பின்பற்றுபவர்கள்

15 ஏப்ரல், 2008

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ... திரு வந்தியத்தேவன் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)

திரு வந்தியத்தேவன் அவர்களின் பின்னூட்டத்திற்கான மறுமொழியாக எழுதியது, நீளம் கருதி தனி இடுகையாக்கி இருக்கிறேன், அவருக்கு மட்டுமல்ல அதுபோன்ற கருத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் எனது கருத்தாக இதை எழுதுகிறேன்

//வந்தியத்தேவன் has left a new comment on your post "வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள...":

மாற்றம் என்பது முன்னேற்றதிற்கானதாக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் ஒரு வீம்புக்கு மாற்றுவது கொஞ்சம் பயத்தை அளிக்கிறது. கீழ்கண்டவாறு எல்லாம் அறிவிப்புகள் வெளியானால் எவ்வாறு இருக்கும். சற்று நகைச்சுவை உணர்வுடன் படியுங்கள். (அவற்றில் நகைச்சுவை இருப்பதாக தெரியவில்லை என்றாலும்! :) )//


முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், சங்ககாலத் தமிழன் அனைத்து சமயம் சார்ந்தவன், அவன் பவுத்தனாக இருந்திருக்கிறான், சமணனாக இருந்திருக்கிறான், மதமற்றவனாகக் கூட இருந்திருக்கிறான். அப்பொழுதும் அனைத்து தமிழர்களாலும் ஆண்டு பிறப்பு கொண்டாடப்பட்டே வந்தது. தமிழர்களின் நாட்காட்டி முறை திரிக்கப்பட்டவுடன் சித்திரையில் தமிழ் ஆண்டு பிறப்பதாகவும் அதன் கொண்டாடமெல்லாம் இந்து பண்டிகையாகவும் மாற்றப்பட்டது, தற்பொழுது தமிழர்களில் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்களா ? கொண்டாவில்லை என்றால் தமிழர் குடி முழுகிவிடுமா என்று கேட்பீர்களா ? எந்த ஒரு மொழியின் ஆண்டுபிறப்பும் மதம் தொடர்புடையாதாக இருந்தால் அந்த மதத்துக்காரர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள், உலகம் முழுவது ஆங்கில நாட்காட்டி முறை இருந்தாலும் எதாவது இஸ்லாமிய நாடுகளில் ஜென 1 ஐ புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறார்களா ? இந்தியாவில் கொண்டாடுகிறோம், அதனையும் இந்துமதவாத சக்திகள் எதிர்கின்றன.

இப்பொழுது சொல்லுங்கள் சித்திரை புத்தாண்டு இந்து பண்டிகைப் போல் உள்ளதா இல்லையா ? ஒரு புத்தாண்டு தேதியை மாற்றுவதன் மூலம் அனைத்து மத தமிழர்களின் ஒருமித்த தமிழ் விழா, பண்டிகையாக அது மாறும் என்றால் அதனை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? சீனர்கள் அவர்களின் புத்தாண்டை மதம் சார்ந்த ஒன்றாக கொண்டாடுவதில்லை, கொண்டாட்டதிலும் மத வாசனை இல்லை.

//வேட்டி தான் தமிழனின் பாரம்பரிய உடை என்று அறிவித்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வேட்டி கட்டிக் கொண்டு வரச் செய்யலாம், சத்யராஜ் சொன்னது போல தமிழ் கடவுள்களை மட்டும் தமிழன் வழிபட வேண்டும் என்று உத்திரவு இடலாம்.
படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிப்பது போல தமிழ் மக்கள் தம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைத்தால் அவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் இலவசம் என்று அறிவிக்கலாம். (ஆனால், தமிழினத் தலைவர் தம் பெயரை அன்புச்செல்வம் என்றும் கூட்டணித் தலைவரின் பெயரை
இராமஅடியான் என்றும் மாற்றிக் கொள்ள வேண்டும் முதலில்!)//


