அழகு என்றால் மனதிற்கினிமை, கண்ணிற்கினிமை, உணர்வுக்கினிமை என ஐம்புலன்களுக்கு இனிமைசேர்க்கும் எதுவும் அழகு. அழகின் அளவீடுகள் மனத்திற்கு மனம் வேறுபடும், எனக்கு அழகாகத் தெரிவது மற்றவருக்கும் அப்படியே தெரியும் என்பதற்கில்லை. அழகிருக்கும் இடத்தில் ஆணவமும் இருக்கும் என்கிறார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாத மெளனமே எனக்கு அழகாகத் தெரிகிறது.
எதையுமே கூட்டமாக பார்பது எனக்கு மிக அழகாகத் தெரியும்.
1. திருவிழா கூட்டம். எங்கள் ஊரில் எட்டுக் குடி முருகன் கோவில், நாகை மாரியம்மன் கோவில், நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில் என திருவிழாக்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். திருவிழா வென்றாலே எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி இருக்கும். ஒரு மகிழ்வுகரமான சூழல் இருக்கும், தற்காலிக கடைத் தொகுதி, கொடை ராட்டினம், திருமண அரங்கு, அங்கு பட்டுப்பாவடையில் சுட்டியாக ஓடி ஆடும் குழந்தகள், மாறுவேடமிட்ட சிறுவர் சிறுமியர்... இன்னும் பலபல எங்கும் மக்கள் வெள்ளம் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பார்ப்பதற்கு அழகு.

2. மாலை நேர பயணம் ... சன்னல் ஓர இருக்கை ... அந்தி சாயும் பொழுது தெளிந்த நீரோடையாக அந்த நேரத்தில் அதை ரசித்துக் கொண்டே செய்யும் பயணம் ... புளிய மரங்களின் அணிவகுப்பு... வளைந்து செல்லும் சாலைகள் ...
பேருந்தில் / புகைவண்டியில் தொலைவாக செல்லும் பயணம் மனதிற்கு அழகு
3. பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன் வண்ணத்தினால் பூக்களுக்கு அழகா ? அல்லது பூக்களினால் வண்ணங்களுக்கு அழகா ? இரண்டும் சேர்ந்து ஒரு வடிவாகி விரல்களுக்கு மென்மையாகவும் தொடுதல், பார்த்தல், நுகர்த்தல் என முன்று புலன்களுக்கு ஒரு சேர இன்பம் அளிக்கும் பூக்கள்... பூந்தோட்டம் .. பச்சைக் காய்கனித் தோட்டம் ... தாமரை / அல்லி பூக்கள் நிறைந்த குளங்கள் இவையெல்லாம் அழகோ அழகு
4. உச்சி வெயில் ... வேப்பமர நிழல் ... கயிற்றுக் கட்டில் ... மென்மையாக வரும் தென்றல் ... லேசாக உறங்க தீண்டும் அமைதியான அந்த சூழல் உணர்வுக்கு அழகு. அப்பொழுது பறித்து வெட்டிய இளநீர் நாவுக்கு அழகு.
5. கேட்பதற்கினிய இசைகள் ... காலை நேரத்தில் பறவைகள் கண்விழித்து எழுப்பும் கூட்டு ஒலி ... மாலை நேரத்து... குயிலோசை ... மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ... வானி ஜெயராமின் ரீங்கார குரல் ...
பொன் மாலை பொழுது எஸ்பிபாலசுப்ரமணியனின் ஐஸ்கிரீம் குரலும்... சுகிசிவத்தின் சொற்பொழிவு அருவிகள் கேட்பதற்கு அழகு.
6. கருநிலா இரவில் வின்மீன்கள் நிறைந்த வானம் ... காலை எழும் சூரியன்...மலை சிவந்த சூரியன் ... வெண்ணிலா என .... ஆகாயம், ஆட்டுக் குட்டிகள், குட்டி விலங்குகள் நான் பார்த்து வியக்கும் அழகு.
அழகை ஆராதனை செய்ய நான் அழைப்பவர்கள்
கூடல் குமரன்
செந்தழல் ரவி
விழிப்பு

9 கருத்துகள்:
நல்ல அழகாச் சொல்லி இருக்கீங்க.
குமரனை ஏற்கனவே அவங்க ஊர்க்காரர் கூப்பிட்டுட்டார். அதுக்கு பதிலா வேற யாரையாவது கூப்பிடுங்களேன்.
அழைப்பிற்கு நன்றி கண்ணன் அண்ணா.
தாமரை / அல்லி பூக்கள் நிறைந்த குளங்கள் இவையெல்லாம் அழகோ அழகு
சும்மா,சிக்கல் மற்றும் கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஊர்களில் காலார நடந்தால் இவைகளை கண் குளிர காணலாம்.
கொத்ஸ்,
வாங்க...'குமரனை' ஒன்றுக்கு மேற்பட்டவர் அழைப்பதில் வியப்பில்லை.
கூப்பிட்ட குரல்களுக்கெல்லாம் வர(ம்) வேண்டும் !
:))))))
//குமரன் (Kumaran) said...
அழைப்பிற்கு நன்றி கண்ணன் அண்ணா.
//
உங்களிடம் அழகென்றால் 'அழகென்ற சொல்லுக்கு முருகா' ன்னு தான் எழுதுவிங்க என்று முன்பே தெரியும் !
:))
(ஏ)மாற்றவில்லை நீங்கள் ! நன்றி
:))))
// வடுவூர் குமார் said...
தாமரை / அல்லி பூக்கள் நிறைந்த குளங்கள் இவையெல்லாம் அழகோ அழகு
சும்மா,சிக்கல் மற்றும் கும்பகோணம் பக்கத்தில் உள்ள ஊர்களில் காலார நடந்தால் இவைகளை கண் குளிர காணலாம்.
///
குமார்,
கோடை ஆரம்பித்துவிட்டது, அல்லிக் குளத்தினுள் கிழங்கு தோண்ட ஆரம்பித்து இருப்பார்கள். அதேபோல் எட்டுக்குடியை சுற்றியும் உள்ள ஊர்களில் தாமரை தடாகங்கள் நிறைய உண்டு.
அஞ்சு அழகைச் சொல்ல வந்து
அஞ்சாமல் ஐந்நூறு அழகை
அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்
கொள்ளை அழகாய் கோவியாரே!
நன்றாக இருக்கிறது!
//கருநிலா இரவில் வின்மீன்கள் நிறைந்த வானம் //
அது என்னங்க கருநிலா? சொன்னா நாங்களும் அழக ரசிப்போம் இல்லையா?
//VSK said...
அஞ்சு அழகைச் சொல்ல வந்து
அஞ்சாமல் ஐந்நூறு அழகை
அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்
கொள்ளை அழகாய் கோவியாரே!
நன்றாக இருக்கிறது!
//
வி.எஸ்கே ஐயா,
அழகை குறிப்பிட்ட எண்ணிக்கைகுள் அடக்க முடியவில்லை. நான் எழுதியது நான் ரசிப்பதில் 1 % தான்
:)
மோதிர விரலால் கிள்ளியதற்கு நன்றி !
கருத்துரையிடுக