பின்பற்றுபவர்கள்

19 ஜனவரி, 2007

தேவமொழி எது ?

"கண்ணா ! சாமியை நல்லா கும்பிட்டுக்கோ" ன்னு அம்மா சொல்லுவாங்க

நானும் ,

"சாமி நல்லா படிக்கனும், பரீட்சையில் பாசாகனும்" னு வேண்டிக்கொள்வேன்

கோவிலுக்குப் போகும் போதெல்லாம் பலர் வாய்விட்டும், சிலர் வெளியில் கேட்கும் படி வேண்டிக் கொள்வார்கள்.

அப்பவெல்லாம் நாம் வாய்விட்டு சொன்னால் மட்டுமல்ல... மனசுக்குள் நினைத்தாலே சாமி புரிந்து கொள்ளும் என்று நினைப்பேன்.

திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகிய பக்திப் படங்களில் கடவுள்(கள்) அருமையாக அழகு தமிழில் வசனம் பேசுவார்கள்.

கோவிலுக்குச் செல்லும் போது மறந்துக் கூட ஆங்கிலத்தில் வேண்டிக் கொண்டதில்லை. கடவுளுக்கு வேறு மொழி தெரியும் என்று நான் நினைத்துப் பார்ததே இல்லை.

படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் இப்படித்தான் நிலைமை இருந்தது. எனக்கு ஒருவருடம் பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. ஒரு முறை பொழுது போகாமல் கன்னட சிம்மம் ராஜ்குமார் நடித்த ஹரிசந்திரா படம் பார்கச் சென்றேன். படத்தில் மயானத்தில் ஹரிசந்திரன் எல்லாவற்றையும் இழந்து சந்திரமதியின் தாலியை கண்டு கொண்டு, அதை விற்று வந்து மயானக் கூலியை கொடுக்கச் சொல்லுவார். அப்பொழுதுதான் லோகிதாசனை எரிக்க முடியும் என்று சொல்வார். சந்திரமதி அழுதுகொண்டே என் கனவனைத் தவிர எவருக்கும் தெரியாத என் தாலி பினம் சுடுபவனுக்கு தெரிந்துவிட்டதே இவர்தான் தன் கணவன் என்று கண்டு கொண்டு, ஹரிசந்திரனின் சத்தியத்தை காப்பாற்ற வேறு வழியின்றி தாலியை விற்று வரச் செல்வாள், பின்பு அவள் திருடி என்று அரசாங்கத்தால் பழி சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதே ஹரிசந்திரனால் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டிய சூழல் வந்துவிடும். ஹரிசந்திரன் வெட்டுவதற்கு கையை உயர்த்தி வெட்டும் போது கையில் உள்ள வெட்டருவாள் பூமாலையாக மாறும். உடனே ருத்ரனும் பார்வதியும் காட்சி தருவார்கள்.

இந்த படத்தில் வசனம் முழுவதும் கன்னடத்தில் இருக்கும் பல இடங்களில் தேவாதி தேவர்களும், மும்மூர்த்திகளும் வருவார்கள். அவர்கள் பேசும் வசனம் முழுவதும் கன்னடத்தில் இருக்கும்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்மட்டும் தான் கடவுளுக்குச் தெரியும் என்று நினைத்திருந்தோமே, இங்கு எல்லா சாமிகளும் சரளமாக கன்னடம் பேச்சுகிறதே ? என்று மிகுந்த வியப்பாக இருந்தது. கடவுளுக்கும் மொழிக்கும் தொடர்பு என்பதே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள எனக்கு பலநாட்கள் ஆகியது.

