கோவியார் கூற்று !

தமக்கு தேவையற்றதும் அங்கே இருக்கிறது என்பதற்காக பல்பொருள் கடைகளில் குப்பைகளும் நிறைந்துள்ளதாகக் கூற முடியாது.

பிரபாகரன் மீண்டும் வருவாரா ?

Monday, May 25, 2009

போர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்

இதை உளவுத்துறைகள் மூலம் அறிந்து கொண்ட சிங்கள அரசு போர் செய்து அந்த பகுதிகளை கைப்பெற்ற திட்டம் தீட்டி இருக்கலாம்

ஈழக்கனவு நிறைவேறத சூழலில் பிரபாகரன் மரணத்தை வெளியே கசியவிட வேண்டாம் என்று விடுதலை புலிகள் தரப்பு பொட்டு அம்மன் தலைமையில் செயல்பட்டு இருக்கலாம்

போரில் வெற்றி என்பதை வழியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை இராணுவத்திற்கு பிரபாகரன் 'உடல்' தேவைப்பட்டு இருக்கிறது, அதைக் காட்டியும் இருக்கிறார்கள். ஏற்கனவே பிராபகரன் மரணம் அடைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அமைப்பு அதை வெளிப்படுத்த திணறும் என்பதைக் காரணமாக வைத்து பிரபாகரனின் 'உடலை'க் காட்டினார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

புலிகள் பிரபாகரனின் இறப்பை காலம் சென்று உறுதிப்படுத்துவது ஏன் ?

பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.

பிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.

எது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.

இன்னும் சில விடுதலை புலிக்களின் குழுக்கள் பிரபாகரன் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா ?

நடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்.

மற்றபடி பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே. அப்படி நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்.

34 கருத்துக்கள்:

  • VJ
     

    govi,

    During war time have u seen the photo of praba taken with colombo sucide attack pilots?

    I believe ur assumption of earliest dead of praba is less chance

  • TBCD
     

    அண்ணே...வேண்டாம்..வலிக்குது அழுதுடுவேன் !!

  • தீப்பெட்டி
     

    எக்கசக்க யூகங்கள் இருக்கின்றன..

    எதையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள் ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்களும்..

    காலம் பதில் சொல்லப்போவதில்லை..
    சுபாஸின் காலத்திலேயே அது கண்ணை மூடிவிட்டது..

  • வாசுகி
     

    //பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம்.//
    ஆமாங்க. இதுவரையான காலமும் நீரிழிவு நோயோடு இருந்து போரிட்டவர். இப்ப தான் இயற்கை மரணம் அடைந்திருப்பார்.
    கடைசியாக விமானப்ப்டையினருடன் எடுத்த படமும் கிரபிக்ஸ் தான்.

    படித்த உங்கள் போன்றவராலேயே ஈழ மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை. பிறகு...

    முடிந்த அளவுக்கு குத்துங்கள். இன்னும் தாங்க எங்களிடம் உயிர் இருக்கிறது மிச்சமாக.

    அத்தோடு சாலமன் பாப்பையாவை கூப்பிடுங்க.
    இயற்கை மரணமா? இல்லையா என ஒரு பட்டிமன்றம் வைப்பம்.

  • நையாண்டி நைனா
     

    உள்ளேன் ஐயா

  • Vishnu
     

    ஏன் எங்களை இன்னும் இன்னும் வருத்துகிறீர்கள்..
    அவர் எப்படி இறந்தால் உங்களுக்கென்ன?

    அந்தந்த நேரத்துக்கு எதை எழுதினால் ஹிட்ஸ் வரும் என்று தான் எழுதுகிறீர்கள் நீங்கள்.. அதற்காக எங்கள் தலைவனை அவரது இறப்பை வைச்சு அலசாதீங்கள்..

    எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதாமல் பொத்திக் கொண்டு இருங்கள்...

    நீங்கள் எழுதுவதற்குத் தான் உங்கள் கோமாளி அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் இருக்கிறார்களே..

