பின்பற்றுபவர்கள்

12 மே, 2009

ஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது !

கடந்த 10 நாட்கள் தமிழகத்தில் இருந்த போது கண்ட உண்மை இது. வலைப்பதிவில் ஈழம் தேர்தலில் ஒலிக்கும் என்று காரசாரமாகப் பேசுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் ஈழப் பிரச்சனை தேர்தலில் ஒலிக்க வண்ணம் வெற்றிகரமாக தவிர்க்க முடியும் என்பதை திமுக கழக கூட்டணிக் கட்சிகள் சாதித்து இருக்கின்றன. தொடக்கம் முதலே ஈழம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளர்களை சிறையில் தள்ளி தேர்தல் வரையில் ஈழம் தொடர்பான செய்திகள் மக்களை எட்டா வண்ணம் மிகுந்த கவனம் எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாண்மை ஆளும் கட்சி சார்பிலும், ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சீமான் போன்றோரின் பேச்சுகள் ஒரு சில தொலைகாட்சிச் சானல் தவிர்த்தும், நேரடியாக கேட்ட மக்களைத் தவிர்த்தும் ஈழப் பிரச்சனை மக்களிடம் கொண்டு செல்லப்படவே இல்லை. ஏன் கொண்டு செல்ல வில்லை என்பதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.

எங்கள் தெருவில் இருந்த வாக்களிக்கும் சிலரிடம் கேட்ட பொழுது, 'ஈழத்தில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன்' என்ற அளவில் தான் சொன்னார்கள். வாக்கு யாருக்கு என்று கேட்ட போது, திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிக்கப் போவதாகவும், அதற்குக் காரணமாக ஜெவின் பேச்சைக் குறிப்பிட்டார்கள், அதாவது திமுக ஊழல் செய்துவிட்டதாகவும், ரவுடிகள் மிகுந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், மின் வெட்டையும் குறிப்பிட்டனர்.

தேநீர் கடையில் இருவர் பேசிக் கொண்டதில், 'சீமான் பேசினதைக் கேட்டிங்களா, மனுசன் அழறான், கேக்க பாவமாக இருக்கு, நான் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்' என்றார்கள். மற்றபடி ஈழம் தொடர்பில் திமுக - காங்கிரசு கூட்டணிக்கு எதிர்ப்பு ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை இல்லாமலேயே ஆட்சி முறை, வாரிசு அரசியல் இதைக் காரணம் சொல்லி அதிமுகவிற்கு வாக்களிக்கப் போவதாக சொல்பவர்களே மிகுதி.

திமுக கட்சிக்காரர்களைப் பொருத்த அளவில் எதைச் சொல்லி பரப்புரை செய்வது என்பதில் தெளிவற்று இருப்பதால், சன் டிவி உட்பட ஆளும்கட்சி மீடியாக்கள் ஜெ வின் பழைய ஆட்சியில் நடந்த வற்றை 'ஞாபகம் வருதே' என்ற பாடல் பின்னனியில் காட்டுவதில் இருந்தே, சாதனை என்று எதையுமே மக்களிடம் கொண்டு செல்ல இவர்களிடம் எதுவுமே இல்லையா ? என்றே எண்ண வைக்கிறது. 3 ஆண்டு மானிலத்திலும், 5 ஆண்டு நடுவன் அரசிலும் இடம் பிடித்த கூட்டணி 'ஜெ வின் ஆட்சியை நினைவு படுத்தி மக்களை பயமுறுத்தி வாக்கு பெற முடியும் என்று நம்புவதைப் பார்க்கும் போது அந்த கூட்டணி தங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, அந்தோ பரிதாபம் !!!

தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை. திமுகவினரிடம் பேசும் போது அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவினருக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இதனால் கூட்டணி வெற்றி என்ற அளவில் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவைப் பொறுத்தவரை பின்னடைவே. இராச தந்திரம் என்ற பெயரில் இப்படி எதையாவது அபத்தமாக செய்வது திமுகவிற்கு வாடிக்கை தான். பலமுறை ஆட்சியை இழந்ததற்கும், கூட்டணிக்குள்ளே இழுபறி ஏற்பட்டதற்கும் காரணமே இத்தகைய மட்டமான இராச தந்திரமே காரணமாக அமைந்திருக்கிறது.

ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு. அதற்குக் காரணம் மீடியாக்கள் வழியாக அந்த செய்திகளை எடுத்துச் செல்லாமலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியாக வலிந்து சொல்ல முயன்றதே. ஜெ பிரச்சாரத்தின் போது ஓரளவு ஈழம், தமிழ் மக்கள் கொல்லப்படுவது, தனி ஈழம் தீர்வு பற்றிப் பேசினார். இரட்டை இலை வாக்கு வங்கிக்கு அந்த தகவல் வெறும் தகவல் தான். மற்றபடி தமிழ் உணர்வாளர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் விழுக்காட்டு அளவில் தமிழ் இன உணர்வாளர்கள் வாக்காளர்களில் குறைவே. நடுநிலை வாக்காளர்கள் ஈழம் தொடர்பில்லாமலேயே மின்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பில் திமுக கூட்டணிக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர்.

அதிமுக கூட்டணி 29 இடங்களும்,

திமுக கூட்டணி 11 இடங்களும் பெரும்,

ப.சிதம்பரம் தோற்கடிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்

45 கருத்துகள்:

கிரி சொன்னது…

மக்களுக்கு ஈழ செய்திகள் சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை

சன் மற்றும் கலைஞர் செய்திகளையே பார்க்கும் மக்களுக்கு அதில் ஈழ செய்திகள் எதுவும் காட்டப்படுவதில்லை என்பதால் மற்றும் செய்தி தாள்களிலும் எதுவும் அதிகம் வருவதில்லை என்பதாலும் இதை பற்றி அதிக விவரங்கள் தெரியாமலே இருக்கிறார்கள்.

இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு\\

சரியே

வாழ்த்துக்கள்

Sanjai Gandhi சொன்னது…

ஈழம் விஷயத்தைப் பற்றி நீங்கள் எழுதி இருப்பது சரியே. அதிலும் 10 சதவீதம் என்பது கூட மிகை தான். இதை சொன்னால் எந்த இணைய எழுத்தாளரும் கேக்க மாட்டேங்கறாங்க. அதே போல் வாக்குப் பதிவைப் பொறுத்தவரையில் எல்லோரும் திமுக எதிர்ப்பிலும் அதிமுக ஆதரவிலும் இருப்பதாக நீங்கள் குறிப்பிடுவதும் தவறு. மீண்டும் சாதிய உணர்வுகள் பெரிய அளவில் தலை தூக்குகிறது. சிதம்பரத்தில் திருமாவளவன் தோற்க்கடிக்கப் படுவது நிஜம் என்றே அங்கே களப்பணியாற்றிய அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர் சொன்னார். அதர்கு காரணம், தலித் அல்லாத மற்ற சமுதாயத்தினர் இவருக்கு வாக்களிக்க விரும்பவில்லையாம்.

கொங்கு மண்டலம் பற்றி யாராலும் கணிக்கமுடியவில்லை. ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி நான்குமே கொங்கு முன்னேற்றப் பேரவை கைக்கு போகும் வாய்ப்பு இருக்கு.

இந்த இரண்டு விஷயத்தில் கருணாநிதி அல்லது ஈழம் பற்றி யாருக்கும் கவலை இல்லை. இதெல்லாம் வேறு கணக்குகள்.

16ஆம் தேதி வரை எது சொன்னாலும் , எல்லாம் யூகமே. யாராலும் கணிக்க முடியாத தேர்தல் இது.

TBCD சொன்னது…

பார்ப்போம்..யார் சொன்னது நடந்தது என்று..

எனக்கென்ன...

சோனியாவை நம்பிய கலைஞர் முகத்தில்,சோனியாவு, செயலலிதாவும் கரியயைப் பூசுவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தவிர வேற எதுவும் இல்லை.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

VSK சொன்னது…

16-ம் தேதி வரை பொறுமை காக்கவும்!
:))

பீர் | Peer சொன்னது…

ஊரில் அனைவரும் நலமா?

ஈழம் குறித்த அவதானிப்பு சரியெனினும்,
தேர்தல் கணிப்பு தவர வாய்ப்புள்ளது.

