முடிவுகள் முழுதாக வெளிவராத இன்னிலையில் திமுக கூட்டணி 27 இடங்களையும் அதிமுக கூட்டணி 9 இடங்களையும் பெற்றிருக்கிறது. 40க்கு 40 வெற்றி பெற்ற திமுக அணி இந்த முறை 10 இடங்களை இழந்திருக்கிறது. அதன் பழைய கூட்டணியில் இருந்த பாமகவின் தொகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது. 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துவிட்டு, திமுகவுடன் ஈகோ யுத்தம் காரணமாக, அணிமாற ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி, அணிமாறி கூடுதலாக ஒரு இடம் பெற்று வெற்றி பெறலாம், செல்வாக்கை வளர்க்கலாம் என்ற பாமகவின் நினைப்பில் தமிழக வாக்களர்கள் மண்ணை தூவி உள்ளார்கள். முதல் முறையாக திருமாவளவன் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளார்.
இதை திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றி என்று சொல்வதற்கில்லை. சென்ற முறை பாராளுமன்ற உறுப்பினர்களே இல்லாத அதிமுகவிற்கு, பிரதமர் யார் என்றே முன்னிறுத்த முடியாத நிலையிலும் 10 தொகுதிகள் வரை கிடைத்திருப்பது திமுக கூட்டணியின் செயல்பாடுகளில் அதிருப்தி அலை வீசி இருப்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். வீரவசனம் பேசிய காங்கிரஸ் பெரும் தலைகள் தோல்வியைத் தழுவியது தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றி. ப.சிதம்பரம் முதலில் தோல்வி என்றார்கள் பிறகு வெற்றி என்றார்கள், என்ன மாய்மாலமோ தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்.
எதிர்கட்சிகள் திமுக ஆட்சியை தேர்தலுக்கு பிறகு அகற்றுவோம் என்பதை முன்னிறுதி தேர்தலில் பரப்புரை செய்தது அந்த கட்சிகளுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது, இன்று எதிராக பேசுபவர்கள் தேர்தலுக்கு பிறகு அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை நடுநிலை வாக்காளர்கள் புரிந்து கொண்டு எதிர்கட்சிகளின் திடிர் ஈழ ஆதரவை முன்னிறுத்தி வாக்களிக்காமல் திமுகவிற்கே வாக்களித்துவிட்டனர். அதாவது பாராளுமன்ற தேர்தலில் அளிக்கப் போகும் வாக்கு மூலம் தமிழக அரசை மாற்ற வழி ஏற்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.
இந்த தேர்தலில் திருமா வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறேன். திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றி தந்துவிடாத தமிழக வாக்காளர்களைப் போற்றுகிறேன். ஏனெனில் 40க்கு 40 பெற்றிருந்தால் தாம் வைத்ததே சட்டம், தாம் எதைச் செய்தாலும் மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றே அவர்கள் செயல்படுவார்கள், அது ஓரளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. திடீர் திடீர் கொள்கை மாற்றம் முழுமையான வெற்றியைத் தந்துவிடாது என்பதை ஜெ - உணர்ந்து கொள்வார்.
தொடக்க காலத்தில் கள்ளவோட்டு, பிறகு கவர்ச்சி மிகு இலவச திட்டங்கள், தற்பொழுதைய ட்ரெண்டாக கரன்சி இரைப்பு ... ஆகியவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி ஜெனநாயகத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று பரிணாமம் பெற்றிருக்கும் திராவிட சித்தாந்தம் வாழ்க !வாழ்க !
*****
வாக்கு பதிவு முடிந்த நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை (நேற்றுதான் அறிந்து கொண்டது போல்) குறிப்பிட்டு கருணாநிதி நேற்று மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த, மீண்டும் தபால் / தந்தி அனுப்பி இருக்கிறார். அரசியல் / தேர்தல் சாணக்கியர் கருணாநிதிக்கு பாராட்டுகள்.
ஈழத்தில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு - இராஜபக்சே அரசு ஆகியவற்றிற்கும் வாழ்த்துகள் !
*****
நான் முன்பே எழுதியபடி தமிழகத்தில் ஈழ உணர்வை முன்னிலைப்படுத்தி யாரும் வாக்களிக்கவில்லை, காங்கிரஸின் பெரும்தலைகள் பெற்ற தோல்வி திரைத்துறையினர் காங்கிரஸின் தொகுதிகளில் செய்த பிரச்சாரம் மூலம் ஓரளவுதான் சாத்தியப்பட்டு இருக்கிறது. 15 பேர் வரை தீக்குளித்துள்ளார்கள். தமிழக தமிழர்கள் அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழர்கள் பற்றிய உணர்வில் செயல்பட்டு இருக்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் முழுமையான மாற்றம் என்பதை ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது வீண். இலங்கைவாழ் தமிழர்களே இலங்கை அரசில் அங்கம் வகித்து தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வெறும் இன உணர்வு அடிப்படையில் ஓரளவுக்கு உணர்ச்சி காட்டி செயல்படுவதை ஆறுதலாகவே கொள்ள வேண்டும். நாளை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழக தமிழனை செருப்பால் அடித்து துறத்திவிட்டு தமிழகத்தை ஆக்கிரமித்தால் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானது என்றே நினைத்து கொண்டு இருந்துவிடுங்கள். ஏற்கனவே தமிழன் கர்நாடகம், மலேசியா ஆகிய நாடுகளில் செருப்படி படும் போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து பழகி இருக்கிறோம். நீங்கள் தமிழ், தமிழுணர்வு என்றெல்லாம் பெரிய பெரிய எதிர்ப்பையெல்ல்லாம் மூட்டைக் கட்டிவிடுங்கள்.
ஈழத்தில் வீழ்ந்த, கொலை செய்யப்பட்ட, வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே ! இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், இனி எடுக்கும் எந்த பிறவியிலும் ஒரு தமிழனாகவே பிறக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
38 கருத்துகள்:
// நாளை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழக தமிழனை செருப்பால் அடித்து துறத்திவிட்டு தமிழகத்தை ஆக்கிரமித்தால் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானது என்றே நினைத்து கொண்டு இருந்துவிடுங்கள். ஏற்கனவே தமிழன் கர்நாடகம், மலேசியா ஆகிய நாடுகளில் செருப்படி படும் போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து பழகி இருக்கிறோம். ///
Well said....
