பின்பற்றுபவர்கள்

10 ஜூலை, 2007

தாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா ?

தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் மட்டும் பாவமா ?

பாரதியை தெரிந்தவர்களுக்கு, பாரதியின் பாடல்களை அறிந்தவர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கும் கூட தெரிந்த பாரதியின் பாடல்,

சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலம்
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்
.

சாதிகள் இல்லையடி என்று சொல்லி இருக்கிறார். மிகவும் அழகான வரி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியது, பாராட்டக் கூடியது. அடுத்தவரியில் 'குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' என்கிறார். இதில் தான் முரண்பாடு இருக்கிறது.
சாதிகளே இல்லையென்று சொல்லிவிட்டு, குலத்தை தாழ்த்தாதே உயர்த்தாதே என்பதில், குலம் இருக்கலாம் என்பது போலவும் அதில் உயர்வு தாழ்வு கூடாது என்று முண்டாசு கவிஞர் முரண்பாடாக சொல்லவருவது எதற்கு ?

பகவத் கீதையை பெருமையாக பேசுபவர் எவரும், அதில் உள்ள வருண பேதங்களையும் போற்றித்தான் ஆகவேண்டும் என்பதற்கு, அதைப் போற்றிய காந்தியடிகள், கோபால கிருஷ்ண கோகுலே, இராஜ கோபால் ஆச்சாரியார் மற்றும் நம் பாரதியாரும் விதிவிலக்கு அல்ல என்பதை அந்த 'குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' ஒற்றையடி சொல்லிவிடுகிறது. இவர்கள் முறையே மகாத்மா, சுதந்திர போராட்ட வீரர், மாமனிதர், மகாகவிஞர் என்று பண்புப் பெயர்களால் அழைப்பட்டாலும், சமூக மாற்றம் என்பதை 'குலமே கூடாது' என்று சொல்லி அதன் வழி பெரியார் ஏற்படுத்தியது போல் இவர்கள் ஏற்படுத்தவில்லை.

என்னதான் சமத்துவம் பேசினாலும் வருண வழி சமுக அமைப்புகளில் உள்ள நான்கு குல ஆதார பிரிவான பிராமன குலம், சத்ரிய குலம், வைசிய குலம் சூத்ர குலம் அப்படியே தொடரவேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள் ஆனால் அதில் உயர்வு தாழ்வு கூடாது என்று கூடுதலாக பொறுப்புணர்வை(?) வெளிப்படுத்தி அதற்கு கேடயம் அமைத்து இருக்கிறார்கள்.
குலங்கள் இருக்கலாம் ஆனால் உட்பிரிவான சாதிகள் கூடாது என்ற புரட்சிகருத்துக்களை (?)பல்வேறுவிதமாக சொல்லியே வருகின்றனர்.

குலங்கள் தொழில் அடிப்படையானது, அது பிறப்பு அடிப்படையில் அல்ல என்ற ஜல்லியை மாடுகள் பூட்டிய வண்டிகள் மூலம் அடித்த காலத்திலும் சரி, இன்றைக்கு அதே ஜல்லியை மிகவும் கஷ்டப்பட்டு கிரேன் மூலம் தூக்கி கொட்டினாலும் சரி, சாதிகள் பிறப்பு அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை எவரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. பின்பு ஏன் குலங்கள் தொழில் அடிப்படையிலானவை என்ற பழைய பல்லவியையே திரும்பவும் பாடவேண்டும்? காரணம் அப்படி சொல்லவிட்டால் சாதிகள் மறைந்துவிடும் என்ற மனக்கவலையே. குலங்களில் மூலம் அடைந்துவந்த பலன்கள் மறைந்துவிடும் என்பதாலே, உழைப்பை நம்பாமல் பிறப்பின் அடிப்படையில் பலனை அனுபவத்து வந்ததால்... இன்றும் உழைத்தால் தான் சோறு என்றிருக்கும் இந்த காலத்திலும் குலப்பெருமை பேசி பிதற்கின்றனர்.

நான் பதிவுகளை கவனித்து வரும் போது சாதி சண்டைகளையும் கவனித்துவருகிறேன். இதில் சாதிகளைக் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் இருக்கும். இவை முகம் சுளிக்கக் கூடியவை என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. தனி ஒருவன் செய்யும் தவறுகளுக்கு ஏன் ஒரு குலத்தையே கேவலப்படுத்துகிறார்கள் என்று நினைப்பதும் உண்டு. சிலர் பொறுக்க முடியாமல் 'ஒட்டு மொத்த குலத்தையே' கேவலப்படுத்துவது சரி அல்ல என்று சிலரின் பதிவை சுட்டி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள், சிலருடைய பதிவுகளின் பின்னூட்டமும், சில பதிவுகளும் ஒட்டு மொத்தமாக சில குலத்தினரை குறைசொல்வதை குறித்து குறைசொல்லும் பதிவுகளாக இருக்கிறது.

தன்னை நடுநிலைவாதி என்று கூறிக் கொள்பவர்கள் கூட அதே போல் 'ஒட்டு மொத்த சாதியை குறை சொல்வது தவறு' என்று சொல்கிறார்கள், குறிப்பாக ப்ராமனர், தேவர், வன்னியர், கவுண்டர் என ஒரு குறிப்பிட்ட சாதியனர் என்று தங்களை வெளிப்படுத்திக் கொண்டு எழுதுபவர்களுக்கு எதிராக அவர்களுடைய சாதி குறித்த மிக மட்டமான விமர்சனங்கள் வரும் போது நடுநிலைவாதிகளாக இருப்பவரும் கூட... அவை கண்டனத்துக்கு உரியவை ஏனென்றால் எனக்கு தெரிந்து இந்த சாதியை சேர்ந்தவர் நல்லவராக இருக்கிறாரே, ஏன் நானும் கூட இந்த சாதியில் பிறந்ததால் என்ன கெட்டவனாகவா இருக்கிறேன் ? என்பது போன்ற விவாதங்கள் வருகிறது. இதில் மறைமுகமாக கவனிக்க வேண்டியவை சாதிகள் இருக்கலாம் என்று சொல்லவருவதைத்தான் பார்க்க முடிகிறது. ஒருவன் செயல் சாதியை குறிக்கவில்லை என்றால், அவனை சார்ந்த சாதியை குறைத்துக் கூறும் போது, சாதியை உயர்வாக நினைக்காதவர்கள், சாதி பெருமை பேசாதவர்கள் ஏன் ஆவேசப்படவேண்டும். இப்படி நடந்து கொள்ளும் போதே சாதிதாக்குதல்கள் பற்றி குறைகூறுபவருக்கு 'மிதவாத சாதி உணர்வு' இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறதே.

