பின்பற்றுபவர்கள்

27 மார்ச், 2012

கலவை 27/மார்ச்/2013 !

கலவையாக எழுதி ரொம்ப நாள் ஆச்சு, இடையில் பூனையார் புகுந்ததால் கலவைக்கு நேரம் ஒதுக்கவில்லை.

செல்வேந்திரன் : சென்ற பிப்ரவரி மாதம் திருப்பூர் பதிவர் செல்வேந்திரன் பணித் தொடர்பில் சிங்கை வந்துச் சென்றார், சிங்கைப் பதிவர்களை சந்திக்க முன்கூட்டியே விருப்பம் தெரிவித்திருந்தார். செல்வேந்திரன் இளம் பத்திரிகையாளர் இந்து நாளிதழில் பணியாற்றுகிறார். ஈராண்டுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். மூன்றாண்டுகளாக அவ்வப்போது தனது வலைப்பதிவில் எழுதிவருகிறார், விஜய் டிவி நீயா நானா கோபிநாத் ஒருமுறை இவரை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைத்திருந்தார். சிஙகை வந்திருந்தார், நண்பர் ரோஸ்விக் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். அவர் சிங்கை வந்திருந்தபொழுது அவரது அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா இடங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்ததால் எங்களாலும் உடனேயே சந்திக்க முடியவில்லை, பின்னர் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (26/2/2012) அன்று முஸ்தபா அருகே ஒரு வெளி உணவகத்தில் வட்டமேசையாக சந்தித்தோம். மனிதர் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளை கொண்டிருக்கிறார், எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசினார், சுறுக்கமாகச் சொன்னால் அன்பால் செய்யப்பட்ட உருவங்களில் செல்வேந்திரனும் ஒருவர், சந்தித்துப் பேச மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, நல்ல நண்பர்களை தேடிச் சென்று சந்திப்பது மகிழ்வானது தானே, அவருக்கும் அம்மகிழ்ச்சியை நாங்கள் குறைவில்லாமல் கொடுத்திருப்போம் என்றே நினைக்கிறேன். பின்னர் வானூர்தி நிலையத்திற்குச் சென்று வழியனுப்பித் திரும்பினோம்.

ராசி (எ) ராஜ்குமார் சின்னசாமி : கொஞ்சம் பெரிய உருவம், எனக்கு வலைப்பதிவு மூலம் அவ்வளவாக பழக்கம் கிடையாது, இரண்டொரு முறை பின்னூட்டத்தில் கடுமையாக பதிலும் சொல்லி இருக்கிறேன், ஆனால் கூகுள் ப்ளஸ் மூலம் தான் இவர் நன்கு நெருக்கமானார், இவருக்கும் நமக்கும் பொதுவான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை, இவர் முழுக்க முழுக்க அம்மா ஆதாரவாளர், அரசியல், சமூக எண்ணங்கள் தவிர்த்து பார்த்தால் மனுசன் ரொம்பவுமே ஜாலியான ஆளு, சில பேரிடம் பேசும் போது எப்போதும் கிண்டலும் கேலியுமாகத்தான் பேசுவோம், அந்த வகையான ஆளு இவர். எவ்வளவு ஓட்டினாலும் சிரித்துக் கொண்டு பதிலுக்கு ஓட்டுவார், மற்றபடி கோபப்படமாட்டார். இவரும் சென்ற வாரத்திற்கு முன் முன்கூட்டியே சொல்லிவிட்டு சிங்கை வந்து சென்றார், ஜோதிபாரதி விமான நிலையத்திற்கு சென்று அழைத்து வந்தார். வலைப்பதிவு நண்பர்கள் வழக்கமாக கூடும் கொடை கடையில் சந்தித்தோம், மறுநாள் பதிவர் கிரி சிங்கையின் மையப் பகுதிக்கு இவரை அழைத்து சென்று வந்தார், விமான நிலையத்திற்கும் சென்று அனுப்பினோம். அன்பால் செய்யப்பட்ட பெரிய உருவங்களில் ராசியும் ஒருவர் (இருவர் என்று சொல்லனுமா ?, அதான் பெரிய உருவம் என்று சொல்லியாச்சே)
இந்த இருவருமே எல்லோரிடமும் தயக்கமின்றி, மகிழ்ச்சியாக ரொம்ப நாள் பழகியவர்கள் போலவே பழகினர், வலைப்பதிவின் பிற நன்மைகள் என்றால் அது நமக்கு நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்துகிறது. தனிமனித தாக்குதல் இன்றி எழுதினால் எந்தப் பதிவரையும் எப்போதுமே சந்திக்க நமக்கும் தயக்கமே இருக்காது. சிங்கைவரும் நண்பர்கள் முன்கூட்டியே சொன்னால் எங்களில் ஒரு ஐந்து பேரையாவது சந்திக்க முடியும், ஆனால் ஒரு சிலர் சிஙகைக்கு வந்து சென்று பிறகு சிங்கைக்கு சென்றதாக எழுதும் பொழுது, நம்மை ஏன் இவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்ற கேள்வி நிற்கிறது. வார இறுதி நாட்களில் மாலை வேளைகளில் சந்திக்க எங்களுக்கு நேரம் இருக்கும்.

