பின்பற்றுபவர்கள்

8 பிப்ரவரி, 2009

(நான்) கடவுள் பாதி மிருகம் பாதி !

பாலா படத்தில் மெசேஜ் என்று எதுவுமில்லாவிட்டாலும் இயல்பு திரைப்படம் என்பதற்காக பலரைப் போல் தான் நானும் 'நான் கடவுள்' படத்தை பதிவர் நண்பர்களுடன் சென்று பார்த்தேன்.


மனநோய் மருத்துவமனை, சீர்திருத்தப் பள்ளி, சுடுகாடு இவைகளைச் சுற்றிய கதையாக எடுத்தவர், சுடுகாடு மற்றும் பிச்சைகாரர்களையும், சாமியாரையும் வைத்து இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார். அவற்றை படமாக்கியது அருமை. தொடக்கத்தில் பிச்சைகாரர்களின் காட்சிகளில் இரக்க உணர்வைக் கூட்டி பிறகு அவற்றை இயல்பாகவும், நகைச்சுவையாகவும் மாற்றி இருப்பது நன்றாக இருக்கிறது. ஆர்யா மீது இருந்த எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு சென்று கடைசியில் படத்தில் வந்து போகும் பாத்திரம் என்பதாக முடித்து இருக்கிறார். இளையராஜாவின் பின்னனி அருமை.

ஏற்றுக் கொள்ள முடியாத மரணங்கள் தான் பாலா படத்தின் முடிவு. இதிலும் அதே அதே.

எந்த திரைப்படத்திலும் (செய்தி) மெசேஜ் இருக்கும். பாலாப் படங்கள் பொதுவாக நிகழ்வுகள் அடிப்படையில் எடுக்கப்படுவது என்றாலும், என்ன சொல்ல வருகிறார் என்பது தான் மெசேஜ். பாலாவின் மற்றப் படங்களில் முடிவு மரணம் சூழலால் பின்னப்பட்டு இருக்கும். இதில் மேசேஜ் ஆக வருகிறது

"சமூகத்தை கெடுப்பவர்களின் மரணம் தண்டனையாகவும், சமூகத்திற்கும், தனக்குமே தேவையற்றவர்களின் மரணம் அவர்களே வரமாகக் கொள்ள வேண்டும் என்பதாக புரிய வைக்கிறார், அந்த மரணங்களை கொலைகள் மூலம் நிறைவேற்றும் நீதி தேவனாக ஆர்யா.



எந்த ஒரு நாட்டிலும் உடல்திறனற்றோரை (ஊனமுற்றோர்) இல்லாமல் இல்லை, அங்கெல்லாம் அவர்களில் பலர் இரப்பதும் இல்லை. அரசோ, உறவினர்களோ அவர்களை பார்த்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் தான் உடல்திறனற்றோர் பலரை ஆதரவின்றி விட்டு இரப்பவர்கள் ஆக்குகிறார்கள். உடல்திறனற்றோர்களில் இரப்பவர்கள் உருவாவதற்கு காரணம் சமூகமேயன்றி உடல்திறனற்றோர்களே அல்ல.

ஆனால் படத்தில் 'கருணைக் கொலை' போல் அவர்களைக் கொல்லலாம், அவர்களை அந்த நிலைக்கு வற்புறுத்துபவர்களையும் கொல்லமாம் என்ற செய்தியைச் சொல்கிறது படம். வாழத்தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் வரமாம் ! போங்கய்யா......உடல்திறனற்றோர் இந்தப்படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு தீர்ப்புக்கு மேலும் வேதனை படுவார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் இரத்த உறவினர்களும் வேதனைப் படுவார்கள். பாலாவின் முந்தைய படங்கள் தனிமனித விருப்பு / வெறுப்பு மரணம் அதை சகிக்கலாம். இதில் ஒரு சமூக செய்திபோல் இருப்பதால். இத்தகாத கருத்து திணிப்பு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கண்டிக்கத் தக்கதும் கூட

*****

பூஜாவின் நடிப்பு சிறப்பானது. விருது(கள்) கிடைக்கலாம். மற்ற நடிகைகள் அவ்வ்ப்போது ஏன் படத்தில் இருந்து விலகினார்கள். பாலா ஏன் இவ்வளவு நாள் இழுத்தார் என்பதற்கு பூஜாவிற்கு கொடுத்த (பிச்சை) பாத்திரம் காரணம். யாராலும் எளிதில் செய்ய முடியாத, தன்னாலேயே பார்க்க முடியாத வேடம். ஆர்யா... நன்றாக உழைத்திருக்கிறார். விக்ரம் சேதுவில் பெற்ற பெயரை பெருவாரா என்பது ஐயமே.