கேரளா மாநிலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு தான் அலுவலகம் செல்கின்றனர், அதை அவமானமாக யாரும் நினைப்பதில்லை, நமது முன்னோர்வழி உடை வேட்டியை வேஷ்டி என்று வடமொழியில் எழுதுவது தான் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் தமிழனின் மனநிலை மாறவேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் தமிழ்நாட்டு கோவில்களுக்கு வரும் விழுக்காடு, தமிழன் அங்கெல்லாம் படையெடுத்துச் செல்வதை ஒப்பிடும் போது மிக மிக குறைவு, தன்வீட்டை இருட்டாக போட்டுவிட்டு, அடுத்த தெருவுக்கே விளக்குகள் அளிக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அவரது செயலை போற்றுவீர்களா ? ஒருவருக்கொருவர் (பரஸ்பரம்) என்ற முறையில் தமிழர்களின் கோவில்களுக்கு பிறமாநிலத்தவர் வந்து சென்றால் நாமும் அவ்வாறு செய்யலாம், எங்கும் இருப்பது கடவுள் என்று நம்பும் தமிழ் பக்தர்கள், பிறமாநிலத்தில் உள்ளவற்றில் சக்தி இருப்பதாகவும், தம்மாநில கடவுள் வெறும் சிலை தான் என்று நினைத்து ஒதுக்கப்படுவதும் என்ன வகையான பக்தி என்று தெரியவில்லை. குழந்தைக்கு தமிழ் பெயர் வைக்கவும் அரசு அறிவித்தால் உண்டு என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு இன்று தமிழன் தன்னைத் தாழ்வாக நினைத்திருப்பது மாறவேண்டுமா? வேண்டாமா ?

//கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ் குடி. உணவு, உடை, பழக்க வழக்கம், திருவிழா, மொழி - இவற்றில் எதுவும் கலப்பில்லாமல் வணிகம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பிருந்த மூத்தகுடி தமிழன் மட்டுமே இருந்திருக்க முடியும். ஆக அந்த ஆதி தமிழன் பயன்படுத்திய பொருட்களை, வாழ்க்கை முறையை தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் கண்டுணர்ந்து அவ்வாறு வாழ தலைப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலாம். //

உலகில் எந்த ஒரு வளர்ந்த நாகரீகமும் உணவு, உடை, பழக்கவழக்கம், நாகரீகம், மொழி ஆகியவற்றை மாற்றிக் கொண்டது கிடையாது, இதற்கு சிறந்த உதாரணமாக சீனர்களையும் ஐரோப்பியர்களையும் காட்டலாம். அலுவலக உடை, வெளிப்பழக்கம் இதெல்லாம் வேறு, இது உலக அளவில் எல்லோரும் செய்வது தான், தன்னளவில் அரைக்கால் சட்டை அணியும் ஆண்கள் வெள்ளைக்கார பெண்மணிகளைப் பார்த்து தம்வீட்டு (தமிழ்) பெண்களும் அவ்வாறு மிடி அணியவேண்டும் என்று சொல்லத் தயாராக இருக்கிறார்களா ? எதுவுமே ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உள்ளதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், நாகரீக வளர்ச்சி என்பதை மறந்துவிட்டு விதண்டாவாதத்திற்காக ஏன் கோவணம் கட்டிக் கொண்டே தமிழன் இருக்கக் கூடாது என்றும் கேட்கலாம்.

//எனக்கு புத்தாண்டு எப்பொழுது கொண்டாடினாலும் என்ன? வருத்தம் என்னவென்றால் முன்பு பொங்கலுக்கு ஒருநாள் , தமிழ் வருடப் பிறப்பிற்கு ஒருநாள் என இரண்டு விடுமுறைகள் வரும். நல்ல விருந்து உணவு கிடைக்கும். புது படங்கள் வெளியாகும். இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக்கி விட்டால்! எதாவது புது பண்டிகைகள் உருவாக்கலாம். இன்று சோழர் காலத்தில் குடவோலை முறை துவக்கிய நாள். பாண்டிய மன்னன் சங்கம் வைத்த தினம், பல்லவன் புலிகேசியை வென்ற தினம். இப்படி.... இதை விட்டு விட்டு...!! :( நான் சொல்வது சரியா இல்லையா, நீங்களே சொல்லுங்கள் கோவியாரே! //

விடுமுறையெல்லாம் குறைக்க மாட்டார்கள், சித்திரை திருநாள் என்ற பெயரில் விடுமுறை விடுவார்கள், நீங்கள் சொல்பவை அனைத்தும் அதில் இருக்கும் என்றே நினைக்கிறேன். பிறமொழிக்காரர்களின் பண்பாடு, பழக்கவழக்கம், இதையெல்லாம் நமது முதுகில் சேர்த்து கட்டப்பட்டு இருப்பதை தூக்கி எறிவோம், மிகவும் கூனாகிப் போனதால் தமிழர்களின் பார்வை கூட மங்கிவிட்டது. எல்லாவற்றையும் தமிழுக்குள், தமிழர்களுக்குள் நுழைத்தவர்கள், தமிழர் தம் தெய்வங்களுக்கெல்லாம் (மதுரை வீரன் உட்பட) பூணூல் அணிவித்தவர்கள், தமிழர்கள் பூணூல் அணிய வேண்டும், ஆண்டு தோறும் ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வழக்கத்தை மட்டும் ஏன் நுழைக்கவில்லை?

