பின்பற்றுபவர்கள்

1 அக்டோபர், 2009

கலவை 01/அக்/2009 !

கலவைப் பதிவுப் போட்டு கிழமை ஆச்சு.

வாரத்துக்கு தமிழில் கிழமைங்கிறது உங்களுக்கு தெரியுமா ?

இந்தியில் கூட கிழமையை வாரம் என்றே குறிப்பிடுவார்கள், சோமவார்...சுக்ரவார்.....நாம திங்கள் கிழமை, செவ்வாய் கிழமை....ன்னு எழுதுகிறோம், கிழமைகளின் ஏழு நாட்களைக் குறிக்க வாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கு சரியான தமிழ்ச் சொல் கிழமை தான். சனிக்கிழமைக்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா ? காரி கிழமை. மற்ற தமிழ் சொற்கள் பற்றி தெரிய வேண்டுமென்றால் முகவை இராம் குமாரிடம் கேளுங்க. அவருதான் சுத்த தூய தமிழில் பேசுவார் :)

வார்த்தைக்கு வார்த்தைன்னு பயன்படுத்தும் வார்தை வட சொல்தான், ஆறாம் நூற்றாண்டுக்கு பின் தமிழில் இடைநுழைந்தச் சொல்லில் அடிக்கடி பயன்படும் சொல் 'வார்த்தை', ஒரு வார்த்தைக் கேளுங்கன்னு சொல்லுகிறோம். ஒரு சொல் கேளுங்களேன் என்று சொல்லிப் பாருங்கள், வார்த்தைச் ஜாலங்களுக்கு உள்ள அதே பொருள் சொற் சிலம்பத்திலும் உண்டு.

கலவைப் பதிவில் தமிழைப் பற்றியா ? நான் இன்று இந்த இடுகையை எழுதக் காரணமே ஸ்வாமி ஓம்கார் தான். ( நிரம்ப > ரொம்ப) நீண்ட நாளாச்சே கலவை எழுதி என்று இன்று காலை நினைத்துக் கொண்டு இருந்தேன். மனசில நினச்சதைச் சொல்லும் மகான் போல 'கலவை போட்டு நீண்ட நாளாச்சே' ன்னு அவரும் உரையாடியில் வந்து கேட்டார். ஸ்வாமிக்கு எதிர்காலம், புதிர்காலம், கனவுல நினைப்பது, மனசுல நினைப்பதெல்லாம் தெரிய தொடங்கி இருக்கு போல. அடுத்து யாருடைய கனவிலாவது வருவார். (ஸ்வாமி ஓம்கார் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார் )

*****

இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதான்னு தெரியல ? நோபல் பரிசுக்காக அன்னை சோனியா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறதாம். கருணாநிதி தனக்குத் தானே அண்ணா விருது எடுத்தும் கொடுத்தும் கொள்வது போல் நோபல் பரிசும் காங்கிரசு கையில் இருந்தால் சோனியாவுக்கும், காங்கிரசில் கைகோர்க்கப் போகும் ரோஜாவுக்கும் கூடக் கொடுக்கலாம். வதை முகாம் வரை கொண்டுவந்துவிட்ட தமிழர்களின் 'அமைதி'க்கு பாடுபட்ட அமேதி நாயகிக்கு நோபல் பரிசு மட்டும் தானா ? தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தற்காப்பதற்கும், சுரணை அற்றும் இருப்பதற்கும் இந்திய அரசுக்கு ஒலக நாடுகள் எதுவும் விருது கொடுக்கலையா ? மன்மோகனுக்கு ஒபாமா விருது கிடைத்திருக்காமே ! உங்களுக்கு தெரியுமா ? விருது வாங்கலையோ விருது ! உலக சீசன் போல.


*****

ஒரு ரூபாய் நடத்துனர் சில்லரையாக தர முடியவில்லை என்று கைவிரித்தால் குதிக்கும் பொதுமக்கள் டாஸ்மார்க் கடைகளில் 5 லிருந்து - 10 வரை கூடுதலாக கொடுக்கும் போது வெறும் முனகல் சில இடங்களில் சரக்கைப் பார்த்த மனநிறைவில் சென்றுவிடுகிறார்களே ஏன் ? மனத்தெளிவோடு இருப்பதற்கும், மன உந்துதலோடு இருக்கும் போது மனித மனம் செயல்படும் விதம், சண்டை இடுவது, விட்டுக் கொடுப்பது.....எல்லாம் இடம் பொருள் ஏவல் பார்த்து தானோ. சரக்கு வில்லை சில்லரைத் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய வட்டம் செய்யப்படுகிறதாம்.

