po
*****
மேலே எண்ணைத் தொட்டி என்று நான் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை, மு.மு.மு.கருணாநிதி (முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி) அவர்களால் கட்டவுட்டாகவும், கட்டி முடிக்கப்பட்டதாகவும் சுமார் 1000 கோடி செலவில் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் தான் அது. அது ஏன் எண்ணைத் தொட்டி ?
பண்டைய காலம் தொட்டே தமிழர்களுக்கு என்றே தனிப்பட்ட கட்டிடக் கலையின் வரலாறுகள் உண்டு, மாளிகைகள் காலத்தால் அழிந்துவிட்டாலும், என்றும் அழியாக்காட்சியாக நிற்கும் கல்லணை, மற்றும் கோவில் கோபுரங்கள் எண்ணற்றவை, பவுத்த, சமண விகாரங்கள் அதன் பிறகு எழுந்த சைவ வைணவக் கோவில்கள் அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் தமிழகக் கட்டிடக் கலையின் காட்சிகள். பாறைகளை சிற்பமாக வடித்து காட்சிக் கூடங்களாக ஆக்கி அமைத்த மாமல்லபுரச் சிற்பக் கலைக் கோவில்கள், பல்வேறு கோட்டைகள் என தமிழகமெங்கும் தமிழகக் கட்டிடக் கலையின் வரலாறுகள் நினைவுச் சின்னங்களாக இருக்க, இவற்றில் ஒன்றைக் கூட நினைவு படுத்தாத மாபெரும் கச்சா எண்ணைத் தொட்டி போன்ற ஒரு கட்டிடத்தை 1000 கோடி செலவில் கட்டத் துவங்கி, திறப்பு நாளுக்குள் முடிவுக்கு வராமல் போக கட் அவுட் வைத்து திறந்து காட்டி, பின்னர் மீண்டும் முறைப்படி திறந்தார் கருணாநிதி.
தமிழக மன்னர்களைப் பற்றிய காவியங்கள் எழுதிக் குவித்த கருணாநிதி, தமிழகத்தின் முதற்சின்னமாக தொலைகாட்சிகளின் அடிக்கடிக்கடிக் காட்ட வேண்டிய தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பில் சிறுதும் கவனம் செலுத்தாமல் போனதுடன், அதைத் திறக்க விரைவு காட்டியதைத் தவிர்த்து வேறெந்த அக்கரையும் இருந்திருக்கவில்லை.
பெங்களூரின் தோற்றப் பெருமையே அதில் அமைந்திருக்கும் 'விதான் சவுதா' எனப்படும் தலைமைச் செயலகத்தின் தோற்றப் பொலிவுதான், உண்மையாகச் சொல்லுங்கள் கருணாநிதி கட்டிய எண்ணைத் தொட்டி அப்படியான ஒரு தோற்றப் பொலிவை சென்னைக்குத் தந்திருக்கிறதா ?
1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி அமர்ந்திருக்கும் புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியின் அவலாமாகவும் நினைவுச் சின்னமுமாக இருப்பதைத் தவிர்த்து வேறொன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதா ? முடியும், உள்ளமைப்புக் கட்டுமானத்தில் மாறுதல் செய்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம்.
கருணாநிதி இந்த எண்ணைத் தொட்டியைக் கட்டும் முன் எதிர்கட்சிகளை கலந்தாலோசிக்கவில்லை என்பதே எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டு, அதனைச் சாக்கிட்டே ஜெவும் புறக்கணித்துள்ளார், மற்றபடி ஜெவின் ஈகோ அதாவது கருணாநிதி கட்டியதில் தான் அமரவிரும்பவில்லை என்பதும் அடங்கும்.