உலகில் உள்ள எந்த மொழியும் தேவ மொழி இல்லை. எல்லாமே மக்கள் பயன்படுத்தும் மொழிகள் தான் என ஒருவாறு புரிந்து கொண்டேன். வேண்டுதல் வழி நாம் தெரிவிப்பது நம் எண்ணங்களைத்தான் சாமி சர்வ வல்லமை உடையது என்று நம்பும் நாம் சாமிக்கு இந்த மொழி மட்டுமே புரியும், அல்லது உகந்தது என்ற கர்பனைக் கூற்றைப் பிடித்துத் தொங்குகிறோம். அதுவும் சாமி மீது உள்ள பயம் காரணமாகத்தான். எனக்கு தெரிந்து எந்த இதிகாச புராணத்திலும் இறைவன் பேசும் மொழி இது என்று வரையறுக்கப்படவில்லை.

ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்று சொல்லும் நாம் நம் புலன்கள் (வாய், காது, மனம்) வழி தொடர்ப்பு கொள்ளும் எந்த ஒரு மொழியும் இறைவனைச் சேர்ந்ததாக இருக்க முடியாது. அல்லது எல்லா மொழிகளும் அது நரிகுறவர்கள் பேசும் மொழியாக இருந்தாலும் நன்றாகவே இறைவனுக்கு நிச்சயம் புரியும்.

நாம் நம் தாய்மொழி மூலம் வழிபாடு நடத்துவது நமக்கும் சிறப்பு, நம்மை படைத்த இறைவனுக்கும் சிறப்பு. ஆத்திக கூற்றுப்படி தோற்றத்திற்கெல்லாம் இறைவன் காரணம் என்றால் தோன்றிய மொழிகளில், இனங்களில் பேதம் இருக்க முடியாது. ஒன்றை உயர்த்திக் காட்ட மற்றொன்ன்றை தாழ்வாக படைத்தான் என்று சொன்னால் இறைவனுக்கென்று தனிச்சிறப்பு என்ன இருக்க முடியும் ?

இதை உணர்ந்து கொண்ட கிறித்துவ மிசினெரிகள் எங்கு கிருத்துவ மதம் போதித்தாலும் அங்குள்ளவர் பேசும் மொழிகளில் திருப்பலி முதல் பைபிள் வரை எல்லாவற்றையும் அவர்கள் மொழிக்கு மாற்றி அமைத்துக் கொடுக்கிறார்கள்.

44 கருத்துகள்:

பூங்குழலி சொன்னது…

நல்ல பதிவு..

நிச்சயம் இறைவன் மொழிகளுக்கப்பாற்பட்டவன்.

ஐம்புலன்களைக் கடந்தவன்.
இறைவனுக்கு ஊமையின் சைகையும் புரியும், ப்ரெய்லியும் தெரியும்.

நன்றி..

கோவி.கண்ணன் சொன்னது…

வாங்க பூங்குழலி,
நல்ல கருத்தைச் சொல்லி பதிவில் பூ தூவியதற்கு நன்றி !

Unknown சொன்னது…

//படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் இப்படித்தான் நிலைமை இருந்தது. எனக்கு ஒருவருடம் பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. ஒரு முறை பொழுது போகாமல் கன்னட சிம்மம் ராஜ்குமார் நடித்த ஹரிசந்திரா படம் பார்கச் சென்றேன். //

மெய்யாலுமே கல்லூரிக்காலங்கள் தாண்டி அதுவும் தாய்மொழி தவிர்த்து வேறு ஒரு மொழி சாமி-திரைப்படம் பார்த்துத்தான் கடவுள்/மொழி விசயம் தெரிய வந்ததா?

வினையூக்கி சொன்னது…

//இதை உணர்ந்து கொண்ட கிறித்துவ மிசினெரிகள் எங்கு கிருத்துவ மதம் போதித்தாலும் அங்குள்ளவர் பேசும் மொழிகளில் திருப்பலி முதல் பைபிள் வரை எல்லாவற்றையும் அவர்கள் மொழிக்கு மாற்றி அமைத்துக் கொடுக்கிறார்கள்.
// சரியாகச் சொன்னீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// கல்வெட்டு said...

மெய்யாலுமே கல்லூரிக்காலங்கள் தாண்டி அதுவும் தாய்மொழி தவிர்த்து வேறு ஒரு மொழி சாமி-திரைப்படம் பார்த்துத்தான் கடவுள்/மொழி விசயம் தெரிய வந்ததா? //

கல்வெட்டு அவர்களே,
ஆமாம் அப்பொழுதுதான் தெரியவந்தது. அதனால் தான் கோர்வையாக தொடர்புடன் எழுதினேன். அதற்கு முன்பு வரை கடவுள் வேறு மொழி பேசும் என்று கற்பனை கூட செய்தது இல்லை.

வினையூக்கி சொன்னது…

"என் மொழியை புரிந்து கொள்ளாத இறைவன் எனக்குத் தேவையில்லை"

எங்கோ எப்போதோ படித்தது,,

கோவி.கண்ணன் சொன்னது…

//வினையூக்கி said...
"என் மொழியை புரிந்து கொள்ளாத இறைவன் எனக்குத் தேவையில்லை"

எங்கோ எப்போதோ படித்தது,,
//

வினையூக்கி,
பலர் சொல்வதுதான் இது. அந்த கூற்று சரிதானே !

வருகைக்கு நன்றி !

ரவி சொன்னது…

////ஐம்புலன்களைக் கடந்தவன்.
இறைவனுக்கு ஊமையின் சைகையும் புரியும், ப்ரெய்லியும் தெரியும்.///

நல்லதொரு கருத்து....வழிமொழிகிறேன்...!!!!!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க.

மொழிங்கறது மனிதப் படைப்பு.

அதில் கடவுளுக்கு புரியும் மொழி, தேவ பாஷைங்கறது எல்லாம் ஆதிக்கவாத சிந்தனை.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
நல்லதொரு கருத்து....வழிமொழிகிறேன்...!!!!!//

செந்தழலாரே நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// செந்தில் குமரன் said...
நல்லா எழுதி இருக்கீங்க.

மொழிங்கறது மனிதப் படைப்பு.

அதில் கடவுளுக்கு புரியும் மொழி, தேவ பாஷைங்கறது எல்லாம் ஆதிக்கவாத சிந்தனை.
//

வாங்க செந்தில் குமரன்,
பதிவை ஒட்டிய ஒத்த கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி !
நன்றி !

SP.VR. SUBBIAH சொன்னது…

கண்ணால் பேசுவது பெண்ணின் மொழி
மனதால் பேசுவது இறைவன் மொழி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவி.கண்ணன்!
அருமையான கருத்து; அதைச் சொன்னவிதம் அலாதியானது. மிக நேர்த்தியாக கோர்த்துச் சொல்லியுள்ளீர்கள். ஆண்டவன் புரிந்தாலும் புரிபவர் புரிவார்களோ? தெரியவில்லை.
மிகுந்த பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்

nagoreismail சொன்னது…

அருமையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள், கீழே உள்ள இடுகையில் உள்ளதையும் வாசித்து பார்க்கவும் - நாகூர் இஸ்மாயில்

http://www.tamiloviam.com/unicode/09140604.asp

Nagoreismail

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR.சுப்பையா said...
கண்ணால் பேசுவது பெண்ணின் மொழி
மனதால் பேசுவது இறைவன் மொழி!
//
ஐயா,
மனதால் பேசுவது காதல் மொழியும் கூட !
:)

Sivabalan சொன்னது…

GK,

நல்லா சொன்னீங்க..

அருமை..

G.Ragavan சொன்னது…

நல்ல பதிவு. நியாயமான கருத்து. அவரவர் தாய்மொழியில் வணங்குதலே மிகச் சிறப்பு. இதை அனைவரும் உணர வேண்டும்.

VSK சொன்னது…

இறைவனுக்கு மொழி இன்னதுதான் புரியும் என்றில்லை என்ற கருத்தை வலியுறுத்தும் இப்பதிவு வரவேற்கத்தக்கது!

