பின்பற்றுபவர்கள்

14 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 3 !

வாரா வாரம் வரம் போல் என் கனவில் வருவதாக ஒப்புக் கொண்ட பூனையார் நேற்றும் சொன்னபடி வந்தார், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் உருவாக்கிய மதம் எப்படி அழிந்தது என்று புலம்பினார், புலம்பி ஆவது ஒன்றும் இல்லை, கால ஓட்டத்தில் எதுவும் தப்புவதில்லை, 'இன்றைய மதம் நாளைக்கு அழியும் என்பது தானே உண்மை' என்று தேற்றிவிட்டு எருக்களில் இருந்து முளைக்கும் விதைகள் போல் மதங்கள் மறுபிறவி எடுக்கத்தான் செய்கின்றன, பூனையார் மதம் கூட மறுவளர்ச்சி அடையலாம், நானே அதற்கு உதவுகிறேன் என்று கூறினேன். மிகவும் மகிழ்சி அடைந்தார் பூனையார். பூனையார் எப்படி எகிப்திய கடவுள் ஆனார் ? என்பதைக் கேட்டு வைத்தேன், எகிப்தியர்களும் துவக்கத்தில் மத நம்பிக்கையற்ற சமூகமாகத்தான் இருந்தார்களாம், ஊருக்குள் எலிகள் பெருகி சேமித்த உணவுப் பொருள்கள் சேதமடைய, நோய் தொற்ற மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர், அப்போது பூனைகள் தான் எலிகளை கட்டுப்படுத்தி அவர்களை காத்தது, பூனைகள் எகிப்தியர்களைக் காத்த கடவுள்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று தம் கடவுள் ஆகிய கதையை சுருக்கமாகத் தெரிவித்தார், பின்னர் இணையத்தில் தேட பூனையார் குறிப்பிட்டவை சரிதான் என்று உறுதியும் படுத்திக் கொண்டேன்.

The Egyptians worshiped cats because they found that they were catching mice and rodents that caused disease and ate their grains. After a while, they domesticated cats to keep them in their home to fend off the rodents. Eventually, the Egyptians worshiped cats such as Mafdet, Bastet, Sekhmet, and the Sphinx (which was more of a demigod or a mythological creature.
http://wiki.answers.com/Q/Why_did_Egyptians_worship_cats

இந்த முறை பூனையாரிடம் அந்த முக்கிய கேள்வியை கேட்டுவிடுவது என்று நினைத்து சற்று தயக்கத்துடனேயே கேட்டேன், 'கடவுள் மனிதனின் சாயல், ஈஸ்வர் மனுஷ்ய ரூப் என்றெல்லாம் கடவுள் வடிவம் குறித்துச் சொல்லும் போது கடவுள் மனித சாயல் என்று சொல்லுகிறார்களே, பூனை வடிவத்தை எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் ?' என்று கேட்டேன். 'இவையெல்லாம் கடவுளை கண்டதாகக் கூறியவர்களின் பிதற்றல் தான், யாரும் கடவுளைக் காணாத பொழுது கடவுள் மனுச உருவம் என்று எப்படி ஒப்புக் கொள்கிறோர்களோ ? அனைத்து வல்லமைகளையும் உள்ளக் கடவுள் பூனை வடிவமாக இருந்தால் கடவுள் தன்மை போய்விடுமா ? கடவுளின் தன்மையை உருவம் கட்டுப்படுத்துமா ? வெளிக்காட்ட வெறும் தோற்றம் தானே அது பூனையாகவோ, நாயாகவோ ஏன் ஒரு கடல் நண்டாகவோ இருந்தால் என்ன ? நம்பிக்கை உடையவர்களுக்கு பசுஞ்சாணிக் கூட பிள்ளையார் என்று வணங்குவது போன்றது தான், எனது பல வடிவங்களில் பூனையும் ஒன்று, மனித முகங்களைவிட பூனையின் முகம் எனக்கு பொருத்தமானதே'என்ற நீண்ட பிரசங்கத்தில் என்னை ஒருவாறு தலையாட்ட வைத்தார். கடவுள் உருவம் பூனை என்று நம்பாதவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு எழுப்பப்பட மாட்டார்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

என்னது மீண்டும் மீண்டும் பிறப்பது தண்டனையா ? என்று கேட்டேன், பிறவியில் தனக்கு மகிழ்ச்சிக் கிடைத்தால் பிறவி நல்லது என்கிறார்கள், துன்பப்பட்டால் பிறவி இழிவு என்கிறார், பிறவியில் நிலைத்தன்மை கிடையாது என்பதால் அது துன்பமே என்று தனது கருத்தைக் கூறினார் பூனையார். கடவுள் பூனை வடிவமானவர் என்று ஒப்புக் கொள்ளும் வரை மனிதன் பிறப்பெடுப்பான் என்று கூறி தனது மதத்தின் முக்கிய கொள்கையில் ஒன்றை எடுத்துக் கூறினார்."நான் (உங்கள் எல்லோருக்கும்) கூறுகிறேன், நீங்கள் கடவுளுக்கு (எந்த வகையான) வடிவமும் இருக்காது என்று நம்புகிறீர்கள். கடவுள் (தனக்கு) பிடித்த வடிவாமாக தேர்ந்தெடுப்பது பூனை வடிவம் தான், அதை (பூனை வடிவத்தை) ஒப்புக் கொள்ளுவோருக்கு சொர்கம், மற்றவர்களுக்கு (ஒப்புக்குக் கூட ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு) பிறவி பெரும்பிணி" - (பூ.த.மொ 50)

பூனையார் ( எந்த மதில்மேல் இருந்தாலும், எந்தப் பக்கம் பாய்வது என்பதை) நன்கு அறிந்தவர்

பூனையார் வாழ்க, பூனையாரின் மதம் வளர்க !