போதை பார்டி 1 : மனைவி மேல இருக்கிற வெறுப்புல, கோவத்துல தான் நான் அடிக்கடி குடிக்கிறேன்
போதை பார்டி 2: மனைவியை ஞாபகபடுத்தி பயமுறுத்தாதே அடிச்சதும் இறங்கிடுப்போறது.

17 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

விருது
எடுத்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!

குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!

தூங்காதே தம் பி தூங்காதே!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அண்ணா விருது!

உளியின் ஓசை படத்திற்கு வசனகர்த்தா விருது!

தமிழினத் தலைவர் விருது!

முத்தமிழ் அறிஞர் விருது!

ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகள்!//

:)

எடுத்துக் கொண்ட என்று இருக்க வேண்டும்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//ஸ்வாமிக்கு எதிர்காலம், புதிர்காலம், கனவுல நினைப்பது, மனசுல நினைப்பதெல்லாம் தெரிய தொடங்கி இருக்கு போல.//

இணையத்தில ஒருத்தர் என்னை பத்தி அற்புதங்களை எழுதிட்டார்...

வாங்க லைன்ல நில்லுங்க எல்லாருக்கும் வரம் தரேன் :)

Jerry Eshananda சொன்னது…

/வதை முகாம் வரை கொண்டுவந்துவிட்ட தமிழர்களின் 'அமைதி'க்கு பாடுபட்ட அமேதி நாயகிக்கு நோபல் பரிசு மட்டும் தானா ?//
சரியான போடு.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

வடமொழி - தமிழ் மொழி
------------------------
வாரா - கிழமை
நட்சத்திரா - நாள்
க்ரஹ(கிரகம்) - கோள்
திதி - மதிநாள்
கரணம் - அரைமதிநாள்.
மேற்கண்ட ஐந்தையும் காட்டுவது..
பஞ்சாங்கம் - நாள் காட்டி

ஜெகதீசன் சொன்னது…

//
தூயத் தமிழில்
//
ஏன் இப்படிக் கொல்றீங்க???
"தூயத் தமிழ்" இல்லை "தூய தமிழ்" தான்

:(((

Barari சொன்னது…

kalaizar viruthai eduththu kondaalu -koduththu kondaalum avarukku antha irukkaththane seikirathu goviyaar avarkale athai marukka mudiyumaa?

நையாண்டி நைனா சொன்னது…

present sir.

இத்தனை நடந்தும் அமைதியா இருக்கும் எங்களை யாரும் விருதுக்கு பரிந்துரை செய்யாரோ... ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நையாண்டி நைனா


present sir.

இத்தனை நடந்தும் அமைதியா இருக்கும் எங்களை யாரும் விருதுக்கு பரிந்துரை செய்யாரோ... ?//

நான் பரிந்துரை செய்யுறேன்!

நையாண்டி நைனா ஐயாவுக்கு “ஆட்டோ விருது” அளித்து சிறப் பிய்யுங்கள்!

அவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்குங்கள்!

:P

நிகழ்காலத்தில்... சொன்னது…

//அடுத்து யாருடைய கனவிலாவது வருவார்.//

அவர் கனவில் எல்லாம் வரமாட்டார்.

நினைத்தால் நேரிலேயே வந்துவிடுவார்

அவருடைய கனவில் யாராவது வந்தால்தான் அது ஆச்சரியம் :))


பார்ட்டி 1,2 இரண்டுமே நீங்கள்தானா !!! :)))))))))))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவிக்கு இலை விருது விரைவில் கிடைக்க வாழ்த்துகள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

T.V.Radhakrishnan said...
கோவிக்கு இலை விருது விரைவில் கிடைக்க வாழ்த்துகள்//

இது சரியில்லை ஐயா!

கோவி விமர்சகர் அதனால் அவருக்கு முள் விருது கொடுக்கலாம்!

அதுதானே இரண்டு இலைக்கும் நடுவில் இருக்கும்! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவிக்கு இலை விருது விரைவில் கிடைக்க வாழ்த்துகள்
//

வாழை இலை போட்டு யாராவது விருந்து வைத்தால் மகிழ்ச்சி அடைவேன். மற்ற படி இலை விருதா நோ நோ.

அப்பாவி முரு சொன்னது…

எனக்கு நான் என்ன விருது குடுத்துக்கிறது?

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்லா இருக்கு, நிறைய தமிழ் சொற்களை அறிமுகப் படுத்துகிறிர்கள்.

மங்களூர் சிவா சொன்னது…

:))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்