பின்பற்றுபவர்கள்

28 மார்ச், 2011

ஜெயலலிதாவுக்கு திமுகவின் பிரச்சாரம் !

திமுக உட்பட திமுக கூட்டணியினர் ஜெவின் கூடுதலான இலவச தேர்தல் அறிக்கைக்கு அன்றாடம் விளம்பரம் செய்துவருகிறார்கள். கூட்டம் தோறும் ஜெ என்ன என்ன திட்டம் அறிவித்தார் என்றெ ஜெ வே செல்லத் தேவை இல்லாத அளவுக்கு கருணாநிதி, இராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் மேடையில் ஜெவின் திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த முடியாது என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். சென்ற முறை தேர்தலின் ஹைலைட் இலவசத் திட்டம் தான். அந்த வகையில் தமிழக வாக்காளர்களை இலவச அடிமையாக்கிய பெருமை கருணாநிதியையே சாரும். கருணாநிதி கொடுப்பார் ஜெயலலிதா கொடுக்கமாட்டார் என்கிற எதிர் பிரச்சாரம் எந்த விதத்தில் எடுபடும் என்று தெரியவில்லை. இவர்கள் யாரும் கைகாசைக் கொடுக்கப் போவதில்லை என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்ல எனும் போது அறிவித்தவர்கள் யாரும் கொடுக்கமாட்டார்கள் என்பதை மக்களும் நம்பத் தயாராக இல்லை.

கருணாநிதி இல்லத்து பெண்கள் குறிப்பாக, மகள், மருமகள், பேத்தி என அனைவரும் தேர்தல் களத்தில் நிற்பதைப் பார்க்கும் போது திமுகவின் தோல்வி பயம் வெளிபடையாகவே தெரிகிறது, அரசியலும் பதவியும் குடும்பச் சொத்து போல் இவர்கள் அதைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள், அல்லது போராடுகிறார்கள் என்பதை இலவசங்களை அறுவடை செய்யாத நடுத்தர வர்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடிக் கடன் என்பது நடுத்தரவர்கத்தின் வரியினால் தீர்க்கப்பட வேண்டிய கடன் என்பதால் நடுத்தரவர்கம் இலவசத் திட்டங்கள் தங்களுக்கான மேல் சுமை என்பதில் கருணாநிதி மற்றும் ஜெ மீதி எரிச்சல் அடைந்திருந்தாலும் ஆள்பவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கத் தயாராக இல்லை. மேலும் செய்திகளை அன்றாடம் வாசிக்கும் நடுத்தர வர்க்கமும், டீக்கடை பெஞ்சுக்காரர்களும் கருணாநிதி குடும்பத்தின் சொத்துக் கணக்கையும் திரைத் துறை மட்டும் ஊடகத் துறையில் அவர்களின் வலுவான கரங்களையும் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதால் நடுத்தரவர்கத்தின் வாக்குகள் கருணாநிதிக்கு கிடைப்பது ஐயமே. டெஸ்மாவில் பாதிக்கப்பட்ட 2 லட்சம் அரசு ஊழியர்கள் தவிர்த்து காவல் துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஜெவிற்கும் வாக்களிக்கும் மனநிலையில் தான் உள்ளனர். பொதுவாகவே காவல் துறை ஜெவுக்கு விசுவாசமாகவே நடந்து கொள்ளும் என்பதால் இந்தத் தேர்தலில் தேர்தல் முறைகேடுகளை முறியடித்து காவல் துறையினரின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் ஜெவுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

நோய்வாய்பட்டு தேர்தல் களத்தையே காணாமல் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட எம்ஜிஆரையும், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சர்கர நாற்காலியில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு 6 ஆம்முறையாக அரியணையை காக்கக் போராடிவரும் கருணாநிதியையும் ஒப்பிட்டால் வாரிசு அரசியல் மற்றும் பதவி ஆசை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை எந்தப்பாடு படுத்துகிறது என்று உணரலாம்.

