பின்பற்றுபவர்கள்

16 ஜனவரி, 2007

இந்த கதையையும் குமுதம் வெளியிடுமா ?

விமர்சனம் 1 *^* விமர்சனம் 2 *^* விமர்சனம் 3 *^* கதை 1 *^* கதை 2 *^* கதை 3 *^* கதை 4 *^* ஒரிஜினல் கதை

எதோ என் பங்குக்கு ...! ஜோதியில் கலப்போம் ! :)
***************************************************


''அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது'' என்றவர்

க்ரிஷின் அப்பா அடுத்த இரண்டாம் நாள் மாரடைப்பில் இறக்க...10 நாள் காரியம் முடிந்ததும் க்ரிஷின் காதல் மனைவி கலைச்செல்வி தன் அம்மாவையும் அப்பாவையும் பஸ் ஸ்டாண்டில் விட்டு வர ஆட்டோவில் ஏறி சென்றாள்.

அதன் பிறகு சொந்த பந்தங்களை அருகில் வைத்துக் கொண்டு...

க்ரிஷின் அம்மா,

"க்ரிஷ் ... நா அப்பவே நெனச்சேன் ... நம்மாத்துல என்னன்னவோ நடக்கப் போறதோன்னு ... இப்பதாண்டா தோன்றது... இவ பொறந்த நேரம் என்னவோ ... இவ உன்னை கட்டிண்ட நேரம் ... நம்மாத்துல உன் தோப்பனார் அடிப்பட்டு ... படுக்கையில் விழுந்து ... எழவெல்லாம் நடந்து போய்டு"

க்ரிஷ் "என்னம்மா சொல்றே ... நீயும் என் கூட அமெரிக்கா வந்துடேன்"


"என்னால அவ கூட வரமுடியாது...இங்கேயே விஷ்ராந்தியில சேர்த்துவிடு ... பகவான் பேரை சொல்லிண்டு என் காலத்தை ஓட்டிடுறேன்"

"என்னம்மா சொல்றே எப்படிம்மா தனியா இருப்பே?"

'நா என்னத்தடா சொல்றது...கல்லுமாதிரி இருந்தவர் .. இவ காலடி நம்மாத்துல பட்டதில எல்லாமே பாழாப் போச்சு... பட்டுன்னு போய்ட்டார்'

"நீ இந்த காலத்து மனுசியாக்குன்னு நெனச்சிண்டு இருந்தேனே"

"ஆமாண்டா ... அவா அவாளுக்கு வந்தா தான் தெரியும்... பெரியவாளெல்லாம் சும்மாவா சொல்றா ... குலம் கோத்ரம் எல்லாம் பாத்து கல்யாணம் செய்யனும் ... ஆயிரங்காலத்து பயிரரில்லையோ இது''


"அம்மா ..." அதிர்ந்து பேசினான் கிரீஷ்

சுற்றும் முற்றும் பார்த்தாள்

"உன் தோப்பனாருக்கு தர்பணம் பண்ணிட்டே... இப்ப நேக்கும் பண்ணிடாதே"

"இப்ப நான் என்னதான் பண்ணனும் ?"

"அவள டைவர்ஸ் பண்ணிட்டு ... நம்மவா அதான் கிச்சு ஐயர் வந்து அவ பொண்ணுக்கு கேட்டாரில்லையான்னோ அவ பேரு கூட என்னமோ பவித்ரா... அவளுக்குக்கூட கல்யாணம் ஆச்சே'

"!! "


"அவளேதான்... அவளுக்கு ஒரு தங்கை இருக்காள் பேரு மைதிலி ... பாக்க நன்னா செவப்பா அக்கா மாதிரியே இருப்பாள் ... அக்காவை பார்த்தா தங்கையை பார்க்க வேண்டியதில்லை ... ஒரே அச்சா இருப்பாள்"

"..."

"அவளை கேட்க்கலாம் ... இதெல்லாம் சகஜம் ... எல்லாம் தப்பா நெனச்சிக்க மாட்டார் ... அடுத்தப் பொண்ணு இருக்காள் எதாவது நல்ல தகவல் இருந்தா சொல்லி அனுப்புங்கன்னு பக்கத்தாத்து பத்மனாபன் மாமாகிட்ட பேசிண்டு இருந்தாராம்"

அருகில் இருந்த பத்மனாபன் மாமா உடனே,

"ஆமாண்ட கிரீஷ், நாம என்னதான் முடிவெடுத்தாலும் பகவான் எடுக்கிற முடிவு தான் பலிக்கிறது பார்த்தாயா ?"

"மாமா என்ன சொல்றேள், பகவான் முடிவெடுத்துட்டாரா ?"

