பின்பற்றுபவர்கள்

9 மே, 2012

செல்பேசிகள் முட்டையை வேக வைக்குமா ?

இயக்கத்தில் இருக்கும் இரு செல்பேசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளுக்கிடையே வைக்கப்படும் முட்டை சாப்பிடும் பதத்திற்கு வெந்துவிடும் என்கிற தகவல்களை மின் அஞ்சல் அல்லது செய்திகள் வாயிலாக நீங்கள் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவை வெறும் வதந்திதான் என்கிறது வதந்தி பற்றி தகவல் வெளியிடும் இணையத் தளம். 65 நிமிடங்கள் இணைப்பில் (தொடர்ந்த பேச்சில்) இருக்கும் செல்பேசிகள் முட்டையை வேக வைத்துவிடும் என்கிற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனைப் பரப்பியவர்களின் நோக்கம் செல்பேசி பயன்பாடுகளைக் குறைத்து சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்ய முடியுமா ? என்று நினைத்து செய்தார்களோ, அல்லது வெறும் வதந்தியைப் பரப்பச் செய்தார்களோ, ஆனால் தகவல் 100 விழுக்காடு வதந்தி என்கிறது அந்த இணையத் தளம். சுற்றுச் சூழலுக்கும், தனிமைச் சூழலுக்கும் கேடுவிளைவிப்பது செல்பேசி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, தேவைக்கு மட்டுமே செல்பேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் (அதாவது மூளை பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற தகவல்) தேவையற்றது தான். இயந்திர மய, விரைவு வாழ்க்கையில் சுற்றுச்சூழல் கேடு அதன் தவிர்க்க முடியாத பக்க விளைவு என்பதால், சுற்றுச் சூழல் குறைபாட்டிற்கு செல் பேசியை மட்டுமே குறைச் சொல்ல ஒன்றும் இல்லை. தற்பொழுது உலகெங்கிலும் இயக்கப்படும் கணிணிகள் அவை வெளியிடும் வெப்பம் இவற்றை ஒப்பிட செல்பேசியால் சூடேறும் வெப்பம் மிகவும் நுண்ணியதே, பழுதடைந்த செல்பேசிகளை முறையாக அழிப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல் தான் உள்ளது, இவை அனைத்து எலெக்ட்ரானிக் பொருள்களுக்கும் பொருந்தும்.

[T]he claim that RF energy from two mobile phones can cook an egg in 60 minutes cannot be true as it is impossible for the egg's temperature to rise to a level that will cook the egg. We can demonstrate this as follows: even if you assume that each mobile phone is emitting RF energy at its maximum average power of 0.25 W (based on a peak power of 2 W per phone) for 60 minutes; and even if the total power (2 X 0.25 W = 0.5 W) of both phones was completely absorbed by the egg (assuming it weighs 50 g), then the result would be a maximum temperature rise after 60 minutes of only 13 C. Even if the egg was at room temperature before starting the experiment, the result would still be far below the temperature actually needed to cook an egg (which is approx. 65- 70 C). 

செல்பேசியில் இருந்து வெளிப்படும் RF எனப்படும் ரேடியோ அலைகள் 60 நிமிடத்தில் முட்டையை வேக வைத்துவிடும் என்பது உண்மை இல்லை, ஒரு செல் பேசி வெளியிடும் வெப்ப அளவு 60 நிமிடத்திற்கு வெறும் 13 டிகிரி தான், அதுவும் சுற்றுச் சூழல் வெப்பத்தால் உரிஞ்சப்பட முட்டைக்கு தனியாக வெப்பம் செல்ல வாய்ப்பே இல்லை. முட்டை வேக 65 - 70 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் தேவைப்படுகிறது. எனவே செல்பேசி முட்டையைச் சூடேற்றி வேக வைக்கும் என்பது 100 விழுக்காடு வதந்தியாகப் பரப்பட்டத் தகவலே.

