உலக அளவில் தன்னை வெளிப்படுத்தும் சாதனையாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உலகெங்கும் அந்த சாதனையாளர்கள் போற்றப்படுகிறார்கள். புகழ்பெற்ற மற்றொரு அமைப்பால் சாதனையாளர்கள் இவர்கள் என பட்டியல் இட்டு, மேலும் வெளிச்சம் ஏற்படுத்தும் போது அவர்கள் பெருமை அடைகிறார்கள். எதிர்பாராவிதமாக மிகச் சிறந்த சாதனையாளர்கள் சிலருக்கு அப்படி ஒரு புகழ்பெற்ற அமைப்பினால் பாராட்டுகள் கிடைக்காமல் போவதும் அவர்களின் பிற்கால சாதனைக்கு பின்னடைவாக சென்றுவிடாது, தொடர்ந்து சாதித்தால் என்றாவது ஒரு நாள் அவர்களுக்கும் சிலை வைக்கப்படும், அரசியல்வாதிகள், திரைப்படத்துரையினர் வெகு சிலருக்கு அந்தவாய்ப்பு உடனேயே கிட்டிவிடுகிறது, அது அவர்களின் சாதனையையும் மிஞ்சிய அவர்களின் கொடுப்பினை.
*****
தீபாவளி அன்று படுக்கைச் செல்லவே இரவு 12க்கும் மேல் ஆகியது. மறுநாள் காலை தூக்கமாக, அசதியாக இருந்தாலும் அதிகாலை குளிரை உணர, அங்கு அருகிலுள்ள இயற்கை / செயற்கை அழகுகளை ரசிக்க விரைவாகவே நான் எழுந்து கொண்டு புல்வெளிகளை, சாலைகளை, மரங்களை படமெடுத்தேன்.
காலை 6.30 மணி
அதே இடம் (காலை 8:30 மணி)
மற்றவர்கள் படு அசதி, எழ, சமைக்க, சாப்பிட, கிளம்ப நேரம் ஆகியது. சாப்பாட்டு மூட்டைகளை கட்டிக் கொண்டு, 18 அக் 2009 நன்பகல் 12 மணிக்கு மேல் தான் வெளியே புறப்பட்டோம். இலண்டனில் உலகெங்கும் புகழ்பெற்றவர்களின் மெழுகு சிலைகள் கண்காட்சியை பார்ப்பதற்காக சென்றோம். அது போன்ற இடங்களுக்கு ஒருமுறைக்கும் மேல் செல்வது அங்கேயே வசிப்பவர்களுக்கு தண்டனைதான். காரணம் பணம் மற்றும் நேர விரயம். ஒரு மொக்கைப் படத்தை வலுக்கட்டாயமாக பார்க்கச் சொல்வது போன்ற தண்டனை. சுற்றுலா தளங்களில் வசிப்போருக்கு அடிக்கடி இது போன்று தண்டனைகள் கிடைத்துவிடும். சிங்கப்பூர் செந்தோசாவுக்கு என்னை யாராவது அழைத்துச் செல்லச் சொன்னால் எனக்கு அது தண்டனை போன்றது. எவ்வளவு தான் பார்க்க வேண்டிய இடமென்றாலும் கட்டணங்களுடன் கூடிய சுற்றுலா தளங்கள் ஒருமுறைக்கு மேல் செல்வது செம அலுப்பு ஏற்படுத்தும். எங்களை Madame Tussauds என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற(வர்களின்) மெழுகு சிலை கண்காட்சிக்கு கூட்டிச் சென்ற உறவினருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். கட்டணம் தலை ஒன்றுக்கு 25 பவுண்டுகள். பார்வை இட இரண்டு மணி நேரம் ஆகும்.
கண்காட்சி அறையில் நுழைந்ததுமே ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் சிலைகள் இருந்தன,
அடுத்த அறையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் சிலைகளாக அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா பச்சன் மற்றும் சாருக்கான் நின்று கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யா பச்சன் சிலையாக பார்பதற்கு (என் கண்களுக்கு) படு கேவலமாக இருந்தது. நேர்த்தியாக இல்லை.
