காது பனிப்பொழிவை தாக்குபிடித்து நிற்குமாம். ஐரோப்பிய நாடுகளில் மேபள் மரங்கள் (Mabel Tree) நிறைய உள்ளன.

வெளிற் பச்சை நிற இலைகளான அவற்றின் இலைகள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பழுத்து உதிர்கின்றன. கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ளும் மலை உச்சிகளில் மரங்கள் வளர்வதற்கான கூறுகளே இல்லை. அதனால் தான் இமய மலைகளில் உயரமானவற்றில் குறிப்பாக கைலாயம் போன்றவற்றில் மரங்கள், தாவரங்கள் எதுவும் வளர்வதில்லை

*****


19 அக்டோபர் இலண்டன் பயணத்தின் நிறையுறுவதில் முழுநாள், மறு நாள் நன் பகலில் ப்ரான்ஸ் செல்ல வேண்டி இருந்தது. ஏற்கனவே நகர் புறங்களில் இரு நாட்கள் செலவு செய்ததால் போக்குவரத்து காரணங்களினால் மீண்டும் அங்கு சென்று வேறு சில இடங்களை காண்பதற்கு விருப்பம் குறைந்திருந்தது. கோட்டையா ? கடற்கரையா ? இன்று எங்கு செல்லவெண்டும் என்று என் மகளிடம் உறவினர் விருப்பம் கேட்டார். மகளுக்கு கடற்கரை மிகவும் பிடித்த இடம் ஆகையால் கடற்கரைச் செல்ல விருப்பம் கூறி மகிழ்ச்சி அடைந்தார். அதன்படி இலண்டன் புறநகரான கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தோம். நன்பகல் 12 மணிக்கு மேல், இல்லத்தில் (Sutton ) இருந்து கடற்கரை இருக்கும் Brigton Beach க்கு செல்ல முடிவெடுத்தோம், தொலைவு கிட்டதட்ட 50 மைல்கள். போகும் வழியில் West Croydon பகுதியில் இந்தியர் கடைகள் அமைந்திருந்திருந்த இடத்திற்கு சென்று அங்கு சென்னை தோசாவில் நன்பகல் உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்த கடைகளில் சில பொருள்களை வாங்கிக் கொண்டு, A23 (Brighton Road) சாலையில் பயணித்து,

ப்ரைட்டன் கடற்கரை அருகில் செல்ல மாலை 4.00 மணி ஆகியது. அங்கே StarBucks ல் காஃபி குடித்துவிட்டு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல மாலை 4:30 ஆகியது.

குளிர்காலம் தொடங்கிவிட்டதன் காரணமாக கடற்கரையில் மக்கள் திரள் இல்லை. நீண்டதொரு கடற்கரை அதன் கரையில் தொடங்கு 500 மீட்டருக்கு இரும்பு தளத்தில் அமைக்கப்பட்ட பொழுது போக்கு கூடம் இருந்தது, அதன் முகப்பில் Brighton Beach என்று எழுதி இருபக்கமும் இங்கிலாந்து கொடி பறந்தது. அந்த தளத்தின் இருபக்கமும் கடற்கரை பகுதிகள் இருந்தன. ஒரு பக்க கடற்கரையில் மணல், மறுபக்கம் சிறு சிறு கூழாங்கற்களால் கரைப்பகுதி இருந்தது. கூழாங்கற்கள் இயற்கையாக அமைந்ததும்,





மணல்பகுதியில் செயற்கைத் தன்மையுடன் இருந்தது. மொத்தத்தில் கடற்கரை மணல்பரப்புகள் அமைந்த இயற்கையான கடற்கரை இல்லை என்பதாக தெரிந்தது. கூழாங்கற்கள் கடற்கரை மாறுபட்ட ஒன்றாக இருந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் கழித்தோம்.




பிறகு பொழுது போக்கு கூடத்திற்குச் சென்று சில வீடியோ விளையாட்டுகளை விளையாடினோம். அப்போது மாலை 6 ஐ நெருங்க கடும் குளிர் மேலும் கடுமையானது, அங்குள்ள கடைகளை மூடிக் கொண்டு இருந்தார்கள்.

கடற் பறவைகள் கூட்டங்களாக பறந்தன. இருட்டத்தொடங்கியது.


மீண்டும் காருக்கு திரும்பி அதே சாலை வழியாக பயணத்து புறப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த பெரும் கடைகளில்(Tesco) பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப இரவு மணி 9:30 ஐ நெருங்கியது. அன்றைய இரவுக் குளிர் அளவு அந்தப் பகுதியில் 9 டிகிரி.


