ஆத்திகம் நாத்திகம் எதிர்துருவமாக பார்த்து மற்றது தாழ்ந்தது என இரு கொள்கை பற்றாளரும் மற்றவர்களுக்கு எதிராக காலம் காலமாக கலகம் வளர்த்தே வருகின்றனர்.
எனது பார்வையில் கொள்கைகளில் முரண்பாடுகள் ஏற்படும் போது, உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடம் உடன்பாடு ஏற்படாத போது அல்லது எதாவது காரணத்தினால் வளருபவர்களை அமுக்க நினைத்து அதற்கான தலைவரின் விதிமீறல்கள் அல்லது கடுமையான விதிகளை அமல்படுத்தும் போது உடன்பாடு ஏற்படாததால் கட்சிகள் உடைவதைப் போல மதங்களும் அதனுள் கிளை மதங்களும் தோன்றி இருக்கிறது.
இந்தியாவில் நாத்திகம் என்பது இன்னாளில் கடவுள் மறுப்பு என்று முன்னிறித்தி எதிர்தரப்பினில் சொல்லப்பட்டாலும் அந்நாளில் வாழ்வியல் மறுப்புக்கு எதிராகத்தான் நாத்திகர்கள் போராடி இருக்கிறார்கள். நாத்திகம் என்பது ஆத்திக தடாகத்தின் வருண கட்டுப்பாடுகள் என்ற பாசிகளையும், மரபுச் சேறுகளையும் சுட்டிக்காட்டி அதில் குளிப்பதற்கு இறங்கு முன் ஏறகனவே பாசி, சேறு பலரை கபலீகரம் பண்ணியதை சுட்டிக்காட்டவும், பாசிகளில், சேறுகளில் சிக்கித் தவிப்பர்களை மீட்கவும், எச்செரிக்கையாகவும், தடாகத்தை சுத்தப்படுத்தவும் உதவி இருக்கிறது. இதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதைத்தவிர ஆத்திகவாதிகள் செய்த அளவுக்கு நாத்திகம் அதாவது குலம் பிரித்து, பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பித்து பொதுமக்களுக்கு கேடு செய்யவில்லை.
எதையுமே ஆராயாமல் எப்போதும் ஒருவரை கெட்டவர் என்பதும் நல்லவராக நம்பப்படுபவரின் கெட்ட செயல்களை மறைத்து எப்போதுமே நல்லவனாவே காட்ட முயல்வதும் பகுத்தறிவு பார்வை இல்லாத கோளாறினால் ஏற்படும் மாயத்தோற்றம். மகாபாரதம் இராமயண கதைகளில் இவற்றிற்கு எடுத்துக் காட்டுகிறேன்.
தன் மனைவியின் சேலையை கர்ணன் பிடித்து இழுக்கும் போது முத்துமாலை அறுந்துவிழுந்ததும் அதை நேரடியாகப் பார்த்தும் சிறிதும் சந்தேகம் கொள்ளாது நம்பிக்கையையும் நட்பையும் போற்றிய துரியோதனனை கெட்டவனாகத்தானே என்றும் காட்ட முயன்று வருகிறார்கள். எவனோ சந்தேகப்பட்டான் என்பதற்காக மனைவி மீதே 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என தீக்குளிக்க சொன்ன ஆணாதிக்க இராமன் என்றும் இவர்களுக்கு நல்லவரே. நாரயணன் நாமம் நாளும் பாடினாலும் நன்மை செய்வதாக சொல்லும் நாரதனின் நோக்கம் என்னமோ கலகம் தான்.
டிஸ்கி ஓவர். :)))
நாத்திகரை ஆத்திகராக பார்க்க முடியுமா ? அல்லது ஆத்திக கடவுளுடன் ஒப்பிட முடியுமா ? ஒப்பிட்டு இருக்கிறார்கள். புத்தரும் ஆனாரே விஷ்னு அவதாரமாக.
தமிழக தந்தை பெரியாரும் தமிழ் குமரன் முருகனும் ஒரு ஒப்பீடு. வியத்தகு நல்லதொரு ஒப்பீடு.
உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லுங்கள் !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
13 கருத்துகள்:
Superb Comparision!
Keep it up!