அவர்களுக்கு இடப்பக்கமாக நுழைவாயிலுக்கு அருகே சச்சின் டொண்டுல்கர், லாரா, ஷேன் வார்னே, டேவிட் பெக்ஹம், ரெனால்டோ மற்றும் பலர், அடுத்ததாக தலாய்லாமா உட்பட சமயத்தலைவர்கள், அடுத்த நடுப்பகுதியில் இங்கிலாந்து அரச குடும்பம், அடுத்த அறையில் மைக்கேல் ஜாக்சன், அங்கு பெரும் கூட்டமே அந்த சிலையை சூழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது. அங்கேயே சில பாப் பாடகர்கள் இருந்தனர். ஏஆர்.ரஹ்மானுக்கு இடம் இல்லை(பதிவின் தொடக்க பத்தியை படிக்கவும்)
அதைத் தொடர்ந்த பகுதியில் உலக அரசியல்வாதிகள் பலர் இருந்தனர், ஜார்ஜ் புஷ், ஒபாமா நம்ம இந்திரா காந்தி, மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோரும் நின்றிருந்தனர்.
காந்தி தலையை தடவியபடி வெள்ளைக்காரப் பெண் புகைப்படமெடுத்தாள். அந்த பகுதியை அடுத்து கிழே சுரங்கம் போன்ற பகுதியில் இருட்டு அறையில் கொடும் சிறை தண்டனைகள் பற்றியகண்காட்சி இருந்தது.
அங்கேயே வேடமிட்ட பலர் பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்துக் கொண்டு இருந்தனர். அதற்கு பிறகு மெழுகு சிலைகள் செயல்முறை விளக்கம் இருந்தது. அதைத் தாண்டி வந்தால் ஒரு சிறிய இழுவை இரயிலில் ஏறச் சொன்னார்கள். இங்கிலாந்து பற்றிய தகவல் தொகுப்பு காட்சிகளுடன் விளக்க ஒலிகளுடன் பெரிய சுற்றில் இழுவை பாதைக்கு இருபக்கம் அமைப்பட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே செல்ல, கண்காட்சி முடியும் இடத்திற்கு வந்தோம். அந்த அறையில் மர்லின் மன்றோ...புகழ்பெற்ற காட்சியான பாவடை பறப்பது இயற்கையாக இருக்க வேண்டும் என கம்பி சன்னல் போன்ற தளத்தின் மீது சிலையை நிற்க வைத்து செயற்கை காற்றுடன் மன்றோவின் பாவாடை பறந்து கொண்டிருந்தது. சில சிலைகள் நேர்த்தியாகவும் சில சிலைகள் புகைப்படம் எடுக்கும் போது வெளிச்சத்தில் மெழுகை வெளிச்சப்படுத்தியது எனவே நன்றாக வரவில்லை
அப்பாடான்னு அதை விட்டு வெளியே வந்தால் தங்களின் மெழுகு சிலைகளுடன் சச்சின் மற்றும் சாருக்கானின் சிரித்த படங்கள் இருந்தன பார்த்துவிட்டு வந்தோம்.
மணி மாலை 4:30க்கும் மேல் ஆகிவிட்டிருந்தது. நல்ல பசி, கொண்டு வந்த சாப்பாடு மூட்டையை காரினுள்ளேயே உட்கார்ந்து பிரித்து சாப்பிட்டுவிட்டு, அடுத்து வெ.இராதாகிருஷ்ணன் ஐயாவைப் பார்க்கச் செல்ல வேண்டும். வெ.இராதகிருஷ்ணன் இலண்டனில் இருக்கிறார். ஏற்கனவே தொலைபேசி எண்ணைக் கொடுத்தி இருந்தார். நான் இலண்டன் வந்து பார்க்கப்போகிறேன் என்கிற விவரம் அவரிடம் முன்பே சொல்லவில்லை. இலண்டன் சென்ற பிறகு தீபாவளி அன்று அவருக்கு அலைபேசியில் அழைத்து விவரம் சொல்ல மறுநாள் இலண்டன் முருகன் கோவில் அருகே சரவணபவனில் இரவு உணவில் சந்திப்போம் என்று சொல்லிக் கொண்டோம். அதன் படி மொழுகு சிலை அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு இலண்டன் முருகன் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழியிலேயே பிக்கட்டெலி என்னும் சீனக் கடைப் பகுதிகளையும், புகழ்பெற்ற (Branded Goods) பெயர் பெற்ற நிறுவனங்களின் கடைகளையும், அந்த நகரப்பகுதிகளையும் ஒரு வட்டமடித்துப் பார்த்துக் கொண்டே சென்றோம்.
