பின்பற்றுபவர்கள்

21 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 4 !

வழக்கம் போல் நேற்று கனவில் வந்த பூனையாருக்கு நான் சுண்டக் காய்ச்சி ஏலக்காய் போட்டப் பாலை எடுத்து வைத்தேன், 'பூனைச் சாமி நான் சைவம் என்கிட்ட மீன்களை எதிர்பார்க்காதே' என்று கூறிவிட்டேன், 'ஆன்றோர் சான்றோர் அன்பர்கள் அன்போடு எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், ஆனால் பூண்டு மட்டுமே ஆகாது' என்று குறிபிட்டார். 'பூனையாரே உங்கள் மார்க்கம் உண்மையானது தானா ? என்று பல்வேறு தரப்பினர் எப்போதும் என்னை கேட்டுவருகின்றனர்' என்றேன், 'பொய்களையும் திரித்தலையும் கேட்டுப் பழக்கப் பட்டவர்கள் ஐயுறுவது இயல்பு தானே' என்று சொல்லிவிட்டு, 'என் மார்க்கத்தினரடிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலை உனக்குச் சொல்லுகிறேன்' என்று கூறிவிட்டு கேள்வியும் பதிலுமாக அவரே சொன்னார்.

"பூனையார் உண்மையான கடவுளா ?"

"அதில் எங்களுக்கு ஐயம் என்பதே கிடையா ?"

"பூனை எப்படிக் கடவுளாகும் ?"

"எவ்வளவோ மக்கள் பூனையாரை விட்டுவிட்டு எதை எதையோ, சனிமூலை, தெற்கு வடக்கு , வடமேற்கு என்று திசைகளையெல்லாம் புனிதம் என்று வணங்குவதும், திசை வணங்கியாக இருப்பது எங்களுக்கும் கூட அருவெறுப்பாகத்தான் இருக்கிறது"

"ம் வேலிட் பாயிண்ட், உங்கள் வழிபாடு சாத்தானுக்கு செய்யும் வழிபாடு போன்றதன் வேற பெயரா ?"

"பூனையார் சாத்தான் அல்ல, பூனையார் வழிபாட்டினருக்கு மற்ற கடவுள்களும் சாத்தான் இல்லை, எங்களுக்கு எங்கள் வழி"

"நீங்கள் பூனையார் பெயரில் ஒரு சிலை வணங்கி தானே ?"

"பூனையாரின் உருவத்தை நாங்கள் வணங்குவதில்லை, உருவத்தினுள் இருக்கும் பூனையாரைத் தான் வணங்குகிறோம், ஓவியங்களின் உயிர் அது வரையப்படும் ஊடகத்தின் மீது, வண்ணத்தின் மீது இல்லை, பார்பவரின், வரைபவரின் கண்களில் தான் உள்ளது, பூனையாரின் சிலை எங்களுக்கு ஒரு ஊடகம் போன்றதே, பூனையாரின் கோவிலின் மேல் கூரையைப் பார்த்து தான் நாங்கள் வழிபடுவோம், பூனையார் சிலை இருக்குமிடம் எங்கள் வழிபாட்டிற்காக கூடும் இடம் மட்டுமே, கடவுள் பூனை வடிவானவர் என்பதை நாங்கள் நினைத்துக் கொள்ள அந்த சிலைகள், மற்றபடி பூனையார் வடிவ சிலையை நாங்கள் வணங்குவது கிடையாது, அலங்கரிப்பது மட்டுமே, எங்களைப் பொருத்த அளவில் சிலையை வணங்குவது தவறும் இல்லை, வணக்கம் செலுத்தப்படுவதற்கான நோக்கத்தைவிட மனத் தூய்மை மிக மிக அவசியமானது என்று நினைக்கிறோம், நீங்கள் ஒரு சிலை வணங்கியாக இல்லாமல் இருந்து உங்கள் மனம் குப்பையாக இருந்தால் உங்கள் வழிபாட்டினால் பயன் ஏதும் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் சரிதானே ?"

