வழக்கமான சவடாலுடன் கடைத்தெருவை அலம்பல் பண்ணிக் கொண்டுவருகிறார் கைப்புள்ள.
கைப்பு : டேய்ய்ய்... எவண்டா அவன் ? ஊருக்குள்ள ஒரு பயலும் வாயை தொறந்து பேசப்படாது, மீறி பேசினா நான் பேசமாட்டேன், அறுவா பேசும் அறுவா.
அல்லக்கை ஒருவர் : அண்ணே அங்கே பாருங்கண்ணே ஒருத்தன் வாயைத்தொறந்து பேசிக் கிட்டு இருக்கான் என்று அருகில் எஸ்டிடி பூத்தில் பேசிக் கொண்டிருக்கும் பார்த்தியை காட்டுகிறார்.
கைப்பு : டேய் ... எவண்டா அவன் ?, சிங்கம் தூங்கி எழுந்ததைப் பாத்ததில்லைய்யா நீய்யீ ?
பார்த்தி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்கிறார்,
பார்த்தி : என்கவுண்டர் இருக்கு, அதனால் நம்ம பக்கம் வரவே பயப்படுறானுங்க, இன்னிக்கு கூட ஒருத்தன் மாட்டி இருக்கான், அவனுக்கு ஒரு நாள் இருக்கு
அதை கேட்டுவிட்ட கைப்புவின் உடல் நடுங்குகிறது
கைப்பு : இவனா....ஆ !....அடி ஆத்தி போலிஸ் இன்ஸ்பெக்டராக ஆயிட்டான் போல....இது தெரியாம இங்கிட்டு வந்து மாட்டிக்கிட்டேனே ?
அவரை நோக்கிவருகிறார் பார்த்தி,
பார்த்தி : இங்கே சவுண்ட் விட்டது நீ தானே ?
கைப்பு : அருகில் இருந்தவனை தலையில் தட்டி 'டேய் அண்ணன் கேக்கிறாரு இல்லே... சொல்லுடா, நீ சவுண்ட் விட்டியா ?'
பார்த்தி : டேய் டேய்....நான் என் இந்த காதால கேட்டேன் ... இந்த கண்ணால பார்த்தேன்... சவுண்டு விட்டது நீதான். அது என்னது சிங்கம் தூங்கி எழுந்ததை பார்த்திருக்கியான்னா கேட்கிறே ?
கைப்பு : மென்று முழுங்கிவிட்டு 'அது சும்மா தமாஷு' என்கிறார்
பார்த்தி : சிங்கம் தூங்கி எழுவதைப் பாக்கனும்னா காலையில எழுந்து ஜூவுக்கு போய்தான் பாக்கனும், அவனவனுக்கு வேலை வெட்டி இல்லையா ? காலங்காத்தால வெட்டித்தனமாக போய் சிங்கம் தூங்கி எழறத பாக்கனுமாம் ? சரி மொதல்ல நீ பார்த்திருக்கியா ?
கைப்பு : அது வந்து ....இல்ல பாத்தது இல்ல
பார்த்தி : நீயே பார்க்காத ஒண்ணைப் பத்தி பேசுறியே நீ பைத்தியம் தானே ?
கைப்பு : அட போப்பா, என்னைய மாதிரி ரவுடிங்க இப்படித்தான் மெரட்டுவாங்க
பார்த்தி : என்னது ரவுடியா ? நீய்யா ?
கைப்பு : நாஞ்சொல்லலப்பா, நம்ம புள்ளைங்க தான் சொல்லுறாங்கே என்று அல்லக்கைகளை காட்டுகிறார்
அங்கு எவரும் இல்லை. எல்லாம் அல்ரெடி எஸ்கேப்
பார்த்தி : இங்கே யார் இருக்கான்னு கையை காட்டுறே...உண்மையிலேயே ஒனக்கு பைத்தியம் தானே புடிச்சிருக்கு ?
கைப்பு : சரி என்ன வேணுமானாலும் சொல்லு, ஆனால் என்கவுண்டரில் போட்டு தள்ளிடாத, என் பொண்டாட்டி புள்ளைங்க பாவம்
பார்த்தி : எண்கவுண்டரா ? நானா ? குருவிய சுடறத்துக்கு பீரங்கியா ? ஏன் ...ஏன் ...ஏன் இந்த உளரல் ?
கைப்பு : நீ இப்ப போனில் பேசினியே எங்கிட்ட மறைக்காதே... ' என்கவுண்டர் இருக்கு, அதனால் நம்ம பக்கம் வரவே பயப்படுறானுங்க' னு போனில் சொன்னியா...அப்பா அப்பா ...ஓடவிட்டு சுட்டுறாதப்பா..
