பின்பற்றுபவர்கள்

16 பிப்ரவரி, 2009

ஸ்வாமி ஓம்கார் இடுகைக்கு எதிர்வினை !

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா என்ற தலைப்பில் ஸ்வாமி ஓம்கார் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். இந்திய பண்பாடு அழிந்துவருவதற்கு காரணம் வெளிநாட்டு சதி என்பதாக எழுதி இருப்பதை ஏற்பதற்கு இல்லை. இந்தியாவின் பண்பாடு என்பதை வெள்ளைக்காரர்கள் காட்டுமிராண்டி பண்பாடாக கருதினார்கள் என்று எழுதி இருக்கிறார். ஒப்புக் கொள்ள வேண்டியது. வெள்ளையர் வருகையின் முன்பு இந்தியாவின் பண்பாடு என்னவாக இருந்ததை என்பதைப் பார்க்கவேண்டும்.

வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில் இருந்து கால்வரை பிறந்தவர்கள் இன்னார் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு நால்வருண முறையும், மேலோர், கீழானவர் என்கிற பாகுபாடுகளும் அவர்களுக்குள்ளும் சேரவிடாமல் பஞ்சமர் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தன. இதில் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் சேர்த்த மக்கள் தொகையில் மற்றவர்கள் பாதிக்கும் குறைவாகவே இருந்தனர். சூத்திரர் மற்றும் பஞ்சமர் உடல் உழைப்பில் மற்ற மூவர்ணத்தாரும் உடல் நோகாமல் நிழலில் பிழைப்பை நடத்து வந்தனர். பிறப்பினால் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பதை சாபமாகவும், தலையெழுத்தாகவுமே நினைத்து அதில் இருந்து விடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றியும் வாழ்ந்துவந்தனர். இவையெல்லாம் படிப்படியாக புரிந்து கொள்ளப்பட்டது வெள்ளையார் வருகையினால் தான்.

வெள்ளைக்க்காரர்களை 'துரை'யாக அழைத்தவர்களும், அவர்களிடம் ஊழியம் பார்த்தவர்களும், அவர்களது மொழியைக் கற்றுக் கொண்டவர்களில் பாமரர் யாரும் கிடையாது, அவ்வாறெல்லாம் செய்தவர்கள் படித்த 'பண்டி'தர்களே.

ஸ்வாமி மேலும் சொல்கிறார், வெள்ளைக்காரர்கள் 'இந்தியா' என்று அழைத்ததாலேயே நாம் 'பாரதத்தை' மறந்து இந்தியா என்று அழைக்கிறோம் என்கிறார். ஸ்வாமி, வெள்ளைக்காரர்களை விடுங்கள் நம் இந்திக்காரர்கள் 'இந்தி'யா என்று அழைப்பதையே விரும்பி செயல்படுகிறார்கள்.

ஸ்வாமி மேலும் ஆதங்கப்படுகிறார், பாம்பாட்டிகளையும், வித்தைக்காட்டுபவர்களையும் பார்த்துவிட்டு இந்தியர்கள் என்றால் காட்டுமிராண்டுகளளென்று எண்ணுகிறார்கள் என்கிறார். நமக்கு அதே தான், மடோனோ மற்றும் டூப் பீஸ் அழகிகளைப் பார்த்துவிட்டு அது வெளிநாட்டினரின் தேசிய உடை என்று நினைப்பது இல்லையா ? வெளிநாட்டினர் என்றாலே அவர்கள் கணவன் மனைவியாக கடைசிவரை வாழாதவர்கள், அடிக்கடி மணவிலக்கு பெருபவர்கள் என்ற கற்பனையெல்லாம் வைத்திருக்கிறோம். அங்கும் 50 ஆண்டு மணநாள் நிறைவுக்கான வாழ்த்து அட்டைகள் விற்பதை நாம் நினைத்து பார்த்ததே இல்லை. பயன்பாட்டில் இல்லாத ஒன்றையா ஒரு நாட்டில் விற்பார்கள் ?உண்மையிலேயே வெளிநாட்டுக்காரர்களைவிட வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பும் இந்தியர்கள் செய்யும் அலட்டல் அளவுக்கு கூட இந்தியா வந்து செல்லும் வெள்ளைக்காரர்கள் நடந்து கொள்வது கிடையாது.