But paining Heart For Eelam Tamils
Feel Helpless!!!
சுவரன்சிங்(திருச்சியில் முன்பு கமிஷனராக இருந்த பஞ்சாபி) போன்றவர்களை எம்.பி யாகவோ, மேயராக வோ அல்லது முதல்வராகவோ, மத்திய அமைச்சராகவோ ஆக்கினால் நன்றாக செயல்படுவார்கள். தமிழர்க்கு உதவ முடியாத தமிழர் ஆண்டு எதைக் கண்டோம்
ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இம்மாதிரியான பதிவுகளை எந்த தார்மீக உரிமையில் எழுதுகிறீர்கள் என தெரியவில்லை. முதலில் இந்தியாவில் வந்து எங்களோடு குப்பை கொட்டிவிட்டு இம்மாதிரி எழுதுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்....
ஒரு தவறான வாதத்தை வைத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்யும் பதிவாகவே இதைக் காண்கின்றோம். இத் தேர்தல் முடிவுகளோடு முந்தைய தேர்தல் முடிவுகளை ஒப்பிட இயலாது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி தோற்ற தொகுதிகளில் எல்லாம், ஈழப் பிரச்சினையால் தான் தோற்றது என்பது வரட்டு வாதம். அத் தொகுதிகளின் வேட்பாளர்களின் குறைபாடுகள், எதிர்கட்சி வேட்பாளரின் பலம், என நிறைய விடயங்கள் உள்ளன.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. என்று ஈழ ஆதரவாளர்கள் புலிகளுக்கான ஆதரவை தள்ளி வைத்து விட்டு, ஈழத்தில் அவதிப்படும் எம் மக்களைப் பற்றி சிந்தித்து. அவர்களின் துயர் துடைக்க வேண்டும் என்று மட்டும் களத்தில் இறங்குகின்றார்களோ அன்று தான் ஈழத் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
அன்புடன்
தமிழ் பிரியன்
//இலங்கைவாழ் தமிழர்களே இலங்கை அரசில் அங்கம் வகித்து தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வெறும் இன உணர்வு அடிப்படையில் ஓரளவுக்கு உணர்ச்சி காட்டி செயல்படுவதை ஆறுதலாகவே கொள்ள வேண்டும்//
என்ன செய்வது
தமிழனுக்கு கையறு நிலைதான்..
கலங்கிப்போய் நிற்கிறான் ஈழத்தமிழன்..
கைகொடுத்து தூக்கவிட முடியாமல்
கண்ணை மூடிக்கொண்டு விட்டோம்..
//தமிழ் பிரியன் 10:57 PM, May 16, 2009
ஒரு தவறான வாதத்தை வைத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்க முயற்சி செய்யும் பதிவாகவே இதைக் காண்கின்றோம்.
//
தமிழ் பிரியன்,
ஈழத்தமிழர்கள் பிரச்சனை தேர்தலில் எதிரொளிக்காது என்றே முந்தைய பதிவுகளில் எழுதி இருக்கிறேன். காங்கிரசு அமைச்சர்கள் தோற்றதற்கு காரணம் ஈழம் பிரச்சனை என்பதை இன்றைய சன் டிவி பேட்டியின் போது திருமாவளவனும் குறிப்பிட்டு இருக்கிறார்.
/ஈழத்தில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு - இராஜபக்சே அரசு ஆகியவற்றிற்கும் வாழ்த்துகள் !/
இதை ஸ்ரீலங்கா-சிங்களத்தேசிய asia tribune நேற்றைக்கிரவே எழுதிவிட்டது -என்ன கூடுதலாக ஸ்ரீலங்காவின் தோழமையான திமுக அரசு என்றும் சேர்த்துச் சொல்லி.
Indian Polls: DMK will get 30 seats says new forecast, thumbs up for Cong alliance
Sat, 2009-05-16 01:30
By M Rama Rao, India Editor, Asian Tribune
New Delhi, 16 May (Asiantribune.com): Counting of votes in India’s marathon elections will take place on Saturday, May 16. By afternoon, the winner will be known though the counting centres are spread throughout the country.
While NDTV exit polls has put the Congress led United Progressive Alliance (UPA) as the front runner, rival channel, CNN-IBN has come up with some ‘shocking’ findings that has brought smile to the Congress and the DMK.
‘Raiding on the crest of a DMK sweep in Tamil Nadu, the Congress led alliance will get 210 – 225 seats. The DMK and its allies could win up to 30 Lok Sabha seats and thus turn upside down all the poll arithmetic’, the CNN-IBN reported Friday night.
If this forecast comes true, it will mean a big setback to Jayalalithaa Jayaram of AIADMK, who is being wooed by Congress and BJP alike to the dismay of the Third Front.
The channel projects 158-173 seats for the Congress, 132-147 seats for the BJP and between 30 and 40 seats for the Left.
Alliance wise, the Congress led UPA is expected to end with anywhere between 210-225 seats. The BJP led NDA will be close behind short by some seats.
While the BJP on its own will get 132- 147 seats, its tally with allies will be somewhere in the 180-195 seat range. The Third Front will end up with 95-110 seats.
Guided by exit polls results, the Congress swung into action early Friday to enlist new allies and keep in good humor old allies. Sonia Gandhi, the party chief, herself, is leading from the front the operation to stitch a viable alliance that will have 272 seats required to cross the half way mark in Parliament. She and her aides have roped in Chiranjivi’s Praja Rajyam Party in Andhra Pradesh, and Navin Patnaik of Biju Janata Dal in Orissa. Congress is also assured of support by old allies Lalu Prasad of Rashtriya Janata Dal and Ram Vilas Paswan of Lok Jana Sakti.
It has not yet opened formal talks with the Samajwadi party of Mulayam Singh Yadav with which it has had a love –hate relationship. Alliance talks with it will depend on the number of seats SP wins. For the time being, both sides have mended their fences publicly with Congress senior Digvijay Singh saying a big sorry to Samajwadi general secretary Amar Singh ‘if I had hurt you with my comments and digs in the heat of campaigning’.