கிட்டதட்ட இதே அவதானிப்புதான் எனது முந்தைய சூடான ஈழ வியாபாரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

RAHAWAJ சொன்னது…

சரியாக கணித்துள்ளீர் கோவி,நம் மக்கள் எப்ப சுய சிந்தனை கொள்கிறார்களோ அப்ப தான் விடிவு

கலைக்கோவன் சொன்னது…

சரியாக சொல்லியுள்ளீர்.
மக்கள் தொலைக்காட்சியில்
மட்டும் ஈழம் குறித்த செய்திகளை
வெளியிடுகின்றது..,
ஆனால் சமீப காலமாக
தேர்தல் காரணமாக
மக்கள் தொ.கா.விலும்
அரசியல் வாலை அதிகம்.
ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது..,
ஆனால் கேமரா பிரிண்ட்
படம் பார்க்கற மாதிரி
ஒளிபரப்பு இருப்பதால்..,
சன்,ஜெயா,கலைஞர் மற்றும்
மெகா பார்ப்பவர்களுக்கு
10 சதவீத உண்மை கூட
தெரிய போவதில்லை

Rajaraman சொன்னது…

நடுநிலையோடு இருக்கிற யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள். பெரும்பாலும் உங்கள் கணிப்பு படிதான் தேர்தல் முடிவுகள் அமைய சான்ஸ். இந்தியா வரும் பொது புதுச்சேரி பக்கம் வருகை புரிய விருப்பமுண்டா. சந்திக்க ஆவல்.

Sanjai Gandhi சொன்னது…

//நடுநிலையோடு இருக்கிற யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள். பெரும்பாலும் உங்கள் கணிப்பு படிதான் தேர்தல் முடிவுகள் அமைய சான்ஸ். இந்தியா வரும் பொது புதுச்சேரி பக்கம் வருகை புரிய விருப்பமுண்டா. சந்திக்க ஆவல். //

அதெல்லாம் வருவாரு.. ஆனால் அங்க வந்துட்டு திரும்பி சிங்கப்பூர் வந்து உங்களுக்கு மெயில் அனுப்புவாரு.. உங்க போன் நம்பர் இல்லைன்னு.

கோவி.கண்ணன் சொன்னது…

கிரி நன்றி,

பிரபல தொலைகாட்சிகள், செய்தித்தாள்கள் ஆளும்கட்சி (ஆதரவும்) உடையது என்பதால் அவர்கள் திட்டமிட்டு புறக்கணித்தார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
\\ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு\\

சரியே

வாழ்த்துக்கள்
//

பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்செய்,

சாதி அரசியல் இருப்பது உண்மைதான். திருமாவின் பலம் / பலவீனம் இரண்டுமே அதுதான்.

கொங்கு மண்டலத்தில் மின்வெட்டுக் காரணமாக திருப்பூர் மக்கள் / தொழில் அதிபர்கள் ஆளும் கட்சி மீது எரிச்சலில் இருப்பது உண்மை

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
பார்ப்போம்..யார் சொன்னது நடந்தது என்று..

எனக்கென்ன...

சோனியாவை நம்பிய கலைஞர் முகத்தில்,சோனியாவு, செயலலிதாவும் கரியயைப் பூசுவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தவிர வேற எதுவும் இல்லை.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

எனக்கென்ன என்று இருந்தாலும் அரசியல் தகவல்கள் தெரிந்து கொள்ளாமல் ஒருநாளாவது நம்மால் இருக்க முடிகிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
16-ம் தேதி வரை பொறுமை காக்கவும்!
:))
//

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. 16 என்ன இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் அப்படியே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Chill-Peer said...
ஊரில் அனைவரும் நலமா?

ஈழம் குறித்த அவதானிப்பு சரியெனினும்,
தேர்தல் கணிப்பு தவர வாய்ப்புள்ளது.

கிட்டதட்ட இதே அவதானிப்புதான் எனது முந்தைய சூடான ஈழ வியாபாரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
//

Chill-Peer, பாராட்டிற்கும், தகவல்களுக்கும், இடுகை இணைப்பிற்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RAHAWAJ said...
சரியாக கணித்துள்ளீர் கோவி,நம் மக்கள் எப்ப சுய சிந்தனை கொள்கிறார்களோ அப்ப தான் விடிவு

12:23 PM, May 12, 2009
//

கருத்துக்கு நன்றி அண்ணா !

