முன்குறிப்பு: நட்பின் சுவையறிந்திருந்தால் அதன் மூலம் வாழ்க்கையையும் சுவையாக மாற்றமுடியும். நண்பர்கள் தின நன்நாளில் ஒரு சிறுகதை மூலம் நட்பென்ற உறவை உயர்த்துவதற்காக எழுதப்பட்ட சின்ன சிறுகதை. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.
அன்று மதியம், உணவு நேரத்தின் போது, வழக்கமான உற்சாகத்துடன் வந்து... பார்த்தவுடன்,
"என்ன குமார், இன்னிக்கு நீ ரொம்ப டல்லா தெரியுது ...உங்க டிபார்ட்மென்டல எதாவது பிரச்சனையா ?" ராமு உரிமையுடன் கேட்டான்.
'இவங்கிட்ட சொல்லலாமா ? வேண்டாமா ?' சில வினாடிகள் நெற்றியை சுருக்கி யோசனை செய்துவிட்டு குமார்,
"அதெல்லாம் ஒன்னுமில்ல ராமு... ஆபிஸ் பிராப்ளம் எதுன்னாலும் சாமளிச்சிடுவேன்... இது வேற... லேச தலைவலி" என்றான்
"ஏய், எங்கிட்ட பொய் சொல்லாதே, வழக்கமா உங்கிட்ட இருக்கிற உற்சாகம், லஞ்ச் டயத்தில காணப்போயிடறது... இன்னைக்கு ரொம்பவும் டல்லா இருக்கியே... எங்கிட்ட சொல்றதா இருந்த சொல்லு ... வேண்டான்னா விட்டுடு" விடுவது இல்லாதது மாதிரிதான் கேட்டு வைத்தான் ராமு.
குமார் சிறிது நேர அமைதிக்கு பிறகு,
"அது ஒன்னுமில்லடா, எனக்கும் என் ஒய்ப்புக்கும் சின்னச் சின்ன பிரச்சனை ..."
ராமு ரொம்ம தமாசாக,
"அதானப் பாத்தேன், எவன் ஆபிஸ் பிரச்சனைக்கு தலையில கைவைச்சிக்க போறான் ?"
குமார் கொஞ்சம் கண்ணை மூடி அவனை முறைத்துப் பார்த்துட்டு,
"உனக்கென்னப்பா, உன் ஒய்ப் அறுசுவையோட சமைச்சித்தர்றா, ஒன்னும் பிரச்சனையில்லாம, உன் வண்டி ஓடுது" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து,
"என் சாப்பட்டையும், எத்தனை தடவை ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்க ... கொஞ்சமாவது உப்போ, ஒரப்போ இருந்திருக்கா, எங்கிட்ட பெயருக்கு சூப்பர்டான்னு சொல்லிட்டு போயிடுவே ..."
ராமு கொஞ்சம் சீரியஸாகவும், சங்கடமாகவும்
"சாரிடா, உன் சாப்பாடு நல்லாதாண்டா இருந்துச்சி... அதான் அப்படி சொல்லி இருக்கேன்" என்றவன்,
"சரி, சரி என்ன உன் பிராப்ளம் ?"
குமார் மறுபடியும் தயங்கியபடி,
"ராமு, நம்ப நட்புக்காக, என்னோட சாப்பாடு நல்ல இருக்குன்னு சொல்ற, ஆனால் தினம் சாப்பிடுற எனக்குத் தாண்ட அதோட கஷ்டம் என்னான்னு தெரியும்..."
"சரி... என்னான்னு சொல்லு கேட்போம்" என்றான் மறுபடியும் உற்சாகமாக ராமு.
"அதுதான, அடுத்தவன் குடும்ப கதையின்ன உடனே, காதை தொடச்சிட்டு வந்திடுவியே" என்று குமார் ராமுவை கிண்டல் செய்தான்
ராமு பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும், கொஞ்சம் சுதி குறைந்து
"என்னமோ போப்பா... எதோ உனக்கு என்னால ... ஏதாவது உதவ முடியுமான்னு கேட்டேன்"
"மண்ணிச்சிக்க ராமு, உன் கிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்லப்போறேன்...?" என்று ஆரம்பித்தான் குமார்
"ராமு, எனக்கு கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆயிடுச்சி உனக்கு தெரியுமில்ல..."
"அது தான் தெரியுமே, கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆனாதுதான் ப்ராபளமா ?, குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ...!"