"சினிமா என்பது கலாச்சாரத்தின் ஓர் பிம்பம் என மறந்து தங்கள் மனம் போன போக்கில் இவர்கள் சினிமா எடுப்பதால் பாரதம் என்பது வேறு வகையான தன்மையில் வரலாற்றில் பதிவாகிறது. 50 வருடம் கழித்து இந்தியர்களின் மனநிலை 2008ல் எப்படி இருந்தது என ஆய்வு மேற்கொண்டால் ஆவணமாக இருப்பது தற்சமய சினிமா எனும் ஊடகம் என்பதை மறந்துவிடக்கூடாது." - ஸ்வாமி ஓம்கார்

நம் நாட்டின் சத்யே ஜித்ரே போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களும் இந்தியாவின் அவல நிலையை, ஏழ்மையை படம் எடுத்து தான் புகழ் அடைந்தார்கள். நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளலாம், அடுத்தவன் வந்து 'உங்க ஊரில் இது நடக்குது' என்று காட்டினால் தவறா ?

ஸ்வாமியின் மற்ற மற்ற வரிகளெல்லாம் ஏற்புடையது தான். ஆனால் ஒட்டுமொத்தமாக கலாச்சார சீரழிவுக்கு வெள்ளைக்காரனைக் காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல. வெள்ளையர் வருகைக்கு முன்பு 'முலை' வரி கட்டிய மக்கள் உண்டு, அதற்கு கட்டாயப்படுத்தியவர்கள் காட்டுமிராண்டிகளா ? அதை சுட்டிக்காட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா ? ஒருவழியாக உடன்கட்டை கலாச்சாரம் ஒழிந்திருந்தாலும், விதவை மறுமணம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாவே இருந்தது, அதனை 'வாட்டர்' படத்தின் மூலமாக ஆவனப்படுத்த முயன்ற தீபா மேத்தாவுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்ன என்ன என்று அனைவருமே அறிவர். வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இருந்தது' என்று உங்களால் கண்டிப்பாக கூறமுடியாது.

உலகின் இதயம் போல் நடுவில் இருந்தாலும், இந்தியா பொருளாதாரத்திலும், இன்னபிறவற்றிலும் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் ? பழமை வாதம், மூட நம்பிக்கை தான்.

யாரோ ஒரு கவிஞன் சொன்னான்,

விதவைகளின் வெப்ப மூச்சில்
வெந்து கொண்டிருக்கிறது இந்தியா !


நம்மிடம் குறை இருப்பதை உணர்பவர் எவரோ அதை களைய முயற்சிப்பவரும் அவரே ஆவர். மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்டதே என்பதற்காக நம் குறைகள் நிறைகள் ஆகிவிடுமா ? அல்லது அவர்களை பதிலுக்கு குற்றம் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?

30 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

சாட்டையடி கோவியாரே...:-))

நாகை சிவா சொன்னது…

//ஸ்வாமி மேலும் சொல்கிறார், வெள்ளைக்காரர்கள் 'இந்தியா' என்று அழைத்ததாலேயே நாம் 'பாரதத்தை' மறந்து இந்தியா என்று அழைக்கிறோம் என்கிறார். ஸ்வாமி, வெள்ளைக்காரர்களை விடுங்கள் நம் இந்திக்காரர்கள் 'இந்தி'யா என்று அழைப்பதையே விரும்பி செயல்படுகிறார்கள்.//

ஸ்வாமி சொல்வதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்திக்காரர்கள் எப்பொழுதுமே பாரத் என்று தான் அழைப்பார்கள்.

என் அனுபவம் மற்றும் மிக சாதாரண உதாரணம் - கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, ஒலிம்பிக், ஆசிய போன்ற இன்னபிற விளையாட்டு போட்டிகளின் நேரடி இந்தி வர்ணனையை கேட்டு இருந்தாலே மிக தெளிவாக தெரியும். மூச்சுக்கு மூச்சு பாரத் என்ற வார்த்தை தான் உபயோகப்படுத்துவார்கள்.

இந்திக்காரர்கள் - அதனால் "இந்தி"யா லாஜிக் சகிக்கல அண்ணாத்த...

கூடவே போன பதிவின் உங்கள் நன்றி ஏற்றுக் கொண்டேன் :))) நன்றிக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா,

//ஸ்வாமி சொல்வதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்திக்காரர்கள் எப்பொழுதுமே பாரத் என்று தான் அழைப்பார்கள்.//

அது தெரியும். நான் இங்கு சொல்லவருவது, இந்திக்காரர்கள் இந்தியாவை 'இந்தி'மயமாக்குவதையே விரும்புகிறார்கள் என்ற பொருளில் சொன்னேன்.