கோவி.கண்ணன் சொன்னது…

//கலைக்கோவன் said...
சரியாக சொல்லியுள்ளீர்.
மக்கள் தொலைக்காட்சியில்
மட்டும் ஈழம் குறித்த செய்திகளை
வெளியிடுகின்றது..,
ஆனால் சமீப காலமாக
தேர்தல் காரணமாக
மக்கள் தொ.கா.விலும்
அரசியல் வாலை அதிகம்.
ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது..,
ஆனால் கேமரா பிரிண்ட்
படம் பார்க்கற மாதிரி
ஒளிபரப்பு இருப்பதால்..,
சன்,ஜெயா,கலைஞர் மற்றும்
மெகா பார்ப்பவர்களுக்கு
10 சதவீத உண்மை கூட
தெரிய போவதில்லை

1:40 PM, May 12, 2009
//

தொலைக்காட்சிகளைப் பொருத்த வரையில் அவை லாப நோக்கில் இயங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்குத்தான் இடமளிப்பார்கள். அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பு வைப்பதும் வீன், அவர்களின் தகவல்களை நடுநிலையாகக் கொள்வதும் தேவையற்றது தான்.

லக்கிலுக் சொன்னது…

உங்களையெல்லாம் நினைச்சா பாவமாயிருக்கு :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
உங்களையெல்லாம் நினைச்சா பாவமாயிருக்கு :-)
//

3 நாள் காத்திருங்க பாஸ், பூம'ராங்க்' ஆகும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
நடுநிலையோடு இருக்கிற யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள். பெரும்பாலும் உங்கள் கணிப்பு படிதான் தேர்தல் முடிவுகள் அமைய சான்ஸ். இந்தியா வரும் பொது புதுச்சேரி பக்கம் வருகை புரிய விருப்பமுண்டா. சந்திக்க ஆவல்.
//

Rajaraman, நம்ம கருத்துகளில் முரண்பாடு இருந்தாலும் பாராட்ட வேண்டியதை மனம் திறந்து பாராட்டுவீர்கள் என்பதால் உங்களை சந்திக்க எனக்கும் ஆவல் உண்டு. பாண்டி தானே, ஒவ்வொரு முறை தமிழக பயணத்தின் போதும் அந்த வழியாகத்தான் எங்க ஊருக்குச் செல்ல வேண்டி இருக்கும், ஒரு முறை இறங்கிவிடுகிறேன்.

ers சொன்னது…

காத்திருங்க பாஸ், பூம'ராங்க்' ஆகும் !///


//////
ரிப்பிட்
/////

கோவி.கண்ணன் சொன்னது…

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//நடுநிலையோடு இருக்கிற யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள். பெரும்பாலும் உங்கள் கணிப்பு படிதான் தேர்தல் முடிவுகள் அமைய சான்ஸ். இந்தியா வரும் பொது புதுச்சேரி பக்கம் வருகை புரிய விருப்பமுண்டா. சந்திக்க ஆவல். //

அதெல்லாம் வருவாரு.. ஆனால் அங்க வந்துட்டு திரும்பி சிங்கப்பூர் வந்து உங்களுக்கு மெயில் அனுப்புவாரு.. உங்க போன் நம்பர் இல்லைன்னு.
//

எப்பவும் மிஸ் ஆகாது, நான் கோவை வந்த அன்று தான் உங்கள் அன்னை சோனியா சென்னை வருவதாக இருந்தது, ஒருவேளை நீங்கள் அன்னையை தரிசிக்க சென்றிருக்கலாம் என்று நினைத்தே உங்களை அழைக்க முயற்சி செய்வதில் சுனக்கம் ஏற்பட்டது. மன்னிக்கவும் ! அடுத்த முறை சஞ்செய்க்காக சிறப்பு பயணம் !
:)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க‌


http://www.ensaaral.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan 4:27 PM, May 12, 2009
அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க‌


http://www.ensaaral.blogspot.com
//

வந்திடுவோம், உங்கள் அன்னையர் நாள் பதிவைப் படித்தேன். அருமை

Rajaraman சொன்னது…

Thank you mate. Expecting your next India visit.