வழக்கமாக பார்பனர்களை சாடும் பாலா, ஜெமோ அருகில் இருந்தால் அவர்களின் இயல்பைச் சொல்லும்படியான ஒரு நிதிபதி காட்சியோடு அதனை முடித்துக் கொண்டார். ஒரு படத்தில் வடிவேலுவிடம் பின்லேடன் அட்ரஸ் எங்கிருக்குன்னு பார்த்துச் சொல்லச் சொல்லும் ஒரு மனநோயாளியாக நடித்தவர் பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்துபவராக ஆர்யாவைவிட மிகுதியான காட்சிகளில் வருகிறார். நன்றகாவும் செய்திருக்கிறார்.

படத்தில் சாமியார்கள் ஒருவரை பார்த்தவுடன் எடைபோட்டுவிடுவதாகச் சொல்லவருவது மூட நம்பிக்கையையே ஏற்படுத்தும்.

படமாக்கிய நேர்த்திக்காக பார்க்கலாம். மற்றபடி படத்தின் மெசேஜ்........டேமேஜ் !

நான் கடவுள் .....பாதிக்கு மேல் மிருக சிந்தனை !

பா Law பெரிய தவறு !

18 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

ஓ...பார்த்தாகிவிட்டதா..? எத்தனை மணி காட்சி...? நானும் இப்போது தான் படம்முடிந்து வந்து பதிவு போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...:-))

சி தயாளன் சொன்னது…

”வாழத்தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் வரமாம் ”

அது கொடுக்கப்படும் காட்சியை யோசித்துப் பாருங்கள்...அவ்வளவு வேதனையையும் கொடுமையையும் அனுபவித்தபின்...அந்த பூஜா கதாபாத்திரம் தான் அப்படி கேட்பதாக காட்சி அமைந்திருக்கும்....ஆதலால் அதில்(காட்சியில்) தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை...

படத்தில் நம்ம சிங்கை சென்சார் புகுந்து விளையாடி விட்டது போல்...

அந்த அரசியல் நகைச்சுவைகள் சூப்ப்பர்ப்...

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//’டொன்’ லீ said...
ஓ...பார்த்தாகிவிட்டதா..? எத்தனை மணி காட்சி...? நானும் இப்போது தான் படம்முடிந்து வந்து பதிவு போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...:-))
//

நாங்களும் ( ஜெக்கு, சித்தப்பா, முராம்,பாஸ்கர்) எல்லோரும் இப்பதான் பீச் கோல்டன் மைல் டவரில் படம் பார்த்து வந்தோம், (இரவு) 11 மணிக்கு முடிந்தது

சி தயாளன் சொன்னது…

//நாங்களும் ( ஜெக்கு, சித்தப்பா, முராம்) எல்லோரும் இப்பதான் பீச் கோல்டன் மைல் டவரில் படம் பார்த்து வந்தோம், (இரவு) 11 மணிக்கு முடிந்தது
//

ஓ...நான் ஜீசுன்...9 மணிக்காட்சி :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
”வாழத்தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் வரமாம் ”

அது கொடுக்கப்படும் காட்சியை யோசித்துப் பாருங்கள்...அவ்வளவு வேதனையையும் கொடுமையையும் அனுபவித்தபின்...அந்த பூஜா கதாபாத்திரம் தான் அப்படி கேட்பதாக காட்சி அமைந்திருக்கும்....ஆதலால் அதில்(காட்சியில்) தவறிருப்பதாக எனக்கு தோன்றவில்லை...//

அந்த வசனத்தை படத்தில் மூன்று இடத்தில் வடமொழி செய்யுளாக சொல்கிறார்கள். அந்த காட்சி(திணிப்பு) அதைத்தான் சொல்கிறது

//படத்தில் நம்ம சிங்கை சென்சார் புகுந்து விளையாடி விட்டது போல்...//

ஆமாம்

Athisha சொன்னது…

நங்னு நச்சுனு சொல்லிருக்கீங்க...