"உங்கள் பூனையார் மார்கததை நீங்கள் களைத்துவிட்டு அல்லாவையோ, ஏசுவையோ வழிபடுவதுதான் உங்களை சொர்க வாசலில் நுழையச் செய்வதற்கான வழி என்று தெரிந்துள்ளீர்களா ?"

"சுத்த பேத்தல், அவர்களை வழிபட்டவர்கள் சொர்கம் தான் சென்றார்கள், செல்லுவார்கள் என்பதற்கான ஆதரங்கள் இதுவரை எதுவும் இல்லாத போது அதுவும் வெறும் நம்பிக்கை தானே ?, பூனையாரை வழிபட்ட போது தங்கம், வைரம் என்று எகிப்து நகரமே செல்வசெழிப்பாக சொர்கமாகவே காணப்படது, பின்னர் படையெடுப்பளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, ஆராய்ச்சி என்ற பெயரில் எஞ்சி அனைத்தையும் தற்காலத்தில் கூட கொள்ளையடித்தே வருகின்றனர், எங்கள் பூனையார் மார்க்கத்தான் எங்களுக்கு சொர்கம், பூனையாரை வழிபட்டவர்கள் மண்ணுலகில் கூட சொர்கவாசியாகத்தான் இருந்தனர்"

"உங்கள் பூனையார் மார்க்கத்தின் தனித்துவம் என்ன ?"

"உலகில் தற்பொழுது கோலொச்சும் அனைத்து மதங்களுமே, ஒவ்வொரு வகையில் 'காபி கேட்' மதங்கள், அதாவது அவற்றிக்கு பொதுத் தன்மை உண்டு, தவிர அவை ஒன்றில் இருந்து ஒன்று காபி அடிக்கப்பட்டவையே, ஒரிஜினல் கேட் எங்கள் பூனையார் மார்க்கம் தான் இவற்றிற்கான மூலம் அல்லது துவக்கமே, புதிய மதங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள பூனையார் சிலைகளை அழித்துவிட்டனர், உலகின் முதல் மதம் என்று வரலாற்றில் பதிவு செய்திருப்பவையே எங்களது ஆதி மதம் பூனையார் மார்க்கமே"

"கடைசியாக, பூனைகள் பேசாது என்பது பொது உண்மை, பிறகு எப்படி உங்கள் கடவுள் பேசும் ?"

"உலகில் இன்றைக்கு இருக்கும் மதங்களின் கடவுள்கள் பேசும் என்பது நம்பிக்கை, ஆனால் எத்தனை பேரிடம் அது நேரிடையாகப் பேசியுள்ளது என்கிற பட்டியல் இருக்கிறதா ? இதுவரை யாரிடமும் பேசாத கடவுள் பேசக் கூடியது என்கிற நம்பிக்கை இருக்கும் போது, கேட்க மற்றும் 'மியாவ்' ஒலி எழுப்பும் வல்லமை உள்ள பூனை வடிவ எங்கள் கடவுள் பேசாது என்பது உங்களின் எந்த வகை நம்பிக்கை ?, நாங்கள் வழிபாட்டின் போது பூனையாரிடம் பேசுகிறோம், பூனையார் பேசுவது எங்களுக்கு திரும்பக் கேட்கும் காலம் வரும் என்று காத்திருக்கிறோம், எங்கள் பூனையார் வழிபாட்டை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை"

*****


பூனையாரே கேட்க நன்றாக இருக்கிறது, பூனையார் மார்க்கத்தில் அபயச் சொல், அச்சம் தவிர்க்கும் மந்திரச் சொல்கள் இல்லையா ? என்றேன். ஏன் இல்லை 'மியாவ் மியாவ்......(சற்று இடைவெளி இட்டு) மியாவ் மியாவ்) என்று நான்கு முறைச் சொன்னால் நான்கு திசைகளில் இருந்து வரும் பயம் அனைத்தும் போகும் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக பூதை மொழி ஒன்றைச் சொன்னார்

