"தலைவரே 39 தான் கிடைக்கும் னு சொன்ன மாதிரியே..."
"அது போதாதும், ஒண்ணு தானே குறைச்ச போனால் போகுது, இது மாபெரும் வெற்றிதான்"
"அட அதச் சொல்லலை தலைவரே உங்க பையன் +12 ரிசல்டுல கணக்கில் 39 வாங்கி பெயிலாகி இருக்கானாம்"
****
நிருபர் : "சார் உங்க கட்சி இந்த தேர்தலில் பின்னடைஞ்சிருக்கிறதா எக்ஸிட் போல் கணிப்பு சொல்லுதே"
தலைவர் : "அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான் எங்க ஆளுங்க குத்தவே ஆரம்பிச்சாங்க"
நிருபர் : !!!! (கள்ள ஓட்டைச் சொல்றாரோ ?)
****
"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந்ததுமே... ரிசல்டு வருவதற்குள் வேகமாக செயல்படுகிறார்..."
"தொகுதி பணிகளுக்கு திட்டம் தீட்டச் சொல்லி வேட்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறாரா ?"
"கூட்டணி மாறிட்டார்"
***
"நம்ம கட்சி எப்படியும் இந்த தேர்தலில் தோத்துடும் போல இருக்கு..."
"என்னய்யா சொல்றே...நம்ம பாரம்பரிய வாக்களர்கள் போட்டாலே ஜெயிச்சிடுவோமே"
"இல்ல தலைவரே...நமக்கு 49 ஓ வில் ஓட்டுப் போடச் சொல்லி எதிர்கட்சிக்காரர்கள் நம்ம கட்சியின் கரைவேட்டியைக் கட்டிக் கொண்டு சென்று பொய் பிரச்சாரம் செய்துட்டாங்க......விழந்தது பூரா 49 ஓ வுக்காம்"
"........!"
***
"இந்த தொகுதியில் நாமதான் செயிப்போம் என்று எப்படி உறுதியாகச் சொல்றிங்க"
"இனிமே எம்பியை தொகுதிப் பக்கம் பார்க்க முடியாதுன்னு தீர்மானம் போட்டு, நம்ம கட்சி வேட்பாளரைக் கண்டு பிடிக்கச் சொல்லி அந்த தொகுதி மக்கள் ஆள்கொணர்வு மனு போட்டு இருக்காங்களாம்"
***
"நம்ம தலைவர் கூட்டணி கட்சி மீது கடுங் கோபமாக இருக்கிறார்"
"ஐயோ என்ன ஆச்சு"
"அவங்க நிற்காத தொகுதிகளில் எதிர்கட்சிகளிடம் கள்ள உறவு வைத்திருந்து அவர்களுக்கு வாக்களித்தது தெரிஞ்சுபோச்சாம்"
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
10 கருத்துகள்:
என்ன..கோவி பதிவர் ராதாகிருஷ்ணனுக்கு துரோகம் இழைத்துவிட்டாரா?
ஆமாம்..அவர் போட வேண்டிய பதிவை இவர் போடறாராம்.
//T.V.Radhakrishnan said...
என்ன..கோவி பதிவர் ராதாகிருஷ்ணனுக்கு துரோகம் இழைத்துவிட்டாரா?
ஆமாம்..அவர் போட வேண்டிய பதிவை இவர் போடறாராம்.
//
:)
ஒவியர்களிடம் ஒன்றை குறித்து வரையச் சொன்னால் அனைத்தும் ஒன்று போலவே இருக்காது.
சிந்திப்பது ஒன்றைப் பற்றி என்றாலும் சிந்தனைகள் வேறு அல்லவா ? உங்களுக்கு தோன்றும் ஜோக்குகளை தனிப்பதிவாக போடுங்க.
//தலைவர் : "அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான் எங்க ஆளுங்க குத்தவே ஆரம்பிச்சாங்க"
நிருபர் : !!!! (கள்ள ஓட்டைச் சொல்றாரோ ?)
//
:)))))
****
"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந்ததுமே... ரிசல்டு வருவதற்குள் வேகமாக செயல்படுகிறார்..."
"தொகுதி பணிகளுக்கு திட்டம் தீட்டச் சொல்லி வேட்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறாரா ?"
"கூட்டணி மாறிட்டார்"
****
TRS - கே சந்திரசேகர ராவ் !! இன்னும் கொஞ்சம் முன்னாடியே இந்த பதிவு போட்டு இருக்கணும். இப்ப என்னவோ இது செய்தி மாதிரி இருக்கு :)-
என்ன அண்ணே!
ஈழ ஆதரவு பதிவு எதுவும் இப்போது போடுவதில்லையே? :-)
பணநாயகம் வென்றது!ன்னு ஒரு பதிவு ரெடி பண்ணி வைங்க. நாளைக்கு காலை 10 மணிக்கு போட வசதியா இருக்கும்.
//லக்கிலுக் said...
என்ன அண்ணே!
ஈழ ஆதரவு பதிவு எதுவும் இப்போது போடுவதில்லையே? :-)
பணநாயகம் வென்றது!ன்னு ஒரு பதிவு ரெடி பண்ணி வைங்க. நாளைக்கு காலை 10 மணிக்கு போட வசதியா இருக்கும்.
//
பணம் கொடுத்த உங்கள் (கட்சி பற்றி) உங்களுக்கு உறுதியாகத் தெரிவதால் முந்திக்கிறிங்களோ.
நாளை காலை 10 மணி வரை உங்க மகிழ்ச்சியை, எதிர்பார்பை நான் கெடுக்க விரும்பல.
பதிவு தலைப்பில் தேர்தல் முடிவு குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறேன் இருக்கிறேன். நாளைக்கு மீண்டும் வந்து படிங்க.
:)
"கதர் வேட்டியை நம்பி கிழிந்து போன கரைவேட்டி" என்ற தலைப்பில் பதிவு ரெடி பண்ண அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
:)
Election results timer is set for Singapore. Top of the post....
Please set it for India, add 1.5 hours.
But officially the declaration will happen from 8 AM IST. Note it. ;-)
//Vinitha said...
Election results timer is set for Singapore. Top of the post....
Please set it for India, add 1.5 hours.
But officially the declaration will happen from 8 AM IST. Note it. ;-)
//
மாற்றி இருக்கிறேன். சுட்டியதற்கு நன்றி !
கலக்கல்......
ம்ம்ம்! ஆகட்டு! நாளை சந்திப்போம்!
கருத்துரையிடுக