பாரத் என்று அழைத்தாலும் இந்தியா என்று அழைத்தாலும் எனக்கு இந்த எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இல்லை. ஸ்வாமிதான் பாரதம் என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

பின்னூட்டத்திற்கு நன்றி சிவா !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
சாட்டையடி கோவியாரே...:-))
//

டொன்லி என்னிடம் இருப்பது மயிலிறகுதான் சாட்டை அல்ல.

பின்னூட்டத்திற்கு நன்றி !

வெற்றி சொன்னது…

அன்பு கோவியாரே,
ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு கேள்வியும் அர்த்தமுள்ளவை.

//மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்டதே என்பதற்காக நம் குறைகள் நிறைகள் ஆகிவிடுமா ? அல்லது அவர்களை பதிலுக்கு குற்றம் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ?//

ஈட்டி வரிகள். ஒவ்வொரு இந்தியன் மனதிலும் எழ வேண்டிய ஞாயமானக் கேள்விகள்.

//வெள்ளைக்க்காரர்களை 'துரை'யாக அழைத்தவர்களும், அவர்களிடம் ஊழியம் பார்த்தவர்களும், அவர்களது மொழியைக் கற்றுக் கொண்டவர்களில் பாமரர் யாரும் கிடையாது, அவ்வாறெல்லாம் செய்தவர்கள் படித்த 'பண்டி'தர்களே.//


எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்து பொக்கிசம்.

//வெள்ளையர் வருகைக்கு முன்பு 'முலை' வரி கட்டிய மக்கள் உண்டு, அதற்கு கட்டாயப்படுத்தியவர்கள் காட்டுமிராண்டிகளா ? அதை சுட்டிக்காட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா ?//

எனதருமை நண்பனே, கொன்னுட்டீங்க.
வாழ்க! கோவி.

ராமகுமரன் சொன்னது…

ஐயா,

துரை என்று அழைத்தவர்கள் எல்லாம் பன்டிதர்கள் என்று சொல்கிறீர்கள், எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டும் குறை கூறும் போக்கு உங்களிடமும் தென்படுகிறது, வேறு யாரும் வெள்ளையனிடம் ஊழியம் செய்யவில்லையா உதாரனத்திற்கு போலீஸ் துரை மற்றும் ரானுவத்தில் இருந்தவர்கள் அனைவரும் பண்டிதர்க ளா , அப்படியென்றால் சீக் ரெஜிமன்ட், கூர்க்கா ரெஜிமன்ட் எல்லாம் எங்கிருந்து வந்தது, இப்பொழுது நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்கள் , அதே நேரத்தில் ஒரு கட்டிட தொழிலாளி வீடு கட்டுகிறார், அதனால் நீங்கள் உடல் நோகாமல் அவரை வேலை வாங்குகிறீர்கள் என்று சொல்ல முடியுமா

கோவி.கண்ணன் சொன்னது…

//RamKumar said...
ஐயா,

துரை என்று அழைத்தவர்கள் எல்லாம் பன்டிதர்கள் என்று சொல்கிறீர்கள், எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டும் குறை கூறும் போக்கு உங்களிடமும் தென்படுகிறது
//

ஐயா, 'அவர்களை' என்று நீங்கள் எவர்களைச் சொல்கிறீர்கள் ? பார்பனர்களையா ? நான் அவ்வாறு கூறவில்லை. பண்டிதர்களில் பார்பனர்கள் உண்டு, பண்டிதர்கள் அனைவருமே பார்பனர்கள் இல்லை. பண்டிதர்கள் என்றால் படித்தவர்கள் என்றே பொருள். அன்றைய பார்பனர்கள் அனைவருமே படித்தவர்கள் என்று நான் கருதவில்லை. உங்களுக்கு அப்படி ஒரு உயர்ந்த எண்ணம் இருக்கலாம். எனக்கில்லை.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன்,

நல்ல ”எச பாட்டு” பாடி உள்ளீர்கள் :)

மேலைநாட்டுக்காரர்களும் என கூறினேன். அவர்கள் மட்டும் தான் காரணம் என சொல்லவில்லை. எனது பதிவு சுருக்க பட்டுவிட்டது..என்னை தூண்டிவிட்டு படிக்கும் வாசகர்களை துன்பப்படுத்தாதீர்கள் :))

சினிமாவை பற்றி எழுதிய பதிவு என்பதால் பின்னூட்டம் போட எனக்கு ஓர் சினிமா வசனமே ஞாபகம் வருகிறது.. :)

பாட்டேழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...

சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))

உங்கள் தருமி.