கெஞ்சி, கையெடுத்து கும்பிடுகிறார்
பார்த்தி தெளிவாகிறார்
பார்த்தி : ஆமாம் சொன்னேன், இருக்கு
கைப்பு : நீ எதுக்கேட்டாலும் தர்ரேன்ப்பா, இன்னிக்கு வசூலு அம்புட்டும் தர்ரேன்.. என்னிய விட்டுடு. நான் இப்படியே கண்காணாத இடத்துக்கு ஓடிப்போய் பொழச்சுக்கிறேன்.
பார்த்தி : அடச்சே உன் பணம் யாருக்கு வேணும் ? ஓடிடுறேன்னு சொன்னதால விடுறேன். மறுபடியும் ரவுடி மாதிரி ஒன்னைய பார்த்தேன் அவ்வளவுதான் ஞாபகம் வச்சுக்கோ.....சரி எண்கவுண்டர்னா என்னனு தெரியுமா ?
கைப்பு : போலிஸ்காரெங்க நடுமண்டையில் நச்சின்னு சுட்டுப் போடுவாங்களே அதானே, அது தெரியாமலா ரவுடியா இருக்கோம் ( சொல்லிவிட்டு பம்முகிறார்)
பார்த்தி : மறுபடியும் ரவுடியா ? இன்னொருதடவ சொல்லு
கைப்பு : ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா, இதபாரு ஆத்தா சத்தியமா இனி ஒரு பயலையும் மெரட்டமாட்டேன்
பார்த்தி : சொன்ன வாக்கு தவறமாட்டியே
கைப்பு : நாக்கு செத்தாலும் வாக்கு தவறமாட்டான் கைப்புள்ள
பார்த்தி : அப்படி செஞ்சே மகனே... நெஜம் போலிசை கூப்பிட்டு வந்து நிஜாமாகவே உனக்கு என்கவுண்டர்தான்
கைப்பு : என்னாது ....? அப்ப நீ என்கவுண்டர் போலிஸ் இல்லையா ? போனில் பேசியது ? மீண்டும் குரலை உயர்த்தி பேசுகிறார்
பார்த்தி : அதுவா என்னோட ... அது என் ப்ளாக்கில் உள்ள பேஜ் விசிட் கவுண்டர்...அதைத்தான் 'எண்' கவுண்டர்னு சொன்னேன், அப்பறம் ஐபி செக்கரும் இருக்கு யார் யார் ப்ளாக்குக்கு வந்தாங்கன்னு, எத்தனை பேர் வந்தாங்கன்னு தெரிஞ்சுடும்
கைப்பு : மெல்லமாக 'ம்கும் இதுதெரியாமத்தான் உளறிட்டேனா ?'
பார்த்தி : என்னது ?
கைப்பு : ஒன்னுமில்லைப்பா...
பார்த்தி : ஒன்னைய இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது...
கைப்பு : என்ன செய்யப் போறே....
மறுபடியும் தெனாவெட்டு தொணியில் கேட்கிறார்.
பார்த்தி : இப்ப ஒரு குட்டை வெளிப்படுத்தப் போறேன் பாரு
கைப்பு : குட்டையும் இல்ல மட்டையும் இல்லை ஆள உடு
கைப்பு: நீ உடுன்னா ? உட்டுடனுமா ? நான் உன் வீட்டு வேலக்காரனா ?
என்று கேட்டுவிட்டு மண்டையில் நறுகென்று ஓங்கி குட்டுகிறார்
வலி பொருக்கமுடியாமல், தலையில் கையை வைத்து
கைப்பு : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் - என்று சினுங்குகிறார்
உச்சந்தலையில் புஸ்ஸ்ஸ் என்று புடைத்து வீங்குகிறது
பார்த்தி : இப்ப தலையில கையை வச்சு பாரு
கைப்பு : என்னாது ?
பார்த்தி : குட்டு புடைச்சு வெளிப்பட்டு இருக்கு தடவி பாரு.. அது உன் குட்டு இல்லை என் குட்டு
கைப்பு : க்கும்... நக்கலுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை என்று முறைத்துவிட்டு, மீண்டும் பார்த்தி வாயைத்திறப்பதற்குள் பம்மிவிட்டு அங்கிருந்து தலையை தடவிக் கொண்டு , 'எங்கனப் பார்த்தாலும் இவனுக்கு என் பொழப்பை கெடுப்பதே வேலையாப்போச்சு' முணுகிக் கொண்டே இடத்தைக் காலி செய்கிறார்
--
அன்புடன்,
கோவி.கண்ணன்
மேலும் கைப்பு கலாட்டக்களுக்கு,
தமிழாசிரியர் ஆன கைப்புள்ள
கைப்புள்ள போட்ட ஆறு !
இம்சை அரசன் அடித்த மணி !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
17 கருத்துகள்:
:)
சூப்பர்! எங்க கைப்புள்ளைக்கு ஆப்பு வைக்க காணாம போயிருந்த பார்த்திபனை இட்டாந்த கோவியாருக்கு
(ரகசியாமா நன்றி) எங்கள் கண்டனங்கள்!