முதலில் தமிழன் தான் யார் என்று உணரட்டும், இது போன்ற நடவடிக்கைகளினால் தான், தனக்கென தனிப்பண்பாடு இருந்தது, தாம் பழம்பெருமை மிக்கவர்கள் என்று தமிழன் உணர்வான். ஆபாசத்தை அடித்தளமாக வைத்துள்ள சித்திரை ஆண்டுப்பிறப்பின் கதைகள் நமக்கு எதற்கு ? இந்த கண்டறாவிக் கதை தமிழர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை என்றாவது உங்களுக்குத்த் தெரியுமா ? சற்று மனம் திறந்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தைக்கு பொங்கலோ பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துக்களையும் சேர்த்தே சொல்வீர்கள்.

வெளிநாட்டு அருட்தந்தை கால்டுவெல் ஐயர் திராவிட மொழிகளை ஆராய்ந்து தமிழ் தனித்தன்மை வாய்ந்தது, அது ஒரு சொம்மொழி என்று கண்டு சொல்லி இருக்காவிடில், வடமொழியில் இருந்து பிறந்ததே தமிழ் என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருப்போம், இன்னும் சிலர் இதே உளறலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவிலிகளின் அறியாக் கூற்றுப்படி வடமொழி தேவபாசையாம், அதிலிருந்து பிறந்த தமிழ் சூத்திர பாசையாம்.

நீங்கள் சொன்னது நகைச்சுவையாக தெரியவில்லை, பலருக்கு இருக்கும் அதே ஐயப்பாடுதான், இதுபற்றி தமிழ் மொழி ஆர்வளர்களும், தமிழ் பற்றாளர்கள் சொல்வதையும் கேட்டால், இது மதசார்பற்று ஒட்டுமொத்த தமிழனுக்கு நன்மை அளிப்பதை புரிந்து கொள்வீர்கள். தமிழ்புத்தாண்டு தேதி மாற்றம் குறித்து இஸ்லாமிய, கிறித்துவ சமூகம் வரவேற்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தமிழ்புத்தாண்டு மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட நடைமுறைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை, பலதரப்பினரிடம் இதுபற்றி கலந்துமுடிவை எட்டி இருக்கலாம்.

18 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

// ..... // இப்படி அடைப்புக்கு பதிலாக வேறு நிறம் கொடுத்திருந்தால் இன்னும் ப்ளிச் என்று தெரியுமே?

Unknown சொன்னது…

உண்மையான வாதம்.
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்விதமாக விளக்கியுள்ளிர்கள்
(கட்சி பேதங்கள்,விருப்பு வெறுப்புக்கள் தாண்டி-தமிழின உணர்வுடன்).

வந்தியத் தேவனின் (ஏற்புரை)
பதிலை(positive) எதிர் பார்ப்போம்.

வந்தியத்தேவன் சொன்னது…

நான் எந்தக் கருத்தும் இடவில்லை.

TBCD சொன்னது…

இந்த வேட்டி கட்டச் சொல்லுவியா, கோவனம் கட்டச் சொல்லுவியா என்பதிலே தெரிகிறது, அவற்றிக்கு என்ன மதிப்பு நம்மிடம் இப்போது இருக்கிறது என்று.

கோவனத்துடன் தான் முருகன் பழனியில் இருக்கிறார்...அதற்காக அவரை யாரும் பழிப்பதில்லை.

பாராளுமன்றத்திற்கே, வேட்டிக் கட்டி தான் மத்திய அமைச்சர் சிதம்பரம் போகின்றார்.

இங்கே மலேசியாவில் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வருவதை ஊக்குவிக்கின்றனர்.

நாம் தான் ஆங்கிலேய மோகம் வந்து, பாரம்பரிய ஆடைகளை துறந்துவிட்டோம். (வேட்டிக் கட்டு வரலாம் என்று,ஒரு அரசு ஆணை போட்டு வைக்கலாம்)

பண்டிகை என்றால் கூட கூடாரத்துணி தான் நமக்கு... :)

இத்தனை காலம் உண்மையான வருடபிறப்பை திரித்தவர்கள் மேல் கோவம் தான் நியாயமாக வர வேண்டும்..விந்தையிலும் விந்தை..கண்டுப்பிடித்துச் சொன்னவர்கள் மீது தான் பாயுகிறார்கள்.