ஒருவர் நல்லவராக இருப்பதை சாதியின் பின்புலமாக நீங்கள் பார்த்தால், ஒரு கெட்டவனின் பின்புலமும், செயலும ் அதே சாதியை சேர்ந்தும் சார்ந்தும் இருக்கும் பொழுது அதையேன் அந்த சாதியின் தாழ்வு என்று பிறர் சொல்லும் போது ஏற்க முடியவில்லை ? அந்த சாதிகள் போற்றி வளர்கப்படுவதுபோல், அதனால் பாதிக்கப்பட்ட பிறரால் தாக்கப்படும் என்பதும் சரிதானே ? அதாவது தனிப்பட்டவரின் நல்ல செயல்களுக்காக அவரது சாதியை பார்த்து சாதியை குறை சொல்லக் கூடாது என்று முட்டுக் கொடுப்பதும், சாதிப் பெருமை பேசி மற்றவர்களை மறைமுகமாக இழிப்பவர்களை எதிர்க்க ... அதே சாதியை சொல்லி அவரை தாக்குபவரின் செயலும் ஒன்றே.

சாதிகளைப் போற்றாதவர்கள், நடுநிலையாளர்கள் எவரும், உயர்த்தி பிறரைத்தாழ்த்தும் சாதிகள் எவை இருந்தாலும் அவை தாக்கப்படும் போது கவலைப் படத்தேவை இல்லை என்பது என்கருத்து. ஒரு சாதியில் பிறந்தவர் தன் சாதி உயர்ந்தது என்று சொல்லுவதை ஒப்புக் கொள்ள முடிந்தால் அதே சாதியால் ஒரு சமூகம் பாதிக்கப்பட்டதாக சொல்லி வேறுருவர் பழித்தால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பல நூறுவருடங்களாக பல சாதிகளைச் சேர்ந்தவர்களை பிறப்பின் அடிப்படையில் தரக்குறைவாகவே நடத்தப்பட்டு, இன்றும் அந்த இழிநிலை கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சிலர் இன்னும் தங்கள் சாதி உயர்ந்ததே, அதில் பிறந்ததில் பெருமை படுகிறேன் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் செயல்களை கண்ணுற்றால் பிறர் சாதிகள் தாக்கப்படும் போது மெளனமாகவும், அதே சமயத்தில் சந்தர்பம் கிடைத்தால் இவர்களே பிறரை அவர்கள் பிறந்த சாதிகளைச் சொல்லி தாக்கவும் செய்கிறார்கள்... அவனெல்லாம் யோக்கியமா ? என்று கேட்கவும் செய்கிறார்கள். இது ஒரு இரட்டை நிலை...எனவே
எந்த சாதியாக இருந்தாலும் அவைகளை வெளியில் சொல்வதே இழிவானது என்ற நிலைவரும் பொழுது சாதிகள் ஒழிந்து மனிதம் தழைக்கும்.

குலமே பாவம் தான், மனித குலம் பிடித்துக் வைத்துக் கொண்டுள்ள ஒரு நோய், அதை தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் மட்டும் தான் பாவமோ ?

குப்பையில் மாணிக்கம் கிடைத்தது என்ற ஒரே காரணத்துக்காக குப்பையை போற்ற முடியுமா ? அப்புறப்படுத்தத் தானே வேண்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா ! எந்த
குலமும் இங்கு வேண்டாமடி பாப்பா !

45 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஜிகே உங்களுக்கு தலைப்பு வைக்க தெரியலை
:(

SP.VR. SUBBIAH சொன்னது…

''சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலம்
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்.''

குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல்
பாவம்.அதனால் சாதிகள் இல்லையடி பாப்பா என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

என்ன ஜி.கே அந்த மாகவிஞனின்
பாட்டிலேயே குற்றம் காணலாகுமா?
அது முறையா?
தகுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR.சுப்பையா said...
''சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலம்
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்.''

குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல்
பாவம்.அதனால் சாதிகள் இல்லையடி பாப்பா என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

என்ன ஜி.கே அந்த மாகவிஞனின்
பாட்டிலேயே குற்றம் காணலாகுமா?
அது முறையா?
தகுமா?
//

ஐயா,
மகாகவி எல்லாம் தெரிந்தவர் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனல் முதலில் சொல்ல வேண்டியதை அடுத்து சொல்வதிலும் பொருள் இருக்கத்தான் செய்கிறது. அதற்கான காரணம் கீதை என்று சொல்லி இருக்கிறேன்.

சுத்திரனுக்கு ஒரு நீதி... தெண்டச் சோறு... என்று தொடங்கும் பாடல் கூடத்தான் இருக்கிறது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// மகேந்திரன்.பெ said...
ஜிகே உங்களுக்கு தலைப்பு வைக்க தெரியலை
:(
//

மகி,

இதுக்கெல்லாம் உன்னைப் போல் 'நயன்தாராவும் சிபியும்' என்றெல்லாம் தலைப்பு வைக்க முடியாது

நாமக்கல் சிபி சொன்னது…

/இதுக்கெல்லாம் உன்னைப் போல் 'நயன்தாராவும் சிபியும்' என்றெல்லாம் தலைப்பு வைக்க முடியாது//

இங்க கூட நான்தான் கிடைச்சேனா?

:(

சிவபாலன் சொன்னது…

GK,


Excellent Post!