    அவர்களைப் பற்றி எழுதுங்கள்..
    எங்களை எங்கள் தலைவனை வைத்துப் பிழைப்பு நடத்தாதீங்க...

    உங்களுக்கெல்லாம் எங்கள் தலைவன் எப்படியோ எங்களுக்கு அவர் தலைவர் மட்டுமல்ல...

    எங்கள் தலைவன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் அனாதைகளாப் போன நிலையில் இருக்கும் எங்களை வைத்து எங்கள் தலைவனை வைத்து கேவலமான பிழைப்பு நடத்திறிங்களே.. வெட்கமா இல்லை...

    வேறு நாட்டுத் தலைவர்களைப் பற்றி தமிழில் எழுதினால் அவன் வந்து படிக்கப் போறதில்லை..

    உங்கள் கருமாந்திரங்களையெல்லாம் நாங்கள் படித்துத் தொலைக்கிறோமே...

    எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டீர்களா?

  • கோவி.கண்ணன்
     

    விஷ்ணு,

    பிரபாகரன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் நான் எதையும் எழுதவில்லை, விடுதலைப் புலிகளின் தலைமைதான் பிரபாகரன் இறந்தார் என்று அறிக்கை கொடுத்து ஒருவார துக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று வழியுறுத்துக்கிறார்கள்,

    தமிழுணர்வாளர்கள் மட்டும் தான் அதையெல்லாம் நம்பவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா ?

  • முகமூடி
     

    // பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு //

    வைகோ, சுற்றி உட்கார்ந்து இருக்கும் சிப்பிப்பாறை மற்றும் கோஷ்டியிடம் - இந்த தேர்தல்ல ஊரே சேந்து நம்மோட நடு முதுக பிளந்து ரத்தம் கொட்ட கொட்ட அடிச்சாலும் ஊருக்குள்ள இப்பிடி நாலு பேரு இருந்துகிட்டு இன்னமும் நம்மள நம்புறாய்ங்களே... இவிங்க ரொம்ப நல்லவங்க போலருக்குடா ஊஊஊ...

  • கோவி.கண்ணன்
     

    //VJ 2:34 PM, May 25, 2009
    govi,

    During war time have u seen the photo of praba taken with colombo sucide attack pilots?

    I believe ur assumption of earliest dead of praba is less chance
    //

    அது தீவிரமாக சண்டை நடந்த நேரமும் அல்ல.

  • கோவி.கண்ணன்
     

    //ஆமாங்க. இதுவரையான காலமும் நீரிழிவு நோயோடு இருந்து போரிட்டவர். இப்ப தான் இயற்கை மரணம் அடைந்திருப்பார்.
    கடைசியாக விமானப்ப்டையினருடன் எடுத்த படமும் கிரபிக்ஸ் தான்.

    படித்த உங்கள் போன்றவராலேயே ஈழ மக்களின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை. பிறகு...

    முடிந்த அளவுக்கு குத்துங்கள். இன்னும் தாங்க எங்களிடம் உயிர் இருக்கிறது மிச்சமாக.

    அத்தோடு சாலமன் பாப்பையாவை கூப்பிடுங்க.
    இயற்கை மரணமா? இல்லையா என ஒரு பட்டிமன்றம் வைப்பம்.//

    வெளி உறவுத்துறை விடுதலைப் புலிகள் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்ற பெயரில் மரணத்தை உறுதிப்படுத்து துக்கம் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் பிரபாகரன் இறக்கவில்லை என்று நம்பிக் கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் அந்த நம்பிக்கையை காக்க வேண்டிய அமைப்பே இப்படி ஒரு செய்தியை வெளி இடும் பொழுது பல சந்தேகங்கள் ஏற்படுகிறது.

    பிரபாகரன் மரணம் நிகழ்ந்திருந்தால் அது எதிரிகளால் ஏற்பட்டிருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம், அதைத்தான் எழுதி இருக்கிறேன்.