பழமையயை நோக்கி போக வேண்டுமா என்பவர்கள் ஏதோ, பொ.கா 2090 (Common Era) தொழில் நுட்பத்தை பிடித்து தொங்கவில்லை. தவறான பழமையயைத் தானே பிடித்து தொங்குகிறார்கள்.

தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு இல்லாமல் இருப்பது சிலருக்கு தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு சாட்டையுடன் யாரவது ஒருவர் ஆட்சியில் வந்து சுளூக்கெடுத்தால் சரியாப் போகும்...

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் said...
நான் எந்தக் கருத்தும் இடவில்லை.
//

திரு வந்தியத்தேவன் அவர்களே,

இராமன் எத்தனை இராமனோ ?
:)

வந்தியத்தேவன் என்ற பெயரில் பின்னூட்டம் வந்தது, அதற்கான மறுமொழி இது. நீங்கள் யார், அவர் யார் என்று எனக்கு எந்த தனிப்பட்ட தகவலும் தெரியாது.

யார் கேட்டிருந்தார்களோ அவர்களுக்கான இடுகை தான் இது. உங்களை பொறுப்பேற்கச் சொல்லவில்லை.
:)

தங்களது கருத்து இல்லை என்று சொன்னதையும் ஏற்கிறேன்

வந்தியத்தேவன் சொன்னது…

வேட்டி கட்டுவது என்பது கேவலமானது அல்ல. தமிழ் நாட்டில்தான் வேட்டியின் பயன்பாடு மிகவும் அருகிவருகின்றது என சிலகாலத்திற்க்கு முன்னர் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் ராம்ராஜ் வேட்டி உற்பத்தி நிறுவனர் கூறியிருந்தார். ஏனைய மாநிலங்களில் வேட்டிக்கு இருக்கும் கேள்வி தமிழ் நாட்டில் இல்லையென்று கவலையுடன் தெரிவித்திருந்தார். என்ன செய்வது நாம் அன்னிய மோகத்தில் ஊறிவிட்டோம்.

முகவை மைந்தன் சொன்னது…

//இப்பொழுது சொல்லுங்கள் சித்திரை புத்தாண்டு இந்து பண்டிகைப் போல் உள்ளதா இல்லையா ? ஒரு புத்தாண்டு தேதியை மாற்றுவதன் மூலம் அனைத்து மத தமிழர்களின் ஒருமித்த தமிழ் விழா, பண்டிகையாக அது மாறும் என்றால் அதனை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?//

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பிற மதத்தினர் தமிழர் திருநாள் என்று பொங்கலைக் கொண்டாடுவது போல் தெரிகிறது. உண்மையில் ஒரு இந்து வீட்டில் சமைத்த பொங்கலைக் கூட பிற மதத்தினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக இந்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுல புத்தாண்டை மட்டும் கோலாகலமா கொண்டாடுவாங்களா என்ன?

//ஒரு மொழியின் ஆண்டுபிறப்பும் மதம் தொடர்புடையாதாக இருந்தால் அந்த மதத்துக்காரர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள், உலகம் முழுவது ஆங்கில நாட்காட்டி முறை இருந்தாலும் எதாவது இஸ்லாமிய நாடுகளில் ஜென 1 ஐ புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுகிறார்களா ? இந்தியாவில் கொண்டாடுகிறோம், அதனையும் இந்துமதவாத சக்திகள் எதிர்கின்றன.
//

இப்ப ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது சரின்னு சொல்றீங்களா? தப்புன்றீங்களா?

//கேரளா மாநிலத்தில் வேட்டி கட்டிக் கொண்டு தான் அலுவலகம் செல்கின்றனர், அதை அவமானமாக யாரும் நினைப்பதில்லை//

80களில் கூட பரவலாக இந்த பழக்கம் தமிழ்நாட்டிலும் இருந்தது. கல்லூரிக்கு மாணவர்கள் வேட்டியில் வருவார்கள். பின்னர் குறுகி, அருகிப் போய் விட்டது.

//தன்னளவில் அரைக்கால் சட்டை அணியும் ஆண்கள் வெள்ளைக்கார பெண்மணிகளைப் பார்த்து தம்வீட்டு (தமிழ்) பெண்களும் அவ்வாறு மிடி அணியவேண்டும் என்று சொல்லத் தயாராக இருக்கிறார்களா ?//

சிங்கப்பூர்ல இருந்துக்கிட்டு இப்படி சொன்னா எப்படி?!