நாமக்கல் சிபி சொன்னது…

//எந்த சாதியாக இருந்தாலும் அவைகளை வெளியில் சொல்வதே இழிவானது என்ற நிலைவரும் பொழுது சாதிகள் ஒழிந்து மனிதம் தழைக்கும்.
//

சூப்பர் பஞ்ச்!

//குலமே பாவம் தான், மனித குலம் பிடித்துக் வைத்துக் கொண்டுள்ள ஒரு நோய், அதை தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் மட்டும் தான் பாவமோ ?//

நியாயமான கேள்வியே!

குலம் இருந்தால்தான தாழ்த்தி உயர்த்தி சொலா முடியும்! குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க!

நான் புரிஞ்சிகிட்டது சரிதானே கோவி?


//குப்பையில் மாணிக்கம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக குப்பையை போற்ற முடியுமா ? அப்புறப்படுத்தத் தானே வேண்டும்.//

அப்புறப் படுத்தி வெளியில போட்டு கொளுத்திடுவோம்ங்கிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
/இதுக்கெல்லாம் உன்னைப் போல் 'நயன்தாராவும் சிபியும்' என்றெல்லாம் தலைப்பு வைக்க முடியாது//

இங்க கூட நான்தான் கிடைச்சேனா?

:(
//

சிபி,

ஊருக்கு இழிச்சவாய் யார் என்றால் பிள்ளையார் கோவில் ஆண்டி (aunty இல்லை :)) என்பார்கள், பதிவுலகிற்கு சிபியார்
:)

நாமக்கல் சிபி சொன்னது…

//ஊருக்கு இழிச்சவாய் யார் என்றால் பிள்ளையார் கோவில் ஆண்டி (aunty இல்லை :)) என்பார்கள், பதிவுலகிற்கு சிபியார்//

சத்தமா சொல்லாதீங்க!

அண்ணன் பாலபாரதி கோவிச்சிக்கப் போறாக!

G.Ragavan சொன்னது…

பாட்டில் பிழையில்லை. அது கொண்ட பொருளிலும் பிழையில்லை. நீங்கள் கொண்ட பொருளில்தான் பிழையுள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா...சரி புரிஞ்சது

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம். அப்படீன்னா..இந்தக் குலம் தாழ்ந்தது...அந்தக் குலம் உயர்ந்ததுன்னு சொல்றது பாவம். அப்படிச் சொல்லாதே.

அதாவது பல் சொத்தை கெடுதி. மிட்டாய் தின்னா பல் சொத்தை வரும்னு பாரதியார் சொல்றாரு. நீங்க மிட்டாய் தின்னா மட்டுந்தான் பல் சொத்தை வருமான்னு கேக்குறீங்க.

G.Ragavan சொன்னது…

கோவி, தமிழ்ப்பாக்களுக்குப் பொருள் கொள்கையில் அப்படியே பொருள் கொள்ளாதீர்கள். அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளும் படி எந்தக் கவிஞனும் எழுத மாட்டான். பூட்டுவிற்பொருள்கோள் வகைன்னு ஒன்னு உண்டு. அந்த வகை இந்தப் பாட்டுல நீங்க சொல்ற வரிகள். அவசரப்பட்டு படிக்காதீங்க. கொஞ்சம் ஆழப்படிங்க. இது என்னுடைய வேண்டுகோள்.

யோசிப்பவர் சொன்னது…

// குலத்தை தாழ்த்தாதே உயர்த்தாதே என்பதில், குலம் இருக்கலாம் என்பது போலவும் அதில் உயர்வு தாழ்வு கூடாது என்று முண்டாசு கவிஞர் முரண்பாடாக சொல்லவருவது எதற்கு ?
//

இதற்கு, சாதிகள் கிடையாது; அதனால், குலத்தால் ஒருவனை உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ சொல்லுவது பாவம் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

கோவி! பாட்டின் பொருளை சிதைத்து புரிந்து கொள்வது எல்லாவற்றிலும் பெரிய பாவம்!!!;-)

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
பாட்டில் பிழையில்லை. அது கொண்ட பொருளிலும் பிழையில்லை. நீங்கள் கொண்ட பொருளில்தான் பிழையுள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா...சரி புரிஞ்சது

குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம். அப்படீன்னா..இந்தக் குலம் தாழ்ந்தது...அந்தக் குலம் உயர்ந்ததுன்னு சொல்றது பாவம். அப்படிச் சொல்லாதே.

அதாவது பல் சொத்தை கெடுதி. மிட்டாய் தின்னா பல் சொத்தை வரும்னு பாரதியார் சொல்றாரு. நீங்க மிட்டாய் தின்னா மட்டுந்தான் பல் சொத்தை வருமான்னு கேக்குறீங்க
//

வாங்க ஜிரா,

குலத்தின் உட்பிரிவுகள் தான் ஜாதி என அறியப்படுகிறது.

குலங்களில் பிரிவுகளான சாதிகள் இல்லை, ஆனால் குலத்தில் உயர்வு தாழ்வு தேவை இல்லை என்கிறார் என்று புரிந்து கொண்டேன்.

சூத்திரன் தாழ்வானவன், பார்பான் உயர்வானவன் என்று தாழ்வு, உயர்வாக சொல்லவேண்டாம் என்று தான் புரிகிறதே அன்றி, சூத்திரனும் இல்லை பார்ப்பானும் இல்லை என்று சொல்லவருவது போல் எனக்கு புரியவில்லை. உங்களுக்கு தெளிவாக புரிந்தால் மகிழ்ச்சியே.