  • கோவி.கண்ணன்
     

    //Amal said...
    கோவி,
    இந்த மாதிரி லூசுத்தனமான அலசல்களை நிறுத்துங்கள். உங்களுக்கு மட்டுமல்லாமல் (லக்கி, அதிஷா அனைவருக்கும்) இதே மாதிரி (எல்லாம் தெரிஞ்சமாதிரி) எழுதும் போக்கை கைவிடுங்கள். அதுவே அனைவரையும் (தலைவரையும் சேர்த்து) காப்பாற்றிய மாதிரிதான்!!!
    //

    தகவலை புலி அமைப்பினர் தானே உறுதிப்படுத்தி இருக்கின்றனர், அதை மறுப்பது யார் ? நெடுமாறன், திருமா, வைகோ உட்பட ஈழ ஆதரவாளர்களா ? வெளிநாடுகளில் இருக்கும் புலி அமைப்பின் பொருப்பாளர்கள் முதலில் இல்லை என்றும் பிறகு ஆம் என்று மாற்றி மாற்றிப் பேசவேண்டும். ஒருவேளை இந்த செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள் என்றாலும் கூட ஊடகங்களுக்கு புலிகள் தரும் செய்திகள் பொய்யானவை என்பதற்கு முன் உதாரணமாக அமைந்துவிடாதா ?

  • கோவி.கண்ணன்
     

    //முகமூடி said...
    // பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு //

    வைகோ, சுற்றி உட்கார்ந்து இருக்கும் சிப்பிப்பாறை மற்றும் கோஷ்டியிடம் - இந்த தேர்தல்ல ஊரே சேந்து நம்மோட நடு முதுக பிளந்து ரத்தம் கொட்ட கொட்ட அடிச்சாலும் ஊருக்குள்ள இப்பிடி நாலு பேரு இருந்துகிட்டு இன்னமும் நம்மள நம்புறாய்ங்களே... இவிங்க ரொம்ப நல்லவங்க போலருக்குடா ஊஊஊ...
    //

    அப்படிப் பார்க்காவிட்டாலும் கூட மணிசங்கர் ஐயரின் வேட்டியை உருவி இருக்கிறார்களே.

  • Vishnu
     

    சரி.. அவர் இறந்து தான் விட்டார்.. அது உண்மை தான்..
    அதுக்காக நீங்க கேவலப் பிழைப்பு நடத்தாதீங்க..

    எதை வைச்சு எண்டாலும் அப்பிடி இருக்கலாமா இப்பிடி இருக்கலாமா என்று எழுதுங்கள்.. எங்கள் தலைவனை வைத்து எழுதாதீர்கள்..

    இதை type பண்ணும் போதே அடுத்தவன் என்ன எழுத வேண்டும்.. வேண்டாம்.. என்று சொல்ல நான் யார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது..

    மன்னிச்சுகோங்க..

    உங்கள் ஊகங்களையும் அரைகுறை அறிதல்களையும் வைச்சு நல்லா எங்களை காயப்படுத்துங்கள்..

    நன்றி...

  • கோவி.கண்ணன்
     

    //Vishnu said...
    சரி.. அவர் இறந்து தான் விட்டார்.. அது உண்மை தான்..
    அதுக்காக நீங்க கேவலப் பிழைப்பு நடத்தாதீங்க..
    //

    இங்கே எழுத்துக்கு யாரும் சன்மானம் கொடுக்கவில்லை, தன்மானமும் நேரமும் தான் போகுது.

    //எங்கள் தலைவனை வைத்து எழுதாதீர்கள்..
    //

    இது போல் தான் தமிழகத்தில் சுதந்திர போராட்ட பெரும் தலைவர்களையெல்லாம், அவர்களுக்கு பிறகும் இவர் எங்களுடைய சாதியை சேர்ந்தவர் என்று கூறி அவர்களுக்கு சொந்தமானவர்களாகும், பொதுமக்களிடம் இருந்தும் விலக்கி வைத்தார்கள்.

    வீரகேசரி, ஈழமுரசு ஏன் லங்கசிறி வெப்தளத்தில் பிரபாகரன் பற்றி எழுதாத ஒன்றையா நான் எழுதிவிட்டேன் ?

