சென்ற பாராளுமன்ற தேர்தலின் பிறகான முடிவில் மக்கள் மனநிலை எப்படி என்று கணிப்பது கடினமாகவே இருந்தது, மக்கள் வாக்களிக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் என்று பின்னர் தெரியவந்தது, இப்பவும் அதே ஊடகம் தான் என்றாலும் கூட, ஆளும் கட்சி ஆளும் கட்சியாகவே இருந்து நடத்தும் இடைத்தேர்தல் போன்று தான் நடந்து முடிந்தது பாராளுமன்றத் தேர்தல், ஈழத்தமிழர் குரல் கிஞ்சித்தும் தமிழக வாக்களர்கள் காதில் விழுந்துவிடக் கூடாது என்பதில் வெற்றியும் பெற்றன ஆளும் கட்சி உறவுகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உண்மையிலேயே இலவசத் திட்டங்களுக்கும், ஒரு ரூபாய் அரிசிக்கும் அடிமையானதுடன் ஒட்டுகளை காசுக்கு விற்கும் அளவுக்கு போய்விட்டார்களோ என்று நினைக்க வைத்தது. பணம் அடிப்படைத் தேவை என்ற நிலையில் வாழ்வாதரம், பொருளாதாரப் பற்றாக் குறை உடையவர்கள் தவிர்த்து பெருவாரியான வாக்களர்கள் எதற்கும் அடிமை இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி இருப்பது, மக்கள் ஆட்சி தத்துவத்தின் மீதான நம்பிக்கை பட்டுப் போகாமல் துளிர்க்கவைத்துள்ளது.
முதல்வர் பதவி தனக்கே உரியது போன்றும், அரசியல் பொறுப்புகள் குடும்பச் சொத்து போலவும் நினைத்து, மக்கள் நலனை நினைக்காது தான்தோன்றியாக நடந்து கொண்டால் தக்கப் பாடம் புகட்டுவோம், என்று தமிழக மக்கள் ஏற்கனவே பலமுறை நிருபனம் செய்தும், அதிகார போதையில் இதை எப்போதும் உணராத அரசியல் கட்சி ஒன்று ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று முடிவு செய்வதைவிட எந்த கொள்ளியை உடனடியாக அணைத்தால் கொஞ்சமாவது தப்ப முடியும் என்று முடிவுரை எழுதியதே இந்த சட்டமன்ற தேர்தலின் தீர்ப்பு. மீதம் இருப்பதும் கொள்ளி தான் என்றாலும் தமிழக வாக்களர்களுக்கு முடிவெடுக்கக் கிடைத்த வாய்ப்பும் இவ்வளவு தான் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டார்கள், நடுநிலையாளர்களின் தேர்தல் பரப்புரையும் அவ்வாறே அமைந்தது.
வழக்கமாக ஜெயலிதாவிற்கு வாக்களிக்கவே விரும்பாத பலரும் கூட இந்த முறை ஜெயலலிதாவிற்கு வாக்களித்துள்ளனர். அந்த அளவிற்கு திமுக அரசு தான்தோன்றியாகவும், ஆளுமையாகவும் செயல்பட்டு மக்களின் வெறுப்பை பெற்றிந்தது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
* ஈகோ போரில் தினகரன் அலுவலர்கள் அப்பாவிகள் மூன்று பேரை கொன்ற பிறகு சந்தித்துக் கொண்ட குடும்ப உறுப்பினர்களை ஒன்றாகக் கண்டதும் கருணாநிதி அனுப்பிய ஊடக அறிக்கையில் ''நெஞ்சம் இனித்தது, கண்கள் பனித்தன' என்பதைப் படித்த பிறகு இவர் மீது இருந்த நல்ல மனிதர் என்ற நம்பிக்கையை என்போன்றோர் இழந்தனர். குடும்ப உறுப்பினர்களை கண்டிக்கவோ, கட்டுபடுத்தவோ முடியாத அளவுக்கு இருக்கும் இவர், கட்சியையும் பதவியையும் அவர்கள் நலனுக்காவே பயன்படுத்துகிறார் என்பது அழுத்தமாக்வே பதிந்தது.
* ஈழத்தமிழர்களுக்கு எதிராக இராசபக்சேவுடன் கைகோர்த்து காங்கிரசும் - திமுகவும் நடந்து கொண்டவிதம், ஈழத்தமிழர்கள் நாதியற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது, இதன் பிறகு திமுகவிற்கும் இன உணர்வுக்கும் ஏதும் தொடர்பில்லை என்று உறுதியாகியது
* எவ்வளவோ நலத்திட்ட அமைச்சர் பதவிகள் இருக்க, தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட பயன் எதுவும் தராத ஊழல் செய்யவே தேர்ந்தெடுத்தது போல் தகவல் தொழில் நுட்பத் துறையைக் கேட்டும், மிரட்டியும் பெற்றும் அதில் ஊழல் சாதனை புரிந்ததும் திமுகவிற்கும் மக்கள் விரோததிற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்று வெட்ட வெளிச்சமாகியது.
ஒரு மக்கள் ஆட்சி நாட்டில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்களிப்பது தான் மக்களின் அரசு குறித்தான அக்கரையாக இருக்க வேண்டும், ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அரசியல் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் பாதிக்கப்படும் போது ஆட்சியாளர்களை எப்போது ஒழிப்போம் என்பதே நாள் தோறும் சிந்தனையாகும் படியும், தேர்தல் நாளான தீர்ப்பு நாளுக்கு மக்கள் ஏங்கும் படியும் செய்துவிடுகிறார்கள்.