கிரி சொன்னது…

//சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))//

ஹா ஹா ஹா

கோவி கண்ணன், சாமி அவர்கள் மட்டுமே என்று கூறவில்லை அவர்களும் ஒரு காரணம் என்பதாக தான் கூறி இருக்கிறார்.

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இருந்தது' என்று உங்களால் கண்டிப்பாக கூறமுடியாது.
//

நச்!

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
வெள்ளையர் வருகைக்கு முன்பு 'முலை' வரி கட்டிய மக்கள் உண்டு, அதற்கு கட்டாயப்படுத்தியவர்கள் காட்டுமிராண்டிகளா ? அதை சுட்டிக்காட்டியவர்கள் காட்டுமிராண்டிகளா ?
//

கேட்டா அது தான் மனு நீதின்னு சொன்னாலும் சொல்வாங்க...

priyamudanprabu சொன்னது…

நல்லாயிருக்குநடக்கட்டு நடக்கட்டும் தொடருங்கள்
நாராயணா! நாராயணா!

priyamudanprabu சொன்னது…

//வெள்ளைக்க்காரர்களை 'துரை'யாக அழைத்தவர்களும், அவர்களிடம் ஊழியம் பார்த்தவர்களும், அவர்களது மொழியைக் கற்றுக் கொண்டவர்களில் பாமரர் யாரும் கிடையாது, அவ்வாறெல்லாம் செய்தவர்கள் படித்த 'பண்டி'தர்களே.//

சரியா சொன்னீங்க

priyamudanprabu சொன்னது…

///
சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))

////


ஸ்வாமி கேட்கிறாரே!!!

(நாரயணா ! நராயணா!)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எதிர்வினையா?
அதிர்வினையா?
இரண்டும் என்று நினைத்துக் கொண்டு படித்து முடித்தேன். நல்லா இரு(ங்க)க்கு!

Test சொன்னது…

மிகச்சிறந்த கருத்து பரிமாற்றம்

//வெள்ளைக்காரர்கள் 'இந்தியா' என்று அழைத்ததாலேயே நாம் 'பாரதத்தை' மறந்து இந்தியா என்று அழைக்கிறோம் என்கிறார். ஸ்வாமி, வெள்ளைக்காரர்களை விடுங்கள் நம் இந்திக்காரர்கள் 'இந்தி'யா என்று அழைப்பதையே விரும்பி செயல்படுகிறார்கள்.//
முகலாயர்களும் இந்தியாவை "இந்தியா" என்று அழைக்காமல் "ஹிந்துஸ்தான்" என்று அவர்கள் பாணியிலே அழைத்தார்கள்...

//உலகின் இதயம் போல் நடுவில் இருந்தாலும், இந்தியா பொருளாதாரத்திலும், இன்னபிறவற்றிலும் பின் தங்கி இருப்பதற்கு என்ன காரணம் ? பழமை வாதம், மூட நம்பிக்கை தான்.//
முற்றிலும் உண்மை, அதனுடன் அதிக மக்கள் தொகை, அரசியல், கடுமையான சட்டங்களும்/ தண்டனைகளும் இல்லாததே காரணம்...

sarul சொன்னது…

என் முதுகிலுள்ள அழுக்கை கழுவ நான் முயற்சிக்கவும் மாட்டேன் ஆனால் அதைச் சுட்டிக் காட்டுபவன் பண்பாடற்றவன் என்று வசை பாடுவேன் , இது தான் இவர்களின் நோய்.
இந்த வசை பாடலுக்குச் செலவிட்ட சக்தியில் சிறிதளவேனும் அந்தக் குறைகளைத் திருத்தச் செலவிட்டால் நாடு சிறக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் 11:50 PM, February 16, 2009
திரு கோவி.கண்ணன்,

நல்ல ”எச பாட்டு” பாடி உள்ளீர்கள் :)

மேலைநாட்டுக்காரர்களும் என கூறினேன். அவர்கள் மட்டும் தான் காரணம் என சொல்லவில்லை. எனது பதிவு சுருக்க பட்டுவிட்டது..என்னை தூண்டிவிட்டு படிக்கும் வாசகர்களை துன்பப்படுத்தாதீர்கள் :))

சினிமாவை பற்றி எழுதிய பதிவு என்பதால் பின்னூட்டம் போட எனக்கு ஓர் சினிமா வசனமே ஞாபகம் வருகிறது.. :)

பாட்டேழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்...

சிலர் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.. நீர் எந்த வகை என்பதை...:))

உங்கள் தருமி.
//

ஸ்வாமி வெள்ளைக்காரர்களைக் குறை சொல்லித்தான் உங்கள் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.