    இந்தப் போர் நடக்கும் முன்பே ஈழம் தொடர்பில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஈழம், தமிழ் ஈழம் என்ற சொற்களால் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது


    //உங்கள் ஊகங்களையும் அரைகுறை அறிதல்களையும் வைச்சு நல்லா எங்களை காயப்படுத்துங்கள்..

    நன்றி...
    //

    ஒருவேளை மரணம் ஏற்பட்டிருந்தாலும் கூட உண்மையிலேயே அஞ்சலி செலுத்த நினைத்தவர்களையும், நினைவைப் போற்றுபவர்களின் செயலை தடுக்கும் விதமாக மரணம் பற்றி முன்னுக்கு பின் தகவல்களைப் பரப்பி வரும் புலித்தலைமையின் மீது என் போன்றவர்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்படத்தான் செய்கிறது.

  • Vishnu
     

    எழுத்துக்கு சன்மானம் கொடுக்கல தான்... ஹிட்ஸ் வேணுமே உங்களுக்கு,.. இந்தப் பதிவை பார்த்து மட்டும் நான் comment போடல.. நீங்கள் போடுற பதிவுகளை பார்த்துக் கொண்டு தான் வாறன்...

    வலையுலகத்தில் எந்த நேரம் எதை எழுதினால் எங்க பதிவுக்கு வருவார்கள் என்று நல்லாக் காலம் கணிக்கிறிங்க.. சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களுக்கு அந்த cheap publicity தேவைப்படுது..

    கருணாநிதியை எதிர்த்ததாகட்டும்.. முந்தைய ஈழம் பற்றிய பதிவுகளாகட்டும்.. பெரும்பாலானவை இப்படித் தான்.. அந்த நேர trend எது என்று சட்டென பிடித்தக் கொள்கிறீர்கள்...

    அதில் தப்பேதும் இல்லை.. அப்போதைய பிரச்சினைகளை விடயங்களை எழுதுவதில்.. கதைப்பதில்.. முழுசா தெரிஞ்சு கொண்டு எழுதுங்கள்..
    அரைகுறையா ஊகங்களை வைச்சு எழுதாதீங்க..
    இல்லையா.. பொத்திட்டு ஓரமா உக்காருங்க..

    ஆமா.. தலைவன் எங்களவர் தான்.. எங்களுக்கு மட்டுமுரியவர் தான்.. என் தலைவனின் இன்றைய நிலைக்கு காரணமானவர்களை உங்கள் தலைவர்களாகக் கொள்ளும் நீங்கள் எங்கள் தலைவனைப் பற்றி பேச அருகதையில்லாதவர்கள்..


    எங்கள் தலைவனும் சாதாரண மனிதகுலத்தில் பிறந்தவர் தான்.. ஆனால் எங்களுக்கு அவர் கடவுள்... மனிதனாக அவர் இறந்தாலும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்...

    நாங்கள் கடவுளைக் கண்டதில்லை... எங்கள் தலைவனையும் கண்டதில்லை... கடவுளை நம்புவோர் எவ்வளவோ பேர் இருக்கும் போது எங்கள் தலைவன் இறக்கவில்லை என்பது தான் எங்களுக்கு உரம்...


    அவருக்குரிய மரியாதை மரியாதை செய்ய வேண்டியவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்..

    சந்தர்ப்பவாதிகளான நீங்கள் எங்கள் தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டாம்..

    //வீரகேசரி, ஈழமுரசு ஏன் லங்கசிறி வெப்தளத்தில் பிரபாகரன் பற்றி எழுதாத ஒன்றையா நான் எழுதிவிட்டேன் ?

    தகாத வார்த்தை பிரயோகம் செய்ய நான் விரும்பவில்லை.. தெரியவுமில்லை...

    விதண்டாவாதம் புரியாமல் முடிந்தால் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..

    இல்லையா? நன்றி வணக்கம்.. உங்க முயலுக்கு ஒரே ஒரு கால் தான்.. போதுமா?

  • முத்துகுமரன்
     

    நானும் அஞ்சலி தெரிவிச்சேனாக்கும் ஒப்பாரி வைத்தேனாக்கும் என்ற பட்டியலில் இடம் பெற மட்டுமே இந்த பதிவு உதவியாக இருக்கும். தயவு செய்து உங்கள் சாவுக்கூத்துகளை நிறுத்திக் கொள்ளுங்கள்.

  • திரு/Thiru
     

    கோவி.கண்ணன்,

    உங்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெருக்கும் ஆசை எனக்கில்லை.

    இப்போது பதிவர்கள் நடத்துகிற பிரபாகரன் பற்றிய ஆராய்ச்சிகள் சிறீலங்காவுக்கு உதவுவதை தவிர, ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.

    ஈழத்தமிழர்கள் மீது இந்தியாவும், இலங்கையும், உலக நாடுகளும் நடத்திய படுகொலையையும், வன்னியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் நீதியின் முன் நிறுத்தி விட்டு அதற்கு பிறகு பிரபாகரனையோ, யாரையோ தேடுங்கள். இப்போதைய கவனம் எங்கே போக வேண்டுமென்று அண்ணன் சுந்தரமூர்த்தி பதிவொன்று எழுதியிருந்தார். முடிந்தால் வாசியுங்கள். அதற்காக எதாவது செய்வோம்.

    மற்றது உங்கள் விருப்பம்.

  • கோவி.கண்ணன்
     

    //எழுத்துக்கு சன்மானம் கொடுக்கல தான்... ஹிட்ஸ் வேணுமே உங்களுக்கு,..//

    ஹிட்சை வைத்து நாக்கு கூட வழிக்க முடியாது ஐயா.

    // இந்தப் பதிவை பார்த்து மட்டும் நான் comment போடல.. நீங்கள் போடுற பதிவுகளை பார்த்துக் கொண்டு தான் வாறன்...
    //

    நல்லது.

    //வலையுலகத்தில் எந்த நேரம் எதை எழுதினால் எங்க பதிவுக்கு வருவார்கள் என்று நல்லாக் காலம் கணிக்கிறிங்க.. சொன்னாலும் சொல்லாட்டியும் உங்களுக்கு அந்த cheap publicity தேவைப்படுது..
    //

    விரும்பாத கருத்துக்கள் எழுதும் போது எல்லோரும் மறுக்கருத்தென்ற பெயரில் இப்படித்தான் cheap publicity சொல்கிறார்கள்.
    ஒத்த கருத்தென்றால் 10 ஜால்ராக்களுடன் வருவார்கள். நீங்கள் என்னுடைய மற்றப் பதிவுகளில் போட்டப் பின்னூட்டங்கள் எத்தகையது என இனிதான் நான் பார்க்க வேண்டும்.


    //கருணாநிதியை எதிர்த்ததாகட்டும்.. முந்தைய ஈழம் பற்றிய பதிவுகளாகட்டும்.. பெரும்பாலானவை இப்படித் தான்.. அந்த நேர trend எது என்று சட்டென பிடித்தக் கொள்கிறீர்கள்...

    அதில் தப்பேதும் இல்லை.. அப்போதைய பிரச்சினைகளை விடயங்களை எழுதுவதில்.. கதைப்பதில்.. முழுசா தெரிஞ்சு கொண்டு எழுதுங்கள்..
    அரைகுறையா ஊகங்களை வைச்சு எழுதாதீங்க..
    இல்லையா.. பொத்திட்டு ஓரமா உக்காருங்க.. //

    முழுசா தெரிஞ்சு கொண்டு கதைக்க வேண்டுமெனில் ஒருத்தரும் எழுத முடியாது, பதிவில் யாரு முழுசா தெரிஞ்சு கொண்டு கதைக்கிறார்கள் என்று அறியத்தரனும். நெடுமாறன் அவர்களும் முழுசா தெரிஞ்சு கொண்டுதான் கதைக்கிறார்களா ? பத்மநாபனுக்கு தெரியாதது நெடுமாறன் ஐயாவுக்குத் தெரியுமா ?