1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி இருக்கும் தலைமைச் செயலகம் பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காத நக்கீரன், பழைய தலைமைச் செயலகம் புதுப்பிக்கப்படுவதற்கு 50 கோடி செலவாகி வருவதாகக் கட்டுரை எழுதியுள்ளது. 1000த் தில் 50 கோடி என்பது 5 விழுக்காடு தானே. 1000 கோடி புதிய தலைமைச் செயலகம் ஈராண்டுக்கு மட்டுமே செயல்பட்டது, அடுத்து 5 ஆண்டுக்கு செயல்படும் பழைய தலைமைச் செயலகத்தில் 50 கோடி செலவு என்பது ஒப்பிடுகையில் பெரிய நட்டமில்லை :)
நான் ஜெவின் செயலை ஞாயப்படுத்தவில்லை, 'நான் தான் திறந்தேன்' வராலாற்றை எழுதிக் கொள்பவர்களின் தான் தோன்றித்தனத்தையும் வரலாறுகள் தானாகவே எழுதிக் கொள்கின்றன என்பதைக் குறிக்கவே இதனை எழுதியுள்ளேன், மற்றபடி கருணாநிதியின் நினைவு தடங்களை ஜெ அழிப்பதும், ஜெவின் நினைவுத்தடங்களை கருணாநிதி அழிப்பதும் ஆட்சி மாற்றத்தின் போது நடப்பவைதான், பாவம் தமிழக பேருந்து ஊழியர்கள், எத்தனை பேருந்துகளின் 'நாம் என்றால் உதடு ஒட்டும், நான் என்றால் உதடு ஒட்டாது' என்கிற கருணாநிதியின் பொன்மொழியை இரவோடு இரவாக அழிக்க கடினமாக உழைத்தார்களோ !
*******
39 கருத்துகள்:
This is not just an oil tank, but mandatory crude oil tank. (கட்டாயக் கச்சா எண்ணெய்த் தொட்டி). -சிமுலேஷன்
கருணாநிதி மக்களின் வரிப்பணத்தை இப்படியும் வீணடித்துள்ளார். அது மட்டுமின்றி, ஓமந்தூரர் மாளிகையில் இருந்த பல்லாண்டுகாலமாக வளர்ந்து நின்ற மரங்களை வெட்டித் தள்ளினார்கள். அது போல நெருக்கடி மிகுந்த சென்னைக்கு சற்றே வெளியே அழகிய, தமிழர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சின்னமாக தலைமைச் செயலகத்தைக் கட்டித் திறந்திருக்கலாம்.
கேளம்பாக்கத்தில் கட்டுவதாக அதிமுக ஆட்சியில் ஒரு திட்டம் வந்தது, ஆனால் கோபால புரத்துக்கு அருகே இருக்கவேண்டும் என்பதால் ஒமந்தூரர் மாளிகையில் கட்டிய எண்ணெய்க் குதம் இனி எதற்குப் பயன்படப் போகின்றதோ.... தெரியவில்லை.
//எண்ணெய்க் குதம் //
சொற்பிழை என்றே எண்ணுகிறேன் ;)
ஜெவின் அடிப்படை குணம் என்றும் மாறாது.. ஓரளவு திருந்துவார் என எதிர்பார்க்கலாம்..
அடுத்த இலக்கு தமிழ் புத்தாண்டு?!
//ரம்மி said...
அடுத்த இலக்கு தமிழ் புத்தாண்டு?!//
புத்தாண்டு மாற்றத்தில் யார் குடியும் முழுகவில்லை, மேலும் செம்மொழிக் கோரிக்கைப் போன்றே புத்தாண்டு மாற்றம் 80 ஆண்டுகளுக்கு மெலாக தனித்தமிழர்களால் கேட்கப்பட்ட ஒன்று. ஜெ இதுவரை புத்தாண்டு மாற்றம் பற்றி வாய்த்திறக்கவில்லை, எனவே உங்க ஆசை நிராசையாகும் என்றே நினைக்கிறேன் :)
பெங்களூரு விதான் சபா ஒரு பொறியியல் நிபுணரின் கற்பனையில் பிறந்த அழகிய பாரம்பரியம் அமைந்த கட்டிடம். உண்மையில் அந்த படத்துடன் நம்ம ஊர் எண்ணெய் தொட்டியின் படத்தை பார்க்கும் போது ஆயிரம் கோடி ரூபாயில் சென்னைக்கு ஏன் இந்த "கருமம்" என்ற எண்ணமே வருகிறது. இந்த கட்டிடம் சென்னையில் எவரையும் கவரவில்லை. ஏன் இப்படி ஒரு டிசைனை அவர் தேர்ந்தெடுத்தார் என்று எல்லோரும் கேட்கும் கேள்வி.
