பின்பற்றுபவர்கள்

7 மே, 2011

திமுகவின் அருவெறுப்பான முகம் !

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன் கதை தான் நினைவுக்கு வந்தது, ஒருவேளை கற்பனைக் கதை என்றாலும் கூட ஒரு விலங்கிற்கு வேண்டுமென்று அநீதி அளித்தது கூட தண்டனைக்குரியதே என்கிற தகவலுடன் அரசன் உறவுகள் பார்க்காது நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற நீதிக்கதை, இன்றளவும் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது.

*****

ராசா தலித் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஒதுக்கீடை வைத்து ஊழல் கதை எழுதி ஊதிப் பெருக்கிவிட்டன, ராசா குற்றமற்றவர் என்று தெரிவித்துவந்ததுடன், வீரமணி உள்ளிட்ட தனது நலவிரும்பிகள் மூலம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகத்திற்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி.

மகளுக்கு சிபிஐ சம்மன் என்றதும் பிரபல 'கிரிமினல்' வழக்கறிஞர் பார்பனர் ராம்ஜெத்மலானியின் கையைப் பிடித்து கொஞ்ச......ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா தான் முழுப் பொறுப்பு கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும் என்று மலானி நீதிமன்றத்தில் தெர்விக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றத் தலையீட்டால் வேறு வழியின்றி காங்கிரஸ் - திமுகவினால் பலியிடப்படும் ராசா இன்றும் அதே தலித்துதான். ஜெத்மலானி 'ராசா தான் முழுப் பொறுப்பு' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக திமுகவினரிடமோ, கருணாநிதியிடமோ சொல்லி இருக்கமாட்டார் என்று நம்புவதற்கு இல்லை. ராசா பகிரசங்கமாகவே காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்.இவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ? அழகிரியும் - மாறன் சகோதர்களும் மீண்டும் இணைந்த போது முன்பு தினகரன் அலுவலகத்தில் கொல்லப்பட்ட மூவரை முற்றிலுமாக மறந்து இனித்த இதயமும் பனித்த கண்களும் தானே இவர்களது. மனைவியைக் காப்பாற்ற தொலைகாட்சி இயக்குனர் சரத்குமார், மகளைக் காப்பாற்ற ராசா பொறுப்பேற்கிறார்கள்,

திமுகவை திராவிடக் கட்சி என்றும், திமுகத் தலைவரை தமிழினத் தலைவர் என்றும் ஒருகாலத்தில் நான் கொண்டாடியதை நினைத்தால் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. பாவம் ராசா !

16 கருத்துகள்:

D.R.Ashok சொன்னது…

லட்சகணக்கில் இனமக்களை கொன்று குவித்தபோதே கண்டுக்கல, ஒரு தலித்(இந்த பதம் எனக்கு பிடிப்பதில்லை) உயிரா முக்கியம்... இதுவரை திமுக வின் வழியாக இருந்ததற்கு நானும் வெட்க படுகிறேன் :(

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//திமுகவை திராவிடக் கட்சி என்றும், திமுகத் தலைவரை தமிழினத் தலைவர் என்றும் ஒருகாலத்தில் நான் கொண்டாடியதை நினைத்தால் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. பாவம் ராசா ! //


நல்ல வேலை, நான் ஒருபோதும் இவ்வாறு கொண்டாடியதில்லை.தமிழர்களின் இன துரோகி வேறு எவருமில்ல. சோனியா, மண் மோகன்,மலையாளிகள் ஏன் ராஜ பக்சே கூட இல்லை. அது இந்த கருணாக நிதிதான். வெட்கப்டுவோம்.

வந்தியத்தேவன் சொன்னது…

ஆனாலும் இப்பவும் திமுகவுக்கும் கருணாநிதி என்ற நயவஞ்சகனுக்கும் பல்லக்குத் தூக்கும் பலர் இருக்கின்றார்கள். கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் வரை தமிழனுக்கு எழுச்சியில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

பின்னூட்டம் நாளைக்குப் போடவா?