"அம்பி ... ஆச்சாரா அனுஷ்டானமா இருக்கிறவா ஆத்துல ... அவா அவாளே முடிவெடுத்து... பிரத்தியார ஆத்துக்கு கூண்டிண்டு வந்துட்டா ... அப்பறம் ஆண்டவன்னு எதுக்கு இருக்கார் ... அதான் கோபத்தை காட்டிட்டார்"

"நன்னா சொல்லுங்கோ மாமா... இஷ்டத்துக்கு நடந்துட்டதுக்கு தோப்பனாரை முழுங்கிட்டு இன்னும் பேசுறான் பாருங்கோ" விசும்புகிறாள்

"க்ரிஸ் ... பட்டுன்னு சொல்லிடுறேன்... டைவர்சுக்கு பைல் பண்ணிட்டு அமெரிக்கா போய்டு... ஒருவருசம் ஓடிடும் ... திரும்பி வந்தோன ...கிச்சு ஐயர் கடைசி பெண்ணு மைதிலிய முடிச்சிடலாம்" பத்மனாபன் மாமா சொன்னார்

அப்போது உள்ளே நுழைந்த கலைச்செல்விக்கு சன்னமாக இந்த பேச்சு காதில் விழுந்தாலும் அவளுடைய மாமனார் போய் சேர்ந்ததிலிருந்து எல்லோரும் ஜாடை காட்டி பேசியது இப்போதுதான் புரிந்து

"க்ரிஷ் என் கூட இங்கே வாயென்..." ரூமுக்குள் அழைத்துச் சென்றாள்

"நன்னா பாருங்கோ ஆத்துகாரன்னு மரியாதை தெரியறதா அவளுக்கு" மாமா தன் பங்குக்கு ஏற்றிவிட்டார்

முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அவனை அழைத்துச் சென்றாள்


"க்ரிஷ் எல்லா எதிர்ப்புகளையும் சமாளிப்பேன்னு தானே என்னை கட்டிக்கிட்டே...?"

"கலை அம்மா சொல்றதிலேயும் ஞாயம் இருக்கு... இப்போ கோவத்தில இருக்காங்க ... நடந்த தெல்லாம் தான் உனக்கு தெரியுமே"

"க்ரிஷ் என்ன சொல்ற நீ ? ... உன் சம்மதத்தோடத் தான் இதெல்லாம் ..ச்சேய்"

"எங்க அப்பா தான் எனக்கு எல்லாமுமே ... இப்போ போய்ட்டார் ஆதங்கம் இருக்காதா பின்னே ?"
"மாமா போனதுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் ? ...நல்லா இருக்கே ... ஒன்னு பண்ணு ... உங்க அம்மா சொல்றதை கேளு" கோபமானாள்

அவனுக்கு பதிலுக்கு கோபம் வந்தது

"எல்லாம் எனக்கு தெரியும் ..." எதோ சொல்ல வந்தான்

"ஏதோ தன்னால் நடந்ததுக்கு என் தலையை போட்டு உருட்டினால் ... பொருத்துக் கொண்டு இருக்க முடியாது... நான் வர்ரேன் ... நாம சேர்ந்து வாழறது இங்கே யாருக்கும் பிடிக்கலை" கண்களில் நீர் கசிந்தது.

"இருக்கிற பிரச்சனையில் ... இது வேற பிரச்சனையா !" கடுகடுத்தான்

"நான் இருக்கிறதே பிரச்சனைன்னு நீயும் சேர்ந்து சொன்னதுக்கப்பறம் எனக்கு இங்கே என்ன வேலை"

பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்

"நான் தான் முக்கியம்னு நெனைச்சா வா ... நான் காத்துக்கிட்டு இருப்பேன்... உங்க சொந்த காரங்க ...உங்க அம்மா ... என்னை கேவலப்படுத்துவது இதோடு முடியும்னு தோணலை ... நான் படிச்சிருக்கேன் .. சம்பாதிக்கிறேன்... இந்த ஏச்செல்லாம் வாங்கிட்டு என்னால உன் கூட வாழ முடியுது"


"போ ... திரும்பி வராதே ... !"

வேகமாக சென்றவள் மறைந்தே விட்டாள்

தலையில் கைவைத்துக் கொண்ட்டு உட்கார்ந்தான் க்ரீஷ்

அந்த அம்மா ஊகித்திருப்பாள் போலும்


"பீடை ஒழிந்தது...நடக்கிறதுதான் நடக்கும் ... ஆண்டவன் பாத்துண்டு ...இருக்காரில்லையோ ... நான் சொல்லலே! இதெல்லாம் ஒட்டவே ஒட்டாது" க்ரிஷை கரைத்துக் கொண்டிருந்தாள்

பத்மநாபன் மாமா மெல்லமாக கேட்டார்


"அப்போ நான் லாயர் கோதண்டம் ஐயங்காரைப் பார்த்துப் பேசிடுறேன் ... மைதிலி தோப்பனாரையும் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போகச் சொல்றேன்"