******

இருவாரங்களுக்கு முன் மலேசியாவிற்கு பணித் தொடர்பில் சென்றிருந்தேன், சென்று திரும்பும் போது அலுவலக நண்பர் 'புத்ரா ஜெயா' என்னும் நகருக்கு அழைத்துச் சென்றார், அது மலேசிய தலைநகர் கே எல் விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் இடம் (இது நகரின் மையத்தில் இருந்து 70 கிமி தொலைவில் உள்ளது. புத்ரா ஜெயா' சற்று மலைபாங்கான மற்றும் ஏரிகளுடன் அமைந்த அழகிய நகரம், வானூர்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் அந்த நகரின் உருவாக்கம் மலேசிய அரசின் தலை நிர்வாகத்திற்காகவே உருவாக்கப்பட்டதாம், பளிச்சிடும் வேலைப்பாடுகளுடன் அகலமான ஓரளவு உயரமான கட்டிடங்களில் அரசு அலுவல்கள் இயங்கிவருகின்றன. அருகே கலை நயத்துடன் கட்டப்பட்ட தொழுகைக்கான மசூதி, ஆக்ரா ஆற்றுக் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மகால் போல் ஏரியின் பக்கத்தில் அமைந்துள்ளது அந்த மசூதி முகப்பில் வாகனங்கள் நிறுத்த மிகப்பெரிய நிறுத்துமிடம், அதன் கீழே சுற்றுலா பொருள்கள் விற்கும் கடைகள். அங்கு சென்ற பிறகு மழைத்தூறல் அந்த இயற்கை எழில் சூழ்ந்த நகருக்கு மேலும் மெருகூட்டியது, எனக்கு ஐரோப்பிய நகரங்களை நினைவு படுத்தியது, அங்கு இருந்த பேருந்து நிறுத்தம், தொங்கு பாலங்கள் கூட அனைத்துலக தரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.


*****

சென்றவாரத்திற்கு முந்தைய வாரம் சிங்கையில் ஐடி ஷோ எனப்படும் தகவல் தொழில் நுட்ப விற்பனை அங்காடி நடைபெற்றது, கட்டுக்கடங்காத கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை IT Show, PC Show, Comex, இன்னும் ஏதாவது பெயரில் நடந்து கொண்டே இருக்கும், அப்படி என்ன தான் வாங்குவார்களோ, கூட்டத்திற்கு குறைவே இருக்காது. குறிப்பாக சீனத் தயாரிப்புகள் தான் 90 விழுக்காடு விற்பனையாகிறது.


*****

சிம்பு மட்டும் தான் பாடுவாரா ? 'யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தருயாடி..........'( என் படம் என்று சொல்லி என் பழைய படங்களுக்கு இணைப்புப் கொடுக்கும் மகராசன்களின் அயர்ச்சியைப் போக்கவும், ஜெலுசில் விற்பனையை கூட்டவும் இந்தப் புதியப் படம்)

9 கருத்துகள்:

Jawahar சொன்னது…

இது மாதிரி கொறிக்கபிளா எழுதுறது எப்பவுமே படிக்க ரொம்ப ரசனை. ஃபோட்டோக்கள் அருமை!

http://kgjawarlal.wordpress.com

priyamudanprabu சொன்னது…

PHOTO..:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இது மாதிரி கொறிக்கபிளா எழுதுறது எப்பவுமே படிக்க ரொம்ப ரசனை. ஃபோட்டோக்கள் அருமை!//

நன்றி ஜவகர் அண்ணே.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
PHOTO..:)//

போட்டோவுக்கு என்ன ?

துளசி கோபால் சொன்னது…

ஃபோட்டோ பாய்ண்ட் ஒன்னு புதுசா வந்துருக்கு போல !!!!!

கலவை அருமை! படங்களும் பலே ஜோர்.

ஜெலூஸில் ஒருவேளை கோபாலுக்கு வேண்டி இருக்குமோ? பரவாயில்லை. புதுசா ஒரு பூரிக்கட்டை வாங்கி இருக்கேன்.
அப்ப...பழசு?????????

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெலூஸில் ஒருவேளை கோபாலுக்கு வேண்டி இருக்குமோ? பரவாயில்லை. புதுசா ஒரு பூரிக்கட்டை வாங்கி இருக்கேன்.//

ஏன் ஏன் அவரை இந்தமாதிரி படம் எடுக்க அனுமதிக்கமாட்டிங்களா ? எவ்வளவு அழகாக ட்ரஸ் பண்ணிக் கொண்டு வர்றாங்க, நாம அதை அங்கீகரிக்கவில்லை என்றால் அவர்களுக்கு மகிழ்சி இருக்காதே.

வேகநரி சொன்னது…

இப்படியாக கலகலப்பாக இருப்பது சிறிதளவு பூனையாரால் (பூ.த.மொ213) அனுமதிக்கபட்டுள்ளதால் நீங்கள் கலகலப்பாக இருப்பது தவறில்லை. ஆனால் அனுமதிக்கபட்டது சிறிதளவு நேரம்(பூ.த.மொ215) என்பதை மறந்துவிடாதீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் அனுமதிக்கபட்டது சிறிதளவு நேரம்(பூ.த.மொ215) என்பதை மறந்துவிடாதீர்கள்.//

அது எப்படி மறப்பேன்.

"நீங்கள் (பூனையாரை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள்) ஓய்வெடுப்பதிலும் விளையாட்டிலும் உங்கள் ஓய்வு நேரங்களை செலவழியுங்கள், அது உங்களுக்கு புது உற்சாகத்தைத் தரும், பூனையார் (உடல்பயிற்சி உள்ளிட்ட) அனைத்தையும் நன்கு அறிந்தவர்" (பூ.த.மொ21)

பித்தனின் வாக்கு சொன்னது…

சிம்பு மட்டும் தான் பாடுவாரா ? 'யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தருயாடி..........'

anna intha matterai veetula sollutuma?....

nalla irukku kalavai. romba nallaiki appuram nanbarkal photo parthen

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்