பின்பற்றுபவர்கள்

23 டிசம்பர், 2010

தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான் ?!

தமிழகத்தில் (மீண்டும்) காங்கிரசு ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதே காமராசருக்கு பின்னான தமிழக காங்கிரசாரின் கனவாக இருக்கிறது. உண்மையில் காங்கிரசு ஆட்சி தமிழ் நாட்டில் இருந்ததா ? என்று பார்த்தால் அது ஒரு விபத்தாக தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்றும் மீண்டும் தொடர்வதற்கு வாய்பில்லை என்றே தெரிகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் மற்றும் வெள்ளைக்கார ஆட்சியின் பங்கு / பதவி என்பதாகத்தான் இருகுதிரைகள் சவாரி செய்து காங்கிரசு இந்தியாவில் கோலொச்சியது. தான் பிடித்து வைத்திருந்த எல்லா நாடுகளில் இருந்து வெள்ளைக்காரன் எப்படி வெளியேறினானோ அப்படித்தான் இந்தியாவிலும் வெளியேறினான். காந்தியின் அமைதிப் போராட்டத்தினால் மட்டுமே விடுதலை கைகூடியதாகிற்று என்பதாக வரலாறு எழுதி காந்தியை மகாத்மாவாக்கி, காங்கிரசின் புனித சின்னமாக்கி வெள்ளைக்காரர்களுக்குப் பிறகான இந்திய ஆட்சியை தக்கவைத்துக் கொண்டனர் காங்கிரஸ், அதுவரையில் காங்கிரஸ் தவிர்த்து எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாகவோ, அல்லது உருவானவை வளர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையிலோ இல்லை. காந்தியை காங்கிரசின் புனித சின்னமாக ஆக்கி ஓட்டு வேட்டை நடத்துவதை காந்தியே சகித்துக் கொள்ளாமல் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்றார். காந்தியை வைத்து பிழைப்பு நடத்துவோர்கள், காந்தியின் படுகொலையை அரசியல் ஆதாயமாகக் கருதி அனுதாப ஓட்டில் அரியணை ஏறினார்களே யன்றி காந்தி சொன்ன காங்கிரஸ் கலைப்பை காது கொடுத்தும் கேட்கவில்லை.

தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி இந்திய விடுதலைக்குப் பிறகு ஏற்பட்டதும் இவ்வாறே. சுமார் 20 ஆண்டுகாலம் தமிழகத்தில் இராஜாஜி, பக்தவச்சலம் மற்றும் காமராசர் மேலும் சிலர் முதலமைச்சராக இருந்துவந்தனர். அதாவது தமிழக காங்கிரஸ் ஆட்சி என்பது வெள்ளையர் விட்டுப் போனதன் நீட்சி என்பதாகத்தான் தொடர்ந்தது, மற்றபடி தமிழக நிலம் சார்ந்த நலன்களை முன்னிறுத்திய இயக்கம் என்பதாக வளர்ந்து ஆட்சியைப் பிடித்ததாக தமிழக காங்கிரஸ் குறித்து எந்த ஒரு காலத்திலும் வராலாறு எழுதிவிடமுடியாது. இந்தியத் தலைமையின் கைப்பாவை அரசு என்பதை தமிழக மக்கள் விரும்பாததும், இந்தித் திணிப்பு உள்ளிட்ட மாநில எதிரியாக செயல்பட்டுவந்து, முற்றிலும் மேல்தட்டு பண்ணையார்களுக்கு ஆதரவாக இருந்ததால் காங்கிரஸ் ஒழிப்பு என்பதை பெரியார் உள்ளிட்டோர் முன்னெடுத்து அறிஞர் அண்ணாவால் கைகூடியது. இன்றும் கூட பெரிசுகளாக இருக்கும் காங்கிரசு ஆதரவாளர்களுக்கு காங்கிரசு மேல் இருக்கும் பற்றுதலுக்குக்காரணம் காந்தி, கோகுலே உள்ளிட்டோர் துவங்கிய இயக்கம், விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையது என்பதால் மட்டுமே. மற்றபடி தமிழக காங்கிரசு ஆட்சியில் தமிழ் நாடில் பாலாறும் தேனாறும் ஓடியது என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. காங்கிரசு ஆட்சியின் ஒரே விதிவிலக்கு காமராசர் மட்டுமே அவரும் இந்திராவால் அவமானப்படுத்தப்பட்டவர் தான். இந்தியாவில் காந்திப்படத்தை (புகைப்படம் தான்) காட்டி காங்கிரசு வாக்கு கேட்பது போல் தமிழகத்தில் காமராசரை வைத்து, காமராசர் ஆட்சி என்று பிதற்றி வருகிறார்கள். காமராசர் ஆட்சி வீழ்ந்ததற்கு திமுகவைவிட இந்திய காங்கிரசே காரணம், இந்திராவால் அவமானப்படுத்தப்பட்ட காமராசரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த காங்கிரசாரே எந்த ஒரு முயற்சியும் பெரிதாக எடுக்காமல், காமராசரின் மதிய உணவு திட்டம் மட்டுமே காப்பாற்றிவிடும் என்று நினைக்க, காமராசர் விருது நகரிலேயே தோற்றுப் போக, அதற்காக அண்ணா உள்ளிட்டோர் எதிர்கட்சி என்றாலும் மிகவும் வருந்தினர், இது வரலாறு.

