பின்பற்றுபவர்கள்

28 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் - (பாரிஸ், ஈபிள் கோபுரம், ஒரு பதிவர்) 5

முற்றிலும் முகம் தெரியாதவர் இருக்கும் நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் அனைத்து விவரங்கள் தெரியாது பெரிய காரணம் இல்லை என்றாலும், போதுமான பணம் இருந்தும் 'மொழி தெரியாத இடம்' என்கிற லேசான கலக்கம் இருக்கும். பாரிஸ் செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு எடுத்த பிறகு எனக்கு தெரிந்த ஒரே ஒருவர் பாரிஸ் பதிவர் நம் யோகன் அண்ணன் அவர்கள் தான். அவருடன் ஓரிரு முறை மின் அஞ்சல் தொடர்புகள் இருந்தது, அவருடைய புகைப்படம் கூட பார்த்தது இல்லை. முன்கூட்டியே பாரிஸ் வருவதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் அல்லது அவரது வீட்டிலேயே தங்கலாம் என்று சொல்லி இருந்தார். இருந்தும் பாரிசில் நாங்கள் தங்குவதற்கு முன்கூட்டியே வேறொரு ஓட்டலில் உறவினர் லண்டனில் இருந்தே முன்பதிவு செய்துவிட்டார். லண்டனில் இருக்கும் போது அதை யோகன் அண்ணனிடம் சொல்லிவிட்டேன். பரவாயில்லை வந்ததும் போன் செய்யுங்கள் எங்கிருந்தாலும் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தார். பாரிஸ் என்றதும் ஈபிள் கோபுரம் மற்றும் டிஸ்னி லேண்ட் மற்ற இடங்கள் தவிர்த்து வேறெதுவும் இருப்பது தெரியாது. எங்கு எப்படி செல்ல வேண்டும் என்கிற விவரம் எதுவும் தெரியாமல் ஓட்டல் முகவரியை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் வழியை கூகுள் மேப் வழியை நிழல்படக் கருவியில் படமெடுத்துக் கொண்டேன்.

*****
அக்டோபர் 20, 2009, அன்று மதியம் 12:29க்கு Euro Star விரைவு தொடர் வண்டியில் லண்டனில் இருந்து பாரிஸ் Gare Du Nord என்னும் நிலையத்திற்கு பயணம் செய்ய வேண்டும். அன்று காலை 9 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும் திட்டத்துடன் எழுந்தும் கிளம்புவதற்கு 10 மணி ஆக்விட்டது. வழியெங்கும் மெதுவான போக்குவரத்து 11:40 க்கு அங்கிருந்தால் தான் நுழைவு அனுமதி சீட்டு பெறமுடியும், நெரிசல் காரணமாக மொதுவான போக்குவரத்து பிரதமர் இல்லம் வழி சாலை வழியாக இரயில் நிலையத்திற்கு சென்றி கொண்டிருந்தோம். ஒருவழியாக 12:00 மணிக்கு இரயில் நிலையத்தை அடைந்து விரைவாக அனைத்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு, குடிநுழைவு சோதனைகளைத் தாண்டி செல்லும் போது 12:20 ஆகி இருந்தது, உறவினர்களுக்கு விடை சொல்லிவிட்டு சரியாக இரயில் புறப்படும் 5 நிமிடத்திற்கு முன்பே உள்ளே சென்றுவிட்டோம்.




Euro Star மிக நீளமான தொடர்வண்டி, உள்ளேயே பானங்களுடன் சிற்றுண்டி விற்பனை பெட்டியும் நடுவில் இருந்தது. விலை எல்லாம் பவுண்டுகளில் லண்டனைக் காட்டிலும் இருமடங்கு இருந்தது. இரயில் நகரத்துக்குள் மெதுவாக விரைவெடுத்து நேரம் செல்லச் செல்ல மிகவும் விரைவாக சுமார் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.




