பின்பற்றுபவர்கள்

26 பிப்ரவரி, 2009

வானவில்லை பின்தொடர்ந்து...

மனிதனின் செயற்கை அழகுகளுக்கு எதிராக இயற்கையில் பல அறைகூவல்கள் உண்டு, அவற்றில் ஒன்று தான் வானவில். நேற்று மாலை அலுவலகம் முடிந்து அலுவலக பேருந்தில் வரும் போது சுற்றுச் சூழல் தூறலும் மஞ்சள் வெயிலுமாக இருந்தது, பேருந்து கண்ணாடி வழியாக வெளியே கண்களை ஈர்த்தது வண்ணங்கள், மிக அழகான வானவில், இதுவரை இவ்வளவு அடர்த்தியான வண்ணத்தில் வானவில்லை நான் பார்த்ததே இல்லை. நிழல்படக் கருவி பையிலேயே இருந்ததால் அழகை நிழல்படக் கருவிக்குள் அடைத்துவிட்டேன்.

பேருந்து செல்ல செல்ல ஒவ்வொரு பகுதியிலும் வானவில்லின் தோற்றம் மனதை கொள்ளை கொண்டது.





(படத்தில் தெரியும் பேருந்துனுள் இருந்து தான் மேலே இருக்கும் படங்களை எடுத்தேன்)

பேருந்தைவிட்டு கிழே இறங்கியதும் மீண்டும் பார்த்தேன்.



இரட்டை வானவில் (பெரிதாக்கி பார்க்கவும்)

வானவில்லுக்கு மேல் மற்றோர் வானவில், ஆகா வண்ணம் அடர்த்தி குறைந்திருந்தாலும் ஒரு சேர பார்பதற்கு மிக அழகாகவே இருந்தது. 20 நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தேன், அதன் பிறகு தொடர்வண்டியில் ஏறினேன். வண்டி வளைந்து சொல்ல செல்ல வானவில்லின் திசையும் மாறிக் கொண்டே வருவது போன்ற தோற்றம். உடனே நம்(ம) ஆமத்தூர் ஜெகதீசனை அழைத்து, வானவில் அழகாக தெரியுது புகைப்படம் எடுத்து வை. என்றேன். சிங்கையில் ஒரு இடத்தில் பார்க்க முடிந்தால், நாடுமுழுவதும் எங்கிருந்தாலும் பார்க்க முடியும். அவரும் ஆர்வமுடன் வீட்டிற்கு கிழே இறங்கி... சில படங்களை எடுத்துவிட்டு அதன் பிறகு புகைப்படம் எடுத்ததை அழைத்துச் சொன்னார். வானவில் நான் பார்த்த தொடக்கம் முதல் சுமார் 1 மணிநேரம் அழியாமல் காட்சி கொடுத்தது. அதன் பிறகு தொடர்வண்டி சுரங்க பாதைவழியாக செல்லவே வானவில்லை காணமுடியவில்லை. வண்டியை விட்டு இறங்கியதும், வானம் இரவின் தொடக்கத்தை கடந்து இருந்தால் வானவில்லும் காணாமல் போய் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மிகுதியாக தொடர்ந்து அடர்த்தியான வண்ணத்தில் வானவில் அழியாமல் இதுவரை பார்த்ததே இல்லை.


வானவில் என்ற சொல் சரியான பெயர் சொல் இல்லை என்றே நினைக்கிறேன். Train என்பதை புகைவண்டி என்பதாக மொழிப் பெயர்த்து வழங்கிவந்து தற்பொழுது தொடர்வண்டி என்கிறோம். எனெனில் இப்போதெல்லால் எந்த Train னும் புகைவிடுவதில்லை. வானவில்லுக்கு சரியான சொல் மழைவில் ஆங்கிலத்தில் இருக்கும் Rainbow என்கிற அதே பொருளில் வரும். வானவில் என்கிற பெயர் சொல்லை வானத்தில் தொடர்பு படுத்துவதைவிட மழையுடன் தொடர்பு படுத்துவதே சரி. மலையாளத்தில் மழைவில் என்றே சொல்கிறார்கள். இனிமேல் மாற்றி சொல்வதும் கடினம் தான். சங்கப் பாடல்களில் வானவில்லை எப்படி அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்கிறேன்.