ராஜ நடராஜன் சொன்னது…

எல்லோரும் கால் கடுக்க பதிவுகளாப் போட்டு விட்டு பொதுவுல இதுதான் நடக்கும்ன்னு நினச்சா நீங்க ஒண்ணு சொல்றீங்க,லக்கிலுக் ஒண்ணு சொல்றாரு(NDTV நகல்).எல்லா கட்சியும் எங்களுக்கே 40ன்னு சொல்லுது.இயக்குநர்களோ காங்கிரசோட கல்லாவே காலின்னு சொல்லிகிட்டு சுத்துறாங்க.இன்னொரு பதிவரோ காங்கிரஸ் 4 தேத்திடும்ங்கிறாரு.யார் சொல்றது உண்மை?உண்மைகள் பதிவா?கள நிலவரமா?

ஒண்ணுமே பிரியல!

ராஜ நடராஜன் சொன்னது…

//ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது//

கொஞ்சமாவது செய்திகள் தருகிறதே என்பது மட்டும் ஆறுதல்.மற்றபடி நடுநிலைப் பட்டமெல்லாம் ஓவர்.அந்த நிலைக்கு நமது ஊடகங்கள் ஓடவேண்டிய தூரம் இன்னும் நிறைய.

வாக்காளன் சொன்னது…

veli naatula irundhu vandhu 10 naal irundhu therdhal kanippu podura alavukku poiduchu ingey nilamai.. kadavule...

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் 5:26 PM, May 12, 2009
//ராஜ் நடுனிலையோடு
செய்தி தருகிறது//

கொஞ்சமாவது செய்திகள் தருகிறதே என்பது மட்டும் ஆறுதல்.மற்றபடி நடுநிலைப் பட்டமெல்லாம் ஓவர்.அந்த நிலைக்கு நமது ஊடகங்கள் ஓடவேண்டிய தூரம் இன்னும் நிறைய.
//

இதை வன்மையாக வழிமொழிகிறேன்
:)

ISR Selvakumar சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை. தமிழ் பதிவர்கள் உலகம் என்பது மிகவும் சிறியது. இங்கு உள்ள ஈழத்தமிழர் பற்றிய கொந்தளிப்பு, கம்ப்யுட்டர் மானிட்டருக்கு அப்பால் துளியும் இல்லை.

மாலை ஆனதும் ஐ.பி.எல் பார்ப்பதும், இரவானதும் கோலங்கள் பார்ப்பதுமாக மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.

சன் டிவியும் கலைஞர் டிவியும் இலங்கைப் பிரச்சனை விஷயத்தில் பெரிதாக செய்தி எதுவும் வெளியிடுவதில்லை.

அதே போல ஜெயா டிவியும், ஜெயலலிதாவைத் தவிர வேறெதையும் காட்ட மாட்டேன்கிறது.

அதி தீவிர ஈழ ஆதரவாளர்களைத் தவிர வேறு யாருக்கும் ஈழப் பிரச்சனை உரைக்கவே இல்லை.

ஒருவேளை அ.தி.மு.க முந்தினால் அது மற்ற காரணங்களுக்காக இருக்குமே தவிர, ஈழப் பிரச்சனைக்காக அல்ல.

சி தயாளன் சொன்னது…

நீங்கள் கூறுவது உண்மைதான்...காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் ஈழப்பிரச்சினையும் தேர்தல் களத்தில்...

எது எப்படியோ தேர்தலில் மாத்தி மாத்தி போடுவது வழக்கம் தானே

பாக்யா... சொன்னது…

Sri Lanka factor' in Tamil Nadu poll

By Sunil Raman
BBC News, Tamil Nadu

Tamil Nadu state Chief Minister M. Karunanidhi lies on a bed as he fasts to demand a ceasefire between the Sri Lankan government and Tamil Tiger rebels, in Chennai, India, Monday, April 27, 2009.
Tamil Nadu's chief minister used a one day fast to protest about Sri Lanka

Few elections in India have been fought over a pan-national issue. Fewer still on international ones. But in the southern state of Tamil Nadu, the plight of Tamils in Sri Lanka has become a big electoral theme.

The two main regional parties that have dominated state politics for the last four decades - the Dravida Munnetra Kazhagam (DMK) and the Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) - have made the Sri Lanka factor central to their campaigns.

Both parties are vying with each other to impress the electorate with their commitment to "protect" the interests of Sri Lankan Tamils.

