பின்பற்றுபவர்கள்

20 மே, 2009

ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது !

ஈழத்தில் போர் தொடங்கிய பிறகு நக்கீரன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,

"இவர்களே (இலங்கை அரசு) ஊடகங்களில் என்னைப் பற்றி ஊதிப் பெரிதாக்கி வைத்துவிட்டார்கள், அவர்கள் பயப்படும் அளவுக்கு நான் மிகப் பெரிய ஆளே அல்ல, நான் இளம் வயதில் மிகச் சாதாணமானவனாகத்தான் இருந்தேன், அப்போது கொழும்பில் இனவெறியில் என் கண் முன்னே பல தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு எதிராக கொதித்து கிளம்பினேன். தற்போதைய சூழலில், ஒருவேளை நான் எதிரியின் கைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டால் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை அழித்துவிட்டு அதன் பிறகு நானும் அழிந்துவிடுவேன். எரிக்கப்பட்ட என் உடலின் ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இயக்கத்தினரும் உறுதியாகவே உள்ளனர்"

என்று பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதைப் படித்த பிறகு பிரபாகரன் உயிருக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தொல்.திருமாவளவன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

******

இவ்வளவு தூரம் தன் முடிவும், அதைத் தொடர்ந்து நடக்கவேண்டியவைப் பற்றி இயக்கத்தினரிடம் விழிப்புணர்வு வைத்திருந்தவரை 'ஆம்புலன்சில் தப்பிக்கும் போது சுட்டதாக' இலங்கை இராணுவத்தகவல்கள் படம் போட்டு காட்டுகிறது. அந்தப்படத்தில்

* யுத்த களத்தில் பளபளவென சேவ் செய்யப்பட்ட முகம்

* கிட்டதட்ட 50 வயதுக்கும் மேலாகும் அவருக்கு நரையில்லா கருகரு மீசை, (ஷேவ் செய்யவே நேரமிருக்குமா என்று ஊகிப்பதே தலைவலியாக இருக்கும் போது, மீசைக்கு பொறுமையாக டை அடித்திருக்க முடியுமா ?

* தொலைகாட்சி வழியாக அண்மையில் 2008ல் மாவிரர் நாள் உரையில் பேசியபோது இருந்ததைவிட 20 வயது இளமையான தோற்றம்

இவை எல்லாம் எப்படி சாத்தியமா ? மொத்தமாக தலை, முகம், நிறம் ஆகியவற்றை மாற்றி புஷ் வேடம் போட்டு தோற்றத்தை மாற்றிக் காட்டிய தசவாதாரம் படத்தின் நடிகர் கமலைக் கேட்டால் எதாவது க்ளூ கொடுப்பார் என்றே நினைக்கிறேன்.

பிரபாகரன் போல் தோற்றம் இருப்பதால் அந்த படத்தில் இருபவருக்கும் கண்ணீர் அஞ்சலி !

மாவீரனுக்கு மரணமில்லை !

7 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

//அந்த படத்தில் இருபவருக்கும் கண்ணீர் அஞ்சலி !
//

ஏங்க அவரையும் முடிக்கிறீங்க? நடிச்சதுக்கெல்லாம் அஞ்சலியா?? அவ்வ்....


என்ன ஒரு இழிநாடகம்...

1989லயும் சட்டசபைல முதல்வர் சொன்னதுக்கப்புறம், மாணவர்களான நாங்க எங்க போராட்டத்தை நிறுத்தினோம்....

இப்பவும் முதல்வர் அது உறுதிப்படுத்தப்படாத செய்தின்னு சொல்லிட்டாரு... ஆகவே, இந்த விசயத்தை பொருட்படுத்துறத நிறுத்திட்டம்ல?!

மின்னுது மின்னல் சொன்னது…

yes..

ராஜபத்தே உரையில் பிரபாகரன் பற்றி ஒரு வரி கூட கூறாததும் சந்தேகத்தை வலுவாக்கிறது...!!!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//ஏங்க அவரையும் முடிக்கிறீங்க? நடிச்சதுக்கெல்லாம் அஞ்சலியா?? அவ்வ்....//

பழமை சொல்வதிலும் ஞாயம் இருக்கு..

மொத்ததில் எல்லொரையும் குழப்புகின்றனர்.
இந்திய உழவுத்துரையும் உறுதிப் படுத்தியதாகவும் செய்தி...

என்னானு சொல்வது என்றே புரியலபாஆஆஆஆஆ

பதி சொன்னது…

கோவி,

இது தொடர்பான மேலும் இரண்டு பதிவுகள்..

http://aalamaram.blogspot.com/2009/05/blog-post_19.html

http://www.luckylookonline.com/2009/05/blog-post_4924.html

கலகலப்ரியா சொன்னது…

//உடலின் ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இயக்கத்தினரும் உறுதியாகவே//

இதுதானுங்க..! முதல்ல செய்தி கேட்டதும் கொஞ்சம் இல்ல, ரொம்பவே கலவரமா போச்சு.. அப்புறம் உடல் கிடைச்சதுன்னு சொன்னதும், அப்பாடா அப்டி எதுவும் இல்லைன்னு நிம்மதியாச்சு.. இத உறுதிப்படுத்தின சிங்களத்துக்கு நன்றி!

மகேந்திரன் சொன்னது…

இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

மகேந்திரன் சொன்னது…

இன்று இரவு தேசியத்தலைவருடன் உரையாடல் நடத்த தொலைக்காட்சிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ராஜ் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எதிர்பாருங்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்