எது எப்படியோ பொதுவாழ்க்கைக்கு வருகின்ற தலைவர்கள் தங்கள் கட்சியிலும், அரசு அதிகாரத்திலும் தன்னுடைய வாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தால் கட்சியும் சேர்ந்தே அழியும் என்ற நிலை மீண்டும் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி ஆட்சி அவலத்தின் எதிர்ப்பு வாக்குகள் தான் தமக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது என்பதை வெளியில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஜெ உணர்ந்திருப்பார். 2001 - 2006 வரையிலான ஜெயின் ஆட்சியில் பெரும் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றதாக சென்ற கருணாநிதி ஆட்சியில் புதிய வழக்குகள் எதுவும் பதியவில்லை. சென்ற முறை ஜெ அரசு ஊழியர்களை வீட்டுக் அனுப்பியதை எம்போன்றோர் வரவேற்றோம், காரணம் அரசு ஊழியர்களுக்கு பொதுமக்கள் மீதான மரியாதை சிரிதும் இல்லாமல் இருந்தது.
பழைய ஆளும் கட்சியின் தோல்வி புதிய ஆளும்கட்சிக்கான பாடம் !
பதிவுலகில் கூட தேர்தல் பரப்புரையின் போது உபி சிலரும், பாமக பதிவர் ஒருவரும் நடந்து கொண்டது மிகவும் அருவெறுப்பானது, விரக்தியின், கோபத்தின் உச்சிக்கே சென்ற உடன்பிறப்பு ஒருவர் போலிப் பதிவு தொடங்கி திமுகவை விமர்சனம் செய்த பதிவர்களை ஒருமையில் திட்டிப் பதிவுகள் எழுதினார். திரும்பவும் அவர்களுக்கு இந்த சூழலில் பதில் சொல்ல நினைக்க 'செத்த பாம்புகளை எத்தனை முறை எத்தனை பேர் அடிப்பிங்க' என்பது நினைவுக்கு வருவதால் முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறேன்.
'சீமானுக்கு ஆதரவானப் பதிவொன்றின் முடிவில் கருணாநிதிக்கு தேர்தல் முடிவு இப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்' என்று சக பதிவர் திரு மோகன்தாஸ் எழுதி இருந்ததை என்னால் மறக்க இயலவில்லை, அதில் முழுதாக ஒப்புதல் இல்லாவிடிலும் கருணாநிதியை நம்பியவர்களின் வெம்பிய மனது அப்படித்தான் நினைக்க வைக்கும் என்பதை படிக்கும் போதே உணர்ந்தேன்.
*******
நல்ல மாற்று ஊடகமாக செயல்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய ஜூனியர் விகடன் குழுமத்தின் பணி சிறப்பானது.
பதிவர் சவுக்கின் ஆளும் கட்சிக்கு எதிரான இணைய விமர்சனம் ஆயிரக்கணக்கானோரையும் அவர்கள் மூலம் லட்சக்கணகானவர்களை சிந்திக்க வைத்தது
தேர்தல் தேதிக்கு முன்பிருந்த வைகோவின் பேச்சுகளும், தமிழருவி மணியனின் கட்டுரைகளும், சீமானின் சிம்மக் குரலும் கட்சி சாராத கருணாநிதி ஆதரவாளர்களை விழிக்க வைத்தது.
குறிப்பாக தேர்தல் ஆணையம் வாக்களர்களை உற்சாகம் ஊட்டி வாக்களிக்க அழைத்தது சிறப்பாகவும் செயல்பட்டது.
இவர்களையெல்லாம் பாராட்டுகிறேன்.
வியப்பான, சிறப்பான, தீர்ப்பு எழுதிய தமிழக வாக்களப் பெருமக்களுக்கு தலைதாழ்த்திய வணக்கங்கள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
எது எப்படியோ! நான் முதன் முறை வாக்கு போட்டு அந்த நபர் ஜெயித்ததும் மனதுக்கு நிறைவாக இருந்தது.
தேர்தல் ஆணையம் வாக்களர்களை உற்சாகம் ஊட்டி வாக்களிக்க அழைத்தது சிறப்பாகவும் செயல்பட்டது.
//பழைய ஆளும் கட்சியின் தோல்வி புதிய ஆளும்கட்சிக்கான பாடம் !//
அருமையாக நடு நிலையோடு எழுதப்பட்ட பதிவு.புதிய கட்சி மக்களுக்கு கடன் பட்டவர்கள் என்பதை நினைவில் நிறுத்தி பணியாற்ற வேண்டும்.குறைந்த பட்சம் எரிச்சலூட்ட கூடாது.
நன்றி நண்பரே!!!!!!!!!!!!!!!!!
'நெஞ்சம் இனித்தது, கண்கள் பனித்தன' ///
தப்பு தப்பு...
இதயம் இனித்தது...
இ”வந்தா அடுத்ததும் இ’வரனும் இ இ
இந்த தேர்தலில் வெற்றி பெற்றது தேர்தல் ஆணையமும், ஜனநாயகமும்.
தேர்தல் ஆணையம் தான் ஆட்சி மாற்றத்திற்கு காரணம்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
//கருணாநிதி ஆட்சி அவலத்தின் எதிர்ப்பு வாக்குகள் தான் தமக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது என்பதை வெளியில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஜெ உணர்ந்திருப்பார்.//
கிட்ட தட்ட இதை உணர்ந்தே ஜெயலலிதா அவர் முதல் பேட்டியில் இதை கூறியிருந்தார்!
மோஹந்தாஸின் பதிவை முன்பே எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை. உங்கள் பதிவு மூலமாக இன்று அங்கே சென்றேன். "திடீர் தமிழ் உணர்வாளர்கள்" என்று நம்மைப்போன்றவர்களுக்கு இரண்டு வருடங்களாக சூட்டப்பட்ட பெயர் நேற்று களையப்பட்டுள்ளது.
அண்ணே நல்ல அலசல்கள்.
கருத்துரையிடுக