பின்பற்றுபவர்கள்

26 ஜனவரி, 2007

அமிர்தாநந்தமயி புறக்கணிக்கப்பட்டார் ?

2004 டிச 26 சுனாமியை யாரும் மறந்திருக்க முடியாது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் போர்கால அடிப்படையில் உதவிசெய்தது. பொருளாகவும் பணமாகவும் துயர்துடைப்புக்காக நல்ல உள்ளங்கள் அள்ளிக் கொடுத்தன. இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இயன்ற அளவில் நேரடியாக வருகை தந்து உதவினார். பின்னார் அது முன்னால் தமிழக அரசால் அரசியலாக விமர்சிக்கப்பட்டது. இதில் முதன்மையாக அன்றைய நாளில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது ரூ 100 கோடி வீடுகட்ட உதவி அறிவித்து பின்பு மேலும் ரூ 100 கோடி ஆக 200 கோடி உதவி வழங்கிய கேரள அம்மே கட்டிபிடித்து ஆசிர்வதிக்கும் மாதா அமிர்தாநந்தமயி நற்செயல்.

இன்றைக்கு ஸ்ரீ சத்ய சாயிபாபாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டுதல் போல் கேரள அம்மேவுக்கு எதுவும் நடத்தப்படவில்லை. கலைஞர் அரசு அது சென்ற ஆட்சியில் என்று நினைக்காமல் அவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும். கலைஞர் - பாபா கூட்டணி செயல் திட்டங்களுக்கு அரசு ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் கிடைத்த விளம்பரம் அளவுக்கு மாதா அமிர்தநந்த மயிக்கு முதன்மைத்துவம் அளிக்கப்படவில்லை.

சென்ற ஆட்சியில் அம்மே அமிர்தநந்தமயி அவர்களுக்கு உரிய பாராட்டுதல்கள் கிடைத்தா என்று அதுபற்றிய செய்திகள் தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு நினைவில்லை.

இதுபோன்ற வெளிப்படையான பாராட்டுதலால் தமிழக மக்களுக்கு ஆன்மிக வாதிகளின் கருணையும் பரிவும் கிடைத்து மேலும் உதவிகளை வழங்க முன்வருவர். மக்கள் தொண்டாற்ற எப்போதும் ஆன்மிகவாதிகள் தயராகவே இருப்பார்கள் அதற்கான பணமும் மனமும் அவர்களிடம் இருக்கும். அரசு வேறுபாடு காட்டாது அனைவரையும் வரவேற்று மக்களுக்கான நல் திட்டங்களை செயல்படுத்த நல்வரவேற்பு கொடுத்து மக்கள் நல அரசாக மாற வேண்டும்.

25 கருத்துகள்:

ஜோ / Joe சொன்னது…

கோவி.கண்ணன்,
இது நியாயமான கோரிக்கை .அரசியல் ,கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக பேருதவி செய்தவர்களை கவுரவிப்பதும் பாராட்டுவதும் ஒரு அரசின் கடமை.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

சொல்லாம கொள்ளாம பீட்டாவுக்கு மாத்திட்டீங்க.. நல்லா இருக்குது.

நல்லவர்களை அடையாளம் காண்பிக்கவேண்டியது எல்லோரின் கடமை.

நீங்கள் செய்திருப்பதுபற்றி மகிழ்ச்சி.

கோவி.கண்ணன் சொன்னது…

சிறில்,
புதுவீடு குடிபுகுந்ததற்கு ஏற்கனவே முறைப்படி அறிவிப்பு கொடுத்தாகிவிட்டது நீங்க லேட்டு ! :)

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
கோவி.கண்ணன்,
இது நியாயமான கோரிக்கை .அரசியல் ,கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக பேருதவி செய்தவர்களை கவுரவிப்பதும் பாராட்டுவதும் ஒரு அரசின் கடமை.
//

ஜோ,
இணைந்து குரல் கொடுப்பதற்கு நன்றி !

SK சொன்னது…

ஆன்மீகவாதிகள் எனப் பார்க்காமல், அனைவரும் செய்யும் நற்செயல்களைப் போற்ற வேண்டும் என்ற உங்கள் கருத்தோடு ஒன்றுகிறேன்!

சாயிபாவை இதற்கென வரச் சொல்லி விழா நடத்தப் படவில்லை.
இது போன்ற அழைப்புக்கெல்லாம் பாபா, அம்மா போன்றவர்கள் அலைவதில்லை.

10 வருடங்களுக்குப் பிறகு பாபா சென்னை வந்தார்.

2005-ல் முடிந்த ஒன்றுக்கு இப்போது பாராட்டு என்றார்கள்.
சிரித்துக் கொண்டே அவரும் இதற்கு தலை அசைத்தார்.

அது போல அடுத்த முறை அம்மா இங்கு[சென்னை] வரும் போது இப்படி ஒரு கோரிக்கை விடுக்கவும்.

இன்னுமொரு பதிவுக்கு இப்போதே சொல்லி விட்டேன்!
:))

சற்று முழுதுமாக நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டு பதிவிடுதல் நலம்.

நுனிப்புல் மேய வேண்டாம்!

உங்கள் நன்றியறிதலை அம்மாவுக்கு முன்னரே கடிதம் அனுப்பி தெரிவித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அம்மாவும் சரி, பாபாவும் சரி, அடுத்தவர் நன்றிக்காக இதனைச் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்!

ஜோ / Joe சொன்னது…

கோவியாரே,
இப்போதைய விகடனில் ஒரு பகுதி

"கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்.

ÔÔமனிதனுக்குச் செய்யும் சேவையை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைகொடுக்க வருபவர்கள் ஆள்பவர்கள் பேரைச் சொல்லி வந்தால் என்ன... ஆண்டவன் பேரைச் சொல்லி வந்தால் என்ன? வருகிற உதவியை உதாசீனப்படுத்த லாமா?ÕÕ என்பதுதான் முதல்வர் கருணாநிதி தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்ட கேள்வி. "

SK சொன்னது…

There are times in our lives when all hope is lost, there is no one to turn to and nothing to live for. And then God comes into our lives, like the first raindrop on the desert sands, like fresh air to one gasping for breath. The tsunami tides that struck the Indian coast was a disaster that washed away hopes more than it washed away houses, that ruined as many lives as it took. But we have the living and loving God, Bhagawan Sri Sathya Sai Baba, the lighthouse to minds lost in the wild seas of sorrow.


A village in Nagapattinam District after being ravaged by the tidal waves

The tsunami waves that struck South Asia on 26th December 2004 affected thousands and created enormous damage to life and property. Soon after the disaster, as the survivors struggled to recover from the blow Nature had dealt them, Bhagawan's limitless compassion flowed to them in the form of dedicated service by the volunteers of the Sri Sathya Sai Seva Organization, Tamil Nadu. Hundreds of volunteers organized themselves into teams and fanned out into the different areas where damage had been caused. The top priority was to extricate the corpses tangled in the rubble and suitably dispose them so that epidemics could be prevented. Food and basic amenities too had to be arranged for the survivors.


Relief materials arranged to be sent to survivors

Of all the affected areas in Tamil Nadu, Nagapattinam District bore the maximum brunt of the tsunami. The Sri Sathya Sai Central Trust, under the Divine guidance of Bhagawan Sri Sathya Sai Baba, rushed relief to the villages of Serudhoor, Akkaraipettai, Keechankuppam, Kallar, Olakottaimedu and Thoduvai that were the worst affected in Nagapattinam District. Provisions, utensils, stoves, clothes and other basic items required to restore life back to normalcy, were procured and packed into cartons. Seva Dal volunteers worked day and night procuring, packing and transporting these materials. The cartons were transported from Chennai to the relief operations base camp near Nagapattinam. Simultaneously, another group of volunteers were engaged in the distribution of these cartons to more than 5000 families in Nagapattinam District and Pondicherry. Needless to say, the Seva Dal volunteers performed the entire task in a spirit of selfless love and dedication. They consoled the distressed, reassured them and gave them the courage and hope to start their lives afresh putting the tragedy behind them.


Trucks arriving from Chennai with the relief material

In one of the villages, as the supplies were getting exhausted at the end of the day, a villager was heard assuring his fellowmen that there was no need to worry as the Sai volunteers would definitely bring more supplies the next day and continue the relief work. Instances like these are a testimony to the confidence that these volunteers inspired in the hearts of these people by the dedication and commitment with which they served. The district administration also commended the well-organized and orderly way in which the materials were distributed.


Relief operations being conducted by Sai volunteers

It was a touching experience for the volunteers as they saw the affected people help each other rebuild their lives, cutting across barriers of caste, creed and socio-economic status. In a village, one of the villagers requested that the materials be distributed in the neighboring village too as no relief had yet reached that village. At a time when one would expect them to be anxious about their own welfare, it was moving to see the feelings of love and concern they had for their brethren in distress. Truly, Bhagawan's cardinal teaching of ‘Brotherhood of Man and Fatherhood of God' was being translated into action by these innocent village folk.