//தமிழர் தம் தெய்வங்களுக்கெல்லாம் (மதுரை வீரன் உட்பட) பூணூல் அணிவித்தவர்கள், தமிழர்கள் பூணூல் அணிய வேண்டும்,//

முன்னாடி எல்லோருமே பூணூல் அணிந்து இருந்ததாக வேறொரு பதிவின் பின்னூட்டத்தில் படித்தேன். அணியாவிட்டால் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டோம். பூணூல் போட்டவர்கள் அதனால் இழந்து கொண்டிருப்பது நிறைய.

//தமிழ்புத்தாண்டு மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்ட நடைமுறைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை, பலதரப்பினரிடம் இதுபற்றி கலந்துமுடிவை எட்டி இருக்கலாம்.//

வழிமொழிகிறேன். வேறொரு ஆட்சியில் கருணாநிதி கொண்டு வந்த மாற்றம் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்ப் புத்தாண்டு சித்திரைக்குத் தூக்கி அடிக்கப் படும். பலரும் நம்மை எள்ளுவது உறுதி.

முகவை மைந்தன் சொன்னது…

//எந்த ஒரு மொழியின் ஆண்டுபிறப்பும் மதம் தொடர்புடையாதாக இருந்தால் அந்த மதத்துக்காரர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள்//

தமிழில் அப்படி இல்லை என்றே கருதுகிறேன். கோயிலுக்குச் சென்று வழிபடுவது அவரவர் விருப்பம். ஆங்கிலப் புத்தாண்டில் கிறித்துவர்கள் கோயிலுக்குச் செல்வதால் பிறர் அதனைக் கொண்டாடுவதைத் தவிர்ப்பதில்லை. நான் இட்லி, சாம்பார் சாப்பிட்டு கொண்டாடுவதால் பிறர் பிரியாணி வைத்துக் கொண்டாடக் கூடாது என எவர் தடுக்க முடியும்?

அப்புறம் உங்களுக்கு 'என் தமிழ்ப் புத்தாண்டு' வாழ்த்துக்கள்! கி கி கி (ஹி ஹி ஹி எனப் படிக்கவும்!)

முகவை மைந்தன் சொன்னது…

//தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !//

இந்த சுட்டி தமிங்கிலத்தில் தட்டச்சிடச் சொல்கிறது. தமிழ் 99 எழுதியைப் பரப்பும் முயற்சியை மழுங்கடிக்கும் என்பதால் இதனை ஊக்குவிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
// ..... // இப்படி அடைப்புக்கு பதிலாக வேறு நிறம் கொடுத்திருந்தால் இன்னும் ப்ளிச் என்று தெரியுமே?
//

குமார்,

சுட்டிக்காட்டியதை சரி செய்துவிட்டேன், மிக்க நன்றி !

எதோ சீருடையில் காட்சி தருகிறீர்களே ? அது எப்படி ?

கோவி.கண்ணன் சொன்னது…

//nellai said...
உண்மையான வாதம்.
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்விதமாக விளக்கியுள்ளிர்கள்
(கட்சி பேதங்கள்,விருப்பு வெறுப்புக்கள் தாண்டி-தமிழின உணர்வுடன்).

வந்தியத் தேவனின் (ஏற்புரை)
பதிலை(positive) எதிர் பார்ப்போம்.

10:20 AM, April 15, 2008
//

nellai,

எல்லாம் புரிதல் தான் காரணம், சில சமயம் தமிழ் வெறுப்பாக பரப்படும் கருத்துகளை சரி என்றே பலரும் நம்புகிறார்கள், தமிழ் வெறுப்புக்கும், உணர்வுக்கு வேறு பாடு தெரியாததால் இதுபோன்ற கேள்விகள் வருவது இயல்புதான்.

வந்தியத்தேவன் அவர்களுக்கும் இதே போன்று ஐயம் ஏற்பட்டு இருக்கும், நேற்று சென்னைக்கு தொலைபேசினேன், சில நண்பர்கள் சொன்னார்கள் "கருணாநிதி யார் என் வீட்டு பண்டிகைப் பற்றி முடிவு செய்வதற்கு ?" என்று. இது எப்படி இருக்கு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இந்த வேட்டி கட்டச் சொல்லுவியா, கோவனம் கட்டச் சொல்லுவியா என்பதிலே தெரிகிறது, அவற்றிக்கு என்ன மதிப்பு நம்மிடம் இப்போது இருக்கிறது என்று.