தமிழகத்தில் மீண்டும் காங்கிரசு ஆட்சி அமைக்க ஏதேனும் வாய்ப்புள்ளதா ? மூன்றாவது அணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காணுகின்றனர் சிதம்பரம் உள்ளிட்டோர். தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு அவர்கள் என்றாவது தமிழர் நலன் சார்ந்து, தமிழர்களின் பிரச்சனையை முன்வைத்து செயல்பட்டு வந்திருக்க வேண்டும், அண்டை மாநிலத்தில் காங்கிரசு ஆட்சியில் இருந்த போது கூட தமிழக தண்ணீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வுக்கான முயற்சியை எடுக்கவில்லை, அன்றாடம் கொல்லப்படும் மீனவன் குறித்து காங்கிரசு அக்கரைப்பட்டுக் கொள்ளவோ, கவலை கொள்ளவோ இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக சப்பைக் கட்டாக ஈவிகேஸ் இளங்கோவன் போன்றோர், இந்திய இராணுவம் இலங்கை மீனவனை சுடுது, அவங்க தமிழக மீனவனை சுடுகிறார்கள், யானைக்கும் பானைக்கும் சரி என்பது போல் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ஆசை இருக்கு யானை ஏற......எம்பி ஏற தெம்பு வேண்டாமா ? என்று கிராமத்தில் பழமோழி சொல்லுவார்கள், காங்கிரசின் ஈழ நலன் புறக்கணிப்பை கருத்தில் கொள்ளாவிடினும், காங்கிரசார் என்றுமே தமிழக நலனை முன்னிறுத்தி எந்த ஒரு செயல்திட்டத்தையும் நிறைவேற்ற இருக்கவில்லை,. மத்திய அரசின் மாநிலங்களில் செயல்படுத்துவதெல்லாம் பிள்ளையார் கோவில் சுண்டல் போல் எல்லோருக்கும் கிடைப்பது போல் தமிழகத்திற்கும் கிடைக்கிறது, இதை பாஜக உள்ளிட்ட பிற மத்திய அரசுகளும் செய்தே வந்திருக்கின்றன. காங்கிரசைப் பொருத்த அளவில் மாநில அரசியல் என்பது மத்திய அரசை பலப்படுத்திக் கொள்ள ஒரு கறிவேப்பிள்ளை. அதற்கு இடம் கொடுக்க தமிழகத்துக்கு தமிழன் ஒன்றும் இளித்த வாயன்கள் இல்லை. இதோ நேற்று இராகுல் காந்திப் சொல்கிறார் அடுத்த முதல்வர் (திமுவுடன் கூட்டணி முறியாத நிலையில் அடுத்து நாங்கள் தான் முதல்வர் என்று பேசும் அரசியல் நாகரீக கோமான்) இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஒருவர் தானாம்.

ஐயோடா சாமி, நேருவிடம் பாடம் கற்று அரசியலில் பழுத்த இந்திராவும், அவரைப் பார்த்து வளர்ந்த இராஜிவ் காந்தியும் தமிழக அரசியலில் செய்யாத தகிடுததங்களையும், மிசா உள்ளிட்டவற்றை நடத்திக் காட்டியும் அவர்களே போடாத குட்டிக்கரணங்களைப் போட்டு இந்திராவின் பேரன் தமிழக முதல்வரை காங்கிரசுக்குத் தருவராம்.