மாலை 6:30 மணி ஆகும் போது பிரிட்டிஷ் மீயூசியம் அருகில் சென்றோம், அந்த நேரத்திற்கு திறந்திருக்கவில்லை. அருகே காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியைப் பார்வை இட்டுவிட்டு, ஸ்டார்பக்ஸ் போன்ற மற்றொரு கடையில் காஃபி, டீ குடித்துவிட்டு அங்கிருந்து இலண்டன் முருகன கோவிலை நோக்கி கிளம்ப மாலை 7 மணிக்கும் மேல் ஆகி இருந்தது.
இலண்டன் முருகன் கோவில் தென்னிந்திய கோவில் சாயலில் அமைத்திருக்கிறார்கள். திருமுருக கிருபானந்தவாரியார் கடைசியாக வந்து போன கோவில். கடுங்குளிர், உள்ளே பூசை நடந்து கொண்டிருந்தது. கடுங்குளிரை உள்ளே தடுக்க நுழைவாயிலின் பெரிய கதவை அடுத்து தானே மூடும் கண்ணாடி கதவு அமைக்கப்பட்டு இருந்தது. கோவிலின் மற்ற உள் சுற்று சுவர்களின் சன்னல்களிலும் கண்ணாடி அமைக்கப்பட்டு குளிர் தடுப்பு அரணாக அமைத்திருந்தார்கள். நடுவே முருகன் கருவரை, இடப்பக்கம் சிவலிங்கம், வலப்பக்கம் பிள்ளையார் சிறுகருவரைகள் இருந்தன.
200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடி இருந்தனர். அர்சகர்கள் தவிர்த்து ஒரே ஒருவர் வேட்டி அணிந்திருந்தார். (பகவான் அனுக்கிரகத்தால்!) கடுங்குளிரிலும் பூணூல் தவிர்த்து அர்சகர்களுக்கு மேல் துண்டு இல்லை முருகன் பார்த்துக் கொள்வானோ ! :) இந்தக் காட்சியெல்லாம் பார்த்துவிட்டு புகைப்படங்களை எடுத்துவிட்டு வர நேரம் இரவு 8ஐ நெருங்க. வெ. இராதகிருஷ்ணன் சரவணபவன் அருகில் இருப்பதை அலைபேசியில் அழைத்து உறுதி படுத்தினார். நான் அவர் புகைப்படத்தைக் கூட பார்த்திருந்ததில்லை. அதனால் எதிர்பாரா ஆவலுடன் இருந்தேன்
சரவணபவன் வாசலுக்கு சென்றதும், தாம் தான் இராதகிருஷ்ணன் என மனைவி மற்றும் மகனுடன்(நவீன்) தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதுவரை அவர் எழுத்தை வைத்து ஓரளவு நடுத்தர வயதை, ஐம்பதைக் கடந்தவர் என்றே நினைத்திருந்தேன். உங்களுக்கு வயது 43 இருக்குமா ? என்று கேட்க, இல்லை 34 தான் ஆகுது என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். சொந்த ஊர் அருப்புக்கோட்டையாம், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இலண்டனின் வசிக்கிறார். பி.எச்.டி முடித்து நல்லதொரு பணியில் இருக்கிறார். அவரது பதிவுகளைப் படித்துவிட்டு எழுத்தின் தன்மை காராணமாக 'ஐயா' என்ற அடைமொழியுடன் பின்னூட்டம் இட்டு வந்திருந்தேன் :)
அன்றும் ஓட்டலில் கூட்டம் சிறுது நேரம் காத்திருந்தோம், தன்னைப்பற்றிய அறிமுகத்துடன், தனது எழுத்து அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இருவருக்கும் மிக அடிக்கடிக்கடி தொடர்புகள் இருந்ததில்லை என்றாலும் பழக்கத்தில் இருவருமே புதியவர்கள் போன்று உணர்வு ஏற்படவில்லை. உணவு உண்டுக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தோம். மூன்று குடும்பங்களுக்கும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானோம். வீட்டுக்கு அழைத்தார். குழந்தைகள் அசதியில் துவண்டுவிட்டார்கள். அடுத்தமுறை வருவதாக வாக்களித்துவிட்டு விடை பெற்றோம். கடும் குளிரிலும் குளிர் தாங்கும் ஆடைகள் உடுத்தாமல், மேல் சட்டடயுடன் வந்திருந்தார் வியப்பாக இருந்தது. அவரது தமிழ் ஈடுபாடு பாராட்டத்தக்கது. உணவுக்கும் அவரே பணம் செலுத்தினார். நன்றிகள் சொல்லிக் கொண்டு விடை பெற்றோம்
வெ.இராதா கிருஷ்ணன் பழகுவதற்கு இனியவர், இலண்டன் செல்லும் பதிவர்கள் தொடர்பு கொண்டால் விடுமுறை நாளென்றால் கண்டிப்பாக சந்திப்பார், மற்ற நாட்களில் சந்திக்க முயற்சிப்பார்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
27 கருத்துகள்:
இணையதள மணியனுக்கு பாராட்டுகள்
இவர்தானா
எழுத்த வச்சி வயசக்கூட்டியது.