ஜெமோ குறித்து அதிகம் சொல்லாமல் போனதுதான் கசுடமா போச்சுண்ணே

ஜோ/Joe சொன்னது…

ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு கொடுக்கப்படும் முடிவு அந்த்த பாத்திரம் சார்ந்த ஒட்டு மொத்த சமுதாயத்துக்கோ கூட்டத்துக்கோ சொல்லப்பட்டதாக நினைத்து நான் திரைப்படத்தை எடைபோடுவதில்லை.

என்னைப் பொறுத்தவரை பாலாவின் உழைப்பு ,தனித்துவம் இரண்டுக்கும் ஈடாக தமிழில் வேறு எந்த இயக்குநரையும் சொல்ல முடியாது.

தமிழில் இப்படி ஒரு படம் எடுக்க பாலாவால் மட்டுமே முடியும் (இப்போதைக்கு) .outstanding movie.

priyamudanprabu சொன்னது…

///
எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்
////

இதுக்காக ஒரு பின்னூட்டம்

RAHAWAJ சொன்னது…

பார்தாச்சா கோவி,விமர்சனம் நன்றாக இருந்தது,நான் படம் பார்க்கவேண்டாம் உங்கள் விமர்சனத்தை வைத்து பார்த்த்துபோல் நாமும் சொல்லலாம் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// அதிஷா said...
நங்னு நச்சுனு சொல்லிருக்கீங்க...

ஜெமோ குறித்து அதிகம் சொல்லாமல் போனதுதான் கசுடமா போச்சுண்ணே
//

ஜெமோவுக்கு ஜென்மமோட்சம் நீங்கதான் நல்ல கொடுத்து இருக்கிங்களே போதாதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு கொடுக்கப்படும் முடிவு அந்த்த பாத்திரம் சார்ந்த ஒட்டு மொத்த சமுதாயத்துக்கோ கூட்டத்துக்கோ சொல்லப்பட்டதாக நினைத்து நான் திரைப்படத்தை எடைபோடுவதில்லை.//

குறிப்பிட்ட பாத்திரமா ? வில்லனில் போலிஸ்காரர் முதல் பலரை அப்படியே தண்டிக்காமல் விட்டுவிட்டார், படத்தின் நீளம் கூடிவிடக் கூடாது என்பது காரணமாக இருக்கலாம். அதனால் ஒருபாத்திரத்திற்கான செய்தி என்று என்னால் கொள்ள முடியவில்லை.

//என்னைப் பொறுத்தவரை பாலாவின் உழைப்பு ,தனித்துவம் இரண்டுக்கும் ஈடாக தமிழில் வேறு எந்த இயக்குநரையும் சொல்ல முடியாது.//

திரைக்கதை, காட்சிகள் சிறப்பானதுதான்.

//தமிழில் இப்படி ஒரு படம் எடுக்க பாலாவால் மட்டுமே முடியும் (இப்போதைக்கு) .outstanding movie.
//

நாசரின் தேவதை கூட கிட்டதட்ட விளிம்புநிலை மாந்தர்கள் வாழ்கை அடிப்படையில் தான் இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபு said...
///
எனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்
////

இதுக்காக ஒரு பின்னூட்டம்
//

சிங்கப்பூர் பதிவர் !!!

பதிவர் சந்திப்புகளில் உங்களை எதிர்பார்க்கிறேன்.

மின் அஞ்சல் அனுப்புங்கள் govikannan at gmaildotcom

கோவி.கண்ணன் சொன்னது…

//RAHAWAJ said...
பார்தாச்சா கோவி,விமர்சனம் நன்றாக இருந்தது,நான் படம் பார்க்கவேண்டாம் உங்கள் விமர்சனத்தை வைத்து பார்த்த்துபோல் நாமும் சொல்லலாம் நன்றி
//

உங்களுக்கு 10 மணி பேருந்துதானே. நாம போய்டு வந்திருக்கலாம், நீங்க தான் எதோ சொல்லி எஸ்கேப் ஆகிட்டிங்க

