பின்பற்றுபவர்கள்

7 பிப்ரவரி, 2009

அண்ணாச்சியின் பன்முகம் !

எழுத்தின் மூலம் வெகு விரைவில் ஈர்த்தவர்கள் பலரில் குறிப்பிடத் தகுந்த மற்றொருவர் வடகரை வேலன். ஒரு நண்பரின் துறுதுறு குழந்தை படத்தை புரொபைலில் போட்டு எழுதிவந்தார். தொடக்கத்தில் வயது தெரியாததால் பரிசல்காரனை ஒத்த வயதுடையவர் என்று நினைத்தேன். பிறகு அறிமுகம் கிடைத்த போது என்னைவிட இரண்டு/மூன்று வயது பெரியவர் என்று தெரிந்தது. "சிவகாசியில் ஒருவரையொருவர் அண்ணாச்சி என்றழைப்பதுதான் வழக்கம்" என்பதை நகைச்சுவையாக எழுதி இருந்தார். அந்த பதிவின் பின்னூட்டத்தில் வடகரை வேலனுக்கு 'அண்ணாச்சி' என்று பட்டம் கொடுத்தேன், பரிசல்காரன் மற்றும் பலர் வழிமொழிய அன்றுமுதல் பதிவுலகில் அண்ணாச்சி என்று பலரால் அழைக்கப்படுகிறார்.

அண்ணாச்சிக்கும் எனக்குமான பழக்கத்தில் தமிழகம் வந்தால் கோவைக்கு வருமாறு கேட்டிருந்தார். ஸ்வாமி ஓம்காரைப் பார்க்கப் போகும் முன்பு அண்ணாச்சிக்கு தொலைபேசியில் நான் கோவை வந்துவிட்ட தகவலை தெரிவித்தேன். மதியம் மணி 12 வரை ஒரு ஒப்பந்த புள்ளி (டெண்டர்) மீட்டிங் இருக்கிறது அதன் பிறகு வந்துவிடுகிறேன் என்றார்.

காலை 11:30 மணி அளவில் ஓம்காரைப் பார்த்துவிட்டு விடுதிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தேன். சுமார் 12:30 மணி அளவில் தொலைபேசியில் அழைத்து வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சிட்டி பார்க் ஹோட்டல் என்பது நினைவில்லாமல் சிட்டி டவர் ஹோட்டல் என்று சொல்லிவிட்டேன். அங்கு சென்று காத்திருந்துவிட்டு திரும்பவும் தொலைபேசியில் அழைத்தார். பிறகுதான் ஹோட்டலின் சரியான பெயரைப் பார்த்து அங்கே அருகில் இருந்த கோவிலுக்கு அருகில் வரச் சொன்னேன்.

சிறுது நேரத்தில் தன்னுடைய 'சொந்தக்'காரில் வந்தார். முகமெல்லாம் புன்னகை...கைகுலுக்கி என்னை காரில் ஏற்றிக் கொண்டார். அப்படியே ஒரு சின்ன வட்டம் அடித்து ஒரு பெரிய உணவகத்தில் நிறுத்தினார். ஓரளவு பெரிய உணவகம். மணி நன்பகல் 1:00 ஆகி இருந்தது. மதியம் முழுச்சாப்பாடு, பேபிகார்ன் மஞ்சூரியன், சூப்புடன் தொடங்கி ஐஸ்கிரீமில் முடிந்தது. அண்ணாச்சியே தொகையை செலுத்தினார்.


(அண்ணாச்சியின் FUN முகம் ஒன்று)


(அண்ணாச்சியின் FUN முகம் இரண்டு)

உணவின் போது அண்ணாச்சியின் தொழில் மற்றும் பலதகவல்களை பரிமாறிக் கொண்டார். பதிவர்கள் பலர் தொலைபேசியில் அழைத்து இருவரிடமும் பேசினார்கள். மும்பை அனுஜன்யாவை அழைத்து பேசி, பேசச் சொன்னார். அனுஜன்யா மும்பைக்கு வரும் வாய்பிருந்தால் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அண்ணாச்சி மும்பை சென்றால் அனுஜன்யா வீட்டிற்கும் சென்றுவருவாராம். இன்னொரு பாசக்காரர் மும்பையில் இருக்கிறார்...மும்பை போகிறவர்கள் கவனம் கொள்க...அவர் வீட்டுக்குச் சென்றால் கவளம் உண்டு :)


(அண்ணாச்சியின் FUN முகம் மூன்று)


(அண்ணாச்சியின் FUN முகம் நான்கு)

அண்ணாச்சி பழகுவதற்கு மிக இனியவர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அண்ணாச்சியின் பல்வேறு புன்னகை முகங்களை காணும் அனுபவம் எனக்கு கிட்டியது.


(அண்ணாச்சியின் FUN முகம் ஐந்து)

சுமார் 2:15 மணி, அதன் பிறகு திருப்பூர் செல்ல வேண்டி இருந்தால், அண்ணாச்சியின் அன்பு மழைக்கு குடை பிடிக்க நேரம் வந்துவிட, ஒருபுகைப்பட செசன் முடிய, திருப்பூர் விரைவாக செல்லும் வழிகளைக் கூறி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு பிரியா விடைபெற்றார்.