ஜெகதீசன் எடுத்த படங்கள்:


28 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

புகைபடங்கள் அருமை

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
புகைபடங்கள் அருமை
//

இன்னிக்கு நீங்கதான் போஃனியா !
:)

ஜெகதீசன் சொன்னது…

கலக்குறேள் போங்கோ...

நட்புடன் ஜமால் சொன்னது…

மிக அழகு

நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//புடன் ஜமால் said...
மிக அழகு
//

நன்றி !


//நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன்//

என்னோட பதிவைத் தானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கலக்குறேள் போங்கோ...
//

தம்பி உடையான், படத்துக்கு கெஞ்சான்

முகவை மைந்தன் சொன்னது…

//அவரும் ஆர்வமுடன் வீட்டிற்கு கிழே இரங்கி//

அவரு விடுப்பு எடுத்தத இப்படித் தான் போட்டு உடைக்கிறதா?

நீங்களும் அவரும் ஆளுக்குப் பாதி மழைவில்லை (இன்னொரு சொல் இருந்தா தப்பில்லையே!) படமெடுத்தா மாதிரி தெரியுது.

இரட்டை வானவில் கேள்விப்படிருக்கேன், அரிது தான். பார்க்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்தது. படங்களுக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

தமிழ் சொன்னது…

படங்களும்
பதிவும் அருமை, தங்களின்
பதிவைப் படிக்கையிலே
பல நல்லச் சொற்களைப்
பழக்கவும்
பயிற்சி அளிக்கவும் உதவுகிறது

வாழ்த்துகள்

/வானவில் என்ற சொல் சரியான பெயர் சொல் இல்லை என்றே நினைக்கிறேன். Train என்பதை புகைவண்டி என்பதாக மொழிப் பெயர்த்து வழங்கிவந்து தற்பொழுது தொடர்வண்டி என்கிறோம். எனெனில் இப்போதெல்லால் எந்த Train னும் புகைவிடுவதில்லை. வானவில்லுக்கு சரியான சொல் மழைவில் ஆங்கிலத்தில் இருக்கும் Rainbow என்கிற அதே பொருளில் வரும். வானவில் என்கிற பெயர் சொல்லை வானத்தில் தொடர்பு படுத்துவதைவிட மழையுடன் தொடர்பு படுத்துவதே சரி. மலையாளத்தில் மழைவில் என்றே சொல்கிறார்கள். இனிமேல் மாற்றி சொல்வதும் கடினம் தான். சங்கப் பாடல்களில் வானவில்லை எப்படி அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்கிறேன்./

இதையும் சுவைத்தேன்
இடுகையையும் தான்

மீண்டும் ஒரு முறை

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
//அவரும் ஆர்வமுடன் வீட்டிற்கு கிழே இரங்கி//

அவரு விடுப்பு எடுத்தத இப்படித் தான் போட்டு உடைக்கிறதா?//

அவன் வீட்டில் இருந்தானா ? எனக்கு தெரியாது, ஆணி புடுங்கி வந்ததாகத்தான் நான் நினைத்தேன்.

//நீங்களும் அவரும் ஆளுக்குப் பாதி மழைவில்லை (இன்னொரு சொல் இருந்தா தப்பில்லையே!) படமெடுத்தா மாதிரி தெரியுது.//

அவரால் முழுதாக எடுத்திருக்க முடியும், செங்காங்க் ரயில் நிலையம் வரை சென்றால் எடுத்திருக்க முடியும், தூறல் இருந்தது என்று சொன்னான், சோம்பேறி !

//இரட்டை வானவில் கேள்விப்படிருக்கேன், அரிது தான். பார்க்கும் வாய்ப்பு உங்களால் கிடைத்தது. படங்களுக்கும் பகிர்தலுக்கும் நன்றி.
//

இரண்டு வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்ட தொலைவில் மழையும் வெயிலும் இருந்தால் அவ்வாறான காட்சி கிடைக்கும் என்று நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
படங்களும்
பதிவும் அருமை, தங்களின்
பதிவைப் படிக்கையிலே
பல நல்லச் சொற்களைப்
பழக்கவும்
பயிற்சி அளிக்கவும் உதவுகிறது

வாழ்த்துகள்
//

திகழ்மிளிர், உங்கள் தமிழார்வம் எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கு இந்த இடுகை மிகவும் பிடிக்கும் வியப்பில்லை.