Congress is not so sure of Nationalist Congress Party of Sharad Pawar. The NCP is divided on supporting the Congress. It is piqued at the way the Congress piped it in Meghalaya in forming the government. Local strong man and NCP senior, P A Sangma has cautioned Pawar against any tie-up with Congress. ‘Don’t believe the Cong. It is untrustworthy,’ Sangma told reporters here and said his party would project Pawar as the Prime Ministerial candidate.
Strategy Sessions
Sonia Gandhi and BJP's Prime Ministerial candidate L K Advani have been locked in strategy sessions throughout the day. Pranab Mukherjee, A K Antony, Ghulam Nabi Azad and Ahmed Patel are among the stalwarts at the Gandhi camp. Narendra Modi, Venkaiah Naidu, Arun Jaitley, Rajnath Singh, Om Prakash Chautala and Sharad Yadav confabulated with Advani. Both camps are trying everything to poach on constituents of Third Front to the dismay of Left parties and the TDP, which are the prime movers of the Front.
Congress is bending backwards to woo JD (U) leader and Bihar Chief Minister Nitish Kumar, who is presently with the BJP led NDA. He created a stir on Friday when he declared that his party would support a Federal government which will grant special status to Bihar. And indicating that he is keeping his options open, he skipped a meeting of NDA chief ministers convened in Delhi.
Congress senior Digvijay Singh immediately grabbed the opening and stated that his party always gave a special deal to backward states. But, the BJP has downplayed the Nitish statement.
Left Hopes
One hope the Congress is nurturing is poor show by the Left at the hustings. ‘The Left will be left with lesser number of seats than 2004 and what political maneuvering can they do with that is yet to be seen’, Kapil Sibal told reporters.
The Communists have not lost hope as yet. CPI national secretary D Raja said the efforts of Congress and BJP to woo them shows ‘lust for power’ and ‘desperation’ of both the parties.
He said the Left parties and its allies in the Third Front would hold consultations on May 18 to take a ‘collective decision’ on how to go about in the post poll scenario. ‘As far as our allies are concerned, they are with us. We are talking to them and I cannot foresee any division among us’, CPI leader said.
Raja said the CPI doesn’t want the BJP to take any advantage of emerging situations and at the same time we don’t like a government led by Congress. ‘So, we have considered various pros and cons of the emerging situation’
He is unsure of Jayalalithaa attending the May 18 meeting. About Deve Gowda, he added that the former prime minister would play a key role in the Third Front. ‘Even H D Kumaraswamy told us that despite his meeting with Sonia Gandhi, the JD(S) will be with the Third Front, then why should I doubt’, Raja said
CNN –IBN projection for the Left is that it will survive the Mamata scare in West Bengal. It will be bruised in the process though; this is reflected in the projection of 30-40 seats for the Left tally, down from 59 in the 2004 elections.
Manmohan may resign on Monday
Prime Minister Manmohan Singh is likely to resign on Monday to pave the way for formation of a new government. Going by convention, President Pratibha Patil will ask him to continue as caretaker till a new government assumes office.
If the predictions of a badly fractured verdict come true, the President will face tough options in choosing the next Prime Minister. Stability of the government will be the primary criteria in making the selection. That rules out automatic choice of the party, which has emerged as the single largest party but an alliance that can face survive the trust vote in Parliament.
In anticipation of such a contingency, the Congress has started collecting quietly letters of supports from old and new allies alike.
- Asian Tribune -
பெயரிலி அண்ணா,
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
ஆங்கிலத்தில் உள்ளதை பொறுமையாக படித்துப் பார்க்கிறேன்
//ஜோதிபாரதி said...
சுவரன்சிங்(திருச்சியில் முன்பு கமிஷனராக இருந்த பஞ்சாபி) போன்றவர்களை எம்.பி யாகவோ, மேயராக வோ அல்லது முதல்வராகவோ, மத்திய அமைச்சராகவோ ஆக்கினால் நன்றாக செயல்படுவார்கள். தமிழர்க்கு உதவ முடியாத தமிழர் ஆண்டு எதைக் கண்டோம்
//
ஆமாம், ஆமாம் வைகோவை தோற்கடிக்க எதோ தாகூருக்கு வாக்களித்துள்ளார்கள் மக்கள். தேசிய நம்பிக்கை உடையவர்கள் !
:)
கள்ளவோட்டு கும்பல் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் மட்டும் அதிகமாக குத்திவிட்டார்கள்.அதனால் அந்த கும்பல் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி அம்மையரின் சீடர்களின் தொகுதிகளில் சரியாக குத்தவில்லை.அதனால் அவர்கள் தோல்வி.
கோவி கண்ணன்,
தமிழகத்தில் ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சினையாக இருக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவு உண்மை தமிழகத்தில் ஈழத்திற்காக எழுந்த தன்னெழுச்சியான எழுச்சியை தணிக்கவேண்டும் என்று எல்லாக் கட்சிகளும் செய்ல்பட்ட யதார்த்தம்.
முத்துக்குமார் தியாகத்திற்குப் பிறகு மாண்வர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பிரிவினர் போர்க்குணத்துடன் போராடிய போது தி.மு.க அரசு அவற்றை ஒடுக்கியபோது ஈழ ஆதரவாளர்கள் என அறியப்பட்ட ம.தி.மு.க, பா.ம.க, வி.சி அப்புறம் பு.தலைவி யாரும் வெறும் குரல் கூட கொடுக்கவில்லை. காரணம் அப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டுவிட்டால் தங்களது இடம் காலியாகிவிடும் என்ற அச்சம்தான்.
எனவே ஈழம் தமிழக மக்களிடம் பற்றிக் கொள்ளக்கூடாது என்பதில் எல்லோருக்கும் ஒத்த கருத்து இருந்தது. அதை மறந்து விட்டு தேர்தலின் இறுதி நேரத்தில் அம்மா கூட்டணி ஈழத்தை வைத்து அள்ளிவிடலாம் என பேராசைப்பட்டு ஏமாந்து போனார்கள். ஈழத்திற்காக தமிழக மக்களின் கையறுநிலைக்கு காரணம் தலைவர்கள்தான், மக்களல்ல.
வினவு
வினவு,
உங்கள் கருத்தை முன்பே நான் எழுதி இருக்கிறேன். நன்றி !
