பின்பற்றுபவர்கள்

13 நவம்பர், 2007

பெருகிவரும் மனமுறிவுகள் குறித்து...

இன்று காலை சிங்கை வானொலி கேட்டபோது மணமுறிவு (விவாகரத்து) பற்றிய கருத்துக்களை சிலர் பகிர்ந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன ஆயிரம் தம்பதிகளில் 3 மூவர் என்ற அளவில் மனமுறிவு பெற்றுக் கொண்டது தற்பொழுது 7 என உயர்ந்திருக்கிறதாம். மேலை நாடுகளை ஒப்பு நோக்க ஆசியாவில் இந்த வளர்ச்சி குறைவுதான்.

முன்பு போல் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துவதில்லை. இருவரும் இல்ல பொறுப்புகளில் சமபங்கெடுத்தே எல்லாவற்றையும் செய்கிறார்கள். இருந்தும் ஏன் என்று பார்க்கையில் பலர் பலவிதமாக கருத்து சொல்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் தலையீடு செய்வதை யாரும் விரும்புவதில்லையாம்.

விட்டுக் கொடுத்தல் என்பது குறைந்து போய்விட்டதாம்.

சிங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர், தமிழர் ஆகியோர் காதல் திருமணங்களைத்தான் மிக்கவையாக செய்து கொள்கின்றனர். கண்டதும் காதல் என்றாலும் மூன்றாண்டுகளுக்கு மேலாக காதலித்து, அதன் பிறகும் தள்ளிப் போடக் கூடாது என்று நினைத்தோ அல்லது எதோ ஒரு நெருக்கடியில் திருமணத்திற்கு செல்கிறார்கள்.

எனக்கு திருமணம் ஆகும் முன்பு ஒரு வீட்டில் குடியிருந்தேன். சிங்கையில் வீட்டுக்குள் ஒரு அறை அல்லது இரு அறைகளை வாடகைக்கு விடுவது நடப்பில் உள்ளவை. அதன் மூலம் கணிசமான வருமானம் வருகிறது எனவே ப்ரைவசி காராணங்களை விட பல தேவைகளுக்கு பணம் தேவை என்பது பெரிதாக நினைக்கப்படுகிறது, மேலும் வீடு வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என்பதற்காக ஒரு பகுதி வீட்டை வாடகைக்கு விடுவார்கள். அது போல் நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளராக ஒரு தம்பதி இருந்தனர். மாஸ்டர் பெட் ரூம் எனப்படும் பெரிய படுக்கை அறையில் அவர்கள் இருந்து கொண்டு, மற்ற இரு அறைகளை பேச்சிலராக இருந்தவர்களுக்கு விட்டார்கள். அறைக்கு இருவர் வீதம் நான்கு பேர் வாடகைக்கு இருந்தோம். மூன்று மாதம் சென்று தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்ற செய்தி, அவர்களாகவே 'எங்கள் இருவருக்கும் அடுத்தவராம் திருமணம்' என்று சொன்னபோது அதிர்ச்சியுடன் தெரிந்து கொண்டேன். திருமணம் முடிந்தது பழையபடி அதே அறையில் தான் வசித்தார்கள்.

இதுபோல் பெரும்பாலன காதல் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வசிப்பது வழக்கம், அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களில் எத்தனைபேர் மனமுறிவுக்கு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. குறைவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இருவருடைய வாழ்கையிலும் திருமணத்திற்கு முன் / பின் என்ற எந்த மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை. இருவரும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள். இவர்களுடைய திருமணத்திற்கு முன்பே அந்த வீட்டிற்கு அவர்களுடைய அவர்களுடைய பெற்றோர்களும் அவ்வப்போது வந்து செல்வார்கள்.

ஒருவரை ஏமாற்றுதல் என்ற எண்ணத்தில் இல்லாது இருப்பதை புரிந்து கொண்டுள்ளதால் அடுத்த கட்டமாக சேர்ந்து வசிப்பதற்கு முடிவு செய்து கொள்வார்கள் என நினைக்கிறேன். நம் இந்திய சூழலில் இதுபோன்ற குடும்ப அமைப்பு ஏற்படுவத்ற்கு இன்னும் பல காலம் பிடிக்கும், இன்னும் காதல் திருமணங்களை கவுரவ இடறாக நினைக்கும் பெற்றோர்கள் தான் மிக்கவர்களாக உள்ளனர்.