தமிழ்ர்களின் கட்டிடக்கலை திறமைக்கு கிடைத்த அவமானம்..பெங்களூர் சட்டமன்றத்தை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது
"எண்ணெய்த்தொட்டி" - ஹா ஹா ஹா ஹா
இது எண்ணெய் தொட்டி இல்லை. தண்ணித் தொட்டி. டாஸ்மாக் நினைவாக
@ இந்தியன் - எண்ணெய்க் குதம் என்றாலும், எண்ணெய்த் தொட்டி என்றாலும் ஒன்றே தான் oil tank என்பதன் தமிழ் வடிவம்....... சொற்பிழை எங்கிருக்குதுன்னு விளக்கினால் சுபம்
நீங்க அப்பப்போ நான் பழைய திமுக , பழைய திமுக நு சொல்றது கொஞ்சம் இடிக்குதே.. உங்க கருத்தை எல்லாம் பாக்கறப்போ எப்போவுமே நீங்க கடும் திமுக எதிர்ப்பு என்பது போல தான் தெரியுது.. :)
17 லட்சம் சதுர அடி கட்டிடத்தின் செலவு 1000 கோடி என்றால் சதுர அடிக்கு 5882 ருபாய் . சென்ற ஆண்டில் சதுர அடி 1500 ரூபாய்க்கு மிக அருமையான வீடு கட்டலாம் . இதில் 500 கோடி வரை அடித்துள்ளார்கள்.
17 லட்சம் சதுர அடி கட்டிடத்தின் செலவு 1000 கோடி என்றால் சதுர அடிக்கு 5882 ருபாய் . சென்ற ஆண்டில் சதுர அடி 1500 ரூபாய்க்கு மிக அருமையான வீடு கட்டலாம் . இதில் 500 கோடி வரை அடித்துள்ளார்கள்.
கோவி கண்ணனுக்கு இங்கிலீசு பிடிக்காது போலும். என் பின்னூட்டங்கள் இங்கே போடப்படுவதில்லை. எனவே தமிழில்.
கலையம்சம் இல்லாக்கட்டடம் என்பது உண்மைதான். ஆனால், பாரம்பரிய கலாச்சாரத்தைப் பறைசாற்றவேண்டும் என்று கட்டாயமல்ல. இன்றைய தனிமனித மற்றும் சமூக வாழ்க்கையில் பாரம்பரிய கலாச்சாரம் காணாமல் போய்விட்டது என்று நான் சொல்லத்தேவையில்லை. கருனானிதிக்கு மட்டும் அந்த அக்கறை இருக்கவேண்டுமா?
கட்டட வடிவமைப்புக்கு டெண்டர் விடப்பட்டது. வந்தவைகள் இணையதளத்தில் மக்களுக்குப் போடப்பட்டு காட்டப்பட்டன. அது ஒரு போட்டி. அவ்வரை படங்களின் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இது. வரைந்தவர் ஒரு ஜெர்மஙாரர் என நினைக்கிறேன். ஏன் எப்படி என்னன்ன சிறப்புகள் என வரைந்தவர்கள் சொல்லிக்காட்டவேண்டும் நேர்முகப்பேட்டியில். சொன்னார்கள். அதில் முதலாக வந்ததுதான் இப்படம். உண்மையா பொய்யா ?
1000 கோடிகள் செலவிடாமல் இன்று அரசு செயலகம் கட்ட முடியாது. இதில் என்ன தவறு ? கட்டடம் அழகில்லையென்பதற்கும் பணச்செலவுக்கும் என்ன் தொடர்பு?
எதைக்குறை கூறவேண்டுமால் அப்பணம் அளவுக்கு மீறியதா ? அல்லது கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறதா ?
தனித்தமிழர்கள் சொன்னார்கள். கருனானிதி தமிழ்ப்புத்தாண்டைச் சித்திரையிலிருந்து மாற்றி விட்டார். நல்லது கண்ணன் !
தனித்தமிழர்கள் ஆர் ? மறைமலையா ? கோடிக்கணக்கான தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்து வந்த ஒரு செயலை, ஒரு சில 'தனித்தமிழர்கள்' சொன்னதால் மாற்றலாமா ?
மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதா ?