ஆடுறா ராமா ஆடு.......போடுறா கரணம் போடுறா ராமா போடு !

31 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ஆடுறா ராமா ஆடு.......போடுறா கரணம் போடுறா ராமா போடு !
/////

HA HA



//தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான் ?!

////

கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு ....

periyar சொன்னது…

காங்கிரஸ் கீழ்த்த்தரம் தான்;சரி.ஆனால் மிகவும் கீழ்த்தரமான தி மு க வை விடவா கீழ்த்தரம்?பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் கண்ணன்.

Unknown சொன்னது…

கலக்கிட்டீங்க சார், செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. நான் ரொம்ப நாளாவே சொல்லி வரும் கருத்துகளை மிகவும் தெள்ளத் தெளிவா சொல்லி இருக்கீங்க. இப்போ அன்னையின் இளவரசர் சொன்ன கருத்துக்குப் பின் தற்போதய இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் இப்போதே தாந்தான் முதல்வர் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார். அப்பறம் இளஞர் காங்கிரஸில் எல்லோருமே முதல்வர்களாக கற்பனை பண்ணிக் கொண்டு திரிய ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் நிறைய கோஷ்டிகள் உருவாகும். ராகுலின் உருப்படியான வேலை இதுதான். வாழ்க இந்திய ஜன நாயகம். மகாத்மா கீ ஜே.....

பொன் மாலை பொழுது சொன்னது…

எனக்கு ஒரு வருத்தம் உண்டு கண்ணன். பிற ஊடகங்களை விட இந்த வலை பூக்களில் வெளிவரும் அரசியல், சமூக அக்கறையுள்ள ஆக்கங்கள் போன்று தெளிவான ,ஆழமான படைப்புக்கள் வேறு எந்த ஊடங்களிலும் வருவதில்லை. அங்கெல்லாம் எல்லாரும் எவரையோ சார்ந்து மட்டுமே எழுதுகின்றனர். வலைப்பூவில் வரும் இது போன்ற ஆக்கங்கள் எல்லா தரப்புக்களிலும் எடுத்து செல்ல படல்வேண்டும். ஒரு தினத்தந்தியை போல.
ஆனால் இவைகள் ஒரு குறுகிய வட்டத்னுள் மட்டும் சுழல்கிறதே!

கோவி.கண்ணன் சொன்னது…

//periyar said...
காங்கிரஸ் கீழ்த்த்தரம் தான்;சரி.ஆனால் மிகவும் கீழ்த்தரமான தி மு க வை விடவா கீழ்த்தரம்?பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் கண்ணன்.

1:09 PM, December 23, 2010
//

:) ஒரு கீழ்தரம் மிகவும் கீழ்தரத்திடம் கூட்டணி வைத்திருப்பது அரசியல் ஆதயப்படி சரிதான் என்று சொல்லு வேண்டியது தானே. திமுக - காங்கிரசு கூட்டணி முறிந்தால் ஸ்பெக்டரம் காங்கிரசின் பங்கு வெளிப்படையாகத் தெரியும், முறியாவிட்டாலும் பங்கு இருப்பதால் தான் முறியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரியும், ஓநாய்கள் வாலை ஒன்றை ஒன்று பிடித்திருப்பது போல் விட்டாலும் விடாவிட்டாலும் ஆபத்தே

கோவி.கண்ணன் சொன்னது…

//கனவு காணும் உரிமை எல்லோருக்கும் உண்டு ....

1:08 PM, December 23, 2010//

தூக்கம் வருகிறவர்களுக்கு மட்டும் தான் கனவு காணும் உரிமை. தூக்கம் வராதவர்கள் தூங்குவது போல கனவு கண்டுவிட்டு பின் கனவில் என்ன காணுவது என்று முடிவு செய்ய முடியும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிணற்றுத் தவளை said...
கலக்கிட்டீங்க சார், செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. நான் ரொம்ப நாளாவே சொல்லி வரும் கருத்துகளை மிகவும் தெள்ளத் தெளிவா சொல்லி இருக்கீங்க. இப்போ அன்னையின் இளவரசர் சொன்ன கருத்துக்குப் பின் தற்போதய இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் இப்போதே தாந்தான் முதல்வர் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார். அப்பறம் இளஞர் காங்கிரஸில் எல்லோருமே முதல்வர்களாக கற்பனை பண்ணிக் கொண்டு திரிய ஆரம்பித்து விடுவார்கள். இன்னும் நிறைய கோஷ்டிகள் உருவாகும். ராகுலின் உருப்படியான வேலை இதுதான். வாழ்க இந்திய ஜன நாயகம். மகாத்மா கீ ஜே.....//