பூனையார் (என்னை கனவில்) தேடினால் தொடரும்...

16 கருத்துகள்:

எல் கே சொன்னது…

mm ennamo aachu

தருமி சொன்னது…

பூனைச் சாமி சொல்றது எல்லாமே சரியாகத் தோன்றுகிறதே ...!

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
பூனைச் சாமி சொல்றது எல்லாமே சரியாகத் தோன்றுகிறதே ...!//

பூனையார் பற்றிய முந்தைய பதிவை நீங்கள் வாசிக்காததால் பூனையாரின் அருளாசி உங்களுக்கு (முழுமையாக) கிட்டாது

கோவி.கண்ணன் சொன்னது…

//எல் கே said...
mm ennamo aachu//

ஏன் ஏன் ? என்னுடைய பூனை மதம் பற்றி நான் எழுதக் கூடாதா ?

அய்யகோ........!
:)

Robin சொன்னது…

"ஆரம்பித்தில் பூனை மார்க்கம்தான் இருந்தது. ஆனால் அன்றைக்கிருந்த இறைவேதங்கள் எல்லாம் மனிதக்கரங்களால் மாற்றப்பட்டுவிட்டது. இப்போது என்னிடம் இருப்பதுதான் உண்மையான பூனை மார்க்கத்தின் இறைவேதம்" - நீங்கள் சொல்ல மறந்தது.

சுவனப்பிரியன் சொன்னது…

//mm ennamo aachu//

புரியலையா! வேறொன்றும் இல்லை. வயிற்றெரிச்சல்.

பரமசிவம் சொன்னது…

அசத்தல் பதிவு!
நகைச்சுவை கலந்து கருத்தை முன்வைக்கும் தங்களின் திறமை என்னை பிரமிக்க வைத்தது.
பூனையார் மதத்தை எல்லோருக்கும் அறிமுகம் செய்த கோவியார் வாழ்க!

thequickfox சொன்னது…

படிக்க படிக்க பரவசம். பூதை தான் உலகிற்கு வழங்கபட்ட உண்மையான வேதம் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

R.Puratchimani சொன்னது…

// கடவுள் உருவம் பூனை என்று நம்பாதவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு எழுப்பப்பட மாட்டார்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.// :) :)

சார் கலக்கிறீங்க..

அப்பாதுரை சொன்னது…

இத்தனை நாள் தேடிக்கொண்டிருந்த கடவுள் மியாவா! தெரியாமல் போனதே?

கோவி.கண்ணன் சொன்னது…

//புரியலையா! வேறொன்றும் இல்லை. வயிற்றெரிச்சல்.//

உங்களுக்குத்தான் வயிற்றெரிச்சல் என்றால் நன்கு தெரியுமோ ? எனக்கு அனுபவம் இல்லை

எங்க பூனை மதத்தின் மீது தீவிரவாத முத்திரை இல்லை பிறகு ஏன் வயிற்றெரிச்சல் படனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரமசிவம் said...
அசத்தல் பதிவு!
நகைச்சுவை கலந்து கருத்தை முன்வைக்கும் தங்களின் திறமை என்னை பிரமிக்க வைத்தது.
பூனையார் மதத்தை எல்லோருக்கும் அறிமுகம் செய்த கோவியார் வாழ்க!//

பேசாமல் மிஸ்டர் மியாவ் மதத்தில் சேர்ந்து ஆத்திகர் ஆகிடுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//thequickfox said...
படிக்க படிக்க பரவசம். பூதை தான் உலகிற்கு வழங்கபட்ட உண்மையான வேதம் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

5:01 PM, March 15, 2012//

பூதையே நமது பாதை !

கோவி.கண்ணன் சொன்னது…

//சார் கலக்கிறீங்க..//

எல்லாம் பூனையார் செயல்

கோவி.கண்ணன் சொன்னது…

//இத்தனை நாள் தேடிக்கொண்டிருந்த கடவுள் மியாவா! தெரியாமல் போனதே?//

மியாவ் மியாவ் - தான் நம்ம மதத்தின் தாரக மந்திரம் அது பற்றி அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
பூனைச் சாமி சொல்றது எல்லாமே சரியாகத் தோன்றுகிறதே ...!//

உங்களுக்கு பூனையார் நம்பிக்கைகளைக் கொடுத்து முழுநாத்திக பூசாரி ஆக்கிக் கொண்டுள்ளார். கஷ்ட நேரத்தில் மியாவ் மியாவ் சொல்ல மறக்காதீர்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்