    நான் என்ன இங்கே கேவலமாகச் சொல்லிவிட்டேன் என்று சொல்லவும். மனிதன் மரணம், இது மகானாக இருந்தாலும் வரத்தான் செய்யும். நான் இங்கே எதிர்களின் கையில் சிக்கினார் அதனால் பலியானார் என்று சொல்லப்படும் எந்த கருத்தையும் ஆதரித்தோ, ஊகித்தோ எழுதவில்லையே.

    //ஆமா.. தலைவன் எங்களவர் தான்.. எங்களுக்கு மட்டுமுரியவர் தான்.. என் தலைவனின் இன்றைய நிலைக்கு காரணமானவர்களை உங்கள் தலைவர்களாகக் கொள்ளும் நீங்கள் எங்கள் தலைவனைப் பற்றி பேச அருகதையில்லாதவர்கள்.. //

    உங்கத்தலைவர் உங்களுக்குத்தான் என்று சொல்லுவது உங்கள் கருத்து, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்ததும் எட்டப்பனாக மாறியதிலும் உங்களவர்களுக்கே முழுப் பங்கும் இருக்கிறது, என்பதற்கு வெட்கப்படுகிறீர்களா ?


    //எங்கள் தலைவனும் சாதாரண மனிதகுலத்தில் பிறந்தவர் தான்.. ஆனால் எங்களுக்கு அவர் கடவுள்... மனிதனாக அவர் இறந்தாலும் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்... //

    நான் அதை இல்லை எண்டு சொல்லவில்லை.

    //நாங்கள் கடவுளைக் கண்டதில்லை... எங்கள் தலைவனையும் கண்டதில்லை... கடவுளை நம்புவோர் எவ்வளவோ பேர் இருக்கும் போது எங்கள் தலைவன் இறக்கவில்லை என்பது தான் எங்களுக்கு உரம்... //

    உரம் தான் அந்த உரத்தில் வெண்ணீர் ஊற்றியது யார் ? செல்வராசா பத்மனாபன், நீங்கள் நொந்து கொள்ள வேண்டுமென்றால், நானும் அந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டு நொந்து போனேன்.

    //அவருக்குரிய மரியாதை மரியாதை செய்ய வேண்டியவர்கள் மனதில் எப்போதும் இருக்கும்..

    சந்தர்ப்பவாதிகளான நீங்கள் எங்கள் தலைவனுக்கு மரியாதை செய்ய வேண்டாம்...//

    சந்தர்பவாதிகள் எண்டால் அரசியல் வாதிகளைச் சொல்லுங்கள் அப்படிப் பட்ட சந்தர்ப்பவாதிகள் இலங்கை அமைச்சரவையிலும் உண்டு. என்னைப் போன்றவர்கள் சந்தர்ப்பவாதியாக மாறினாலும் மாறாவிட்டாலும் ஒற்றைக் காசுக்குக் கூட பயனில்லை.

    //விதண்டாவாதம் புரியாமல் முடிந்தால் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..
    //

    உணர்வுகளுக்கு மதிப்புக் குறைவாக இங்கே அப்படி எதுவும் சொன்னது போல் தெரியவில்லை.

  • லக்கிலுக்
     

    அண்ணே!

    நீங்கள் எப்போதும் மத்தளமாக இருந்தே பழகிவிட்டீர்கள்! :-)

  • கோவி.கண்ணன்
     

    //திரு/Thiru said...
    கோவி.கண்ணன்,

    உங்கள் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெருக்கும் ஆசை எனக்கில்லை.

    இப்போது பதிவர்கள் நடத்துகிற பிரபாகரன் பற்றிய ஆராய்ச்சிகள் சிறீலங்காவுக்கு உதவுவதை தவிர, ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் தரப் போவதில்லை.

    ஈழத்தமிழர்கள் மீது இந்தியாவும், இலங்கையும், உலக நாடுகளும் நடத்திய படுகொலையையும், வன்னியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் நீதியின் முன் நிறுத்தி விட்டு அதற்கு பிறகு பிரபாகரனையோ, யாரையோ தேடுங்கள். இப்போதைய கவனம் எங்கே போக வேண்டுமென்று அண்ணன் சுந்தரமூர்த்தி பதிவொன்று எழுதியிருந்தார். முடிந்தால் வாசியுங்கள். அதற்காக எதாவது செய்வோம்.