ஆனால், ஒரு சந்தேகம்.

//உலகில் உள்ள எந்த மொழியும் தேவ மொழி இல்லை.//

இதைச் சொல்ல எந்த மனிதனாலும்,.... அவர் எவராக இருப்பினும் .....முடியாது என்றே கருதுகிறேன்!

கோவியாரே கண்டறிந்தது போல, தமிழகத்தில் ஒரு மொழி, கர்நாடகத்தில் ஒரு மொழி என இங்கே இருப்பது போல,தேவலோகத்துக்கும் ஏன் ஒரு மொழி இருந்திருக்கக் கூடாது!

புராணக் கதைகளின் படி, அப்போது, இங்கும் அங்குமாய்ச் சென்றுவந்த சில முனிவர்கள் ஏன் அதை இங்கும் கொண்டு வந்திருக்கக் கூடாது?
அதனைப் பேசவும் முயன்றிருக்கக் கூடாது?

இப்போது சென்னையில் பல பேர் நுனிநாக்கு ஆங்கிலம் பேசுதல் போல!

அதனால்தன், அது தேவமொழி என்பதால்தான், பூவுலகில் வழக்கொழிந்து போனதோ?

பேசாவிடினும், இறைவனை வழிபட லத்தீன் மொழி இன்னும் சில நாடுகளில் பயன்படுதல் போல, இங்கும் இந்த தேவமொழி இறைவனை வழிபட மட்டும் பயன்படுத்தப் படுகிறதோ?

மற்றபடி, எம்மொழியில் அழைத்தாலும், மொழியின்றியே அழைத்தாலும் இறைவனுக்கு நன்கு கேட்கும்.

வெறும் அழுகைக்கே ஓடிவந்து பாலூட்டியவள் கதை கேட்டதில்லையா?

மிருகங்கள் எல்லாம் என்ன தமிழிலா, அல்லது தேவமொழியிலா அழைக்கின்றன!

நல்ல பதிவு!

வடுவூர் குமார் சொன்னது…

இது ஒரு நல்ல பதிவு என்று மட்டும் பின்னூட்டம் போட விரும்பவில்லை.
:-))
ஆனா நிஜமாகவே நல்லா இருக்கு.

enRenRum-anbudan.BALA சொன்னது…

//நல்ல பதிவு..

நிச்சயம் இறைவன் மொழிகளுக்கப்பாற்பட்டவன்.

ஐம்புலன்களைக் கடந்தவன்.
இறைவனுக்கு ஊமையின் சைகையும் புரியும், ப்ரெய்லியும் தெரியும்.

நன்றி..
//

I second பூங்குழலி :)

Pl. read my THIRUPPAVAI postings when you find time !

கோவி.கண்ணன் சொன்னது…

//மிருகங்கள் எல்லாம் என்ன தமிழிலா, அல்லது தேவமொழியிலா அழைக்கின்றன!

நல்ல பதிவு! //

எஸ்கே ஐயா,

நல்ல பதிவு என்றதற்கு நன்றி.

மிருகங்கள் எனக்கு தெரிந்து ராமநாரயணன் படம் தவிர்த்து வேறெங்கும் சாமி கும்பிட்டதாக தெரியவில்லை. அவைகளுக்கு அதற்கான தேவை இருக்கும் என்றும் நான் கருதவில்லை.

ஞான சம்பந்தர் பால் குடித்தது, மேரி அன்னை தாழ்த்தப்பட்ட சிறுவனிடமிருந்து வாங்கி மோர் குடித்தது, முடவர் நடப்பது, குருடர் பார்பது, சூஃபி ஞானிகளின் சித்துவிளையாட்டுக்கள் போன்ற கதைகள் பக்தியின் பலனை நம்புவதற்காக உள்ள கதைகள். அது வேற டிராக் ... அது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் எல்லோருக்குமே உண்டு. ஆயினும் நான் இங்கு பகிர்ந்து கொண்டது வழிபாட்டு மொழியைப் பற்றிய செய்தி.