மறுநாள் பாரிஸ், ப்ரான்ஸ் செல்ல வேண்டும், பகல் 12:40க்கு Euro Star - புல்லட் இரயில் பயணம். இலண்டனை விட்டு செல்ல, உறவினர்களை குறிப்பாக அவர்களின் குழந்தையை பிரிந்து செல்ல மனமின்றி உறக்கம் தடைபட்டது, காலையில் 9 மணிக்காவது எழுந்தால் ஒரு மணி நேரம் அதாவது 11:40க்கு அங்கு சென்று முன்கூட்டி வருகை (Boarding pass) உறுதியை பதிந்து கொள்ள முடியும் என்கிற அறிவுறுத்தல் படி, நன்பகல் 12:29 மணி இரயிலுக்கு செல்ல வேண்டுமே... பிரிவும், கவலைகள் இருந்தாலும் அலைச்சல் உடல் அசதியின் காரணமாக அப்படியே தூங்கிப் போனோம்.

பயணக்குறிப்புகள்: இலண்டன் சாலைகள் அனைத்தும் செயற்கைக் கோள் கண்காணிப்பு உதவியின் மூலம் GPS (Global Positioning System) சாலை வழிகாட்டி கருவியின் மூலம் செல்ல முடியும், செல்லும் இடத்தை அதில் தேர்வு செய்துவிட்டால், எந்தந்த சாலைகள் வழியாக பயணிக்கவேண்டும், வேகக்கட்டுப்பாடு, வேகக்கட்டுப்பாடு கேமரா உள்ள இடங்களை சுட்டிக்காட்டுகிறது, எந்த இடத்தில், எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்பதை படம் மற்றும் குரல் வழியான தகவலாக முன்கூட்டியே அந்த இடத்தை கடக்கும் முன்பாகவே சொல்லிக் கொண்டே வருகிறது. இடையில் நாமாகவே சாலை மாறிச் சென்றாலும் அதிலிருந்து செல்லும் வழியையும் காட்டுகிறது. சிற்றுந்து ஓட்டத்த தெரிந்தவர்கள் வாடகை சிற்றுந்து எடுத்துக் கொண்டு அந்த கருவி வழிகாட்டுதல் மூலம் எந்த ஒரு இடத்திற்கும் சென்று திரும்ப முடியும். சிங்கப்பூரில் GPS கருவியை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் சிங்கை மிகவும் சிறிய நாடு, நகரம் என்பதால் குடிமகன்களுக்கு அனைத்து சாலைகளும் ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் வேகக்கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டிய சாலைகள், வேகக்கட்டுப்பாடு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட சாலைகள் ஆகியவற்றை மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டுவதால் பலர் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இலண்டன் சாலைகள் அனைத்தும் சாலைப் பெயருடன் A1...A2... என குறியீட்டு எண்களையும் சாலைக்கு வைத்திருக்கிறார்கள். A23 என்பது ஒரு விரைவு சாலை அதன் பெயர் Brighton Road.

13 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

மகளைக் க்ரீன்விச் கொண்டுபோய் காமிச்சிருக்கலாமே கண்ணன்.

Day pass ன்னு ரயில் டிக்கெட் வாங்கிக்கிட்டால் லண்டன் பேட்டைகளையும் சுத்தோ சுத்துன்னு சுத்தி இருக்கலாமேப்பா.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
மகளைக் க்ரீன்விச் கொண்டுபோய் காமிச்சிருக்கலாமே கண்ணன்.

Day pass ன்னு ரயில் டிக்கெட் வாங்கிக்கிட்டால் லண்டன் பேட்டைகளையும் சுத்தோ சுத்துன்னு சுத்தி இருக்கலாமேப்பா.
//

என் மகளிடம் பீச் என்று ஒரு சொல் சொன்ன பிறகு அவள் அதையே பிடித்துக் கொண்டால், மாற்றவே முடியவில்லை, நானும் நம்ம ஊரில் பார்க்காத பீச்சான்னு சொல்லி பார்த்துவிட்டேன். முடியல :)

டிசம்பர் பள்ளி விடுமுறைக்கு திரும்பவும் இலண்டன் அழைத்துப் போகச் சொல்கிறாள்.
:)
:((

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//இமய மலைகளில் உயரமானவற்றில் குறிப்பாக கைலாயம் போன்றவற்றில் மரங்கள், தாவரங்கள் எதுவும் வளர்வதில்லை
//

:)

பித்தனின் வாக்கு சொன்னது…

ஹை இதே கடல்தான் எங்க ஊருலையும் இருக்கு. கல்பாக்கம் கடலும் இவ்வளவு சுத்தமாகவும், நீல நிறமாகவும், வண்ணச்சிப்பிகளுடன் இருக்கும். படங்களும் கட்டுரையும் அருமை. நன்றி. தோசை எவ்வளவு விலை என்று சொல்லவிலை.

