பின்பற்றுபவர்கள்

4 ஆகஸ்ட், 2006

கோவி.கண்ணனின் திரு(ட்டு)விளையாடல்கள் :)

அன்றாடம் வரும் செய்திகளில் நாம் சம்பந்தப் படாவிட்டாலும், அது நம் பெயரைத் தாங்கி வந்தால் ... அச்செய்தி ஒரு வேளை அது நல்ல செய்தியாக இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி வருவது இயல்பு. அதுவே பெயரைக் கெடுக்கும் விதாமான கெட்ட செய்தியாக இருக்கும் பட்சத்தில் சிறு வருத்தம் வருவதும் இயல்பு. மேலும் அத்தகைய செய்தி இனிசியலோடு வரும் போது ... கொஞ்சம் உணர்வுகள் தூக்கலாகவே இருக்கும். அப்படி ஒரு செய்தி என் பெயருக்கும், என் உணர்வுக்கும் கிட்டியது.

நண்பர் சிறில் அலெக்ஸ் இதைப் பற்றி பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்? என்று ஒரு தமாஸ் பதிவு போட்டிருந்தார். அதைப் படிக்கும் முன்பே ...அதே நாள் (ஜுலை 3) சன் செய்திகளில் அந்த செய்தியும், 'கோவி.கண்ணன்' பெயரும் நன்றாக அடிபட்டதை பார்க்க நேர்ந்தது. கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டிற்கு சென்று என் பெயர் கோவி.கண்ணன் நான் ஒரு வலைப்பதிவாளர் என்று சொன்னால் அதுக்கு தனி 'மறியாதை' கிடைக்கும் என்று நினைக்கிறேன்... காரணம் அந்த கோவி.கண்ணன் 'சன்னதி' என்ற மாத இதழ் நடத்தி வருகிறானாம். அந்த அளவுக்கு செய்தித்தாள்களில் என் பெயர் அடிப்பட்டுவிட்டது. கோவி.கண்ணன் லீலைகள் பற்றி லத்திகா சரண் கூட பேட்டி அளித்துள்ளார்.

என் பெயரில் ஏற்பட்ட ஒரு களங்கம், அதாவது கோவி.கண்ணனின் திருட்டு விளையாடல்கள் பற்றிய படமும் செய்தியும் இங்கே :


படமும் செய்தியும் : தினமலர் (நன்றி)

நான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)

18 கருத்துகள்:

உங்கள் நண்பன் சொன்னது…

கோவி கண்ணனா..? அவன்
ஒரு பாவி.கண்ணன்
நீங்க அப்"பாவி"க் கண்ணன்.


அன்புடன்...
சரவணன்.

குமரன் எண்ணம் சொன்னது…

///
நான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)
///

ஒரு நீளமான வாக்கியம் குடுத்து இது ரீலுன்னு சொல்றீங்களே எது ரீல்
//நான் அவனில்லை// என்று சொல்லியிருப்பதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said... ஒரு நீளமான வாக்கியம் குடுத்து இது ரீலுன்னு சொல்றீங்களே எது ரீல்
*நான் அவனில்லை* என்று சொல்லியிருப்பதா? //
குமரன் .. ! உங்களுக்குத் தெரிந்த ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும் :) ஊருக்கு சொல்லிடாதிங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
கோவி கண்ணனா..? அவன்
ஒரு பாவி.கண்ணன்
நீங்க அப்"பாவி"க் கண்ணன்.

அன்புடன்...
சரவணன். //

சரவணன் ... ! அப்பாவி என் பெயருக்கு அப் பாவி களங்கம் கற்பித்துவிட்டான் :)

சோம்பேறி பையன் சொன்னது…

அடிச்சாரு பாருங்க குமரன் எண்ணம், சூப்பரப்பூ :-))

***

எது ரீலுன்னு விளக்கமா சொல்லுங்க, கோவி. கண்ணன்..
எது ரீல் //நான் அவனில்லை// என்று சொல்லியிருப்பதா :-)) ???

***

நான் முந்தா நாள் சன் நியுஸ்ல பாத்தேங்க, மறுநாள் ஆபிஸ் வந்தப்புறம், உங்க புரொபைல் பாத்து (சிங்கப்பூர்னு இருந்துச்சா) க்ளியர்
பண்ணிக்கிட்டேன்..

***

விளக்கமா ஒரு பதிவு போட்டுருங்கன்னா, எது ரீலுன்னு :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் முந்தா நாள் சன் நியுஸ்ல பாத்தேங்க, மறுநாள் ஆபிஸ் வந்தப்புறம், உங்க புரொபைல் பாத்து (சிங்கப்பூர்னு இருந்துச்சா) க்ளியர்
பண்ணிக்கிட்டேன்..//

இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லை ? புரைபைலில் உள்ள ஊர் சரிதான் என்று எப்படி சொல்வது ? :)

//விளக்கமா ஒரு பதிவு போட்டுருங்கன்னா, எது ரீலுன்னு :-) // நான் அவனிலில்லை என்பது ரீலுன்னா ? *அவன் நானில்லை* என்று வைத்துக் கொள்ளலாம் :)

சோம்பேறி பையன் சொன்னது…

'அவன் நானில்லை'ன்னு நீங்க சொல்றதை, போனாப்போதுன்னு ஒத்துக்கறேன் :-)
(நேரமாயிடுச்சு, வீட்டுக்கு போனும்...)

***

நம்ம கவிதைகள் பதிவில் உங்க பின்னூட்டத்துக்கு பதில் சொல்லிருக்கேன்

கோவி. கண்ணன், என்ன பெரிய புரொகிராமெல்லாம் எழுதி பயமுறுத்துகிறீர்கள் :-)

இந்தாங்க, இதுக்கென்ன பதில் ???

class நன்றி
{
void sayநன்றி()
{
cout<<"நன்றி தலைவரே";
}
}

void main()
{
நன்றி.sayநன்றி();
}

***

கண்ணா.., இது எப்படி இருக்கு ??
(16 வயதினிலே ரஜினி ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்) :-))))

Sivabalan சொன்னது…

GK,

எனக்கு கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்குது...


சும்மா சொன்னங்கே... தப்பா எடுத்துக்காதீங்க..

ஆனா, இந்தப் பதிவை கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்கலாம்...

கப்பி பய சொன்னது…

ஒன்னுமே புரியல ஒலகத்திலே...
என்னமோ நடக்குது...
மர்மமாய் இருக்குது..

கைப்புள்ள சொன்னது…

///
நான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)
///


:)))
உலகத்தை நெனச்சேன். சிரிச்சேன்.

நாகை சிவா சொன்னது…

அண்ணாத்த, நான் கூட இத வச்சு ஒரு கேலி பதிவு போடலாம் என்று நினைத்தேன்.
இதுவே வேற ஒரு மேட்டராக இருந்தால் விளையாடி இருப்பேன். ஒரு சின்ன பெண்ணின் வாழ்க்கையையும் சேர்த்து கிண்டல் அடிப்பது போல இருக்கும் என்பதால் தான் சும்மா இருந்து விட்டேன்.
அந்த பெண்ணின் புகைப்படத்தை போட்டு அந்த பெண்ணின் வாழ்க்கையை நம் பத்திரிக்கைகள் கேலிக் கூத்து ஆக்கியதாக எனக்கு படுகின்றது

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
ஒன்னுமே புரியல ஒலகத்திலே...
என்னமோ நடக்குது...
மர்மமாய் இருக்குது..
//
என்னப் போல ஒருவன் (அவங்கே அவன்) ஏமாளி இல்லை :)

அவன் ஒரு கயவாளி :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
GK,

எனக்கு கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்குது...


சும்மா சொன்னங்கே... தப்பா எடுத்துக்காதீங்க..

ஆனா, இந்தப் பதிவை கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்கலாம்... //

சிபா,

ம் போட்டிருக்கலாம் ...! ஆதாரங்கள் கையில் கிடைக்கவில்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கைப்புள்ள said... :)))
உலகத்தை நெனச்சேன். சிரிச்சேன். //

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கைப்புள்ள எங்க கைப்புள்ள ...:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Pot"tea" kadai said ...
அவன் ஆண் ***** அறுத்தெறியப்பட வேண்டும் அவன் ஆணாக இருக்கும் பட்சத்தில். இம்மாதிரியான மிருகங்களுக்கு உணர்வுகளை அப்படியே இருக்க விட்டு **** கூட செய்ய இயலாதபடியான தண்டனை அளிக்க வேண்டும்.

நீர் தவறாக நினைக்காதீர் ஓய்! //

பொட்டிக் கடையாரே ... என் பெயருடன் 'குறி'ப்பிட்டு கமென்ட் வந்ததால் சில வார்த்தைகளை கொஞ்சம் எடுத்துவிட்டு போட்டிருக்கிறேன் ...

நீர் தவறாக நினைக்காதீர் ஓய்! :))

மகேந்திரன்.பெ சொன்னது…

அவரைச் சொல்லி குத்தமில்லீங்க எல்லாம் பேர் பன்னுற வேலை
டிஸ்கி : இதில் எதுவும் உள்குத்து இல்லை :))

வெற்றி சொன்னது…

கோ.க,

//நான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)//

அட, அது நீங்களில்லையா? இதுவரை நீங்கள் தான் அவன் என்று எண்ணியிருந்தேன். :)) [சும்மா]

நல்லடியார் சொன்னது…

நீங்களா இப்படி? கோவி(ச்சுக்காதீங்க).கண்ணன்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்