பின்பற்றுபவர்கள்

21 டிசம்பர், 2011

சசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் ?

ஜெ-சசி நட்புறவு முக்கிய காலகட்டத்தை கடந்துள்ளது, இதற்கு முன்பு ஜெ-சசி பிரிவிற்கும் தற்போதைய பிரிவிற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, முன்பு ஜெ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு சசி வகையறாக்களின் சொத்துக்குவிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள் என்ற காரணம் முன்வைக்கப்பட ஜெவும் வேண்டா வெறுப்பாக சசியை பிரிந்ததாக அறிவித்தார், ஒரு சில நாட்களிலேயே ஒன்று சேர்ந்தார்கள், மறுபடியும் ஜெ இரண்டாம் முறையாக முதல்வராக இருந்த போது சசி கூடவே தான் இருந்தார், அதன் பிறகு ஜெ தோற்கடிக்கப்பட்டதற்கு சசியை யாரும் காரணம் காட்டவில்லை, பிறகு ஜெ மூன்றாம் முறையாக முதல்வரான போதும் சசியின் செல்வாக்கினால் வென்றார் என்று யாரும் நினைக்கவில்லை. எனவே ஜெ-வின் வெற்றித் தோல்விக்கு சசியை முன்னிலைப்படுத்த ஒன்றுமே இல்லை.



ஆனாலும் அதிமுகவின் வாக்கு வங்கி உறுதியாக இருக்க சசியின் முக்குலத்தோர் ஆதரவு இருந்தது வெளிப்படையான உண்மை. அதிமுக கட்சி முக்குலத்தோர் கட்சி என்று தான் அண்மையில் பரமகுடி சம்பவங்களை ஒப்பிட்டுக் கூடப் பேசப்பட்டது, சசி ஜெவுடன் நட்பாக இருந்தது அதிமுகவின் பலத்திற்கு நன்மையாக இருந்ததே அன்றி ஆட்சிக்கு நன்மை / தீமை செய்வதாக இருந்தது என்று சொல்ல ஒன்றும் இல்லை. ஜெ-சசி உறவு உடைந்ததால் அதிமுகவிற்கு நன்மை போலும், ஜெ இனி தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்வார் என்று எழுதுகிறார்கள். ஜெவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சசிதான் காரணம் என்றாலும் கூட அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகிறது, இடைப்பட்ட காலத்தில் சசிதான் இதற்கெல்லாம் காரணம் என்று ஜெ உணர இதுவரை வாய்க்காத வேளைகள் இப்போது தான் கிடைத்தது போல் நினைக்கிறார்கள். ஜெவின் நட்பால் சசி வகையறா பெருத்த லாபம் ஈட்டி இருந்தாலும் ஜெ-வின் அரசியல் எதிரிகளால் ஜெ-விற்கு தனிப்பட்ட ஆபத்துகள் ஏற்படா வண்ணம் தன் உறவுக்காரர்களால் அரண் அமைத்துப் பார்த்துக் கொண்டவர் சசி.

சசியை வெளியேற்றதால் ஜெ-வுக்கு கிடைத்திருக்கும் மபெரும் ஆதரவு திமுக கூடாரத்தை மிகவும் அதிர்ச்சியிலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று நினைக்க முடிகிறது

நடப்பதைப் பார்க்கும் போது ஜெ-சசி பிரிவுகள் பழைய நிகழ்வுகளின் தொடர்ச்சி என்று நினைக்க முடியவில்லை, ஜெ-வுக்கு பிறகான அரசியல் என்ற நிலையில் சசி தன் உறவுக்காரர்களை உள்ளே நுழைத்து செயல்பட அவை ஜெ-வை எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஜெ -வைப் போல் வாரிசுகள் அற்ற சசி தன்னைச் சார்ந்தவர்கள் நன்மை அடையட்டம் என்று நினைத்திருக்கிறார் அன்றி மீண்டும் சொத்துக் குவிப்புகளில் ஆர்வம் காட்டியதாக நினைக்க முடியவில்லை.

இவை ஜெ-சசி இருவருக்குமான தனிப்பட்ட கசப்புணர்வுகளின் வெளிப்பாடே அன்றி சசி இல்லாவிட்டால் அம்மா நல்லாட்சித்தருவார் போன்ற பிம்பங்களை பார்பன ஊடகங்கள் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது, ஒருவேளை சசிதான் காரணம் என்றால் ஜெவினால் மேலும் இருமுறை தமிழக முதல்வராக வரும் வாய்ப்பே இருந்திருக்காது.