Tamil Nadu is one of India's most economically developed states but also one of its most politically volatile.

In 2004 the DMK coalition swept every seat. But Tamil Nadu is considered a swing state and the DMK are not assured of an outright win this time. Whoever does take control could play a key role when it comes to forming India's new coalition government.

Fasting leaders

Compared with previous elections the colour and drama normally associated with Tamil Nadu is definitely missing this time round.


Mrs Paravathamma
How can India keep quiet when our brethren get killed?
Mrs Parvathamma, 65

Directives from the election commission on poll expenses and a judicial order on not defacing the city has meant a landscape without enormous wooden cut-outs of political leaders, something Tamil Nadu was famous for.

Political parties have to depend on television channels owned by them and newspapers to put across their viewpoint. Competing promises and assurances about Sri Lanka are being bandied about every day.

Opposition AIADMK leader and former chief minister Jayaram Jayalalitha fasted for one day about the Sri Lanka issue. DMK leader and present chief minister, M Karunanidhi, lost no time in following her. He too sat inside a special tent erected close to Marina beach and fasted for a day.

Ms Jayalalitha has now promised to send troops to create a separate homeland for Tamils in Sri Lanka called Eelam. As her party-backed television channel showed a live broadcast of her speech, the 84-year-old DMK leader, now in hospital, lost no time to promise to use "all his strength" for the Tamil cause.

Jayalalitha says the DMK's presence in the federal coalition means it should share the blame for what she calls "inaction by India to ensure an early ceasefire".

"Had the government of India taken an interest they could have ensured an early ceasefire and saved several precious lives," is her main refrain at public meetings.

But for Cho Ramaswamy, editor of Tughlak magazine, political parties lack the courage to admit that the issue of Sri Lankan Tamils was not truly an electoral issue.

He says that if the ruling coalition of the DMK and Congress party lose at the polls then they might be tempted to blame their loss on the Sri Lankan issue, but for most people it is not something that will influence their vote.

Indeed, a top government official, who wishes to remain anonymous, admitted to the BBC that contrary to what was being played out in the media, the present DMK-led government had actually strengthened coastal security further.

Around 100 coastal police stations have been set up to ensure no Tamil refugee tries to enter Tamil Nadu. And they have been successful as very few people have managed to enter India.

Compassion

But Tamil Nadu is the only state where people have ethnic links with Sri Lankan Tamils.

Cho Ramaswamy, editor of Tughlak magazine
Mr Ramaswamy thinks Sri Lanka won't change voting behaviour in Tamil Nadu

Driving through the villages and towns of northern Tamil Nadu it is clear that the issue has struck an emotional chord with people. Unlike the rest of India, the people in Tamil Nadu have closely followed the ups and downs of Sri Lankan politics.

People seem to be quite clued in with what's happening in northern Sri Lanka. The media and politicians have also ensured that the focus stays on human suffering.

It was interesting to see how even people living on less than $1 a day were aware of the Sri Lankan situation.

Mrs Parvathamma, a 65-year-old migrant labourer in Eraiyur village of Vilupuram district, said: "How can India keep quiet when our brethren get killed?"

But asked if this issue would influence how she votes, Mrs Parvathamma lost no time in complaining of high food prices.

"We get rice at 1 rupee ($0.02) per kg as promised by the DMK government but lentils cost 70 rupees ($1.42) per kg, tomatoes 4 rupees ($0.28) per kg and even edible oil is beyond our reach," she said.

Her sentiments were echoed by many others. In Chengalpet, a retired government employee who has voted in every election did not mince his words.

Mr Appaswamy said he sympathised with the Tamil people of Sri Lanka not because of his Tamil identity but "out of humanity". But he pooh-poohed assurances by the DMK and AIADMK on the issue, saying "they are stunts for elections to get votes".

A young professional in Madras (Chennai), Mr Chandrabose, was equally forthright.

"This is all politics," he said, clarifying he was more concerned by issues influencing the quality of his life. With a wife who doesn't work and a small child, he was more concerned about the policies the parties planned to implement.