உங்கள் கருத்துக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
கோவி, தமிழ்ப்பாக்களுக்குப் பொருள் கொள்கையில் அப்படியே பொருள் கொள்ளாதீர்கள். அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளும் படி எந்தக் கவிஞனும் எழுத மாட்டான். பூட்டுவிற்பொருள்கோள் வகைன்னு ஒன்னு உண்டு. அந்த வகை இந்தப் பாட்டுல நீங்க சொல்ற வரிகள். அவசரப்பட்டு படிக்காதீங்க. கொஞ்சம் ஆழப்படிங்க. இது என்னுடைய வேண்டுகோள்.
//

ஜிரா,

சாதியும், குலமும் ஒன்று என்று வைத்துக் கொண்டால் அங்கு ஏன் இரண்டு பற்றியும் குறிக்கவேண்டும் ? ஜாதிகள் இல்லை, ஜாதியில் உயர்வு தாழ்வும் இல்லை என்று அதே பொருளில் 'சாதி' என்ற சொல்லை வைத்து பாட்டெழுத பாரதிக்கு தெரியாது என்றெல்லாம் என்னால் நம்ப முடியாது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//யோசிப்பவர் said...
இதற்கு, சாதிகள் கிடையாது; அதனால், குலத்தால் ஒருவனை உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ சொல்லுவது பாவம் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

கோவி! பாட்டின் பொருளை சிதைத்து புரிந்து கொள்வது எல்லாவற்றிலும் பெரிய பாவம்!!!;-) //

நீங்கள் யோசிப்பவர் இருந்தாலும் என் பதிவுக்க வருவதற்கு யோசிக்காமல் வந்து யோசித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறீகள். நன்றி.

ஜிராவுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்.

இதைப்பற்றி தமிழாராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தவேண்டும். நான் தெரிவித்திருப்பது ஐயமும், ஐயத்திற்கான காரணம் மட்டுமே, நான் கொண்ட பொருள் சரியென்று வாதம் செய்யவில்லை. கிடைக்கும் மாற்றுவிளக்கங்கங்கள் இன்னும் விளக்கமாக கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

VSK சொன்னது…

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கில் பாரதியை ஆராயப் புகுந்திருக்கிறீர்கள்.

மெத்த மகிழ்ச்சி.

இந்தத் தனிமனிதச் சுதந்திரத்தினைத்தானே அவன் வலியுறுத்தினான்.

எனவே எவன் வேண்டுமானாலும் எவனையும் எதுவும் சொல்லலாம் என்ற அளவில், இது வரவேற்கத்தக்கதே

ஆனல், சொல்லும்முன் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனக்குத் தோன்றிய ஒன்றினை மட்டும் பொத்தாம் பொதுவில் சொல்லிவிடக் கூடாது.

முதலாவது, தவறு, பாட்டின் வரிகளை விருப்பம் போல் சிதைத்தது, தனக்குச் சாதகமாக.

அவன் சொன்னது இது!

"சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

நீங்கள் சொல்லியிருப்பது இது:

சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலம்
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்.

இந்த வேறுபாடு, பாட்டையே சிதைத்திருக்கிறது.

இதை வைத்து நீங்கள் சொல்லியிருக்கும் வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இரண்டிற்கும் பெருத்த வேறுபாடிருக்கிறது.

தாழ்த்தி உயர்த்தி சொல்லல் வேறு, தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேறு.

இங்கேயே பாதிவின் நேர்மை அழிந்து போகிறது.

அவன் சொல்லாத ஒன்றுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்?

4, 4 வரிகளாக அவர் சொல்லியிருக்கும் அந்த 'பாப்பா பாடலை" உங்கள் வசதிக்காக இரு வரிகளை மட்டுமே வைத்து சாடியிருக்கிறீர்கள்.

அடுத்த இரண்டு வரிகளோடு சேர்த்துப் படித்தால்தான் இந்தச் செய்யுள் முழுமை பெறும்.

ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை.

செய்திருப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவும் இல்லை.

அப்படி என்ன சொல்கிறான் அவன்?

"நீதி, உயர்ந்த மதி, கல்வி--அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"

மற்றவர்களெல்லோரும் கீழோர் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.

இதற்கு மேல் நான் சொல்ல இந்தப் பதிவில் ஒன்றுமில்லை.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

விஎஸ்கே ஐயா,

பாரதியின் மீது உள்ள அபிமானம் உங்களை இப்படி சொல்லவைக்கிறது என்பதில் எனக்கு வியப்பில்லை.

'உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை'

என்று முழங்கிய பாரதி ஆங்கிலேயனுக்கு மண்ணிப்புக்கடிதம் எழுதியது ஆவணமாகி அவரின் இரட்டை நிலை வெளிப்பட்டு இருப்பெதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று நினைக்கிறேன். தங்கள் கருத்துக்கு உரிய மதிப்பு என்றும் உண்டு.

:)

சிவபாலன் சொன்னது…

GK,

இங்கே கேள்வி என்னவென்றால்

சாதி இல்லை..

குலம் உண்டா? என்பதுதான்

மற்றபடி ஒவ்வொருவரும் தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கேள்விக்கு பதில் வரவில்லை என்பதே என் எண்ணம்.

பாரதியும் மனிதன் தான். அவர் படித்த கீதையின் தாக்கம் இருந்திருக்கலாம். இதை சரியான ஆதாரத்துடன் மறுக்கும் கருத்தை யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கில் பாரதியை ஆராயப் புகுந்திருக்கிறீர்கள்.

மெத்த மகிழ்ச்சி.

இந்தத் தனிமனிதச் சுதந்திரத்தினைத்தானே அவன் வலியுறுத்தினான்.

எனவே எவன் வேண்டுமானாலும் எவனையும் எதுவும் சொல்லலாம் என்ற அளவில், இது வரவேற்கத்தக்கதே
//

பெரியார் என்ன செய்தார் என்று உணர்ந்து கொள்ளாமலே சிலர் விமர்சனம் செய்யும் போது இதே போன்ற பொன்னான கருத்துக்களை அங்கே உதிர்த்திருக்கிறீர்களா ? என் கண்ணுக்கு எதுவும் அகப்படவில்லை.

பாரதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்றால் நீங்கள் செய்யாதீர்கள்.

இங்கே 'எவன்' என்று சொல்லி இருப்பதிலிருந்தே உங்கள் ஆத்திரம் தெரிகிறது. என்னை தனிப்பட்ட முறையில் சொன்னால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் இந்த 'எவனை' அவ்வாறு கருதமுடியவில்லை. நான் நினைப்பது சரிதான் என்றே நினைக்கிறேன்.