    மற்றது உங்கள் விருப்பம்.
    //

    நேற்றே அதுபற்றிய இடுகையை எழுதி இருக்கிறேன்.

  • கோவி.கண்ணன்
     

    //திரு/Thiru said...
    ஈழத்தமிழர்கள் மீது இந்தியாவும், இலங்கையும், உலக நாடுகளும் நடத்திய படுகொலையையும், வன்னியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகளையும் நீதியின் முன் நிறுத்தி விட்டு அதற்கு பிறகு பிரபாகரனையோ, யாரையோ தேடுங்கள். இப்போதைய கவனம் எங்கே போக வேண்டுமென்று அண்ணன் சுந்தரமூர்த்தி பதிவொன்று எழுதியிருந்தார். முடிந்தால் வாசியுங்கள். அதற்காக எதாவது செய்வோம்.

    மற்றது உங்கள் விருப்பம்.
    //

    சூடான இடுகைகளை மட்டும் படித்துவிட்டு கருத்துக் கூறுபவர்கள் மற்றதில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கவில்லை என்றால் யாருடைய தவறு ? பதிவு எழுதியவரா ? படிப்பவரா ? ஆர்வக் கோளாறு யாருக்கு.

    குற்றம் சாட்டும் முன், அறிவுரைக் கூறும் முன் நமது செயலையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய இடுகையை நேற்று படத்துடன் போட்டேன் எத்தனை பேர் எட்டிப் பார்த்தார்கள் என்றே தெரியவில்லை.
    :(

  • கோவி.கண்ணன்
     

    // லக்கிலுக் said...
    அண்ணே!

    நீங்கள் எப்போதும் மத்தளமாக இருந்தே பழகிவிட்டீர்கள்! :-)
    //

    ஞானிக்கு பூணூல் போட்ட உங்களுடன் ஞானி அப்படி இல்லை என்று வாதம் செய்து அடிப்பட்ட நினைவு வருது.

    :)

  • லக்கிலுக்
     

    //ஞானிக்கு பூணூல் போட்ட உங்களுடன் ஞானி அப்படி இல்லை என்று வாதம் செய்து அடிப்பட்ட நினைவு வருது.
    //

    இதென்ன புதுக்கதை :-)

  • பனங்காட்டான்
     

    //பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு//

    வைகோ: இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்புது?
    கைத்தடி: அது அவனுங்க விதி!

    வைகோ: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்கப்பா...

  • வன்னியன்
     

    பிரபாகரனுக்கு நீரிழிவு என்று யார் சொன்னது?

    இன்றைய தேதியில் பிரபாகரன் சாவு/வாழ்வு என்பது நன்கு விலைபோகுமொரு சரக்கு. நக்கீரன் உச்சக்கட்டமென்றால் வலைப்பதிவுகள் அடுத்தகட்டம்.

    இதற்குள் வை.கோவினதும் பழ.நெடுமாறனதும் அவசரக் குடுக்கைத் தனம் அருவருக்கிறது. ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில் பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சில சக்திகள் தன்னிச்சையாகச் செயற்படுவது (இதற்குள் இதே அறிவுரையை இவர்கள் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்) வருந்தத் தக்கது.

    வை.கோவும் நெடுமாறனும் எப்போது தொடக்கம் விடுதலைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரிகளானார்கள் என்பதை யாராவது சொல்லுங்கள், அல்லது அவர்களாவது சொல்லட்டும்.

  • கோவி.கண்ணன்
     

    //இதற்குள் வை.கோவினதும் பழ.நெடுமாறனதும் அவசரக் குடுக்கைத் தனம் அருவருக்கிறது. ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில் பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு சில சக்திகள் தன்னிச்சையாகச் செயற்படுவது (இதற்குள் இதே அறிவுரையை இவர்கள் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்) வருந்தத் தக்கது.