ஏற்கனவே காங்கிரசிற்குள் கோஷ்டி மோதல் அந்தக் கட்சியின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கி இருக்கிறது, இந்தத் தேர்தலில் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்த உபிகள் இடநெருக்கடி காரணமாக எகிரிக் குதித்து சுயேட்சையாக நின்று கண்ணீரை வரவழைக்கிறார்கள், கழுத்தை அறுக்கிறார்கள் என்று புலம்புகிறார் கருணாநிதி இதுவெல்லாம் எதிர்கட்சிக்கு அனுகூலம் தான், அதிருப்தியாளர்களை காசுக்கு வளைப்பது அரசியலில் கைவந்தக் கலை என்பதால் அங்கெல்லாம் அதிமுக கூட்டணி எளிதாகவே வெற்றிபெரும். இவர்களுக்காக மேடையில் ஏகவசனத்தில் பேசிவரும் நடிகர் நடிகைகள் குறிப்பாக வடிவேலு மற்றும் குஷ்பு இவர்களின் எதிர்காலம் தான் புதிரானது. இருந்தும் அரசியலில் சரண்டர்களும் சாதாரணமானவையே ஜெ-வை மிகவும் தாழ்ந்து விமர்சனம் செய்த எஸ் எஸ் சந்திரனே பின்னர் அம்மா தான் எல்லாமும் என்று மாறிவிடவில்லையா ? நக்கீரன் கோபால் நிலைமை தான் பரிதாபம், அறிவிக்கப்படாத முரசொலி போல் திமுகவிற்கான பிரச்சாரத்தையும் எதிர்கட்சி மீதான இருட்டடிப்பையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆட்சி மாறினால் திமுகவினரைவிட பாதிக்கப்படுவது அவர்கள் தான் என்பதால் தான் இப்படி முனைந்து பிரச்சாரம் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒரு காலத்தில் நக்கீரன் கோபால் சமூகப் போராளி என்பதற்கு ரோல் மாடலாகவே இருந்தார் என்று நினைக்கையில் இப்போதைய அவர்களின் நிலைப்பாடு வருத்தம் கொள்ள வைக்கிறது. இதற்கு ஏன் இவர்கள் நடுநிலை நாளேடு என்று கூறி பொதுமக்களிடம் கடைவிரிக்க வேண்டும் வெளிப்படையாகவே தங்கள் திமுகவின் அரசியல் செய்தி இதழ் என்று அறிவித்துக் கொள்ளலாமே.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனிபட்ட சொத்துகளுக்கு பங்கம் இல்லை, இல்லை என்றால் பங்கு கொடுக்கனும் மற்றபடி கவலை கொள்ளும் அளவுக்கெல்லாம் வெற்றி தோல்விகளில் பெரிதும் நடக்காது. பங்கு கொடுப்பதற்குத்தான் இப்படி அழுது பிரச்சாரம் செய்கிறார்களா ? அதுவும் அதிமுகவுக்கு சாதகமாகவே......அந்தோ பரிதாபம்.
:)))

4 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

+1

குழலி / Kuzhali சொன்னது…

//ஒரு காலத்தில் நக்கீரன் கோபால் சமூகப் போராளி என்பதற்கு ரோல் மாடலாகவே இருந்தார் என்று நினைக்கையில் இப்போதைய அவர்களின் நிலைப்பாடு வருத்தம் கொள்ள வைக்கிறது.
//
நக்கீரன் பத்திரிக்கையை இணையதளத்தில் சந்தா எடுக்காமல் ஒவ்வொரு வாரமும் இரண்டு இதழ்களையும் கடையில் போய் தான் வாங்குவேன்... 6மாத இணைய சந்தா 20 வெள்ளிதான் ஆனால் வாரம் இரண்டு வெள்ளி கொடுத்து அந்த வார நக்கீரன் இரண்டும் வாங்குவேன், தற்போது நக்கீரன் வாங்குவதையே நிறுத்திவிட்டேன்... :-( ஒரு அரசியல் பத்திரிக்கை ஒரு கட்சி சார்பாக மாறினால் இப்படித்தான் ஆகும்.

ELANGOVAN சொன்னது…

5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.

நுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.

சுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.

பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.

இதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா? பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

இளங்கோவன் சார்,

ஸ்பெக்டரம் ஊழல் முறைகெடு 1.75 LC பற்றி பேசுங்க சார். நாட்டை அடகு வச்சிட்டு கஞ்சி காய்த்து இலவசமாக ஊற்றினால் போதுமா ?
ஊழல்வாதிகள் அதுவும் சமூக விரோதிகளுடன் தொடர்புடைய ஊழல்வாதிகள் மக்களுக்கு நன்மை செய்வதும், ஊர் சொத்தை கொள்ளையடித்தவன் பாவ மன்னிப்புக்கு உண்டியலில் காசு போடுவதும் ஒன்று தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்