வலைப்பதிவில் ஈழம் தேர்தலில் ஒலிக்கும் என்று காரசாரமாகப் பேசுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் ஈழப் பிரச்சனை தேர்தலில் ஒலிக்க வண்ணம் வெற்றிகரமாக தவிர்க்க முடியும் என்பதை திமுக கழக கூட்டணிக் கட்சிகள் சாதித்து இருக்கின்றன. தொடக்கம் முதலே ஈழம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளர்களை சிறையில் தள்ளி தேர்தல் வரையில் ஈழம் தொடர்பான செய்திகள் மக்களை எட்டா வண்ணம் மிகுந்த கவனம் எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாண்மை ஆளும் கட்சி சார்பிலும், ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சீமான் போன்றோரின் பேச்சுகள் ஒரு சில தொலைகாட்சிச் சானல் தவிர்த்தும், நேரடியாக கேட்ட மக்களைத் தவிர்த்தும் ஈழப் பிரச்சனை மக்களிடம் கொண்டு செல்லப்படவே இல்லை. ஏன் கொண்டு செல்ல வில்லை என்பதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.
//தமிழர்க்கு உதவ முடியாத தமிழர்
ஆண்டு எதைக் கண்டோம்//
ஜோதிபாரதி அண்ணே, காமராசருக்கும் அண்ணாவுக்கும் பினபு நம்மை ஆண்ட தமிழன் யாரொன்று சொன்னால் புண்ணியம போகும்!!!
//யட்சன்... 10:56 PM, May 16, 2009
ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இம்மாதிரியான பதிவுகளை எந்த தார்மீக உரிமையில் எழுதுகிறீர்கள் என தெரியவில்லை. முதலில் இந்தியாவில் வந்து எங்களோடு குப்பை கொட்டிவிட்டு இம்மாதிரி எழுதுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்....
//
யட்சன்
என்னிடம் இருப்பது இந்திய கடவு சீட்டுதான். எனக்கு இந்தியர் தகுதியை அதற்கு மேல் எவரிடமும் கேட்டுப் பெற தேவை இல்லை
ரொம்பக் கஷ்டமப்பா....!! 100 ரூபாய் வாங்கி ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டு மல்லாந்துட்டாய்ங்களா, வெளங்கிருவாய்ங்க :-(((.
கோவி கண்ணன்
ஈழப்பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு தி.மு.கவும் ஊடகங்களும் மட்டுமல்ல ஈழத்திற்கு உண்மையாக ஆதரிப்பதாக கூறிவந்த அ.தி.மு.க அணி கட்சிகளும் கூட காரணம்தான். அவர்கள் மக்களிடம் ஈழப் பிரச்சினையை வெறும் மனிதாபிமான பிரச்சினையாக சித்தரித்ததைத் தாண்டி அதற்குமேல் பேசுவதற்கு விரும்பவில்லை. முக்கியமாக மாணவர்கள் இதைக் கையிலெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் கூட ஒரு நாள் முன்னரே நடத்துவதற்குத்தான் அவர்கள் திட்டமிட்டனர். புரட்சிகர அமைப்புக்கள், மாணவர்கள் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் ஒருநாள் தள்ளி நடத்தும் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இங்கே வலியுறத்த விரும்புவது இந்தக் கட்சிகள் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்பதை மறைக்கின்ற முயற்சிகளை தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் அம்பலப்படுத்திவிடும் என அஞ்சினார்கள் என்பதைத்தான்.
அடுத்து இந்தியாவில் ஒரு கட்சி என்ன அக்கிரமம் வேண்டுமானலும் செய்யட்டும், ஆனால் அவர்கள் ஈழத்தையும், புலிகளையும் ஆதரித்தால் அவர்களை ஏற்றுக் கொள்வோம் என ஒரு காரியவாதம் கணிசமான ஈழமக்களிடையே இருந்தது. இதனால்தான் குஜராத்தில் 2000முசுலீம் மக்களைக் கொன்ற பா.ஜ.க கட்சிக்காக அதன் வேட்பாளர் இல.கணேசனை ஆதரித்து புலிகளின் ஆதரவாளர் சிவாஜிலிங்கம் எம்.பி தேர்தல் பிரச்சாரமே செய்தார்.
இந்த அணுகுமுறை மிகத் தவறானது. யாரெல்லாம் இந்திய,தமிழக மக்களுக்கு எதிரானவர்களோ அவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்பதுதான் ஈழமக்கள் கொண்டிருக்க வேண்டிய நோக்கு. தனது பார்ப்பன சித்தாந்தத்திலயே தேசிய இன ஒடுக்குமுறையை வைத்திருக்கும் பா.ஜ.க எப்படி ஈழத்திற்கு நண்பனாக மாற முடியும்? இதையெல்லாம் ஈழத்தின் துயரத்தில் மன்னிக்கலாம் என்றால் இங்கே மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான தார்மீக உரிமையை அவர்கள் இழப்பார்கள். அதனால்தான் பாசிச ஜெயாவின ஈழ ஆதரவு வேடம் தமிழக மக்களிடம் எடுபடவில்லை. உண்மையில் ஈழத்திற்கு எதிராக அவர் செய்துள்ள அநீதிகளை மக்கள் மறந்து விட முடியுமா என்ன?
வினவு
தமிழர்களை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் அடிக்கும் போது என்று எழுதியிருப்பதில் அற நோக்கு ஏதுமில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் இனவெறியைக் கிளப்புவதற்கு அந்த மாநிலத்தின் மக்கள் அனைவரையும் எதிரியாக பார்ப்பதும் கூட ஒரு வகையில் இனவெறியோடு சம்பந்தப்பட்ட கருத்துத்தான்.
இலங்கையில் கூட சிங்கள இனவெறியர்களைத்தான் கண்டிக்கவேண்டுமே அன்றி சிங்கள உழைக்கும் மக்களை அல்ல. அவர்களிடம் தமிழ் மக்களின் உரிமைகளை எடுத்துச் சொல்லி நம்பக்கம் தார்மீகமாகவாவது திரட்டுவதற்கு முயலவேண்டும். மாறாக அவர்களை நாமும் எதிரிகளாகப் பார்த்தால் அந்த மக்களை சிங்கள இனவெறியர்களிடம் நாமே ஒப்படைத்தாக மாறிவிடும்.