க்ரிஷின் குழப்பம் அதிகம் ஆக ... தனிமையை நாடி ரூமுக்குள் சென்றான்

பின்குறிப்பு : எதோ இரண்டு பேர் காதலித்து ... சாதியை மறந்து ... கல்யாணம் கட்டிக்கிட்டது பிடிக்கலையா ? சுஜாதா பொடி வைத்தால் ... பதிலுக்கு இரண்டு பக்கமும் வெடி வைக்கிறிங்களே ... ஆளாளுக்கு பிச்சி எடுத்திட்டிங்க ...இப்ப பாருங்க க்ரிஷ் - கலைச்செல்வி ஜோடி பிரிந்துவிட்டது. :)))

14 கருத்துகள்:

சாத்வீகன் சொன்னது…

பிரச்சனைக்கு சுமூகமான (!!!) தீர்வு !!!!

இலவசக்கொத்தனார் சொன்னது…

அது க்ரிஷ் , கிரீஷ் இல்லை. அதை வேற கிரிஸ், லூப் ஆயில்ன்னு வேற போட்டு புரட்டி எடுத்துட்டீங்க. :))

அப்புறம் எஸ்.கே. ஐயா டயர்டா இருந்த நேரத்துல குடுத்துட்டீங்க போல, இன்னும் எழுத்துப் பிழைகள் இருக்கே.

கதையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. யார் யார் எந்த கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு படிக்கறாங்கன்னு தெரியுது. அம்புட்டுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//saathveegan said...
பிரச்சனைக்கு சுமூகமான (!!!) தீர்வு !!!!
//
சாத்வீகன்,

ம் ... மேலும் ஏற்படுதான்னு பார்போம்.

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//இலவசக்கொத்தனார் said...
அது க்ரிஷ் , கிரீஷ் இல்லை. அதை வேற கிரிஸ், லூப் ஆயில்ன்னு வேற போட்டு புரட்டி எடுத்துட்டீங்க. :))

அப்புறம் எஸ்.கே. ஐயா டயர்டா இருந்த நேரத்துல குடுத்துட்டீங்க போல, இன்னும் எழுத்துப் பிழைகள் இருக்கே.

கதையைப் பத்தி நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை. யார் யார் எந்த கலர் கண்ணாடி போட்டுக்கிட்டு படிக்கறாங்கன்னு தெரியுது. அம்புட்டுதான். //

கொத்ஸ் நன்றி !

இந்த கதையும் சுஜாத அவர்களின் கதையின் தழுவல் தான். முன்பு ஒரு தொடர்கதையில் இமயவரம்பன் என்ற பாத்திரத்தை வைத்து கலப்பு திருமணத்தால் வரும் பிரச்சனைகள் சொல்லி இருப்பார். தக்க சமயத்தில் அவரின் புதிய கதையுடன் சேர்த்து அதையும் ஞாபகப்படுத்திக் கொண்டதால் இதனை எழுதினேன். இங்கு எழுதியதும் சுஜாதாவின் கற்பனையில் சொன்ன விசயங்கள் தான். புதிதாக ஒன்றும் இல்லை. டயலாக் மாறி இருக்கிறது. பொருள் அதேதான்.

✪சிந்தாநதி சொன்னது…

என்ன நடக்குது இங்கே? அவர் ஏதோ கதை எழுதினோமா சன்மானத்தை வாங்கினோமான்னு சும்மா இருக்கார். நீங்கள்ளாம் எதுக்காக அவரோட சிறுகதையை தொடர்கதையாக்கிக் கொண்டே இருக்கீங்க..?

இதுக்கெல்லாம் விகடன்ல சன்மானம் தரமாட்டாங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

// சிந்தாநதி said...
என்ன நடக்குது இங்கே? அவர் ஏதோ கதை எழுதினோமா சன்மானத்தை வாங்கினோமான்னு சும்மா இருக்கார். நீங்கள்ளாம் எதுக்காக அவரோட சிறுகதையை தொடர்கதையாக்கிக் கொண்டே இருக்கீங்க..?

இதுக்கெல்லாம் விகடன்ல சன்மானம் தரமாட்டாங்க...
//

சிந்தாநதி,

சன்மானம் வேனாம் ...

தன்மானம் ... ஏற்கனவே 4 பேர் எழுதிட்டாங்க ... என்னைப் பார்த்து நானே உன்னால எழுதமுடியுமான்னு கேட்டேன் ... ஹி ஹி அதுதான் !
:)))

VSK சொன்னது…

எ.பி. திருத்தி நான் அனுப்பிய பிரதி என்னிடம் 'அனுப்பிய மயிலில்' இன்னமும் இருக்கிறது!