//

TBCD ஐயா,

கோவனம் பற்றி எழுதி சிலரை அம்மனமாக்கிவிட்டீர்கள்.

பதிவுக்கு பெருள் சேர்க்கும் உங்கள் பின்னூட்டம் இந்த இடுகையில் மிகவும் தேவையான ஒன்று !

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் said...
வேட்டி கட்டுவது என்பது கேவலமானது அல்ல. தமிழ் நாட்டில்தான் வேட்டியின் பயன்பாடு மிகவும் அருகிவருகின்றது என சிலகாலத்திற்க்கு முன்னர் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் ராம்ராஜ் வேட்டி உற்பத்தி நிறுவனர் கூறியிருந்தார். ஏனைய மாநிலங்களில் வேட்டிக்கு இருக்கும் கேள்வி தமிழ் நாட்டில் இல்லையென்று கவலையுடன் தெரிவித்திருந்தார். என்ன செய்வது நாம் அன்னிய மோகத்தில் ஊறிவிட்டோம்.

11:38 AM, April 15, 2008
//


வந்தியத்தேவன் ஐயா,

தமிழன் அசந்து இருந்து பலமுறை வேட்டி உருவப்பட்டதால், தமிழர்கள் தமக்கு வேட்டி தேவை இல்லை என்று நினைத்துவிட்டார்கள் போல.
:)

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

தனி பதிவிற்கு நன்றி கோவி. கண்ணன்! எந்த வந்தியத்தேவன் என்ற குழப்பம் தவிர்க்க என் பதிவின் பெயரையும் இணைத்துக் கொண்டு விட்டேன்.

1. // ஒரு புத்தாண்டு தேதியை மாற்றுவதன் மூலம் அனைத்து மத தமிழர்களின் ஒருமித்த தமிழ் விழா, பண்டிகையாக அது மாறும் என்றால் அதனை மாற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? //

தமிழ் வருடப் பிறப்பு போல இந்தியா முழுதும் உகாதி , விஷு, வைஷாகி என எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு பெயரில் வருடப் பிறப்பை இந்த மாதத்தில் இந்த ஒரு வார காலத்தில் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - அவர்கள் இடத்திற்கு தகுந்த படி ஏதோ ஒரு புராணக் கதை. இவை அனைத்தையும் தாண்டி இது வசந்த ருதுவின் ஆரம்பம். கிளைகளில் இலைகளும், இலைகளினூடே பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும்
காலம். இதுவும் வான சாஸ்த்ர , கணித சாஸ்த்ர (பாஸ்கரர் 2?) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை தான். மேம்போக்காக சொல்லப்பட்டவை அல்ல.
ஆக இந்து புராண அடிப்படைகளை தாண்டியும் அனைத்து மதத்தினரும் இப்பொழுதும் இதை கொண்டாடலாம். யார் தடை செய்கிறார்கள்?

// சற்று மனம் திறந்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த தைக்கு பொங்கலோ பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துக்களையும் சேர்த்தே சொல்வீர்கள //

மாற்றத்திற்கு போதிய காரணம் இருந்தால் தீபாவளியை மே மாதம் கொண்டாடவும் தயார்! தமிழ் புத்தாண்டை தை மாதம் கொண்டாடவும் தயார்.தான்!

2. // உலகில் எந்த ஒரு வளர்ந்த நாகரீகமும் உணவு, உடை, பழக்கவழக்கம், நாகரீகம், மொழி ஆகியவற்றை மாற்றிக் கொண்டது கிடையாது//

ரோமானியர்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள், எகிப்தியர்கள், மங்கோலியர்கள் என்று எல்லா நாகரீகத்திலும் கொடுக்கல் வாங்கல் இருக்கத் தான் செய்திருக்கிறது. மது, மாது, குதிரை, அடிமை, வைரம் , முத்து, பவளம் ,உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவை முதல் விஞ்ஞானம், மத நம்பிக்கைகள், சொற்கள் வரை கலப்பு என்பது நிகழத் தான் செய்திருப்பதாக தோன்றுகிறது.
இந்தியா இந்துக்களின் நாடாக தான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது (ஆரிய கலப்பினாலோ அதற்கு முன்பிருந்தோ). சமணமும் பௌத்தமும் பின்னர் தோன்றி வளர்ந்தது. ரோமானிய காலத்திலிருந்து வந்த வணிகம் கிறித்துவத்தை நுழைத்து செயிண்ட் தாமஸ்-ஐயும் அனுப்பி வைத்தது. முகலாய படையெடுப்புக்குப் பின் இஸ்லாமும் நுழைந்தது. ஒவ்வொரு படையெடுப்புக்கு பின்பும் நம் நாகரீகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன - வட இந்தியவாகட்டும் தென் இந்தியாவாகட்டும்.