அரசு கட்டடம் மக்களின் ஆதரவுடன் வரையப்பட்டதா எனக்கேட்கும் கோவி கண்ணன் இங்கே மட்டுமெ கேட்கவில்லையே ஏன்?
//கருனானிதிக்கு மட்டும் அந்த அக்கறை இருக்கவேண்டுமா?//
ஒரு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு அக்கரை தேவை இல்லை என்றும் சொல்லும் உங்கள் அறிவு சீவித்தனம் மெய் சிலிர்க்க வைக்கிறது. வேறு யாருக்கு அக்கரை இல்லாவிட்டாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை.
சாமியார்கள் சபலக்கேசு ஆனப்பிறகு என்ன செய்றது நானும் ஒரு ஆம்பளை தானே, எனக்கும் உணர்ச்சி இருக்காதான்னு கேள்விக் கேட்பது போன்றுள்ளது உங்கள் கூற்று, தயவு செய்து உளறிக் கொட்டுவதை நிறுத்துங்கள், கருணாநிதியின் அக்கரைக் குறித்த உங்கள் கருத்தை திமுகவினர் கூட ரசிக்கமாட்டார்கள்.
//தனித்தமிழர்கள் ஆர் ? மறைமலையா ? கோடிக்கணக்கான தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்து வந்த ஒரு செயலை, ஒரு சில 'தனித்தமிழர்கள்' சொன்னதால் மாற்றலாமா ?//
ஒரு சிலர் அல்லர், மறைமலையடிகளார், பரிதிமார் கலைஞர், பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் மற்றும் தனித்தமிழ் இயக்கம் நடத்திய அனைவரும் அடங்குவர். இவர்களைவிட கருணாநிதி நன்கு புலமைபெற்றவர் அல்லர் என்பது என்கருத்து, அவர்கள் பரிந்துரைக்காது தை மாதம் தான் தமிழ்புத்தாண்டு என்பதை தனிப்பட்டு ஆராய்ச்சி எதையும் செய்து கருணாநிதி கண்டுபிடிக்கவில்லை
//மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதா ?//
நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கருத்துக்கணிப்போ புண்ணாக்கோ தேவை இல்லை
\
//நீங்க அப்பப்போ நான் பழைய திமுக , பழைய திமுக நு சொல்றது கொஞ்சம் இடிக்குதே.. உங்க கருத்தை எல்லாம் பாக்கறப்போ எப்போவுமே நீங்க கடும் திமுக எதிர்ப்பு என்பது போல தான் தெரியுது.. :)//
மொதலாளி திருடனாக, கொள்ளைக்காரனாக, கொலைகாரணாக இருந்தாலும் அவன் வளர்க்கும் நன்றி உள்ள நாய் வாஞ்சையுடன் அவன் காலை நக்கிக் கொடுக்கும்.
நான் அந்தளவுக்கெல்லாம் உங்களை மாதிரி தீவிர விசுவாசி இல்லைங்கண்ணா. உங்க கண்டுபிடிப்பை மாமல்லபுறம் அருகே ஒரு கல்வெட்டில் செதுக்குங்கள்.
//மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதா ?//
நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கருத்துக்கணிப்போ புண்ணாக்கோ தேவை இல்லை
உணர்ச்சிவசப்படத்தேவையில்லை.
அந்த பத்து பேர் தமிழறிஞர்களாகவே இருக்கட்டும். அவர்கள் கணிப்பின்படி தைத்திங்களாகவே இருக்கட்டும். கோடிக்கணக்கான தமிழ்ர்களுக்கான ஒரு பண்டிகையை மாற்றிக்கொண்டாடச் சொல்ல இவர்கள் ஆர் ?