வண்டியில் ஆட்டம், இரைச்சல் எதுவும் இல்லை. மகளுக்கும், மனைவிக்கும் லண்டனை விட்டுச் செல்வதில் ஆற்றமை இருந்தது. 'லண்டனிலேயே இன்னும் இருந்திருக்கலாம்' என மகள் அழுது கொண்டே வந்தாள். இலண்டனில் இருந்து ஐரோப்பாவிற்குள் கடல் சுரங்கப் பாதைவழியாக சென்றது. கடல் சுரங்கத்தின் ஊடாக சுமார் இருபது நிமிடப் பயணம். கடலுக்குள் தான் செல்கிறது என்பதை உணரும் படி எதுவும் இல்லை. சுமார் இரண்டு அரை மணி நேரப் பயணம், இலண்டனும் பிரான்சும் நேர அளவுகளில் 1 மணி நேர வேறுபாடு, பிரான்ஸ் 1 மணி நேரம் முன்னதாக இருந்தது. பிரான்ஸ் பாரிஸ் கார் டு நா(ர்)ட் (Garu Du Nord) நிலையத்தை அடையும் போது மாலை 4க்கு மணிக்கும் மேலாக ஆகி இருந்தது. இடையில் அண்ணன் யோகன் அழைத்து நாங்கள் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு அன்று மாலையே சந்திப்பதாகச் சொல்லி இருந்தார். நாங்கள் ஓட்டலுக்குச் சென்று பெட்டிகளைப் போட்டுவிட்டு ஈபிள் கோபுரம் பார்க்கச் செல்கிறோம், அங்கு வந்துவிடுங்கள் என்று சொல்லி இருந்தேன்.


Garu Du Nord நிலையத்தில் இருந்து அடுத்த gare du li ist என்ற நிலையத்தின் அருகில் தான் தங்கும் விடுதி, நடந்து செல்லும் தொலைவு என்றாலும் வழிகளைத் தேடி, பெட்டிகளை இழுத்துக் கொண்டு செல்வது சற்று கடினமாகவே இருந்தது, இருந்தாலும் மாலை 5 மணி வாக்கில் விடுதியை அடைந்து, சிறுது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு 5:30 மணிக்கு ஈபிள் கோபுரம் பார்க்கக் கிளம்பினோம்.

எப்படி செல்வது என்கிற குழப்பம். நேராக gare du li ist நிலையம் சென்று தொடர்வண்டி வழித்தடங்களைப் பார்த்தால் தலையைச் சுற்றும் அளவுக்கு குறுக்குக் கோடுகள். ஒருவழியாக நிலைய உதவியாளரிடம் கேட்க பாரிஸ் நகரத்தின் மையப்பகுதிகளுக்குச் செல்லக் கூடிய இரண்டு நாட்களுக்கான பயணச் சீட்டுகளை மொத்தம் 32 Euro விற்கு மூவருக்கும் சேர்த்து கொடுத்திருந்தார். இடையில் நிலையம் மாறி இரண்டு தொடர்வண்டிகள் வழியாக பயணத்து குறிப்பிட்ட இடத்தில் இறங்கினால் தான் ஈபிள் கோபுரத்திற்கு செல்ல முடியும். வழித்தட வழிகாட்டியில் ஈபிள் கோபுரத்தைச் சுற்றி மூன்று நிலையங்கள் இருப்பது போன்று குறிப்பிட்டு இருந்தது, அதில் எதற்கு, எந்த தொடர்வண்டியில் எந்த பக்கம் செல்வதில் ஏறுவது என்கிற குழப்பம் ஏற்பட, வழித் தடம் மாறும் இடத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தோம்.