எந்த ஒரு மொழியும் இறைவனைச் சேர்ந்ததாக இருக்க முடியாது. அல்லது எல்லா மொழிகளும் அது நரிகுறவர்கள் பேசும் மொழியாக இருந்தாலும் நன்றாகவே இறைவனுக்கு நிச்சயம் புரியும்.

நான் 'அல்லது' போட்டு மாற்றுக் கருத்தையும் அடுத்த வரியில் சொல்லி இருக்கிறேன். அல்லதை விட்டுவிட்டு அதற்குமுன் உள்ளதை சுட்டிக் காட்டி 'கூடாது' களை கூறியுள்ளீர்கள்.
நான் எந்த மொழியையும் குறிப்பிட்டு 'தேவமொழி' இது என்று சொல்லவில்லை, பழிக்கவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏசு நாதர் பேசிய ஹிப்ரூ, அரபியாவில் வழங்கும் அரபி கூட தேவ மொழி என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த மொழிகளும் நீங்கள் சுட்டிக்காட்டிய அதே விளக்கத்தில் அடங்குமா என்று தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு தெரியும். தேவ மொழிகள் மதத்துக்காகவா கடவுளுக்காகவா என்பதை.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - என்ற திருமந்திரத்தையும் தொடர்பு படுத்தி விளக்கம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

VSK சொன்னது…

வழக்கம் போல், எல்லாவற்றையும் போட்டு கலந்து ஒரு கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.

தேவ மொழி என்பது, தமிழ், தெலுங்கு போல இன்னுமொரு மொழி என்றுதான் நான் சொல்லி இருக்கிறேன்.
அது இறை மொழி எனச் சொல்லவில்லை.

தெலுங்கோ,மலையாளமோ புரியும் அளவிற்கு ஹிந்தியோ, மலேய மொழியோ நம்மவர்க்குப் புரியாது என்பது போல, இந்த தேவர்கள் என்பவர் நம்மை விட சற்று இறைவனுக்குப் பக்கலில் இருப்பதாகக் கருதுபவர்களுக்கு,.... [இங்கு நான் "மாற்றுக்கருத்து இருப்பவரைப் பற்றி பேசவில்லை! அவர்களுக்கு இது பற்றி ஒரு கருத்து இருக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை!]... நம்புபர்க்கு மட்டுமே, இந்த தேவமொழி இன்னும் நங்உ புரியுமோ என ஒரு நம்பிக்கையில் அதில் வழிபடுகிறார்கள்!
:))

மற்றபடி எல்லா மொழியுமே இறைவனுக்குப் புரியும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

அனைத்தையும் படைத்தவன் அவனே எனும்போது, மொழிகளையும் அவன்[ள்] தானே படைத்திருக்க முடியும்!....இதுவும் நம்புபவர்க்கு மட்டுமே!!
:)

திருமந்திரம் இங்குபதிவுக்கு சம்பந்தமில்லாதது என்பதால், பதிலைத் தவிர்க்கிறேன்!

மிருகங்களுக்குத் தேவையில்லை என்றெல்லாம் நம்புகிறீர்களே!!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

எஸ்கே ஐயா,

முறைப்படி படித்தால் அல்லது பழகிக் கொண்டால் கற்றுக்கொள்ள முடியாது என்று எந்த ஒரு மொழியும் இல்லை. இதில் இறைவனுக்குப் பக்கத்தில் உள்ளவர் தூரத்தில் வைக்கப்பட்டவர் என்ற பொருளெல்லாம் சரிவராது என்று நினைக்கிறேன்.
உறுதியாக இதுதான் தேவமொழி என்று சொல்லாமல் ...நீங்கள் 'நம்பிக்கை' என்று சொல்லிவிட்டதால் இது பற்றி
மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அது தேவையற்றது என்று விடுவிடுகிறேன்.