கிருத்துமஸ் டிசம்பர் 25ல் வருகிறது. போப் அதை மாற்றச்சொல்கிறார். அதை கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் அவர். மதத்தில் மாற்றம் செய்ய அவருக்கு அவர்கள் உரிமைகள் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தத் தமிழறிஞர் கூட்டத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடிவருகிற பண்டிகையின் நாளை மாற்ற உரிமை இருக்கிறதா ? தமிழ் மொழியில் மாற்றம் செய்யலாம். மக்கள் தமிழறிஞரக்ளல்ல. பேச்சுத் தமிழ் அப்படியே இருக்கும். எழுத்துத்தமிழை மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால் பண்டிகை என்பது அப்படியல்ல. கொண்டாடப்படுவது. படித்தவன் படிக்காதவன் ஊமை செவிடு பணக்காரன் ஏழை என்று வேறுபாடில்லாமல் அனைவராலும். அதை நாலுபேர் சேர்ந்து கொண்டு மாற்ற முயன்றால் மக்கள் சம்மதத்தோடு அல்லது ஒருமித்த ஆதரவுடந்தான் செய்யவேண்டும். இல்லையென்றால் அராஜகம்.
அப்படியே செய்தாலும் மக்கள் மாற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தம்வழியிலேயேதான் கொண்டாடுவர். சித்திரை முதல் நாள்தான் இன்னும் தமிழ்ப்புத்தாண்டு ? தைத்திங்கள்தான் இன்னும் பொங்கல் பண்டிகை.
Win people support. Question is: has the support got before making the change ? கருத்துக்கணிப்போ புண்ணாக்கோ தேவை இல்லை என்பது அடாவடித்தனமான பேச்சு.
தூத்துக்குடி மாவட்டத்தில் டாடா கம்பெனி ஆரம்பிக்க விரும்பியது; அரசும் நிலம் கொடுத்தது. மக்கள் எதிர்த்தார்கள். அரசு சொல்லியது டாடாவிடம் 'னீங்களே அவர்களைக் கேட்டு அவர்கள் சம்மத்துடன் எங்களுடன் வாருங்கள்' டாடா கிராமங்களில் கூட்டம் போட்டது. மக்கள் டாடா தொழிற்சாலை வேண்டாம் என்றார்கள். டாடா விட்டுவிட்டது.
இப்படி ஒரு சிறிய செயல், ஒரு மாவட்டத்தில் மட்டுமெ. அதற்கு மக்கள் கணிப்பைக் கேட்க அரசால் முடிந்தது. ஆனால் 7 கோடி தமிழரின் கலாச்சார வாழ்வை 10 தமிழறிஞர்கள் சொன்னதால் செய்தோம் என்பது என்ன புண்ணாக்கு ? எந்தக்கடையில் விற்கிறது ?
So, 1000 crore of taxpayers money lost by this two ego politicians. This is the fate of Tamil Nadu.
வணக்கம் கண்ணன் சென்ற மாதம் நான் பார்த்து நினைத்தது அப்படியே சொல்லியுள்ளீர்கள்... ஏன் அந்த கட்டிடத்தை சுதப்பியுள்ளார்கள்...உள்ளே எப்படியிருக்கும் என்று தெரியவில்லை ஆனாலும் வேளியில் பார்த்தால் ம்ம்ம்ம்ம்ம்....ப்ப்ப்ப்ச்ச்
கரி பிடிச்ச அண்டான்னு இப்பத்தான் கரிச்சுக்கொட்டுறீங்களோன்னு பார்த்தால் 6 மாதம் முன்னாடியே ஈயம் பூசலைன்னு வருத்தப்பட்டிருக்கீங்க.
எண்ணைத் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்:)
//கிருத்துமஸ் டிசம்பர் 25ல் வருகிறது. போப் அதை மாற்றச்சொல்கிறார். அதை கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் அவர். மதத்தில் மாற்றம் செய்ய அவருக்கு அவர்கள் உரிமைகள் கொடுத்திருக்கிறார்கள்.//
தமிழ் புத்தாண்டுக்கும், மதத்திற்கும் ஏன் புண்ணாக்கிற்கும் கூட ஏதுவும் தொடர்பில்லை, அது மொழியும் நிலமும் சார்ந்த ஒரு பண்டிகை, மேலும் தமிழ் புத்தாண்டு மாற்றியதற்கு எவரும் தெருவில் இறங்கிப் போராடத போது முணு முணுப்பது பொருளற்றது, தமிழ் பண்டிகையை மாற்றியதற்கு கருணாநிதி கட்சியை கடந்த பாரளுமன்ற தேர்தலில் தோற்கடித்திருக்க வேண்டியது தானே ?