"தாமாஸ் பண்ணாதடா... சீரியஸ்சா கேளு... ஒரு வருசம் ஆகியும் என் ஒய்புக்கு சமையல்-ன்னா என்னானே தெரியல ..."
"எங்க பேரன்ட்ஸ விட்டு தனியாதான் இருக்கோம் ஆனாலும், சாப்பாட்டால அடிக்கடி சண்டை வருது, அடிக்கடி மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு இருக்கிறா ..."
"எதையாவது கிண்டி வச்சிட்டு, எனக்கு இதுதான் தெரியும், வேணும்னா சாப்பிடுங்க, பிடிக்கலைன்ன, ஓட்டலில் சாப்பிடுங்கன்னு சொல்றாடா ..."
"ஓட்டல்ல சாப்பிடறத்துக்காகவா கல்யாணம் பண்ணிக்கிறோம், எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ராமு ..."
"சரிடா குமார், அவளுக்கு சமைக்க தெரியாதுங்கறது, உனக்கு திருமணத்திற்கு முன்பே தெரியாதா ?"
"போடா, அவளை முதலில் பாத்தவுடன் எங்கே அதையெல்லாம் கேட்கனும் நினைச்சேன், இப்பதான் மாட்டிக்கிட்டேன்"
"கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவும் அவளை சமைக்கவிடலை, நாங்களும் ஊர் ஊரா ஹனிமூன்னு சுத்தினோம்..."
"இந்த ஆபிஸல சேர்ந்த பிறகுதான், குமார் ஆபிசுக்கு நேரத்தோட போறமாதிரி வீடாப் பாத்துக்கோன்னு எங்க அப்பா சொல்லிட்டாரு... தனிக்குடித்தனம் ஜாலின்னு ... இங்க பக்கத்துல வீடெடுத்து வந்து ஆறுமாசம் ஆகுது ... இப்பதான் தெரியுது அவ சமைக்கிற அழகு" சொல்லிவிட்டு குமார் பெருமூச்சிவிட்டான்.
"சரிடா, நீ இத உங்க அம்மாகிட்ட சொன்னியா ?"
"அதெல்லாம் இல்லடா, இதபோயி சொன்னா, அப்பறம் மாமியார்-மருமகள்னு பாலிடிக்ஸ் கிளம்பிடும், இதக்காட்டிலும் அது பெரிய மண்டையிடிடா... அதனால நானே சமாளிக்கலாம்-னு பார்த்தால் ... தினமும் முடியலைடா..." சொல்லி முடித்ததும் சோர்வானான் குமார்.
"நல்ல காரியம் செஞ்சிருக்க, இத பெரியவங்கட்ட போய் சொல்லி... அது தலைமுறை இடைவெளியினால், உறவுகளிலையும் இடைவெளியை ஏற்படுத்திடும் ..." என்ற ராமு தொடர்ந்து, குமாரைப் பார்த்து கேட்டான்
"சரி, உங்கிட்ட ஒன்னு கேக்கிறேன், சரியா பதில் சொல்லு"
"சொல்லுடா... ராமு "
"என்னைக்காவது ஒரு நாள், உன் ஒய்ப் நல்லா சமைச்சிருக்காளா ?" ராமு முடிப்பதற்குள்
"எனக்கு தெரிஞ்சு அப்படி நடக்கவே இல்லை, அதாண்டா, எரிச்சல் எரிச்சலா வருது..." என்றான் குமார்
"குமார், தப்பு உன் பேரிலும் இருக்கு !"
"என்னடா, உளரறே ?"
"உளரலடா, நான் சொல்றத யோசிச்சு பாரு..." என்று தொடர்ந்தவன்
"நீ இந்த ஆபிஸல சேர்ந்தப்ப, இந்த அலுவலக சூழ்நிலைய புரிய ஒனக்கு எப்படியும் ஒருவாரம் ஆகியிருக்கும் தானே ?"
"ஆமாம், ஆரம்பத்துல, கொஞ்சம் கஷ்டமாக இருந்திச்சு, எல்லாம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணினாங்க"
"எல்லோரும் ஹெல்ப் பண்ணிங்க இல்லையா ?"
"ஆமாண்டா, அதை நினைச்சா எனக்கு நெகிழ்ச்சியா தான் இருக்கு, அது மட்டுமில்லடா, எல்லோரும் சின்ன சின்ன செயல்களுக்கெல்லாம் அடிக்கடி பாராட்டி உற்சாகப் படுத்தியதால்... நான் சுறுசுறுப்பா வேலை செய்தேன், நல்ல புரோமோசனும் கெடச்சிச்சி..." என்றவன்
"ஏன்டா அலுவலகத்தை பற்றி பேசி, டாபிக்க மாத்திற உனக்கு என்ன, என்னுடைய புரோமோசன் பொறாமையா இருக்கா ?"
அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டாலும் கோபித்துக்கொள்வதில்லை.
"ஏன்டா, அதுகுள்ள அவசரகுடுக்கை மாதிரி பேசுற ..." என்ற ராமு
"விசயம் இருக்குடா, சொல்றேன் கேட்டுக்க"
"நாம ஆபிசல வாங்குற சம்பளத்துக்கு மட்டுமா வேலை செய்றோம் ? இல்லையே! அதற்கும் மேல, ஏன்னா ?" என்று நிறுத்தியவன்
தொடர்ந்தான்
"நம்ப உயர் அதிகாரிகள், நம்மளை பாராட்டனும், ப்ரோமசன் தரணும்-னு எதிர்பார்த்து தான் எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்கிறோம்"
"நம்ம உழைப்புக்கு பாராட்டும் கிடைக்குது..."
"அப்படி பாராட்டு கிடைக்கிலைன்ன, நம்பளால உற்சாகமாக எதையும் செய்ய முடியாது, கடமைக்கு அழுதுட்டு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பி போய்டுவோம் ..."
"சரியா ?" என்று நிறுத்தினான் ராமு.
"நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிடா ..."
"பலன் இல்லைன்னா யாரு பாடுபடறது ? அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் ?" என்றான் குமார்
மெதுவாக கண்ணை மூடிய ராமு, கண்ணை திறந்து,
"அப்பாடா, எனக்கு இது போதும் உனக்கு புரியவைச்சிடுவேன் ..." என்று ராமு தொடர்ந்து, குமாரை பேச விடாமல்
"குமார், என்னைக்காவது உன் ஒய்ப்பை சமையலுக்காக பாராட்டியிருப்பியா ?"
"அப்படி ஒருநாள் பாராட்டியிருந்தால் கூட, அவ உற்சாகமாய் உனக்காக, விதவிதமாக சமைக்க கத்துக்கிட்டு இருந்திருப்பா ..."
"நீ என்ன செஞ்சிருப்ப ? அவ மொதல்ல சமைத்தன்னைக்கு சுளித்த முகத்தை, இன்னும் அப்படியே வச்சிருக்க ..."
"என்னாச்சு ? 'என்ன சமைச்சு என்ன ஆகப்போகுது, நாம என்ன சமைச்சாலும் அவருக்கு பிடிக்கவா போவுதுன்னு' அவ நினைக்கிறமாதிரி இது ஆகிப்போச்சு..."
"முதல் முதலா சமைக்கிறாளேன்னு சின்னதா பாராட்டியிருக்கனும், அத நீ செய்யலை !"
"குமார்... நாம சின்ன சின்ன விசயங்களை அலட்சியப்படுத்தி கண்டுக்காம விட்டுடுறோம் ..."
"சின்ன சின்ன விசயம்னாலும், 'பாராட்டு' என்ற ஒரு வார்த்தை போதும். அது தருகிற மறைமுக அங்கிகாரத்தினால், சின்ன விசயமெல்லாம் சிறப்பான விசயம் ஆகிவிடுகிறது ..."
"எல்லோரோட மனசிலையும் எதிர்பார்புகள் இருந்துகிட்டுதான் இருக்கும் குமார், அது கணவன் - மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் - பிள்ளையாகளாக இருந்தாலும் சரி ..."
"அதை நேரடியாக சொல்லவோ, கேட்கவோ தெரியாதபடி உளவியல் ரீதியான காரணங்களினால், ப்ராபளம் பெரிசாக ஆயிடுது ..."
"நம்ப அம்மா தானே, சமைச்சிப்போடறது... அவுங்க கடமைதானேன்னு நினைச்சிடுறோம்..."
"மனைவி-ன்ன நம்பள கவனிக்கிறது அவ கடமை-ன்னு நினைச்சிடுறோம் ..."
"என்ன தான் கடமையாக இருந்தாலும், அதுக்கு ஒரு அங்கிகாரம் வேணும்ங்கிற ஏக்கம் இருந்துகிட்டு தான் இருக்கும் ..."
"அவுங்க, அவுங்க கடமைன்னு நினைச்சிடுறதால சில விசயங்கள், நமக்கு தெரியமலேயே ஒதுக்கப்பட்டு நின்று விடுகிறது..."