பாராட்டுதலுக்கு மிக்க நன்றி !

ஜெகதீசன் சொன்னது…

//
அவரால் முழுதாக எடுத்திருக்க முடியும், செங்காங்க் ரயில் நிலையம் வரை சென்றால் எடுத்திருக்க முடியும், தூறல் இருந்தது என்று சொன்னான், சோம்பேறி !
//
அதுக்கு ரயில் நிலையம் வரைக்கெல்லாம் போயிருக்கவேண்டியதில்லை... வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே போயிருந்தாப் போதும்...

தூறல் இல்லை.. அப்போ கொஞ்சம் பெரிய மழையே வர ஆரம்பிச்சிருச்சி... வானவில்லுக்காக என் கேமராவைக் கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை... :P

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நானும் வானவில் பார்த்து ரொம்ப நாளாச்சு...

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

வானவில் கண்ட மாமணிகளுக்கு வாழ்த்துக்கள் :))

வானவில்லை ஒரு மொழியில் இந்திர தனுஷ் என கூறுகிறார்கள்.

வானவில் வந்தால் வான்சூழலில் அயனியாக்கம் அதிகரிக்கும், மின்சார தன்மை கூடும்.

வானவில்லை வைத்து ஜோதிடம் கூட சொன்னார்கள்.

இரட்டை வானவில் தெரியும் இடத்தில் வசிக்கும் பெண்களுக்கு சில அசம்பாவிதம் நடக்கும் என கேள்விபட்டிருக்கிறேன்.

Subankan சொன்னது…

இரட்டை வானவில்!!! கேள்விப்பட்டிருக்கிறேன், இன்று தான் பார்க்கி்றேன்!

அத்திரி சொன்னது…

நல்லாவே படம் புடிச்சிருக்கீங்க

அப்பாவி முரு சொன்னது…

///மனிதனின் செயற்கை அழகுகளுக்கு எதிராக இயற்கையில் பல அறைகூவல்கள் உண்டு///

இயற்க்கைக்கு எதிராக மனிதனா?

அண்ணே நினைச்சுகூட பாக்ககக்கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//muru said...
///மனிதனின் செயற்கை அழகுகளுக்கு எதிராக இயற்கையில் பல அறைகூவல்கள் உண்டு///

இயற்க்கைக்கு எதிராக மனிதனா?

அண்ணே நினைச்சுகூட பாக்ககக்கூடாது.
//

ஏன் ஏன் நினைக்கக் கூடாது? வானூர்திகள், தொடர்வண்டிகள்,தாஜ்மகால் இவையெலலாம் அழகாகத்தானே இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
வானவில் கண்ட மாமணிகளுக்கு வாழ்த்துக்கள் :))//

நன்றி ஸ்வாமி

//வானவில்லை ஒரு மொழியில் இந்திர தனுஷ் என கூறுகிறார்கள்./

சூரியன், நிலா இவற்றின் மீது (கருமை) நிழல் படிதலைக் கூட பாம்பு விழுங்குவதாகச் சொன்னார்கள்

//வானவில் வந்தால் வான்சூழலில் அயனியாக்கம் அதிகரிக்கும், மின்சார தன்மை கூடும்.//

நல்ல தகவல்

///வானவில்லை வைத்து ஜோதிடம் கூட சொன்னார்கள்.///

போச்சு போச்சு...என்ன சொன்னாங்க, வில்லை வைத்து வில்லங்கமா ?