சென்னையில் தேநீர்க்கடைகள் அத்தனையிலும் எச்சில் கிளாஸ் கழுவும் மலையாளிகள் என தமிழர்களால் கேலிசெய்யப்படும் அந்த உழைப்பாளிகள்தான் உங்களுக்கு எதிரிகளா? தமிழனை விட மலிவான கூலிக்கு கேபிள் வழிகளுக்கான குழிகளைத் தோண்டும் கன்னட உழைப்பாளிகளை காவிரி பிரச்சினைக்காக நாமும் எதிரிகளாகத்தான் பார்க்க வேண்டுமா?
இனவெறி இருபக்கமும் வெட்டும் கத்தி. அதற்கு நாமும் பலியாகாமல் இருந்தால்தான் உண்மையில் நமது உரிமைகளை வெல்ல முடியும்.
வினவு
சிவாஜிலிங்கம் டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர் :-)
எனது மன உளைச்சலுக்கு உங்கலுடைய பதிவு எனக்கு மருந்து....
Kuraliniyan..
தமிழகத்தில் ஈழ உணர்வை முன்னிலைப்படுத்தி யாரும் வாக்களிக்கவில்லை, காங்கிரஸின் பெரும்தலைகள் பெற்ற தோல்வி திரைத்துறையினர் காங்கிரஸின் தொகுதிகளில் செய்த பிரச்சாரம் மூலம் ஓரளவுதான் சாத்தியப்பட்டு இருக்கிறது.
அண்ணாச்சி காங்கிரஸ் தலைகள் எல்லாம் காணாமல் போயிடுதே... தமிழக மக்கள் காங்கிரசின் குள்ளநரிகளுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க.விற்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்கள். ஈழத்திற்காக போராடுவதாய் சொன்ன ஜெயலலிதாவின் பேச்சை நம்பவில்லை.
//வினவு 12:19 AM, May 17, 2009
தமிழர்களை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் அடிக்கும் போது என்று எழுதியிருப்பதில் அற நோக்கு ஏதுமில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கர்நாடக, கேரள அரசியல்வாதிகள் இனவெறியைக் கிளப்புவதற்கு அந்த மாநிலத்தின் மக்கள் அனைவரையும் எதிரியாக பார்ப்பதும் கூட ஒரு வகையில் இனவெறியோடு சம்பந்தப்பட்ட கருத்துத்தான்.//
இன வெறிக்கும், இன உணர்வுக்கு ஒரே வேறுபாடு கூட்டமாக கல்லெறிவதற்கும், கூட்டமாக எதிர்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் தான். இன வெறியின் மிதவாதம் இன உணர்வு. ஆனால் இவற்றில் ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இல்லை, வேண்டுமென்றால் இனம் என்பதற்கு பதிலாக சாதி, மதம், மொழி இருக்கும்.
//இலங்கையில் கூட சிங்கள இனவெறியர்களைத்தான் கண்டிக்கவேண்டுமே அன்றி சிங்கள உழைக்கும் மக்களை அல்ல. அவர்களிடம் தமிழ் மக்களின் உரிமைகளை எடுத்துச் சொல்லி நம்பக்கம் தார்மீகமாகவாவது திரட்டுவதற்கு முயலவேண்டும். மாறாக அவர்களை நாமும் எதிரிகளாகப் பார்த்தால் அந்த மக்களை சிங்கள இனவெறியர்களிடம் நாமே ஒப்படைத்தாக மாறிவிடும்.//
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிங்களப் பொதுமக்களுக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது. தமிழன் செத்தா தனக்கென்ன என்று தானே இருக்கிறார்கள், அதை எப்படி இன உணர்வு அற்ற, இனவெறி அற்ற என்று உங்களால் கூற முடியும் ?
//சென்னையில் தேநீர்க்கடைகள் அத்தனையிலும் எச்சில் கிளாஸ் கழுவும் மலையாளிகள் என தமிழர்களால் கேலிசெய்யப்படும் அந்த உழைப்பாளிகள்தான் உங்களுக்கு எதிரிகளா? தமிழனை விட மலிவான கூலிக்கு கேபிள் வழிகளுக்கான குழிகளைத் தோண்டும் கன்னட உழைப்பாளிகளை காவிரி பிரச்சினைக்காக நாமும் எதிரிகளாகத்தான் பார்க்க வேண்டுமா?//
சென்னையில் மலையாளிகளை திட்டும் ஒரு சிலரை மட்டும் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், அவர்களிடம் எடுபிடியாக இருக்கும் தமிழ் சிறுவர்களை எப்படியெல்லாம் மலையாளிகள் கேவலமாக பேசுவார்கள் என்று தெரியுமா ?
சாக்கடை அள்ளுபவர்கள் கருநாடகத்தவர் அல்ல, கன்னடம் பேசுபவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வாழ்பவர்கள். தாய்மொழி மட்டுமே கன்னடம், எனவே அவர்களை கருநாடகத்தவராக தாங்கள் நினைப்பது தவறு. ஆனால் எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும். மலையாளிகள் தங்களை தமிழகத்தவர் என்று கூறிக் கொள்ள மாட்டார்கள்.
// இந்த தேர்தலில் திமுக கூட்டணி தோற்ற தொகுதிகளில் எல்லாம், ஈழப் பிரச்சினையால் தான் தோற்றது என்பது வரட்டு வாதம்//
உண்மை. ஒத்துப்போகிறேன் 100 சதம்.
இன்னும் சொல்லப்போனால், தனி ஈழம் பற்றிப் பேசியதால்தான் ஜெயாவிற்கு வாக்குகள் குறைந்தது.
பாமகவும், வைகோவும் மண்ணைக் கவ்வியதற்கு அதே காரணம். LTTEஐ ஆதரித்தால், தமிழகமும் பயங்கரவாதிகளின் களமாகும்.
இந்தியா முன்னேற்றம் அடையவேண்டும், தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டுமேயன்றி அண்டை நாட்டு விவகாரங்களெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
போகும் இடமெல்லாம் தமிழன் அடி வாங்குகிறான் என்ற கருத்தே முட்டாள்தனமான பிரச்சாரம்தான்.
தமிழன் என்னையும் விட குறைந்தவனில்லை! அவன் இளிச்சவாயனும் இல்லை!!