//தாழ்த்தி உயர்த்தி சொல்லல் வேறு, தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் வேறு.//

எழுத்துதான் வேறு வேறு என்ன வேற்றைச் சொல்ல வருகிறீர்கள் ? வேறு சொல்லிவிட்டால் முடிந்துவிட்டதா ?

//இதை வைத்து நீங்கள் சொல்லியிருக்கும் வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

என்னுடைய 90 விழுக்காட்டு பதிவுகளில் உங்கள் நிலை இதுதான் என்பதால் வியப்பு இல்லை.

//இங்கேயே பாதிவின் நேர்மை அழிந்து போகிறது.

அவன் சொல்லாத ஒன்றுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்?

4, 4 வரிகளாக அவர் சொல்லியிருக்கும் அந்த 'பாப்பா பாடலை" உங்கள் வசதிக்காக இரு வரிகளை மட்டுமே வைத்து சாடியிருக்கிறீர்கள்.

அடுத்த இரண்டு வரிகளோடு சேர்த்துப் படித்தால்தான் இந்தச் செய்யுள் முழுமை பெறும்.

ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை.

செய்திருப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவும் இல்லை.

அப்படி என்ன சொல்கிறான் அவன்?

"நீதி, உயர்ந்த மதி, கல்வி--அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"

மற்றவர்களெல்லோரும் கீழோர் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறான்.

இதற்கு மேல் நான் சொல்ல இந்தப் பதிவில் ஒன்றுமில்லை.
//

சாதிக்கும் குலத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பாரதி அங்கே பயன்படுத்தி இருப்பான் என்றெல்லாம் என்னால் கண்ணை மூடிக் கொண்டு நம்ப முடியாது. உங்களுக்கு பாரதியின் மேல் அப்பழுக்கு இல்லை என்றால் மகிழ்ச்சியே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,


Excellent Post!
//

சிபா,
பாராட்டிற்கும், பதிவை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

SurveySan சொன்னது…

interesting :)

பாரதியார் கிட்டயே நக்கீரர் வேலையா?

VSK சொல்ற மாதிரி, பாரதியார் சொல்லாதத அவரு சொன்ன மாதிரி இந்த பதிவு, உல்டா பண்ணுது.

பாவம்யா அவரு. நல்லது மட்டுமே செஞ்சவரு. அவரு பேர கெடுக்க வோணாம் :)

அமெரிக்கால, Carpenter, Mason, Goldsmith அது இதுன்னு, பந்தாவா அவங்க பேருக்கு பின்னாடி, அவங்க தாத்தா முப்பாட்டன் செஞ்ச தொழில வச்சுக்கிராங்க.
நம்ம ஊர்ல எப்படியோ, 'செய்யும் தொழில் தெய்வங்கர நெலம மாறி', யாரோ நடூல பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்க.

'குலம்' இருப்பதில் தவறில்லை.
எந்த குலத்தைச் சேர்ந்தவனும், என்ன தொழில் வேணா அவன் இஷ்டத்துக்கு செய்ய முடியும் சூழல் இருந்தா போதுங்கரது அடியேனின் கருத்து.

பி.கு: அடிக்க வந்துடாதீங்க மாமூஸ் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
interesting :)

பாரதியார் கிட்டயே நக்கீரர் வேலையா? //

வின்னுலகின் மன்னவன் என்று ஆத்திகர்களால் நம்பப்பட்ட சிவனையே நம் தமிழ் இலக்கியங்கள். அதாவது நற்கீரர்.

பாரதி சென்ற நூற்றாண்டு மனிதர் தானே. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். போதை (கஞ்சா, அபின்) அடிமையாகவும் இருந்தார் என்ற தகவல் தெரிந்து வருந்தியவர்களுல் நானும் ஒருவன்.

//

//VSK சொல்ற மாதிரி, பாரதியார் சொல்லாதத அவரு சொன்ன மாதிரி இந்த பதிவு, உல்டா பண்ணுது.//

அவருடைய கருத்தை அவர் சொன்னார், உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.

//பாவம்யா அவரு. நல்லது மட்டுமே செஞ்சவரு. அவரு பேர கெடுக்க வோணாம் :)//

பெரியாரை மாமா வென்று சிலர் காழ்ப்பு உமிழ்ந்ததைவிட எனது விமர்சனம் தரக்குறைவானதா ? பெரியாரை மாமா என்று சொன்னவர்களுக்கு எதிராக உங்கள் கண்டனங்களை நான் பார்க்கவில்லையே ?
:)

//
அமெரிக்கால, Carpenter, Mason, Goldsmith அது இதுன்னு, பந்தாவா அவங்க பேருக்கு பின்னாடி, அவங்க தாத்தா முப்பாட்டன் செஞ்ச தொழில வச்சுக்கிராங்க.
நம்ம ஊர்ல எப்படியோ, 'செய்யும் தொழில் தெய்வங்கர நெலம மாறி', யாரோ நடூல பாலிடிக்ஸ் பண்ணிட்டாங்க.//

அவன் கிட்ட போய் 'நீ நீச பய' என்று சொல்லும் துனிவிருந்தால் அவர்கள் அப்படி போட்டு இருப்பார்களா ? அல்லது துனியும் வாய்தான் கிழியாமல் இருக்குமா ?