    வை.கோவும் நெடுமாறனும் எப்போது தொடக்கம் விடுதலைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரிகளானார்கள் என்பதை யாராவது சொல்லுங்கள், அல்லது அவர்களாவது சொல்லட்டும்.//

    இதுதான் எனக்கும் புரியவில்லை. அவர்கள் ஈழ ஆதரவாளர்கள் என்பது தான் தெரியும். பத்மனாபன் அறிக்கையை மறுக்கும் அளவுக்கு புலித்தலைமையின் அறிவிப்பாளர்கள் போல் பேசி இருப்பது வியப்பாக இருக்கிறது.

    ஆனால் பிரபாகரன் குறித்து இவர்களாவது விரைவில் நல்ல , நம்பகத் தகவல்கள் சொல்லமாட்டார்களா என்று தான் என் போன்றோர்கள் எதிர்பார்க்கிறோம்.

  • தமிழர்ஸ் - Tamilers
     


    You Are Posting Really Great Articles... Keep It Up...

    We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

    www.Tamilers.com
    தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்று சேருங்கள்.

    அழகிய வோட்டு பட்டையும் இணைத்து அதிக வாக்கு பெறுங்கள்

  • ஆ.ஞானசேகரன்
     

    இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்...

  • பித்தன்
     

    //பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு//

    சும்மா தமாசு பண்ணாதிங்க கோவி, தமிழ்நாட்டுல உப்பு விலை குறைந்தது உங்களுக்கு தெரியாதா... அது அரசாங்கத்துக்குத்தான் புரியாதா..


    //பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே//

    நம்பிக்கைமட்டும் இல்ல, நூத்துக்கு தொநூருபேருக்கு மனசு ஒத்துக்காது... அவர் இறந்துட்டாருன்னு எத்துக்குரதுக்கு மூளைக்கே மனசு தடை விதிக்குது..

    நம்பிக்கையுடன் இருப்போம்

  • Amal
     

    This post has been removed by the author.

  • Amal
     

    நிகழ்வுகளைக் கண்டு மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்ததால் சற்று கடுமையான வார்த்தைகளை பின்னூட்டத்தில் பயன்படுத்திவிட்டேன். அதனால் அதை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்.

  • கோவி.கண்ணன்
     

    //Amal said...
    நிகழ்வுகளைக் கண்டு மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்ததால் சற்று கடுமையான வார்த்தைகளை பின்னூட்டத்தில் பயன்படுத்திவிட்டேன். அதனால் அதை நீக்கிவிட்டேன். மன்னிக்கவும்.

    4:33 AM, May 28, 2009
    //

    நீங்களும், விஷ்ணு ஐயாவும் உணர்ச்சி வசப்பட்டு பின்னூட்டமிட்டது புரிந்தது. அதனால் தான் தக்க பதில் சொல்வதைவிட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

    நன்றி !

  • கண்டும் காணான்
     

    ற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
    சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
    ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
    புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது
    இதயத்தில் சுடுகின்றது

  • MOSHE
     

    என்று பிரபாகரன் சக போரளிகளை தனது ஆயுதபலத்தால் அழித்தான் அன்றெ பிரபாகரன் செத்து விட்டான் இன்று செத்தது புலியிசம்
    ஏல்லாருக்கும் சயனட் குடுத்து வாழ்த்தி படம் எடுத்து அனுப்பி வைத்த மேதகு தனது முறை வரும் பொது மேலைத்தேச நாடுகளின் காலில் விழுந்து காப்பாத்த சொல்லி கதறல், நடெசனை வெள்ளைகொடியுடன் வெள்ளோட்டம் பார்த்தல்,கடைசியாக தன்னுடன் இருந்த 5 சிங்கள இராணுவத்தையும் விடுவித்து மண்டியிட்டது,கடைசியாக சரனடைய எல்லா நாடுகள்,ஐ நா ,வெக்கம் இல்லாமல் இந்தியாவிடம்,மானம் இல்லாமல் கடைசியாக epdp ம் மும் கேட்டதை எப்படி ஏற்பது..

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP