பின்பற்றுபவர்கள்

2 பிப்ரவரி, 2013

சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆன கதை !


நேற்றில் இருந்து சிங்கையில் விஸ்வரூபம் ஓடுது, இங்கே முதலில் வெளி இடவும் இல்லை, பிறகு இடை நிறுத்தவும் இல்லை, தமிழக கூத்துகள் முடியட்டம் என்று இங்குள்ள தனிக்கைக் குழு காத்திருந்ததோ என்னவோ, நேற்று தீர்ப்பு அப்படி இப்படி என்றதும் அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் அனுமதி கொடுத்துவிட்டனர், நேற்று முதல் இங்கே விஸ்வரூப காய்சல் அடிக்கக் துவங்கி இருக்கிறது, கோல்டன் டிஜிட்டல் மற்றும் ரெக்ஸ் திரைவளாகங்களில் மொத்தம் ஐந்து அரங்குகளில் விஸ்வரூபம் காட்சி. கூட்டத்திற்கு குறைவில்லை, சனி / ஞாயிறும் அரங்கு நிறையும் என்றே நினைக்கிறேன்.

145 நிமிட காட்சி, மிகப் பெரிய வெட்டுகள் எதுவும் இல்லை, தடைசெய்யக் காரணம் என்று சொல்லப்பட்ட, சர்சைகள் என்று கிளப்பிவிடப்பட்ட காட்சிகளும் இருந்தன. நடனக் கலைஞராக அறிமுகம் ஆகும் கமல் வரலாறு அஜித் போன்று செயற்கையாக செய்யாமல் உடல் நளினத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். ஆப்கான் காட்சிகள் ஆவணப்படம் போன்று இருந்தது, அதில் திரைப்படத்திற்கு முன்பே நாம் கேள்விப்பட்டது, படித்தது,  யுடியுபில் பார்த்ததில், வழிபாட்டுடன்  கழுத்தறுப்பது, மனித வெடிகுண்டு, பொது இடத்தில் தூக்குப் போடுவது, ஓஃபிய விற்பனை இவற்றை  சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று சொல்வதை விட கஷ்டப்பட்ட எடுத்த காட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும், 100க் கணக்கான துணை நடிகர்கள், ஆப்கான் குகைகள் ஆப்கானிய உடையுடன், ஆண்கள் பெண்கள், அவர்களின் பின்புலம், அமெரிக்க வெறுப்பு, எதிர்ப்பு.....ஆப்கானில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்க்க ஆவணப் படம் போல் தான் இருந்தது, ஆப்கான் தவிர்த்து அமெரிக்க காட்சிகள் விறுவிறுப்பான துறத்தல் ரகம், மற்றபடி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று சொல்ல காட்சிகள் எதுவும் இல்லை. பில்லா - 2 போல் படம் முழுவதும் துப்பாக்கி சத்தம். படத்தொகுப்பாளரை படம் ரொம்ப வேலை வாங்கி இருக்கும் போல். 

படத்தில் கமல் இஸ்லாமியராகவே வந்து போகிறார்.ஹிரோவும் அவன் செயலும் நல்லவை எனும் போது ஹிரோவின் மதமும் இது தான் என்று தெளிவாகக் காட்டும் பொழுது மதத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று யார் கொளுத்திப் போட்டதோ, இவை வெறும் பேரம் படியாத அரசியல் திசைத் திருப்பல்கள் மட்டுமே, அதற்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் பகடைகாய் ஆகியுள்ளன, இது தெரியாமல், படத்தையும் பார்க்காமல் தாறுமாறாக எதிர்ப்புகள் குவிந்திருப்பது, மதவாத அமைப்புகள் நினைத்தால் மதப் பற்றாளர்களை உணர்ச்சி வசப்பட வைக்க முடியும் என்பதை நிருபனம் செய்துள்ளது. விஸ்வரூபத்திற்கு எதிரான தாண்டவம் தமிழகத்தில் மதவெறிபரவி வருவதை உணர்த்துகிறது, ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர் எடுத்தப் படத்தை சிறுபான்மையினர் எப்படி தடை செய்யலாம் ? என்று உணர்ச்சி ஊட்டப்பட்டால் மதக்கலவரம் தவிர வேறு என்ன நடக்கும் ?  கமல் நினைத்திருந்தால் இந்துத்துவவாதிகளை நாடி தன் படத்திற்கு ஆதரவாக களம் இறக்கிவிட்டிருக்க முடியும், கமலை கண்டபடி திட்டும் மடையர்களுக்கு இது புரியுமா ? புரியாதது போல் நடிக்கிறார்களா ? மற்றவர்களுக்கு உணர்ச்சி இருக்காது என்று நம்புகிறார்களோ ?

அமெரிக்ககாரன் குழந்தையை, பெண்களை கொல்லமாட்டான் என்று ஒரு தீவிரவாதி பேசும் வசனத்தை நான் ரசிக்கவில்லை, அமெரிக்ககாரன் ஈராக், ஆப்கான் போரில் குழந்தையை,பெண்களை கொன்றானா ?  இல்லையா என்பது அமெரிக்க நண்பனான சவுதிக்கு தெரியாதா ? சவுதிகாரன் சகித்துக் கொள்ளும் சங்கதி ஒன்றைத் தானே தானும் சொல்லி இருக்கிறார்.படத்தில் அமெரிக்ககாரன் பெட்ரோலுக்காக சண்டையிடுகிறான் என்றும் வசனம் வருகிறது, எனவே குறிப்பிட்ட வசனத்தை அமெரிக்க அடிவருடித்தனம் என்று சொல்வதையும் என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. ஒருவேளை ஆப்கானில் பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக பிடித்துக் கொள்வார்களோ என்னவோ, அதுபற்றி தெளிவான காட்சியை கமல் வைக்கவில்லை, என்பதால் அந்த வசனம் படத்தில் ஒரு இடறல்தான்,

படத்தைவிட படவிவகாரம் தான் விஸ்வரூபம் ஆகியது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் - 2 தொடரும் என்று போடுகிறார்கள், கமலுக்கு இனிமேலும் அந்த ஆசை இருக்குமா ?  படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா நல்ல தேர்வு, ஓமராக நடித்திருப்பவர் காட்சிக்கு காட்சி பயம் கொள்ளச் செய்யும் அளவுக்கு அசத்தி இருக்கிறார், 

*****
கூட்டத்தோடு கூட்டமாக 'சோ. இராமசாமி' விஸ்வரூபத்திற்கு தடை சரிதான் என்று பேசியுள்ளார். படத்தில் பார்பனர்கள் பற்றிய காட்சி உள்ளது, கமல் கோழி சமைத்துவிட்டு, 'பாப்பாத்தி அம்மா உங்களுக்குதான் இதோட டேஸ்டு நல்லா தெரியும், கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், எங்க ஆத்துகாரி கூட சிக்கன் விரும்பி சாப்பிடுவா என்று நடனம் கற்றுக் கொள்ளும் பெண்ணிடம் சொல்லுவார். பார்பனர்கள் கோழி சாப்பிடுவது தவறு என்று யாரும் தவறாக நினைப்பதில்லை, ஆனா கமல் இப்படி போட்டுக்கொடுக்கிறாரே என்று சோ நினைத்திருக்கக் கூடும், அடுத்து கமலின் மனைவியாக காட்டப்படுவர் சொல் தூய்மையாக 'பிராமணாள் பாஷை' பேசுகிறார், படத்தில் கமல் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தும் அவரை வெறுக்காமல் அவருடனேயே ஒட்டிக் கொள்கிறார், ஒரு இந்துப் பெண், நம் பிரமணா சமூகத்தைச் சார்ந்த பெண் ஒரு முஸ்லிமுக்கு மனைவியாக எப்படிக் காட்டலாம் ? என்று நினைத்து சோ எரிச்சல் அடைந்திருக்கக் கூடும். சாலமன் ருஷ்டியுடன் பத்மலெட்சுமி கொஞ்ச காலம் மனைவியாக வாழவில்லையா ? கமல் காட்டியது புதுசா ?  மற்றபடி சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆகி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை, ஒரு இந்துத்துவ அடைப்படைவாதி இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு ஏற்படுவை இவை இவை என்று தெரியவந்தால் உள்ளுர ரசிப்பான், சோ வுக்கு தமிழக களேபரங்கள் தெரியாதா ? தெரிந்தே கார்டூன் போட்டு கலவரம் ஏற்படுத்தும் தினமலர் வகையறாக்களை சார்ந்த இவர் இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் என்று கூறி இருந்தால் கூட நாம் ஒருவேளை இவர்கள் மாறிவிட்டார்களோ என்று நினைக்கலாம், ஆனால் இவர் சொன்னகாரணம், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தடை செய்யக் கூடிய படம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

*********

தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி  யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,

18 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

ஓய்வு வயதில் கூட தமிழகம் திரும்பவது பற்றி யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,//


+1

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,

நல்ல பதிவு. மிக்ச்சரியாக இஸ்லாமிய நண்பன் எனப் புரிதலுடன் குறிப்பிட்டமைக்கு வாழ்த்துக்கள்.என்றாலும் இஸ்லாமிய நண்பன் ஆவது மிக மிக எளிதானது என்பதை விளக்க முயல்கிறேன்.முதலில் இஸ்லாமிய நண்பன் என்பதை அருகில் உள்ள சக முஸ்லிம் நலம் நாடும் நண்பன் எனப் பொருள் கொள்ளுதல் மார்க்கரீதியாக் தவறானது.

அதாவது முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக ஒருவர் பல் காரியம், கடந்த காலத்தில் செய்து இருந்தாலும் பரவாயில்லை.இஸ்லாமியத்தின் உண்மையான நோக்கமான உலகளாவிய கிலாஃபா[இஸ்லாமிய பேரரசு] கட்டியமைக்க [இப்போது] பிரச்சினை தராத எவருமே இஸ்லாமிய நண்பன் ஆக முடியும்.

அதை விட்டு மதச்சார்பின்மை,முஸ்லிம்களுக்கும் சம உரிமை,வாழ்வாதாரம் என சொல்லி இணைந்து செயல்படுவோம் என சொல்வது இஸ்லாமிய விரோதம் ஆகி விடும்.

இந்த சரியான (வஹாபி)மார்க்கப் புரிதல் இல்லாமல் காயிதே மில்லத்,அப்துல் சம்து,லத்தீப் போன்றவர்கள் இந்து(த்வ) எதிர்ப்பு நாத்திக இயக்கங்களை ஆதரித்த‌னர். அதில் பிரச்சினை இல்லமல் சுமுகமாக பாதுக்காப்பாக வாழ முடிந்தாலும், இஸ்லாமின் மேன்மை வெளிப்படவில்லை.

இஸ்லாமும் பிற மதங்கள் போல் என்பது இஸ்லாமிய விரோதம் இல்லையா!!!

ஆகவே சில சமயம் இந்துத்வ சக்திகளுடனும் ஒத்துப்ப் போய் ,[இஸ்லாமை]விமர்சிக்கும் நாத்திகர்களையும் தாக்க வேண்டும்.

இஸ்லாமுக்காக எதனையும் செய்வார்கள் முஸ்லிம்கள் என அச்சம் வரவேண்டும், இது இந்துத்வ எதிர்ப்பு கட்சிகளின் நிழலில் சாதிக்க இயலாது!!

இஸ்லாமின் மேனமை,விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தன்மையை ஏற்கும் எவரும் இஸ்லாமிய நண்பன் ஆக முடியும்!!.

சோ என்ன மோடி விசுவரூபத்தை தடை செய்தாலும் வரவேற்று இருப்பார்கள் !!!

அத்வானி மரண தண்டனை ஆதரவாக கூறியது தாவாவாதிகள் மேற்கோள் காட்டுவார்!!
**
இதில் இந்துத்வ ஆட்களுக்கும் நன்மையே!!. இனி எவனாவது பார்ப்பனன்,இந்துமதம் என விமர்சித்தால் ஹி ஹி அவர்களும் ஊடு கட்டுவார்கள்!!

சில இரு நாயகர்கள் உள்ள திரைப்படங்களில் இருவரும் தேடும் பொருள்,(ஆள்) கிடைக்கும் வரை நம்து சண்டையை ஒத்திப் போடுவோம்,இணைந்து தேடுவோம், கிடைத்த பின் யார் வலியவனோ சண்டையிட்டு முடிவு செய்வோம் என்பார்களே அப்புடீ!!

இந்துத்வ,வஹாபி இருவரும் இணைந்து மத சார்பற்ற விமர்சன நடுநிலை ஆட்களை ஒழித்து விட்டு தங்களுக்குள் முட்டுவார்கள்!!

காஃபிர்களே சிந்திக்க மாட்டீர்களா!!

நன்றி!!

SathyaPriyan சொன்னது…

தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,

+1 2 3 4 5 6 Add as much as you want.........

Unknown சொன்னது…

"ஓய்வு வயதில் கூட தமிழகம் திரும்பவது பற்றி யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்"
அரசியல்லே இதெல்லாம் சகஜம்மப்பா போக போக சரியாகிவிடும்.
இதெல்லாம் நெனைச்சு நீங்க மனசை போட்டு குழப்பிக்கொல்லதிர்கள்.
தைரியமாக நீங்கள் வரலாம் ஏனென்றால் இப்போது ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எல்லாம் 1965 to 1980 களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு படிப்பறிவு குறைவு படித்திருந்தாலும் சரியான வழி காட்டுதல் இல்லாததால் கூட்டம் சேர்த்து கொண்டு குய்யோ முறையோ என்று கூவும் கும்பல். நண்பர் சு பி ,முஸ்லிம்கள் ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் ஒரு பட்டதாரி வெளி வருகிறார் என்று சொல்வது சரியென்றால்.படிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் ஆர்ப்பாட்டம் செய்து போலிஸ் கேஸில் அகப்பட்டால் பாஸ்போர்ட் கிடைப்பது கஷ்டம் என்பதும் தெரியும். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் மகனை ஆர்பாட்டத்திற்கு நிச்சயமாக அனுப்பமாட்டார்கள்.அதனால் நிச்சயமாக மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது கோவி, அவசரபடதிர்கள்.

priyamudanprabu சொன்னது…

+1111111111111111111

Barath சொன்னது…

இஸ்லாமிய நண்பர்களே/சகோதரர்களே என்று கூப்பிட இப்போது மனமில்லை. அந்த இடத்தை விட்டு அவர்களே இறங்கி விட்டார்கள். வெறும் இஸ்லாமியரே என்று மட்டும் கூப்பிடலாம் மீண்டும் மனம் மாறும் வரை.

Barath சொன்னது…

இஸ்லாமிய நண்பர்களே/சகோதரர்களே என்று கூப்பிட இப்போது மனமில்லை. அந்த இடத்தை விட்டு அவர்களே இறங்கி விட்டார்கள். வெறும் இஸ்லாமியரே என்று மட்டும் கூப்பிடலாம் மீண்டும் மனம் மாறும் வரை.

Jawahar சொன்னது…

விஸ்வரூபம் குறித்த சோ வின் உணர்வுகளாக நீங்கள் எழுதியிருப்பவை பொறுப்பான, பண்பான விமர்சன ரகத்தில் சேரும். ஆனாலும் அதில் எனக்கு ஏற்பு இல்லை. படத்தில் தவறாக ஏதும் சொல்லப் படாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு புறப்பட்டது உண்மை. அந்த எதிர்ப்பை மீடியா ஊதிவிட்டதும் உண்மை. அந்நிலையில் படம் வெளிவந்திருந்தால் கலவரங்கள் வந்திருக்கலாம். அப்போது சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியெல்லாம் நடக்காமல் படத்தை ஒத்தி வைக்கிற வேலையை அரசாங்கம் செய்தது. அது அவசியம். அதைச் செய்யத்தான் வேண்டும். அதனால்தான் சோ அதைச் சரியென்று சொல்லியிருக்கிறார்- இது என் புரிதல்.

http://kgjawarlal.wordpress.com

கவியாழி சொன்னது…

கமலைப்போல மனிதநேயம் தமிழுணர்வு பகுத்தறிவு கொள்கை கொண்டதால் மற்றைய மக்களுக்கு அவர்மீது வேருப்பிருப்பதை சோ அவர்கள் வெளிபடுத்திவிட்டார்

dondu(#11168674346665545885) சொன்னது…

பார்க்க: http://dondu.blogspot.in/2013/02/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Robin சொன்னது…

கமல் நாத்திகம் பேசுவதால் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு எதிராக திரைப்படம் எடுத்ததால் இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள்.

indrayavanam.blogspot.com சொன்னது…

உண்மை தகவல்..சரியான கருத்து பதிவு

நன்னயம் சொன்னது…

ஜவகர் நீங்கள் பிராமண போலும். அதுதான் சோ வுக்கு இந்த மாதிரி ஜால்ரா பாடுகின்றீர்கள்.
விநாயக சதுர்த்தி ஊர்வலங்கள் கூட கலவரங்களை தூண்டி விடுகின்றன. அவற்றையும் தடை செய்து விடலாமே ?????

இந்த தடையை கருணாநிதி செய்திருந்தால் நீங்களும், சோவும் என்ன மாதிரியான எதிர்வினையை ஆற்றியிருப்பீர்கள் என்பது எமக்கு தெரியும்.

iTTiAM சொன்னது…

திரு. கோவி. கண்ணன் அவர்களே,

//அமெரிக்ககாரன் குழந்தையை, பெண்களை கொல்லமாட்டான் என்று ஒரு தீவிரவாதி பேசும் வசனத்தை நான் ரசிக்கவில்லை,//
இந்த வசனத்தின் விளைவுகள் / புத்திசாலித்தனம் புரியவில்லையா தங்களுக்கு? யார் இதனை படத்தில் பார்த்தாலும் கேட்டாலும் நிதர்சனம் என்ன என (அமெரிக்கராகவே இருந்தாலும்) யோசிக்கமாட்டார்களா என்ன?

மேற்கண்ட தங்களின் கருத்திற்கு ஏதும் சரி தவறு என்று சொல்லாமல் பெரும்பாலான / எல்லா அமெரிக்க வாசி பதிவர்களும் நழுவுவதை கவனித்தீர்களா? இந்த அழகில் சோ வின் நிலைப்பாடு பற்றி என்ன பஞ்சாயத்து?
சரி, திரு. சோ, படத்தை பற்றி கருத்து கூறவில்லை என்கிறீர்கள். அவர் என்ன அந்த படத்தின் திரையிடலை பார்த்த்தார் என்று எங்காவது உறுதிப்படுத்தினீர்களா? பிறகு எப்படி படத்தின் காட்சிகளைப்பற்றி கருத்து கூறமுடியும்?
தங்களின் கருத்துக்கள் இங்கு குழப்பமாக உள்ளது. அல்லது திரு எஸ். வீ. சேகரின் காட்டுல மழை நாடகம் போல தலைப்பை நியாயப்படுத்தி இருக்கிறீர்கள்!

//தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,//
திரு. கோவி, என்ன இது அழுகுணி ஆட்டம்???!!!
சரி ஒரு பேச்சுக்கு தாங்கள் இதனை சீரியஸ் ஆகவே கூறினீர்கள் என்று கொண்டால், ஜெ வும் / அரசும் இதே போல் கலவரமேற்பட்டால் கூறலாமா?

வேகநரி சொன்னது…

நான் நேற்று இரண்டு திராவிட கட்சிகாரர்களின் பதிவு தமிழ்மணத்தில் கண்டேன்.vimarisanam - kavirimainthan,தமிழ்மாறன். இவர்கள் இஸ்லாமிய அடக்கு முடுறைகளை ஆதரித்து கருத்து தெரிவித்தது ஆச்சரியமாக இருக்கவில்லை. இப்போ இவர்களுடன் சேர்ந்து சோ இராமசாமி என்று ஒருவரா? எனது ஒரு நண்பர் சொன்னார் இந்த ஆள் கமலகாசன் திராவிட கட்சிகாரர்கள் மாதிரி இஸ்லாமிய பயங்கரவாதங்களை காணாத மாதிரி கண்ணை மூடிக்கொள்பவர். அவரை இஸ்லாமியர்களிடம் நல்லாக கொடுமைகள் அனுபவித்து திருந்த விடவேண்டும் என்றார் இப்படி சொல்லி இஸ்லாமிய அடக்கு முறைகள் பயங்கரவாதங்களை ஆதரித்தால் அமெரிக்கா தனது சுயநலத்திற்காக இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஆதரித்து பாகிஸ்தானை நாசமாக்கியது போல் தான் முடியும் என்று நண்பரை திருத்தினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஸ்வரூபம் குறித்த சோ வின் உணர்வுகளாக நீங்கள் எழுதியிருப்பவை பொறுப்பான, பண்பான விமர்சன ரகத்தில் சேரும். ஆனாலும் அதில் எனக்கு ஏற்பு இல்லை. படத்தில் தவறாக ஏதும் சொல்லப் படாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு புறப்பட்டது உண்மை.//

சோ..மா(தி)ரி ஆட்கள் கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே
மதிப்பது கிடையாது :பிராமணர் சங்க நாராயணன்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91435

இப்போதாவது நான் எழுதியவை உண்மை என்று நம்புவதும் நம்பாததும் உங்க விருப்பம், இந்தத் தகவல் இன்று தான் வந்துள்ளது, ஆனால் நான் சோ மனநிலை குறித்து நேற்றே எழுதினேன்.

:)

இருக்கும் வரை தள்ளி வைத்துவிட்டு, ஒதுக்கி வைத்து, புறக்கணித்து தூற்றப்பட்ட பாரதியார் இன்று பார்பனர் சங்க கட்டிட வரவேற்பு வரையில் படமாக இல்லாமல் இருக்கிறாரா ? நாளைக்கு கமலையும் பார்பன குல திலகம் என்று புகழாமல் இருந்துவிடுவார்களா என்ன ?

Unknown சொன்னது…

"இருக்கும் வரை தள்ளி வைத்துவிட்டு, ஒதுக்கி வைத்து, புறக்கணித்து தூற்றப்பட்ட பாரதியார் இன்று பார்பனர் சங்க கட்டிட வரவேற்பு வரையில் படமாக இல்லாமல் இருக்கிறாரா ? நாளைக்கு கமலையும் பார்பன குல திலகம் என்று புகழாமல் இருந்துவிடுவார்களா என்ன ?" நீங்கள் சொல்வது நூறு சதவிதம் சரி நம் தமிழரோட மனபான்மைக்கு சரியான எடுத்துக்காட்டு மலையாளத்தில் ஒரு பழ மொழி உண்டு , முற்றத்து முல்லைக்கு மனமில்லை என்று அது போலத்தான் இருக்கிறது.

Unknown சொன்னது…

//சோ எரிச்சல் அடைந்திருக்கக் கூடும். //
இது உங்கள் அனுமானம். இது fact அல்ல. opinion.

//தெரிந்தே கார்டூன் போட்டு கலவரம் ஏற்படுத்தும் தினமலர் வகையறாக்களை சார்ந்த இவர் //

துக்ளக்கில் வந்த கார்ட்டூன்களுக்கு இதுவரை எந்த முஸ்லீமாவது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களா? இல்லை என்னும்போது அவரை தினமலரோடு சேர்த்தது தவறு.
//இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் என்று கூறி இருந்தால் கூட நாம் ஒருவேளை இவர்கள் மாறிவிட்டார்களோ என்று நினைக்கலாம், //
இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படமாக இல்லாத சமயத்தில் அவர் ஏன் அப்படிசொல்லவேண்டும்? அவர் அவ்வாறு சொல்லியிருந்தால், முஸ்லீம்களை தூண்டிவிடும் பாப்பான் என்று திட்டியிருப்பீர்கள்.
//ஆனால் இவர் சொன்னகாரணம், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தடை செய்யக் கூடிய படம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். //

சோ உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். முகம்மது பின் துக்ளக் முஸ்லீம்களை பற்றிய படமே இல்லை. அது இந்திய அரசியல்வாதிகளை கிண்டல் செய்து எடுத்த படம் என்பது பார்த்த முஸ்லீம்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
முகம்மது பின் துக்ளக் வந்தபோது ஜெயினுலாபுதீன் இல்லை, சிமி, இல்லை. கோயம்புத்தூரில் குண்டு வெடிக்கவில்லை. அமெரிக்க கவுன்ஸிலேட் முன்னால் வன்முறை அராஜகம் நடக்கவில்லை. அல்குவேதா இல்லை. ஆப்கானிஸ்தான் போர் இல்லை. தாலிபான் இல்லை. இந்தியன் முஜாஹிதீன் இல்லை. பெங்களூர் குண்டுவெடிப்பு நடக்கவில்லை. 26/11 இல்லை.

இப்போது விஸ்வரூபம் வரும்போது, அல்குவேதா, பயங்கரவாதம் எல்லாம் இருக்கிறது. தினந்தோறும் தற்கொலை வெடிகுண்டு வெடிப்பில் உலகெங்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் கொன்று தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.விஸ்வரூபம் இதனைத்தான் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பேசுகிறது.

முகம்மது பின் துக்ளக்கை வைத்து திமுக செய்தது புரளி. ஆனால், ஜெயினுலாபுதீனும், ஜவஹிருல்லாவும், popular front of indiaஉம் செய்வது வெற்று மிரட்டல் அல்ல.

அப்படி ஒரு மதக்கலவரம் வெடித்து தொலைத்தால், ஜெயாவைத்தான் திட்டுவீர்கள்.

முஸ்லீம்கள் மிரட்டியும், தனது பார்ப்பன வெறித்தனத்தை காட்டுவதற்காக விஸ்வரூபத்தை வெளியிட்டு முஸ்லிம்களை தூண்டிவிட்டு மதக்கலவர்த்தை உருவாக்கிய பார்ப்பன பாஸிஸ்டு ஜெயா என்றுதான் எழுதுவீர்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்