3. // தமிழர்களின் கோவில்களுக்கு பிறமாநிலத்தவர் வந்து சென்றால் நாமும் அவ்வாறு செய்யலாம் //

கோவி. கண்ணன், உண்மையில் இதை படித்ததும் எனக்கு தமிழ் உணர்ச்சி அத்து மீறி போய் விட்டதோ என்று தான் தோன்றுகிறது. ஒரு வேளை திருப்பதி சென்னை மாகாணத்துடன் வந்திருந்தால் திருப்பதி போவது சரியாக இருந்திருக்குமோ? இது என்ன கொடுக்கல் வாங்கலா? (அவர்களும் வரத் தான் செய்கிறார்கள் - ஸ்ரீரங்கத்திற்கும், ராமேஸ்வரத்திற்கும் , கன்னியா குமரிக்கும்). தமிழ் வாழும், தமிழ் வாழும் என்று கூறி தமிழன் சுருங்கி விட்டானா என்று தான் தெரியவில்லை.

4. வேட்டியை கட்டிக் கொண்டு அலுவலகம் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவே. வேட்டி கட்டுவதை பற்றி நான் கேலி செய்யவில்லை.

நான் எட்டாவது படித்ததில் இருந்து வீட்டில் வேட்டி கட்டி வருகிறேன். கோமண அம்மண வாக்கியங்கள உணர்ச்சி வெளிப்பாட்டை அன்றி கருத்து பரிமாற்றத்தில் என்ன பங்கு வகிக்கின்றன என்றும் புரியவில்லை. ஒருவேளை ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ள சொல்லபட்டவையாக இருக்கலாம்! நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)

நையாண்டி நைனா சொன்னது…

என்ன கொடுமை இது?
இப்படி எல்லாமே அரசாங்கமே அறிவிப்பு செய்யுமா?
இன்னும் போனால் நாம் நமக்கு செய்யும் கடமைகளை கூட அரசாங்கமே அறிவிப்பு செய்ய எதிர் பார்ப்போம் போலிருக்கிறதே

please see this also:
http://naiyaandinaina.blogspot.com/2008/04/blog-post_11.html

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
தனி பதிவிற்கு நன்றி கோவி. கண்ணன்! எந்த வந்தியத்தேவன் என்ற குழப்பம் தவிர்க்க என் பதிவின் பெயரையும் இணைத்துக் கொண்டு விட்டேன்.
//

முதலில் குழப்பத்தை சரி செய்து பெயர் மாற்றிக் கொண்டதற்கு பாராட்டுகள்.

வந்தியதேவர்கள் இருப்பதே இந்த இடுகையின் வழி பின்னூட்டத்தினால் தான் தெரியவந்தது, அந்த வந்தியத்தேவன் அவர்களுக்கும், தன் பெயரில் இன்னொருவர் இருப்பது தெரியாமல் போனது வியப்புதான்.
:)

//தமிழ் வருடப் பிறப்பு போல இந்தியா முழுதும் உகாதி , விஷு, வைஷாகி என எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு பெயரில் வருடப் பிறப்பை இந்த மாதத்தில் இந்த ஒரு வார காலத்தில் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - அவர்கள் இடத்திற்கு தகுந்த படி ஏதோ ஒரு புராணக் கதை. இவை அனைத்தையும் தாண்டி இது வசந்த ருதுவின் ஆரம்பம். கிளைகளில் இலைகளும், இலைகளினூடே பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும்
காலம். இதுவும் வான சாஸ்த்ர , கணித சாஸ்த்ர (பாஸ்கரர் 2?) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை தான். மேம்போக்காக சொல்லப்பட்டவை அல்ல.
//

திரு வந்தியத்தேவன்,

புத்தாண்டு தேதி மாற்றம் குறித்த்து அறிவித்தவர்களும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிவித்துவிடவில்லை. எனது நண்பர் பதிவர் திரு வவ்வால் எழுதி இருக்கும், புத்தாண்டு தேதி மாற்றம் சரியா தவறா என்பதையும் படித்துவிட்டு அங்கேயே அல்லது இங்கே உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html

உங்களின் மற்ற கருத்துக்களுக்கு, மீண்டும் ஒருமுறை மறுமொழி இடுகிறேன்.