வடுவூர் குமார் சொன்னது…

சலூன் - 5 பவுண்ட் ஓகே தான், சென்னையில் 1000 ரூபாய் கொடுத்து முடிவெட்டிய “பதிவு” ஞாபகம் வந்தது.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

ஸ்வாமி ஓம்கார்


//இமய மலைகளில் உயரமானவற்றில் குறிப்பாக கைலாயம் போன்றவற்றில் மரங்கள், தாவரங்கள் எதுவும் வளர்வதில்லை
//

:)

//

எவ்வளவோ எழுதி இருக்குறதுல சாமிக்கு இது மட்டும்தானா புடுச்சுருக்கு??

:)))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்ம்....

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
//இமய மலைகளில் உயரமானவற்றில் குறிப்பாக கைலாயம் போன்றவற்றில் மரங்கள், தாவரங்கள் எதுவும் வளர்வதில்லை
//

:)
//

அதுக்குன்னு தலையில் முடி இல்லாதவங்களை இமயமலையோடு ஒப்பிடுகிறேன் என்று பொருள் அல்ல
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
ஹை இதே கடல்தான் எங்க ஊருலையும் இருக்கு. கல்பாக்கம் கடலும் இவ்வளவு சுத்தமாகவும், நீல நிறமாகவும், வண்ணச்சிப்பிகளுடன் இருக்கும். படங்களும் கட்டுரையும் அருமை. நன்றி. தோசை எவ்வளவு விலை என்று சொல்லவிலை.
//

தோசைகள் பவுன்டுகள் கணக்கில் கனக்கும்.

ஒரு சாதா தோசை 3 பவுன்ட்கள். காபி வெளியே ரெஸ்டாரெண்டுகளில் குறைவு தான் 60 சென்ட்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
சலூன் - 5 பவுண்ட் ஓகே தான், சென்னையில் 1000 ரூபாய் கொடுத்து முடிவெட்டிய “பதிவு” ஞாபகம் வந்தது.
//

அதை இன்னும் மறக்கலையா குமார் அண்ணா.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
ஸ்வாமி ஓம்கார்


//இமய மலைகளில் உயரமானவற்றில் குறிப்பாக கைலாயம் போன்றவற்றில் மரங்கள், தாவரங்கள் எதுவும் வளர்வதில்லை
//

:)

//

எவ்வளவோ எழுதி இருக்குறதுல சாமிக்கு இது மட்டும்தானா புடுச்சுருக்கு??

:)))
//

ஸ்வாமி வண்டு (வாண்டு இல்லை) மாதிரி போல. தேனுள்ள பூவில் தானே வண்டு அமரும்.

உவமை நல்லா இல்லையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம்....
//

நன்றி !

cheena (சீனா) சொன்னது…

பயணக்கட்டுரை இன்று கடற்கரையைப் பற்றியதா - நல்ல கட்டுரை. இப்பொழுது இங்கு மரங்கள் அனைத்து இலைகளையும் உதிர்த்து விட்டு வெறும் குச்சிகளுடன் நிற்கத் துவங்கி விட்டன.

பிரைட்டன் பீச்சில் கூழாங்கற்கள் பொறுக்க வில்லையா

ஜிபிஎச் ஒரு சிறந்த தொழில் நுடபக்கருவி. கிளம்பும் இடம் போகவேண்டிய இடம் அதில் குறித்து விட்டால் - எத்தனை மைல் தூரம் - எவ்வளவு நேரம் பிடிக்கும் எனக் கூறும்.செல்லும் சாலையின் மேப் உட்பட, எங்கு திரும்ப வேண்டும் - எவ்வளவு மைல் வேகத்தில் செல்ல வேண்டும் - எங்கெல்லாம கண்காணிப்புக் கருவி இருக்கிறது என்றெல்லாம் கூட சொல்லும். அருமையான கருவி.

நல்வாழ்த்துகள் கோவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்