//இரட்டை வானவில் தெரியும் இடத்தில் வசிக்கும் பெண்களுக்கு சில அசம்பாவிதம் நடக்கும் என கேள்விபட்டிருக்கிறேன்.//

சமையலே தெரியாதவர்கள் கூட சமைத்து அதையும் தானே சுவைத்துப் பார்பார்கள் என்று சொல்லவர்றீங்க

கோவி.கண்ணன் சொன்னது…

// VIKNESHWARAN said...
நானும் வானவில் பார்த்து ரொம்ப நாளாச்சு...
//

ஓ ! கண்கள் பெண்கள் மீது இருந்தால் வானவில் அவள் புருவமாகவும், நிலா அவள் முகமாகவும் தெரியும் போல அதனால் தான் உண்மையான வானவில் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Subankan said...
இரட்டை வானவில்!!! கேள்விப்பட்டிருக்கிறேன், இன்று தான் பார்க்கி்றேன்!
//

சில சமயம் இரண்டுமே பளிச் சென்று தெரியும்

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி said...
நல்லாவே படம் புடிச்சிருக்கீங்க
//

ஆகா ! நானும் நிழல்பட கலைஞன் ஆகிட்டேன். அத்திரி சார் நன்றி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அதுக்கு ரயில் நிலையம் வரைக்கெல்லாம் போயிருக்கவேண்டியதில்லை... வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே போயிருந்தாப் போதும்...

தூறல் இல்லை.. அப்போ கொஞ்சம் பெரிய மழையே வர ஆரம்பிச்சிருச்சி... வானவில்லுக்காக என் கேமராவைக் கெடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை... :P
//

அடுத்த முறை ஆறுமுகம் சித்தப்பாவை கூட்டிச் செல்லாமல் சென்று மழையில் நனையாத கேமரா வாங்கு, ஆறுமுகம் சித்தப்பா கடைக்காரன் கூட சேர்ந்து நல்லா ஏமாற்றிவிட்டார்

நிஜமா நல்லவன் சொன்னது…

நான் கூட நேத்து படம் எடுத்தேன்....ஆனா இப்படி பதிவு போடணும் என்று தோன்றவில்லை.....கலக்கிட்டீங்க....:)

கோவி.கண்ணன் சொன்னது…

// நிஜமா நல்லவன் said...
நான் கூட நேத்து படம் எடுத்தேன்....ஆனா இப்படி பதிவு போடணும் என்று தோன்றவில்லை.....கலக்கிட்டீங்க....:)
//

பாராட்டுக்கு நன்றி !

உங்கள் படங்களை மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்க

கிரி சொன்னது…

// கோவி.கண்ணன் said...
// நிஜமா நல்லவன் said...
நான் கூட நேத்து படம் எடுத்தேன்....ஆனா இப்படி பதிவு போடணும் என்று தோன்றவில்லை.....கலக்கிட்டீங்க....:)
//

பாராட்டுக்கு நன்றி !

உங்கள் படங்களை மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்க//

ஹி ஹி ஹி எதுக்கு இன்னொரு பதிவு போடவா :-)))))))

சி தயாளன் சொன்னது…

படங்கள் அருமை

நேத்து ஜெகதீசன் நீங்கள் சொன்னதாக சொல்லி படம் எடுத்ததாக என்னிடம் சொன்ன போதே இந்தப் பதிவை எதிர்பார்த்தேன்

:-))

சி தயாளன் சொன்னது…

/// கோவி.கண்ணன் said...
//நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன்//

என்னோட பதிவைத் தானே ?
///

இந்தக் குசும்பை ரசித்தேன் :-))

அப்பாவி முரு சொன்னது…

//muru said...
///மனிதனின் செயற்கை அழகுகளுக்கு எதிராக இயற்கையில் பல அறைகூவல்கள் உண்டு///

இயற்க்கைக்கு எதிராக மனிதனா?

அண்ணே நினைச்சுகூட பாக்ககக்கூடாது.
//

ஏன் ஏன் நினைக்கக் கூடாது? வானூர்திகள், தொடர்வண்டிகள்,தாஜ்மகால் இவையெலலாம் அழகாகத்தானே இருக்கிறது.///

இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்திய அழகெல்லாம் இன்று மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய விதத்திலே பயன்படுத்துகின்றது என்பதை மறுக்கமுடியுமா?(செயற்கையின் பழைய வெர்சன்கள் மனிதனுக்குப் பயன்படுகின்றன, ஆனால் புதிய வெர்சன்ஸ்?)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்