பின்பற்றுபவர்கள்

29 ஜனவரி, 2007

பரிகாரம் ?

மாங்கல்ய தோஷம் இருக்கு, இருதார யோகம் (?) இருக்கு வாழை மரத்துக்கு கல்யாணம் பண்ணி வெட்டிப் போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சாதகம் பார்த்துப் பலன் சொல்வார்கள்... கேட்பார்கள். சோதிடம் மூட நம்பிக்கை என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரும். சோதிடம் என்பது நம்பிக்கை. சோதிடத்தை நம்பி 'மாமனுக்கு ஆகாது' ஆகாது என்று பிறந்த குழந்தையை கொன்று போட்டவர்களைப் பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் படித்திருக்கிறோம். முல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று முதிர்கன்னிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். மக்களிடம் கடவுள் நம்பிக்கையை விட மலிந்து காணப்படுவது சோதிடம், என் கணிதம் சோதிடம் (நியூமரலஜி) இவற்றைப் பற்றிய நம்பிக்கைகள்.

பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் நல்லப் பெயரை எடுக்கலாம் என்பதைவிட செல்வம் பெருகும் என்பதற்காக பெயரை மாற்றி அவப்பெயரை பகுத்தறிவு பாசறை அண்ணன்களும் (முன்னால் பகுத்தறிவு பாசறை அண்ணன் அடைந்திருக்கிறார்கள். திருநாவுக்கர(சு)சர், விஜய டி ராஜேந்திரர் போன்றோர். இவையெல்லாம் பார்க்கும் போது உழைப்பை நம்பாமல் திடீர் அதிர்ஷ்டத்தின் வழி புகழோ, பணமோ அடைய முடியும் அல்லது அவற்றை கட்டிப் போட்டு எங்கும் ஓடாமல் வைத்திருக்க முடியும் என்ற மாய நம்பிக்கைதான் அடிப்படை காரணமாக இருக்கிறது.

வாஸ்து என்ற பெயரில் கழிவறைக்கும் பரிகாரம் செய்யும் நம்மவர்கள். அது இருக்கும் இடத்தை சரியான முறையில் அமைப்பதில்லை. பெரும்பாலான வீடுகளில் கழிவறை மாடிப்படிக்கு கீழ் அல்லது மிச்சம் உள்ள இடத்தில் ஒடுங்கி கட்டப்பட்டு இருக்கும். அன்றாடம் பயன்படுத்தும் இடத்தை சுகாதாரமாக காற்றோட்டத்துடன் அகலாமாக கட்டவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே கழிவறை விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. வீட்டிற்குள் பளபள என மின் விளக்கு வெளிச்சம் இருக்கும் ஆனால் கழிவறைக்கு 0 வாட் பல்பு போட்டு சிக்கனமாகவே இருக்கிறோம். பெரும்பாலான கழுவறைகளுக்கு சன்னலே (சாளரம்) இருக்காது. இது போன்று தாராளம் கடைபிடிக்க வேண்டிய வற்றையெல்லாம் கவனம் கொள்ளாமல் சாமி அறை எந்தப்பக்கம் பார்த்திருந்தால் வீட்டுக்கு நல்லது என்பதில் அதிகம் கவனம் எடுத்து செய்திருப்போம். மனக் கழிவையும், உடல் கழிவையும் அகற்ற வேண்டிய இரு இடங்களுமே தூய்மையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது.

சரி பேச்சு சோதிடம் பரிகாரம் பற்றியது... நான் நினைப்பது சரியோ ? தவறோ ? மற்ற மதங்களில் உள்ள எதிர்கடவுள் (சாத்தான்) கோட்பாடு இந்து மதத்தில் கிரகங்களாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பெரியவர் தருமி இதுபற்றி அருமையான பதிவு எழுதி இருந்தார். எனக்கு தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாக நான் எப்போதும் பலரிடம் கேட்பது இது

1. அனைத்தும் இறைவன் செயல் என்று நம்புவர்கள் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா ?
2. நடப்பது இதுதான் என்று சோதிடம் சொல்வது உண்மையெனில் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன லாபம் ?
3. ஒரு வேளை பரிகாரம் செய்து எவற்றையும் மாற்ற முடியுமெனில் சோதிடம் உண்மை என்பது பொய்துப் போகிறதே ? இது சரியான கூற்றா ?
4. இந்து மதத்தில் கடவுள்களையும் கிரகம் பிடித்ததாக கதைகள் இருக்கிறதே ? இங்கே கடவுள்கள் கிரக பலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையா ?
5. கிரகங்களுக்கு கிரகம் பிடிக்குமா ? என்ன ஆகும் ? அதற்கு பரிகாரம் உண்டா ?


யாரையும் பழிக்காமல் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

11 கருத்துகள்:

சிந்தாமணி சொன்னது…

"நம்பினவனுக்கு நடராஜா; நம்பாதவனுக்கு எமராஜா."
இது பழமொழிதான்.

VSK சொன்னது…

ஞானவெட்டியான் ஐயாவைத் தொடர்ந்து இன்னொருகேள்வி.

நீங்கள் நம்புபவரா; இல்லை நம்பாதவரா?

நம்புபவர் என்றால் இக்கேள்வ்விகள் தேவையில்லை!

நம்பாதவர் எனிலோ, இப்பதிவே தேவையில்லை!

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஞானவெட்டியான் said...
"நம்பினவனுக்கு நடராஜா; நம்பாதவனுக்கு எமராஜா."
இது பழமொழிதான்.
//

நம்புகிறவருக்கு நடராஜன், நம்பாதவர்க்கு அவரே ராஜன் என்றிருக்க வேண்டும்.