தெலுங்கனுக்கும், மலையாளிக்கும், கன்னடனுக்கும், மராட்டிக்கும், குஜராத்திக்கும் எந்த அளவு 'இன உணர்வு' இருக்கோ அதே அளவுதான் பாமரத் தமிழனுக்கும் இருக்கிறது என்பது தான் உண்மை!!!
கோ.க
//சாக்கடை அள்ளுபவர்கள் கருநாடகத்தவர் அல்ல, கன்னடம் பேசுபவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து வாழ்பவர்கள். தாய்மொழி மட்டுமே கன்னடம், எனவே அவர்களை கருநாடகத்தவராக தாங்கள் நினைப்பது தவறு. ஆனால் எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும். மலையாளிகள் தங்களை தமிழகத்தவர் என்று கூறிக் கொள்ள மாட்டார்கள்.//
சாக்கடை அள்ளுபவர்கள், நகரசுத்தி வேலை செய்பவர்களில் தெலுங்கு பேசும் மக்களும், கன்னடம் பேசும் மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் இங்கே நெடுங்காலமாக வாழ்ந்து வருவதால் அவர்களை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த வேலைகளை இன உணர்வு மிக்க தமிழர்களை கொண்டு செய்தால் தமிழனது இன உணர்வு பூர்த்தி அடையும்.
நான் இவர்களைப் பற்றி எழுதவில்லை. கர்நாடகத்திலிருந்து கடின உழைப்பிற்காக இப்போது கூட்டிவரப்படும் மக்களைப்பற்றித்தான் எழுதினேன். மேலும் தற்போது சென்னையில் இத்தகைய வேலைகளுக்கு பீகார்,ஒரிசா,வடகிழக்கு,ஆந்திரா என பல இடங்களிலிருந்து வருகிறார்கள. இப்போது சென்னையின் இயக்கத்தில் முழு இந்தியாவுமே உள்ளது. இந்த உழைக்கும் மக்களைத்தான் உங்களைப் போன்ற மென்மையான இன உணர்வு கொண்ட நண்பர்கள் எதிரிகளாகப் பார்ப்பது வருத்தமளிக்கிறது.
//சென்னையில் மலையாளிகளை திட்டும் ஒரு சிலரை மட்டும் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், அவர்களிடம் எடுபிடியாக இருக்கும் தமிழ் சிறுவர்களை எப்படியெல்லாம் மலையாளிகள் கேவலமாக பேசுவார்கள் என்று தெரியுமா ?//
தெரியும், அதுமட்டுமல்ல தென்மாவட்டங்களிலிருந்து வரும் சிறுவர்கள் சென்னையில் செட்டிலாகியிருக்கும் அண்ணாச்சிகள் உங்கள் பார்வையில் தமிழர்கள் எப்படி அடிமை போல நடத்துகிறார்கள் என்பதும் சென்னையில் மற்ற இனத்தவரிடம் வேலை பார்க்கும் சென்னையைச் சேர்ந்த சேரி மக்கள் தமிழனிடம் மட்டும் வேலை பார்க்கக் கூடாது என்று வலியுறுத்துவதும் தெரியும்.
நண்பரே இப்படி சிறுவர்களை அடிமையாக நட்த்துவது ஒரு சிறு தொழிலை செய்யும் எல்லா இனத்தவருக்கும் உள்ளதுதான். அதில் மலையாளிகளை மட்டும் ஸ்கேன் செய்து பார்ப்பது என்ன இன உணர்வு?
திருப்பூரில் பனியன் தொழிலில் முதலாளிகளாக இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அங்கிருக்கும் எல்லா சாதியையும் சேர்ந்த தொழிலாளிகளை ஆடு மாடு போல நடத்துவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள? தமிழன் என்பதால் அவன் மனிதாபிமானியாக இருப்பான் என்று இன உணர்வாளர்கள் விரும்பலாம். ஆனால் சாதிகளாகவும், வர்க்கமாகவும் இருக்கின்ற தமிழனின் நடத்தையை இனம் என்ற உண்மை நிச்சயம் தீர்மானிக்காது.
வினவு
தேர்தலில் பணம் விளையாண்டதுன்னு சொல்லித் தப்பிக்கிறது சரியான வழியாத் தெரியலை. அதை வாங்குனவங்க ஏன் வாங்குனாங்க? அப்படி வாங்கீட்டுப் போடுறவங்களுக்கு இந்த முடிவுகள் போதும்.
இன்னொன்னையும் நினைச்சுப் பாக்கனும். திமுகவை எதிர்க்க வேண்டியது அவசியமான ஒன்னுதான். ஆனா அதுக்காக ஜெயலலிதாவுக்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? திடீர் ஞானோதயம் வந்து பேசுறதால அவரை நம்ப முடியுமா?
திமுகவோ அதிமுகவோ... ரெண்டு பேரும் கொள்ளையடிக்கத்தான் போறாங்க. தனி ஈழம் பேசுன ஜெயலலிதா இப்போ எங்கே? உண்மையிலேயே ஈழ அக்கறை இருந்தா இன்னமும் ஈழத்தப் பத்திப் பேசனுமே! ஏதாச்சும் செய்யனுமே! எங்க போனாங்க?
எப்படி ஜெயலலிதா எதிர்ப்புங்குறது கருணாநிதி ஆதரவா மாற முடியாதோ... அதே மாதிரி....கருணாநிதி எதிர்ப்ப்புங்குறது ஜெயலலிதா ஆதரவாகவும் மாற முடியாது.
ரொம்பக் கஷ்டங்க. ஜெயலலிதா ஜெயிக்கலைன்னு சந்தோசப்படுறதா கருணாநிதியும் சோனியாவும் தோக்கலையேன்னு வருத்தப்படுறதான்னு தெரியலை.
//நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிங்களப் பொதுமக்களுக்கு எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது. தமிழன் செத்தா தனக்கென்ன என்று தானே இருக்கிறார்கள், அதை எப்படி இன உணர்வு அற்ற, இனவெறி அற்ற என்று உங்களால் கூற முடியும் ?//
முல்லைத்தீவில் சாகும் தமிழனுக்காக ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக வாழும் யாழ்ப்பாணத்து தமிழன், கிழக்கு மாகாணத்தமிழன், மலையகத்தமிழன், கொழும்புத் தமிழன் முதலான தமிழர்களும் போராடவில்லை என்பதால் இவர்களும் எனக்கென்ன என விட்டேத்தியாக வாழ்கிறார்கள் என எடுத்துக் கொள்ளமுடியுமா?