எனது கருத்தும் நம்பிக்கை மற்றும் நடைமுறை குறித்துதான் அதாவது இறைவனுக்கு உகந்த மொழி என்று தனியாக இல்லை. எல்லா மொழிகளும் இறைவனுக்கு உரியதே என்று.

suvanappiriyan சொன்னது…

கோவி கண்ணன்!

மிக அழகிய பதிவு!

இஸ்லாமியர்களிடத்தில் கூட அரபி மொழி தேவ மொழி என்ற தவறான எண்ணம் உள்ளது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14 : 4

என்று இறைவன் குர்ஆனில் கூறுவதால் உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். பிராரித்தனைகளை அவரவர் சொந்த மொழியில் கேட்கத்தான் முகமது நபியும் அனுமதித்துள்ளார். உலக ஒருமைப்பாட்டுக்காக தொழுகையில் ஐந்து நிமிடம் மாத்திரம் அரபியில் ஓதுகிறோம். எப்படி நாம் வங்காள மொழியான தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அதைப் போல!

suvanappiriyan சொன்னது…

கோவி கண்ணன்!

மிக அழகிய பதிவு! இஸ்லாமியர்களிடத்தில் கூட அரபி மொழி தேவ மொழி என்ற தவறான எண்ணம் உள்ளது.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14 : 4

என்று இறைவன் குர்ஆனில் கூறுவதால் உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். பிராரித்தனைகளை அவரவர் சொந்த மொழியில் கேட்கத்தான் முகமது நபியும் அனுமதித்துள்ளார். உலக ஒருமைப்பாட்டுக்காக தொழுகையில் ஐந்து நிமிடம் மாத்திரம் அரபியில் ஓதுகிறோம். எப்படி நாம் வங்காள மொழியான தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அதைப் போல!

jeevagv சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு கோவி.கண்ணன்!

நமக்கு விருப்பமான மொழியே - அது நம் தாய் மொழியாக இல்லாவிட்டாலும் - நமக்கு புரியாத மொழியானாலும் - நம் நம்பிக்கையினால் - அது நம் தேவ மொழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

புரிந்தால்தான் இறைவன் அருள்வான் என்றெல்லாம் எந்த மறையும் சொல்லவில்லை. அது நம் அனுமானம் மட்டுமே.

நம் தமிழில் இருக்கும் உன்னதமான பொக்கிஷங்களால் -
இறைவனை அடைய தாய்மொழி மிகவும் உதவும் என்றாலும் - தாய்மொழியின் மீதான காதலால் - மொழியில் அதிகம் கவனம் செலுத்தி - இறைவனை கைவிடுவோரும் உண்டு.

ராஜசன் சொன்னது…

நல்ல பதிவு கோக. நல்ல கருத்துகளை சொல்லியிருக்கீங்க. ஆனால் படித்தபிறகு வேலைக்கு சென்ற பின்னாடி தான் சினிமா தெய்வங்கள் வேற மொழி பேசும்ன்னு தெரிந்ததுன்னு சொல்றது நம்பற மாதிரி இல்லை.

Unknown சொன்னது…

நல்ல பதிவு.

பள்ளி மேல்நிலை படிப்பு வரை நாம் பூமிப்பந்தினுள் வசிப்பதாகவே நினைத்தேன். உருண்டையின் மேற்பரப்பில் என்பது அதற்கப்புறம்தான் தெரிந்தது. ஆனால்
இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்பதை நீங்கள் உணர்ந்தது கல்லூரியும் முடிந்த பின்னர்தானா!!.

இறைவனை நம்புவோர் அவனை எல்லாம் அறிந்தவனாக நம்புகின்றனர்.

முக்காலத்தையும் அறிந்த, எல்லாம் அறிந்த அவனுக்கு யார் எந்த மொழியில் பேசினாலும் புரியும். மொழியென்ன! சைகையும் அல்லது அதை விட சிறப்பாய், மனதில் எண்ணுவதையும் அறிய முடியும்.