காதலர்களாக இருந்தாலும் சேர்ந்து வாழும் முடிவு முறையாக திருமணத்திற்கு பிறகு என்று முடிவெடுத்து திருமணம் செய்பவர்கள் நிலையோ மாறுபட்டு இருக்கிறது. நெருங்கி வாழும் போதுதான் ஒருவருக்கொருவரின் உண்மையான முகம் என்னவென்று அறிந்து ஏற்றுக் கொள்ளாத நிலையில் பிரிகிறார்கள்.

மனமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான்

தொடரும்....

21 கருத்துகள்:

அரை பிளேடு சொன்னது…

//மனமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான்//

உண்மை.

//தொடரும்...//

எதிர்பார்க்கிறேன். நன்றி.

ஜோ/Joe சொன்னது…

//தொடரும்....//
ஓ! தொடரா ?

மங்கை சொன்னது…

//மனமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான்//

உண்மை தான்..

கண்ணன் மனமுறிவு கோவையில் அதிகம்.. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினிடையே.எங்கள் வீட்டிலியே திருமணம் ஆகி 2 மாதங்களில் 3 விவாகரத்து...ஒரு ஆராய்ச்சியே நடத்தினார்கள்..இதைப்பற்றி..சன் டீவியிலும் சிறப்பு பார்வையில் இடம் பெற்றது..

பிறைநதிபுரத்தான் சொன்னது…

சிங்கப்பூரர்கள் ஏற்கனவே மிகவும் தாமதமாக திருமணம் செய்துக்கொண்டு - மிகவும் குறைந்த எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் அதனால் நாட்டில் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து - மூத்தவர்கள் நிறைந்த சமூகமாக காட்சியளிக்கிறது. தற்போது மூன்றாவது பிரச்சினையாக மணமுறிவும் அதிகரித்து வருகிறது.

RATHNESH சொன்னது…

"கொஞ்சம் யோசித்தால் விவாகரத்துகளைத் தவிர்க்கலாம்; இன்னும் கொஞ்சம் யோசித்தால் விவாகங்களையே தவிர்த்து விடலாம்" என்று எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. (LIGHTER SENSE-ல் சிரித்துக் கொள்ள).

திருமண உறவின் ஆரம்ப நாட்கள் குறித்து, நான் எழுதி ஒரு பத்திரிக்கையில் வந்த கட்டுரையைத் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

தங்கள் சமூக அக்கறை சந்தோஷம் அளிக்கிறது. இந்த ஓர் உறவில் மட்டும் தான், பிரச்னைகளை "மொத்தமாக" யாருடனும் கலந்து கொளண்டு தீர்வு கேட்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அதனால் தான் இது சம்பந்தமான பிரச்னைகளில் அடுத்தவர் கருத்தைக் கேட்டு நடந்து கொண்ட எவரும் அதன் பிறகும் நிம்மதியை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பதும் கருத்தில் கொல்ள வேண்டிய விஷயம்.

நீங்கள் தொடருங்கள். மற்றவர்களின் கருத்துக்களையும் பரிசீலித்துப் பார்க்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அரை பிளேடு said...


எதிர்பார்க்கிறேன். நன்றி.//

அரைபிளேடு ஐயா,

இங்கே பதிவில் முறிவு வேண்டாம் தொடருவோம் என்று தான் நினைத்திருக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

ஓ! தொடரா ?
//

ஜோ,

எங்கே உங்கள் இடுகைகளை பார்க்கவே முடியவில்லை. நான் இங்கு தொடர்கிறேன். நீங்களும் கட்டுமரத்தை செலுத்துங்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said...

உண்மை தான்..

கண்ணன் மனமுறிவு கோவையில் அதிகம்.. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினிடையே.எங்கள் வீட்டிலியே திருமணம் ஆகி 2 மாதங்களில் 3 விவாகரத்து...ஒரு ஆராய்ச்சியே நடத்தினார்கள்..இதைப்பற்றி..சன் டீவியிலும் சிறப்பு பார்வையில் இடம் பெற்றது..
//

மங்கை அவர்களே,

கோவியில் என்று பொதுப்படுத்த முடியுமா ? என்று சரியாக தெரியவில்லை. நாம் கேள்விப்பட்ட அளவில் என்று பார்த்தால் ஒரு ஊரை வரையரையாக கொள்ள முடியும். சமூக சூழல்கள், புரிந்துணர்வுகள் மாறிவரும் வேளைகளில் எங்கும் நடப்பதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறைநதிபுரத்தான் said...
சிங்கப்பூரர்கள் ஏற்கனவே மிகவும் தாமதமாக திருமணம் செய்துக்கொண்டு - மிகவும் குறைந்த எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் அதனால் நாட்டில் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து - மூத்தவர்கள் நிறைந்த சமூகமாக காட்சியளிக்கிறது. தற்போது மூன்றாவது பிரச்சினையாக மணமுறிவும் அதிகரித்து வருகிறது.
//