//'குலம்' இருப்பதில் தவறில்லை.
எந்த குலத்தைச் சேர்ந்தவனும், என்ன தொழில் வேணா அவன் இஷ்டத்துக்கு செய்ய முடியும் சூழல் இருந்தா போதுங்கரது அடியேனின் கருத்து.//

அது எதுக்காக இருக்கனும் என்று சொல்கிறீர்கள் ? என்று அறிய ஆவலாக இருக்கிறேன். உயர்வு தாழ்வு கூடாது என்னும் போது குலம் எதற்கு இருக்க வேண்டும் ? முரண்பாடாக இருக்கிறதே சர்வேசா

//பி.கு: அடிக்க வந்துடாதீங்க மாமூஸ் :)//

'அடிக்கடி' வாங்க :)

SurveySan சொன்னது…

//அது எதுக்காக இருக்கனும் என்று சொல்கிறீர்கள் ? என்று அறிய ஆவலாக இருக்கிறேன். உயர்வு தாழ்வு கூடாது என்னும் போது குலம் எதற்கு இருக்க வேண்டும் ? முரண்பாடாக இருக்கிறதே சர்வேசா
//

இருந்தே ஆகணும்னு அவசியம் இல்ல.
ஆனா, இருக்கரதும் தப்பில்ல.
ஆண்டாண்டு காலமா இருந்தத ரப்பர் வச்சு உடனே அழிக்க முடியாதுல்ல.
பாரதியார், 'சாதி இல்ல' குலத்துப் பேர வச்சு மட்டம் தட்டரது தப்புன்றாரு.
அத படிச்ச எல்லாரும், ஆமாண்டா தப்புன்னு புரிஞ்சுகிட்டு, எல்லாரையும் மனுஷனா மதிச்சு நடந்தா, காலப்போக்குல, இந்த சாதி,குலம் எல்லாம் அழிஞ்சு போகும் வாய்ப்பிருக்கு.

ஆனா, 'பிரித்தாண்டு' குளிர் காயும் வர்கம் இருக்கர வரைக்கும், இதுக்கு அழிவே இல்லாம பாத்துப்பாங்க. :)

'மாமா' பெரியார்னு சொல்றதும் தப்புத்தேன். என் கண்டனத்தை இங்கே பதிகிறேன்.

ஆனா, பாரதியார் கவிதை பரிச்சியம் இருக்கர மாதிரி, பெரியார் பத்தி பெருசா ஒண்ணும் தெரியாது. ஸ்கூல்ல சொல்லிக் கொடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்.

ILA (a) இளா சொன்னது…

கோவி.ஒருவர் ஜாதிய பத்தி உயர்வா பேசினார்னா அது ஜாதி மேல இருக்கிற பற்று/வெறி. தாழ்வா சொன்னா சமுதாயம் அவரை பார்த்த பார்வை. ஆமா நான் இந்த ஜாதியில பொறந்தேன்,அதுக்கு என்ன இப்போ"ன்னு கேட்டாலோ , அதுக்கு ஒன்னும் இல்லேன்னு சொன்னா அவர் முதிர்ந்தவர், ஏன்னா அவர் பொறந்த ஜாதிய மாத்த முடியாது. ஆனாலும் உயர்வா பேசிக்கலைன்னா பிரச்சினையும் இல்லே. அவரா போய் இன்ன ஜாதி சொன்னா பிரச்சினை. ஆனா பாரதி எந்த அர்த்ததுல சொன்னாருன்னு தெரியல. நான் சொன்ன அர்த்தம் வெச்சு சொல்லி இருப்பாரோ?

ILA (a) இளா சொன்னது…

//குலம் இருந்தால்தான தாழ்த்தி உயர்த்தி சொலா முடியும்! குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க!

நான் புரிஞ்சிகிட்டது சரிதானே கோவி?//
சிபி சரியான அர்த்தம் சொல்லி இருக்காரு. நம்ம கட்சி போல

ஜோ/Joe சொன்னது…

இது ஒரு மொக்கைப் பதிவு என்று தான் எனக்கு படுகிறது.

பாரதி ஒன்றும் புனிதர் இல்லையென்றாலும் ,இந்த பாடலில் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை .VSK சொன்னது போல 'குலத்' என்பதற்கும் நீங்கள் தவறாக குறிப்பிட்ட 'குலம்' என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது .

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
இது ஒரு மொக்கைப் பதிவு என்று தான் எனக்கு படுகிறது.//

சூப்பர் கமெண்ட் !

//பாரதி ஒன்றும் புனிதர் இல்லையென்றாலும் ,இந்த பாடலில் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை .VSK சொன்னது போல 'குலத்' என்பதற்கும் நீங்கள் தவறாக குறிப்பிட்ட 'குலம்' என்பதற்கும் வேறுபாடு இருக்கிறது .
//

நீங்க சொல்வது சரிதான்.

நான் சில இடங்களில் விவாதம் செய்து எனர்ஜியை வீணாக்குவதில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி ஜோ

ஜோ/Joe சொன்னது…

//நான் சில இடங்களில் விவாதம் செய்து எனர்ஜியை வீணாக்குவதில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.//

இது என்ன கோவியாரே!சில இடங்களிலா ,சில பேரிடமா ? என் மேல் எதுவும் கொலை வெறியா? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

இது என்ன கோவியாரே!சில இடங்களிலா ,சில பேரிடமா ? என் மேல் எதுவும் கொலை வெறியா? :)) //

ஜோ,

பதிவை முழுதும் படிக்காமல், பாரதியை பற்றிய விமர்சனத்தை வைத்து 'மொக்கை' என்று சொன்னதற்கு மிகவும் மகிழ்கிறேன்.

அதற்கு மேல் உங்களுக்கு விளக்கி உங்கள் எண்ணங்களை இந்த குறிப்பிட்ட பதிவிற்கு மாற்றிக் கொள்ள செய்ய வைக்க முயற்சிப்பது தேவையற்றது என்றுதான் அதை புரிந்து கொள்ளவேண்டும்.

எந்த பதிவையும் எந்த விமர்சனமுமே இல்லாமல் எல்லோராலும் 'மொக்கை' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியும். புரிந்தால் சரி

ஜோ/Joe சொன்னது…

மன்னிக்கவும் கோவியாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
மன்னிக்கவும் கோவியாரே! //

இது தேவையற்றது ஜோ

எனது பதிவில் என்னை திட்டி இருந்தாலும் நேரம் செலவழித்து படித்துவீட்டுதானே திட்டுகிறார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

நீங்கள் திரும்பவம் வந்து பின்னூட்டம்மிட்டதால் விளக்கினேன்.

ஜோ/Joe சொன்னது…

இவ்வளவு சீரியஸாக நீங்கள் இதை எடுத்திகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை.

நம்ம ராசி அப்படி .மீண்டும் மன்னிக்கவும்! :((((((((

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
இவ்வளவு சீரியஸாக நீங்கள் இதை எடுத்திகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை.

