பின்பற்றுபவர்கள்

31 மே, 2011

உலகின் மிக விரைவான ரயில் பயணம் !

எந்த ஒரு வளரும் நாட்டின் முதன்மையான வளர்ச்சிக்கு அதன் சுற்றுலாத் துறை மேம்படுவது மிகத் தேவை. சீனர்கள் முந்துகிறார்கள், சீனா முந்துகிறது, இந்தியா சீனாவை எட்டிப் பிடிக்க 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகலாம். இதில் பொறுமை, பொறாமை என்பதையெல்லாம் மீறி சமூக நலன்களும் இருக்கின்றது, 1000 கிராமங்களை அழித்துவிட்டு அங்கு ஒரு தொழில் நகரை உருவாக்க நினைத்தால் அதை சீனாவால், சீனாவில் செய்யமுடியும். சீனாவின் நகர வளர்ச்சிகள் அப்படியானது தான். அந்த வகையான விரைவான வளர்ச்சிகள் இந்தியாவிற்கு தேவை இல்லை, ஏனெனில் தொலைந்த கிராமங்களும், அதன் அமைதி சூழலான வாழ்க்கை முறையும் மீண்டும் உருவாக்கப்படுவதில்லை. சீனாவின் தற்போதைய கணக்கெடுக்கின் படி கிராமப்புறங்களில் சுமார் 5 1/2 கோடி குழந்தைகள் (நாட்டு மக்கள் தொகையில் 5 விழுக்காடு) பெற்றோர்கள் நகரை நோக்கி வேலை தேடி சென்றதால் கைவிடப்பட்டு அல்லது உறவினர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள், நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பல இடர்களை தோற்றுவிக்கும் வீக்கமாகும் இவை என்பது மனித உரிமை அமைப்பினரின் கருத்து ஆகும்.

*******

சென்ற முறை அலுவல் தொடர்பில் சீனா சென்ற போது தட்டிச் சென்ற அதிவிரைவு தொடர்வண்டி பயண ஆசை இந்த முறை (27 மே 2011) நிறைவேறியது, ஷாங்காய் புத்தொங் விமான நிலையத்திலிருந்து சுற்றுலாவாசிகளை கவருவதற்காகவே மெக்லெவ் எனப்படும் உலகின் அதிவிரைவு மின்காந்த புல்லெட் தொடர்வண்டியை இயக்கி வருகிறார்கள். நேர அட்டவணைப்படி மணிக்கு 431 கிமி விரைவு மற்றும் 301 கிமி விரைவு என இரு வேறுபட்ட விரைவுகளில் ரயில் பயணம் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றனர். அந்த அட்டவணைப்படி காலை வேலைகளிலும், மாலை வேலைகளிலும் மணிக்கு 431 கிமி விரைவிலும், நண்பகலுக்கு சற்று முன்னும் பின்னும் 301 கிமி விரைவிலும் பயணிக்க முடியும். நான் சென்ற நேரம் நன்பகல் நெருங்கி இருக்க, எனக்கு 301 கிமி விரைவில் பயணம் செய்ய மட்டும் தான் வாய்ப்புக் கிடைத்தது.


மெக்லெவ் எனப்படும் அந்த ரயில் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து ஷாங்காய் நகரின் மையப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லோங்யாங் சாலை வரை சுமார் 40 கிமி வரை சென்று திரும்புகிறது. போக வர ரயில் கட்டணம் (80 யுவான், சிங்கை வெள்ளிக்கு 15.38, இந்திய ரூ 538), மறு பகுதியை அடைய சுமார் 8 நிமிடங்கள் தான். இருக்கை வசதிகள் மிகவும் நேர்தியாக வசதியாக இருந்தன, விஐபிகளுக்கு தனிப்பகுதி பெட்டியும் மேலும் சிறப்பான இருக்கைகளும் வைத்திருக்கிறார்கள், கொஞ்சம் கூடுதல் கட்டணம் அவ்வளவு தான். நான் பொதுப் பெட்டியிலேயே பயணித்தேன். நேரம் மற்றும் ரயிலின் வேகம் காட்டுவதற்கு பெட்டியினுள் இருபுறமும் மின்னனு காட்சி (டிஸ்ப்ளே) உள்ளது.

