காலத்தில் தேட...

சுதர்சனத்தின் நிதர்சனம் !

Thursday, May 28, 2009

வழக்கமாக இளங்கோவன் கிளப்பும் 'ஆட்சியில் பங்கு' பீதியைத் தற்போது காங்கிரசின் தமிழக சட்டப் பேரவை தலைவர் சுதர்சனமும் கிளப்புகிறார். இனி திமுக முரண்டு பிடித்தாலும் காங்கிரசின் மைய அரசுக்கு பாதிப்பு இல்லை என்பதால் சட்டப்பேரவை அமைச்சர் அவையில் இடம் பெறும் கோரிக்கை வலுத்துவருகிறது. கடந்த 5 ஆண்டுகள் அடக்கி வாசித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு பங்கு கேட்பது காங்கிரசின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இது தேவைதான். டெல்லிக்கு படை எடுத்த கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு அமைச்சர் பதவி அறுவடை கிடைக்கததால் முன்கூட்டியே சென்னைக்கு திரும்பினார். வெளியில் இருந்து ஆதரவு என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒண்ணும் இல்லை என்பதற்கு பதிலாக எதோ கிடைக்கிறது என்கிற ரீதியில் கிடைத்ததைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து முன்பு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் தற்பொழுது தோல்வி அடைந்திருந்தாலும், அந்தப் பதவிகள் தமிழகத்திற்கு கிடைத்தால் கட்சிக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது தான். ஆனால் இவை எல்லாம் தேசியவாதிகளிடம் எடுபட வேண்டுமென்றால் மாநில கட்சியின் உதவி இன்றி ஆட்சியைத் தொடர முடியாது என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை சென்ற தேர்தலைவிட கூடுதலாக பெற்றிருந்தாலும் 'வலியுறுத்திக்' கேட்டால் ஆட்சிக்கே ஆப்பு வைத்துவிடுவார்கள்.

தோற்றதன் கடுப்பில் இளங்கோவனின் தூண்டுதலோ அல்லது சுதர்சனம் சரியாகத்தான் அவருடைய கட்சி சார்பில் செயல்படுகிறாரோ திமுகவிற்கு இத்தகைய சந்தர்ப்பவாத அச்சுறுத்தல் தேவைதான். இதே சந்தர்ப்பவாதத்தில் முன்பு காங்கிரசிடம் மத்திய அமைச்சர் பதவிகளை திமுகவும் பெற்றது. காங்கிரசு மேலிட அழுத்தம் தொடர்ந்தால் கருணாநிதிக்கு வேறு வழி இல்லை. காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.

திராவிடம், திராவிடம் என்று பேச என்ன இருக்கு ? திராவிட நிலைப்பாட்டில் ஆதரவு கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று.

7 கருத்துக்கள்:

  • ஆ.ஞானசேகரன்
     

    ஆமாங்க

  • ஜோதிபாரதி
     

    இதுவரை மத்தியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்பட்டது.
    இனி அது தேவையில்லை. அதனால் தமிழத்தில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். கொடுக்காத பட்சத்தில் முதுகில் குத்தினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. திமுகவின்
    தோளில் இருப்பவர்கள் முதுகில் குத்துவதற்கு சிரமமா என்ன? அவர்களுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சி இல்லையே? யூஸ் அண்ட் துரோ (கம்) செய்வதில் கை தேர்ந்தவர்கள்.

  • நையாண்டி நைனா
     

    கண்ணா....
    நீயும் நானுமா கண்ணா... நீயும் நானுமா
    ......
    ......
    ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.....

    * * * * * * * * * * *

    இதை நான் உங்களை பார்த்து சொல்லவில்லை அண்ணா.
    காங்கிரசும் திமுகவும் ஆடும்
    இன்றைய அரசியல் சதுரங்கத்தை சொன்னேன்.

  • லக்கிலுக்
     

    தோற்றவர்களின் புலம்பல்கள் ஜெயித்தவர்களுக்கு மகிழ்ச்சியையே தரும்.

    தொடர்ந்து புலம்புங்கள் :-)

  • வால்பையன்
     

    காங்கிரஸுக்கு தமிழகத்தில் அமைச்சரவையில் இடம் கொடுக்ககூடாது!

    ஏன்ன இன்னும் நாம சம்பாரிக்க வேண்டியதே நிறைய இருக்கு!

    பேரன், பேத்திங்கன்னு இருக்குற அனைவருக்கும் சேர்த்துட்டு போன போகுதுன்னு எதாவது மக்களுக்கும் தூக்கி போட்டுட்டு போகலாம்!

    ராஜா காலத்துல ராஜாவுக்கு பின்னாடி நின்னு சாமரசம் வீசிகிட்டு இருந்து வந்தவங்க பரம்பரைகள் மட்டுமே ந்மக்கு போதும், அவுங்க ஓட்டு எப்பவும் நம்ம பரம்பரைக்கு தான்!

    டாக்டர் பையன் படிச்சா தான் டாக்டர்,
    ஆனா மந்திரி பையன் மந்திரியாக ஒரு தகுதியும் வேணாம், மந்திரி பையன்னு ஒரு தகுதியே போதும்.

    வாழ்க ஜனநாயகம்! வாழ்க கழக தொண்டர்கள்!

    மக்களா!
    அவுங்கள பத்தி உங்களுக்கு என்ன கவலை?

  • $anjaiGandh!
     

    தேர்தலுக்கு முன் கோவியாரின் ஈழ நாயகி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செய்ய முயற்சித்து மண்ணைக் கவ்விய சூழ்ச்சியை?! இப்போது அவரது வலையுலக புதிய அரசியல் வாரிசான கோவியார் முயற்சிக்கிறார். வாழ்த்துகள் கோவிஜி. இதுபோன்ற விஷயத்தில் கூட்டணி பதிவரான ஜோதி சாரும் ஒத்துழைக்கிறார்.

    பெப்சி உமா பாஷையில் சொல்ல வேண்டுமெனில் : கீப் ட்ரையிங்.. கீப் ஆன் ட்ரையிங்.. மனச தளரவிடாதிங்க. :))

    //காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.//

    தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))

  • கோவி.கண்ணன்
     

    /தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))//

    ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது !
    :)

    சந்தப்பவாத அரசியல்(வாதி) ஆதரவு நிலைகள் கூட அப்படித்தான். பதவிகள் நிலையானது அல்ல என்பதே உண்மை. பாவம் புரியாத உங்களுக்கு பொன் மொழிகள் நினைவு வருவது வியப்பல்ல.

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP