இறை நம்பிக்கை 'தோன்றிய' பின் முதன் முதலில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே உள்ள இறைநம்பிக்கைக் குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சந்தித்துக் கொண்ட போது 'நம்பிக்கை மறுப்பு' என்ற கோட்பாடுகள் தொடங்கி இருக்கவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் இறைநம்பிக்கை என்பதை மதத்திலிருந்து பிரித்துப் பார்த்தல் கடினம். நாத்திகத்தை மறுப்பதற்காக நம்பிக்கையாளர்கள் ஒன்று கூடினாலும் கொள்கை அளவில் பிரிந்தே கிடக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் நாத்திகத்துக்கு வலு சேர்ப்பதே ஆத்திக பிரிவுகளின் மாறுபட்ட கொள்கைகள் தாம். ஒன்றைத் தாழ்த்த மற்றொன்று செய்யும் சூட்சமங்கள் தான் நாத்திகத்துக்கு வலு சேர்க்கிறது. இஸ்லாம் மதத்தின் குறைபாடுகளை கிறித்துவமும், கிறித்துவ மதங்களின் குறைபாடுகளை இஸ்லாம் மதமும் காட்டிவிடுகின்றன. இன்றளவிலும் மற்ற மதங்களைத் தாக்க மதங்களே நாத்திகர்களை போற்றுகிறது என்பது உண்மை.
இந்து மதத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் சைவமும் வைணவமும் எதிர் துருவங்கள், ஆத்திகம் ஆக்கப்பட்ட சமணமும் புத்தமும் எதிர் துருவங்கள். ஒட்டு மொத்தமாக இந்து மதத்தின் குறைபாடுகளை ஒரு நாத்திகன் காட்டுவதற்கு வலுவான எதிர்ப்புகளை உட்பிரிவுகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில் இருந்தே எடுத்துக்காட்ட முடியும்.
ஆத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதைவிட மதநம்பிக்கை என்ற கோட்பாடுகளில் கட்டப்பட்டுள்ளதால் வலுவிழந்ததாக தெரிகிறது. இனக் குழுக்களை அடையாளப்படுத்துவதில் முதன்மையாக இருந்த இத்தகைய இறை நம்பிக்கைகள் அல்லது மதங்கள் இடப்பெயற்சியினால் கண்டம் விட்டு கண்டம் சென்றபோது தான் அதிகமாக சோதனைகளை சந்தித்துக் கொண்டன.
இறைநம்பிக்கை என்பது நல்வாழ்க்கைக்கு என்ற அளவில் மட்டும் இருந்திருந்தால் நாத்திகத்தின் தோற்றமே இருந்திருக்காது. யாருக்கு சொர்கம், யாருக்கு நரகம் என்று மதங்கள் சொல்ல ஆரம்பித்த போது குழப்பங்கள் ஏற்பட்டு ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நாத்திகத்தின் வழி இவற்றின் ஒவ்வாத கருத்துக்களை உடைத்துப் போடும் அவசியம் ஏற்பட்டதாலேயே இந்தியாவில் சமணமும், அதிலிருந்து மேம்பட்டு பெளத்தமும் தோன்றின.
வாழ்வியல் அறங்களை கடைபிடிப்போருக்கு சொர்க்கம் என்பது போய், மதங்கள் வழிசொல்லப்படுவது குறிப்பாக ஆப்ரகாமிய மதங்களில் வழி சொல்லப்படும் சொர்க்கம் எவருக்கென்றால் அந்த மதத்தின் இறைவனை ஏற்றுக் கொள்பவர்களுக்கு என்று புனித நூல்கள் சொல்வதாக சொல்கிறார்கள். இதெல்லாம் அந்த மதத்தினுள் இருந்து பார்த்தால் சரி என்பது போல் தோன்றும். பொதுப் பார்வைக்கு இத்தகைய நம்பிக்கை கேள்விக் குறியதே. வெறும் மத அடையாளங்களை அணிந்து கொண்டு, குறிப்பிட்ட இறைவனை நம்புகிறேன் என்று சொல்லி சொர்கம் செல்ல முடியுமா ? இவ்வாறு ஒரு மதத்தின் கொள்கைகளை வெளியில் இருந்து கேள்வி கேட்பவர்களை அந்தந்த மதங்களைப் பொறுத்தவரை நாத்திகர்களாகத் தான் நினைப்பார்கள்.
தொடரும் ...
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
2 கருத்துகள்:
என்ன கண்ணா, சமீப பதிவு எல்லாம் ஆத்திகம் நாத்திகம் குறித்து வருது?
உண்மையில் சொல்வதென்றால் பலவாயிரம் வருடங்களுக்கு முன் சொல்லப் பட்ட எல்லாக் கருத்துக்களையும் குப்பையில் தூக்கிப் போட்டு விட வேண்டும்.
மனிதர்களுக்கு தொல்லையாக இருக்கிறதா? மாற்று மனிதர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சனையாவது உண்டாகுமா?
இந்தக் கேள்விகளை முன் வைத்து மனிதன் செயல் பட்டால் போதும்.
ஆனால் இன்னைக்கு கடவுளுக்காக இதை செய்கிறேன் இப்படி நடக்கிறேன் என்று மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் மற்றவர்கள் இருக்க வேண்டும்.
கருத்துரையிடுக