புகல் சொன்னது…

என்னமோ கலைஞர்தான் ராசாவை கையும் களவுமாய் பிடித்துகொடுத்ததுபோல் பேசுகிறிர்கள், ராசா சிறையில் இருப்பது கலைஞருக்கு கண்டிப்பாக வருத்தம் இருக்கும், அதற்காக தன் மகளையும் சிறைக்கு அனுப்பிதான் மெய்ப்பிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. என்னை கலைஞரின் ஆதரவாளன் என்று எண்ண வேண்டாம். குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும், இன்னொரு சந்தேகம் தமிழ் மக்களின் வரிபணங்களை தமிழர்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசுக்கு விரயம் செய்கிறதே இந்த ஈன இந்திய அரசு இதற்கு யார் தண்டனை வழங்குவார்கள், தமிழர்களின் வரிபணம் எல்லாம் இந்தி மொழி வளர்ச்சிக்கு செலவிடபடுகிறதே எவ்வளவு பெரிய அயோக்கியதனம், தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொத்து கொத்துகாக கொல்லபட்டபோதும் அதை சிறிதும் சட்டை செய்யாமல் இருக்கும் இந்திய அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், இந்தியா என் தாய் நாடு என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, நடுவன அரசியல்வாதிகள் செய்யும் தவறால் இந்தியாவை குறைசொல்வது எப்படி முறையாகும் என சில பேர் சொம்பு பிடிக்கலாம், இந்தியா என்பது ஆணோ பெண்ணோ அல்ல அதுபல இனங்களால் ஆனது அது வடநாட்டவர்களின் இனத்தையும், மொழியையும் மட்டுமே பாதுகாக்க உதவும் என்றால் இந்தியா என்ற கூட்டாட்சியை திருத்தி எழுதுவோம் இல்லை என்றால் கூட்டாட்சியில் இருந்து விலகுவதே மேல்.
இலங்கை தமிழர்களின் எதிரி,
ஈன இந்தியா தமிழர்களின் துரோகி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அண்ணே இதைவிட அருவெறுப்பான விசயங்கள் நிறைய இருக்கு.,.

துளசி கோபால் சொன்னது…

ஒரு + போட்டாச்சு.

பெயரில்லா சொன்னது…

ராசா குற்றவாளி என்கின்றார்கள் திமுகவினர், ராசாவும் குற்றவாளி என்கின்றனர் எதிர்கட்சியினர். ராசா மட்டும் தானா குற்றவாளி எனக் கேட்கின்றோம் நாம்... ராசா அடித்த லாபத்தில் மன்மோகன் சிங்க , சோனியா, ராகுல் காந்தி, முக, கனிமொழி கலைஞர் வீட்டு நாய்க் குட்டிக்கும் பங்குண்டு என்பதை முட்டாள் கூட சொல்லிவிடுவான். டி.ஆர். பாலு என்பவர் கடலில் சேதுமூத்திரம் தோண்டியதில் அடித்த லாபம் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. கடைசியில் திட்டமும் இல்லை, திட்டத்துக்கு போட்ட பணமும் இல்லை, அவரைத் திட்டவும் ஆள் இல்லை ........

ரிஷி சொன்னது…

//ஒரு விலங்கிற்கு வேண்டுமென்று அநீதி அளித்தது கூட தண்டனைக்குரியதே என்கிற தகவலுடன் //

"ஒரு விலங்கிற்கு தன்னையறியாமல் அநீதி அளித்தது கூட.." என்று இருக்க வேண்டுமோ??

சாமக்கோடங்கி சொன்னது…

சீக்கிரம் தீர்ப்ப சொல்லுங்கப்பா...

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

இவனுங்க திராவிடம் பிராமணியம் தலித் சிறுபான்மை தமிழ் நாத்திகம் என்று எதை எப்போது பேசினாலும் அதன் அடி நாதமாக ஒரு சுய நலம் ஒளிந்திருக்கும் என்பதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

ஜோதிஜி சொன்னது…

இதைவிட அருவெறுப்பான விசயங்கள் நிறைய இருக்கு

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அருவெறுப்பாக இருக்கிறது

arunmullai சொன்னது…

பாம்புதான் செத்துப்போச்சே அதை
ஏன்பா திரும்பத்திரும்ப அடிச்சிட்டு
இருக்கிங்க?

bandhu சொன்னது…

இதில் அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை. எல்லா கட்சியிலும் இதே நிலைமை தான்! தி மு க மற்றவற்றை விட வித்யாசம் என்று நினைத்தால் தான் இது அதிர்ச்சி. ஆனால், நீங்கள் தி மு க வித்யாசமான கட்சி என்று நினைத்திருந்தால் அது எனக்கு அதிர்ச்சி!

ரம்மி சொன்னது…

70களில், கர்நாடகத்தில் காவிரி உபநதிகளில் எழும்பியிருக்கும், பல புதிய அணைகள் போதுமே , திரா.முன்.கழகத்தின் புகழ்பாட! அந்த துரோக வரலாறு தெரியாமல், பின் படர்ந்தோர் இனியேனும் வெட்கப்படட்டும்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்