தேவர் ஜெயந்தியும், அட்சய திருதியையும் யாரையாவது கேட்டா நுழைக்கப்பட்டது. போங்க சார் புள்ளைக் குட்டியை படிக்க வைங்க. நாங்க எப்பவும் உருப்படி இல்லாத அரசியலைத்தான் பேசுவோம்.
//அதற்கு மக்கள் கணிப்பைக் கேட்க அரசால் முடிந்தது. ஆனால் 7 கோடி தமிழரின் கலாச்சார வாழ்வை 10 தமிழறிஞர்கள் சொன்னதால் செய்தோம் என்பது என்ன புண்ணாக்கு ? எந்தக்கடையில் விற்கிறது ?//
நாலு பார்னர்கள் சேர்ந்து அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால் தங்கமாகக் கொட்டும் என்று கிளப்பிவிட்டதெல்லாம் மட்டும் எந்தவகை புண்ணாக்கு. அதுவும் வெள்ளைத்தங்கம் வாங்கனுமாமே ? அதுக்கு மதிப்பு உண்டா ?
@ சிம்மக்கல் - கருத்துக்கணிப்பு வைத்துத் தான் ப்ரமாண புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என நம் தலையில் திணித்தார்களா????
பொதுவாக தமிழ்நாட்டில் சைத்ர மாஷ புத்தாண்டை பலர் கொண்டாடுவது இல்லை.... !!! அது மட்டுமில்லாமல் சைத்ர மாஷ புத்தாண்டை மாற்றியதில் மக்கள் விரும்பாமல் இருந்தால் அதுக் குறித்து போராட்டங்கள் தமிழகத்தில் எழவில்லை???
ப்ராமண கலாச்சாரத்தை விரும்பும் சிலரும், ப்ராமண கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் யாழ் வேளாளர் சமூகங்களும், இன்னபிற செட்டியார் சமூகங்களுமே அவற்றை அப்படியே வைத்திருக்க விரும்பின.......... !!!
//தேவர் ஜெயந்தியும், அட்சய திருதியையும் யாரையாவது கேட்டா நுழைக்கப்பட்டது.//
திரு.கோவி!
நீங்கள் குறிப்பிட்ட இரு திருநாட்களை எந்த முதல்வர் கடைபிடிக்க உத்தரவிட்டார்!
தைத் திங்களை, புத்தாண்டு தினமாக கலைஞர் அறிவித்த பின், அரசாங்க அலுவலகங்களும், சன்/கலைஞர் தொலைக்காட்சிகளைத் தவிர யார் கடை பிடிக்கிறார்கள்? அரசு அலுவலகங்களில் முதல் வருடம் - கொண்டாட்டம் பிரமாதம்! 2ம் வருடம் - தூக்கம்! கடந்த வருடம் - வண்ண விளக்குடன் நிறுத்திக் கொண்டார்கள்!
//தைத் திங்களை, புத்தாண்டு தினமாக கலைஞர் அறிவித்த பின், அரசாங்க அலுவலகங்களும், சன்/கலைஞர் தொலைக்காட்சிகளைத் தவிர யார் கடை பிடிக்கிறார்கள்? அரசு அலுவலகங்களில் முதல் வருடம் - கொண்டாட்டம் பிரமாதம்! 2ம் வருடம் - தூக்கம்! கடந்த வருடம் - வண்ண விளக்குடன் நிறுத்திக் கொண்டார்கள்!//
சார் நாம தான் திருமண் அழைப்பிதழை 'விவாஹ சுபமுகூர்தம்'னும் காதணி விழாவை
'கர்ண பூஷணம்' னு அழைப்பிதழென்னும் பத்திரிக்கையில் அடிப்பவராச்சே கருணாநிதி மாற்றி பண்டிகைத் தேதி நம்மை பாதிக்காது, கவலைப்படாதிங்க சார், நீங்க என்னமோ கருணாநிதி சொன்னதுக்காக ஏப்ரல் 14 துறந்தது போல் பேசுவது எனக்கு வியப்பாக இருக்கு !
;)))))))))))
திரு.கோவி!
புத்தாண்டு தேதி மாற்றம், ஒரு தமாஷ் தான்!