(அண்ணாச்சியும் நானும்)



இறங்கும் போது சிங்கையில் இருந்து வாங்கிச் சென்ற சாக்லெட் பேக் ஒன்றை அண்ணாச்சியின் செல்ல மகள்களுக்காகக் கொடுத்தேன். "பரிசலுக்கு வச்சிருக்கிங்களா...அவருக்கு 2 குழந்தைகள் இருக்கு...இதை அவருக்கு கொடுத்துடுங்களேன்....." என்றார். "அவருக்கு தனியாக வச்சிருக்கேன் அண்ணாச்சி' என்றதும் 'அப்ப சரி' என்றார். பரிசல் மீது இந்தளவு பாசம் கொண்டவரா ? வியந்தேன். இருவரின் நட்பு போற்றத்தக்கது.

அடுத்த நிலையம் திருப்பூர்...வண்டி 3 மணி நேரம் நின்றது.... அடுத்த பதிவில் தொடரும்...

19 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கோவி...உங்களைப்போல்..பதிவர்களில்..எனக்கு அதிகம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்.நான் ஏப்போதேனும் கோவை போனால் பார்க்கவிரும்புவது இவரைத்தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
கோவி...உங்களைப்போல்..பதிவர்களில்..எனக்கு அதிகம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்.நான் ஏப்போதேனும் கோவை போனால் பார்க்கவிரும்புவது இவரைத்தான்
//

உங்களுக்கும் என்னைப் போல்...'உங்களைப் போல்' என்று சொல்லும் வழக்கம் இருக்கிறதா ?
:) அப்படி சொல்லாமல் சொன்னால், நம்மை சொல்லவில்லையே என்று நினைப்பார்கள் என்று நானும் நினைப்பேன். நம்மிடம் புரிந்துணர்வு இருக்கிறது. 'உங்களைப் போல்' சொல்வதைத் தவிர்ப்போம் !

:)))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//"அண்ணாச்சியின் பன்முகம் !"
(அண்ணாச்சியின் FUN முகம் ஒன்று)//

என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?


அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?

சகலகலாப் பதிவர் சாமி நீங்க!

வடகரை வேலன் அவர்கள் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி!

அசோசியேட் சொன்னது…

அடுத்த முறை இந்தியா வரும்போது அவசியம் அனைவரையும் சந்திக்க ஆவல்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//"அண்ணாச்சியின் பன்முகம் !"
(அண்ணாச்சியின் FUN முகம் ஒன்று)//

என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?
//

வெளிச்ச பதிவரே... டைமிங் சூப்பர் !

//அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?
//

:)) அப்படி யோசிக்கவே இல்லை. ஆறு என்ன ஒரு முகம் சேர்த்து மொத்தம் ஏழாக இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ASSOCIATE said...
அடுத்த முறை இந்தியா வரும்போது அவசியம் அனைவரையும் சந்திக்க ஆவல்!
//

சென்றுவாருங்கள், அனைவரும் பழகுவதற்கு இனியவர்கள்.

யாம் பெற்ற இன்பம் !

anujanya சொன்னது…

நான் அறிமுகமானவர்களுடன் நல்ல கலகல பேர்வேழி. ஆனால், அதற்கு முன் தயக்கம் இருக்கும். வேலன் கூப்பிட்டு, அன்று உங்களுடன் பேசியதில் எனக்கும் மிக மகிழ்ச்சி. வேலனைப் பற்றி எவ்வளவு படித்தாலும் அலுக்காது. முன்னமே பரிச்சயம் என்றாலும், பரிசலுடன் பேசியது வேலன் மூலமே. வெயிலான் கூட அவ்வாறே. வேலன் மூலம் நெருக்கமான பிற நண்பர்கள் மாதவராஜ் மற்றும் காமராஜ். இவ்வாறு நட்பு வட்டம் பெரிதாவதற்கு அண்ணாச்சி ஒரு முக்கிய காரணம்.

பரிசல் மூலம் நர்சிம். நர்சிம் மூலம் அப்துல்லா 'அண்ணே' என்று தொடர்கிறது. தெரியாமலே நான் உரிமை எடுத்துக்கொள்வது வெண்பூ மற்றும் கார்க்கி. என்ன மாதிரி அவர்களும் யூத் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் :)))

அவசியம் அடுத்தமுறை மும்பையும் வாருங்கள். கவளம் கிட்டும்.

அனுஜன்யா

வெண்பூ சொன்னது…

சரியா சொல்லியிருக்கீங்க கோவி... எனக்கே முதலில் அவரிடம் பேசும்போது ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அதை அவரது பேச்சே தகர்த்தது எனலாம்.

ச‌மீப‌த்தில் அவ‌ர்க‌ள் சென்ற‌ சுற்றுலா ப‌ற்றி கேட்ட‌போது "என‌க்கே 10 வ‌ய‌சு க‌ம்மியான‌ மாதிரி ஃபீலிங்" என்றார். அதுதான் அவ‌ர‌து ப‌ல‌மே.