தமிழக காங்கிரசில் எல்லோரையும் முதல்வராக்க ஷங்கரை விட்டு படம் எடுத்து அதில் புதுமையாக எல்லோரும் முதல்வர்தான் என்கிற கதை அமைந்தால் உண்டு:)

கோவி.கண்ணன் சொன்னது…

கக்கு மாணீக்கம் பாராட்டுதலுக்கு நன்றி உங்கள் ஆதங்கங்களுக்கு பாராட்டுகள்

மதிபாலா சொன்னது…

:)

GOOD ONE AT RIGHT TIME.

உமர் | Umar சொன்னது…

//காமராசர் ஆட்சி வீழ்ந்ததற்கு திமுகவைவிட இந்திய காங்கிரசே காரணம், இந்திராவால் அவமானப்படுத்தப்பட்ட காமராசரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த காங்கிரசாரே எந்த ஒரு முயற்சியும் பெரிதாக எடுக்காமல், காமராசரின் மதிய உணவு திட்டம் மட்டுமே காப்பாற்றிவிடும் என்று நினைக்க,//

1963 ல் காமராஜர் தனது K-Plan ஐ முன்வைத்து, தான் முதலாவதாக முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அப்பொழுது நிதித்துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலம் தமிழக முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் அரசு வீழும் வரை அவர்தான் தமிழக முதல்வராக இருந்தார்.

பக்தவத்சலத்தின் ஆட்சியில் ரேஷன் கடைகளில் புழுத்த அரிசியே வழங்கப்பட்டது. பருப்பு விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தவர்கள் வயிற்று வலியால் இறந்ததாகக் கூறினார். இதுபோன்று மக்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியும், இந்தித் திணிப்பும், திராவிடக் கட்சிகளின் எழுச்சியும் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டின,

தேர்தலின்போது முக்கிய கோஷமே, "பக்தவத்சலம் அண்ணாச்சி! பருப்பு விலை என்னாச்சி?" என்பதுதான். காங்கிரஸ் வீழ்வதற்கு முக்கியக் காரணமே பக்தவத்சலம்தான்.

(பக்தவத்சலத்தின் பேர வாரிசு காங்கிரசில் இருக்கிறார். யார் தெரியுமா?)

உமர் | Umar சொன்னது…

// தமிழக காங்கிரசு ஆட்சியில் தமிழ் நாடில் பாலாறும் தேனாறும் ஓடியது என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.//

காமராஜ் தவிர்த்த காங்கிரஸ் ஆட்சி என்றிருந்தால் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். காமராஜரின் சில செயல்பாடுகள் (பீர்மேடு, தேவிபள்ளம்) சரியில்லை/விமர்சனத்திற்குட்பட்டவை என்றாலும் அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறைக் காட்டினார். மிக முக்கியமானவையாக தொடக்கப்பள்ளிகளைத் தோற்றுவித்தது, மதிய உணவுத் திட்டம், நீர் நிலை பராமரிப்புப் பணிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிலவற்றை கூறலாம்.

உமர் | Umar சொன்னது…

//தமிழகத்தில் மீண்டும் காங்கிரசு ஆட்சி அமைக்க ஏதேனும் வாய்ப்புள்ளதா? //

நிச்சயமாக இல்லை. காங்கிரஸ் வீழ்ந்ததற்கு பக்தவத்சலம் முக்கியக் காரணம் என்றால், அதன் பிறகு காங்கிரஸ் தேய்ந்ததற்கு மூப்பனார் ஒரு காரணம். 90களுக்குப் பிந்தைய நிலவரம் அனைவருக்கும் தெரியுமென்பதால் காங்கிரசின் தேய்வில் மூப்பனாரின் பங்கு பற்றி விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன்.

//அரசியலில் பழுத்த இந்திராவும், அவரைப் பார்த்து வளர்ந்த இராஜிவ் காந்தியும்//

ராஜீவ் காந்தி அரசியல் கற்று அரசியலுக்கு வரவில்லை. அரசியலிலும், ஆட்சியிலும் (C-DAC போன்ற சிலவற்றை தவிர்த்து) அவர் கத்துக்குட்டியாகதான் இருந்தார்.

