பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2011

பாமகவின் தேர்தல் பயம் !

மகனுக்கு மந்திரிப் பதவி என்னும் அடிப்படை கோரிக்கையுடன் திமுகவில் கைகோர்த்திருக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும் தான் 'பாதி கெணறு தாண்டியாச்சு' என நிம்மதி பெருமூச்சு விட்டார். காங்கிரஸு - திமுக உடன்பாடு ஏற்பட்டால் இராமதாசின் அடிப்படை கோரிக்கையே ஆட்டம் கண்டு அவரும் திமுக கூட்டணியில் இருந்து உடனேயே வெளி ஏறி இருப்பார்.

வடமாநிலத்தில் தேமுதிகவிற்கு ஓரளவு ஆதரவு இருப்பது உண்மை தான் என்பதை விருத்தாச்சலம் மெய்பித்தது. தற்போது அதிமுகவின் வாக்குகளும் கிடைக்கும் என்பதால் தேமுதிக பல இடங்களில் அதன் வெற்றி வாய்ப்பு எட்டும் கனியாகவே பழுத்து வருகிறது.
தேமுதிக வட மாநிலங்களில் வென்றால் பாமகவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பலவீனமடையும் எதிர்காலத்தில் அதிமுக மற்றும் திமுக பாமகவை கூட்டணிக்கு அழைக்கவே யோசிப்பார்கள் என்பதால் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவை பாமக மிகுதியாக தாக்கிப் பேசி வருகிறது.

விஜயகாந்தும், பாமகவை கடுமையாக விமர்சனம் செய்வதால் பாமகவின் (சாதிய ரீதியான) எதிர்ப்பு ஓட்டுகளைஒட்டுமொத்தமாக அறுவடை செய்துவிட முடியும் என்று நினைத்து பாமகவின் பசுமை தாயக்கம் பற்றியும், பாமவின் மரங்கள் குறித்தான அக்கரை குறித்தும் சாடிவருகிறார்.

இந்த சாடல் பாமகவினரை குறிப்பாக வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டுக் குருவையும், பாமக நிறுவனர் இராமதாஸையும் எரிச்சல் படுத்துகிறது. "பிரச்சாரத்திற்கு வரும் விஜயகாந்து ஒழுங்கத் திரும்பிக் போகனும் என்றால் அடக்கி வாசிக்கனும்" என்கிற ரீதியில் காடுவெட்டி குருவால் பகிரங்க மிரட்டலே விடப்படுகிறது.

ஒரு கட்சித்தலைவரை மிரட்டுவது பெரிய விசயமே இல்லை, இதை எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை. ஆனால் விஜயகாந்து தன்னுடைய வேட்பாளரை அடித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் அனைவருமே விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறார்கள். அதாவது யாரை வேண்டுமானாலும் (வாய்ச் சவடலால்) மிரட்டலாம் ஆனால் அடித்துவிடக் கூடாது என்பது தான் அரசியல் நாகரீகம் போலும்.

விஜயகாந்து வேட்பாளரை அடித்தது அவர்கள் கட்சியின் உள்விவகாரம், மாற்றுக்கட்சி வேட்பாளரை அடித்திருந்தால் தான் குய்யோ முறையோ என்று கத்திக்கேள்வி கேட்கமுடியும், அடிவாங்கியவரே விஜயகாந்திற்கு ஆதரவாக இருக்கும் போது மற்றவர்களின் விமர்சனம் எடுபடுமா ?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்பார்கள். விஜயகாந்தின் அடியைப் பற்றி விமர்சனம் செய்யும் பாமகவின் நிலையும் இது தான்.

சத்திய மூர்த்தி பவன் அடிதடிகளைவிடவா விஜயகாந்தின் அடிதடி சுவாரிசியமாக இருந்தது ?
நான் விஜயகாந்த் அபிமானியோ பாகைமானியோ இல்லை. அரசியலுக்கு வரும் உரிமை தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து வாழும் யாருக்கும் உள்ளது என்ற அளவில் விஜயகாந்தின் அரசியல் எனக்கு உவர்பானது இல்லை. யாரையும் அடிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் அதைத் தவறு என்று சுட்டுபவர்களின் யோக்கிதைகளும் வெளிச்சத்திற்கு வரத்தான் செய்கிறது. உள்கட்சி விவகாரத்தால் மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொலை செய்யப்பட்டதற்கு இந்த அரசியல்வாதிகளில் எத்தனைபேர் அதனை அ(இ)ன்றைய சூழலில் சுட்டிக்காட்டினார்கள்/ காட்டுவார்கள் ?

பின்குறிப்பு : என்ன கொடுமைசார். இந்தக் கருணாநிதியின் கேவலமான தன்நலஅரசியல் நிலைபாடுகளால் திராவிடப் பிரியாணியின் பித்தம் அஜிரணமாகி, ஒதுங்கிப் போய் வெறுத்துப் போய் யார் யாருக்கோ நான் (அரசியல் ஆதரவு) காவடி எடுக்க வேண்டி இருக்கு. இன்னும் அஜிரணமாகதவர்களும் இருக்காங்க, அவங்க ரொம்ப ஸ்ட்ராங்க். இடியே இடித்தாலும் (இன அழிப்புகள், இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்), மழையே கொட்டோ கொட்டுனு கொட்டினாலும் (தொடரும் மீனவர் படுகொலைகள்) அப்படியே எருமைமாடாத்தான் தான் இருப்பாங்க. மைனஸ் ஓட்டுப் போடுறவங்களெல்லாம் வரிசையில் வாங்க.