நம்ம ராசி அப்படி .மீண்டும் மன்னிக்கவும்! :((((((((
//

என்னைப் பொருத்து எதுவுமே பொதுவில் பேசப்படுவாது எதுவுமே விமர்சனத்துக்கு அப்பற்பட்டது அல்ல.
இந்த பதிவையும் சேர்த்துதான்.

ஆங்கிலேயனுக்கு எதிராக 'அச்சமில்லை பாடிய அதே பாரதி சிறை தண்டனையில் இருந்து விடுபட மண்ணிப்புக்கடிதம் எழுதி கொடுத்தான் என்றும் ஆதாரங்கள் இணையத்தில் அவன் கைப்பட எழுதியதே இருக்கிறது.

குலங்களை அவர் ஏன் எதிர்கவில்லை என்று அனுமான காரணங்களையும் சொல்லி இருக்கிறேன். அது சரியோ தவறோ ஆய்வாளர்கள் தான் அதை விளக்க முடியும். இங்கு செய்வது வெறும் விவாதம்.

எனது இந்த இடுகையைப் படித்து பாரதியை துறந்துவிடுவார்கள் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஏனென்றால் நானே பாரதி ரசிகன் தான்.

இவர் எங்கள் சாதிக்காரார் சாதி ஒழிப்புக்கு போராடி இருக்கிறார் என்று தனிமனிதன் பாரதியின் புகழை சாதியின் புகழாக காட்ட முயன்ற வானமே எல்லை படத்தில் அதை செய்து பாரதியை ஒரு குறிப்பிட்ட்ட இனத்தவராக அடையாளப்படுத்த முயன்ற பாலச்சந்தரைவிட இங்கு நான் பாரதியை நான் கேவலப்படுத்தவில்லை.

இந்த இடுகையில் உங்களுடன் இந்த விவாதம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்

நாமக்கல் சிபி சொன்னது…

//நீதி, உயர்ந்த மதி, கல்வி--அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"//

வீயெஸ்கே அவர்களே!

இந்த வரிகளிலே எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது!

நீதி - அவரவர் எவ்வளவு நேர்மையார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சொல்லி இருப்பார்.

உயர்ந்த மதி - இது நல்ல அறிவு அதாவது அறம் சார்ந்த சிந்தனைகளை உடையவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்!

கல்வி - இங்கேதான் இடிக்கிறது.

கல்வி - கிடைக்கப் பெறாதோர்/ அல்லது நல்ல கல்வி பெற வசதி இல்லாதோர் - கீழோர் என்ற வர்க்கத்தில் வருவார்களா?

என் சிற்றறிவுக்கு இதனையும் கொஞ்சம் விளக்குங்களேன்!

ஜோ/Joe சொன்னது…

ஐயா,
"சாதி,குலம் இவையெல்லாம் இருந்து விட்டு போகட்டும் .ஆனால் அதை வைத்து உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம்" என்பதை விட 'சாதி,குலம் என்பதே அறவே வேண்டாம்' என்பதுவே என் கருத்தும் என்று தாங்கள் சொல்லுவதே என் கருத்தும் ,எனவே அது பற்றி எமது விமரிசனம் தேவையில்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

ஆனால் அதை விளக்குவதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட பாரதியின் வரிகளும் ,அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து .அந்த விளக்கத்தை 'மொக்கை' என்று குறிப்பிட்டது கடுமை என உணர்கிறேன் .அதற்குத் தான் மன்னிப்பு.

மற்ற படி இங்கு நாம் பெரிய விவாதம் ஒன்றும் செய்து விடவில்லை .பாரதியை நீங்கள் விமரிப்பதில் எனக்கு ஒன்றும் கருத்து இல்லை. நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

// ILA(a)இளா said...
கோவி.ஒருவர் ஜாதிய பத்தி உயர்வா பேசினார்னா அது ஜாதி மேல இருக்கிற பற்று/வெறி. தாழ்வா சொன்னா சமுதாயம் அவரை பார்த்த பார்வை. ஆமா நான் இந்த ஜாதியில பொறந்தேன்,அதுக்கு என்ன இப்போ"ன்னு கேட்டாலோ , அதுக்கு ஒன்னும் இல்லேன்னு சொன்னா அவர் முதிர்ந்தவர், ஏன்னா அவர் பொறந்த ஜாதிய மாத்த முடியாது. ஆனாலும் உயர்வா பேசிக்கலைன்னா பிரச்சினையும் இல்லே. அவரா போய் இன்ன ஜாதி சொன்னா பிரச்சினை. ஆனா பாரதி எந்த அர்த்ததுல சொன்னாருன்னு தெரியல. நான் சொன்ன அர்த்தம் வெச்சு சொல்லி இருப்பாரோ?

2:03 PM, July 11, 2007
//

இளா,
பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி !

சொறி இருக்கும் வரை அறிப்பு இருக்கவே செய்யும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
//குலம் இருந்தால்தான தாழ்த்தி உயர்த்தி சொலா முடியும்! குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க!

நான் புரிஞ்சிகிட்டது சரிதானே கோவி?//
சிபி சரியான அர்த்தம் சொல்லி இருக்காரு. நம்ம கட்சி போல //

குலம் கோத்ரம் கேட்டாலே வருகிறது ஆத்திரம்.

:)

தாம் இந்த சாதி என்பது ஒருவருக்கு பெருமையாக தெரிந்தால்,

மற்றொருவர் அவரைப் பார்த்து 'சாதி புத்தி' என்று இகழ்வதும் பெருமையாகத்தானே தெரியனும் ?