அழகப்பன் சொன்னது…

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

//இந்தியா இந்துக்களின் நாடாக தான் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது (ஆரிய கலப்பினாலோ அதற்கு முன்பிருந்தோ). சமணமும் பௌத்தமும் பின்னர் தோன்றி வளர்ந்தது. ரோமானிய காலத்திலிருந்து வந்த வணிகம் கிறித்துவத்தை நுழைத்து செயிண்ட் தாமஸ்-ஐயும் அனுப்பி வைத்தது. முகலாய படையெடுப்புக்குப் பின் இஸ்லாமும் நுழைந்தது. ஒவ்வொரு படையெடுப்புக்கு பின்பும் நம் நாகரீகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன - வட இந்தியவாகட்டும் தென் இந்தியாவாகட்டும்.//

இந்துக்கள் என்றால் எவர் என்பதை வந்தியத்தேவன் விளக்குவாராக.

இந்தியா இந்துக்களின் நாடாக என்றுமே இருந்ததில்லை. இந்தியர்களின் நாடாகத்தான் இருந்து வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதிகள்தான் இந்தியாவை இந்துக்களின் நாடாக்க முயல்கின்றனர்.

முகலாயர்களின் படையெடுப்புக்கு முன்பே தமிழகத்தின் ஒரு பகுதியாய் விளங்கிய சேர நாட்டில், மன்னர் சேரமான் பெருமாளின் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவுக்கு வந்துவிட்டது. மன்னர் சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்று, ஹஜ் பயணம் செய்தபோது வழியிலேயே இறந்து போனார் என்பது வரலாறு. அவரது அடக்கத்தலம் ஓமான் நாட்டில் (சலாலா என்னும் பகுதியில்) உள்ளது.

ezhil arasu சொன்னது…

உங்களது பதிவுக்கு மேலும் வலு சேர்க்கும் ஒரு தொகுப்பு:-

எனவே, இனி ஒ'ரு விதி செய்வோம், அதனை எந்நாளும் காப்போம்

:"திருவள்ளவர் ஆண்டே இனி நம் ஆண்டு! சுறவத் திங்கள் முதல் நாளே நமக்குப் புத்தாண்டின் முதல் நாள்.சுறவம் முதல் சிலை ஈறாக உள்ள திங்களகளின் தனித்தமிழ்ப் பெயர்களையே நாம் இனி பயன்படுத்துவோம்.


கிழமைகளின் பெயர்களையும் தனித்தமிழிலேயே எழுதுவோம் ..." என்ற உறுதிமொழியை இன்று எடுப்போம்!


வடமொழியோ பிறமொழியோ விட்டொழிப்போம்!

நம் அருமைத் தமிழ் மொழியாலே நாம் செழிப்போம்!

வாழ்க திருவள்ளுவர் ஆண்டு, வளர்க நம் தனித்தமிழ்ப் பற்று!

12 ஓரைகள் ( இராசிகள்)

Période Français English Greek
mars 21 - avril 20 Bélier Ram Aries
avril 21 - mai 21 Taureau Bull Taurus
mai 22 - juin 21 Gémeaux Twins Gemini
juin 22 - juillet2 Cancer Crab Cancer
juillet 23 - août 22 Lion Lion Leo
août 23 - septembre 23 Vierge Virgin Virgo
septembre 24-octobre 23 Balance Balance Libra
octobre 24- novembre 22 Scorpion Scorpion Scorpio
novembre 23-décembre 21 Sagitaire Archer Sagitarius
décembre 21-janvier 20 Capricorne Goat Capricorn
janvier 21-février 19 Verseau Waterbearer Aquarius
février 19 - mars 20 Poissons Fish Pisces

வழக்குத் தமிழ் தனித்தமிழ்


தை சுறவம்
மாசி கும்பம்
பங்குனி மீனம்
சித்திரை மேழம்
வைகாசி விடை
ஆனி இரட்டை
ஆடி கடகம்
ஆவணி மடங்கல்
ஐப்பசி துலை
புரட்டாசி கன்னி
கார்த்திகை நளி

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு ஞாயிறு
திங்கள் திங்கள்
செவ்வாய் செவ்வாய்
புதன் அறிவன்
வியாழன் வியாழன்
வெள்ளி வெள்ளி
சனி காரி

(திருவள்ளுவர் ஆண்டு 2036 சுறவம் 03 ஆம் நாள் (16. 01. 2005) அன்று பாரிசில் ஐரோப்பிய தமிழ்ச் சங்கம், நடத்திய தமிழர் விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் ஆற்றிய சிறப்புரை)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்