மகிழ்ச்சியான பயணம். நெகிழ்ச்சியான சந்திப்பு.
எல்லா மெழுகு சிலை படத்திலும் கருப்பு கோட் போட்டுக்கிட்டு ஒரு மெழுகு சிலை இருக்கு பாருங்க. அருமை.
//தங்களைப் போன்றவர்களினால் மட்டுமே ’பெருங்காயம்’ வாழ்ந்து கொண்டிருக்கிறது :))//
ஆன்மீகம் எழுதினாலே அரைகிழம்னு நீங்களே நினைச்சுக்குவீங்களே :))
/ஸ்வாமி ஓம்கார் said...
எல்லா மெழுகு சிலை படத்திலும் கருப்பு கோட் போட்டுக்கிட்டு ஒரு மெழுகு சிலை இருக்கு பாருங்க. அருமை./
Repeattttttuuuu:)
கோவி கண்ணணா இல்ல கோஃபி அனானான்னு சந்தேகம் வர்ர அளவுக்கு தலைவர்கள் பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துருக்கீங்க..:))))
ராணியுடனும் அவர் கணவருடனும் உள்ள படம் அருமையாக உள்ளது.
//தங்களைப் போன்றவர்களினால் மட்டுமே ’பெருங்காயம்’ வாழ்ந்து கொண்டிருக்கிறது :))//
ஆன்மீகம் எழுதினாலே அரைகிழம்னு நீங்களே நினைச்சுக்குவீங்களே :))
:)) அரைகிழமான பின் ஆன்மீகம் வந்தால் அது வேறு வழி இல்லாமல் வருவது.,
வாலிபத்தில் வந்தால்தான் உண்மையான ஆன்மீகம் :))
சரிதானா நண்பரே:))
109 வருடத்தை 1.09 வருடமாகவே நான் பார்க்கிறேன் :))
எல்ல்லா போட்டோவும் நல்லா இருக்கு. பதிவு அப்புறம் படிச்சிக்கிறேன்.
நன்றி
//அர்சகர்கள் தவிர்த்து ஒரே ஒருவர் வேட்டி அணிந்திருந்தார். (பகவான் அனுக்கிரகத்தால்!) கடுங்குளிரிலும் பூணூல் தவிர்த்து அர்சகர்களுக்கு மேல் துண்டு இல்லை முருகன் பார்த்துக் கொள்வானோ !//
இவர்களது ஆட்டம் எல்லா பக்கமும் இருக்கா!?
//T.V.Radhakrishnan said...
இணையதள மணியனுக்கு பாராட்டுகள்
//
அவரு எவ்வளோ பெரியவர். நான் அவரை ஒப்பிடும் போது சிறுவன்
//அகல் விளக்கு said...
இவர்தானா
எழுத்த வச்சி வயசக்கூட்டியது.
//
அவரே தான்.
//மகிழ்ச்சியான பயணம். நெகிழ்ச்சியான சந்திப்பு.
//
பாராட்டுக்கு நன்றி அகல் விளக்கு.
//ஸ்வாமி ஓம்கார் said...
