பின்பற்றுபவர்கள்

21 பிப்ரவரி, 2009

நாளை உலகப் பெரும் புகழடையப் போகும் தமிழனுக்கு வாழ்த்துகள் !

ஹாலிவுட்டின் ஆஸ்கார் பரிசு இந்திய திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து...பின்னார்...அது ஒன்றும் அவ்வளவு உயர்ந்த விருது அல்ல...பிற நாட்டினரின் படங்களுக்கு ஒரு பிரிவு வைத்திருக்கின்றனர் அவ்வளவுதான் என்பதாக இந்திய திரைக்கலைஞர்கள் தங்கள் பெருமூச்சுகளுக்கு ஞாயமான காரணங்களை சொல்லிக் கொண்டு தேற்றிக் கொண்டனர்.


நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் ஆங்கிலப் படமான 'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்துக்கு இசை அமைத்து பல விருதுகளைப் பெற்றதுடன், அவரது பெயர் ஆஸ்கார் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பின்னனி இசை
சிறந்த பாடல் (இருபாடல்கள்)


என இரு பிரிவுகளில் அவரது பெயர் முன் மொழியப்பட்டுள்ளது.

இசைப்புயல் நாளை நடக்க இருக்கும் ஆஸ்கர் விருதுவழங்கும் விழாவில் குறைந்தது பின்னனி இசை அல்லது பாடல் அல்லது இரண்டிலுமே பரிசு வெல்லப் போவது உறுதி,

எனெனில் அனைத்து தமிழ்மக்களின் வாழ்த்துகளும், இந்தியர்களின் வாழ்த்துகளும் அதை உறுதி படுத்தும், அவற்றிக்கும் மேலாக அவரது இசைக்கும் அந்த தகுதியும் இருக்கிறது.



ஏ.ஆர்.ரகுமானின் இசையை விட அவரிடம் மிகவும் பிடித்தவை...அவர் புகழின் உச்சியை நோக்கி மேலே செல்லும் ஒவ்வொரு காலகட்டத்திலும்,

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தன்னடக்கமாக சொல்லும் அவரது மனது.

14 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

வாழ்த்துகள் தமிழ்மகனுக்கு :)

ஆ.சுதா சொன்னது…

வாழ்த்துக்கள்.
பெருமைபட்டுக்கொள்வோம்.

சி தயாளன் சொன்னது…

ரகுமான் வெற்றி பெற என் வாழ்த்துகள்...

தமிழரா ஒன்றுபட்டு பெருமைப் படுவோம்...:-)

நாமக்கல் சிபி சொன்னது…

/'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தன்னடக்கமாக சொல்லும் அவரது மனது.//

உண்மை!

நிஜமா நல்லவன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள்!
இன்னும் பல சிகரங்களை தொடுவார்! தொடவேண்டி வாழ்த்துகிறேன்!!

"உழவன்" "Uzhavan" சொன்னது…

Yes.. All the very best AR!

Uzhavan

Babu (பாபு நடராஜன்} சொன்னது…

புகழ் பெற போகும் ஆஸ்கர்விருதுக்கு வாழ்த்துக்கள்...................

கோவி.கண்ணன் சொன்னது…

இசை புயலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி !

Nandhan Sp சொன்னது…

எல்லா புகழும் இறைவனுக்கே......வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரகுமான்.

மணியன் சொன்னது…

வாழ்த்துகள் இரகுமானுக்கு,
நன்றிகள் எல்லாப் புகழும் வாங்கித் தந்த இறைவனுக்கு !

உலகவிழாவில் தமிழ் பேசிய தமிழருக்கு த்மிழரெல்லாம் ஒன்றுபட்டு பெருமைப் படுவோம் !!

தர்ஷன் சொன்னது…

ஐயா உங்க வாய்க்கு சக்கரை போடணும்
வழமையா சொல்வாரே ஒஸ்கார் மேடையில் சொல்வாரானு பார்த்தா அங்கயும் சொல்லியிருக்காரு
என்னவொரு தன்னடக்கம் இவருக்கு வித்துவ செருக்கு எல்லாம் வராதா

கோவி.கண்ணன் சொன்னது…

//தர்ஷன் said...
ஐயா உங்க வாய்க்கு சக்கரை போடணும்
வழமையா சொல்வாரே ஒஸ்கார் மேடையில் சொல்வாரானு பார்த்தா அங்கயும் சொல்லியிருக்காரு
என்னவொரு தன்னடக்கம் இவருக்கு வித்துவ செருக்கு எல்லாம் வராதா
//

தர்ஷன் பின்னூட்டத்திற்கு நன்றி. ஏஆர்ரகுமானிடம் பிடித்ததே தன்னடக்கம் தான்.

'புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே' என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் இசை அமைப்பாளர்களைவிட முற்றிலும் மாறுபட்டவர், தனக்கு கிடைத்த புகழ்பற்றி இவ்வளவு தன்னடக்கமாக கூறுபவர் எவரும் இல்லை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்