உங்களுக்கு மின் அஞ்சலில் இது அல்லது இது போன்ற தகவல் வந்தால் அவற்றை சரிபார்க்காமல் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள், வதந்திகள் என்பதே சிந்தித்து பார்க்க நேரமில்லாதவர்களால் பரப்பப்படும் வெறும் கவன ஈர்ப்புத் தகவல் தான்.

இன்று எனக்கு வந்த மின்னல் ஒன்றில்,


A very important message to everyone, please read it carefully. 
1 Egg & 2 Mobiles 
65 minutes of connection between mobiles. 


We assembled something as per image: Initiated the call between the two mobiles and allowed 65 minutes approximately... 
During the first 15 minutes nothing happened; 
25 minutes later the egg started getting hot; 
45 minutes later the egg is hot; 
65 minutes later the egg is cooked. 





Conclusion: The immediate radiation of the mobiles has the potential to modify theproteins of the egg. Imagine what it can do with the proteins of your brains when you do long calls.  
Please try to reduce long time calls on mobile phones and pass this mail to all your friends & Family you care for.

மேற்கண்ட படத்தைக் காட்டி, கீழே காட்டப்படும் வெந்த முட்டையும் செல்பேசியால் தான் வேக வைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதரமும் இல்லை. வதந்தியைப் பரப்ப இவர்களே ஏற்கனவே வெந்த முட்டையை வைத்து இருப்பர்.

6 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

ஆக, முட்டை பற்றிய இந்த வதந்திக்கான மதிப்பெண் முட்டைதான் என்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆக, முட்டை பற்றிய இந்த வதந்திக்கான மதிப்பெண் முட்டைதான் என்கிறீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

சேவல் முட்டை தான் மதிப்பெண்.
:)

Unknown சொன்னது…

முட்டையை பற்றி வதந்தியா.

வவ்வால் சொன்னது…

கோவி,

கூமுட்டையை வேக வைக்கும் :-))

இது ரொம்ப பழைய தகவல் , இதெல்லாம் சாத்தியம்னு கூமுட்டைகள் தான் நம்பும்.ஆனாலும் நீங்கள் உண்மையை சொல்லி பதிவிட்டது சிலரையாவது திருத்தும் என நம்புகிறேன்.

இதே போல செல் ஃபோன் கதிவீச்சை குறைக்கும் ஒரு கருவினு "ரேடியேஷன் கார்டு" என சொல்லிக்கிட்டு விக்குறாங்க அதுவும் டுபாக்கூர் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இது ரொம்ப பழைய தகவல் , இதெல்லாம் சாத்தியம்னு கூமுட்டைகள் தான் நம்பும்.ஆனாலும் நீங்கள் உண்மையை சொல்லி பதிவிட்டது சிலரையாவது திருத்தும் என நம்புகிறேன்.//

இது பழைய தகவல் தான், ஆனாலும் மின் அஞ்சல்களில் அடிக்கடி இந்த தகவல் வருகிறது, நேற்று வந்த ஒரு நண்பரின் மின் அஞ்சலில் இந்தத் தகவல் இருந்ததால் இதனை எழுதினேன்

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி!உங்களைப் பார்த்தால் மஞ்சள் எழுத்தாளாராக தெரியவில்லையே.பின்ன ஏன் அவ்வளவு மஞ்சள்?

உங்க மஞ்சக் கலரு உண்மையாக இருக்ககூடும்.ஆனால் மொபைல் சூட்டுல ஆம்லெட் போட்டதை நான் எங்கோ படமா பார்த்த ஞாபகம்.

நான் வந்த விசயமே வேற!கடைக்கு வந்தமா பேப்பர் படிச்சமான்னு இல்லாம கடைல உட்கார்ந்திருக்குற ஒண்ணு ரெண்டு ஆட்களையும் துரத்தி விட்டுடுவீங்க போல இருக்குதே:)

நல்லா தமிழ் நோக்குறீங்க போங்க!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்