அதில் இங்கு காணும் பிழைகள் இல்லை.

தன் பங்குக்கு வயதான ஐயரை சாகடித்து, ஒரு திருப்பத்தை உண்டாக்கியது போல், கோவியார், நான் திருத்தி அனுப்பியதிலும், சில திருத்தங்கள்[பிழைகள்??] செய்து பதித்திருக்கிறார் என நினைக்கிறேன்!

:))

கதையைப் பற்றி....?

அதான் கோவியாரே சொல்லிவிட்டாரே, தன் பங்குக்கு என!

அசலைத் தழுவி நகல் எடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ்மணத்தில் என அறிய மகிழ்ச்சியாய் இருக்கிறது!

இதில் தன் பாணியை விடாமல் எழுதியிருப்பது முள்ளம்பன்றிக்கே என் ஓட்டு!

சிறில் அலெக்ஸ் சொன்னது…

கதைக்கு சுமூகமான முடிவு.

K. பாலச்சந்தர்: கிரிஷ் மைதிலியை மணம் முடிக்க, கலை மைதிலியின் தோப்பனாரை மணக்கிறாள்.

டி. ராஜேந்தர்: கிரிஷ் தன் தோப்பனாரை கொன்றவர்களைத் தேடிப்போய் பழிவாங்க (மாபெரும் செட்டில் ஃபைட்) கத்தி குத்து பட்டு பாட்டு பாடியபடியே செத்துப் போகிறார்.

கே எஸ் ரவிக்குமார்: கிரிஷ் வீட்டுக்குள்ள புதையல் கிடச்சு பணக்காரர் ஆயிடுறார். கலை வீட்டுல மாட்டிலேந்து தங்கப்பால் கறக்குது. அவரும் பணக்காரராயிடறார். பணம் வந்தபிறகு சாதியாவது மதமாவது. ஒண்ணு சேந்துர்றாங்க

சேரன்: கலை சைக்கிள்ல ஊர் போய் சேரும்போது அவங்க அம்மா தண்ணிக் கொடம் கால்ல விழுந்து செத்து போறாங்க. அப்பா அரிவாள்ல நகம் வெட்டும்போது கை துண்டாயிப் போகுது. கலை பத்துப் பாத்திரம் தேய்க்க ஆரம்பிக்கிறா. க்ரிஷ் அந்தக் கிராமத்துக்கு வாத்தியாரா வரார்.

ஷங்கர்: க்ரிஷ் சாதிக் கலவரத்துல ஈடுபடுற எல்லாரையும் கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசில எல்லாத்துக்கும் கலைதான் காரணம்னு கண்டுபிடிச்சு ஸ்பிளிட் பர்சனாலிட்டி ஆகிறார்.

போதுமா 'சுமூகமான முடிவுகள்'.

கோவி.கண்ணன் சொன்னது…

எஸ்கே,

ஐயா உங்களுக்கு அனுப்பிய கதையில் சிறிய மாற்றம் செய்ததால் நீங்கள் திருத்தி அனுப்பியதை அப்படியே போடமுடியவில்லை.
:(

இந்த கதையின் வடிவமும் சுஜாதாவின் இன்னொமொரு பழைய கதையின் வடிவம் தான் !

கோவி.கண்ணன் சொன்னது…

சிறில்,

நீங்கள் பல சுமூகமான முடிவுகள் கொடுத்திருந்தாலும் பாலச்சந்தரின் புரட்சிக்கதை சொல்லி இருக்கிறீர்களே அதற்கு இணை எதுவும் கிடையாது !

வருகைக்கும் கருத்து கிளைக் கதைகளுக்கும் நன்றி !

thiru சொன்னது…

சிறில் சொன்ன முடிவை படித்து சிரித்தேன் :)))

கோவி,

கதையெல்லாம் எழுதி கலக்குறீங்க! :)

வல்லிசிம்ஹன் சொன்னது…

எப்படியோ தமிழ்மணத்துக்கு விவாதக்களம் கிடைத்தது.

யார் அடிபட்டால் யாருக்கு வருத்தம்?

கோவி.கண்ணன் சொன்னது…

// திரு said...
சிறில் சொன்ன முடிவை படித்து சிரித்தேன் :)))

கோவி,

கதையெல்லாம் எழுதி கலக்குறீங்க! :)
//

திரு,

எனக்கு சொந்தமாக யோசிக்கத் தெரியாது ... கூட்டத்தோடு கோவிந்தா போட ஓரளவுக்கு வரும் !
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//tamilreber said... Anyway you will get lof of appreciation because you also
hate brahmins.So dont worry.
Hating brahmins and writing
against them is an easy way
to become popular in tamil
blogs. //

tamilreber,
thanks for great idea !
but i don't need this idea. i have my own way!
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்