பிறர் பொருள்களை அபகரித்தல் என்பது தனிமனித செயலில் தொடங்கி, பின்னர் தன் சமூகத்திற்காக பிற சமூகங்களை அழிக்கலாம் என்று துணிந்த போது வேட்டையாடி வயிற்றுப்பாட்டுக்கு செய்த கருவிகளெல்லாம் போராயுதங்களாக புதிய வடிவம் எடுத்தது. அதன் பிறகு சமூகம் வளர்ந்து மன்னன் மக்கள் என்று ஒரு நாட்டுக்குள் தங்களை அடக்கிக் கொண்டு அரசுகளாக இருந்தவர்கள், பேரரசுகள், சாம்ராஜ்யம் என்ற வளர்ந்த போது போர் கருவிகள் (ஆயுதம்) உற்பத்தி என்ற புதிய தொழில்கள் பன்னெடும் காலத்திற்கு முன்பே உருவாகிவிட்டது. ஆயுதங்கள் அழிவை தருபவை என்றாலும் அதைச் செய்பவர்களுக்கு சோறுபோடும் தொழிலாகவும் அது ஆகியது.
அனுஆயுத கண்டுபிடிப்பிற்கு முன்பாகவே ஐரோப்பிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் முக்கிய தொழிலாக இன்றைக்கும் இருப்பது ஆயுத உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதிகளே. இவையெல்லாம் அமைதியை நிலைநாட்டவோ, மனிதனுக்கு நன்மை அளிப்பவைகளோ இல்லை என்று நேரிடியாக அறியப்பட்டாலும் ஒரு நாட்டின் குறிப்பாக ஆயுத உற்பத்தி அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
இன்றைய கணனி உலகில் எல்லாமே கனனி மயமாகிவிட்டலும், இணைய வைரஸ்கள்


போட்டியிடும் நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்துகின்றன விற்பனையை முடக்குதல், உற்பத்தி ரகசியங்களை அறிதல் போன்றவற்றை செய்கின்றன. இவற்றில் ஈடுபடும் பொறியாளர்கள் நல்ல வருமானமும் பார்க்கின்றனர்.
911 - ஈவிள் நம்பர் என்ற அறியப்பட்ட பிறகு கணனிகளின் தகவல் (DATA) பாதுக்கப்பட வேண்டிய அவசியத்தை உலக அளவில் பல நிறுவனங்களுm உணர்ந்தன. அதைத்தொடர்ந்து டேட்டா சென்டர் என்னும் புதிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் பல்வேறு தொழில் நுட்ப செயல்பாடுகளுடன் முளைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அரசாங்கம் பெரிய பொது நிறுவனங்கள் மற்றும் வங்கி ஆகியவற்றின் டேட்டாக்களை பாதுக்காக்கும் ஒரு சேவையை செய்து வருகின்றன. இதன் மூலம் நில அதிர்வு (பூகம்பம்), கடற்கோள் (சுனாமி), தீவிரவாதிகளின் தாக்குதல் போன்றவற்றால் நிறுவன கட்டிடமே தகர்ந்தாலும் அவர்களுடைய டேட்டா பேஸ் பாதுக்காப்பா வேறு ஒரு இடத்தில் வைத்து பாதுகாத்து, அரிய தகவல்களை அழியாமல் காப்பதற்கு துணைபுரிகிறது. அதற்காக மிரர் சைட் எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட டேட்ட சென்டர்களை வேறு வேறு நாடுகளில்

மனிதன் தன் பயங்கர வாதசெயல்களினால் அவனே பாதிக்கப்படும் போது புதிய தொழில் நுட்பங்கள் வளருவது மட்டுமின்றி வேலை வாய்புகளையும் அது அதிகரிக்க வைத்துவிடுகிறது.
நடப்பதெல்லாம் நன்மைக்கே ! நாம் நேரிடையாக பாதிக்கப்படாதவரை ! :))
4 கருத்துகள்:
Live Free or Die Hard,, விமர்சனம் நல்லா இருந்துச்சுங்க
இளா,
DIE Hard 4 பார்த்தாச்சு... ஆனால் அதற்கு முன்பே இந்த இடுகை எழுதி கிடப்பில் போட்டு நேற்று முடித்துவைத்தேன். இதை எழுதும் போது DIE Hard 4 ஞாபகம் வரவே இல்லை.
:)
:(
technology sucks
//நடப்பதெல்லாம் நன்மைக்கே !//
எல்லாம் அவன் போட்ட கோடுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.......!
கருத்துரையிடுக