இதெல்லாம் இல்லாத போது எங்கே இருக்கிறது உயர்வு ? தாழ்வு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ said...ஆனால் அதை விளக்குவதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட பாரதியின் வரிகளும் ,அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பது என் கருத்து .அந்த விளக்கத்தை 'மொக்கை' என்று குறிப்பிட்டது கடுமை என உணர்கிறேன் .அதற்குத் தான் மன்னிப்பு.//

என்னை ஒருமையில் அழைத்தால் அது உங்கள் உரிமை என்று மகிழ்வேன். பதிவில் எழுதுவது வேறு. அது தனிமனித தாக்குதல் என்று சொல்ல முடியாது. பதிவின் கருத்துக்கள் பதிவோடு போச்சு.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

பெரியார் மாமாவாகவும், காந்தியை கொன்ற கோட்சே புனிதனாகவும் காட்டப்பட்ட வலையுலகில், பாரதியின் கவிதையில் சந்தேகம் கொண்டதற்கே கொதித்தெழும் 'தமிழர்கள்' இருக்கிறார்கள் என்று அறியும் போது 'குலம்' தாழ்த்தப்பட்டது என்று நினைத்துக் கொண்டு ஆவேசமடைந்ததனால் ஏற்பட்டவையா ? அவைகள் ? இது குறித்து இன்னும் சந்தேகம் தீராவில்லை. குலத்தை உயர்த்தியோ, தாழ்த்தியே சொன்னால் பாவம் தான் ! மாறாக 'குலம்' ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, வழவேண்டிய ஒன்று பின்னூட்டங்களின் வாயிலாக உணர்கிறேன்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, பதிவில் மையக்கருத்தை விட்டுவிட்டு பாரதிமட்டும் கண்ணுக்கு தெரிகிறார் என்றால் பாரதியின் மீது உள்ள 'பாசம்' மற்றும் சாதியின் மீது நடத்திய தாக்குதலுக்கான கோபம் நன்றாகவே புரிகிறது !

வாழ்க 'தமிழ்மக்கள்' வளர்க அவர்களின் சீரிய தமிழ்தொண்டு !

கோவி.கண்ணன் சொன்னது…

பதிவின் மையக் கருத்தை புரிந்து கொண்டு மறுமொழிந்து பாராட்டிய சிபா, சிபி மற்றும் இளாவுக்கு மீண்டும் பாராட்டுத்தெரிவித்து கொள்கிறேன்.

சிவபாலன் சொன்னது…

// பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, பதிவில் மையக்கருத்தை விட்டுவிட்டு பாரதிமட்டும் கண்ணுக்கு தெரிகிறார் என்றால் பாரதியின் மீது உள்ள 'பாசம்' மற்றும் சாதியின் மீது நடத்திய தாக்குதலுக்கான கோபம் நன்றாகவே புரிகிறது ! //

I do feel the same!

அமர பாரதி சொன்னது…

ஜி.ரா மிகதெளிவாக பொருள் சொல்லி இருக்கிறார். முதலாவதாக "குலம்
தாழ்(த்தி) உயர்(த்தி) சொல்லல் பாவம்" அல்ல. அது "குலத்
தாழ்(ச்சி) உயர்(ச்சி) சொல்லல் பாவம்" அதாவது இங்கு "குலம்" என்பதை "பிறப்பு" என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது பிறப்பால் உயர்சியோ தாழ்ச்சியோ சொல்லக்கூடாது என்று சொல்லி இருகிறார்.

மதியழகன் சுப்பையா சொன்னது…

அன்புத் தோழருக்கு,
உங்களுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. எதையும் எழுதலாம் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் நான் முட்டாள் நான் முட்டாள் என்று நீங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது. உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவர்களில் நானும் ஒருவன். பாரதி விமர்சனத்திற்கு உரியவரா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால் அவரது வரிகளை நீங்கள் தப்பாக பொருள் புரிந்து இருக்கிறீர்கள் என்பது நிதர்சனம்.
ஜாதியும் வேண்டாம், குலமும் வேண்டாம் அன்புடையோர் தான் மேலோர் என்று மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் ஓசைச் சுவையுடனும் எழுதி உள்ளார் பாரதி. பாவம் அவர் உங்களுக்கு புரியும் படி தான் எழுதவில்லை.
பாரதி ஜாதிகள் வேண்டாம் என்று பாப்பாவுக்குத்தான் சொல்லியிருக்கிறார். பெரியவர்களாகிய நாம் பின்பற்றலாமே என்று கூட நீங்கள் பாரதியை கூமுட்டையாக சித்தரிக்கலாம். எனது இந்த மறுப்பை படித்து விட்டு இவனும் பாரதிப் பக்தன் என்று முத்திரை மட்டும் குத்திவிடுவீர் வேறு எதுவும் செய்ய முடியாது உங்களால்.
மிக அறிவுப்பூர்வமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மிக முட்டாள்த்தனமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜாதியும் குலமும் வேண்டாம் என்பது தான் பாரதியும் எண்ணம். அப்படி அவர் எழுத்தில் பாராபட்சம், பிழை அல்லது குற்றம் இப்படி எதாவது கர்மத்தை நீங்கள் கண்டால் தயது செய்து அவரின் படைப்புகளை படிக்காதீர்கள். நிராகரியுங்கள். அவரது புத்தகங்களை தூக்கி எரியுங்கள். யாராவது பாரதியை படித்துள்ளீர்களா என்று கேட்டால் '' அந்த ஜாதி/குல வெறியனை'' நான் படிப்பதாக இல்லை என சாடி விடுங்கள்.
இப்போதைக்கு உங்கள் விதண்டாவாதத்தை விடுங்கள்.

மிக்க நன்றி.

மதியழகன் சுப்பையா.

கோவி.கண்ணன் சொன்னது…

//மதியழகன் சுப்பையா said...
அன்புத் தோழருக்கு,
உங்களுக்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது. எதையும் எழுதலாம் யாரையும் விமர்சிக்கலாம். ஆனால் நான் முட்டாள் நான் முட்டாள் என்று நீங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை தருகிறது.
//

அன்பரே...அடுத்த பகுதியும் வந்துவிட்டது...அங்கும் எனக்கு 'முட்டாள்' பட்டம் தேவை இருக்கிறது...வந்து தாருங்கள்.

மிக்க நன்றி !

Nithyan சொன்னது…

ரசிக்க வைத்த கலந்தாய்வு.

பிரகாஷ் (http://www.prakashscribbles.blogspot.com)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்