எனவே தேவமொழி என்று தனியானதொரு மொழியில் கேட்டால்தான் அவன் புரிந்து கொள்வான் என்பது நம்பிக்கையின் குறைபாடே என்பது என் எண்ணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Johan-Paris said...
கோவி.கண்ணன்!
அருமையான கருத்து; அதைச் சொன்னவிதம் அலாதியானது. மிக நேர்த்தியாக கோர்த்துச் சொல்லியுள்ளீர்கள். ஆண்டவன் புரிந்தாலும் புரிபவர் புரிவார்களோ? தெரியவில்லை.
மிகுந்த பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்
//

யோகன் அவர்களே,

பாராட்டு ஊக்கம் அளிக்கிறது நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//nagoreismail said...
அருமையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள், கீழே உள்ள இடுகையில் உள்ளதையும் வாசித்து பார்க்கவும் - நாகூர் இஸ்மாயில்

http://www.tamiloviam.com/unicode/09140604.asp

Nagoreismail
//

நாகூர் இஸ்மாயில் அவர்களே,

ரூமி அவர்களின் அருமையான கட்டுரை சுட்டிக்காட்டியதற்கும் பாராட்டியதற்கும் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// Sivabalan said...
GK,

நல்லா சொன்னீங்க..

அருமை..
//
சிபா,
பாராட்டுக்கு நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இது ஒரு நல்ல பதிவு என்று மட்டும் பின்னூட்டம் போட விரும்பவில்லை.
:-))
ஆனா நிஜமாகவே நல்லா இருக்கு.
//

வடுவூராரின் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி ! நன்றி !

கதிர் சொன்னது…

அருமையான கருத்துக்கள் கோவி.

நிச்சயமாக மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
நல்ல பதிவு. நியாயமான கருத்து. அவரவர் தாய்மொழியில் வணங்குதலே மிகச் சிறப்பு. இதை அனைவரும் உணர வேண்டும்.
//

ஜிரா,
பதிவை ஒட்டிய தங்களின் கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//enRenRum-anbudan.BALA said...
//நல்ல பதிவு..

நிச்சயம் இறைவன் மொழிகளுக்கப்பாற்பட்டவன்.

ஐம்புலன்களைக் கடந்தவன்.
இறைவனுக்கு ஊமையின் சைகையும் புரியும், ப்ரெய்லியும் தெரியும்.

நன்றி..
//

I second பூங்குழலி :)

Pl. read my THIRUPPAVAI postings when you find time !
//

பின்னூட்டமிட்ட எ.அ.பாவுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
கோவி கண்ணன்!

மிக அழகிய பதிவு!

இஸ்லாமியர்களிடத்தில் கூட அரபி மொழி தேவ மொழி என்ற தவறான எண்ணம் உள்ளது.
//

சுவனப்பிரியன்,
பதிவை ஒட்டிய கருத்துக்கு நன்றி ... புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவா (Jeeva Venkataraman) said...
சுவாரஸ்யமான பதிவு கோவி.கண்ணன்!

நமக்கு விருப்பமான மொழியே - அது நம் தாய் மொழியாக இல்லாவிட்டாலும் - நமக்கு புரியாத மொழியானாலும் - நம் நம்பிக்கையினால் - அது நம் தேவ மொழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

புரிந்தால்தான் இறைவன் அருள்வான் என்றெல்லாம் எந்த மறையும் சொல்லவில்லை. அது நம் அனுமானம் மட்டுமே.

நம் தமிழில் இருக்கும் உன்னதமான பொக்கிஷங்களால் -
இறைவனை அடைய தாய்மொழி மிகவும் உதவும் என்றாலும் - தாய்மொழியின் மீதான காதலால் - மொழியில் அதிகம் கவனம் செலுத்தி - இறைவனை கைவிடுவோரும் உண்டு.
//

வாருங்கள் ஜீவா,

நம்பிக்கை குறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லா மொழிகளும் போற்றத்தக்கதே என்று சொல்வதுதான் பதிவின் நோக்கம்.