நல்ல நகைச்சுவைக் காட்சி .. :)
super :)))
எங்கள் சங்கத்தின் தானைத்தலைவர் கைப்புவுக்கே என்கவுண்டர் நடத்த சதித் திட்டம் தீட்டும் பார்த்தியை மிகவும் வன்மையாக் கண்(ண)டித்து, சகலருக்கும் சங்கத்தில் இனிப்பு வழங்கப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! :-))))
//நாக்கு செத்தாலும் வாக்கு தவறமாட்டான் கைப்புள்ள//
பஞ்ச் பஞ்ச் பஞ்ச்......சங்கம் பஞ்ச்!
இது... இது... இது கோவி.கண்னன்!
இப்படியே நட்சத்திர வாரத்தைப் பண்ணியிருக்கலாமே என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நல்லா சிரிச்சேன் கோவியாரே!
இன்னும் ரெண்டு நாள் இருக்கே மஹேஷ்வரா!
:))))))))))))))
என்ன வெச்சு காமடி கிமெடி ஒண்ணும் பண்ணலயெ....
//இன்னும் ரெண்டு நாள் இருக்கே மஹேஷ்வரா! //
Ha Ha Ha..
GK,
Nice one! Very interesting!
Thanks for sharing!
//
நாமக்கல் சிபி said...
:)
சூப்பர்! எங்க கைப்புள்ளைக்கு ஆப்பு வைக்க காணாம போயிருந்த பார்த்திபனை இட்டாந்த கோவியாருக்கு
//
சிபியாரே,
பார்த்திபன் எங்கும் போகலை, அடுத்தப் படம் சிம்ரன் கூடவாம்.
:)
//முத்துலெட்சுமி said...
நல்ல நகைச்சுவைக் காட்சி .. :)
//
பாராட்டுக்கு நன்றி சகோதரி !
//ILA(a)இளா said...
:))
//
ஏன் ரொம்ப மொக்கையாக இருக்கோ ?
:)
இது "புண்" சிரிப்பா ?
//குசும்பன் said...
super :)))
//
உங்க கலாய்த்தளைவிடவா ?
பாவங்க அபி அப்பா, பாலபாரதி விட்டுடுங்க !
:)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
எங்கள் சங்கத்தின் தானைத்தலைவர் கைப்புவுக்கே என்கவுண்டர் நடத்த சதித் திட்டம் தீட்டும் பார்த்தியை மிகவும் வன்மையாக் கண்(ண)டித்து, சகலருக்கும் சங்கத்தில் இனிப்பு வழங்கப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! :-))))
//நாக்கு செத்தாலும் வாக்கு தவறமாட்டான் கைப்புள்ள//
பஞ்ச் பஞ்ச் பஞ்ச்......சங்கம் பஞ்ச்!//
நீங்களும் ரசித்து மகிழ்ந்ததற்கு நன்றி.
உங்க கவுண்டரை அடிச்சுக்க முடியாது.
:)))
// VSK said...
இது... இது... இது கோவி.கண்னன்!
இப்படியே நட்சத்திர வாரத்தைப் பண்ணியிருக்கலாமே என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நல்லா சிரிச்சேன் கோவியாரே!
:)))))))))))))) //
வீஎஸ்கே ஐயா,
இப்படியே பண்ணி இருக்கலாம் தான்.
'விதி' யாரை விட்டது ?
//இன்னும் ரெண்டு நாள் இருக்கே மஹேஷ்வரா!//
நீங்கள் பெற்ற பேரின்பம் பதிவுலகம் பெற வேண்டாமா ?
:)
சிபாவும் நீங்கள் சொல்வதை புரிந்து கொண்டு கலாய்க்கிறார் பாருங்க.
:)
// இம்சை said...
என்ன வெச்சு காமடி கிமெடி ஒண்ணும் பண்ணலயெ
//
வாங்க சாரே,
ஆளையே காணூமே, கண்டு பிடிச்சு யாராவது ஆப்பு வச்சிட்டாங்களா ?
:)
//சிவபாலன் said...
Ha Ha Ha..
GK,
Nice one! Very interesting!
Thanks for sharing!
//
சிபா,
உங்கள் மகிழ்வு புரிகிறது.
:)
உண்மையாகவே நல்ல நகைச்சுவை. குட்டு அழகாக சிவப்பாக கட்டியாக வெளிப்பட்டிருக்கிறது.
//cheena (சீனா) said...
உண்மையாகவே நல்ல நகைச்சுவை. குட்டு அழகாக சிவப்பாக கட்டியாக வெளிப்பட்டிருக்கிறது.
//
சீனா ஐயா,
பழைய இடுகைதான்,
தேடி பிடித்து படிச்சிட்டிங்க. மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுக்கு நன்றியும்.
கருத்துரையிடுக