குறித்த நேரத்தில் புறப்படும் ரயில் 20 வினாடிக்குள் உச்ச வேகத்தை எட்டிவிடுகிறது. அந்த வேகத்தில் உள்ளே அமர்ந்திருக்கும் போது உடல் எடை குறைந்து போன்றும் பறப்பது போன்றும் உணர்வுகள் வருகின்றன, கண்ணாடி வழியாகப் பார்க்க இரயிலின் வேகம் உணரப்படும், கிட்டதட்ட ஓடுதளத்தில் விமானம் மேலெழும்ப விரைவாக ஓடும் போது (ஓடு தள விமான வேகம் மணிக்கு 200 - 250 கிமி) உள்ளுக்குள் இருக்கும் நமக்கு இருக்கும் உணர்வுகள் போன்றது தான்.
வளைவுகளில் சற்று 15 டிகிரி வரை சாய்ந்தே செல்கிறது, அதன் படியே தளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது, மைய விலக்கு விசைக் காரணமாக அந்த வேகத்தில் வளைவுகளில் நேராகச் செல்ல முடியாது என்பதால் அவ்வாறு அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 5 நிமிடங்கள் 301 கிமி விரைவில் சென்றதும், வேகம் குறைத்து அடுத்த நிலையத்தில் நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நகரின் மையப்பகுதிக்கு வேறு வாகனங்களில் 5 நிமிடத்தில் செல்ல முடியும். நானும் அலுவலக நண்பரும் புறப்படும் விமானத்திற்கு திரும்ப வேண்டி இருந்ததால், அங்கே லோங்யாங் சாலை நிலையத்தில் இறங்கி சிறிது நேரம் சுற்றிவிட்டு அடுத்து புறப்படும் ரயிலில் திரும்பினோம், திரும்பும் போது எதிரே மற்றொரு ரயில் கடக்கும் போது லேசாக அதிர்ந்தது, எதிர் வண்டி மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருந்தது. 301 கிமி விரைவிலும் பெரிதாக சத்தங்கள் இல்லை, வண்டி விரைவு தாலாட்டுவது போன்றிருந்தது, அடுத்தும் அதே நேரம் சுமார் எட்டு நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்தது.











வண்டிக்குச் செல்ல பயணச் சீட்டு வாங்கியதும், உள்ளே செல்லும் முன் கைப்பைகளையும், உடைமைகளையும் எக்ஸ்ரே சோதனை செய்தே அனுப்புகிறார்கள்.
தொழில் நுட்பத்தின் படி அந்த விரைவில் தடம் புறளும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் பாதையாக இல்லாமல் தட்டையான பாதையாக உள்ளது. வேகம் எடுக்கும் போது மிதந்து தான் செல்லும் என்றே நினைக்கிறேன், ஏனெனில் உராய்வு சத்தங்கள் எதுவும் பயணம் செய்யும் போது கேட்கவே இல்லை.










ஷாங்காய் வழியாகவோ அல்லது ஷாங்காய் நகருக்கோ செல்பவர்கள் மோக்னெட்டிக் ரயில் பயண வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொண்டால் நல்லதொரு பயணத் துய்ப்புக் கிடைப்பது திண்ணம். இதற்கு முன் ஐரோப்பாவின் ஈரோ ஸ்டார் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறேன், ஆனால் அதன் வேகம் 200 கிமி தான். உலகின் பிற பகுதிகளிலும் மின்காந்த இரயில்கள் இருந்தாலும் ஷாங்காய் ரயிலின் வேகத்தில் அவை பயணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் மெக்லெவ் பற்றிய ஆங்கில விக்கிக் குறிப்பு இங்கே.


இதெல்லாம் எப்போது இந்தியாவிலும் நடக்கும் என்ற ஏக்கமா ? மேலே முதற்பத்தியை திரும்ப படிக்கவும்.