உமர் | Umar சொன்னது…

//இதோ நேற்று இராகுல் காந்திப் சொல்கிறார் அடுத்த முதல்வர் (திமுவுடன் கூட்டணி முறியாத நிலையில் அடுத்து நாங்கள் தான் முதல்வர் என்று பேசும் அரசியல் நாகரீக கோமான்) இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஒருவர் தானாம்.//

இது தட்ஸ் தமிழில் வந்த செய்தி

"தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது."


அவர் அடுத்தத் தேர்தல் என்று கூறியதாக தகவல் இல்லை. வருங்காலத்தில் என்று கூறியதாகத்தான் உள்ளது. அவர் கூறியதும் கூட, காங்கிரசாரை உசுப்பேற்றி விடுவதற்காக பேசிய பேச்சாகவேத் தெரிகின்றது. இப்படி சொன்னாலாவது வேலை செய்யமாட்டார்களா என்னும் நப்பாசையாக இருக்கும்.

உமர் | Umar சொன்னது…

தமிழக நலன் சார்ந்து (காமராஜர் தவிர்த்து) யாரும் செயல்படவில்லை என்று நீங்கள் கூறியுள்ளது நிதர்சனமான உண்மை. இதை சரிசெய்யாதவரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதெல்லாம் பகல் கனவே.

தமிழ்மலர் சொன்னது…

காமராசரின் சுயநல ஆட்சியால் 50 லட்சம் தமிழர்கள் அநாதையாக்கப்பட்டார்கள்.

இன்று தண்ணீர் பிச்சை எடுக்கும் நிலை யாரல் வந்தது?

தன் குடும்ப நலனுக்காக ஈழ ஆதரவை விற்றார் கருணாநிதி. தன் இன நலனுக்காக தமிழகத்தையே விற்றார் காமராசர். இருவரும் சுயநலவாதிகள் தான்.

காமராசர் ஆட்சி தமிழத்தின் பொற்காலம் என்று சொல்வதெல்லாம் சுத்த பித்தலாட்டம்.

காமராசர் ஆட்சியின் கொடுளைகளையும் முல்லைபெரியாரின் உண்மை நிலையை எழுதியுள்ளேன் படித்து கருத்து சொல்லுங்கள்.

http://tamilmalarnews.blogspot.com/2010/12/blog-post_23.html
நன்றி.

ராவணன் சொன்னது…

அடுத்த முதல்வர் கனிமொழி அம்மையார் என்று காங்கிரஸ் அறிவித்தால்....தமிழக மக்கள் குத்தோ குத்து என்று குத்திவிடமாட்டார்களா?
..ஓட்டுதான்...

கனிமொழி அம்மையார் எப்போது காங்கிரஸில் சேர்ந்தார் என்று சந்தேகமா? பொறுத்திருந்து பாருங்கள்.

உமர் | Umar சொன்னது…

//(பீர்மேடு, தேவிபள்ளம்)//

தவறாக குறித்துவிட்டேன். அது பீர்மேடு, தேவிகுளம் என்று இருக்கவேண்டும்.

உமர் | Umar சொன்னது…

தமிழ்மலர் said...
//காமராசரின் சுயநல ஆட்சியால் 50 லட்சம் தமிழர்கள் அநாதையாக்கப்பட்டார்கள்.//

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இடுக்கி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,129,221 .

பீர்மேடு தாலுகா - 1,93,158
தேவிகுளம் தாலுகா - 1,85,103

பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களில் வாழும் அனைவருமே தமிழர்களே என்று கொண்டாலும் கூட 2001 கணக்கெடுப்பின்படி 4 லட்சத்தை தாண்டவில்லையே. 50 லட்சம் (அதிலும் 1956 ல்) என்று நீங்கள் குறித்திருப்பது எப்படி என்று கொஞ்சம் தெரிவியுங்களேன்.

"மதராஸ் மனதே" மற்றும் "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" பற்றியும் பேசுங்கள். மொழிவாரி மாநிலப் பிரிப்பில் உள்ள சிக்கல் பற்றி பேச வசதியாக இருக்கும்.

