பின்பற்றுபவர்கள்

29 ஜூலை, 2006

புத்தம் புதிய புத்தகமே !

நண்பர் சிபா (சிவபாலன்) அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இந்த பதிவு !

என் வீட்டு அலமாரிகளில் புத்தக குவியல் இல்லை. வெளி நாட்டில் இருப்பதால் புத்தகங்களை வாங்கி அடுக்குவதற்கு அதிகம் யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. வலைப் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு பித்தமாகி புதிய நூல்கள் எதுவும் வாங்கவில்லை. சமீபத்தில் திருவாடுதுரை சூரிய நாராயணன் கோவிலுக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அப்பொழுது கோவிலில் விற்ற புத்தகங்கள் சிலவற்றை கோவிலுக்கு சென்று வந்த ஞாபகமாக இருக்கட்டமே என்று வாங்கினேன். நம்ம குமரன் போன்றோர்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் ஸ்கேன் பண்ணி போடுவேன். அதை மனதில் வைத்தும் வாங்கியது தான் இந்த புத்தகங்கள்.

வாங்கிய புத்தகத்தை தவறுதலாக சென்னை பெரியப்பா வீட்டில் எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு சென்னைக்கு விமானம் ஏற வந்த பொழுது துறத்திப் போய் திரும்ப வாங்கி வந்தேன். இதுதான் மிக மிக சமீபமாக இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கியது. இன்னும் புரட்டிக்கூட பார்க்க வில்லை. மேலூம் சில சித்தர் பாடல் புத்தகங்களை அக்கா வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.
பட்டியல் இதோ:


1 . சூரியனார் கோவில் தல வரலாற்றுச் சுருக்கம்
2. நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத் திரட்டு (வரை படத்துடன்)
3. விதியை வெல்வது எப்படி - திருவாடுதுறை ஆதினம்
4. சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்
5. வெற்றி நிச்சயம் - திரு சுகி சிவம்
6. சைவ சித்தாந்த உண்மை விளக்கம் - திரு பா.கமலக்கண்ணன் (இவரை பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது, இவர் என் நண்பருக்கு நண்பர் 65 வயது ஆகிறது, தற்போது சைவ சமய சித்தாந்த மடம் வைத்து ஏழைகளுக்கு இலவசக் கல்வியும், இடமும் அளித்துவருகிறார் - அவரைப் பார்க்கும் வாய்ப்பு சிங்கையிலேயே கிடைத்தது, 2007 வந்து சென்றார்)
7. Art of happines (Hand Book for living) - HH Dalai Lama
8. Be a Lamp upon yourself (Buddist Book) -
9. The Teaching of Buddha
(7,8,9 புத்தகங்கள் இருப்பது இன்று தான் தெரியும் ! இலவசமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன்)
10. Bhagavat - Gita as it is - Swami Prabupada
11. நாலே கால் டாலர் - ஜெயந்தி சங்கர்(சிங்கை)
12. ஏழாம் சுவை ஜெயந்தி சங்கர்(சிங்கை) - நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற போது வாங்கியது
13. Long Man Dictionary
14. IT Books Related to Windows Serer and Networking
15. இந்த நாள் இனிய நாள் - திரு வலம்புரி ஜான்
இது தவிர நக்கீரன், ஜூவி வாரம் இருமுறை வாங்குவதுண்டு, படித்ததும் தூக்கிப் போட்டுவிடுவதுதான் வழக்கம். பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் படிக்கும் தகவல்கள் ஆறிய தகவல்களாக இருப்பதால் அதிகம் வாங்குவதில்லை.

மற்ற எல்லா புத்தகங்களுமே தூங்குகின்றன.

"புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்காத புலையன் நான் !"

23 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

GK,

// சென்னைக்கு விமானம் ஏற வந்த பொழுது துறத்திப் போய் திரும்ப வாங்கி வந்தேன் //

புத்தகக் காதலின் வெளிப்பாட? இல்லை திறந்த புத்தகத்தின் உயிர் புத்தகங்கள்தான் என்பதலா?

அருமை..

பெயரில்லா சொன்னது…

http://paarima.blogspot.com/2006/07/blog-post_28.html

பெயரில்லா சொன்னது…

மறுபடியும் ஒரு ஒற்றுமை!
அந்த 'உண்மை விளக்கம்' பற்றித்தான் பதிவிடலாம் என்றிருந்தேன்!
நீங்களே வைத்திருக்கிறீர்களே!
அவசியம் படியுங்கள்!

அடைக்கும் தாழ் படித்தீர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//மறுபடியும் ஒரு ஒற்றுமை!
அந்த 'உண்மை விளக்கம்' பற்றித்தான் பதிவிடலாம் என்றிருந்தேன்!
நீங்களே வைத்திருக்கிறீர்களே!
அவசியம் படியுங்கள்!//

உண்மை விளக்கம் நிறைய முறை படித்திருக்கிறேன். இரண்டு புத்தகங்கள் இருக்கிறது!

அதுதான் எழுதியிருக்கிறேனே ! பா.கமலக் கண்ணன் நண்பருக்கு நண்பர் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் என்றும்.

அவர் மேலும் இந்து முஸ்லிம் கிருத்துவம் ஒற்றுமை கருத்துக்களையும் எழுதியிருக்கிறார்

:)))

நான் தத்துவங்களைப் படிப்பது அதன் வழி செல்வதற்கு அல்ல... தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. நல்ல கருத்துக்களை நாத்திகம் சொன்னால் என்ன ? ஆத்திகம் சொன்னால் என்ன ?
எதை எடுத்துக் கொள்ளவேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொள்வேன் !

அதன்பிறகு சிக்குபவர்களை கொல்வேன் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//புத்தகக் காதலின் வெளிப்பாட? இல்லை திறந்த புத்தகத்தின் உயிர் புத்தகங்கள்தான் என்பதலா?
அருமை.. //
ஆசைப்பட்டு வாங்கியது அந்த புத்தகங்கள். அதானல் துரத்தி மீட்டுக்கொண்டு வந்தேன். ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறது. :))

பெயரில்லா சொன்னது…

கோவி...

கோவிக்காம சொல்லுங்க...கணக்குல காட்டின பொஸ்தகமெல்லாம் சாமி புத்தகமாவே இருக்கே...ஹி..ஹி..கணக்குல காட்டாத பொஸ்தகம் ஏதும் தனியா வச்சிருக்கீங்களா...ஹி..ஹி...

பெயரில்லா சொன்னது…

இதுவும் எதனையோ சொல்ல வருகிறது. கோவியாரே சில (என்னிடமுள்ளவைகளில்) ஒற்றுமைகள் இருப்பதை காண்கிறேன் ;-)

//நம்ம குமரன் போன்றோர்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் ஸ்கேன் பண்ணி போடுவேன். அதை மனதில் வைத்தும் வாங்கியது தான் இந்த புத்தகங்கள்.//

ஸ்கேன் பண்ணிப் போடுங்க பார்கிறோமய்யா ;-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//இருக்கே...ஹி..ஹி..கணக்குல காட்டாத பொஸ்தகம் ஏதும் தனியா வச்சிருக்கீங்களா...ஹி..ஹி//

இல்லிங்க... சின்ன வயசில் மறைவாக படிக்கிற புஸ்தமெல்லாம் படிச்சொன்னியே தூக்கிப் போட்டாச்சு :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்கேன் பண்ணிப் போடுங்க பார்கிறோமய்யா ;-))) //

தெகா ... போட்டுட்டா போவுது !

//இதுவும் எதனையோ சொல்ல வருகிறது. கோவியாரே சில (என்னிடமுள்ளவைகளில்) ஒற்றுமைகள் இருப்பதை காண்கிறேன் ;-)//

ஒற்றுமைகள் எல்லோரிடம் இருக்கிறது. கண்டு கொள்ளாமல் விடுவதால் தெரிவதில்லை :))

பெயரில்லா சொன்னது…

//இது தவிர நக்கீரன், ஜூவி வாரம் இருமுறை வாங்குவதுண்டு, படித்ததும் தூக்கிப் போட்டுவிடுவதுதான் வழக்கம்.//

என்னிடம்
10 ஆண்டுகளுக்கான அதாவது 1993 முதல் 2003 நான் துபாய் வரும்வரை வெளிவந்த இந்தியாடுடேயின் அத்தனை பிரதிகளும் உண்டு அவற்றில் வெளிவந்த சிறுகதைகள் மற்றும் புத்தக விமர்சனங்களையும் தனியே பிரித்து தனிப் புத்தகமாக்கிவிட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னிடம்
10 ஆண்டுகளுக்கான அதாவது 1993 முதல் 2003 நான் துபாய் வரும்வரை வெளிவந்த இந்தியாடுடேயின் அத்தனை பிரதிகளும் உண்டு அவற்றில் வெளிவந்த சிறுகதைகள் மற்றும் புத்தக விமர்சனங்களையும் தனியே பிரித்து தனிப் புத்தகமாக்கிவிட்டேன் //

மனசும், வீட்டில் இடமும் பெரிசா இருக்கனும் உங்களிடம் இருக்கிறது
:)))

பெயரில்லா சொன்னது…

//மனசும், வீட்டில் இடமும் பெரிசா இருக்கனும் உங்களிடம் இருக்கிறது //

இரண்டும் இருக்கிறது 1943 இல் என் தாத்தாகட்டிய மெத்தைவீடு இன்னும் ஒழுகாமல் அதனால் புத்தகங்கள் வைக்கவும் இடம் இருக்கிறது:)

பெயரில்லா சொன்னது…

கோ.க,
//4. சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்

6. சைவ சித்தாந்த உண்மை விளக்கம் -
//

இப் புத்தகங்கள் தமிழகத்தில் எந்தப் பதிப்பகங்களில் கிடைக்கும் என்று கூற முடியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

கோ.க,
//4. சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்

6. சைவ சித்தாந்த உண்மை விளக்கம் -
//

இப் புத்தகங்கள் தமிழகத்தில் எந்தப் பதிப்பகங்களில் கிடைக்கும் என்று கூற முடியுமா? //

திரு வெற்றி அவர்களே !

சைவ சித்தாந்த உண்மை விளக்கம் : பதிப்பகம் பெயர் குறிப்பிடப்படவில்லை

ஆனால் இந்த நூல் இங்கு நிச்சயம் கிடைக்கும்,

முதியோர் சரணாலயம்
3/140 மைக்ரோ டவர் சாலை
அகத்தியர் நகர் [முரட்டாண்டி]
ஆரோவில், பாண்டிச்சேரி - 605101
போன் : 0413-2671036
விலை ரூபாய் 60/-

சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்

மணிவாசகர் நூலகம்
12B, மேல சன்னதி, சிதம்பரம் - 608001
8/7 சிங்கர் தெரு, பாரிமுனை சென்னை 108
28-A வடக்கு ஆவணி மூல வீதி
மதுரை - 625 001
15 ராஜ வீதி, கோவை 641001
28, கிளைவ்ஸ் கட்டிடம், திருச்சி 620002

பெயரில்லா சொன்னது…

கோ.க,
விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

என்ன சார் அதுக்காக.. dictionary கூடவா..

Art of Happiness..H.H. Dalai lama மற்றும் Howard C. Cutler (ஒரு psychiatrist) இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எழுதினது..

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாய் இருப்பதற்கே என்பதை உணர்த்தும் நல்ல புத்தகம்..

புன்முறுவலுடன் எதையும் எதிர்கொண்டு நம்மால் முடிந்தவரை நம்மை சுற்றி இருப்பவர்களின் பால்.. நாம் அன்பு கொண்டால் நமக்கு ஏற்படும் நன்மைகளை scientific evidence உடன் விளக்கி இருக்கிறார்கள்


இது ஒரு self help book...
"positive thinking" மட்டும் இல்லை "positive being" தான் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்பதை உண்ர்த்தும் புத்தகம்
வாழ்க்கையின் பயணமே இந்த மகிழ்ச்சியை தேடிதான் என்பதை நமக்கு நியாகப் படுத்தும் புத்தகம்..

