பின்பற்றுபவர்கள்

12 ஜூலை, 2006

குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பு - தீவிரவாதம் என்ற சொல்லிற்கு பின்னால் நின்ற இந்த சொல்லை... தூரதிர்ஷ்டவசமாக மதங்களுக்கு பின்னால் நம் சாதுர்யத்தால் நுழைத்துவிட்டோம்... குண்டுவெடிப்பினால் உயிரிழக்கும் அப்பாவிகளைக் காட்டிலும் பின்பு ஏற்படும் கலவரங்களில் எந்த காரணமும் இன்றி உயிரிழக்கும் அப்பாவிகள் அதிகம். இதற்கு நம் பொறுப்பின்மையும் அரசியல்வாதிகளுமே பொறுப்பு.

நக்ஸலைட்டுகள் குண்டு வைத்தால் அவன் இன்ன சாதி இன்ன மதம் என்று நம் ஆராய்வதில்லை. ஆனால் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகாமான போர்வையில் ஒளிந்து கொண்டு இந்த கேடுகெட்ட செயலை செய்யும் போது நாமும் அவர்களைப் போல் கீழ்த்தரமாக இறங்கி மதங்களின் மீது சாணி அடிக்கிறோம் இது முறையா ?

இத்தகைய நம்முடைய தகாத செயல் மூலம் பாதிக்கப்பட்ட நபர் அந்த அமைப்பில் சேர்ந்து கொண்டு தீவிரவாதிகளின் கரங்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த மதத்தின் மீது பற்று உள்ளவர்களை சுட்டிக்காட்டி இவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று அவர்களை வம்புக்கு இழுத்து தூண்டுகிறோம். அவர்கள் வேறுவழியின்றி உங்கள் மதத்தில் உள்ளவர்களெல்லாம் யோக்கியர்களா என்ற கேள்வியை நம் சூழ்ச்சி அறியாது கேட்டுவைக்க. எவனோ வைத்தக் குண்டுக்கு நம் எனர்ஜி மடிகிறது, குரோதம் வளர்கிறது. இனப்போர்களை மதப்போர்களாக தீவிரவாதிகள் சித்தரித்து அப்பாவிகளை ஒரு பக்கம் கொல்லும் போது. நாமும் கத்தியின்றி ரத்தமின்றி அப்பாவிகள் மீதும் மதங்களின் மீதும் அதே பலியை சுமத்தி ... தீவிரவாதிகளுக்கு நாம் சலைத்தவர்கள் இல்லை என்று அழிவுகளை விதைக்கிறோம். அதன் அறுவடையை தீவிரவாதிகள் அனுபவிக்கின்றனர்.

தீவிரவாதிகள் - கெட்டவர்கள் ... சமூகவிரோதிகள் தான் இதில் எள்லளவும் சந்தேகம் இல்லை. இவர்களின் பின்புலனை அரசாங்கம் அடையாளப் படுத்துகிறோதோ இல்லையோ, நாம் உடனடியாக இவன் இந்த மதத்தில் இருப்பதால் தான் இவன் இவ்வாறு செய்கிறான் என்று கொளுத்திப் போடுகிறோம். எவனோ செய்யும் குற்றத்திற்காக ஒரு மதம் சார்ந்திருக்கிறான், மதத்தில் பிறந்திருக்கிறான், மதத்தில் பற்றுவைத்திருக்கிறான் என்பதற்காக சக இந்தியன் ஏன் தலைகுனிய வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்றும் அறியாமல் உன் தாய் ஒழுக்கமற்றவள் என்பதை தன்மானம் உள்ள எந்த மகன் ஏற்றுக்கொள்வான் (நாம் தீவிரவாதம் பற்றி பேசுவோம்... மதம் மாற்றம் பற்றியெல்லாம் இங்கு வேண்டாம்)

புழுவை கொட்டி கொட்டி குளவியாக மாற்றுமாமே குளவி ... அந்த வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். பெருச்சாளிகளை வீட்டில் வைத்துக்கொண்டு ... ஒரு பாம்பு எவரையோ கடித்ததற்காக ... பாம்பு இனமே விசம் அதனால் பாம்புகளை முற்றிலும் அழித்து ஒழிக்க வேண்டு மென்றால் பெரிச்சாளிகளை என்ன செய்வது.

ஒற்றுமையை வளர்காமல் விரோதத்தைப் பற்றி பேசுவது தற்காலிக ஆறுதலாக இருக்கலாம். இதனால் நல்ல தீர்வு எதுவும் ஏற்படாது.
மதங்கள் ஒன்றிணைந்து தீவிரவாதிகளின் மதத்தைப் பார்காமல் அவர்களின் செயலைப் பார்த்து முற்றிலும் அழித்து ஒழிக்கவேண்டியது என்பதே நம் விருப்பம்.

எனக்கும் மாற்றுமத நண்பர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தாடி வைத்திருப்பதால், திருநீறு பூசியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் தீவிரவாதிகள் அல்ல ... நம்பிக்கையின் காரணமாக வெறும் மதப்பற்றாளர்களே !

70 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிகச் சிறப்பான வார்த்தைகள் கோவி.கண்ணன்! இந்தப் புரிந்துணர்வு நமக்குள் நிலவினால் போதும். மத நல்லிணக்கம் நிலவிய அந்தப் பொற்காலம் மீண்டும் வந்துவிடும்.
நன்றி.

பெயரில்லா சொன்னது…

நல்ல (தேவையான) கட்டுரை கோவி.கண்ணன் அவர்களே!

தீவிரவாதிகள் குண்டு வைத்தபோது கூட ஏற்படாத இழப்பை விட, நாம் ஒற்றுமையிழந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும்போது ஏற்படும் இழப்புகள் மூன்று பங்கு அதிகம்.

அங்குதான் தீவிரவாதிகளுக்கு முழு வெற்றி கிடைக்கிறது.

பெயரில்லா சொன்னது…

குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நினைக்கியில் நெஞ்சு விம்முகிறது. இதை காரணம் காட்டி இனிமேல் விஷமிகள் ஏதும் ரணகளம் செய்து அதில் ஏதும் அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது என பதைக்கிறது. இப்போதைய தேவை நிதானமும், தீர்க்கமான எல்லாவிதமான வன்முறைக்கெதிரான நடவடிக்கைகளும்

சல்மான்

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,

உங்களுடைய (ஏன் நம் எல்லோருடைய )ஆதங்கம் உங்களுடைய வார்த்தைகளில் தெரிகிறது.

நண்பர் சல்மான் அவர்கள் கூறியதையேதான் நானும் நம் மும்பை நண்பர்களுக்கு கூற விரும்புகிறேன்.. பழிவாங்கும் செயலில் இறங்குவதாக நினைத்துக்கொண்டு விபரீதத்தில் இறங்கிவிடாதீர்கள்..

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்னு பஷீர் said...
மிகச் சிறப்பான வார்த்தைகள் கோவி.கண்ணன்! இந்தப் புரிந்துணர்வு நமக்குள் நிலவினால் போதும். மத நல்லிணக்கம் நிலவிய அந்தப் பொற்காலம் மீண்டும் வந்துவிடும்.
நன்றி.
//
நன்றி ஐயா,
நம் கைகள் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
நல்ல (தேவையான) கட்டுரை கோவி.கண்ணன் அவர்களே!

அங்குதான் தீவிரவாதிகளுக்கு முழு வெற்றி கிடைக்கிறது. //
சிபி அவர்களே
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சல்மான் said...
குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நினைக்கியில் நெஞ்சு விம்முகிறது. இதை காரணம் காட்டி இனிமேல் விஷமிகள் ஏதும் ரணகளம் செய்து அதில் ஏதும் அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது என பதைக்கிறது. இப்போதைய தேவை நிதானமும், தீர்க்கமான எல்லாவிதமான வன்முறைக்கெதிரான நடவடிக்கைகளும்

சல்மான்
//
நன்றி சாலமன் அவர்களே,
அப்பாவிகளின் இரத்த துளிகளில் அமைதியை தேடும் அமைப்புகள் புரிந்து கொள்வார்களா ?

பெயரில்லா சொன்னது…

நண்பரே. இதே வாதத்தை எதற்கெடுத்தாலும் பார்ப்பனரைத் திட்டித் தீர்க்கும் நச்சுப்பதிவர்களை நோக்கியும் வைக்கலாமே? இல்லையா?

உங்கள் கருத்துடன் நான் மாறுபடவில்லை. ஆனால் இதே அநியாயம் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மீதும் மீண்டும் மீண்டும் வலைப்பதிவுகளிலும் அதற்கு வெளியிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இல்லையா?

இந்த மாதிரி பொதுமைப்படுத்துதல் ஒரு குறிப்பிட்ட மதத்தை நோக்கி மட்டுமில்லை; தேவையில்லாமல் வந்தேறி தூத்தேறி காட்டேரி என்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட குழுவினரை நோக்கியும் நடந்து கொண்டிருக்கிறது. இது நியாயம் என்றால் அதுவும் நியாயம். இது அநியாயம் என்றால் அதுவும் அநியாயம்.

சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்போம். ஆனால் இரண்டையும் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள்.

பெயரில்லா சொன்னது…

மிகத் தேவையான பதிவு ஐயா. இந்தக் கொடுஞ்செயல் செய்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. ஆனால் அதற்காக உடனேயே ஒரு மதத்தை சாடுவது தேவையில்லாத ஒன்று. எல்லா இடங்களிலும் நல்லவர்களும் உண்டு; தீயவர்களும் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//இது நியாயம் என்றால் அதுவும் நியாயம். இது அநியாயம் என்றால் அதுவும் அநியாயம்.
//
மதப்பிரச்சனையைப் பற்றிப் பேசும் போது சாதிப் பிரச்சனையை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இரண்டு சாதிக்காரன் அடித்துக் கொள்ளும் போது மூன்றாவது வீட்டில் இருக்கும் மாற்றுமதக் காரனை பற்றிப் பேசி ... அது சரி என்றும் எப்படி சொல்லுகிறீர்கள் ? இதில் மாற்று மதத்தினருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. நீங்கள் சொல்லுவது உள்கட்சிப் பூசல்.

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
மிகத் தேவையான பதிவு ஐயா. இந்தக் கொடுஞ்செயல் செய்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. ஆனால் அதற்காக உடனேயே ஒரு மதத்தை சாடுவது தேவையில்லாத ஒன்று. எல்லா இடங்களிலும் நல்லவர்களும் உண்டு; தீயவர்களும் உண்டு.
//
திரு குமரன் ... நாட்டில் இன்னும் மழை பெய்துக் கொண்டிருக்கிறது.. அதற்கு நன்றி சொல்லி தொடர்ந்து பெய்யவைக்க வேண்டும் அதற்குத் தான் இந்த பதிவைபோட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் சைட்...
//ட்ப்ர்.ஜொசெப்க் சைட்...
கண்ணன்,

உங்களுடைய (ஏன் நம் எல்லோருடைய )ஆதங்கம் உங்களுடைய வார்த்தைகளில் தெரிகிறது.

நண்பர் சல்மான் அவர்கள் கூறியதையேதான் நானும் நம் மும்பை நண்பர்களுக்கு கூற விரும்புகிறேன்.. பழிவாங்கும் செயலில் இறங்குவதாக நினைத்துக்கொண்டு விபரீதத்தில் இறங்கிவிடாதீர்கள்..
//
நன்றி ஐயா,
எத்தனை அப்பவிக் குடும்பங்கள் உயிரிழக்குமோ, பாதிக்குமோ என்று நெஞ்சு பதைக்கிறது.

பெயரில்லா சொன்னது…

//அங்குதான் தீவிரவாதிகளுக்கு முழு வெற்றி கிடைக்கிறது. //
இதை எதிர்பார்த்து தான் என்னவோ அவர்கள் இது போல செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள். நாடு என்று வரும் போது மதங்களையும், மொழிகளையும்,சாதிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டு நலனுக்கு ஏது உகர்ந்தோ அதை செய்வது தான் நல்லது.
இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யாரு என்று கண்டுபிடித்தவுடன் உடனடியாக மரண தண்டமை நிறைவேற்ற வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாகை சிவா said...
இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யாரு என்று கண்டுபிடித்தவுடன் உடனடியாக மரண தண்டமை நிறைவேற்ற வேண்டும் //

கண்ணி வெடி சித்தர் நாகை சிவா அவர்களே சரியகத்தான் சொல்றிங்க

பெயரில்லா சொன்னது…

மிக அருமையான பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//saahul said...
மிக அருமையான பதிவு.
//
நன்றி திரு saahul அவர்களே

பெயரில்லா சொன்னது…

இந்த ஈனப் பிறவிகளை என்ன செய்தால் தகும்? என்று 'என்றென்றும் அன்புடன் பாலா' கேட்டு நேற்று பதிந்திருந்தார்.

http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_11.html#comments

அவருக்கு நானளித்த பதில்களே இங்கும்:

1. குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் பிடிக்க வேண்டும்.

2. விசாரணை மூன்று நாட்கள் மட்டும்.

3. ஒரு இரயில் பெட்டியில் குற்றவாளிகளை அடைத்து, அதனடியில் வெடிகுண்டுகளை இணைக்க வேண்டும்.

4. இரயில் பெட்டி வெடிக்க வைக்கப் படும் நாளையும் நேரத்தையும் இடத்தையும் அறிவித்து விடவேண்டும்.

5. பொதுமக்கள் - குறிப்பாக உயிரிழந்தோரின் குடும்பத்தினர் கண்முன்னே இரயில் பெட்டியை வெடிக்க வைக்க வேண்டும்.

6. தொலைக் காட்சியில் திரும்பத் திரும்ப இத்தண்டனை காட்டப் படவேண்டும்.

முக்கியப் பின்குறிப்பு: குற்றவாளிகளைப் பிடித்துச் சிறையிலடைத்து நம் வரிப் பணத்தில் அவர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அழகு said...
இந்த ஈனப் பிறவிகளை என்ன செய்தால் தகும்?
//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
மண்ணிப்பு என்பது தண்டகளைவிட பெரிய தண்டனை என்று மகான்கள் சொல்லியிருக்கும் நாட்டில் பிறந்ததற்கும் நாம் பெருமை கொள்ளவேண்டும்

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன், உங்கள் பரிந்துரையை மும்பையர் நடத்திக் காட்டுகிறார்கள். இன்று எந்த 'பந்த்'உம் கிடையாது. எல்லோரும் எப்போதும் போல அலுவலகத்திற்கு வந்திருக்கிறோம். இந்து-முஸ்லிம்களிடையே இதுவரை எந்த சண்டையும் ஏற்படவில்லை. தீவிரவாதிகளையும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளென்றே இங்கிருப்போர், இஸ்லாமியர் உட்பட, அடையாளம் காண்கின்றனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணியன் said...
கோவி.கண்ணன், உங்கள் பரிந்துரையை மும்பையர் நடத்திக் காட்டுகிறார்கள். இன்று எந்த 'பந்த்'உம் கிடையாது. எல்லோரும் எப்போதும் போல அலுவலகத்திற்கு வந்திருக்கிறோம். இந்து-முஸ்லிம்களிடையே இதுவரை எந்த சண்டையும் ஏற்படவில்லை. தீவிரவாதிகளையும் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளென்றே இங்கிருப்போர், இஸ்லாமியர் உட்பட, அடையாளம் காண்கின்றனர்.
//
மணியன் அவர்களே... நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

தூரதிஷ்டவசமாக : துரதிர்ஷ்டவசமாக
அரசியல் வாதிகளுமே : அரசியல்வாதிகளுமே
சாதகாமான : சாதகமான
இரங்கி : இறங்கி
தீவிர வாதிகளின் : தீவிரவாதிகளின்
தீவிரவாதிகளுக்கு நாம் சலைத்தவர்கள் இல்லை : தீவிரவாதிகளுக்கு நாமும் சளைத்தவர்கள் இல்லை
எள்லளவும் : எள்ளளவும்
கொளவியாக : குளவியாக
பெரிச்சாளிகளை : பெருச்சாளிகளை
வேண்டு மென்றால் : வேண்டுமென்றால்
வளர்காமல் : வளர்க்காமல்
பார்காமல் : பார்க்காமல்

கோவி.கண்ணன் சொன்னது…

//
எழுத்துப் பிழை said... //
அனானி பெயரில் செந்தழல் ரவி அவர்களுக்கு பிழைத்திருத்தும் பணி செய்துவந்து... தற்போது பெரிய மனதுடன் வலைப்பதிவு ஆரம்பித்து பிழைகளை குட்டிக்காட்டாமல் அன்புடன் சுட்டிக்காட்டும் அன்பு 'எழுத்துப் பிழை' அவர்களே. தங்களின் சேவை அது நம் தமிழருக்கு தேவை. தங்கள் மின் அஞ்சல் முகவரி தெரிந்தால் பதிவிடும் முன் உங்களுக்கு அனுப்பி வைத்து சரிபார்த்துக் கொள்வேன்.
(பி.கு... இந்த பின்னூட்டத்திலும் ஏதாவது பிழை இருக்கலாம் ... பெரிய மனது பண்ணி விட்டுவிடுங்கள்)

பெயரில்லா சொன்னது…

நண்பரே சரியான நேரத்தில் சரியான ஒரு பதிவு. இந்த நேரத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருந்தால்தான் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

யாரும் மத துவேஷம் கொண்டு எதுவும் எழுதாதீர்கள். மனிதர்களாக இருங்கள்.

பெயரில்லா சொன்னது…

முதலில் சகோதரர் கோவி கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

"குண்டு" என்ற சொல்லுடன் என்ன சம்பவம் நடந்திருந்தாலும் அதனை உடனேயே "உளவுத்துறைகளையும்" மிஞ்சிக் கொண்டு "இஸ்லாத்துடன்" தொடர்புபடுத்தி இந்திய நாட்டுடன் தன் இரத்தத்தாலேயே பின்னி பிணைந்திருக்கும் ஒரு சமுதாயத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தன் வக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கும் "மதத்தீவிரவாதிகளுக்கு" மத்தியில், இங்கு இன்னும் "நாம் எல்லோரும் இந்திய திருநாட்டின் மக்கள்" என்ற 1924க்கு முன்னிருந்த சகோதரத்துவ புரிந்துணர்வு கொண்ட மக்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை உரக்க அறிவித்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறீர்கள்.

உங்களைப் போன்ற சிந்தனையுள்ளவர்கள் இருக்கும் வரைக்கும் இந்தியாவை ஆட்கொள்ள 100 வருட திட்டத்துடன் களமிறங்கிய "சுயசேவை" சங்கங்களின் மறைமுக அஜண்டாக்கள் இங்கு விலைபோகப் போவதில்லை.

இது போன்ற அட்டூளியம் புரியும் கொடூரர்களை அவர்கள் எந்த மதத்தின் பின் ஒளிந்திருந்தாலும் மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த இந்த அரசு முயல வேண்டும்.

//இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யாரு என்று கண்டுபிடித்தவுடன் உடனடியாக மரண தண்டமை நிறைவேற்ற வேண்டும்//

கடந்த 13 வருட காலமாக ஏற்கெனவே 1993 ல் இங்கு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

காலம் தாழ்ந்த விசாரணை, குறைந்த தண்டனை இவை இந்த சமூக விரோத சக்திகளுக்கு மேலும் மேலும் உரம் போட்டு வளர்த்த ஏதுவாகின்றன.

உடனடி தண்டனை மிக அவசியம்.

முக்கியமாக சகோதரர் அழகு அவர்கள் குறிப்பிட்டது போல் "இந்திய மக்கள்ளின் வரிப்பணத்தில் இந்த கொடியவர்களுக்கு உணவழித்து சிறை என்ற பெயரில் அவர்களுக்கு பாதுகாப்பளித்து போற்றக்கூடாது"

இறை நேசன்

பெயரில்லா சொன்னது…

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் நாம் இந்தியர்களாக, சாதி, மத, மாநில, மொழிப்பாகுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைய வேண்டும். குற்றவாளிகளைத் தண்டிக்காமல் (அ) தப்பவிட்டு (இந்துவோ, முஸ்லிமோ, மற்றவரோ) அந்த மதங்களின் மீது தாக்குதல் நடத்தவும் அம்மதம் சார்ந்த பொதுமக்களை தனிமைப்படுத்த கேவலமாக இத்தருணத்தை பயன்படுத்த நினைப்பதும், அரசியல் ஆதாயக்கணக்கு போடுவதும் சிந்தனை பயங்கரவாதமாகி பவுதீக பயங்கரவாதத்திற்கு மேலும் உரமூட்டுகிறது என்பதை இந்த அரசியல்பூசாரிகளுக்கும் மதவியாபாரிகளுக்கும் உணர்த்தியாக வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//மஞ்சூர் ராசா said...
இந்த நேரத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருந்தால்தான் மேலும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். //

மஞ்சூர் ராசா அவர்களே...
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//"நாம் எல்லோரும் இந்திய திருநாட்டின் மக்கள்" என்ற 1924க்கு முன்னிருந்த சகோதரத்துவ புரிந்துணர்வு கொண்ட மக்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதை உரக்க அறிவித்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறீர்கள்.
//
இறைநேசன் உங்களின் பாராட்டுக்கள் ... நம்மைப் போல் சிந்திக்கும் அனைவருக்கும் கிடைத்த பாராட்டுகளாக ஏற்றுக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
RAAJA said...

மதங்களின் மீது தாக்குதல் நடத்தவும் அம்மதம் சார்ந்த பொதுமக்களை தனிமைப்படுத்த கேவலமாக இத்தருணத்தை பயன்படுத்த நினைப்பதும், அரசியல் ஆதாயக்கணக்கு போடுவதும் சிந்தனை பயங்கரவாதமாகி பவுதீக பயங்கரவாதத்திற்கு மேலும் உரமூட்டுகிறது என்பதை இந்த அரசியல்பூசாரிகளுக்கும் மதவியாபாரிகளுக்கும் உணர்த்தியாக வேண்டும்
//
அது போன்றவர்களுக்கு கடும் கன்டனமும் தெரிவிக்க வேண்டும்

பெயரில்லா சொன்னது…

.'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.'

குர்ஆன் 25 : 68

அப்பாவிகளை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் கண்டிப்பாக நரகவாசிகளே!

நல்ல (தேவையான) கட்டுரை கோவி.கண்ணன் அவர்களே!

Anbudan
suvanappiriyan

பெயரில்லா சொன்னது…

அடப் பாவிங்களா உங்க பொறுமைக்கு ஒரு எல்லையே இல்லையா?. இது பொறுமையா இல்ல கோழைத்தனமா?. முதல்ல நடந்தத கண்டிச்சு அத்தன பேரும் ஒரு பதிவு போடுங்க. அப்புறமா அஹிம்சய தீவிரவாதிங்களுக்கு போதனை செய்யுங்க.
எங்களுக்கு வேனாம்.உங்க வீட்ல எவனும் செத்திதருந்தா இதே மாதிரி போதனை பன்னுவிங்களோ?.ஆமாம் உங்க பார்வையில் செத்தது மும்பைக்காரண்தானே இந்தியன் அல்லவே.
நெஞ்சம் எரியுது.

கோவி.கண்ணன் சொன்னது…

//murali said...
எவனும் செத்திதருந்தா இதே மாதிரி போதனை பன்னுவிங்களோ?.ஆமாம் உங்க பார்வையில் செத்தது மும்பைக்காரண்தானே இந்தியன் அல்லவே.
நெஞ்சம் எரியுது.
//
இங்கு தீவிரவாதிகளை ஆதரித்து யாரும் எழுதவில்லை. காட்டுமிராண்டிகளின் செயல்களை அப்பாவி மக்களின் மேல் சுமத்தி ஏதும் அறியாதவர்களை தீவரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் என்று தான் எல்லோரும் சொல்கிறோம். மாற்று மதத்தினர் தீவிரவாதிகளை எதிர்த்து கண்டனம் தெரிவித்து எழுதினாலும் அவை சப்பைக் கட்டுகள் என்று தூற்றும் ஆட்கள் இருக்கவே செய்கின்றனர். எவனோ செய்த தவறுக்கு நம் சகோதரர்கள் ஏன் தலை குனிய வேண்டும் ? கூனி குறுக வேண்டும்.?

பெயரில்லா சொன்னது…

மிக அருமை கண்ணன் அவர்களே

///Religions are different roads converging upon the same point. What does it matter that we take different roads, so long as we reach the same goal///

-(Mind of Mahatma Gandhi)

எல்லா மதமும் ஒரே அடிப்படை தத்துவத்தை/ஒழுக்கத்தை தான் போதிக்கிறது- சக மனிதனை நேசித்தல்

Strong One,
make me strong.
May all beings look on me with the
eye of friend!
May I look on all beings with the eye of friend!
May we look on one another with the eye of friend!

--Yajur Veda 36.18

So the message which is applicable to the everyday needs of mankind:

CHANGE YOUR THINKING TO CHANGE YOUR LIFE
WHAT YOU THINK IS WHAT YOU LIVE
and
WHAT YOU LIVE IS WHAT SOCIETY IS

-Science of Religion

இனி வரும் காலங்களில் ஆவது நம் பிள்ளைகளுக்கு.. religious tolerence ஐ போதிக்க வேண்டும்.. மற்ற மத கோட்பாடுகளை புரிந்து கொண்டு பொருத்துக்கொள்ளும் தன்மையை வளர்க்க வேண்டும்..

இது இல்லாமல் போன காரணத்தால் நம் நாட்டில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை தாக்குதல்கள்/ தீவிரவாதம், ஒரு அனுபவ பாடம்.

அனுபவங்களே வழிகாட்டி..

நல்லதை" நாம் "கடவுளாக"நினைப்போம்

நம்முல் இருக்கும் இந்த கடவுளை அனுபவிப்போம்..

மங்கை

பெயரில்லா சொன்னது…

குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்கதே. ஆனால் நீங்கள் பரிந்துரைக்கும் தண்டனைகள் குண்டுவெடிப்பை விடக் கொடுமையானடு.

கோவி.கண்ணன் சொன்னது…

//தக்கும் வெளி said...
குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்கதே. ஆனால் நீங்கள் பரிந்துரைக்கும் தண்டனைகள் குண்டுவெடிப்பை விடக் கொடுமையானடு.
//
எல்லோருக்கும் உரைக்கவேண்டியதை மட்டும் தான் , நல்லோர்களின் கருத்தாக உரைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said... இனி வரும் காலங்களில் ஆவது நம் பிள்ளைகளுக்கு.. religious tolerence ஐ போதிக்க வேண்டும்.. மற்ற மத கோட்பாடுகளை புரிந்து கொண்டு பொருத்துக்கொள்ளும் தன்மையை வளர்க்க வேண்டும்..//
நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
அப்பாவிகளை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் கண்டிப்பாக நரகவாசிகளே!
//
சுவனப்பிரியன் அவர்களே ..நல்ல ஒரு சமய செய்தியை கூறி கருத்தையும் தெரிவித்ததற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

//இதில் மாற்று மதத்தினருக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது. //

நீங்கள் அந்த மாற்று மதக்காரர்களின் பதிவுகளைப் படித்ததில்லை என்று நினைக்கிறேன். மதச்சண்டை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்தேறிகள் அது இது என்று ஒரு சாதியைத் திட்டிப் பதிவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

//நீங்கள் சொல்லுவது உள்கட்சிப் பூசல்//

சாதிக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அது உள்கட்சிப் பூசலா? சரி. நீங்களே மாற்று மதக்காரர்கள் சகோதரர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்போது அது குடும்பச் சண்டை என்று விட்டுவிடுவது தானே? எதற்கு ரிலிஜியஸ் டாலரன்ஸ் அது இது என்று பெரிய மனுசத்தனம் காட்டுகிறீர்கள்? இதுவும் இன்னொரு வகை புனிதப் பிம்பம் தானே? எங்கே போனார் திராவிட கட்சி தலைவர்? அவர் சொல்ல ஒன்னும் இல்லையா?

எப்படியோ போங்க. உங்களை பொறுத்தவரை மதச்சண்டைக்கு ஒரு நியாயம். சாதிச்சண்டைக்கு ஒரு நியாயம். இப்படி இரட்டை வேஷம் போடறது தான் எல்லாருக்கும் கைவந்த கலையாச்சே.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. மிகவும் தேவையான பதிவு.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,
உங்கள் நடுநிலையான சிந்தனைக்கு நன்றி!

மனிதர்களைக் கொன்று குவித்து குருதி ஓட்டுபவனின் இதயத்தில் கருணை - இரக்கம் என்பது துளியும் இருக்காது. கருணை - இரக்கமற்ற எவனும் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான்.

பெயரில்லா சொன்னது…

///நம் கைகள் ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவதாக இருக்கவேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.//

நானும் கையை கொடுக்கிறேன்...:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சொல்வீரன் said...
நீங்கள் அந்த மாற்று மதக்காரர்களின் பதிவுகளைப் படித்ததில்லை என்று நினைக்கிறேன். மதச்சண்டை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்தேறிகள் அது இது என்று ஒரு சாதியைத் திட்டிப் பதிவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. //

ஐயோ .. சாதியை ஏன் இங்கு கொண்டுவந்து இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் எந்த சாதி /மதத்தையும் இழித்து எழுதவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளில் நான் சம்பந்தப்படவேயில்லை பின்பு எப்படி பதில் சொல்வது. அப்பாவிகள் மீது முத்திரையும், முகத்திலும் குத்தாதீர்கள் நம் எல்லோரும் ஒன்றிணைந்து தீவிரவாதிகளை ஒழிக்க முனைவோம் என்று எழுதினேன். நான் எதிர்பது தீவிரவாதம்.

//சாதிக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அது உள்கட்சிப் பூசலா?//
மாற்று மதக்காரன் என்றால் வரிந்துகட்டும் பல சாதிக்காரர்களும் ஏன் சாதிசண்டையை விட்டு ஒற்றுமையாய் இருப்பதில்லை.

//சரி. நீங்களே மாற்று மதக்காரர்கள் சகோதரர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.//

நான் மட்டுமல்ல 1895ல் சிக்காகோவில் சுவாமி விவேகநந்தரே என் அருமை சகோதர சகோதரிகளே என்று தான் சொல்லியிருக்கிறார். இந்துமதப் பற்றாளர்கள் யாரும் இதை மறந்திருக்க முடியாது

//அப்போது அது குடும்பச் சண்டை என்று விட்டுவிடுவது தானே? எதற்கு ரிலிஜியஸ் டாலரன்ஸ் அது இது என்று பெரிய மனுசத்தனம் காட்டுகிறீர்கள்?
இதுவும் இன்னொரு வகை புனிதப் பிம்பம் தானே? எங்கே போனார் திராவிட கட்சி தலைவர்? அவர் சொல்ல ஒன்னும் இல்லையா? //

நான் ஏதும் தெரியாத முட்டாள் என்றுவேண்டுமானாலும் திட்டுங்கள்.. எல்லோரும், நீங்களும் என் சகோதரர்களே !

//எப்படியோ போங்க. உங்களை பொறுத்தவரை மதச்சண்டைக்கு ஒரு நியாயம். சாதிச்சண்டைக்கு ஒரு நியாயம். இப்படி இரட்டை வேஷம் போடறது தான் எல்லாருக்கும் கைவந்த கலையாச்சே.//
நான் கயவன் என்று சொல்லிவிட்டுப் போங்கள்.

என் பதிவை நேரம் செலவழித்து படித்து.. பின்பு பின்னூட்டம் போட்டதற்கு நன்றி திரு வாய்ச்சொல் வீரன் அவர்களே

பெயரில்லா சொன்னது…

திட்டம் போட்டுக் கொல்கிற கூட்டம் கொன்று கொண்டே இருக்கிறது - அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கவேண்டிய கூட்டம் துங்கிக் கொண்டே இருக்கிறது!
வழக்கம் போல, நிகழ்வுக்குப் பின், அரசு விழித்து அறிக்கை விடும்.
வழக்கம் போல, குற்றமிழைத்த கூட்டத்தைச் சார்ந்தவர் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை செத்தவற்குச் சொல்லி வைப்பார்கள்.
வழக்கம் போல, குற்றமிழைத்த தன் இனத்தாரைக் கண்டித்து ஒரு சொல் கூட சொல்லப்போவதில்லை.
வழக்கம் போல, அப்பாவி மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறுநாளே வேலைக்குப் போகத் தொடங்குவார்கள்.
வழக்கம் போல, அரசியல் கட்சிகளும், நாளேடுகளும், இந்த ஏமாந்தவர்களின் வீரத்தை மெச்சி அறிக்கை விடும்!
வழக்கம் போல, அடுத்த அப்பாவி மக்களைக் கொல்லும் திட்டம் உற்றவரின் ஆசியுடன் தொடங்க ஆரம்பிக்கும்.
வழக்கம் போல, 4,5 பதிவுகள் வரும்.

மனசாட்சி இல்லாத மடையர்களை ஆதரிப்பவரும் தீவிரவாதிகளே!!

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறுநாளே வேலைக்குப் போகத் தொடங்குவார்கள்.
//

sk ...
வழக்கம் போல் உள்ள வழக்கம், வழக்கம் போல் உள்ள வழக்கமா
என்பது பற்றி
வழக்கம் போல் அதிகம் தெரியவில்லை
ஆனால்
வழக்கம் போல் அப்பாவி மக்களே அதிகம் மடிகிறார்கள் என்பது தான்
வழக்கம் போல் என்பது மட்டும்
வழக்கம் போல் உள்ள வழக்கம்
என்பது தெரிகிறது

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி சகோதரரே. துக்க வீட்டில் சோகமாய் இருப்பனை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்வது போல் இருந்தது உங்கள் பதிவு.

நடந்து விட்ட தேசிய சோகத்தில் சாதி-மத-இன பாகுபாடின்றி சக மனிதனுக்கு இழப்பு ஏற்படுத்தியர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு சட்டப்படி தண்டிப்போம்.

//வழக்கம் போல, குற்றமிழைத்த கூட்டத்தைச் சார்ந்தவர் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை செத்தவற்குச் சொல்லி வைப்பார்கள்//

தேசிய துக்கத்திலும் மதவெறி நெருப்பூட்டி குளிர்காய முயலும் கும்பலையும் கண்டிப்போம்.

பெயரில்லா சொன்னது…

காலம்
காலத்தின் தேவைகேற்ற சிறந்த பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லடியார் said...
மிக்க நன்றி சகோதரரே. துக்க வீட்டில் சோகமாய் இருப்பனை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்வது போல் இருந்தது உங்கள் பதிவு.
//
நல்லடியார் அவர்களே,
நம் எல்லோரின் எண்ணமும் செயலும் 'நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை! அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை! வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!' என்பதாக இருக்கவேண்டும். இதுவே பெருவாரியானவர்களின் விருப்பமாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரங்கியன் said...
காலம்
காலத்தின் தேவைகேற்ற சிறந்த பதிவு
//
பரங்கியன் அவர்களே 'காலத்தை' போற்றியதற்கு காலத்தின் சார்பில் காலத்தின் (Time)அங்கத்தினரான என் நன்றி.
காலம் எந்த சார்பும் அற்றது. காலம் ஒரு சாட்சி மட்டுமே

பெயரில்லா சொன்னது…

ஒரு அரசு எப்படி கவனக்குறைவாக செயல்படவேண்டும் என்பதற்கு
உலகிற்கு இந்தியா அரசு ஒரு உதாரணம். செப்டம்பர் 11 பின் அமெரிக்கா
அதன் உள்நாட்டு பாதுகாபிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது
இந்தியாவைபோல் தான் சர்வதேச எல்லைகளை கொண்ட நாடு USA
பல லட்சம் சட்டவிரோத குடியுரிமை அற்றவர்களையும் கொண்டீருக்கிறது
பல்கலாச்சார மொழிகளையும் பல நாட்டவரையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது இந்தியா விற்கும் ற்குள் எத்தனை தடவைகள்
தீவிரவாதத்தால் குண்டுவெடிக்கப்பட்டிருக்கிறது எத்தனை உயிரிழப்புகள்
ஒவ்வொருதடவையும் ஏதோ ஒரு சம்பவம் நிகளும்போது நிதி (நஷ்ட ஈடு)
வழங்குவதே இந்த நிதியைகொண்டு பாதுகாப்பை பலப்படுத்தலாமே.
இனி என்ன உடனடியாக அரசு செய்யும் ஒரு விடயம் இருக்கவே இருக்கிறது ஒய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஒரு விசாரணை கமிஷணை அமைப்பது அவர்கள் ஐந்து வருடங்களுக்கு விசாரணை செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பிற்பார்கள் இந்த குண்டு வெடிப்பிற்கு
காரணம் USA.ல் ஆரம்பித்து து+பாய்வழியாக பாகிஸ்தான் வந்து
அங்கிருந்து மும்பை வந்து கல்கத்தா போய்அதன்வழியாக மலேசியவுக்குள்
காணமல் போய்விடும். இந்தியாவில் எதற்கும் யாரையும் எங்கும்
வாங்கலாம் (பணத்தால்) விற்கலாம் என்திறநிலை உள்ளவரை
தீவிரவாதத்தால் எதுவும் எப்போது்ம் எங்கும் எதற்கும் முடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//M.G.RAGU said... இந்தியாவில் எதற்கும் யாரையும் எங்கும்
வாங்கலாம் (பணத்தால்) விற்கலாம் என்திறநிலை உள்ளவரை
தீவிரவாதத்தால் எதுவும் எப்போது்ம் எங்கும் எதற்கும் முடியும்.
//
குருதிப்புணல் படத்தில் சொல்வது போல் இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

குண்டு வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அந்த அல்லா சும்மாவிடமாட்டான்!

பெயரில்லா சொன்னது…

இந்தியா ஆளும்வர்க்க அரசியலை சிந்திக்கும்போது ஏற்படும் எண்ணமே
எனது கருத்து. கோபி அல்லாவோ இந்துகடவுளோ ஏசுவோ புத்தரோ
தீரவாதிகளை தண்டிப்பாதால் பரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்க போவதில்லை

பெயரில்லா சொன்னது…

//இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யாரு என்று கண்டுபிடித்தவுடன் உடனடியாக மரண தண்டமை நிறைவேற்ற வேண்டும்//

As per Indian law, It is very difficult to give punishment to the person who do the terror based crime. Indian law will punish only normal simple person. I do not have trust on Indian politician and police on terror based crime and the crime done by rich people.

பெயரில்லா சொன்னது…

//இந்தியாவில் எதற்கும் யாரையும் எங்கும் வாங்கலாம் (பணத்தால்) விற்கலாம் என்திறநிலை உள்ளவரை
தீவிரவாதத்தால் எதுவும் எப்போது்ம் எங்கும் எதற்கும் முடியும்.
//

WELL SAID. India can shine only if they bring strict law for family politics. India should make law such a way that one person from one family can hold public post (like MP,MLA,board chairman etc.)for only one time. Either he /she or any other person from the same family cannot contest again for any public post.An ordinary person has to suffer lot till we bring this law in our country.

பெயரில்லா சொன்னது…

//தீவிரவாதிகள் குண்டு வைத்தபோது கூட ஏற்படாத இழப்பை விட, நாம் ஒற்றுமையிழந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும்போது ஏற்படும் இழப்புகள் மூன்று பங்கு அதிகம்//

We can give advise to anybody till we get affected. Only those suffered will have pain. If your family person died in this bomb blast, what you will do. Whether we will keep quit.

பெயரில்லா சொன்னது…

//இதை காரணம் காட்டி இனிமேல் விஷமிகள் ஏதும் ரணகளம் செய்து //

I do not understand the meaning. Do you mean whenever there is terrorist attack, we should be patient.Do you mean whoever killing others are good people and the people who are taking revenge are விஷமிகள்.

பெயரில்லா சொன்னது…

//தீவிரவாதிகள் குண்டு வைத்தபோது கூட ஏற்படாத இழப்பை விட, நாம் ஒற்றுமையிழந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும்போது ஏற்படும் இழப்புகள் மூன்று பங்கு அதிகம்//

As per your advise, hereafter let us watch the bomb blast.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டங்கள் நோக்கங்களை திசை திருப்பவதால் இனி இந்த பதிவின் பின்னூட்டங்களுக்கு எனது மறுமொழியாக எதை நினைக்கிறீர்களா ... அதையே வைத்துக்கொள்ளுங்கள்... நான் அப்பாவிகளை நினைத்துத்தான் எழுதினேன்.

பின்னூட்டமிடுபவர்களின் பின்னூட்டத்திலிருந்து குறிப்பிட்டு கேட்டுபதற்கள்ளெல்லாம் எனக்கு விளக்கம் சொல்லத்தெரியாது.

பெயரில்லா சொன்னது…

// இதுவும் இன்னொரு வகை புனிதப் பிம்பம் தானே? எங்கே போனார் திராவிட கட்சி தலைவர்? அவர் சொல்ல ஒன்னும் இல்லையா? //


இருக்கு கண்டிப்பாக இருக்கு...

குண்டு வெடித்த அன்று இரவெல்லாம் தூக்கம் வராமல் இருந்தது..தெரிந்த நண்பர்கள் அனைவரையும் விழித்திருந்து தொடர்பு கொண்டது...
வருத்தப்பட்டது என்று எல்லாம் உண்டு..

இறந்தவர்களுக்கு வருத்தப்படும் அனுதாபப்படும் அதே வேளையில் இதுதான் சாக்கு என்று அதை மத வெறியாக முன்னிறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

வெறியர்கள் எல்லா மதத்திலும் உள்ளது போல் இஸ்லாத்திலும் உள்ளார்கள்.அதற்காக சகட்டு மேனிக்கு அனைத்து இஸ்லாமியர் மேலும் சகதியை வாறி இறைத்து அவர்கள் மனதை நோகடிப்பது சில்லறைத்தனம் என்பது என் கருத்து.
தீவிரவாதிகளை கடுமையாக கண்டித்தவர்களில் எல்லாரும் உண்டு.


பாந்திராவில் குண்டு வெடித்தப்போது அங்கு கணிசமாக அளவு வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் ஓடோடி வந்து உதவியதை நீங்கள் டிவியில் பார்த்திருந்தால் கண்ணீர் வரும் யாருக்கும்...

(போன வருடம் வரை நானும் அதே லோக்கல் ட்ரெயினில் முதல் வகுப்பில் நிறைய பிரயாணம் செய்தவன்தான்.அதை சூழ்நிலையை உணர்வு பூர்வமாக உணர மணியன், ஜோசப் ஆகிய அனுபவசாலிகளை கேளுங்கள்)

வாய்சொல்வீரன் என்ற பெயர் சரிதான் அய்யா உங்களுக்கு.


கோவி,

நன்றி பதிவிற்கு.வேறு ஏதாவது லாவணி வந்தால் நான் பதில் சொல்லமாட்டேன் என்று உங்கள்மூலம் சொல்லி கொள்கிறேன்)

பெயரில்லா சொன்னது…

The terrorists are not faceless humans.They have an agenda.The
terroists are islamic terrorists.
See the article by Parvin Swami
in todays The Hindu and also outlookindia.com
Let us not pretend that these acts have nothing to do with religion.Islamic terrorism and islamic fundamentalism are inseparable.Naxals have no religious agenda nor talk of
holy war.Islamic terrorists have
an agenda that is based on religion
and it is justified in the name of
religion.SIMI,LeT etc are not secular organisations.Give up the
illusions.There is no need to beat
the bush.These were the handiwork
of islamic terrorists.Let us not
forget it.

பெயரில்லா சொன்னது…

அய்யா,

பொலிடிக்கலி இன்கரெக்ட் ரவி அவர்களே என்ன சொல்ல வருகிறீர்கள்....
இந்திய முஸ்லீம்களை நாடு கடத்தி விடலாம் என்றா?

அல்லது இந்திய சட்டத்தில் இஸ்லாம் = பயங்கரவாதம் என்று எழுதிவிடலாம் என்றா?

உங்களை நினைத்தாலே எனக்கு வாந்தி வருகிறது. மிக மிக மோசமான நோயால் பீடிக்கப்பட்டவராக உள்ளீர்கள்.

கொஞ்சம் மனிதாபிமானம், அன்பு, பகுத்தறிவு போன்ற விசயங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அமேரிக்காவில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லையா?

காயல்பட்டினத்துக்கு இரண்டு குண்டு கூரியரில் அனுப்பி மனதை ஆற்றிக் கொள்ளுங்கள்.

அஜெண்டா...மஜென்டா....பெனாத்தால்

இவருக்கு இறந்தவர்களை பற்றீ வருத்தம் இல்லை. மாறாக இந்தப் பதிவில் இஸ்லாமியர்களை திட்டாததுதான் குறை

நன்றி(கோவி.கண்ணனுக்கு),
அசுரன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அஜெண்டா...மஜென்டா....பெனாத்தால்//
அசுரன் அவர்களின் மேற்கண்ட ஒரே பின்னூட்டம் 3 முறை இடப்பட்டதால் மற்ற இரண்டும் நீக்கப்பட்டது

பெயரில்லா சொன்னது…

மத பயங்கரவாதிகளை அந்த பயங்கரவாதிகளைத் தவிர யாரும் மதத்தை வைத்து ஜஸ்டிஃபை செய்ய மாட்டார்கள்.

பயங்கரவாதிகள் (மோடியோ/பின் லேடனோ) மதத்தின் முகமூடி மாட்டிக்கொள்கிறார்கள் என்பதற்காக, தருணம் பார்த்து - அந்த மதத்தவர் அனைவரையும் 'பயங்கரவாத வர்ணத்தில்' மூழ்கடிக்கவும் , கேவல அரசியல் கணக்குப் பார்க்கவும், -
எழுத்துத் திறமை இருக்கிறது என்பதற்காக இதற்காகவே சிந்தை ஒதுக்கீடு செய்வதும் - மைண்ட் இட் Mr. ravi Srinivas.

இதே பயங்கரவாதத்தால் இஸ்லாமிய அடிப்படையை பின்பற்றும் நாடுகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளை மத இன வேறுபாடில்லாமல் கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய நேரத்தில் -எரிகிற தீயின் கொள்ளியை நினைத்த திசையில் வீசி எறிகிற பொறுப்பின்மை மூத்த பதிவாளர்களையேனும் அண்டாதிருக்குமா?

பெயரில்லா சொன்னது…

வணக்கம் கோவி.கண்ணன்,

இந்த குண்டு வெடிப்பு மிகக்கொடுரமானது,நினைத்துப்பார்க்கவும்விரும்பாத ஒரு நிகழ்வு,
தீவிரவாதிகளின் செயல் ஆண்மையற்ற செயல்.இதற்கு மேல் என்ன சொல்ல.

இது போன்ற சூழலில் எதுவும் செய்ய முடியாமல், மாண்டவர்களுக்கு நம் இரங்கலை மட்டும் தெரிவிக்கும் கையால் ஆகாத பொது ஜனங்களில் ஒருவனாகத்தான் இருக்க முடிகிறது என்னால்

பெயரில்லா சொன்னது…

KANNAN SIR...LET ME TELL SOMETHING TO MR.RAVI SRINIVAS.

MR.RAVI, YOU ARE ATTEMPTING TO HIDE THE HINDU TERRORISM IN GUJRATH, ORISSA AND KASHMIR. YOU MUST KNOW THE MEANING OF TERRORISM. IT MEANT BY ACTION NOT BY RELIGION.

REGARDING ISLAMIC FUNDEMENTALISM, I SHOULD LOUGH FOR YOUR 'ZERO' KNOWLEDGE ABOUT ISLAM. IF YOU DARE ENOUGH TO DEBATE IN A DECENT MANNER PLEASE CALL DR.ZAKIR NAIK. OTHERWISE STOP SPITTING ON MUSLIM WHILE YOU ARE IN THE POOL OF DRAINAGE.

I ALSO INVITE YOUR TO READ THE FOLLOWING:

Muslims are Fundamentalists and Terrorists - By Dr. Zakir Naik

There are many non-Muslims who have studied Islam. Most of them have only read books on Islam written by biased critics of Islam. These non-Muslims have a different set of twenty common misconceptions about Islam. For instance, they claim to have found contradictions in the Qur’an, they contend that the Qur’an is unscientific etc. In this issue I shall deal with Fundamentalism.

Question: Why are many of the Muslims fundamentalists and terrorists?

Answer: This question is often hurled at Muslims, either directly or indirectly, during any discussion on religion or world affairs. Muslim stereotypes are perpetuated in every form of the media accompanied by gross misinformation about Islam and Muslims. In fact, such misinformation and false propaganda often leads to discrimination and acts of violence against Muslims. A case in point is the anti-Muslim campaign in the American media following the Oklahoma bomb blast, where the press was quick to declare a ‘Middle Eastern conspiracy’ behind the attack. The culprit was later identified as a soldier from the American Armed Forces.

Let us analyse this allegation of ‘fundamentalism’ and ‘terrorism’:

1. Definition of the word ‘fundamentalist’
A fundamentalist is a person who follows and adheres to the fundamentals of the doctrine or theory he is following. For a person to be a good doctor, he should know, follow, and practise the fundamentals of medicine. In other words, he should be a fundamentalist in the field of medicine. For a person to be a good mathematician, he should know, follow and practise the fundamentals of mathematics. He should be a fundamentalist in the field of mathematics. For a person to be a good scientist, he should know, follow and practise the fundamentals of science. He should be a fundamentalist in the field of science.

2. Not all ‘fundamentalists’ are the same
One cannot paint all fundamentalists with the same brush. One cannot categorize all fundamentalists as either good or bad. Such a categorization of any fundamentalist will depend upon the field or activity in which he is a fundamentalist. A fundamentalist robber or thief causes harm to society and is therefore undesirable. A fundamentalist doctor, on the other hand, benefits society and earns much respect.

3. I am proud to be a fundamentalist Muslim
I am a Muslim fundamentalist who, by the grace of Allah, knows, follows and strives to practise the fundamentals of Islam., A true Muslim does not shy away from being a fundamentalist. I am proud to be a fundamentalist Muslim because, I know that the fundamentals of Islam are beneficial to humanity and the whole world. There is not a single fundamental of Islam that causes harm or is against the interests of the human race as a whole. Many people harbour misconceptions about Islam and consider several teachings of Islam to be unfair or improper. This is due to insufficient and incorrect knowledge of Islam. If one critically analyses the teachings of Islam with an open mind, one cannot escape the fact that Islam is full of benefits both at the individual and collective levels.

4. Dictionary meaning of the word ‘fundamentalist’
According to Webster’s dictionary ‘fundamentalism’ was a movement in American Protestantism that arose in the earlier part of the 20th century. It was a reaction to modernism, and stressed the infallibility of the Bible, not only in matters of faith and morals but also as a literal historical record. It stressed on belief in the Bible as the literal word of God. Thus fundamentalism was a word initially used for a group of Christians who believed that the Bible was the verbatim word of God without any errors and mistakes.

According to the Oxford dictionary ‘fundamentalism’ means ‘strict maintenance of ancient or fundamental doctrines of any religion, especially Islam’. Today the moment, a person uses the word fundamentalist, he thinks of a Muslim who is a terrorist.