TAI CHI Federation of India சொன்னது…

நீங்கள் மிக சரியாக கணித்துள்ளீர்கள்,
நன்றி,

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். சொன்னது…

உங்கள மாதிரி பொழுது போகாத எணைய பொரட்சியாளய்ங்க ஒரு நாப்பது பய
ஈழம், எறிகணை, வலிந்த தாக்குதல்,முன் நகர்வு, பின்நகர்வு,சைடு நகர்வுன்னு பொலம்பிக்கிட்டு திரிய வேண்டியதுதான்.

ஒரு லவுடாவும் நடக்காது இங்க.

அன்பு சொன்னது…

//தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை//

இதை யாரும் கெளப்பிவிட வேண்டாம் மிஸ்டர் கந்தசாமி. செய்திகளை கொஞ்சம் மூளையோடு பார்த்தாலே புரியும்

கோவி.கண்ணன் சொன்னது…

//புலிகேசி 9:14 PM, May 12, 2009
//தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை//

இதை யாரும் கெளப்பிவிட வேண்டாம் மிஸ்டர் கந்தசாமி. செய்திகளை கொஞ்சம் மூளையோடு பார்த்தாலே புரியும்
//

அவனா நீய்யீ ! நல்லா இருங்கோ !

ILA (a) இளா சொன்னது…

நம்ம வாக்கு

குப்பன்.யாஹூ சொன்னது…

பதிவர்களில் தொண்ணூறு சதவீதம் வெளி நாட்டில் வாழும் தமிழர்கள். எனவே பதிவில் மட்டுமே காங்கிரஸ், திமுக எதிராக ஒட்டு விழும், வேண்டுமானால் தமிழிச் அல்லது தமிழ்மணம் வோட்டு எண்ணிக்கையில் திமுக காங்கிரம் தோற்கும்

நிஜ வாழ்க்கையில் தமிழ் ஈழம், காங்கிரஸ் எதிர்ப்பு பரவலாக இல்லை, ஒரு சில தொகுதிகளில் வேண்டுமானால் இருக்கலாம்.

என்னதான் வலைபதிவு, கவிதைகள், எழுதினாலும் தமிழ்நாடு வாக்களார்கள் இன்னமும் ஜாதி, மதம் பார்த்தே வாக்கு அளிக்கின்றனர். .

இன்று கூட தினகரனில் விளம்பரம், கிறித்துவ பாதிரியார் படத்துடன், சிர்பான்மையினரே (முஸ்லிம், கிருத்தவ மத வாக்காளர்களே) ஜெயலலிதாவிற்கு வாக்கு அளிக்கும் முன் சரடு யோசியுங்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.

குப்பன்_யாஹூ

நா. கணேசன் சொன்னது…

அன்பின் கோவி. கண்ணன்,

பெரும்பான்மை, சிறுபான்மை, மனப்பான்மை என்று எழுதினால் தமிழ் சிறக்கும்.

-பால் > -பான்மை. -பாண்மை என எழுதுதல் எழுத்துப்பிழை.

வாழ்க வளமுடன்!

நா. கணேசன்

suvanappiriyan சொன்னது…

இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நா. கணேசன் said...
அன்பின் கோவி. கண்ணன்,

பெரும்பான்மை, சிறுபான்மை, மனப்பான்மை என்று எழுதினால் தமிழ் சிறக்கும்.

-பால் > -பான்மை. -பாண்மை என எழுதுதல் எழுத்துப்பிழை.

வாழ்க வளமுடன்!

நா. கணேசன்
//

கணேசன் அவர்களே, தகவலுக்கு மிக்க நன்றி. எனக்கு இதில் குழப்பம் இருந்தது தெளிவு படுத்தியதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
இணையத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஈழ செய்திகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

6:38 AM, May 13, 2009
//

சுவனப்பிரியன் உண்மை. பொய்யுரை பரப்புவர்களும் இணையத்தில் மிகுதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னதான் வலைபதிவு, கவிதைகள், எழுதினாலும் தமிழ்நாடு வாக்களார்கள் இன்னமும் ஜாதி, மதம் பார்த்தே வாக்கு அளிக்கின்றனர். .//

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இல்லிங்க, வலைப்பதிவு எழுதும் முற்போக்காளர்களிடமும் சாதி பாசம் உண்டு, அவர்களும் அப்படித்தான் வாக்களிப்பார்கள் என்றே நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
நம்ம வாக்கு
//

நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்