எல்லா மெழுகு சிலை படத்திலும் கருப்பு கோட் போட்டுக்கிட்டு ஒரு மெழுகு சிலை இருக்கு பாருங்க. அருமை.//
எல்லோரும் 'கோட்டை' விடுவாங்க. நீங்க பிடிச்சிக்கிட்டிங்க.
//தங்களைப் போன்றவர்களினால் மட்டுமே ’பெருங்காயம்’ வாழ்ந்து கொண்டிருக்கிறது :))//
:)
//ஆன்மீகம் எழுதினாலே அரைகிழம்னு நீங்களே நினைச்சுக்குவீங்களே :))//
அப்ப 'சங்கரா சங்கராங்கிர' காலப் பழமொழி தப்பா ?
:)
//நிஜமா நல்லவன் said...
/ஸ்வாமி ஓம்கார் said...
எல்லா மெழுகு சிலை படத்திலும் கருப்பு கோட் போட்டுக்கிட்டு ஒரு மெழுகு சிலை இருக்கு பாருங்க. அருமை./
Repeattttttuuuu:)
//
இருக்கியளா ? இங்கே பின்னூட்டம் இட்டால் தான் தெரிகிறது.
நன்றி பாரதி.
//அறிவிலி said...
கோவி கண்ணணா இல்ல கோஃபி அனானான்னு சந்தேகம் வர்ர அளவுக்கு தலைவர்கள் பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துருக்கீங்க..:))))
//
:) அப்பாய்ண்மெண்ட், செகரட்ரி தொல்லை இல்லாமல் அவங்களும் இஷ்டத்துக்கு அமைதியாக இருக்காங்க
//சுல்தான் said...
ராணியுடனும் அவர் கணவருடனும் உள்ள படம் அருமையாக உள்ளது.
//
நன்றி !
//நிகழ்காலத்தில்... said...
//தங்களைப் போன்றவர்களினால் மட்டுமே ’பெருங்காயம்’ வாழ்ந்து கொண்டிருக்கிறது :))//
ஆன்மீகம் எழுதினாலே அரைகிழம்னு நீங்களே நினைச்சுக்குவீங்களே :))
:)) அரைகிழமான பின் ஆன்மீகம் வந்தால் அது வேறு வழி இல்லாமல் வருவது.,
வாலிபத்தில் வந்தால்தான் உண்மையான ஆன்மீகம் :))
சரிதானா நண்பரே:))
//
அப்ப வாலிப வயதிக அன்பர்களுக்குன்னு சித்த வைத்திய வெளம்பரம் மட்டும் பொய்யா ?
:)
//நிகழ்காலத்தில்... said...
109 வருடத்தை 1.09 வருடமாகவே நான் பார்க்கிறேன் :))
//
சிவா
அவரு ஸ்வாமி ஓம்கார், இப்ப தான் நடக்கத் தொடங்கி இருக்கிறார் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
//மங்களூர் சிவா said...
எல்ல்லா போட்டோவும் நல்லா இருக்கு. பதிவு அப்புறம் படிச்சிக்கிறேன்.
நன்றி
//
படித்துவிட்டும் சொல்லுங்கோ !
//வால்பையன் said...
//அர்சகர்கள் தவிர்த்து ஒரே ஒருவர் வேட்டி அணிந்திருந்தார். (பகவான் அனுக்கிரகத்தால்!) கடுங்குளிரிலும் பூணூல் தவிர்த்து அர்சகர்களுக்கு மேல் துண்டு இல்லை முருகன் பார்த்துக் கொள்வானோ !//
இவர்களது ஆட்டம் எல்லா பக்கமும் இருக்கா!?
//
எல்லாம் பகவான் அனுக்கிரகம், பழிக்காதேள்.
:)
பொறுமையாப் படிச்சிட்டு பதில் போடறேன் - ஒண்னுலேந்து பத்து வரை - இப்ப பிஸி -
அட கோவிக்கு மெழுகுலே சிலை வைச்சிடாங்களா - பலே பலே
நல்லாருக்கு
//cheena (சீனா) said...
பொறுமையாப் படிச்சிட்டு பதில் போடறேன் - ஒண்னுலேந்து பத்து வரை - இப்ப பிஸி - //
அப்ப சரி.