பிறைநதிபுரத்தான் ஐயா,

சரிதான் நீங்கள் சொல்வது ஆண் / பெண் இருவருமே 30 வயதுக்குமேல் தான் திருமணம் பற்றி யோசிக்கிறார்கள். அதற்காக ஆண்கள் சாமியார்களாக இருக்கிறார்கள் என்பது பொருளல்ல.
:)

தற்போது திருமணம் ஆனதம்பதிகள் குழந்தை வேண்டாம் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
"கொஞ்சம் யோசித்தால் விவாகரத்துகளைத் தவிர்க்கலாம்; இன்னும் கொஞ்சம் யோசித்தால் விவாகங்களையே தவிர்த்து விடலாம்" என்று எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. (LIGHTER SENSE-ல் சிரித்துக் கொள்ள). //

ரத்னேஷ் துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று காமடி பண்ணுகிறீர்கள். :))

//
திருமண உறவின் ஆரம்ப நாட்கள் குறித்து, நான் எழுதி ஒரு பத்திரிக்கையில் வந்த கட்டுரையைத் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

தங்கள் சமூக அக்கறை சந்தோஷம் அளிக்கிறது. இந்த ஓர் உறவில் மட்டும் தான், பிரச்னைகளை "மொத்தமாக" யாருடனும் கலந்து கொளண்டு தீர்வு கேட்க முடியாத சிக்கல்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அதனால் தான் இது சம்பந்தமான பிரச்னைகளில் அடுத்தவர் கருத்தைக் கேட்டு நடந்து கொண்ட எவரும் அதன் பிறகும் நிம்மதியை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பதும் கருத்தில் கொல்ள வேண்டிய விஷயம்.

நீங்கள் தொடருங்கள். மற்றவர்களின் கருத்துக்களையும் பரிசீலித்துப் பார்க்கலாம்.//

நீண்ட நாட்களாக எழுதுபவராக இருப்பதால் நன்கு ஆராய்ந்தும், எழுத்தில் முதிர்ச்சியும் உங்களுக்கு இருக்கும், இருக்கிறது. நீங்கள் சொல்வது போன்று அடுத்தவர் கருத்து கேட்டு இந்த விசயத்தில் முடிவெடுக்க ஒன்றும் இல்லை என்பது 100 விழுக்காடு சரியே.

எதிலும் மாறுபட்டு, எளிதாகவும், சுவைபடவும் எழுதும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதால் இதுகுறித்து உங்களுடைய கட்டுரையை படிக்க ஆவல் ஏற்பட்டுவிட்டது.

bala சொன்னது…

ஜிகே அய்யா,
நீங்க சொல்வது மன முறிவா,அல்லது மண முறிவா?எதுக்கு கேக்கறேன்னா மண முறிவு ன்னா அது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று,தமிழர் தந்தை சொன்ன உபதேசங்களில் ஒன்று.திருமணம் என்ற கட்டமைப்பே தேவையில்லை என்று முழங்கிய மகான் அல்லவா அவர்.அதனால மணம் மூறியலாம்,மனம் முறியக் கூடாது.பகுத்தறிவோடு யோசிச்சுப் பாருங்க.புரியும்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,
நீங்க சொல்வது மன முறிவா,அல்லது மண முறிவா?எதுக்கு கேக்கறேன்னா மண முறிவு ன்னா அது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று,தமிழர் தந்தை சொன்ன உபதேசங்களில் ஒன்று.திருமணம் என்ற கட்டமைப்பே தேவையில்லை என்று முழங்கிய மகான் அல்லவா அவர்.அதனால மணம் மூறியலாம்,மனம் முறியக் கூடாது.பகுத்தறிவோடு யோசிச்சுப் பாருங்க.புரியும்.

பாலா
//

பாலா ஐயா,

மனமும் மனமும் என்று இரண்டு மனம் சேர்ந்தால் மூன்று சுழி ஒன்று சேர்ந்து மணம் ஒன்றாக வரும்.
:)

இங்கு முறிவை பற்றி பேசுவதால், தலைப்பில் தவறு என்றாலும் பொருள் மனமுறிவு சரியாகத்தான் இருக்கும்.