ஜெ-சசி நட்பு கெட்டுப் போனதால் முக்குலத்தோருக்கும் அதிமுகவிற்கும் இழப்பே அன்றி மற்றவர்களுக்கும், ஆட்சிக்கும் நன்மை என்று சொல்ல ஒன்றும் இல்லை, சசியின் இடத்தைப் பிடிக்க சோ உள்ளிட்ட பார்பனர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன, போயாஸ் தோட்டத்தின் பொறுப்புகளை சோ வின் மகன் ஏற்றுக் கொண்டுள்ளாராம், சனிப் பெயர்ச்சியை சசியுடன் தொடர்ப்பு படுத்தி எஸ்வி சேகர் கிண்டல் அடித்ததை நினைவு கூறுங்கள். சசியினால் தமிழகத்திற்கு கெடுதல் இருந்ததா இல்லையா என்பதைவிட ஜெ-வுக்கு கிடைக்கும் பார்பன ஆலோசனைகள் மிகவும் ஆபத்தானது. முன்பு போல் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளிலும் பிற்படத்தப்பட்டோர் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும் ஜெ பார்பனர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது.

பொருளியல் ரீதியாக சசி வகையறா தமிழகத்தைச் சுரண்டின என்பது உண்மை என்றாலும் நிலம் சார்ந்த அரசியல், கருத்தியல் ரீதியான ஜெ-வின் நடவடிக்கைகளில் அவர்கள் குறுக்கே வரவில்லை என்றே நினைக்கிறேன்.

ஜெ-வின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிந்த சசியை ஜெ - கழட்டிவிட முடிவெடுக்கும் முன் ஜெவுக்கு அதை எதிர்கொள்ளும் பெரிய ஆதரவுக்கரங்கள் கிடைத்திருக்கக் கூடும் அப்படி எதுவும் இல்லை என்றால் இவை வெறும் நாடகமே.

நாடகமும் இல்லை என்றால் 'கள்ளர்கள் இடத்தில் குள்ளர்கள்' (அதாவது வாமன அவதாரங்கள்) டோண்டு சாருக்கு பிடித்தபடி சொல்லவேண்டுமென்றால் 'தேவரியம் இருந்த இடத்தில் பார்பனியம்'

8 கருத்துகள்:

Sankar Gurusamy சொன்னது…

இது ஒரு நாடகம்... விரைவில் உச்சக்கட்ட காட்சி வரலாம்... கண்கள் பனிக்க, இதயம் இனிக்க இணைப்பு விழா நடக்கும் வாய்ப்பு மிக அதிகம்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ALMIGHTY சொன்னது…

பார்ப்பனீயம் எங்கே வந்தது ஐயா ?

suvanappiriyan சொன்னது…

அருமையான அலசல். இடுகையின் அனைத்து கருத்தகளிலும் உடன்படுகிறேன். இனி பிராமணர்களின் கை தமிழகத்தில் ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Barari சொன்னது…

நேர்மையான அலசல்.தி.மு க வுக்கு இதனால் எந்த பதிப்பும் இல்லை மாறாக லாபம் தான் என்று எண்ணுகிறேன்.

நிவாஸ் சொன்னது…

//அருமையான அலசல். இடுகையின் அனைத்து கருத்தகளிலும் உடன்படுகிறேன். இனி பிராமணர்களின் கை தமிழகத்தில் ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.//

உண்மை

Karuthu Kandasamy சொன்னது…

அதெல்லாம் ஒன்னுமில்லை.... ஜெயலலிதா - சிம்ம ராசி, (ஏழரை சனி முடிகிறது), சசிகலா - மீன ராசி ( அஷ்டம சனி துவங்குகிறது ), ஜோதிட பலன் படி இருவரும் ஒரே வீட்டில் இருப்பது இருவருக்கும் நன்மையில்லை... அவ்வளவுதான். ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை நாம் அனைவரும் அறிந்ததே!

துரைடேனியல் சொன்னது…

Arumai.
TM 3.

எம்.கே.குமார் சொன்னது…

நேர்மையான அலசல்..

வாழ்த்துகள்.

எம்.கே.குமார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்