உங்கள் மேலான கருத்தும் செறிவாக இருக்கிறது. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜசன் said...
நல்ல பதிவு கோக. நல்ல கருத்துகளை சொல்லியிருக்கீங்க. ஆனால் படித்தபிறகு வேலைக்கு சென்ற பின்னாடி தான் சினிமா தெய்வங்கள் வேற மொழி பேசும்ன்னு தெரிந்ததுன்னு சொல்றது நம்பற மாதிரி இல்லை.
//

ராசாசன்,
கோ.க ன்னு ஆங்ஆங்கே சொல்வது நீங்க தானா ? :)
பொய் பேசி திசைத் திருப்பும் அளவுக்கு நான் பெரிதாக இங்கு எழுதியதாக தெரியவில்லை.
:)))

கருத்துச் சொன்னதற்கு நன்றி !!!

கோவி.கண்ணன் சொன்னது…

// தம்பி said...
அருமையான கருத்துக்கள் கோவி.

நிச்சயமாக மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றுதான்.
//
தம்பி,
நீண்ட காலத்திற்குப்பின் எட்டிப்பார்த்துடன் சென்றுவிடாமல் கருத்துச் சொன்னதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
நல்ல பதிவு.

பள்ளி மேல்நிலை படிப்பு வரை நாம் பூமிப்பந்தினுள் வசிப்பதாகவே நினைத்தேன். உருண்டையின் மேற்பரப்பில் என்பது அதற்கப்புறம்தான் தெரிந்தது. ஆனால்
இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்பதை நீங்கள் உணர்ந்தது கல்லூரியும் முடிந்த பின்னர்தானா!!.

இறைவனை நம்புவோர் அவனை எல்லாம் அறிந்தவனாக நம்புகின்றனர்.

முக்காலத்தையும் அறிந்த, எல்லாம் அறிந்த அவனுக்கு யார் எந்த மொழியில் பேசினாலும் புரியும். மொழியென்ன! சைகையும் அல்லது அதை விட சிறப்பாய், மனதில் எண்ணுவதையும் அறிய முடியும்.

எனவே தேவமொழி என்று தனியானதொரு மொழியில் கேட்டால்தான் அவன் புரிந்து கொள்வான் என்பது நம்பிக்கையின் குறைபாடே என்பது என் எண்ணம்.
//

சுல்தான் ஐயா,

பதிவை பாராட்டியதுடன் மேலும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து அழகான கருத்தையும் சொல்லிச் சென்றதற்கு நன்றி !!!

ஐந்திணை சொன்னது…

இறைவன் மொழிக்கு மட்டுமல்ல, வேதமென மதிக்கப்படும் குரான், கீதை மற்றும் பைபிளுக்கும் அப்பாற்பட்டவன்.

கருப்பு சொன்னது…

அதெல்லாம் கிடையாது, சமஸ்கிருதம்தான் தேவபாடை என்று ஒரு பிரிவினர் புலம்புகிறார்களே?

ஐயங்கார் சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,

சிறப்பான பதிவு.

வாழ்த்துகிறேன் உங்களை.

Thamizhan சொன்னது…

மனிதர்கள்:என் கடவுள் தான் பெரிது.என் கடவுள் பேசுவதுதான் தேவ மொழி.

இறைவன்:மொழிகளைப் பேசுவதும் நீங்கள் தான்.உண்டாக்கிச் செம்மைப் படுத்தியதும் நீங்கள் தான்.என்னை உண்டாக்கியதும் நீங்கள் தான்.என்னைக் காரண்மாய்ச் சொல்லி ச்ண்டைகள் போடுவதும் நீங்கள் தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்