நாங்கள் விழிப்பதைப் பார்த்த ஈழத்து சகோதரி ஒருவர் அழைத்துக் கொண்டு சென்று சரியான தொடர்வண்டி நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்று விட்டு, இந்த நிலையத்தில் இறங்கினால் புகைப்படம் எடுத்துக் கொண்டே செல்லலாம் என எங்கே இறங்க வேண்டும் என்றும் சொல்லிச் சென்றார் ( அங்கங்கே பாரிஸில் தடுமாறும் இந்தியர்களுக்கு ஈழத் தமிழர்களே பெரிதும் உதவுகிறார்கள், அவர்கள் எல்லோருமே விரைவாக ஓடிக் கொண்டு இருந்தாலும் நமக்காக நின்று விவரம் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள், அதை அங்கிருந்த மற்ற நாட்களிலும் உணர்ந்தேன்)

நிலையத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கமாக திரும்பி Avenue de President Wilson பகுதியின் இருபெரும் கட்டிடங்களுக்கு இடையே பார்த்தால் சுமார் 500 மீட்டர் தொலைவில் ஈபிள் கோபுரம் வியப்பூட்டியது. வெளிச்சம் மங்கும் நேரம், விளக்குள் எரியத் தொடங்கவில்லை. இயற்கை எவ்வளவோ அறைகூவல் இட்டாலும் இதுவும் ஒரு அறைகூவல் என மனித அறைகூவலாக ஈபிள் கோபுரம் நிற்கும் காட்சியை எத்தனை படக்கருவியில் எடுத்துப் படத்தைப் பார்த்திருந்தாலும் நம் கண்ணின் முன்பே சாட்சியாக நிற்பதைப் பார்ப்பதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது. நாங்கள் நின்று கொண்டிருந்தது நிழல்படம் எடுக்க ஏற்ற இடம், கொஞ்சம் உயரமான இடம் நிறைய பேர் அங்கு நின்று கொண்டு இருந்தனர். அங்கிருந்து ஈபிள் கோபுரம் நோக்கி நடந்தோம். கோபுரத்தில் விளக்குள் எரியத் தொடங்கின. இன்னும் கொஞ்சம் இருட்டியது. இன்னும் கொஞ்சம் தொலைவை நெருங்க நெருங்க. மின்னி மின்னி மறையும் விளக்கொளிகளை ஈபிள் கோபுரம் முழுவதும் மின்னியது. பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி.




அந்த இடத்தை நெருங்கும் போது யோகன் அண்ணா தொலைபேசியில் அழைத்து வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். மணி மாலை 7 ஆகி இருந்தது 7:30 மணிக்கு வந்துவிடுங்கள் என்றேன். கோபுரத்தை நெருங்க, இரவு வேளையில் பாரிஸ் நகரை கோபுரத்தின் மீதிருந்து பார்க்க சரியான தொரு சுற்றுலாவினர் கூட்டம் அனுமதிச் சீட்டுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நாங்களும் நின்றோம் 5 நிமிடத்திற்கு பிறகு உச்சிக்கு செல்ல நபர் ஒன்றுக்கு பெரியவர்களுக்கு 13 ஈரோ. சிறுவர்களுக்கு 9.90 ஈரோ. எங்களுக்கு 35.90 Euro ஆகியது.

முதலில் சரிவான கோபுரப் பகுதிக்கு இழுவை இரயில் போன்ற ஊர்தி செல்கிறது, அது சுமார் 15 வினாடி தான். அந்த தளத்திலிருந்து மேலே செல்ல 4 மின் தூக்கிகள் செயல்படுகின்றன. மின் தூக்கி விரைவான வேகம்...சுமார் ஒரு நிமிடத்திற்கும் மேலாக செல்லச் செல்ல....உயரம் அடி வயிறு கூசியது....'Still Going...Still Going' என்று சிலர் ஒருவித அச்சத்துடன் சொல்லிக் கொண்டு இருந்தனர். உச்சியிலும் இரு தளங்கள். ஒன்று முழுவதும் கண்ணாடி வழியாக பார்பதாகவும், அதற்கு மேல் உள்ள தளம் கம்பி வேலிகள் வழி பார்ப்பதற்காகவும் அமைக்கபட்டு இருந்தன. கண்ணாடி அமைக்கப்பட்டத் தளத்தில் காற்றின் வேகம் குறைவு. மேல் தளத்தில் முகத்தில் அறையும் காற்று. அங்கிருந்து சுற்றிப்பார்க்க கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பாரிஸ் நகரம் ஒளிப் பூக்களாக தெரிந்தன. அதன் அழகை மேலும் கூட்ட ஈபிள் கோபுரத்தில் இருந்து ஒளிக்கற்றைகள் நான்கு நகரங்களுக்கு மேலாக சுழன்றது. மின் தூக்கி வழியாக கீழே இறங்கி வந்தோம். இழுவை வண்டியின் மிகப் பெரிய சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன.