"நாத்திகர்களுக்கு (நான் ஒன்று) கூறிக் கொள்கிறேன், நீங்கள் (எந்த) தெய்வ வணக்கத்தில் இல்லாத போதும், ஒருவேளை (என்றாவது) உங்களுக்கு கடவுள் நம்பிக்கைத் தேவைப்படும் போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள், நான் (உங்களின்) நம்பிக்கை நாயகனாக இருப்பேன், நானே அனைவரும் (நாத்திகன் உள்ளிட்டோர்) விரும்பக் கூடிய இறைவன், மறந்தும் நீங்கள் பிற மதங்களை (காபி கேட் மதங்களை) பின்பற்றும் மதவாதி ஆகிவிடாதீர்கள் (பூ.த.மொ 51)

பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !

பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !

பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

பூனையாரின் பூதைகள் இணைப்பு
இணைப்பு : http://catreligion.org/faqs/

8 கருத்துகள்:

'பசி'பரமசிவம் சொன்னது…

பூனையார் மதத்தில் இக்கணமே நான் இணைந்துவிட்டேன்![கட்டணம் ஏதுமின்றி இலவசமாக!!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரமசிவம் said...
பூனையார் மதத்தில் இக்கணமே நான் இணைந்துவிட்டேன்![கட்டணம் ஏதுமின்றி இலவசமாக!!//

வாங்க வாங்க, பூனையார் மார்கத்தில் இணைந்து கொள்ளும் நாத்திகர் ஒவ்வொருவரும் அவரவர் பகுதிக்கு பூனையார் மார்கத்து குருதேவர் ஆக்கப்படுவர். உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

Unknown சொன்னது…

iraithoothar kannan vazhga. ini cat engal kadavul

வால்பையன் சொன்னது…

அது என்னமோ தெரியல, பெட் அனிமல் வளர்பதில் எனக்கு சின்ன வயதிலிருந்தே விருப்பமில்லை!

நாம் அவர்களை அடிமை படுத்துகிறோம் என்ற எண்ணம்! மாற்ற என்ன வழி?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாம் அவர்களை அடிமை படுத்துகிறோம் என்ற எண்ணம்! மாற்ற என்ன வழி?//

மனிதர்களுடன் அல்லது மனிதர்களை அண்டி வாழும் விலங்குகளைத்தான் வீட்டு விலங்குகள் என்கிறார்கள், அவைகளுக்கும் வேறு வழியில்லை, எந்த ஒரு நாயோ, பூனையோ காட்டில் தனித்து வாழ முடியாது, அவற்றிற்கு வேட்டையாடிப் பிழைக்கும் திறன் கிடையாது, எனவே எந்த வித ஐயுறுவும் இன்றி நீங்கள் நாய் அல்லது பூனையை இணைகளாக வளர்க்கலாம்.

ராஜி சொன்னது…

பூனையார் மதத்தில் எனக்கும் இடமுண்டா?

naren சொன்னது…

ஹா..ஹா..ஹா..எலி மார்க்கத்தினரை மடக்க .நல்ல பதிலடி நெத்தியடி பதில்கள்.

ஆரம்பத்தில் ஏதோ தமாஷாக்குதான் பூனைமதம் என நினைத்தேன். பதிவுகளை பார்த்தால் உண்மையாகவே பூனை மார்க்கத்தை நிறுவினாலும் நிறுவிவிடுவீர் போலிருக்குதே. இப்பவே ஒரு துண்டை போட்டு வைக்கணும்.

R.Puratchimani சொன்னது…

// நீங்கள் ஒரு சிலை வணங்கியாக இல்லாமல் இருந்து உங்கள் மனம் குப்பையாக இருந்தால் உங்கள் வழிபாட்டினால் பயன் ஏதும் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் சரிதானே ?"//
:)

பூதை மதத்தின் இறுதி இறைத்தூதர் கோவியார் வாழ்க :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்