//காமராசர் ஆட்சி தமிழத்தின் பொற்காலம் என்று சொல்வதெல்லாம் சுத்த பித்தலாட்டம்.//

உங்கள் பார்வையில் தமிழகத்தின் பொற்காலம் என்று யாருடைய ஆட்சியைக் குறிப்பிடுவீர்கள்? தமிழக முன்னேற்றத்திற்கு அந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டவை என்னென்ன?

தமிழ்மலர் சொன்னது…

திரு. கும்மி

காமராசரால் தாரைவார்க்கப்பட்டது தேவிகுளம், பிர்மேடு பகுதிகள் மட்டுமல்ல,மேற்கு தொடர்ச்சி மலையில் பல பகுதிகள் கேரளாவுக்கு தாரைவார்க்கப்பட்டது.

கோவை மாவட்டத்தை ஒட்டிய கொழிஞ்சாம்பாறை, சித்தூர், தத்தமங்கலம், கொடுவாயூர், கொல்லங்கோடு, பாலக்காடு, அட்டப்பாடி, கிண்ணக்கோரை இப்படி பல பகுதிகள் கேரளாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் எல்லாம் புவியல் அமைப்பு படி தமிழகத்தோடு ஒட்டிய பகுதிகள். கேரளாவுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இந்த பகுதியில் உள்ள சிறுவாணி பவானி உட்பட பல ஆறுகள் தமிழகம் நோக்கிதான் பாய்கின்றன. இங்கு கேரளாவால் தடுப்பணை கட்டி விவசாயத்தை மேம்படுத்த முடியவில்லை.

தமிழ்மலர் சொன்னது…

திரு. கும்மி

ஒவ்வொரு ஆட்சியிலும் அவரவர் சுயநலத்தை தான் பார்த்துள்ளனர்.

கருணாநிதி குடும்ப சுயநலனை பார்த்தார் அதுபோல அதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியும் அவரவர் சுயநலனை பார்த்துள்ளது.

எனவே காமராசர் ஆட்சி தான் சிறந்தது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

ஒவ்வொரு ஆட்சியிலும் சில நல்ல திட்டங்கள் வந்திருக்கிறது. அதே போல பல சுயநல திட்டங்களும் அரங்கேறியிருக்கிறது.

அரவிந்தன் சொன்னது…

முன்னாள் முதல்வர் பக்தவசலம் அவர்களின் மகள் வழி பேத்தி ஜெயந்திநடராஜன்.

உமர் | Umar சொன்னது…

//இந்த பகுதிகள் எல்லாம் புவியல் அமைப்பு படி தமிழகத்தோடு ஒட்டிய பகுதிகள்.//

இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது புவியியல் அமைப்புப்படியா? மொழிவாரி அடிப்படையிலா?

உமர் | Umar சொன்னது…

@தமிழ்மலர்
//எனவே காமராசர் ஆட்சி தான் சிறந்தது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.//

காமராஜர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் அல்ல என்று கூறினீர்கள். அனைத்து ஆட்சிகளுமே சுயநலன் சார்ந்து செயல்பட்டதாகவும் கூறியுள்ளீர்கள். சரி, இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்களிலேயே மற்றவரை விடவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் யார் என்றாவது கூறுங்களேன். ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்.

உமர் | Umar சொன்னது…

@அரவிந்தன்

சரியான பதிலுக்கு நன்றி. உங்களுக்குத் தெரிந்த மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. :-)

கோவி.கண்ணன் சொன்னது…

அரவிந்தன் மற்றும் கும்மி...உங்கள் க்விஸ் சிறப்பு.

மிக்க நன்றி !

Kesavan சொன்னது…

தமிழகத்தின் எல்லையாக வடக்கே திருவேங்கடம் என்று நான் படித்தேன் . ஆனால் வேங்கடம் ஆந்திராவில் உள்ளது . இந்த இடத்தை ஆந்திராவிற்கு தாரைவார்த்தது எந்த கட்சி ?

Kesavan சொன்னது…

தமிழகத்தின் எல்லையாக வடக்கே திருவேங்கடம் என்று நான் படித்தேன் . ஆனால் வேங்கடம் ஆந்திராவில் உள்ளது . இந்த இடத்தை ஆந்திராவிற்கு தாரைவார்த்தது எந்த கட்சி ?