12 கருத்துகள்:

Prakash சொன்னது…

It's not PMK that started personal attacks first, moreover DMK front campaign is focusing on what they done and what they'll do. But it was Vijayakant and Jaya who started personal attacks on DMK, MK, Ramados and PMK. Also most of their campaign time is spent on personal attacking , they not even speaks what they'll do, if they come to power. Then only Vadivel & Ramadas have started to counter them. Hence the fear is not with PMK, it's with Vijaykant

ராஜேஷ், திருச்சி சொன்னது…

அடிதடி மட்டுமே இங்கு பிரச்னை இல்லை கோவியாரே.. வடிவேலு சொன்னது போல, செம மப்பில் இருக்கிறாரே தலைவர் ..அதன் கவலையே . தலிவர் வீட்டுல மப்பு ஏத்திகிட்டு ஆடலாம்.. ஆனா பிரசாரத்துக்கு வரப்போ மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே

//பின்குறிப்பு : என்ன கொடுமைசார். இந்தக் கருணாநிதியின் கேவலமான தன்நலஅரசியல் நிலைபாடுகளால் .....////
எதுக்கு சும்மா இந்த பம்மாத்து ??

VJR சொன்னது…

ஆக, விஜயகாந்த் தன் வேட்பாளரை அடிப்பதோடு மட்டுமல்லாமல் எல்லாக் கட்சித் தலைவர்களும் அடிக்கலாம் என்பதை நண்பர் கோவியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

நல்ல சிந்தனை, தொடர்ந்து ராக்குங்கள்.

Unknown சொன்னது…

/அடிவாங்கியவரே விஜயகாந்திற்கு ஆதரவாக இருக்கும் போது மற்றவர்களின் விமர்சனம் எடுபடுமா ?
//

உங்கள் கேள்வி நியாயமானதே.

Unknown சொன்னது…

//நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்பார்கள். விஜயகாந்தின் அடியைப் பற்றி விமர்சனம் செய்யும் பாமகவின் நிலையும் இது தான்.//

அதனால்தான் ஒரு அடியை பல அடிகளாக எடிட்டிங் செய்து, திரும்ப திரும்ப காட்டினார்களோ

Unknown சொன்னது…

//சத்திய மூர்த்தி பவன் அடிதடிகளைவிடவா விஜயகாந்தின் அடிதடி சுவாரிசியமாக இருந்தது ?//

அதானே! இங்கே யாரும் வேட்டியை கிழிக்கவில்லையே :)

Unknown சொன்னது…

//அரசியலுக்கு வரும் உரிமை தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து வாழும் யாருக்கும் உள்ளது என்ற அளவில் விஜயகாந்தின் அரசியல் எனக்கு உவர்பானது இல்லை//

புரியலே!
தப்புனு சொல்றீங்களா இல்ல சரின்றீங்களா

Unknown சொன்னது…

//இன்னும் அஜிரணமாகதவர்களும் இருக்காங்க, அவங்க ரொம்ப ஸ்ட்ராங்க். இடியே இடித்தாலும் (இன அழிப்புகள், இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்), மழையே கொட்டோ கொட்டுனு கொட்டினாலும் (தொடரும் மீனவர் படுகொலைகள்) அப்படியே எருமைமாடாத்தான் தான் இருப்பாங்க//

அதான் பதிவுலகத்தை பார்த்தாலே தெரியுதே. இந்த குத்து மேட்டரிலே விஜயகாந்தை எத்தனை பேரு கும்மு கும்முனு கும்மிட்டாங்க

Unknown சொன்னது…

//மைனஸ் ஓட்டுப் போடுறவங்களெல்லாம் வரிசையில் வாங்க.//

நான் தான் பர்ஸ்ட் ஓட்டு!
ஆனா + தான் :)

NAGA INTHU சொன்னது…

பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியால் சூடுபோட்டதுபோல் உள்ள உங்களது வார்த்தைகள், உரைக்கவேண்டியவர்களுக்கு உறைக்குமா?.
அரவரசன்.

NAGA INTHU சொன்னது…

சபாஷ்.சரியான சாட்டையடி.நெருப்பை கக்கும் அக்னிவார்த்தைகள்.உரைக்குமா எருமைமாடுகளுக்கு.
அரவரசன்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

திரு கோவி கண்ணன்!

விஜயகாந்த் மாதிரி திடீர்க் கட்சிகளுக்கெல்லாம் இவ்வளவு பில்டப் தேவையா? என்ன அரசியல் தெரிந்து, ஜனங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு தலைமை தாங்கத் தகுதியானவர் இவர்? இவரைக் கேட்கும் கேள்விகளை, பாமக, விசி,அப்புறம் சாதிக்கு நாலு சங்கமாகவும், நாற்பது கட்சிகளாகவும் ஆரம்பித்து, இந்தப்பக்கம் அல்லது அந்தப்பக்கம் சேர்ந்துகொண்டு கூத்தடிக்கிற சந்தர்ப்பவாதிகளிடமும் தான் கேட்க வேண்டும்! கேட்பதென்பது, தேர்தல்களில் நிராகரிப்பதன் மூலமே சாத்தியம்!

தாத்தாவிடம் உங்களுக்கு இருக்கும் அலுப்பு சலிப்பு புரிகிறது.காவடி எல்லாம் வேண்டாம்! காங்கிரஸ், அதன் கூட்டாளிகளைத் தேர்தல்களில் தலையெடுக்கவிட மாட்டோம் என்று உறுதியாக ஒரு நிலை எடுத்துப் பாருங்கள்! பித்தம் தானே தெளிந்துவிடும்!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்