அப்படி இல்லை, இவர்களை அணிதிரட்டி சிங்கள இனவெறி அரசுக்கெதிராக போராடுவதற்கான வலிமையான கட்சிகள் எதுவும் அங்கில்லை எனக் கூறலாம். அதே போலத்தான் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் அலத்தை எடுத்துச் சொல்வதற்கு கட்சிகள் இல்லை எனில் அந்த வேலையை ஈழ ஆதரவாளர்கள்தான் முடிந்த அளவு செய்ய வேண்டும். அதெல்லாம் முடியாது சிங்கள மக்கள் அவர்களாகவே உணர்ந்து போராட வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் நாம் இவ்வளவு பிரச்சாரம் செய்துதானே ஒரளவாவது விழிப்புணர்வை எழ வைத்தோம்? தமிழர்களே உணர்ந்து போராட வேண்டுமென்றால் அது எப்படி நடக்கும்? சொந்த இனத்திற்கே இவ்வளவு பிரச்சாரம் செய்தும் நோக்கம் நிறைவேறவில்லை என்றால் சிங்கள இனவெறிகட்சிகளிடன் சிக்கியுள்ள மக்களை வென்றெடுப்பதற்கு எவ்வளவு செய்ய வேண்டும்? இதை கருத்தளவில் கூட ஏற்கமுடியாது என்றால் தமிழனுக்காக மற்ற நாட்டு மக்களிடமெல்லாம் எடுத்து சொல்வேன் சிங்கள மக்களிடம் மட்டும் சொல்லமாட்டேன் என்றால் இழப்பு நமக்குத்தான்.
வினவு
//இன வெறிக்கும், இன உணர்வுக்கு ஒரே வேறுபாடு கூட்டமாக கல்லெறிவதற்கும், கூட்டமாக எதிர்பதற்கும் உள்ள வேறுபாடு மட்டும் தான். இன வெறியின் மிதவாதம் இன உணர்வு. ஆனால் இவற்றில் ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இல்லை, வேண்டுமென்றால் இனம் என்பதற்கு பதிலாக சாதி, மதம், மொழி இருக்கும்.//
கோவிலுக்கு அருகில் அக்ரகாரத்தில் குடியிருக்கும் ஒரு பார்ப்பானும், ஊருக்கு வெளியே சேரியில் குடியிருக்கும் ஒரு பறையரும் மதத்தால் இந்துக்கள் என்று அழைக்க முடியுமா?
ஊடகமுதலாளியாக வலம்வரும் சிவந்தி ஆதித்தனும், தினத்தந்தி ஆபிசில் வெளியே காவலுக்கு நிற்கும் காவலாளியும் சாதியில் நாடார்கள் என்பதால் சரிசமமா?
ஆர்.எஸ்.எஸ்இன் புரவலாரகவும், சைவம் பரப்புவராகவும், முதலாளியாகவும் இருக்கும் பொள்ளாச்சி மகாலிங்கமும், நிலமின்றி கூலிக்கு வெலை செய்யும் ஒரு விவசாயியியும் தமிழர்கள்தான் என சேர்க்க முடியுமா?
ஆக சாதி,மதம்,மொழி,இன்ப்போர்வையைக் கலைத்துப்பார்த்தால் அங்கே எதிரும் புதிருமாக ஏழையும், பணக்கார்ரும்தான் இருக்கிறார்கள். இதில் பணக்காரர்களுக்கு வேண்டுமானால் இந்த இன,மொழி,சாதி,மத உணர்வுகள் அதுவம் ஏழைகளை ஏமாற்றுவதற்கு என்பதால் பயன்படலாம். ஆனால் ஏழைகளுகு இந்த அடையாளங்கள் தேவையில்லை. மாறாக இவற்றைக் கடந்து அவர்கள் ஒன்றிணைவதன் மூலமே தங்களின் விடுதலையை அடையமுடியும்.
வினவு
உங்களுக்கான பதிலாக என்னால் இதைமட்டுமே சொல்ல முடியும்.
இதை நான் ஒட்டு பதிவிற்கு முந்தைய நாள் பதிவிட்டு
எனக்கு கிடைத்த தகவல் படி முப்பத்தி ஒன்று என்றும் ///
///
///
//இலங்கைத்தமிழர்களை "கிபேர்"குண்டுகளை போட்டு கொத்து,கொத்தாக கொல்கிறார்கள்.இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன என்று கேட்ட போது,போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று சண்டாலத்தனமாக ஜெயலலிதா சொல்லி அனைத்து பத்திரிக்கையிலும் செய்தியாக வந்ததை ஈழத்தமிழர்களுக்காக உருகும் ஈன தமிழர்கள் எளிதாக மறந்து விட்டார்கள். ஜெயலலிதா ஜெயித்தவுடன் இலங்கைக்கு படையை அனுப்பி "ராஜபக்சேவை"கைது செய்து கொண்டுவந்து தமிழ் நாட்டில் வைத்து தூக்கில் ஏற்றிவிடுவார்.
அதன் பின் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வாங்கித்தந்து விடுவார் என்று இவர்கள் நம்புகிறார்கள். கொடுமை !!!!
பிரபாகரன் எல்லாம் ஒரு தலைவனா என்று இந்த ஜெயலலிதா கேட்டதற்கு இதே சீமான் -ஆயிரம் துப்பாக்கிகளை பார்த்து தலைவரானவர் என்தலைவர்
"பிரபாகரன்" நீ எதைப்பார்த்து தலைவி ஆனாய் என்று அவருக்கு பதில் சொன்னார்.