"சுமார படிக்கிற பையனையும் தட்டிக்கொடுத்தால், அவனால முதன் மாணவனாக வரமுடியும் ..."
"அதவிட்டுவிட்டு மட்டம் தட்ட ஆரம்பிச்சிட்டோம் என்றால், அவுங்களுக்கு இயல்பிலேயே இருக்கிற உற்சாகமும் குறைந்து ... நம்பளால இதுதான் முடியும்னு நினைச்சி... அதிகம் செயல் படவிடாமா அது முடக்கி போட்டுடுது..."
"நீ, உங்க அம்மா சாப்பாட்டை சின்ன வயசிலேர்ந்து பழகினதால, உன் ஒய்ப் சமைத்தது உனக்கு சுவையாய் படவில்லை..."
"இதான் உன் விசயத்தில நடந்திருக்கு... ஒரு தடவை உன் ஒய்பை பாராட்டிப் பாரு... நான் சொல்றது சரி-ன்னு ஒனக்கு புரியும் ..."
குமாரின் மூளை கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக, ராமுவின் கைகளை பிடித்துகொண்டான்
"ரொம்ப, தாங்க்ஸ் டா... இந்த லாஜிக் தெரியாம இருந்திட்டேன் ..."
"புரிஞ்சிகிட்டா, சரிடா, என் அப்பா-அம்மாதான் என்னை அடிக்கடி பாராட்டி, எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தினாங்க ..."
"ஆரம்பத்துல என் ஒய்ப்பும் சுமாரா சமைப்பாள் ..."
"சந்தோசம் என்கிற தீபம் வாழ்கையில் என்றைக்கும் எரியனும் என்றால், பாராட்டுதல் என்ற எண்ணையை அவ்வப்போது நாம நிரப்பிக்கிட்டு இருக்கனும் ..."
"இன்னும் ஒரு விசயம்... சாப்பட்ட மட்டுமல்ல, எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... அப்பொழுதுதான் அவர்களின் செயல் பற்றி சரியா தப்பான்னு நாம் சொல்வதும், நாம் நேர்மையாய் செயல் படுகிறோம் என்பதும் அவர்களுக்கு விளங்கும் ..."
"சரிடா, குமார் நான் ஒருவாரம் லீவுல போகிறேன் அடுத்தவாரம் பேசலாம் ..." என்றவன்
"என்னையும் மதிச்சி, உன் குடும்ப பிரச்சனையை சொல்லியிருக்கிற, என் மூலமா ஒரு நல்ல தீர்வு உனக்கு கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி தான். தாங்ஸ்டா "
என்று எழுந்து சொன்றான்.
குமார் நட்பின் ஆழத்தையும் அன்று நன்றாகவே உணர்ந்தான்.
ஒருவாரம் கழித்து அன்று மதியம், அதே இடத்தில் குமார் தன்னுடைய சாப்பாட்டு கேரியரை திறக்க, அங்கு வந்த ராமு,
"குமார், என்ன கல்யாண வீட்டு சமயக்கட்டுல நுழைஞ்ச மாதிரி, வாசனை ஒரே தூக்கா தூக்குது ?"
"வாடா, ராமு எல்லாம் உன் புண்ணியம் தான், நீ சொன்ன டானிக் நல்ல வேலை செய்யுது"
"கொஞ்சம் விபரமாக சொல்லேண்டா "
"நீ சொன்னபடி, அன்றைக்கு சாயந்தரமே, என் ஒய்ப் செஞ்ச கோழி கொழம்பை இதமாக பாராட்டினேன் ..."
"அப்பறம் ... என்னாச்சு ?"
"ரொம்ப உற்சாகமாயிட்டா, அப்புறமா அவ சாப்பிடுறப்ப ..மெதுவா சங்கடபட்டுகிட்டே சொன்னாள் 'என்னங்க இன்னைக்கு கொஞ்சம் தீஞ்ச வாடை அடிக்கிறமாதிரி இருக்கு, இன்னைக்கு போயி நல்ல இருக்குன்னு சொல்றிங்களே, நாளைக்கு பாருங்க, மீன் கொழம்பு செஞ்சு அசத்திடுறேன்' என்றாள் ..."
"ராமு ... ஒரு வாரமா ... எங்க வீட்டுல சமையல் வாரமா போயிட்டுருக்குடா ... அதோட அவள் விடல..."
"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ..."
