பின்பற்றுபவர்கள்

2 பிப்ரவரி, 2009

முத்துகுமாரின் உறுதி பயணம் !

முத்துகுமாரின் ஈழத்தமிழர்களின் நலன் குறித்த தற்கொலை தேவையற்றது, எனினும் நடந்து முடிந்தது என்று பார்க்கும் போது தனது மரணத்தின் வழி இன எழுச்சியையும் தமிழின தலைவர்களின் உண்மை முகத்தையும் சவக்குழிக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.

போஃபர்ஸ் நாயகனின் பெயரைச் சொல்லியும் அந்த 'மரணத்தை வைத்து அரசியல் செய்து', குடும்பத் தலைவனும், ஆடம்பர நாயகியும் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை வெளிச்சமிட்டு தமிழர்களின் மனதில் பதிந்துவிட்டார்.

தேவையற்ற மரணம் என்ற போதிலும் மாபெரும் அரசியல் தலைவரால் மட்டுமே ஏற்படுத்த முடிந்த தமிழின எழுச்சியை இந்த இளம் வயதில் ஏற்படுத்திய அவரது பயணம் உறுதியான பல ஓயாத அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாரின் எண்ணத்திற்கான வெற்றி முரசு கொட்டும் !

முத்துக்குமார் உடலின் இறுதி பயணக் காட்சிகளைப் பார்க்கும் போது இப்பயணம் மிக உறுதியான, உயர்வான பயணம் என்றே காண்போருக்கு உணர்த்தியது.

5 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

:) நாகேஸின் மரணம் முத்துக்குமாரின் செய்திகளை பின் தள்ளியதைப் பார்த்தீங்களா? நம்ம மக்களுக்கு மறதிக்குணம் ரொம்ப ஜாஸ்திங்க

sarul சொன்னது…

தங்கள் உண்மைக்கும் , நேர்மைக்கும் என் முதல் வணக்கம்.

வந்து போன வெள்ளையனால் முத்து என்று வருணிக்கப்பட்ட அந்த கத்து கடல்சூழ் இத்துப் போன் தேசத்தில் தினம் செத்து அழிந்துபோகும் சத்து அற்ற மனிதர்களுக்காய் தன்னுயிரை மாய்த்த இந்த முத்துக்குமாரன் என்றும் எங்கள் சொத்தாகிப்போனார்.

அசிங்கமான வழிகளிலெல்லாம் அரசியல் செய்யும் அவர்கள் இதை அரசியலாக்கவேண்டாமென்றது எவ்வளவு வேடிக்கை.

இதை எளுதத்துணிந்த உங்களின் துணிவிற்கு எனது பாராட்டுக்கள்.

Fatih Nakış சொன்னது…

selam Nakış Saç Ekimi Nakış Nakış

அசோசியேட் சொன்னது…

"முத்துகுமாரின் உறுதி பயணம் !"

மக்கள் மறந்து விடாது இருக்க வேண்டும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//முத்துகுமாரின் உறுதி பயணம் ! //

உண்மை ஐயா!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்