Receiving Bhagawans gifts of Grace

It was not the villagers alone who benefited from the exercise, but also the volunteers who found the experience an inspiring one. The villagers were often heard to say that God is their sole refuge and He would definitely take care of their lives. To encounter such strong faith in God among these rural folk was a reminder of the deep spiritual moorings of the people of this country. They did not consider it as mere relief material but as consecrated gifts of Grace from God Himself who had come to their aid in their time of distress. One is reminded of the words of a song that is often sung in Bhagawan's presence:

"There is someone above to comfort me
There is someone above to show me the way
There is Swami to guide me
There is someone above to care
And it's Love, Love all the way..."

Jai Sai Ram!

மங்கை சொன்னது…

கோ வி

அருமையான பதிவு.. ஏனோ முதல் முறையாக எனக்கு திருப்தி அளிக்கும் ஒரு பதிவாக இது தெரிகிறது.. ஒரு வேளை நான் எடுத்து இருக்கும் ஒரு சிறு முயற்சியுடன் சம்பத்தப்பட்ட கருத்தாக இருப்பதால் எழுந்த சுயநலமோ என்னவோ தெரியவில்லை...

//மக்கள் தொண்டாற்ற எப்போதும் ஆன்மிகவாதிகள் தயராகவே இருப்பார்கள் அதற்கான பணமும் மனமும் அவர்களிடம் இருக்கும்//

உலகத்தில் சமுதாய அக்கறை, தொண்டு என்பது ஆதிநாள் முதல் ஆன்மீகவாதிகளிடமே இருந்து வந்து இருக்கிறது..நாளடைவில் சிலரின் சுயநலத்திற்காக அவர்களின் செயல் திட்டங்கள் மாறிவிட்டது.. எல்லா மதத்தின் அடிப்படை கொள்கையே மக்களின் நலனுக்காக இந்த இறை தூதர்கள் செயல் ஆற்றுவது தானே..

நான் சொன்ன முயற்சி...
எச்ஐவி/எய்ட்ஸ் ல் மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் நலனுக்காக தொண்டாற்றி வரும் பெண்களை ஒன்று கூட்டி, அவர்களுக்கு உரிய பயிற்சி கொடுத்து, எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம்..
மேலும்பாதிக்கப்பட்டவர்கலுக்கு அன்பும் ஆதரவும் தர அவர்களை ஊக்கப்படுத்திகிறோம்... எதிர் பார்த்ததைவிட வரவேற்பு நன்றாக உள்ளது...

இது தொடர்பாக களபணியில் செயல்படும்போது தான், உண்மையாக மன நிறைவோடும், ஈடுபாட்டோடும் தொண்டாற்றும் பல தெரசாக்கள் இருப்பது தெரியவருகிறது. .

படித்து பட்டம் பெற்று பல விருதுகளையும் பாராட்டு பட்டங்களையும் பெற்ற பல பிரபலங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பணிகளை இந்த பெண் இறைதூதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகை ஆகாது..

இதை இங்கு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தற்கு நன்றி கோ வி அவர்களே...

Sivabalan சொன்னது…

GK,

நியாமன கேள்வி!

உடன்படுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
சற்று முழுதுமாக நிகழ்வுகளைத் தெரிந்து கொண்டு பதிவிடுதல் நலம்.

நுனிப்புல் மேய வேண்டாம்!

உங்கள் நன்றியறிதலை அம்மாவுக்கு முன்னரே கடிதம் அனுப்பி தெரிவித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அம்மாவும் சரி, பாபாவும் சரி, அடுத்தவர் நன்றிக்காக இதனைச் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்!
//

எஸ்கே ஐயா,

நான் கேள்வி எழுப்பியது அரசையும், செய்தி ஊடகங்களையும் தான். இதில் அரசுக்கு ஆதராவாக நீங்கள் பேசுவதாக எடுத்துக் கொள்கிறேன். பாபாவுக்கு ஏன் செய்தீர்கள் என்று கேட்கவில்லை. அமிர்தாநந்தமயி அம்மாவுக்கும் மரியாதை கிடைக்கவேண்டும் என்று தான் கேட்டுக் கொள்கிறேன்.

அவர்கள் நன்றி எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லவில்லை. நன்றி செலுத்துவது நம் கடமை பிச்சைக் காரணிடம் உதவி எதிர்பார்த்தா பிச்சை இடுகிறோம். அவன் நன்றி சொல்கிறான் அல்லவா ? அது போலத்தான் உதவி செய்பவர்களுக்கு நன்றி சொல்வது கடமை.

கருத்துக்கு நன்றி !