பழமொழி ஆத்திகம் சார்ந்து இருக்கிறது. நம்பாதவர்கள் எமனையும் நம்ப மாட்டார்கள் !
:)

வடுவூர் குமார் சொன்னது…

கழிவறைப்பற்றி சொல்லியுள்ள அவ்வளவும் உண்மை.
திரு ஞான வெட்டியான் சொல்லியுள்ளது நன்றாக உள்ளது.
ஒரு பதிவின் சாரத்தையே உடைக்கும் தொழிலில் இப்போது இரண்டாமவர் புகுந்திருக்கிறார்.:-))
சிரித்து சிரித்து புண்ணாகுகிறது வயறு.

கோவி.கண்ணன் சொன்னது…

// SK said...
ஞானவெட்டியான் ஐயாவைத் தொடர்ந்து இன்னொருகேள்வி.

நீங்கள் நம்புபவரா; இல்லை நம்பாதவரா?

நம்புபவர் என்றால் இக்கேள்வ்விகள் தேவையில்லை!

நம்பாதவர் எனிலோ, இப்பதிவே தேவையில்லை!

:))
//

எஸ்கே ஐயா,
பதிவு தேவையா ? தேவையற்றதா ? என்று கருத்து கேட்கவில்லை. கேள்விளுக்கு விடை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கேள்வி புரியவில்லை என்றால் கேள்வி புரியவில்லை என்று சொல்லுங்கள். மற்றபடி *பதிவே தேவை இல்லை* என்று சொல்வதற்கு நோ கமெண்ட்ஸ் !
:)

நாமக்கல் சிபி சொன்னது…

//1. அனைத்தும் இறைவன் செயல் என்று நம்புவர்கள் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா ?//

தேவை இல்லைதான்.

//2. நடப்பது இதுதான் என்று சோதிடம் சொல்வது உண்மையெனில் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன லாபம் ?//

லாபம்தான். ஜோதிடர்களுக்கு! அவர்களும் பிழைக்க வேண்டாமா! இப்படியே எல்லாரும் சொல்லிக் கொண்டு ஜோதிடம் பார்க்காமல் இருந்துவிட்டால் அவர்கள் பிழைப்புக்கு என்ன வழி?

//3. ஒரு வேளை பரிகாரம் செய்து எவற்றையும் மாற்ற முடியுமெனில் சோதிடம் உண்மை என்பது பொய்துப் போகிறதே ? இது சரியான கூற்றா ?//

ஆஹா! இடக்கு முடக்காக் கேக்குறாரே! ஆனாலும் சிந்தைக்க வைக்கும் சூப்பர் கேள்வி!

//4. இந்து மதத்தில் கடவுள்களையும் கிரகம் பிடித்ததாக கதைகள் இருக்கிறதே ? இங்கே கடவுள்கள் கிரக பலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையா ? //

இல்லை! கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். அவர்கள் கடவுளென்றும், சராசரி மனிதன் என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை. இல்லையெனில் கிரகங்களின் சார்பு நிலை மீது சராசரி மனிதனுக்கு கேள்வி எழுந்துவிடும். அப்புறம் ஜோதிடர்களின் பாடு திண்டாட்டம்தான்.

//5. கிரகங்களுக்கு கிரகம் பிடிக்குமா ? என்ன ஆகும் ? அதற்கு பரிகாரம் உண்டா ?
//

இது வரை யாரும் கேட்டிராத கேள்வி என்று நினைக்கிறேன்.
கௌரவம் படத்தின் வசனம் நினைவிற்கு வருகிறது.

:))

நாமக்கல் சிபி சொன்னது…

இன்னொன்னும் சொல்லிக்குறேங்க!

எனக்கு சுக்கிர திசை(சுக்கிர தசை) 90 வயசுலதான்னு சொல்லிட்டாங்க!

:))

இதைக் கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வர ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கழிவறைப்பற்றி சொல்லியுள்ள அவ்வளவும் உண்மை.
திரு ஞான வெட்டியான் சொல்லியுள்ளது நன்றாக உள்ளது.
ஒரு பதிவின் சாரத்தையே உடைக்கும் தொழிலில் இப்போது இரண்டாமவர் புகுந்திருக்கிறார்.:-))
சிரித்து சிரித்து புண்ணாகுகிறது வயறு.
//

வடுவூரே,
கழுவரை சுகாதாரம், கட்டமைப்பு பற்றி நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். அது பற்றி உங்களிடமிருந்து ஒரிரு பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

பதிவு உடைக்கும் கருத்துக்களைப் பார்த்து நானும் உங்களைப் போல் சிரிக்கிறேன்.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said... இது வரை யாரும் கேட்டிராத கேள்வி என்று நினைக்கிறேன்.
கௌரவம் படத்தின் வசனம் நினைவிற்கு வருகிறது. //

சிபி,
நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி !

கெளரவம் படத்தின் வசனம் 'அந்த தெய்வமே கலங்கி நின்னா ? தெய்வத்துக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் ?' என்பது தானே. சமயத்தில் ஞாபகப்படுத்திவிட்டீர்கள் !

நன்றி !

aathirai சொன்னது…

நம்புபவருக்கு மூளையே தேவையில்லை. மூளை
இருந்தால் தானே இப்படி கேள்வி கேப்பீங்க!
அதனால் கேள்வியே தேவை இல்லை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

கடவுளை நம்பி, நாமும் உழைத்தால் போதும் என்று நினைக்கிறேன்.
பீதியைக் கிளப்பும் எத்தனையோ விஷயங்களில் ஜோதிடமும் ஒன்று.
நல்ல பதிவு கண்ணன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்