5. Every Muslim should be a Terrorist
Every Muslim should be a terrorist. A terrorist is a person who causes terror. The moment a robber sees a policeman he is terrified. A policeman is a terrorist for the robber. Similarly every Muslim should be a terrorist to the anti-social elements of society, such as thieves, dacoits and rapists. Whenever such an anti-social element sees a Muslim, he should be terrified. It is true that the word ‘terrorist’ is generally used for a person who causes terror among the common people. But a true Muslim should only be a terrorist to selective people i.e. anti-social elements, and not to the common innocent people. In fact a Muslim should be a source of peace for innocent people.

6. Different labels given to same individual for same Action
Different labels given to same individual for same action, i.e. ‘terrorist’ and ‘patriot’ Before, India achieved independence from British rule, some freedom fighters of India who did not subscribe to non-violence were labelled as terrorists by the British government. The same individuals have been lauded by Indians for the same activities and hailed as ‘patriots’. Thus two different labels have been given to the same people for the same set of actions. One is calling him a terrorist while the other is calling him a patriot. Those who believed that Britain had a right to rule over India called these people as terrorists while those who were of the view that Britain had no right to rule India called them as patriots and freedom fighters.

It is therefore important that before a person is judged, he is given a fair hearing. Both sides of the argument should be heard, the situation should be analysed, and the reason and the intention of the person should be taken into account, and then the person can be judged accordingly.

7. Islam means Peace
Islam is derived from the word ‘salaam’ which means peace. It is a religion of peace whose fundamentals teach its followers to maintain and promote peace throughout the world.

Thus every Muslim should be a fundamentalist i.e. follow the fundamentals of the religion of peace. He should be a terrorist only towards the antisocial elements in order to promote peace and justice in the society.

(The author is the president of Islaimic Research Foundation, Mumbai, Email: islam@irf.net, http://www.irf.net)

http://www.islamicvoice.com/november.98/zakir.htm

பெயரில்லா சொன்னது…

ஒரு சமூக விரோதிக்கும், சீர்திருத்த வாதிக்கும் ஒரு பொதுவான நிகழ்வு வாழ்க்கையில் எற்பட்டு இருக்கவேண்டும்.ஏதோ ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வாழ்க்கையில் ஏமாற்றமோ , இழப்போ எற்பட்டு இருக்க கூடும். அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பது தான் அவர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசம்.

நாம் ஞானியாக வேண்டாம்... மகான் ஆகி மன்னிக்கவும் வேண்டாம்.. அனால் அவர்கள் எடுத்த அதே ஆயுதத்தை நாமும் எடுப்பதில், எந்த தீர்வும் வரப்போவதில்லை...

எனக்கு தோனியதை சொல்லி இருக்கிறேன்...

மங்கை

பெயரில்லா சொன்னது…

http://www.ibnlive.com/news/no-evidence-of-simi-activities-in-up/15401-3.html

The whole world knows that islamic terrorists are against India.Pakistan is waging a proxy
war against India.Time and again
explosives had been seized,people associated with terrorist and
fundamentalist groups had been
arrested.Still if somebody says
that there is no islamic terrorism
what should one make of their sanity.Whether it is Indonesia,
Jordan,UK,India,USA or Iraq the
islamic terror network is targetting people.LeT etc are
swear by islam. The discourse
of Osama is based on islamic
principles as claimed by him.

பெயரில்லா சொன்னது…

bonapert aka asuran
why are so pertubed by critiques of islamic terrorism.Are you denying its existence.Are you
going to argue that Osama is a secular fighter against U.S
imperialism and LeT is a patriotic
organisation in Kashmir.

Read the opening sentences of Parveen Swamis article in The
Hindu.Read his earlier article
on islamic fundamentalism and
women in Kashmir.

பெயரில்லா சொன்னது…

"THE HINDU," wrote the Lashkar-e-Taiba's founder and spiritual guide Hafiz Mohammed Saeed in 1999, "is a mean enemy and the proper way to deal with him is the one adopted by our forefathers, who crushed them by force." Most of the few people who read Saeed's article dismissed it, correctly, as the ranting of a lunatic — and then made the error of dismissing his repeated promises to deliver maximum terror

http://www.hindu.com/2006/07/13/stories/2006071303420800.htm

Read the full article.

பெயரில்லா சொன்னது…

உமது அமேரிக்க மூளையை திருத்தும் அல்லது பாதிக்கும் அளவு அறிவுள்ளவன் அல்ல நான்.

அப்படி திருத்தி இந்திய சமூகத்துக்கு எதுவும் உருப்படியாக நடக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் இதே முஸ்லீம் தீவிரவாதிகள் இந்தியாவில் மசுதியில் சில மாதங்களுக்கு முன்பு குண்டு வைத்தார்களே அதை என்ன சொல்லப்போகிறேர்கள். அல்லது பாகிஸ்தானில் குண்டு வைத்ததை என்ன சொல்லப்போகிறேர்கள்.

மங்கை சொன்ன விசயத்தை சிறிது சீரணித்து பேசுங்கள். சமூக பொருளாதார வரலாற்று விசயங்களை கணக்கில் எடுக்காமல் நீங்கள் எத்தனை URL கொடுத்தாலும் என்ன பிரயோசனம்.

மதங்கள் அனைத்தும் மக்கள் விரோதமானது என்பது ஒரு கருத்து. ஆனால் வலுக்கட்டாயாமாக ஒவ்வொருமுறையும் இஸ்லாமை நியாபகப்படுத்துவது என்பதில் உள்நோக்கம், ஒரு அடிப்படை தத்துவ சார்பு உள்ளதாகத்தான் தெரிகிறது.

உங்களுக்கு இஸ்லாமின் பிற்போக்குத்தனம், பார்ப்பனர்களின் இன்றைய வறுமை, அமேரிக்காவின் நல்லெண்ணம், உலக வங்கியின் உயர்ந்த நோக்கங்கள் மட்டுமே தெரிகிறது என்றால் அதை என்னவென்று சொல்லுவது....

நன்றி,
அசுரன்.

பெயரில்லா சொன்னது…

உமது அமேரிக்க மூளையை திருத்தும் அல்லது பாதிக்கும் அளவு அறிவுள்ளவன் அல்ல நான்.

அப்படி திருத்தி இந்திய சமூகத்துக்கு எதுவும் உருப்படியாக நடக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் இதே முஸ்லீம் தீவிரவாதிகள் இந்தியாவில் மசுதியில் சில மாதங்களுக்கு முன்பு குண்டு வைத்தார்களே அதை என்ன சொல்லப்போகிறேர்கள். அல்லது பாகிஸ்தானில் குண்டு வைத்ததை என்ன சொல்லப்போகிறேர்கள்.

மங்கை சொன்ன விசயத்தை சிறிது சீரணித்து பேசுங்கள். சமூக பொருளாதார வரலாற்று விசயங்களை கணக்கில் எடுக்காமல் நீங்கள் எத்தனை URL கொடுத்தாலும் என்ன பிரயோசனம்.

மதங்கள் அனைத்தும் மக்கள் விரோதமானது என்பது ஒரு கருத்து. ஆனால் வலுக்கட்டாயாமாக ஒவ்வொருமுறையும் இஸ்லாமை நியாபகப்படுத்துவது என்பதில் உள்நோக்கம், ஒரு அடிப்படை தத்துவ சார்பு உள்ளதாகத்தான் தெரிகிறது.

உங்களுக்கு இஸ்லாமின் பிற்போக்குத்தனம், பார்ப்பனர்களின் இன்றைய வறுமை, அமேரிக்காவின் நல்லெண்ணம், உலக வங்கியின் உயர்ந்த நோக்கங்கள் மட்டுமே தெரிகிறது என்றால் அதை என்னவென்று சொல்லுவது....

நன்றி,
அசுரன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்