குழலி / Kuzhali சொன்னது…

//இது போன்ற அழைப்புக்கெல்லாம் பாபா, அம்மா போன்றவர்கள் அலைவதில்லை.
//
எப்படிங்க எஸ்.கே. அய்யா இம்புட்டு காமெடியா எழுதறிங்க

நன்றி

தங்கவேல் சொன்னது…

திருப்பதி கோவில் உண்டியலில் ஊரை ஏமாத்துறவன் போடுற பணம் மாதிரிதான் பாபா, அம்மா போன்றவர்கள் செய்யும் மக்கள் சேவையும். ஆயினும் நன்றின்னு ஒருத்தருக்கு மட்டும் சொல்லக்கூடாதல்லவா? கூடிய விரைவில் கருணாநிதி அம்மாவிற்கும் நன்றி செலுத்துவார்.

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

// ஜோ / Joe said...
கோவியாரே,
இப்போதைய விகடனில் ஒரு பகுதி

"கேரள பூமியில் தோன்றி, மளமளவென உலகப் புகழ் பெற்று வரும் மாதா அமிர் தானந்தமயி அமைப்பின் பொதுச் சேவைகளுக்கும் ஆதரவுக் கரம்! சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தந்தது அமிர்தானந்தமயி அமைப்பு. அதற்கான விழா இம்மாத இறுதி யில் நாகப்பட்டினத்தில் நடக்கிறது. அதில், அமிர்தானந்தமயி யோடு முதல்வரும் மேடையில் தோன்றுவார் என்கிறார்கள்.
//

ஜோ,

நல்ல செய்தி, அருளாலளர்கள் பாராட்டப்பட வேண்டும்.

நன்றி ஜோ !

திரு சொன்னது…

கோவி,

அரசுக்கு நல்ல அறிவுறுத்தல்! அமிர்தானந்தாதேவி மட்டுமல்ல, சுனாமி நேரத்தில் மக்களுக்காக உழைத்த அனைத்து தலைவர்களுக்கும் பாராட்டுதல் அவசியம். அழுகிய பிணங்களை வெறுங்கையில் அள்ளி புதைத்த நல்ல மனிதர்கள் பலர் உண்டு. இவர்களுக்கு நல்ல சேவை செய்ததற்காக விருதோ அல்லது பாராட்டோ வழங்கப்பட்டனவா? அல்லட்து அடையாளம் காட்டப்பட்டனரா?

சில பின்னூட்டங்களை படித்து சிரித்தேன்.

neo சொன்னது…

ஆமா பொம்பளைங்க கடவுளைப் பூசித்தா தீட்டுன்னு சொல்லும் ஒரு சிறுநரி இங்கே வந்து உலகப் பெரும் ஆன்மீகன் போல ஊளையிடுவதை எப்படி எடுத்துக் கொள்வது?!!

அமிர்தானந்தமயியை வச்சு 'இந்து' ஆன்மீகம் பரப்பனும் - ஆனா அந்தம்மா சாமியத் தொட்டா தீட்டு அப்பிடிதானே?!

இந்த எஸ்கே இங்க வந்து பதிவின் நோக்கத்துக்குத் தேவையில்லாத செய்திகளை நீட்டி முழக்கியதால இதச் சொல்ல வேண்டியதாப் போச்சு.

ஆர்ச் பிசப்பு, முல்லாக்கள், 'ரபி'க்கள் யார் பொது உதவி செய்தாலும் அவர்களைப் பாராட்டுவது ஓர் அரசின் கடமைதான். முடிஞ்சா இதுபத்திய ஜோவின் பதிவைப் பார்க்கட்டும்.

அத விட்டுட்டு சந்தடி சாக்குல பிரச்சாரம் பண்ணினா வால ஒட்ட நறுக்க வேண்டிவரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
GK,

நியாமன கேள்வி!

உடன்படுகிறேன்.
//

சிபா,

நன்றி !

neo சொன்னது…

திரு கோவி,

நான் கொடுத்த பின்னூட்டை இன்னும் இங்கே காணோமே?

வெளியிட விருப்பம் இல்லையா?

அப்படியாயின் - அமிர்தானந்தமயி குறித்து நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் - அங்கே என் பின்னூட்டத்தை வந்து போட்டுவிடுங்கள் - அதைச் சேமித்து வைக்க மறந்துவிட்டேன் - எனவே அந்த உதவியைச் செய்யுங்கள் - I shall publish it there as my comment. Thanks :)

கோவி.கண்ணன் சொன்னது…

Neo,
இந்த பதிவில் அமிர்த்தானந்த அம்மாவின் சேவையை நினைவு கூர்ந்து அவரிடம் உதவி பெற்ற நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் என்பதால் அவருக்கும் பாராட்டுகள் கிடைக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தேன்.