ஃபோட்டோல்லாம் அருமை..

//
பரிசல் மீது இந்தளவு பாசம் கொண்டவரா ? வியந்தேன்.
//
பரிசல் மட்டுமல்ல.. நான் அறிந்தவரை தன்னுடன் பழகும் ஒவ்வொருவருவரை பற்றியும் அவர் இதே அளவு கேர் எடுத்துக்கொள்வதாகவே தோன்றுகிறது..

வெண்பூ சொன்னது…

//
ஜோதிபாரதி said...
என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?

அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?
//

டைமிங்... கலக்கல்..

VSK சொன்னது…

எல்லாம் படிக்க இதமாத்தான் இருக்கு!

அதென்ன மழையா பெஞ்சுது அப்ப! குடையைப் பிடிக்க?

அதுவரை ‘அண்ணாச்சி’யின் அன்புமழையில் நனைஞ்சப்பறம், குடையை மடிக்கணுமா இல்லை பிடிக்கணுமா!

நாட்டாமை!... தீர்ப்பை மாத்து!!!!!!!!

நல்ல பதிவு கோவியாரே!

பரிசல்காரன் சொன்னது…

//இறங்கும் போது சிங்கையில் இருந்து வாங்கிச் சென்ற சாக்லெட் பேக் ஒன்றை அண்ணாச்சியின் செல்ல மகள்களுக்காகக் கொடுத்தேன். "பரிசலுக்கு வச்சிருக்கிங்களா...அவருக்கு 2 குழந்தைகள் இருக்கு...இதை அவருக்கு கொடுத்துடுங்களேன்....." என்றார். "அவருக்கு தனியாக வச்சிருக்கேன் அண்ணாச்சி' என்றதும் 'அப்ப சரி' என்றார். பரிசல் மீது இந்தளவு பாசம் கொண்டவரா ? வியந்தேன். இருவரின் நட்பு போற்றத்தக்கது.//

அதனால் தான் அவர் தாயுமானவராய் இருக்கிறார்.

நெகிழ்ந்தேன்.

பரிசல்காரன் சொன்னது…

@ அனுஜன்யா

//என்ன மாதிரி அவர்களும் யூத் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் :)))//

இவரைக் கண்டிக்க யாருமே இல்லையா..?

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்...

சென்ஷி சொன்னது…

ஏண்ணே! புன்னகை முகம்ன்னு ஒழுங்கா போட்டிருக்கலாமுல்ல.. பன் முகம்ன்னு போட்டதும் டீயோட யாராச்சும் லைன் கட்டி நின்னா என்ன செய்யறது...

ஆனாலும் அண்ணாச்சியோட புன்னகை செம்ம அழகு! :)

சென்ஷி சொன்னது…

////
ஜோதிபாரதி said...
என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?

அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?
//

அது பத்திரமா அவர்கிட்டயே இருக்குது :)

கிரி சொன்னது…

//பார்க் ஹோட்டல் என்பது நினைவில்லாமல் சிட்டி டவர் ஹோட்டல் என்று சொல்லிவிட்டேன்.//

வழக்கம் போல வேலைய காட்டி விட்டாரய்யா கோவி கண்ணன் :-)

//ஓரளவு பெரிய உணவகம்//

வேலன் கௌரி சங்கர் சாம்பார் வடை வாங்கி கொடுத்தீங்களா! ;-)

//அண்ணாச்சி பழகுவதற்கு மிக இனியவர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அண்ணாச்சியின் பல்வேறு புன்னகை முகங்களை காணும் அனுபவம் எனக்கு கிட்டியது.//

உண்மையிலே பழகுவதற்கு மிக இனியவர். என்ன பேசவது என்று கவலை பட தேவையில்லை, நமக்கு நன்கு கம்பெனி கொடுப்பார்.

ஆமா! சும்மா FUN முகம் FUN முகம் என்று கூறி விட்டு ஒரே மாதிரி எடுத்து வைத்து இருக்கீங்க.. வேலன் அவர்களை ஒரு தில்லான ஆடவிட்டு எடுத்து இருக்கலாம்..இல்லைனா நீங்க ஒரு ஆட்டம் போட்டு எடுத்து இருக்கலாம் ஹி ஹி ஹி

பழக இனிமையானவர்.. மற்றவர்கள் மனது புண் படும் படி எப்போதும் பேசமாட்டார்.

selventhiran சொன்னது…

அவருடைய அன்பு மழையில் நனைபவர்களில் ஒருவனாக இப்பதிவை வழிமொழிகிறேன்.

துளசி கோபால் சொன்னது…

இந்தமுறை பதிவர் சந்திப்பு சுற்றுலா ஸ்பெஷலா?

'பன்' முகங்கள் பார்த்து அடையாளம் மனசுலே வச்சுக்கிட்டேன்:-)))

priyamudanprabu சொன்னது…

நல்ல சுற்றுலா
இந்தியா போனால் சொந்தங்களை சுற்றியே காலம் போகுது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்