உமர் | Umar சொன்னது…

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி

பீர்மேடு தாலுகா - 1,93,158
தேவிகுளம் தாலுகா - 1,85,103
Palakkad - 5,71,622
Palakkad Muni. - 1,30,736
Chittur (Including KODUVAYUR) - 4,25,575
Chittur Muni (Including Thathamangalam) - 31,884
Kozhinjampara - 12,130
Kollengode - 18,583
Attappadi - 66,171

கூடுதல்: 16 லட்சத்தி 35 ஆயிரம்.

கேரள மக்கள் தொகை 1951 ல் இருந்ததை விடவும் 1991 ல் இரு மடங்காக இருந்தது. இதனைக் கணக்கில் கொண்டால், 1956 ல் குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்த மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 8 லட்சத்தி 50 ஆயிரம் வருகின்றது.

குறிப்பிட்ட பகுதிகளில் மலையாளிகளில் ஒருவர் கூட வசிக்காமல் முழுமையாக தமிழர்கள் மட்டுமே வசித்ததாகக் கணக்கில் கொண்டாலும் கூட 8.5 லட்சத்தைத் தாண்டவில்லை. 50 லட்சம் என்று தமிழ்மலர் கூறியுள்ளது எந்த அடிப்படையில் என்று விளக்குவார் என்று நம்புவோம்.

--
தமிழ்மலர் குறிப்பிட்டிருக்கும் கிண்ணக்கோரை தமிழகத்தில் இருப்பதாக விக்கிபீடியா கூறகின்றது. அதனால், கணக்கில் அதனை சேர்க்கவில்லை.

Unknown சொன்னது…

கட்டுரை மிகவும் அருமை. தமிழகத்திற்கு காங்கிரஸ் எதையும் செய்தது இல்லை. நிறைய பாதகங்களை தான் செய்துள்ளது.
கண்டிப்பாக காங்கிரசை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். ராகுல் மட்டுமல்ல வேறு யாராலும் காங்கிரசின் அழிவை தமிழகத்தில் தடுக்க முடியாது.

தமிழ்மலர் சொன்னது…

திரு கும்மி,

கேரளாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 75 லட்சத்துக்கும் மேல் இதில் மூன்றில் இரண்டுபங்கினர் தமிழக எல்லையோரங்களில் வாழ்கிறார்கள்.

சின்னசின்ன பகுதிகளை குறிப்பிட்டு இங்கு இத்தனைபேர் அங்கு இத்தனை பேர் என்பதால் கணக்கு கூட்டிவிட முடியாது.

தமிழகம் என்பது மேற்கே அரபிக்கடல் வரை இருந்தது. அதாவது தற்போது கேரளாவின் பொன்னானி துறைமுகம், கோழிக்கோடு, காசர்கோடு, மலப்புரம் எல்லாம் இணைந்து தமிழகத்தின் மலபார் மாவட்டமாக இருந்தது.

திருச்சூர் முதல் கன்னியாகுமாரி வரையுள்ள திருவிதாங்கூர் சமசுதானம் தான் கேரளாவாக இருந்தது. பலமுறை கேட்டும் குமரியை விட்டுக்கொடுக்காத கேரளா மலபார் மாவட்டத்தை அடியோடு கொடுத்ததும் குமரியை விட்டுக்கொடுத்தது.

வேண்டும் என்றால் மலபார் மாவட்டத்தையும் கணக்கில் கூட்டி கழித்து பாருங்கள் 50 லட்சம் வரும்.

எனது வாதம் தமிழர்கள் தாரைவார்க்கப்பட்டார்களா இல்லையா என்பது தான். அதை விட்டுவிட்டு எத்தனைபேர் என்ற புள்ளிவிவரத்தின் ஏற்ற இறக்கத்தில் அல்ல.

உமர் | Umar சொன்னது…

@தமிழ்மலர்

முன்னர் பாலக்காடு என்றீர்கள். இப்பொழுது மலப்புரம் வரை போய்விட்டீர்கள். 50 லட்சமும் இப்பொழுது 75 லட்சமாகிவிட்டது.
:-)

பீர்மேடு, தேவிகுளம் தொடங்கி பாலக்காடு, மலப்புரம் வரை போய் விட்டோம். கொஞ்சம் "மதராஸ் மனதே" / "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" பற்றியும் பேசிவிடுங்களேன். மொழிவாரி மாநிலப் பிரிப்பில் இருக்கும் சிக்கல்கள் அனைத்தையும் பேச வசதியாக இருக்கும்.

.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்