கீழே இறங்கி வந்து மகளையும் மனைவியையும் ஒர் இடத்தில் உட்கார வைத்துவிட்டு, யோகன் அண்ணா நின்று கொண்டிருப்பதாகச் சொன்ன இடத்தை நெருங்கும் முன் அவரே எதிர் கொண்டார். முன்பின் புகைப்படத்தில் காணாத மற்றொரு மனிதர். அருகில் வந்து கைகளைப் பற்றிக் கொண்டு தழுவல்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்படியே பேசிக் கொண்டே மகளையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு இறங்கிய தொடர்வண்டி நிலையம் நோக்கி நால்வராக நடந்தோம். மீண்டும் கோபுரத்தின் ஒளி பின்னனியில் புகைப்படம் எடுக்க உதவி செய்தார்.



அவரே அழைத்துச் செல்ல இரயில் நிலையம் சென்று அவர் வீட்டுக்கு அருகில் இறங்கி 10 நிமிடம் நடை. அவர் விரைவாக நடந்தார், எங்களால் அவர் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காரணமாக பயணக்களைப்பும் சேர்ந்து சோர்ந்து போக வைத்திருந்தது. அவர் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியுடன் அறிமுகம் செய்து வைத்தார், பின்னர் இளைப்பாறிவிட்டு, அவர்கள் தந்த சுவையான சிகப்பு அரிசி கோதுமை மாவு சேர்த்து செய்த ஈழத்துப் புட்டு பல்வேறு குழம்புகள் (பருப்பு, பால்கறி, முருங்கைக்காய் குழம்பு, கத்திரிக்காய் குழம்பு, சம்பால், இன்னும் பல) கறிகளுடன் உண்டோம். மகள் மிகவும் களைப்பாக இருந்ததால் எங்கள் உணவில் கலந்து கொள்ளாது தூங்கிவிட்டாள்.



யோகன் அண்ணா பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். கொஞ்சும் ஈழத்து தமிழ், மிகவும் மென்மையான கொஞ்சம் விரைவான பேச்சு, அன்பு மழையாகவே அவரும் அவரது மனைவியும் பேசிப் பேசி கவனித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. முதன் முதலில் பார்ப்பவர்கள் நீண்ட நாள் உறவினர் போல் அன்பு பாராட்டுவதும், அப்படியே உணரவைப்பதும் இந்த உலகில் மிகக் குறைவான நடைமுறைதான். அவர்களிடம் அந்த அன்பை உணர்ந்தோம்.

அவர்கள் இல்லத்திற்குச் சென்ற பிறகு தான் முன்பே இங்கேயே வந்து தங்கி இருக்கலாமே என்று தோன்றியது. நேரம் இரவு 10:40க்கும் மேல் ஆகியது. புகைப்படங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். ஓட்டலில் விடுவதற்காக அவரும் கூடவே கிளம்பினார். இரயிலில் செல்லலாம் என்று அருகில் இருந்த மற்றொரு பேருந்து நிறுத்தம் சென்றோம். மகளுக்கு இருந்த உடல் அசதியைப் பார்த்துவிட்டு, மனதுக்குள் ரயில் பயணம் சரிவராது என்று நினைத்தவராக உடனேயே கையைக் காட்டி ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஓட்டலுக்கே கொண்டு வந்து விட்டுவிட்டு அதற்கும் 16 Euro கட்டணம் அவரே செலுத்திவிட்டு, அங்கே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து அவர் வீட்டுக்கு திரும்பினார் அப்போது மணி இரவு 11:30க்கும் மேலாக ஆகி இருந்தது.