"But is happiness a reasonable goal for most of us....Is it really possible?..-- இப்படி கேட்ட Howard C. Cutler க்கு Dalai Lama சொன்ன பதில்

"I believe that happiness can be achieved through training the mind -- HH Dalai Lama

இன்னும் படிக்கலைன்னா கண்டிப்பா படிங்க கோவி அவர்களே.. (நம்ம தமிழ் அவ்ளோதான்..
கோவி-சுக்காதீங்க)

பெயரில்லா சொன்னது…

ஹும் கண்ணன்
கலக்குறீங்க போங்க
இம்மா புத்தகம் வச்சு இருக்கீங்களா.
நல்ல விசயம் தான்
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

சித்தர் பாடல்கள் படிக்கிறீர்களா? அப்படியானால் சில சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்களேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// பாலசந்தர் கணேசன். said...
சித்தர் பாடல்கள் படிக்கிறீர்களா? அப்படியானால் சில சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்களேன்.
//
வாருங்கள் க'நேசன் அவர்களே !
சித்தர் பாடல்களை மிக அருமையாக விளக்கம் சொல்லி எழுதுபவர் திரு ஞான வெட்டியான். அவரது பக்கத்திற்கு சென்று பாருங்கள்... எனக்குத் தெரிந்து எதுவும் விட்டுப் போகவில்லை. 18 சித்தர்களும் அவரின் வலைப்பூவில் இருக்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

GK,

//விதியை வெல்வது எப்படி - திருவாடுதுறை ஆதினம் //

இப்புத்தகத்தை பற்றி முடிந்தால் ஒரு பதிவு போடுங்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//At July 31, 2006 12:20 PM, Sivabalan said…
இப்புத்தகத்தை பற்றி முடிந்தால் ஒரு பதிவு போடுங்கள்...//

விதியை வெல்ல முடியும் என்பதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை இல்லை ! இருந்தாலும் மற்றவர்கள் விரும்பும் சில நல்ல விசயங்களும் அந்த புத்தகத்தில் இருக்கின்றன. எடுத்துப் போடுகின்றேன்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பட்டியல். புத்தகங்கள் நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்ல....மூச்சு போல. எதையாவது படித்து வைக்க வேண்டியிருக்கிறது. :-)

சைவ சித்தாந்தம் தொடர்பாக நீங்கள் ஏன் ஒரு தொடர் பதிவு தொடங்கக் கூடாது என்று இன்று கேட்டு வைக்கிறேன். உங்களிடமிருந்து நல்லதொடு மறுமொழி கிட்டும் என்ற நம்பிக்கையில். :-)

குமரன் போன்றோர்களுக்குத்தானே ஸ்கேன் பண்ணிப் போடுவீங்க...அப்ப நான் வந்து பாக்க மாட்டேன். :-)))))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//சைவ சித்தாந்தம் தொடர்பாக நீங்கள் ஏன் ஒரு தொடர் பதிவு தொடங்கக் கூடாது என்று இன்று கேட்டு வைக்கிறேன். உங்களிடமிருந்து நல்லதொடு மறுமொழி கிட்டும் என்ற நம்பிக்கையில். :-)
//

ராகவன்...என்னோட சித்தாந்தமும் சைவ சித்தாந்தமும் சில விசயங்களில் வேறு வேறு ... என்னால் அந்த புத்தகத்திலிருந்து எடுத்துப் போடமுடியும்... யாராவது மடக்கினால் ... என்னால் சப்பைக் கட்ட முடியாமல் போகும். சப்பைக் கட்டினால் என்னுடைய மற்றக் கருத்துக்களை நானே உடைக்க வேண்டியிருக்கும். :). என்னுடைய கருத்துக்களை இடத்துக்கு தகுந்தால் போல் பயன்படுத்துவேன். இப்படி சைவ சித்தாந்த பதிவு எழுதினால் அந்த வட்டத்துக்குள் நான் சிக்க நேரிடும்.

எனக்கல்லாம் என்ன சித்தாந்தம் இருக்க முடியும் ? நல்லவை நாடலும் தேடலும் தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்