நல்ல வேளை! செந்தமிழர்கள் அனைவரும் கட்டாயம் தமிழ் பேசாவிட்டாலும் பரவாயில்லை! வேட்டியும், துண்டும் தான் அணிய வேண்டும் என்று கலைஞர் சட்டம் போடாமல் விட்டாரே!
கோவி சார்! வேட்டி அணியும் பழக்கமுண்டா? (இதுவும் நகைச்சுவைக்கே! சண்டைக்கு வந்து விடாதீர்கள்!)
//கடந்த 5 ஆண்டுகளில் என்ன சாதனைகள் புரிந்தோம் என்பதை எடுத்துச் சொல்லிவிட்டேன். இதையெல்லாம் அனுபவிக்கும் தமிழ்நாட்டு மக்கள் காட்டப்போகும் நன்றியினை எதிர்பார்த்து நிற்கின்றேன் //
இப்படி கருணாநிதிக்கு,
குஞ்சாமணி, அவ்வாறு எதிர்பார்ப்பது சிறுமை தனம் என்கிறாரே? இப்பவே தோசையை திருப்ப ஆரம்பிச்சாச்சா?
// ரம்மி said...
திரு.கோவி!
புத்தாண்டு தேதி மாற்றம், ஒரு தமாஷ் தான்!
நல்ல வேளை! செந்தமிழர்கள் அனைவரும் கட்டாயம் தமிழ் பேசாவிட்டாலும் பரவாயில்லை! வேட்டியும், துண்டும் தான் அணிய வேண்டும் என்று கலைஞர் சட்டம் போடாமல் விட்டாரே!
கோவி சார்! வேட்டி அணியும் பழக்கமுண்டா? (இதுவும் நகைச்சுவைக்கே! சண்டைக்கு வந்து விடாதீர்கள்!//
பஞ்சகச்சமும் உச்சிக் குடுமியும் வைக்கச் சொல்லி சட்டம் போடாத வரை ஓகே தான், சார். எனக்கு வேட்டி அணியத் தெரியும்.
பொழிவு = பொலிவு
//Sundar Raj said...
பொழிவு = பொலிவு//
திருத்தம் செய்துவிட்டேன், சுட்டியமைக்கு மிக்க நன்றி
ஜெ ஆட்சியின் துவக்கமே, ஜெ தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாமல் அதன் போக்கிலேயே செல்வதாக அமைந்திருக்கிறது,//
அது எப்படிங்க மாறும்? இன்னுமொரு ஜோக்..
போன தடவை (2001ல்) சொன்ன மாதிரியே தமிழகத்தை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவேன் என்றும் கூறுகிறார். 2006ல் தேர்தலுக்கு சற்று முன்னர் NDTV சர்வேயில் நாட்டின் மிக மோசமான முதல்வர் என்று கணிக்கப்பட்டார். 2016லும் அதேதான் நடக்கும்.
//போன தடவை (2001ல்) சொன்ன மாதிரியே தமிழகத்தை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவேன் என்றும் கூறுகிறார். 2006ல் தேர்தலுக்கு சற்று முன்னர் NDTV சர்வேயில் நாட்டின் மிக மோசமான முதல்வர் என்று கணிக்கப்பட்டார். 2016லும் அதேதான் நடக்கும்.
//
கருணாநிதிக்கு 5 முறை வாய்ப்புக் கொடுத்தாச்சு, இந்தம்மா கணக்குக்கு 3 முறை தான் ஆகி இருக்கு :)
//நாலு பார்னர்கள் //
புரியவில்லை
////நாலு பார்னர்கள் //
புரியவில்லை//
இடையில் 'ப' தட்டச்சில் விழவில்லை.
:)
//ப்ராமண கலாச்சாரத்தை விரும்பும் சிலரும், ப்ராமண கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் யாழ் வேளாளர் சமூகங்களும், இன்னபிற செட்டியார் சமூகங்களுமே அவற்றை அப்படியே வைத்திருக்க விரும்பின.......... !!!//
உண்மை
முஸ்லீம்ஸ் அரேபியா கலாச்சாரத்தை தாங்கி வலம் வரும் போது
யாழ் வேளாளர் சமூகங்களும், இன்னபிற செட்டியார் சமூகங்களும்
ஆதரித்தால் என்ன தவறு
கருத்துரையிடுக