13 கருத்துகள்:

Prasad Raj சொன்னது…

அருமையான பதிவு. நன்றி கண்ணா!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லாதாங்க இருக்கு...

இதுல ஒருமுறை போனா நல்லாத்தான் இருக்கும்...

Indy சொன்னது…

கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் சுமாராக எழுதுங்க அண்ணே.

கோவி.கண்ணன் சொன்னது…

// Indy said...
கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் சுமாராக எழுதுங்க அண்ணே.//

புரியல :(

Kite சொன்னது…

இவ்வளவு வேகம் உடலை ஏதாவது பாதிக்கிறதா (வயிற்றைக் கலக்குவது, இரத்த அழுத்தம் உயர்வது போல)? விமானத்தில் வேகம் அதிகமிருந்தாலும் அதன் பரப்பு மற்றும் என்ஜின் திறன் ஆகியவை காரணமாக நாம் இப்பிரச்சினைகளை உணர்வதில்லை. இதில் எப்படி?

கோவி.கண்ணன் சொன்னது…

//Jagannath said...
இவ்வளவு வேகம் உடலை ஏதாவது பாதிக்கிறதா (வயிற்றைக் கலக்குவது, இரத்த அழுத்தம் உயர்வது போல)? விமானத்தில் வேகம் அதிகமிருந்தாலும் அதன் பரப்பு மற்றும் என்ஜின் திறன் ஆகியவை காரணமாக நாம் இப்பிரச்சினைகளை உணர்வதில்லை. இதில் எப்படி?//

முழுக்க முழுக்க அடைக்கப்பட்டுள்ளது வெளிக்காற்று உள்ளே வர வாய்ப்பில்லை, எனவே விமானப் பயணம் போன்று தான் இருக்கும், வயிற்றைப் பிரட்டாது

Unknown சொன்னது…

சம்பந்தி இந்த போட்டோவை எல்லாம் பேஸ் புக்ல போடலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
சம்பந்தி இந்த போட்டோவை எல்லாம் பேஸ் புக்ல போடலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க?//

ஓகே !
:)

Thangaraju Ramasamy சொன்னது…

//சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்//

இது ஷாங்காயில் இருந்து அல்லவா வெளிவந்துள்ளது.. :)

Kite சொன்னது…

1000 கிராமங்களை அழித்துவிட்டு அங்கு ஒரு தொழில் நகரை உருவாக்க நினைத்தால் அதை சீனாவால், சீனாவில் செய்யமுடியும். சீனாவின் நகர வளர்ச்சிகள் அப்படியானது தான். அந்த வகையான விரைவான வளர்ச்சிகள் இந்தியாவிற்கு தேவை இல்லை, ஏனெனில் தொலைந்த கிராமங்களும், அதன் அமைதி சூழலான வாழ்க்கை முறையும் மீண்டும் உருவாக்கப்படுவதில்லை. //

சீன அரசு பொதுமக்களிடமிருந்து நிலங்கள், வீடுகளை எப்படி வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறது என்பது பற்றி பல்லவி ஐயர் எழுதிய சீனப் பயண நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. இந்நூலை கிழக்குப் பதிப்பகம் சீனா விலகும் திரை என்ற பெயரில் சிறப்பான முறையில் மொழிபெயர்த்து வெளியிட்டது. அந்நூலில் ஒரு முக்கிய வாசகம்:

நான் ஏழையாக இருந்தால் மட்டுமே சீனனாகப் பிறக்க விரும்புகிறேன். குறைந்தபட்சம் நடுத்தரக் குடும்பமாக இருந்தால் கூட இந்தியாதான் என் தேர்வு.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ரயில் மேலே சாய்ஞ்சு நிக்கற போஸ் சூப்பர்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

interesting post.

Jackiesekar சொன்னது…

ரொம்ப அற்புதமான பயணகட்டுரை...போட்டோக்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றது.. ரயிலின் உள் கட்டமைப்பு அழகு.... நன்றி கோவி பகிர்தலுக்கு....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்