"நல்ல செய்திதான், கொஞ்சம் பாத்துடா, ஒரு மாசம் கழிச்சு ஆபிஸல ரெண்டு கதவையும் தெறந்து வச்சாதான் உன்னால உள்ள வரமுடியும்கிற மாதிரி உன் ஒடம்பு ஆகிடப்போவுது"
"தாங்ஸ்டா, ராமு உன்னோட அறிவுறுத்தலால் உணவு மட்டுமல்ல, உறவும் சுவை கூடியிருக்கு என்பது நிஜம்"
"இனிமே உன் பொண்டாட்டி பாகற்காய் செஞ்சா கூட ஒனக்கு இனிப்பாதாண்டா தெரியும்"
குமார் கையில் எடுத்த தண்ணீரை ராமுவின் மீது தெறிக்க, ராமு சரியாக விலகிக் கொண்டு சிரித்தான்.
19 கருத்துகள்:
நாகை சிவா said ...சூப்பராக உள்ளது.
சின்ன சின்ன விசயத்திற்க்கும் கூட நன்றி சொல்லும் மேட்டரு உண்மையிலே சூப்பர். சின்ன சின்ன சந்தோஷ்ங்கள் தான் நம் வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் என்பதில் உறுதியாக உள்ளவன் நான். அதை அனுபவித்தும் உள்ளவன். அடுத்தவர்கள் நம்மை பாரட்டுவதும் இதில் தான் வருகின்றது.
நண்பர்கள் தின நாளில் நல்ல ஒரு கதையை கொடுத்து உள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
உங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
கதை நன்றாக உள்ளது
GK,
//எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... //
கதை நல்லா இருக்கு..
கொஞ்சம் பெரியதாக இருக்கமாதிரி ஒரு உணர்வு...
ஆனால் நல்லா எழுதியிருகீங்க...
//At August 06, 2006 10:30 AM, ENNAR said…
கதை நன்றாக உள்ளது
//
நட்பு பாராட்டிய என்னார் அவர்களுக்கு நன்றி !
//sivabalan said...
GK,
கதை நல்லா இருக்கு..
கொஞ்சம் பெரியதாக இருக்கமாதிரி ஒரு உணர்வு...
ஆனால் நல்லா எழுதியிருகீங்க... //
சிபா... ! எங்கிட்ட இருக்கிற பெருங்குறை கொஞ்சம் வளவள... ஆனால் கொழ கொழ இல்லை :))
பாராட்டுதலுக்கு நன்றி :)) மீண்டும் வருக !
அருமை நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு என் நணபர்கள் தின வாழ்த்துக்கள்,
மற்றும் அனைத்து வலை நண்பர்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்...
சரவணன்.
கதை அருமை. அதில் நீங்க சொன்ன கருத்துக்களும் உண்மை.
ஆனால் கொஞ்சம் பெருசா இருக்கற மாதிரி தோணுது.
நன்றி நண்பரே!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
எனக்கு படிக்கும் போது கதை நீளமாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் சொல்லும் போது அப்படி தான் உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.
நீங்கள் அவர்களை பற்றிய முன்னுரை சற்று அதிகமாக கொடுத்து வீட்டீர்களோ என்று இப்பொழுது தோன்றுகிறது.
// உங்கள் நண்பன் said...
அருமை நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு என் நணபர்கள் தின வாழ்த்துக்கள்,
மற்றும் அனைத்து வலை நண்பர்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்...
சரவணன். //
சரவணன், வாங்க சரவணன் வாங்க !
அடுத்து கதை எழுதுகிறபோது 'சரவணன்' தான் நாயகன் :))
//வெட்டிப்பயல் said...
கதை அருமை. அதில் நீங்க சொன்ன கருத்துக்களும் உண்மை.
ஆனால் கொஞ்சம் பெருசா இருக்கற மாதிரி தோணுது.
//
வெட்டி .... எல்லோரும் இதைச் செல்வதால் நீளத்தை வெட்டிவிடேன் ... கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... பாராட்டினதுக்கு நன்றி :))
//அடுத்து கதை எழுதுகிறபோது 'சரவணன்' தான் நாயகன்//
நானும் தேவும் எழுதின கதையப் படிச்சிப் பார்தீங்களா? அதை படமா தயாரிக்கவே ஆளைக் காணோம்
என்னைய வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலையே....
அன்புடன்...
சரவணன்.
// சரவணன் said ...நானும் தேவும் எழுதின கதையப் படிச்சிப் பார்தீங்களா? அதை படமா தயாரிக்கவே ஆளைக் காணோம்
என்னைய வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலையே....
அன்புடன்...