எப்போதும் பெரியாரை நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு தாடிக்கார பெரியார், அவரை எப்படி நினைத்திருக்க்கிறீர்களோ அந்த கோலத்தில் காட்சி தரு கடவது

பாலாவுக்கு பின்னூட்ட கோட்டா ஓவர் !
:)

ஜெகதீசன் சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல பதிவு. பாலாவிற்கு உங்கள் பதில் சூப்பர்.
மற்றபடி இந்தப் பதிவு குறித்து கருத்து தெரிவிக்கும் அளவு எனக்கு அனுபவம் இல்லை...
:)

துளசி கோபால் சொன்னது…

//அதற்காக ஆண்கள் சாமியார்களாக இருக்கிறார்கள் என்பது பொருளல்ல.
:)//

'சாமியார் கதைகள்' வேற மாதிரின்னு வந்த செய்திகளைப் பார்க்கலையா?

மங்களூர் சிவா சொன்னது…

அட்டெண்டன்ஸ்

ஜமாலன் சொன்னது…

//மனமுறிவு என்ற சொல்லில் மிகவும் கலங்கிப் போய் இருப்பது குறிப்பாக இந்தியாவில் ஆண்கள் தான்//

பத்த வச்சாச்சி.. பொறுத்திருந்த பார்ப்போம்.

சமூக அக்கறையுடன் எழுதப் பட்டுள்ளது. செய்திகள சிக்கல் இல்லாமல் முன்வைக்கும் எழுத்து நடை பராட்டு. ரத்ணேஷ் போலவே.

ரத்ணேஷின் பின்னோட்டமும் அருமை. நானும் காத்திருக்கிறேன். ரத்ணேஷ் பத்திரிக்கையில் எழுதுபவர் என்பதே எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது.

முக்கியமான ஒரு தகவல் எனது மணமாகாமல் செர்ந்து வாழும் குடும்ப முறையும். தேவைப்படும் திருமணம் செய்துகொள்வதும். நீங்கள் கூறியதுபோல் அதெல்லாம் இங்குவர எத்தனை காலம் ஆகுமோ?

புதிய தகவல் அது. அது குறித்து ஏதெனும் ஆய்வுகள் இருந்தால் அறியத் தாருங்கள்.

ரூபஸ் சொன்னது…

//நெருங்கி வாழும் போதுதான் ஒருவருக்கொருவரின் உண்மையான முகம் என்னவென்று அறிந்து ஏற்றுக் கொள்ளாத நிலையில் பிரிகிறார்கள்//

இதுதான் உண்மையான காரணம். திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர் தங்கள் விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொண்டால் இதை ஒரளவிற்கு தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்றுதான் முதல்முறை பார்க்கிறேன் உங்கள் பதிவை

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி.கண்ணன் அவர்களே,
.
மற்றபடி இந்தப் பதிவு குறித்து கருத்து தெரிவிக்கும் அளவு எனக்கு அனுபவம் இல்லை...
:)
//

ஜெகதீசன்,
நல்லது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//அதற்காக ஆண்கள் சாமியார்களாக இருக்கிறார்கள் என்பது பொருளல்ல.
:)//

'சாமியார் கதைகள்' வேற மாதிரின்னு வந்த செய்திகளைப் பார்க்கலையா?
//

துளசி அம்மா,

ஒரு நகைச்சுவை தான் ஞாபகம் வருது.

மனைவி : என்னங்க நம்ம பையன் சாமியார் ஆகிடுவான் போல இருக்கே

கணவன் : என்னடி செய்றது ? நாம ஒரே ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நினைத்தோம். அவனுக்கு பத்தவில்லை போல இருக்கு

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
அட்டெண்டன்ஸ்
//

சிவா,
வருகை பதிய வைக்கப்பட்டது, லீவு போட்டால் லெட்டர் கொடுக்கனும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//delphine said...
கண்ணன்,
குழந்தைகள்தான்... பாவம்.
//

டெல்பின் அம்மா,

நீங்க சொல்வது சரிதான்.

சாவு, பிரிவு இதிலெல்லாம் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள் இது 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இயற்கையில் கிடைத்த வரம். பெற்றோரில் ஒருவர் குறையில்லாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

எனக்கு 10 வயது இருக்கும் போது என்னுடன் படித்த தந்தையை இழந்த மாணவர்கள் சோகமாகவோ, உற்சாகம் குன்றியோ இருந்து பார்த்தது இல்லை. உறவுகள் இழப்பும், உணர்வுகளும் குழந்தைகளுக்கு பிடிபட ஆரம்பிப்பத்து 10 வயதிற்கு மேல் தான்.

என்ன இருந்தாலும் இழப்பு இழப்புதான், ஆனாலும்

நாம் அதை நினைத்து அவர்கள் எப்படியெல்லாம் துடிப்பார்கள் என்ற நினைத்துப் பார்க்கும் அளவுக்கு குழந்தைகள் உணர்வு மயமாக இருக்க மாட்டார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்