அதே சீமான் இன்று அந்த ஜெயலலிதாவுக்கு மகன் என்று போது மேடையில் பெருமை கொள்கிறார்.வெட்கம் ! பாரதி ராஜா மேடையில் பேசுவதை விட்டு,விட்டு முதலில் கலைஞர் டிவியில் வரும் தெக்கத்தி பொண்ணு சீரியலை நிறுத்தட்டும். நாளை ஓட்டு போட போகும் போது தெளிவாக முடிவெடுங்கள்.பாமக தலைவர் ஈழ தமிழர்களுக்காக ஜெயலலிதாவுடன் கூட்டு வைக்க வில்லை.ஏழு சீட்டுக்காக வைத்தவர்.ஜெயலலிதா தமிழர்களின் பரம்பரை எதிரி. மற்றும் இவர்கள் கூட்டணியில் உள்ள மதிமுக ,கம்யூனிஸ்டுகள் ஆகியோர் பாவப்பட்ட ஜீவன்கள். கலைஞர் ,காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள்.
இவர்களில் பேய் ,பிசாசு இரண்டும் இருக்கும் போது கொஞ்சம் நல்லதை தேர்ந்தெடுங்கள் .பிசாசை தேர்ந்தெடுத்து சொந்த முயற்ச்சியில் சூனியம் வைத்து கொள்ளாதீர்கள்.
நிச்சயமாக மறுபடி கலைஞர் ஜெயித்தால் நன்றியுடன் ஈழத்தமிழர்கள் விசயத்தில் முழு முயற்ச்சி எடுப்பார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
முப்பத்தி ஒன்று!
/
ஈழத்தில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கும்
காங்கிரஸ் அரசு - இராஜபக்சே அரசு ஆகியவற்றிற்கும் வாழ்த்துகள் !/
/ஈழத்தில் வீழ்ந்த, கொலை செய்யப்பட்ட,
வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே !
இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால்,
இனி எடுக்கும் எந்த பிறவியிலும்
ஒரு தமிழனாகவே பிறக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் !/
இது என்னுடைய நிலையும்
என்னுடைய அவாவும்
மனிதம் செத்துவிட்ட நிலை
மரிக்கும் மனிதரைப் பற்றி எழுதி
மனம் தான்
மரத்துவிட்டது.
வாழ்க தமிழன்
இன்னும் உயிருடன்
இருந்தால்
இதற்கு மேல் சொல்ல விரும்ப வில்லை
நன்றாக சொன்னீர்கள் கோவி.கண்ணன்.
//நாளை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழக தமிழனை செருப்பால் அடித்து துறத்திவிட்டு தமிழகத்தை ஆக்கிரமித்தால் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானது என்றே நினைத்து கொண்டு இருந்துவிடுங்கள். ஏற்கனவே தமிழன் கர்நாடகம், மலேசியா ஆகிய நாடுகளில் செருப்படி படும் போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து பழகி இருக்கிறோம். நீங்கள் தமிழ், தமிழுணர்வு என்றெல்லாம் பெரிய பெரிய எதிர்ப்பையெல்ல்லாம் மூட்டைக் கட்டிவிடுங்கள்.//
தேர்தலுக்கு முன் வீசும் சில எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்டும் அடிமை வாழ்வை போற்றியும் தமிழன் வாழும் வரை எங்கும் செருப்படிதான். தன் வீட்டுக்குள் ஒரு பிரச்சினை வரும் வரை சும்மா இருந்துவிட்டு அப்புறம் குத்துது குடையுதுன்னு சொல்வது எப்போ மாறும்?
//10 தொகுதிகள் வரை கிடைத்திருப்பது திமுக கூட்டணியின் செயல்பாடுகளில் அதிருப்தி அலை வீசி இருப்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.//
கூட்டணி பலமும் காரணம் அல்லவா? போன முறை தேமுதிக கிடையாது.. பாமக இஅவர்கள் பக்கம்.. இருப்பினும் மக்களிடையே கொஞ்சம் அதிருப்தி நிலவுவது உண்மைதான். ஆனால் எனக்கென்ன்வோ தமிழ் நாட்டு மக்களுக்கே ஈழ்ப் பிரச்சினையில் ஆரவமில்லை என்றே காட்டுகிறது. அபப்டி இருந்தும் ஜெவை நம்பாமல் திமுகவிற்கு வாக்களிந்த்திருந்தால் மக்கள் யொசிக்கிறார்கள் என்று அர்த்தம்.
சீமான், சுபவீ, நெடுமாறன் தெரிந்துக் கொள்ளடும்
//கைகொடுத்து தூக்கவிட முடியாமல்
கண்ணை மூடிக்கொண்டு விட்டோம்..//
கண்ணை மூடித் தூங்கி விட்டோம்.
Mr. Kannan!!!
I request you to consider and analyse every issue on the basis of rationals. Not on the basis of emotions.
People like you (those who are working abroad and earning in $$) are easily forget the ground reality in rural tamilnadu. After 63 years of Independence, tamilnadu is still lacking of drinking water, roads, schools, hospitals etc. But you guys are very much worried about sri lankans and supporting terrorists (who is not interested in mainstream politics and continuing the war and sacrificing their own community).
Hence, I peg you to consider for rational approach rather than emotional approach in sri lankan issue.
Do not yield to any video / photos published by either of Sri Lankan Government or your favorite LTTE.
I hope I am not hurt you.
//எனக்கென்ன்வோ தமிழ் நாட்டு மக்களுக்கே ஈழ்ப் பிரச்சினையில் ஆரவமில்லை என்றே காட்டுகிறது. அபப்டி இருந்தும் ஜெவை நம்பாமல் திமுகவிற்கு வாக்களிந்த்திருந்தால் மக்கள் யொசிக்கிறார்கள் என்று அர்த்தம்.
சீமான், சுபவீ, நெடுமாறன் தெரிந்துக் கொள்ளடும்//
Exactly... YOU are RIGHT Karki. This is the reality. Tamilnadu people have tons & tons problem.
Further, there is no UNITY among the displaced Sri Lankan People themselves in Tamil Elam issue. How we can expect the same from Tamilnadu and its people?
ஜெய் ஹோ!
//வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே ! இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், இனி எடுக்கும் எந்த பிறவியிலும் ஒரு தமிழனாகவே பிறக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் !//
ஏன் இப்படி நெகடீவா திங்க் பண்றிங்க!
வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே ! இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், இனி எடுக்கும் எந்த பிறவியிலும் ஒரு தமிழனாகவே பிறக்க வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள்!
அப்பிறவியிலாவது நாம் தனீஈழம் கண்டு மடிவோம்!
கருத்துரையிடுக