"பாரதத்தில்" இருமுறை வெள்ளையர் ஊடுறுவல் நடந்திருக்கிறது. ஒன்று இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. மற்றொண்டு 3000 ஆண்டுகளுக்க்கு முன்பு. பழைய வெள்ளைக்காரர்கள் "பாரதவாசிகள்" ஆகிவிட்டார்கள், இந்தியர் அல்லாதவர் என்று பிரித்தரிய நிலையில் தோற்றமும் மாறிவிட்டது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//KS said...
என் முதுகிலுள்ள அழுக்கை கழுவ நான் முயற்சிக்கவும் மாட்டேன் ஆனால் அதைச் சுட்டிக் காட்டுபவன் பண்பாடற்றவன் என்று வசை பாடுவேன் , இது தான் இவர்களின் நோய்.
இந்த வசை பாடலுக்குச் செலவிட்ட சக்தியில் சிறிதளவேனும் அந்தக் குறைகளைத் திருத்தச் செலவிட்டால் நாடு சிறக்கும்.
//

கருத்துக்கு நன்றி. ஸ்வாமி வெளிமுகமாக மட்டுமே பார்த்து எழுதிவிட்டார் என்பதே என் ஆதங்கமும்.

sarul சொன்னது…

//வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில் இருந்து கால்வரை பிறந்தவர்கள் இன்னார் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு//

இந்தக் கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார் , அவரின் பதிவில் நான் கேட்ட கேள்விக்கே அவர் பதிலிறுத்ததில்லை .

உதாரணம்‍‍.. ,Monday, February 9, 2009
ஆன்மீக சாதனை
கேட்கப்பட்ட கேள்வியின் பகுதி

வணக்கம் ஸ்வாமி
ஒரு சந்தேகம்
தான் சமாதி அனுபவம் பெற்றுவிட்டேன் என்று சொல்பவர்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது.

இதற்குப் பின் பின்னூட்டமிட்டவர்களையெல்லாம் கண்ணுற்றவர் இதை மட்டும் தவிர்த்ததேனோ ?

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ?? :‍‍))

கோவி.கண்ணன் சொன்னது…

//KS said...
//வருண அடுக்கு முறையில் பிரம்மனை கூறுபோட்டு தலையில் இருந்து கால்வரை பிறந்தவர்கள் இன்னார் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு//

இந்தக் கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார் , அவரின் பதிவில் நான் கேட்ட கேள்விக்கே அவர் பதிலிறுத்ததில்லை .
//

ஸ்வாமி ஓம்கார் பதிவை பின் தொடர்பவராக இணைந்து படிக்கிறிங்க, கண்டிப்பாக பதில் சொல்லுவார்.

SurveySan சொன்னது…

ரொம்ப ஆராயறீங்க.

நையாண்டி நைனா சொன்னது…

சபாஷ் சரியான போட்டி....
ஒருவர் ஆத்திக சாமி, இன்னொருவர் நாத்திக சாமி.

கோவி.கண்ணன் சொன்னது…

//தேனியார் said... எனதருமை நண்பனே, கொன்னுட்டீங்க.
வாழ்க! கோவி.

10:16 PM, February 16, 2009//

தேனியார்,

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

அது சரி said...
//
வெள்ளையர் வருகைக்கு முன் 'இந்தியா சுபிட்சமாக இருந்தது' என்று உங்களால் கண்டிப்பாக கூறமுடியாது.
//

நச்!

*********

அது சரி, இரண்டு பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபு said...
நல்லாயிருக்குநடக்கட்டு நடக்கட்டும் தொடருங்கள்
நாராயணா! நாராயணா!
//

பிரபு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எதிர்வினையா?
அதிர்வினையா?
இரண்டும் என்று நினைத்துக் கொண்டு படித்து முடித்தேன். நல்லா இரு(ங்க)க்கு!
//

:) செய்வினை !

கோவி.கண்ணன் சொன்னது…

Logan நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
ரொம்ப ஆராயறீங்க.
//

ஆராய்றிங்க, கொஞ்சமாக எழுதி இருந்தால் அய்யாயிறிங்க, நாலாயிறிங்க, மூவாயிறிங்க என்று சொல்லி இருப்பிங்களா ? காடுப்பாயிறிங்க :)))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
சபாஷ் சரியான போட்டி....
ஒருவர் ஆத்திக சாமி, இன்னொருவர் நாத்திக சாமி.
//

ஒரு சாமி மற்றொருவர் ஆசாமி என்றும் சொல்லி இருக்கலாம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்