//அட கோவிக்கு மெழுகுலே சிலை வைச்சிடாங்களா - பலே பலே
நல்லாருக்கு
//
மெழுகு சிலை மியூசியத்தில் ஒரு இடத்தில் வைப்பாங்க, கோவி சிலை பல இடத்தில் இருக்கு, அப்ப எதோ நடந்து இருக்கு :)
சிறப்பாக தொகுத்து வழங்கியிருகிறீர்கள், நான் சிங்கப்பூரை விட்டு வந்து அமெரிக்க படங்களை அனுப்பும்போது என் நண்பர்கள் சொன்னது நினைவிற்க்கு வருகிறது. நான் உங்கள் பதிவின் வழியாக லண்டனை கண்டு ரசித்தேன்... நன்றி.
உண்மைதான், நான் 17 முறை வெளி நாட்டு நண்பர்களை செந்தோசாவிற்க்கு அழைத்து சென்றுவந்துள்ளேன்... மகிழ்வுடன்.
//அரசூரான் said...
சிறப்பாக தொகுத்து வழங்கியிருகிறீர்கள், நான் சிங்கப்பூரை விட்டு வந்து அமெரிக்க படங்களை அனுப்பும்போது என் நண்பர்கள் சொன்னது நினைவிற்க்கு வருகிறது. நான் உங்கள் பதிவின் வழியாக லண்டனை கண்டு ரசித்தேன்... நன்றி.//
பாராட்டுக்கு மிக்க நன்றி !
//உண்மைதான், நான் 17 முறை வெளி நாட்டு நண்பர்களை செந்தோசாவிற்க்கு அழைத்து சென்றுவந்துள்ளேன்... மகிழ்வுடன்.
//
நீங்கள் பொறுமைசாலி சார். செந்தோசாவில் நடந்து அலைவதை நினைத்தாலே அசதியாகும் எனக்கு !
:)
அன்பின் கோவி
அருமை அருமை - பயணக்கட்டுரை அருமை
இலண்டன் முருகன் கோவில் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நகரத்தார்களால் கட்டப்பட்ட - ஐந்து ஆண்டுகட்கு முன்பாய் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்ட அருமையான கோவில். விக்கிரகங்களின் அழகே அழகு - கற்சிலைகள் கண்ணைக்கவரும். மதிய பூசைக்குப் பிறகு சென்றால் புளியோதரை தயிர் சாதம் எல்லாம் இலவசமாகக் கிடைக்கும். ஞாயிறு அன்று கூட்டம் அதிகம் இருக்கும். இது பெரும்பாலும் தமிழர்கள் ( இலங்கைத் தமிழர்கள் உட்பட) அதிகம் வசிக்கும் பகுதி. மற்ற இந்தியர்களும் இங்கு வசிக்கிறார்கள்.
சென்ற ஞாயிறு நவம்பர் 29 - என்னுடைய 59வது பிறந்த நாளை இங்கு தான் கொண்டாடினோம் - நான் ஒருவன் தான் ( அர்ச்சகர் நீங்கலாக ) வேட்டி சட்டை மட்டும் போட்டிருந்தேன். மற்றவர்கள் அனைவருமே பாண்ட் சட்டை குளிருக்குண்டான உடைகள் அனைத்தும் அணிந்து இருந்தார்கள்.
நல்ல கோவில். அமைதியான சூழ்நிலை - முழுவதும் வெப்பமூட்டப்பட்ட கோவில். குளிர் என்பதே தெரியாது.
சரவண பவன் சாப்பாடு பிரமாதம். என்ன காசு கொஞ்சம் கூட - அவ்வளவுதான். கூட்டமும் கூட
நல்ல பயணக்கட்டுரை கோவி
நல்வாழ்த்துகள்
:) மிக்க மகிழ்ச்சி கோவியாரே!
மிகவும் சிறப்பான கட்டுரையாகவே அமைந்திருக்கும் என்பதை படங்கள் காட்டுகின்றன. பொறுமையாக மீண்டும் வாசித்துவிடுகிறேன் விரைவில்.
...
அடடா, சீனா ஐயா, இங்குதானா பிறந்தநாள் கொண்டாடினீர்கள்! வாய்ப்பினை நழுவ விட்டுவிட்டேனே!
அழகாக லண்டனைப் படம் பிடித்திருக்கிறிர்கள். நல்ல விளக்கமான பயணக் கட்டுரை.
கருத்துரையிடுக