இங்கு பின்னூட்டமிடுபவர்கள் சொல்பவர்களின் கருத்தை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கமில்லை. அது வேறு மாதிரியாக போய்விடும். அது நோக்கமும் அல்ல.

♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னது…

ammaa pen enbathaal purakkanikkappadukiraaraa?

(sorry 4 thangish)
:(

ravi சொன்னது…

Many organisations including RSS,DYFI did commendable work
during that mass tragedy.There
are many seers who are not as
well known as Sai Baba or Amrithananda Mayee and they also
contributed their share to
relief work.Some of them are
from states like A.P. They
do not have many followers
in Tamil Nadu.I learn that there
were missionaries who used this
for conversion to christianity.
If you can give a list of whom all
to be facilitated and whom need
not be facilitated with reasons
it will be helpful to readers
of this blog post.

குமரன் (Kumaran) சொன்னது…

நல்ல பதிவு கோவி.கண்ணன் அண்ணா. எஸ்.கே. சொன்னது போல் அம்மாவும் ஐயனும் இந்த பாராட்டுக்காகவெல்லாம் அலைபவர்கள் இல்லை. இதனை நகைச்சுவையாக யார் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. உண்மை மாறப்போவதில்லை. (நீங்கள் அவர்கள் அலைகிறார்கள் என்று சொல்லவில்லை).

மங்கை சொன்னது…

கோ வி அவர்களே...

இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

எங்கள் பணி தொடர்பாக இங்கு தில்லியில் அமிர்தா வித்யாலயாவை தொடர்பு கொண்டு பேசியபோது, உடனே ஒத்துழைப்பு கொடுத்து பயிற்சிக்கு அவர்கள் தரப்பில் இருந்து 4 பெண்களை அனுப்பி வைத்தார்கள்...
அதுபோலத்தான் ஆர்ய சமாஜ் சுவாமி அக்னிவேஷ். இவர்கள் எல்லாம் வெளியே தெரியாமல் பல பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்...

சுல்தான் சொன்னது…

தங்களின் உள்ளக்கிடக்ககை நன்மைக்கானதே ஜிகே.
சாய்பாபாவானாலும் அமிர்தானந்தமயி ஆனாலும், உதவி செய்பவர்களை(அவர்கள் எதிர்பார்க்கா விட்டாலும்), நாம் மனம் திறந்து பாராட்டுவதால், அது மென்மேலும் உதவி செய்ய, அவர்களை ஊக்கப்படுத்தும்.
மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் பலரை அது உதவி செய்ய ஈர்க்கும்.
எது எப்படியோ மக்களுக்கு நன்மைகள் சென்றடைய வேண்டுவதுதான் முக்கியம்.
('ஆனந்த'த்தை 'நந்த'ன் மாதிரி ஆக்கிவிட்டதாக தோன்றுகிறது. அமிர்தா நந்தமயி என்று எழுதியுள்ளதால்... - அதை சரி பாருங்களேன்.)

ILA(a)இளா சொன்னது…

//இது நியாயமான கோரிக்கை .அரசியல் ,கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக பேருதவி செய்தவர்களை கவுரவிப்பதும் பாராட்டுவதும் ஒரு அரசின் கடமை//
ரிப்பீட்டேய்

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

மங்கை அவர்களுக்கு,
தங்களின் இருபின்னூட்டங்களுக்கும் நன்றி, அம்மா அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்ட தமிழக அரசு முன்வரவேண்டும்.

ஒருமுறை அமிர்த்தா அம்மாவை சிங்கபூர் ஏற்போர்டில் விமானத்தில் ஏறுமுன் காத்திருக்கும் இடத்தில் அவர்களுடைய அடியவர்களுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.

நன்கு தெரிந்த பக்கத்துவீட்டு அம்மா போன்று எளிமையாக இருந்தார். அருகில் சென்றவரை கனிவுடன் பார்த்து அனைத்துக் கொண்டார்.
எந்தவித பந்தாவும் இல்லாமல் மிகச் சாதாரணமாக காணப்பட்டார்.

பெண்கள் ஆன்மிகத்திலும் சிறந்த சேவை ஆற்ற முடியும் என்பதற்கு அன்னை சாரதா போன்றோர் வரிசைவில் அம்மாவும் ஒருவர் என்று நினைகிறேன்.

வளர்க அம்மாவின் மக்கள் சேவை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்