Muruganandan M.K. சொன்னது…

மெசேஜ் எப்படியாயினும் பார்க்க வேண்டிய படம்போலத் தோன்றுகிறது. நல்ல பதிவு

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

விமர்சனத்துக்காக வேண்டியே படம் பார்க்கப் போனதாக அறிகிறேன். பாலா படம் இயற்கையான நிகழ்வாக வெளிக்கொணரப்படும் என்பது திண்ணம்.
இப்படி நூறு பேரு விமர்சனம் போட்டா படத்தை எப்படி பாக்கிறது. நான் இனிமே படம் பாக்கப் போவலை. உங்களால பாலாவுக்குத் தான் நட்டம். தயாரிப்பாளருக்கு பெருத்த நட்டம். :P

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

பெரியவா,
ஜோ அண்ணண் சொல்வதுதான் என் கருத்தும். எதற்கும் ஒரு கடுமையான நியதிகளை வகுக்க முடியாது.
எடுத்துக்காட்டாக தன்னை கொல்ல வருபவனை தாக்கி, தற்காப்புக்காக கொலையே செய்தாலும் அது குற்றமில்லை. ஆனால் அதே கொலையை வேறு சூழ்நிலையில் செய்தால்?

நான் இன்னம் படம் பார்க்கலை அதுனால என்னால முழுசா கருத்து சொல்ல முடியல.

ஆமா, நாசர் எடுத்த தேவதை படம் விளிம்பு நிலை மனிதர்களைக் குறித்த படமா? என்ன சொல்றீங்க நீங்க? தேவதை முந்துன ஜென்மத்துல இருந்து அடுத்த ஜென்மம் வரைக்கும் ஒரு பொண்ணுக்காக காத்திருக்க கதையில்ல. அதுல விளிம்பு நிலை மனிதர்கள் எங்க வந்தாங்க?

ஒரு வேளை நாசர் இயக்குன முதல் படமான அவதாரத்த சொல்றீங்களா? அது தான் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையைக் குறித்த படம்.

பெரியவா, என்னாச்சு? இப்ப எல்லாம் நிறைய எழுத்துப் பிழைகள், தவறான கருத்துக்கள்... கொஞ்சம் நல்லா ஓய்வு எடுங்க.
பணியிடத்தின் தூரம் காரணமா காலையிலே சீக்கிரம் எழுந்து பயணிக்கிற நீங்க ராத்திரி வெகுநேரம் ஆன்லைன்ல இருக்கத பார்க்குறேன். நல்லா ஓய்வு எடுத்துக்கோங்க அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு வேளை நாசர் இயக்குன முதல் படமான அவதாரத்த சொல்றீங்களா? அது தான் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையைக் குறித்த படம். //

நான் அவதாரம் படத்தைத் தான் பெயர் சட்டுன்னு நினைவில்லாமல் தேவதைன்னு சொல்லிட்டேன் சொன்னேன்.

ஜமாலன் சொன்னது…

நல்ல விமர்சனம். பாலாவின் படங்கள் பற்றி தமிழ் சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கியிருக்கும் myth ரொம்ப ஓவரா இருக்கிறது என நினைக்கிறேன். பாலாவின் பட்ங்கள் எல்லாமே வன்முறையின் அடிநாதத்தை கொண்டாடுபவை. அந்த வன்முறையும்கூட மிகவும் இயல்பற்ற தன்மைக்கொண்டது. குரல்வளைகளைக் குதறும் பாலாவின் நாயகர்கள் உளவியல் ஆய்விற்கும் சிகிச்சைக்கும் உரியவர்கள். அவர்களை கதாநாயகர்களாக வடிக்கும் பாலாவின் திறன் அதைவிட தீவிர சிகிச்சைக்கு உரியது. இப்படம் காசி பற்றிய மிகை பிம்பத்தை உருவாக்குகிறது. காசி பற்றி எடுக்கப்பட்ட வாட்டர் படம் சொல்லும் காசி வேறு, இதுவேறு.

பசி என்று ஒரு படம் ஷோபாவிற்கு விருதுவாங்கி தந்த துரையின் படம். அதவும் விளிம்பநிலை படம்தான். விளிம்பநிலை பற்றிய படம் எடுப்பது முக்கியமல்ல.. அதை காட்சிப்படுத்தி செய்யப்படும் பிழைப்புதான் முக்கியம். இது குறித்து இனியொருவில் சிறப்பான விமர்சனம் உங்கள் கருத்தைப்போலவே வந்துள்ளது. மற்றவர்கள் பார்க்க இணைப்பு...

http://inioru.com/?p=2166

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்