இந்த ஒப்பீட்டை வெறும் நகைச்சுவை உணர்வோடே எடுத்துக் கொள்கிறேன். :) ஏனென்றால் இதற்கெல்லாம் முருகன் ஆத்திரப்படமாட்டார். ஆனால் இப்படி ஒப்பிடுவதைப் பெரியார் விரும்ப மாட்டார். ஆகையால் சீரியசாக இதை அணுகவில்லை. மற்றபடி பதிவில் சொல்லியிருக்கும் ஒப்பீட்டை ரசித்தேன். ஆனாலும் இப்படிப்பட்ட ஒப்பீடுகள் பெரியாரையும் புத்தராக்கி விடும். முருகன் வள்ளி தெய்வயானை மாதிரி பெரியாரையும் பார்க்கத் தொடங்கினால்...அவர் சொன்னது அரோகரா!
முருகனுக்கு அவன் இவன் என்று மரியாதைக் குறைவு.
பெரியாருக்கு அவர் இவர் என்று ஏக மரியாதை.
:))
//SurveySan said...
முருகனுக்கு அவன் இவன் என்று மரியாதைக் குறைவு.
பெரியாருக்கு அவர் இவர் என்று ஏக மரியாதை.
:))
//
சர்வேசா ? நாரதர் வேஷமா ?
:)) நல்லா இருங்க.
நடப்பில் இருப்பதைத் தானே சொன்னேன்.
//Comments - Show Original Post
Collapse comments
நாமக்கல் சிபி said...
Superb Comparision!
Keep it up!
//
சிபி,
நன்றி !
:)))
//G.Ragavan said...
இந்த ஒப்பீட்டை வெறும் நகைச்சுவை உணர்வோடே எடுத்துக் கொள்கிறேன். :) ஏனென்றால் இதற்கெல்லாம் முருகன் ஆத்திரப்படமாட்டார். ஆனால் இப்படி ஒப்பிடுவதைப் பெரியார் விரும்ப மாட்டார். ஆகையால் சீரியசாக இதை அணுகவில்லை. மற்றபடி பதிவில் சொல்லியிருக்கும் ஒப்பீட்டை ரசித்தேன். ஆனாலும் இப்படிப்பட்ட ஒப்பீடுகள் பெரியாரையும் புத்தராக்கி விடும். முருகன் வள்ளி தெய்வயானை மாதிரி பெரியாரையும் பார்க்கத் தொடங்கினால்...அவர் சொன்னது அரோகரா!
//
ஜிரா,
வேற்றுமைகளைப் பார்பதைவிட சில சமயம் வேற்றுமைகளில் உள்ளை ஒற்றுமைகளைப் பார்பது வியப்பாக அமைந்து விடுகிறது.
நீங்க சொன்ன வள்ளி - தெய்வானை, நாகம்மை - மணியம்மை மேட்டரும் சூப்பர். பெரியார் அந்த கோலத்தில் காட்சி தரவில்லை என்பதால் சேர்க்கவில்லை.
:)
நாரதரா? நானா? சிவ சிவா!!! :)
<table> </table> இடையில், new line இருக்கப்படாது. இருந்தால், ப்ளாகருக்கு பிடிப்பதில்லை.
//முருகனுக்கு அவன் இவன் என்று மரியாதைக் குறைவு.
பெரியாருக்கு அவர் இவர் என்று ஏக மரியாதை.
:))//
சர்வேசன்,
இறைவன் மிகப் பெரியவன்.
//// SurveySan said...
முருகனுக்கு அவன் இவன் என்று மரியாதைக் குறைவு.
பெரியாருக்கு அவர் இவர் என்று ஏக மரியாதை.
:)) ////
குமரன் - ன்
பெரியார் - ர்.
விகுதியைப் போல வினை!
ஏதோ என்னால முடிஞ்சது?!
//விகுதியைப் போல வினை!//
கலக்குறீங்களே லிவிங் ஸ்மைல் வித்யா!
//குமரன் - ன்
பெரியார் - ர்.
விகுதியைப் போல வினை!
ஏதோ என்னால முடிஞ்சது?! //
- லி.ஸ்.வித்யா
என் பங்குக்கு நான் முன்பே எழுதிய ஒன்று
லிவிங் ஸ்மைல்,
//குமரன் - ன்
பெரியார் - ர்.
விகுதியைப் போல வினை!
ஏதோ என்னால முடிஞ்சது?!//
அது சரி. அப்ப, எம்.ஜி.ராமச்சந்திர'ன்' னுக்கும் அதே கதி தானா?
:))
முருகன் காட்டுமிராண்டி(மலை நாடன்) தமிழ் கடவுள். பெரியாரை பொருத்த வரை தமிழர்கள் காட்டுமிராண்டிகள்
கருத்துரையிடுக