இப்படியும் மிக மிக நல்ல மனிதர்கள் நெருங்கிய உறவினர்கள் போல் எனக்கு உலகெங்கும் கிடைக்கிறார்களே.....இதைவிட பதிவில் எழுதுவதற்கு வேறு என்ன பயன் இருக்கிறது ? நினைக்கையில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஏற்பட்டது.

அடுத்த நாள் பயணம் புகழ்பெற்ற சிறுவர்கள் உல்லாச பூங்காவான பாரிஸ் டிஸ்னி லேண்ட் !

12 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சூப்பர்!

ஆயில்யன் சொன்னது…

ஈபில் டவர் வெவ்வேறு விதமான புகைப்படங்களோடு, முதல்முறையாக பாரிஸ் யோகன் அண்ணாவின் புகைப்படம் பார்த்து மகிழ்கிறேன்!

:)

மணிகண்டன் சொன்னது…

நல்லா எழுதறீங்க கோவி.

உங்க லண்டன் பதிவு கமெண்ட் இப்ப தான் படிச்சேன். நான் netherland ல இருக்கேன். (பாரிஸ் பக்கம் தான்).

10 - 11 வாக்குல eiffel டவர் எதிர்ல உட்க்கர்ந்து பார்த்தா நல்லா இருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

டிரையினில் உட்கார்ந்து இருக்கும் படம் போட்டோ ஆப்த இயர் 2009..!

அறிவிலி சொன்னது…

ஈபில் டவர் படங்கள் ஜூப்பர்.

கோவி.கண்ணன் சொன்னது…

/அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சூப்பர்!
//

மிக்க மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயில்யன் said...
ஈபில் டவர் வெவ்வேறு விதமான புகைப்படங்களோடு, முதல்முறையாக பாரிஸ் யோகன் அண்ணாவின் புகைப்படம் பார்த்து மகிழ்கிறேன்!

:)
//

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி ஆயில்யன்

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
நல்லா எழுதறீங்க கோவி.

உங்க லண்டன் பதிவு கமெண்ட் இப்ப தான் படிச்சேன். நான் netherland ல இருக்கேன். (பாரிஸ் பக்கம் தான்). //

அடுத்த முறை சந்திப்போம் !
:)

//10 - 11 வாக்குல eiffel டவர் எதிர்ல உட்க்கர்ந்து பார்த்தா நல்லா இருக்கும்.
//

இரவு ? பகல் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
டிரையினில் உட்கார்ந்து இருக்கும் படம் போட்டோ ஆப்த இயர் 2009..!
//

:)

காபி ரைட் செய்துடுறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
ஈபில் டவர் படங்கள் ஜூப்பர்.
//

நன்றி

குமரன் (Kumaran) சொன்னது…

யோகன் ஐயாவைச் சந்தித்தீர்களா? ரொம்ப நல்லது. அவருடைய அன்பில் நனைவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஐரோப்பாவிற்குச் செல்ல வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆவல் உண்டு. பையன் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆகட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். போகும் போது கட்டாயம் ஐயாவைச் சந்திக்க வேண்டும்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

பாரீஸ் பயணக்கட்டுரை - நன்கு அமைந்தது. மூன்று முறை இலண்டன் வந்தும் பாரீஸ் செல்ல இயலவில்லை.

ம்ம் அடுத்த முறை பாத்துடுவோம்ல.

உலகில் எங்கு சென்றாலும் அங்கு ஒரு தமிழ்ப் பதிவர் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ம்ம்ம்ம் அதிலும் கோவி பதிவர்களைச் சந்திப்பதில் மிக ஆர்வமும் ஆசையும் உடையவர்.

நல்வாழ்த்துகள் கோவி - நல்லதொரு பயணக்கட்டுரை எழுதியதற்கு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்