சரவணன். //
இல்லை சரவணன் சுட்டி கொடுங்க ... பார்க்கிறேன்... சமீபத்தில் தேவ் எழுதின படம் எடுப்பதற்கான டிஸ்கசன் தான் படித்தேன். பின்னூட்டம் போட்டேன் !
//ன்னைய வச்சி காமெடி, கீமெடி ஒன்னும் பண்ணலையே....//
காமெடி கீமடியெல்லாம் இல்லை .. 'என்ன கொடுமை சரவணன்ன் சார் னு ' யாரவது கேட்கனும் அப்படி ஒரு லக்க லக்க கதை தான் எழுத இருக்கிறேன் :))
// நாகை சிவா said...
நன்றி நண்பரே!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
எனக்கு படிக்கும் போது கதை நீளமாக தெரியவில்லை. இவர்கள் எல்லாம் சொல்லும் போது அப்படி தான் உள்ளதோ என்று என்ன தோன்றுகிறது.
நீங்கள் அவர்களை பற்றிய முன்னுரை சற்று அதிகமாக கொடுத்து வீட்டீர்களோ என்று இப்பொழுது தோன்றுகிறது. //
சிவா,
கதையை முன்னுரையை தங்கள் மேலான ஆலோசனைப் படியும், மற்றும் பல நண்பர்களின் ஆலோசனைப் படியும் கொஞ்சம் வெட்டியாச்சு :))
கணவன்,மனைவியிடையே நல்ல நட்பு இல்லறம் நல்லறமாகும் என்பதை விளக்கிய அருமையான கதை.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
கோவி.கண்ணன்.
நீங்கள் படித்து பின்ன்னூட்டம் போட்ட கதை டிஸ்கசன் கேப்பில் எழுதப்பட்டது தான் இந்த சீரியல் அதற்க்கான சுட்டி இதோ...
http://chennaicutchery.blogspot.com/2006/08/blog-post.html
(தங்களுடைய "செல்லம்மாவுக்கு" பெரும் போட்டியைக் கொடுக்கும் என்பதால் இதை நாங்கள் தேன்கூடுக்கு அனுப்பவில்லை..)
//காமெடி கீமடியெல்லாம் இல்லை .. 'என்ன கொடுமை சரவணன்ன் சார் னு ' யாரவது கேட்கனும்//
ஆஹா... இதுக்கு நீங்க நம்மலை வச்சு காமெடியே பண்ணி இருக்கலாம்.
அன்புடன்...
சரவணன்.
//கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... //
கோவி, என்னானு சொல்லுங்க!!!
நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா?
முதல்ல சொல்லியிருந்த முன்னுரை தேவையில்லாத மாதிரி இருந்தது. அதே மாதிரி ராமு ரொம்ப அட்வைஸ் பண்ண மாதிரி இருந்துது. அதனாலதான் சொன்னன்.
வெட்டிப்பயல் said...
//கதைப்படி ... சரி அதெல்லாம் வேணாம் விடுங்க ... //
கோவி, என்னானு சொல்லுங்க!!!
நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா?
முதல்ல சொல்லியிருந்த முன்னுரை தேவையில்லாத மாதிரி இருந்தது. அதே மாதிரி ராமு ரொம்ப அட்வைஸ் பண்ண மாதிரி இருந்துது. அதனாலதான் சொன்னன்.
//
அட நீங்க வேற... ! ஏதோ பெருசா சொல்லப் போற மாதிரி ஒரு தமாஸ் பண்ணினேன் :)))))) அவ்வளவுதான்
மற்றபடி நீளம் குற்றித்த உங்கள் கருத்துக்களில் 100% உடன்பாடு உண்டு... திரும்பவும் தலைகாட்டியதற்கு நன்றி :))
//"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ..."//
பொண்ணுங்க எப்பவுமே கொஞ்சம் லேட் பிக்கப்ன்னு இப்பயாச்சும் புரியுமே, புருசன் கிட்ட என்ன என்ன பிடிக்கும் என்று கேட்காம அம்மாகிட்ட போன் செஞ்சு கேட்கும் இவங்களை எல்லாம் என்ன சொல்வது:)))
@ குசும்பன்..
பெயருக்கு தகுந்தார் போலவே குசும்பான ஒரு கருத்து..
ஏங்க, பெண்கள் மட்டும் இல்ல, ஆண்களும் லேட்டாத்தான் யோசிப்பர்கள்.. ஏன் இந்த ஓரவஞ்சணை உங்களுக்கு??
கருத்துரையிடுக